விக்கிமேற்கோள் tawikiquote https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.10 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் 0 1936 38535 38498 2026-07-12T10:27:18Z Arularasan. G 1899 /* பு */ 38535 wikitext text/x-wiki *[[#அ|அ]] | [[#ஆ|ஆ]] | [[#இ|இ]] | [[#ஈ|ஈ]] | [[#உ|உ]] | [[#ஊ|ஊ]] | [[#எ|எ]] | [[#ஏ|ஏ]] | [[#ஐ|ஐ]] | [[#ஒ|ஒ]] | [[#ஓ|ஓ]] | [[#ஔ|ஔ]] *[[#க|க]] | [[#கா|கா]] | [[#கி|கி]] | [[#கீ|கீ]] | [[#கு|கு]] | [[#கூ|கூ]] | [[#கெ|கெ]] | [[#கே|கே]] | [[#கை|கை]] | [[#கொ|கொ]] | [[#கோ|கோ]] *[[#ச|ச]] | [[#சா|சா]] | [[#சி|சி]] | [[#சீ|சீ]] | [[#சு|சு]] | [[#சூ|சூ]] | [[#செ|செ]] | [[#சே|சே]] | [[#சை|சை]] | [[#சொ|சொ]] | [[#சோ|சோ]] | [[#சௌ|சௌ]] *[[#ஞ|ஞ]] | [[#ஞா|ஞா]] *[[#ட|ட]] | [[#டா|டா]] | [[#டி|டி]] | [[#டீ|டீ]] *[[#த்|த்]] | [[#த|த]] | [[#தா|தா]] | [[#தி|தி]] | [[#தீ|தீ]] | [[#து|து]] | [[#தூ|தூ]] | [[#தெ|தெ]] | [[#தே|தே]] | [[#தை|தை|]] [[#தொ|தொ]] | [[#தோ|தோ|]] [[#தௌ|தௌ]] *[[#ந|ந]] | [[#நா|நா]] | [[#நி|நி]] | [[#நீ|நீ]] | [[#நு|நு]] | [[#நூ|நூ]] | [[#நெ|நெ]] | [[#நே|நே]] | [[#நை|நை]] |[[#நொ|நொ]] | [[#நோ|நோ]] | [[#நௌ|நௌ]] *[[#ப|ப]] | [[#பா|பா]] | [[#பி|பி]] | [[#பீ|பீ]] | [[#பு|பு]] |[[#பூ|பூ]] | [[#பெ|பெ]] | [[#பே|பே]] | [[#பை|பை]] | [[#பொ|பொ]] | [[#போ|போ]] *[[#ம|ம]] | [[#மா|மா]] | [[#மி|மி]] | [[#மீ|மீ]] | [[#மு|மு]] | [[#மூ|மூ]] | [[#மெ|மெ]] | [[#மே|மே]] | [[#மை|மை]] | [[#மொ|மொ]] |[[#மோ|மோ]] |[[#மௌ|மௌ]] *[[#ய|ய]] | [[#யா|யா]] | [[#யோ|யோ]] | *[[#வ|வ]] | [[#வா|வா]] | [[#வி|வி]] | [[#வீ|வீ]] | [[#வெ|வெ]] | [[#வே|வே]] | [[#வை|வை]] அகத்தின் அழகு முகத்தில் தெரியும் * அஃகமும் காசும் சிக்கெனத் தேடு [அஃகம் = தானியம்] * அஃகம் சுருக்கேல் * அக்கக்கா என்றால் ரங்க ரங்கா என்கிறது * அக்கச்சி உடைமை அரிசி; தங்கச்சி உடைமை தவிடா? * அக்கப் போரும் சக்கிலியர் கூத்தும் * அக்கரைக்காரனுக்குப் புத்தி மட்டம் * அக்கரைக்கு இக்கரை பச்சை * அக்கரைப் பாகலுக்கு இக்கரைக் கொழுகொம்பு [பாகல் = பாகற்காய்க் கொடி] * அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை * அக்கரையானுக்கு ஆனது இக்கரையானுக்கும் ஆகட்டும் * அக்கரையில் இருக்கிற தாசப்பனைக் கூப்பிட்டு இக்கரையில் இருப்பவன் நாமத்தைப் பார் என்றானாம் * அக்கரை வந்து முக்காரம் போடுது [முக்காரம் = பிடிவாதம்] * அக்கறை தீர்ந்தால் அக்காள் புருஷன் என்ன கொக்கா? * அக்கறை தீர்ந்தால் அக்காள் மொகுடு குக்க * அக்கன்னா அரியன்னா, உனக்கு வந்த கேடு என்ன? * அக்காக்காயாகச் சுற்றுகிறான் * அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கு ஒரு துப்பட்டி என்கிறான் பிள்ளை; அதற்கு அப்பன், கைகால் பட்டுக் கிழியப் போகிறது, மடித்துப் பெட்டியிலே வை என்கிறான் [துப்பட்டி = போர்வை] * அக்காடு வெட்டிக் பருத்தி விதைத்தால், அப்பா முழுச் சிற்றாடை என்கிறாளாம் பெண் * அக்காரம் கண்டு பருத்தி விளைந்தால் அம்மா எனக்கு ஒருதுப்பட்டி [அக்காரம் = ஆடை; துப்பட்டி = போர்வை] * அக்காரம் சேர்ந்த மணல் தின்னலாமா? [அக்காரம் = சருக்கரை] * அக்காள் அரிசி கொடுத்தால்தானே தங்கை தவிடு கொடுப்பாள்? * அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான் * அக்காள் இருக்கிற வரையில் மச்சான் உறவு * அக்காள் மணப்பந்தலில் இல்லாவிட்டால் தங்கை கழுத்தில் தாலி ஏறும். * அக்காள் உண்டானால் மச்சான் உறவு உண்டு * அக்காள் உறவும் மச்சான் பகையுமா? * அக்காள் செத்தாள், மச்சான் உறவு அற்றுப் போச்சு * அக்காள்தான் கூடப் பிறந்தாள்: மச்சானும் கூடப் பிறந்தானா? * அக்காள் போவதும் தங்கை வருவதும் அழகுதான். {அக்காள் [மூதேவி வீட்டை விட்டுப்] போவதும், தங்கை [சீதேவி வீட்டுக்குள்] வருவதும் அழகுதான். * அக்காள் மகள் ஆனாலும் சும்மா வரக் கூடாது * அக்காள் வந்தாள்; தங்கை போனாள் * அக்காள் வீட்டுக்குப் போனாலும் அரிசியும் பருப்பும் கொண்டு போக வேணும் * அக்காள் வீட்டுக் கோழியை அடித்து மச்சானுக்கு விருந்து வைத்தாளாம் * அக்காளைக் கொண்டவன் தங்கச்சிக்கு முறை கேட்பானா? * அக்காளைக் கொண்டால் தங்கையை முறை கேட்பானேன்? * அக்காளைப் பழித்துத் தங்கை மோசம் போனாள் * அக்காளோடு போயிற்று, அத்தான் உறவு * அக்கியானம் தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும் [அக்கியானம் = அஞ்ஞானம், அறிவின்மை; அவிழ்தம் = அமிழ்தம்] * அக்கிரகாரத்தில் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர் [அக்கிரகாரம் = பார்ப்பனச் சேரி, பார்ப்பனர் குடியிருப்பு] * அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா? * அக்கிரகாரத்து நாய் அபிமானத்துக்குச் செத்தது * அக்கிரகாரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா? [அகவிலை = தானிய விலை] * அக்கிரகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுதது போல * அக்கிரமக்காரன் முகத்தில் விழியாதே * அக்கினிக்கும் சாகாத தங்கத்தைப் போல * அக்கினி சாட்சி, அருந்ததி சாட்சி * அக்கினி தேவனுக்கு அபிஷேகம் செய்ததுபோல் இருக்கிறான் * அக்கினிப் பந்தலிலே வெண்ணெய்ப் பதுமை ஆடுமா? * அக்கினி மலையிலே கற்பூர பாணம் விட்டது போல் * அக்கினியால் சுட்ட புண் ஆறிப் போகும் * அக்கினியால் சுட்ட புண் விஷம் கக்குமா? * அக்கினியைக் குளிப்பாட்டி ஆனை மேல் வைத்தாற் போல * அக்கினியைக் குளிப்பாட்டினாற் போல * அக்கினியைத் தின்று சீரணிக்கிற பிள்ளை, அல்லித் தண்டைத் தின்றது அதிசயமா? * அக்குணிப் பிள்ளைக்குத் துக்குணிப் பிச்சை [அக்குணி = சிறிதளவு; துக்குணி = சிறிதளவு: சின்ன பிள்ளைக்குச் சின்ன பிச்சை] * அக்குத்தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் என்ன வந்தது? [அக்குத்தொக்கு = ஒட்டுப் பற்று, உறவுப்பற்று] * அக்குத்தொக்கு இல்லாதவன் ஆண்மையும், [அக்குத்தொக்கு = ஒட்டுப் பற்று, உறவுப்பற்று] வெட்கஞ்சிக்கு இல்லாதவன் ரோஷமும் [சிக்கு = வெட்கம்] மிக்குத் துக்கப்படாதவன் வாழ்வும் நாய் கக்கி நக்கித் தின்றது ஒக்கும் * அக்குவேறு ஆணிவேறாகப் பிரிக்கிறான் * அகங்காரத்தால் அழிந்தான் துரியோதனன் * அகங்கை புறங்கை ஆனாற் போல * அகங்கையில் போட்டுப் புறங்கையை நக்கலாமா? * அகடவிகடமாய்ப் பேசுகிறான் * அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே * அகத்திக் கீரைக்கு மஞ்சள் போட்டு ஆவது என்ன? * அகத்தியன் நற்றமிழுக்கும் குற்றம் கூறுவார் * அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும் * அகத்திலே ஆயிரம் காய்த்தாலும் புறத்திலே பேசலாமா? * அகத்திலே இருப்பவன் அடிமுண்டை என்றானாம்; பிச்சைக்க வந்தவன் பீமுண்டை என்றானாம் * அகத்திலே உண்டானால் அம்பி சமத்து * அகத்துக்காரர் அத்து முண்டை என்றால், பிச்சைக்கு வந்தவன் பேய் முண்டை என்றானாம் * அகத்துக்காரர் இருந்த போது தலைநிறைய மயிர் வைத்துக் கொண்டிருந்தேன் என்றாளாம் * அகத்துக்கு அழகு அகமுடையாள் * அகத்துக்குப் பெண் பிறந்தால் அத்தை அசல் * அகத்துக்கு மூத்தது அசடு * அகத்துப் பிராம்மணன் அவிசாரி என்றால் பிச்சைக்கு வந்தவன் பேய் முண்டை என்கிறான் * அகத்துப் பிள்ளை ஊட்டுப் பிள்ளை; அடிக்கப் பிள்ளை அசல் வீட்டிலே * அகதிக்கு ஆகாசமே துணை * அகதிக்கு ஆண்டவன் துணை * அகதி சொல் அம்பலம் ஏறாது * அகதி தலையில் பொழுது விடிந்தது * அகதி பெறுவது பெண் பிள்ளை; அதுவும் வெள்ளி பூாாடம் * அகதியை அடித்துக் கொல்லுகிறதா? * அகதியைப் பகுதி கேட்கிறதா? * அகப்பட்டதைச் சுருட்டடா ஆண்டியப்பா * அகப்பட்ட நாயை அடிக்கும் போது, அதைக் கண்ட நாய் காதவழி ஓடும் * அகப்பட்டுக் கொண்டவனுக்கு அஷ்டமத்துச் சனி. ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு * அகப்பட்டுக் கொண்டாரே விட்டல பட்டர் * அகப்பட்டுக் கொண்டான் தண்டம்பட்டுக் கணவாயில் * அகப்பட்டுக் கொள்வேன் என்றோ கள்வன் களவு எடுக்கிறது? * அகப்பை அறுசுவை அறியுமா? * அகப்பைக்கு உருவம் கொடுத்தது ஆசாரி; சோறு அள்ளிப் போட்டுக் குழம்பு ஊற்றியது பூசாரி * அகப்பைக்குக் கணை வாய்த்தது போல * அகப்பைக்குத் தெரியுமா அடிசிற் சுவை? * அகப்பைக்குத் தெரியுமா சோற்று ருசி? * அகப்பைக்கு வால் முளைத்தது ஆராலே? ஆசாரியாலே * அகப்பைக் கூழுக்குத் தோப்புக்கரணம் போடுகிறான் * அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும் * அகப்பை பிடித்தவன் தன்னவன் ஆனால், அடிப்பந்தியில் இருந்தால் என்ன? கடைப்பந்தியில் இருந்தால் என்ன? * அகம் ஏறச் சுகம் ஏறும் * அகம் குளிர முகம் மலரும் * அகம் குறைந்தால் அஞ்சும் குறையும் * அகம் மலிந்தால் அஞ்சும் மலியும் * அகமுடையாள் நூற்றது அரைஞாண் கயிற்றுக்கும் போதாது * அகமுடையாளுக்குச் செய்தால் அபிமானம் * அகமுடையான் அடித்த அடியும் அரிவாள் அறுத்த அறுப்பும் வீண் போகா * அகமுடையான் அடித்ததற்கு அழவில்லை; சக்களத்தி சிரிப்பாள் என்று அழுகிறேன் * அகமுடையான் அடித்ததற்குக் கொழுநனைக் கோபித்துக் கொண்டாளாம் * அகமுடையான் அடைவானால் மாமியார் மயிர் மாத்திரம் * அகமுடையான் இல்லாத புக்ககமும் அம்மா இல்லாத பிறந்தகமும் * அகமுடையான் இல்லாத வெட்கம் அடுத்த வீட்டுக்காரனுக்கா? * அகமுடையான் அடித்தது உறைக்கவில்லை; அடுத்தகத்துக்காரன் சிரித்ததுதான் உறைக்கிறது * அகமுடையான் அடித்தது பாரம் இல்லை; கொழுந்தன் சிரித்தது பாரம் ஆச்சு * அகமுடையான் அடித்தது பெரிது அல்ல; சக்களத்தி சிரிப்பாள் என்று அழுகிறேன் * அகமுடையான் அடித்தாலும் அடித்தான்; கண் புளிச்சை விட்டது * அகமுடையான் கோப்பு இல்லாக் கூத்தும் குரு இல்லா ஞானமும் போல் இருக்கிறான் * அகமுடையான் சாதம் ஆனைபோல் இருக்கும்; பிள்ளை சாதம் பூனை போல் இருக்கும் * அகமுடையான் செத்த போதே அல்லலுற்ற கஞ்சி * அகமுடையான் செத்தவளுக்கு மருத்துவச்சி தயவு ஏன்? * அகமுடையான் செத்து அவதிப்படுகிறபோது அண்டை வீட்டுக்காரன் அக்குளைக் குத்தினானாம் * அகமுடையான் திட்டியதைப் பற்றி அடுத்த வீட்டுத் தச்சனைக் கோணல் நிமிர்த்தச் சொன்னாளாம் * அகமுடையான் திடம்கொண்டு குப்பை ஏறிச் சண்டை கொடுக்க வேணும் * அகமுடையான் பலமானால் குப்பை ஏறிச் சண்டை போடலாம் * அகமுடையான் பெண்டாட்டியானாலும் அடுப்புக்கட்டி மூணு * அகமுடையான் வட்டமாய் ஓடினாலும் வாசலால் வரவேண்டும் * அகமுடையான் வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது; அடிப்பானோ என்ற பயமும் இருக்கிறது * அகமுடையான் வைததைப்பற்றி அசல் வீட்டுத் தச்சனைக் கோணல் நிமிர்த்தச் சொன்னாளாம் * அகமுடையானுக்கு அழுத குறை அந்தகன் வந்து வாய்த்தான் * அகமுடையானுக்கு இல்லாத வெட்கம் அடுத்த வீட்டுக்காரனுக்கு என்ன? * அகமுடையானுக்குத் தக்க இறுமாப்பு * அகமுடையானுக்குப் பெண்டாட்டிமேல் ஆசை, பெண்டாட்டிக்குப் புடைவைமேல் ஆசை * அகமுடையானுக்குப் பொய் சொன்னாலும் அடுப்புக்குப் பொய் சொல்லி முடியுமா? * அகமுடையானைக் கண்டபோது தாலியைத் தடவுவாளாம் * அகமுடையானைக் கொன்ற அற நீலி * அகமுடையானைக் கொன்ற பிறகு அறுதாலிக்குப் புத்திவந்தது * அகமுடையானை நம்பி அவிசாரி ஆகலாமா? * அகமுடையானை வைத்துக் கொண்டல்லவோ அவிசாரி ஆட வேண்டும்? * அகர நாக்காய்ப் பேசுகிறான் * அகராதி படித்தவன் * அகல் வட்டம் பகல் மழை * அகல இருந்தால் நிகள உறவு; கிட்ட இருந்தால் முட்டப் பகை * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை * அகல இருந்தால் புகல உறவு * அகல இருந்து செடியைக் காக்கிறது * அகல உழுகிறதை விட ஆழ உழு * அகல உழுவதை ஆழ உழு * அகலக் கால் வைக்காதே * அகல விதை; ஆழ உழு * அகவிலை அறியாதவன் துக்கம் அறியாளன் * அகவிலையையும் ஆயுசையும் ஆர் கண்டார்? * அகன்ற வட்டம் அன்றே மழை; குறுவட்டம் பின்னால் மழை * அகன்ற வில் அடுத்து மழை; குறுகிய வில் தள்ளி மழை * அகன்று இருந்தால் நீண்ட உறவு; கிட்ட இருந்தால் முட்டப்பகை * அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம் * அகாரியத்தில் பகீரதப் பிரயத்தனம் பண்ணுகிறது * அகிருத்தியம் செய்கிறவன் முகத்தில் விழிக்கிறதா? * அகிலும் திகிலுமாக * அகோர தபசி வபரீத சோரன் * அங்கடி இங்கடி தெங்கடி புளியடி என்று அலைகிறான் * அங்கத்திலே குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி * அங்கத்தை ஆற்றில் அலைசொணாதா? * அங்கத்தைக் கட்டித் தங்கத்தைச் சேர்ப்பார் * அங்கத்தைக் கொண்டு போய் ஆற்றில் அலைசினாலும் தோஷம் இல்லை * அங்கத்தைக் கொன்று ஆற்றில் சேர்க்க ஒண்ணாது * அங்கம் குளிர்ந்தால் லிங்கம் குளிரும் * அங்கம் நோவ உழைத்தால் பங்கம் ஒன்றும் வராது * அங்கரங்க வைபவமாய் இருக்கிறான்; அரைக்காசுக்கு முதல் இல்லை * அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால், வெங்காயம், கறி வேப்பிலை என்பாள் * அங்காடிக் கூடையை அதிர்ந்தடித்துப் பேசாதே * அங்காடிக் கூடையை அநியாய விலை கூறாதே * அங்காடி நாய் போல அலைந்து திரியாதே * அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு * அங்காடியில் தோற்றதற்காக அம்மாவை அறைந்தானாம் * அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக் கூடு வழியாய் வரும் * அங்கிடு தொடுப்பி எங்கடி போனாய்? சின்னண்ணன் செத்த இழவுக்குப் போனேன் * அங்கிடு தொடுப்பிக்கு இங்கு இரண்டுகுட்டு; அங்கு இரண்டுசொட்டு * அங்கு அங்குக் குறுணி அளந்து கொட்டியிருக்கிறது * அங்கு ஏண்டி மகளே, கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வந்தால் காற்றாய்ப் பறக்கலாம் * அங்குசம் இல்லாத ஆனையும் கடிவாளம் இல்லாத குதிரையும் அடங்கா * அங்கும் இருப்பான்; இங்கும் இருப்பாள்; ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான் * அங்கும் குறுணி அளந்து போட்டிருக்கிறான் * அங்கும் தப்பி இங்கும் தப்பி அகப்பட்டுக் கொண்டான் தும்மட்டிப்பட்டன் * அங்கும் சோதி; அடியேனும் சோதி * அங்குஸ்தி இங்குஸ்தி * அங்கே ஏன் பிள்ளே கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வாடி காற்றாய்ப் பறக்கலாம் * அங்கே பார்த்தால் ஆடம்பரம்; இங்கே பார்த்தால் கஞ்சிக்குச் சாவு * அங்கே போனால் அப்படி; இங்கே வந்தால் இப்படி; ஆகிறது எப்படி? * அங்கே போனேனோ செத்தேனோ? * அங்கை நெல்லிக்கனி * அச்சம் அற்றவன் அம்பலம் ஏறுவான் * அச்சம் ஆண்மையைக் குறைக்கும் * அச்சாணி அன்னதோர் சொல் * அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது * அச்சி என்றால் உச்சி குளிருமா? அழுவணம் என்றால் கை சிவக்குமா? * அச்சிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசுதான் * அச்சியிலும் உண்டு பிச்சைக்காரன் * அச்சில் அடித்தால் போல, அகமுடையானுக்கு ஒத்தாற்போல * அச்சி வீடு தீப்பிடித்தால் பட்டர் முண்டு தோளில் * அச்சு இல்லாத தேர் ஓடவும் அகமுடையான் இல்லாதவள் பிள்ளை பெறவும் கூடுமா? * அச்சு இல்லாமல் தேர் ஓட்டி அகமுடையான் இல்லாமல் பிள்ளை பிறக்குமா? * அச்சு இல்லாமல் தேர் ஓடாது * அச்சு ஒன்றா வேறா? * அசடு வழிகிறது * அசத்துக்கு வாழ்க்கைப்பட்டு ஆயிரம் வருஷம் வாழ்வதைவிடச் சமர்த்தனுக்கு. வாழ்க்கைப்பட்டுச் சட்டென்று சாவதே மேல் * அசந்தால் வசந்தா * அசந்து நடப்பவன் அடிமடியில் அக்காள்; கடுகி நடப்பவன் காலிலே தேவி * அசல் அகத்து நெய்யே, என் பெண்டாட்டி கையே * அசல் அகத்துப் பிராம்மணா பாம்பைப் பிடி, அல்லித் தண்டைப் போல் குளிர்ந்திருக்கும் * அசல் வாழ்ந்தால் அஞ்சு நாள் பட்டினி கிடப்பான் * அசல் வாழ ஆறு மாசம் பட்டினி * அசல் வீட்டு அகமுடையான் ஆபத்துக்கு உதவுவானா? * அசல் வீட்டுக்காரன் அழைத்த கதை * அசல் வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவுவானா? * அசல் வீட்டுக்காரனுக்குப் பரிந்துகொண்டு அகமுடையானை அடித்தாளா? * அசல் வீட்டுக்குப் போகிற பாம்பைக் கையாலே பிடிக்கிறான் * அசல் வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி * அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு * அசைப்புக்கு ஆயிரம் பொன் வாங்குகிறது * அசை போட்டுத் தின்னுவது மாடு; அசையாமல் விழுங்குவது வீடு * அசை போட ஏதாவது இருந்தால் அவனா நகருவான்? * அஞ்சலி பந்தனம் யாருக்கும் நன்மை * அஞ்சனக்காரன் முதுகிலே வஞ்சனைக்காரன் ஏறினான் * அஞ்சனம் குருட்டு விழிக்கு என்ன செய்யும்? * அஞ்சாத ஆனைக்குப் பஞ்சாங்கம் கோடரி * அஞ்சா நெஞ்சு படைத்தால் ஆருக்கு ஆவான்? * அஞ்சாவது பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி ஆவான் * அஞ்சாவது பெண்ணைக் கெஞ்சினாலும் தரமாட்டார்கள் * அஞ்சி அஞ்சிச் சாகிறான் * அஞ்சி ஆண்மை செய்ய வேணும் * அஞ்சி நடக்கிறவனுக்குக் காலம் இல்லை * அஞ்சி மணியம் பண்ணாதே; மிஞ்சிப் பிச்சை கேட்காதே * அஞ்சி மணியம் பர்ர்த்தது கிடையாது; கெஞ்சிக் கடன் கேட்டது கிடையாது * அஞ்சிய அரசன் தஞ்சம் ஆகான் * அஞ்சில் ஒரு மழை; பிஞ்சில் ஒரு மழை * அஞ்சிலே அறியாதவன் அம்பதிலே அறிவானா? * அஞ்சிலே பிஞ்சிலே கொஞ்சாமல் அறுபதுக்குமேல் கொஞ்சினான் * அஞ்சிலே வளையாதது அம்பதிலே வளையாது * அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? * அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாசம் எல்லாம் பேய் * அஞ்சினவனுக்கு ஆனை; அஞ்சாதவனுக்குப் பூனை * அஞ்சினவனைக் குஞ்சும் மிரட்டும் * அஞ்சினவனைப் பேய் அடிக்கும் * அஞ்சினாரைக் கெஞ்ச அடியாதே * அஞ்சினாரைக் கெஞ்ச வைக்கும்; அடித்தாரை வாழ்விக்கும் * அஞ்சு அடி அடித்த பாவனையும் அப்பனேதான் * அஞ்சு அடி அடித்துப் போரிலே போட்டாச்சு * அஞ்சு அடித்தால் சோரும்; ஆறு அடித்தால் பாயும் * அஞ்சு பணம் கொடுத்தாலும் அத்தனை ஆத்திரம் ஆகாது * அஞ்சு பணம் கொடுத்து அடிக்கச் சொன்னானாம்; பத்துப் பணம் கொடுத்து நிறுத்தச் சொன்னானாம் * அஞ்சு பணம் கொடுத்துக் கஞ்சித் தண்ணீர் குடிப்பானேன்? * அஞ்சு பிள்ளைக்குமேல் அரசனும் ஆண்டி * அஞ்சு பிள்ளை பெற்றவளுக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் சொன்னாளாம் * அஞ்சு பெண்டாட்டி கட்டியும் அறுக்கப் பெண்டாட்டி இல்லை; பத்துப் பெண்டாட்டி கட்டியும் படுக்கப் பெண்டாட்டி இல்லை * அஞ்சு பெண் பெற்றால் அரசனும் ஆண்டி * அஞ்சு பேரல்லோ பத்தினிமார்? அஞ்சிலே இரண்டு பழுதில்லை * அஞ்சு பொன்னும் வாங்கார், அரைப்பணமே போது மென்பார் * அஞ்சும் இரண்டும் அடைவானால் அறியாப் பெண்ணும் கறியாக்கும் * அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறிசமைப்பாள் * அஞ்சும் இருக்கிறது நெஞ்சுக்குள்ளே; அதுவும் இருக்கிறது. புந்திக்குள்ளே * அஞ்சும் பிஞ்சுமாக நிற்கிறது * அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறிசமைக்கும் * அஞ்சும் மூன்றும் எட்டு; அத்தை மகளைக் கட்டு * அஞ்சு மாசம் வரைக்கும் தாய்க்கும் மறைக்கலாம், சூல் * அஞ்சுரு ஆணி இல்லாத் தேர் அசைவது அரிது * அஞ்சுருவுத் தாலி நெஞ்சுருகக் கட்டிக்கொண்டு வந்தாற்போல வலக்காரமாய்ப் பேசுகிறான் * அஞ்சு வந்தாலும் அவசரம் ஆகாது; பத்து வந்தாலும் பதற்றம் ஆகாது * அஞ்சு வயசில் அண்ணன் தம்பி; பத்து வயசில் பங்காளி * அஞ்சு வயசில் அரசிலை செய்யப் போனவன் திரட்சியின்போது திரும்பி வந்தானாம் * அஞ்சு வயசில் ஆதியை ஓது * அஞ்சு வயசு ஆண் பிள்ளைக்கு அம்பது வயசுப் பெண் அடக்கம் * அஞ்சு வயசுப் பிள்ளைக்கு அம்பது வயசுப் பெண் காலமுக்க வேணும் * அஞ்சு விரலும் அஞ்சு கன்னக் கோல் * அஞ்சு விரலும் சமமாக இருக்குமா? * அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான் * அஞ்சூர்ச் சண்டை சிம்மாளம்; ஐங்கல அரிசி ஒரு கவளம் * அஞ்சூரான் பஞ்சு போல * அஞ்ஞானம் தீர்ந்தால் ஒளடதம் பலிக்கும் * அட்சதைக்கு விதி இல்லை; லட்சம் பிராமணச் சாப்பாடாம் * அட்டதரித்திரம் புக்ககத்திலே, அமராவதி போல வாழ்கிறேன்; நித்திய தரித்திரம் தகப்பனாரை நின்ற நிலையில் வரச்சொன்னாள் * அட்ட நாயும் பொட்டைக் குஞ்சுமாய்ச் சம்சாரம் * அட்டமத்துச் சனி கிட்ட வந்தது போல * அட்டமத்துச் சனி நட்டம் வரச்செய்யும் * அட்டமத்துச் சனி பிடித்துப் பிட்டத்துத் துணியும் உரிந்து கொண்டது * அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற்போல * அட்டாதுட்டிக் கொள்ளித் தேள் * அட்டாரைத் தொடாக் காலம் இல்லை * அட்டாலும் பால் சுவையில் குன்றாது * அட்டில் ஒருவருக்கு, ஆதில் இருவருக்கு, திரி இட்டால் மூவருக்கு * அட்டைக் கடியும் அரிய வழி நடையும் கட்டை இடறுதலும் காணலாம் கண்டியிலே * அட்டைக்குத் தெரியுமா கட்டில் சுகம்? * அட்டைக்கும் திருப்தி இல்லை; அக்கினிக்கும் திருப்தி இல்லை * அட்டை மாதிரி உறிஞ்சுகிறான் * அட்டை மாதிரி ஒட்டிக் கொள்கிறான் * அட்டையை எடுத்துத் தொட்டிலில் கிடத்தினாலும் அது கிடக்கும் குட்டையிலே * அட்டையை எடுத்துத் தொட்டிலில் விட்டாற்போல * அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தாலும் செத்தையைச் செத்தையை நக்கும் * அட்டையைக் கட்டிச் சட்டியிலே போட்டாலும் அது கிடக்குமாம் சாக்கடையில் * அட்டையைக் கழுவிக் கட்டையில் கிடத்தினாலும் அது கிடக்குமாம் சகதியிலே * அட்டையைப் பிடித்து மெத்தையில் வைத்தது போல * அடக்கத்துப் பெண்ணுக்கு அழகு ஏன்? * அடக்கம் ஆயிரம் பொன் பெறும் * அடக்கம் உடையார் அறிஞர்; அடங்காதார் கல்லார் * அடக்கம் உள்ளவன் பொருளுக்கு ஆபத்து இல்லை * அடக்கமே பெண்ணுக்கு அழகு * அடக்குவார் அற்ற கழுக்காணியும் கொட்டுவார் அற்ற மேளமும் போலத் திரிகிறான் * அடங்காத பாம்புக்கு ராஜா மூங்கில் தடி * அடங்காத பிடாரியைப் பெண்டு கொண்டது போல * அடங்காத பிள்ளைக்கு ஒரு வணங்காத பெண் * அடங்காத பெண்சாதியால் அத்தைக்கும் பொல்லாப்பு: நமக்கும் பொல்லாப்பு * அடங்காப் பெண்டிரைக் கொண்டானும் கெட்டான்; அறுகங்காட்டை உழுதவனும் கெட்டான் * அடங்காத மனைவியும் ஆங்காரப் புருஷனும் * அடங்காத மாட்டுக்கு அரசன் மூங்கில் தடி * அடங்கின பிடிபிடிக்க வேணுமே அல்லாமல் அடங்காத பிடி பிடிக்கலாகாது * அடடா கருக்கே அரிவாள் மணை சுருக்கே! * அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு * அடம் பண்ணுகிற தேவடியாளுக்கு முத்தம் வேறே வேணுமா? * அடர்த்தியை அப்போதே பார்; புணக்கத்தைப் பின்னாலே பார் * அடர உழு; அகல விதை * அடர விதைத்து ஆழ உழு * அட ராவணா என்றானாம் * அடா என்பவன் வெளியே புறப்பட்டான் * அடாது செய்தவர் படாது படுவர் * அடாது செய்தவன் படாது படுவான் * அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும் * அடி அதிசயமே, சீமைச் சரக்கே! * அடி அதிரசம்; குத்துக் கொழுக்கட்டை * அடி அற்ற பனைபோல் விழுந்தான் * அடி அற்ற மரம்போல அலறி விழுகிறது * அடி அற்றால் நுனி விழாமல் இருக்குமா? * அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார் * அடி என்கிற ராஜாவும் இல்லை; பிடி என்கிற மந்திரியும் இல்லை * அடி என்பதற்கு அவளைக் காணோம்; பிள்ளை பிறந்தால் ராம கிருஷ்ணன் என்று பெயர் வைக்கவேண்டுமென்று ஆசைப் பட்டானாம் * அடி என்பதற்குப் பெண்டாட்டி இல்லை; அஷ்ட புத்திரர்கள் எட்டுப்பேராம் * அடி என்பதற்குப் பெண்டாட்டி இல்லை; பிள்ளை பெயர் அருணாசலமாம் * அடி என்று அழைக்கப் பெண்டாட்டி இல்லை; பிள்ளை எத்தனை, பெண் எத்தனை என்றானாம் * அடி என்று சொல்ல அகமுடையாளைக் காணோம்; பிள்ளைக்குப் பேர் என்ன வைக்கிறது என்றானாம் * அடி ஒட்டி அல்லவா மேற்கரணம் போட வேண்டும்? * அடி ஓட்டையாய் இருந்தாலும் கொழுக்கட்டை வேக வேண்டியது தானே? * அடிக்க அடிக்க அம்மியும் நகரும் * அடிக்க அடிக்கப் படுகிறவனும் முட்டாள்; படப்பட அடிக்கிறவனும் முட்டாள் * அடிக்க அடிக்கப் பந்து விசை கொள்ளும் * அடிக்க அடிக்கப் பிள்ளை வளரும்; முறுக்க முறுக்க மீசை வளரும் * அடிக்கடி அரசன் பிரவேசித்த கிராமம் அதிரூபத்தை அடையும் * அடிக்கிற காற்றுக்கும் காய்கிற வெயிலுக்கும் பயப்படு * அடிக்கிற காற்று வெயிலுக்குப் பயப்படுமா? * அடிக்கிற கைதான் அணைக்கும் * அடிக்கு ஆயிரம் பொன் கொடுக்க வேண்டும் * அடிக்குப் பயந்து அடுப்பில் விழுந்தாளாம் * அடிக்கும் ஒரு கை; அணைக்கும் ஒரு கை * அடிக்கும் காற்றிலே எடுத்துத் துரற்ற வேண்டும் * அடிக்கும் சரி, பிடிக்கும் சரி * அடிக்கும் பிடிக்கும் சரியாய்ப் போச்சு * அடிக்குழம்பு ஆனைக்குட்டி போல * அடிச்சட்டிக்குள்ளே கரணம் போடலாமா? * அடிச்சட்டியில் கரணம் போட்டுக் குண்டு சட்டியில் குதிரைச் சவாரி பண்ணினானாம் * அடி சக்கை பொடி மட்டை * அடி சக்கை, லொட லொட்டை * அடி செய்கிறது அண்ணன் தம்பி செய்யார் * அடி செருப்பாலே, ஆற்றுக்கு அப்பாலே * அடித்த இடம் கண்டுபிடித்து அழ ஆறு மாசம் ஆகும் * அடித்த எருக்கும் குடித்த கூழுக்கும் சரி * அடித்தது ஆட்டம், பிடித்தது பெண்டு * அடித்தது ஆலங்காடு * அடித்த நாய் உழன்றாற் போல * அடித்த மாடு சண்டி * அடித்தவன் பின்னால் போனாலும் போகலாம்; பிடித்தவன் பின்னால் போகக்கூடாது * அறுபதுக்குமேல் கொஞ்சினாலும் அஞ்சிலே வளையாதது அம்பதிலே வளையாது * அடித்தா பால் புகட்டுகிறது? * அடித்தால் அடி மறக்காது; அம்பு போட்டால் அம்பு பாயாது; சொன்னால் சொல் பிறக்காது * அடித்தால் கூட அழத் தெரியாது * அடித்தால் முதுகில் அடி, வயிற்றில் அடிக்காதே * அடித்தாலும் புடைத்தாலும் என் அகமுடையான்; அடுப்புக் கொழுக்கட்டையைத் தொடாதே * அடித்தாலும் புருஷன். உதைத்தாலும் புருஷன். அணைத்தாலும் புருஷன். புடைத்தாலும் புருஷன். * அடித்தாற் போல அடிக்கிறேன்; நீ அழுகிறது போல அழு * அடித்தான் ஐயா பிரைஸ், காது அறுந்த ஊசி * அடித்தான் பிடித்தான் வியாபாரம் * அடித்து அழ விட்டால் அது ஒரு விளையாட்டா? * அடித்துப் பழுத்தது பழமா? * அடித்துப் பால் புகட்டுகிறதா? * அடித்துப் போட்ட நாய் மாதிரி கிடக்கிறான் * அடித்து வளர்க்காத பிள்ளையும் இல்லை; முறித்து வளர்க்காத முருங்கையும் இல்லை * அடித்து வளர்க்காத பிள்ளையும் ஊட்டி வளர்க்காத கன்றும் * அடித்து வளர்க்காத பிள்ளையும் முறித்து வளர்க்காத முருங்கையும் * அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும் * அடித்து விட்டவன் பின்னே போனாலும் பிடித்து விட்டவன் பின்னே போகலாகாது * அடி தெற்றினால் ஆனையும் சறுக்கும் * அடி நாக்கில் நஞ்சு; நுனி நாக்கில் அமிழ்தம் * அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும் * அடி நொச்சி; நுனி ஆமணக்கா? * அடிப்பதும் ஒரு கை; அணைப்பதும் ஒரு கை * அடிப்பானேன்? பிடிப்பானேன்? அடக்குகிற வழியிலே அடக்குவோம் * அடிபட்ட நாய் போல * அடிபட்ட நாயைப் போல் காலைத் தூக்கி நடவாதே * அடிபட்டவன் அழுவான் * அடிபட்டாலும் ஆர்க்காட்டுச் சடாவால் அடிபட வேண்டும் * அடி பெண்ணே சோறு ஆச்சா? நொடிக்குள்ளே சோறு ஆச்சு * அடிபோன சட்டி ஆயா வீட்டில் இருந்தால் என்ன? மாமியார் வீட்டில் இருந்தால் என்ன? * அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் * அடிமை படைத்தால் ஆள்வது கடன் * அடியடா செருப்பாலே அறுநூறு; இந்தாடா நாயே திருநீறு * அடியாத பிள்ளை படியாது * அடியாத மாடு படியாது * அடியில் உள்ளது நடுவுக்கும் முடிவுக்கும் உண்டு * அடியுண்ட வேங்கை போல * அடியும் நுனியும் தறித்த கட்டை போல * அடியும் பிடியும் சரி * அடியே என்பதற்கு அகமுடையான் இல்லை; பிள்ளை பேர் சந்தான கோபால கிருஷ்ணன் * அடியைக் காத்து முடியை அடித்துக் கொண்டு போச்சு * அடியைப் பிடியடா பாரத பட்டா! * அடியை விட ஆவலாதி பெரியது * அடியோடு அடிக் கரணம் * அடிவண்டிக் கிடாப் போலே * அடிவயிற்றில் இடி விழுந்தாற் போல * அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல * அடிவயிற்றில் புளியைக் கரைக்கிறது * அடுக்கல் குத்தினால், நடுக்கல் குத்துவாள் * அடுக்களை உறவு இல்லாமல் அம்பலத்து உறவா? * அடுக்களைக் கிணற்றிலே அமுதம் எழுந்தாற் போல் * அடுக்களைக்கு ஒரு பெண்ணும் அம்பலத்துக்கு ஓர் ஆணும் * அடுக்களைக் குற்றம் சோறு குழைந்தது; அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்தது * அடுக்களைப் பூனைபோல் இடுக்கிலே ஒளிக்கிறது * அடுக்களைப் பெண்ணுக்கு அழகு வேண்டுமா? * அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்குத் தெரியுமா? * அடுத்தகத்துக்காரிக்குப் பிள்ளை பிறந்ததென்று உலக்கையை எடுத்து இடித்துக்கொண்டாளாம் * அடுத்தகத்துப் பிராம்மணா பாம்பைப் பிடி; அல்லித் தண்டுபோல் குளிர்ந்திருக்கும் * அடுத்த கூரை வேகிறபோது தன் கூரைக்கும் மோசம் * அடுத்ததன் தன்மை ஆன்மா ஆகும் * அடுத்தவரை அகல விடலாகாது * அடுத்தவரைக் கெடுக்கலாகாது * அடுத்தவளுக்கு அகமுடையான் வந்தது போல * அடுத்தவன் தலையில் நரை என்பானேன்? அவன் அதைச் சிரை என்பானேன்? * அடுத்தவன் வாழப் பகலே குடி எடுப்பான் * அடுத்தவனை ஒரு போதும் கெடுக்கலாகாது * அடுத்தவனைக் கெடுக்கலாமா? * அடுத்த வீட்டில் மொச்சை வேகிறதென்று அடிவயிறு பிய்த்துக் கொண்டு போகிறது * அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்கு இரைச்சல் லாபம் * அடுத்த வீட்டுக்காரனுக்கு அதியோகம் வந்தால் அண்டை வீடு குதிரைலாயம் * அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம் * அடுத்த வீட்டுக்காரனுக்கு மணியம் போகிறது; ஒன்றாகக் காது அறுத்துக் கொள்ளுங்கள் * அடுத்த வீட்டுக்காரி பிள்ளை பெற்றாள் என்று அம்மிக்குழவி எடுத்துக் குத்திக் கொண்டாளாம் * அடுத்தாரைக் கெடுக்கிறதா? * அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இடுகிறான் * அடுத்தாரைக் கோபித்தால் கெடுத்தாலும் கெடுப்பார் * அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும் * அடுத்து அடுத்துப் போனால் அடுத்த வீடும் பகை * அடுத்துக் கெடுப்பவர் * அடுத்துக் கெடுப்பான் கபடன்; கொடுத்துக் கெடுப்பான் மார்வாடி; தொடுத்துக் கெடுப்பாள் மடந்தை * அடுத்துச் சொன்னால் எடுத்த காரியம் முடியும் * அடுத்து முயன்றாலும் ஆகும் நாள்தான் ஆகும் * அடுத்து வந்தவனுக்கு ஆதரவு சொல்கிறவன் குரு * அடுப்பங் கரையே கைலாசம், அகமுடையானே சொர்க்க லோகம் * அடுப்பங் கரையே சொர்க்கம்; அகமுடையானே தெய்வம் * அடுப்பங் கரையே திருப்பதி; அகமுடையானே கைலாசம் * அடுப்பு அடியில் பூனை தூங்க * அடுப்பு அடியில் வெண்ணெய் வைத்த கதை * அடுப்பு ஊதும் பெண்ணுக்குப் படிப்பு எதற்கு? * அடுப்பு எரிந்தால்தானே பொரி பொரியும்? * அடுப்பு எரிந்தால் பொரி பொரியும்; தாயார் செத்தால் வயிறு எரியும் * அடுப்பு எரியாத கோபத்தை அகமுடையான்மேல் காட்டினாளாம் * அடுப்புக் கட்டிக்கு அழகு வேணுமா? * அடுப்புக் கரகரப்பும் அகமுடையான் முணுமுணுப்பும் * அடுப்புக்கு ஒரு துடுப்பா? * அடுப்புக்குத் தகுந்த உலை, அகமுடையானுக்குத் தகுந்த இறுமாப்பு * அடுப்புக் குற்றம் சாதம் குழைந்தது: அகமுடையான் குற்றம் பெண் பிறந்தது * அடுப்பு நெருப்பும் போய் வாய்த் தவிடும் போச்சு * அடுப்பும் நெருப்பும் பயப்படுமா? * அடுப்பே திருப்பதி; அகமுடையானே குலதெய்வம் * அடே அத்தான் அத்தான். அம்மான் பண்ணினாற் போல் இருக்க வில்லையடா * அடைக்கலாங் குருவிக்கு ஆயிரத் தெட்டுக் கண்டம் * அடைத்தவன் காட்டைப் பார்; மேய்த்தவன் மாட்டைப் பார் * அடை தட்டின வீடு தொடை தட்டும் * அடைதட்டின வீடும் தொடை தட்டின வீடும் உருப்படா * அடைந்தோரை ஆதரி * அடைப்பான் குற்றம். துடைப்பான் குற்றம், அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்ததாம் * அடைப்பைப் பிடுங்கினால் பாம்பு கடிக்கும் * அடைபட்டுக் கிடக்கிறான் செட்டி; அவனை அழைத்து வா, பணம் பாக்கி என்கிறான் பட்டி * அடை மழைக் காலத்தில் ஆற்றங் கரையில் தண்ணீர்ப் பந்தல் வைத்தானாம் * அடை மழையில் ஆட்டுக்குட்டி செத்தது போல * அடை மழையும் உழவு எருதும் * அடை மழை விட்டும் செடி மழை விடவில்லை * அடையலரை அடுத்து வெல் * அடையா, அப்பமா, விண்டு காட்ட? * அடைவு அறிந்து காரியம் செய்தால் விரல் மடக்க நேரம் இராது * அண்டங் காக்காய் குழறுகிறது போல * அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் உண்டா? * அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே * அண்டத்துக்கு ஒத்தது பிண்டத்துக்கு * அண்டத்தைக் கையில் வைத்து ஆட்டும் பிடாரிக்குச் சுண்டைக்காய் எடுப்பது பாரமா? * அண்டத்தைச் சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் பாரமா? * அண்ட நிழல் இல்லாமல் போனாலும் பேர் விருட்சம் * அண்டமும் பிண்டமும் அந்தரங்கமும் வெளியரங்கமும் * அண்டர் எப்படியோ, தொண்டரும் அப்படியே * அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்? * அண்டை அயலைப் பார்த்துப் பேசு * அண்டை நிலத்தையும் அயல் மனையையும் கை விடாதே * அண்டை மேலுள்ள கோபத்தை ஆட்டுக்கிடாயின் மேல் காட்டியதைப் போல * அண்டையில் சமர்த்தன் இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும் * அண்டையில் வா என்றால் சண்டைக்கு வருகிறாயே! * அண்டை வீட்டு ஆட்டைப் பார்த்து நாய் குரைத்தது போல * அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கும் ஆகா * அண்டை வீட்டுக் கல்யாணமே, ஏன் அழுகிறாய் கோவணமே? * அண்டை வீட்டுக்காரி பிள்ளை பெற்றாளென்று அயல் வீட்டுக்காரி அடி வயிற்றில் இடித்துக் கொண்டது போல * அண்டை வீட்டுக்காரி பிள்ளை பெற்றாளென்று உலக்கை எடுத்து அடித்துக் கொண்டாளாம் * அண்டை வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி * அண்டை வீட்டுச் சுப்பிக்கும் எதிர்வீட்டுக் காமாட்சிக்குமா கவலை?\ * அண்டை வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே * அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் திரிவான் * அண்ணற ஆயிரம் பொன்னிலும் நிண்ணற ஒரு காசு பெரிது * அண்ணன் உண்ணாதது எல்லாம் மதனிக்கு லாபம் * அண்ணன் எப்போது ஒழிவானோ? திண்ணை எப்போது காலி ஆகுமோ? * அண்ணன் கொம்பு பம்பள பளாச்சு * அண்ணன் சம்பாதிக்கிறது தம்பி அரைஞாணுக்குக் கூடப் போதாது * அண்ணன் தங்கை அப்ஸர ஸ்திரீ * அண்ணன் தம்பிதான் சென்மப் பகையாளி * அண்ணன் தம்பி பின்பாட்டு; அக்கா தங்கைகள் அடிகிரவணம் * அண்ணன் தம்பி வேண்டும், இன்னம் தம்பிரானே * அண்ணன்தான் கூடப்பிறந்தான்; அண்ணியும் கூடப் பிறந்தாளோ? * அண்ணன்தான் சொந்தம்; அண்ணியுமா சொந்தம்? * அண்ணன் பிள்ளையை நம்புகிறதற்குத் தென்னம் பிள்ளையை நம்பலாம் * அண்ணன் பிறந்து அடிமட்டம் ஆச்சு; தம்பி பிறந்து தரைமட்டம் ஆச்சு * அண்ணன் பெண்டாட்டி அரைப் பெண்டாட்டி; தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி * அண்ணன் பெரியவன்; அப்பா அடுப்பூது * அண்ணன் பெரியவன்; அப்பா நெருப்பெடு என்கிற கதை * அண்ணன் பெரியவன்; சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக் கொண்டு வா * அண்ணன் பேச்சைத் தட்டவும் மாட்டேன்; மேலைப் பங்கை விடவும் மாட்டேன் * அண்ணன் பேரில் இருந்த கோபத்தை நாய்பேரில் ஆற்றினான் * அண்ணன் வரும் வரையில் அமாவாசை நிற்குமா? * அண்ணனார் சேனையிலே அள்ளிப் போகிறான் * அண்ணனிடத்தில் ஆறு மாசம் வாழ்ந்தாலும் அண்ணியிடத்தில் அரை நிமிஷம் வாழலாமா? * அண்ணனுக்குத் தங்கை அபஸரஸ் ஸ்திரீ * அண்ணனுக்குத் தம்பி அல்ல என்று போகுமா? * அண்ணனுக்குப் பெண் பிறந்தால் அத்தை அசல் நாட்டாள் * அண்ணனை அகம் காக்க வைத்துவிட்டு மன்னி மல்லுக்குப் போனாளாம் * அண்ணனைக் கண்டாயோ என்று போய்விட்டான் * அண்ணனைக் கொன்ற பழியைச் சந்தையிலே தீர்த்துக் கொள்கிறது போல * அண்ணாக்கும் தொண்டையும் அதிர அடைத்தது போல * அண்ணா சம்பாதிப்பது அம்பி அரைஞாண் கயிற்றுக்கும் பற்றாது * அண்ணா செத்த பிறகு மன்னியிடம் உறவா? * அண்ணாண்டி வாரும்; சண்டையை ஒப்புக் கொள்ளும் * அண்ணா நங்கை அப்ஸ்ர ஸ்திரீ * அண்ணாதூர் பாடை, ஆலம்பாக்கத்து ஓடை, சதண்டி வைக்கோற் போர் * அண்ணாமலைக்கு அரோ ஹரா! * அண்ணாமலைச் சாமி மின்னினாற் போலே பயணம் * அண்ணாமலையார் அருள் இருந்தால் மன்னார் சாமி மயிர் பிடுங்குமா? * அண்ணாமலையாருக்கு அறுபத்து நாலு பூசை; ஆண்டிகளுக்கு எழுபத்து நாலு பூசை * அண்ணா மனசு வைத்தால் மதனிக்குப் பிள்ளை பிறக்கும் * அண்ணா வரும் வரையில் அமாவாசை காத்திருக்காது * அண்ணா வாரும்; சண்டையை ஒப்புக்கொள்ளும் * அண்ணாவி கால் இடறினால் அதுவும் ஒரு நடைமுறை * அண்ணாவி தவறு செய்தால் அதுவும் நடைமுறை * அண்ணாவி நின்று கொண்டே மோண்டால் பையன் ஓடிக் கொண்டே மோள்வான் * அண்ணாவி பிள்ளைக்குப் பணம் பஞ்சமா? அம்பட்டன் பிள்ளைக்கு, மயிர் பஞ்சமா? * அண்ணாவுக்கும் மன்னிக்கும் அனவரதமும் பிணக்கு * அண்ணி ஆண்டாளு, ஆறுமுகம் கூத்தியாரு * அணி இலாக் கவிதை பணி இலா வனிதை * அணி எல்லாம் ஆடையின்பின் * அணி பூண்ட நாய் போல * அணியத்திலே கிழிந்தாலும் கிழிந்தது; அமரத்திலே கிழிந்தாலும் கிழிந்தது * அணில் ஏற விட்ட நாய் போல * அணில் ஏறித் தென்னை அசையுமா? * அணில் ஓட்டமும் ஆமை நடையும் * அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும் * அணில் கொம்பிலே; ஆமை கிணற்றிலே * அணில் நொட்டிப் பனை முறியுமா? * அணில் நொட்டியா தென்னை சாயும்? * அணில் நொட்டினதும் தென்னமரம் வீழ்ந்ததும் * அணில் பிள்ளையின் தலை மீது அம்மிக் கல்லை வைத்தது போல * அணில் வாயாற் கெட்டாற் போல * அணிலைக் கொன்றால் ஆழாக்குப் பாவம்; ஓணானைக் கொன்றால் உழக்குப் புண்ணியம் * அணிற் பிள்ளைக்கு நுங்கு அரிதோ? ஆண்டிச்சி பிள்ளைக்குச் சோறு அரிதோ? * அணு அளவு பிசகாது * அணு மகா மேரு ஆகுமா? * அணு மலை ஆச்சு; மலை அணு ஆச்சு * அணுவுக்கு அணு, மகத்துக்கு மகத்து * அணுவும் மகமேரு ஆகும் * அணுவும் மலை ஆச்சு; மலையும் அணு ஆச்சு * அணை கடந்த வெள்ளத்தைத் தடுப்பவர் யார்? * அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வருமா? * அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது * அத்தச் செவ்வானம் அடை மழைக்கு அடையாளம் * அத்தத்தின் மிகுதியல்லவா, அம்பட்டன் பெண் கேட்க வந்தது? * அத்தனைக்கு இத்தனை உயரம், ஐராவதம் போல் எங்கள் பசு * அத்தனையும் சேர்த்தும் உப்பிட மறந்தது போல * அத்தனையும்தான் செய்தாள், உப்பிட மறந்தாள் * அத்தான் அரை அகமுடையான் * அத்தான் செத்தால் மயிர் ஆச்சு; கம்பளி மெத்தை நமக்கு ஆச்சு * அத்தான் முட்டி, அம்மாஞ்சி உபாதானம், மேலகத்துப் பிராம்மணன் யாசகமென்று கேட்டானாம் * அத்திக்காய் தெரியுமா? வட்டைக்காய் தெரியுமா? * அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தை * அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு * அத்திப் பூவை ஆர் அறிவார்? * அத்திப் பூவைக் கண்டவர் உண்டா? ஆந்தைக் குஞ்சைப் பார்த்தவர் உண்டா? * அத்தி பூத்தது ஆரும் அறியார்? * அத்தி பூத்தாற் போல் * அத்தி மரத்தில் தொத்திய கிளி போல * அத்தி முதல் எறும்பு வரை * அத்தியும் பூத்தது; ஆனை குட்டியும் போட்டது * அத்திரி மாக்கு, ஆறு தாண்டுகிறேனா. இல்லையா, பார் * அத்து மீறிப் போனான், பித்துக்குளியானான் * அத்து மீறினால் பித்து * அத்தை இல்லாப் பெண்ணுக்கு அருமை இல்லை; சொத்தை இல்லாப் பவழத்துக்கு மகிமை இல்லை * அத்தை இல்லாப் பெண்டாட்டி வித்தாரி, மாமியில்லாப் பெண்டாட்டி வயிறுதாரி * அத்தை இல்லாப் பெண் வித்தாரி; மாமி இல்லாப் பெண் மாசமர்த்தி * அத்தை இல்லா வீடு சொத்தை * அத்தை இறப்பாளா, மெத்தை காலி ஆகுமா என்று காத்திருப்பது போல * அத்தைக்கு ஒழியப் பித்தைக்கு இல்லை; ஒளவையார் இட்ட சாபத்தீடு * அத்தைக்குத் தாடி முளைத்தால் சிற்றப்பா என்னலாமா? * அத்தைக்குப் பித்தம்; அவருக்குக் கிறுகிறுப்பு * அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா * அத்தை கடன்காரி; அடி நாளைய சத்துரு * அத்தைச் சொல்லடா சீமானே * அத்தைத்தான் சொல்வானேன்? வாயைத்தான் வலிப்பானேன்? * அத்தை பகையும் இல்லை; அம்மாமி உறவும் இல்லை * அத்தை மகன், அம்மான் மகள் சொந்தம் போல * அத்தைமகள் ஆனாலும் சும்மா வருவாளா? * அத்தை மகளைச் கொள்ள முறை கேட்க வேண்டுமா? * அத்தையடி அத்தை, அங்காடி விற்குதடி, கண்மணியாளே நெல்லுமணி தருகிறேன் * அத்தையடி மாமி, கொத்துதடி கோழி * அத்தையைக் கண்ட சகுனம் அத்தோடு போயிற்று * அத்தை வீட்டு ரேழியில் கொண்டுவிட்டால்தான் கிழக்கு மேற்குத் தெரியும் * அத்தோடு நின்றது அலைச்சல்; கொட்டோடே நின்றது குலைச்சல் * அதமனுக்கு ஆயிரம் ஆயுசு * அதர்மம் அழிந்திடும் * அதற்கும் இருப்பாள், இதற்கும் இருப்பாள், ஆக்கின சோற்றுக்குப் பங்கிற்கும் இருப்பாள் * அதற்கு வந்த அபராதம் இதற்கும் வரட்டும் * அதற்கெல்லாம் குறைவில்லை, ஆட்டடா பூசாரி * அதன் கையை எடுத்து அதன் கண்ணிலே குத்துகிறது * அதிக்கிரமமான ஊரிலே கொதிக்கிற மீன் சிரிக்கிறதாம் * அதிக ஆசை அதிக நஷ்டம் * அதிக ஆசை மிகு தரித்திரம் * அதிகக் கரிசனம் ஆனாலும் அகமுடையானை அப்பா என்று அழைக்கிறதா? * அதிகச் சிநேகிதம் ஆபத்துக்கு இடம் * அதிகம் விளைந்தால் எண்ணெய் காணாது * அதிகமாகக் குலைக்கும் நாய்க்கு ஆள் கட்டை * அதிகமான பழக்கம் அவமரியாதையைத் தரும் * அதிகாரம் இல்லாத சேவகமும் சம்பளம் இல்லாத உத்தியோகமும் எதற்கு? * அதிகாரம் இல்லாவிட்டாலும் பரிவாரம் வேண்டும் * அதிகாரிக்கு அடுப்புப் பயப்படுமா? * அதிகாரிக்கு முன்னும் கழுதைக்குப் பின்னும் போகக்கூடாது * அதிகாரி குசு விட்டால் அமிர்த வஸ்து; தலையாரி குசு விட்டால் தலையை வெட்டு * அதிகாரியுடனே எதிர்வாதம் பண்ணலாமா? * அதிகாரியும் தலையாரியும் கூடி விடியுமட்டும் திருடலாம் * அதிகாரி வந்தால் அடித்துக் காட்டு; கூத்தாடி வந்தால் கொட்டிக் காட்டு * அதிகாரி வீட்டில் திருடித் தலையாரி வீட்டில் வைத்தது போல * அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மிக் கல்லை உடைக்கும் * அதிசயம் அடி அம்மங்காரே, அம்மி புரண்டு ஓடுகிறது * அதிசயம் அடி ஆவடை, கொதிக்கிற கூழ் சிரிக்கிறது * அதிசயம் அதிசயம் அத்தங்காரே கொதிக்கிற குழம்பு சிரிக்கிறது * அதிசயமாய் ஒருத்திக்குப் பிள்ளை பிறந்ததாம், கடப்பாரையை எடுத்துக் காலில் குத்திக் கொண்டாளாம் * அதிசயமான ஊரிலே ஒரு பிள்ளை பிறந்ததாம்; அது தொப்புள் கொடி அறுப்பதற்குள் கப்பல் ஏறிப் போயிற்றாம் * அதிசயமான ரம்பை, அரிசி கொட்டுகிற தொம்பை * அதிர்ந்து அடிக்கிறவனுக்கு ஐயனாரும் இல்லை; பிடாரியும் இல்லை * அதிர்ந்து வராத புருஷனும் மிதந்து வராத அரிசியும் பிரயோசனம் இல்லை * அதிர்ந்து வரும் புருஷனும் முதிர்ந்து வரும் சோறும் * அதிர் வெடி கேட்ட குரங்கு * அதிர்ஷ்டக்காரன் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் * அதிர்ஷ்டம் ஆறாய்ப் பெருகுகிறது * அதிர்ஷ்டம் இல்லாதவனுக்குக் கலப்பால் இருந்தாலும் அதையும் பூனை குடிக்கும் * அதிர்ஷ்டம் கெட்ட கழுக்காணி * அதிர்ஷ்டம் கெட்டதுக்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம் * அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையிலும் தனம் இருக்கும் * அதிர்ஷ்டமும் ஐசுவரியமும் ஒருவர் பங்கல்ல * அதிர்ஷ்டவாள் மண்ணைத் தொட்டாலும் பொன் ஆகும் * அதிர அடித்தாருக்கு ஐயனாரும் இல்லை; பிடாரியும் இல்லை * அதிர அடித்தால் உதிர விளையும் * அதில் எல்லாம் குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி * அதிலே இது புதுமை, அவள் செத்து வைத்த அருமை * அதிலே குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி; மாவிலே வெல்லம் இல்லை; மாட்டிக்கொள்ளடா பூசாரி * அதி விநயம் தூர்த்த லட்சணம் * அதி விருஷ்டி, அல்லது அநாவிருஷ்டி * அது அதற்கு ஒரு கவலை; ஐயாவுக்கு எட்டுக் கவலை * அது ஏண்டி மாமியாரே, அம்மி புரண்டு ஓடுகிறது? * அதுக்கும் இருப்பான், இதுக்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான் * அது கெட்டது போ, எனக்கா கல்யாணம் என்றானாம் * அதுதான் ராயர் கட்டளையாய் இருக்கிறதே! * அதுவும் போதாதென்று அழலாமா இனி? * அதைக் கை கழுவ வேண்டியதுதான் * அதைத்தான் சொல்வானேன்? வாய்தான் நோவானேன்? * அதை நான் செய்யாவிட்டால் என் பேரை மாற்றிக் கூப்பிடு * அதை நான் செய்யாவிட்டால் என் மீசையைச் சிரைத்து விடுகிறேன் * அதைரியம் உள்ளவனை அஞ்சாத வீரன் என்றாற்போல * அதை விட்டாலும் கதி இல்லை; அப்புறம் போனாலும் விதி இல்லை * அந்த ஊர் மண்ணை மிதிக்கவே தன்னை மறந்துவிட்டான் * அந்தக் காலம் மலை ஏறிப் போச்சு * அந்தகனுக்கு அரசனும் ஒன்று; ஆண்டியும் ஒன்று * அந்தணர்க்குத் துணை வேதம்! * அந்தணர் மனையில் சந்தனம் மணக்கும் * அந்தப் பருப்பு இங்கே வேகாது * அந்தம் உள்ளவன் ஆட வேணும்; சந்தம் உள்ளவன் பாட வேணும் * அந்தம் சிந்தி அழகு ஒழுகுகிறது * அந்தரத்தில் கோல் எறிந்த அந்தகனைப் போல * அந்தரத்திலே விட்டு விட்டான் * அந்தர வீச்சு வீசி நாயைப் போல் வாலைச் சுருட்டி விட்டான் * அந்தலை கெட்டுச் சிந்தலை மாறிக் கிடக்கிறது * அந்த வெட்கக்கேட்டை ஆரோடு சொல்கிறது? * அந்தி ஈசல் அடை மழைக்கு அறிகுறி * அந்தி ஈசல் பூத்தால் அடைமழை அதிகரிக்கும் * அந்திக் கண்ணிக்கு அழுதாலும் வரானாம் அகமுடையான் * அந்திச் செவ்வானம் அப்போதே மழை * அந்திச் செவ்வானம் அழுதாலும் மழை இல்லை; விடியச் செவ்வானம் வேண மழை * அந்திச் செவ்வானம் அறிந்து உண்ணடி மருமகளே; விடியச் செவ்வானம் வேண்டி உண்ணடி மகளே * அந்திச் செவ்வானம் கிழக்கு; அதிகாலைச் செவ்வானம் மேற்கு * அந்திச் சோறு உந்திக்கு ஒட்டாது * அந்தி பிடித்த மழையும் அம்மையாரைப் பிடித்த வியாதியும் விடா * அந்தி மழை அழுதாலும் விடாது * அந்தி மழையும் அந்தி விருந்தாளியும் விடமாட்டார்கள் * அந்தி மழையும் ஒளவையாரைப் பிடித்த பிணியும் விடா * அந்தியில் அசுவத்தாமன் பட்டம் கட்டிக் கொண்டாற் போல * அந்து ஊதும் நெல் ஆனேன் * அந்துக் கண்ணிக்கு அழுதாலும் வரான் அகமுடையான் * அந்நிய மாதர் அவதிக்கு உதவார் * அநாதைக்குத் தெய்வமே துணை * அநாதைப் பெண்ணுக்குக் கல்யாணம்; ஆளுக்குக் கொஞ்சம் உதவுங்கள் * அநுபோகம் மிகும்போது ஔஷதம் பலிக்கும் * அநுமான் சீதையை இலங்கையில் தேடினது போல * அப்பச்சி குதம்பையைச் சூப்பப் பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறது போல * அப்பச்சி கோவணத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறது; பிள்ளை வீரவாளிப் பட்டுக்கு அழுகிறது * அப்படிச் சொல்லுங்கள் வழக்கை; அவன் கையில் கொடுங்கள் உழக்கை * அப்பத்துக்கு மேல் நெய் மிஞ்சிப் போச்சு * அப்பத்துக்கு மேலே நெய் மிதந்தால் அப்பம் தெப்பம் போடும் * அப்பத்தை எப்படித்தான் சுட்டாளோ அதற்குள் தித்திப்பை எப்படித்தான் நுழைத்தாளோ? * அப்பத்தைத் திருடிய பூனைகளுக்கு நியாயம் வழங்கிற்றாம் குரங்கு * அப்பம் என்றால் பிட்டுக் காட்ட வேண்டும் * அப்பம் சுட்டது சட்டியில்; அவல் இடித்தது திட்டையில் * அப்பம் சுட்டுக் கூழ் ஆச்சு; தொன்னை தைத்துக் கொள் பிராம்மணா * அப்பம் தின்னச் சொன்னால் குழி எண்ணுவதா? * அப்பமும் தந்து பிட்டும் காட்டுவது போல * அப்பர் அடைந்த ஆளும் நாள் கப்பரை எடுப்பார் சுவாமி * அப்பன் அருமை மாண்டால் தெரியும் * அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும்; உப்பின் அருமை உப்பு இல்லா விட்டால் தெரியும் * அப்பன் ஆனைச் சவாரி செய்தால் மகனுக்குத் தழும்பா? * அப்பன் இல்லாமல் பிள்ளை பிறக்குமா? அச்சு இல்லாமல் தேர் ஓடுமா? * அப்பன் சம்பாத்தியம் பிள்ளை அரைஞாணுக்கும் போதாது * அப்பன் செத்தபின் தம்பிக்கு அழுகிறதா? * அப்பன் சோற்றுக்கு அழுகிறான்; பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான் * அப்பன் தர்மசாலி என்று பண்ணி விட்டான் * அப்பன் பவிசு அறியாமல் அநேக நாள் தவிசேற மகன் கனாக் காண்கிறான் * அப்பன் பிண்டத்துக்கு அழுகிறான்; பிள்ளை பரமான்னத்துக்கு அழுகிறது * அப்பன் பிறந்தது வெள்ளிமலை; ஆய் பிறந்தது பொன்மலை * அப்பன் பெரியவன்; சிற்றப்பா சுருட்டுக்கு நெருப்புக் கொண்டு வா * அப்பன் மகன்தான் ஆண் பிள்ளைச் சிங்கம் * அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான் * அப்பனுக்கு மூத்த சுப்பன் * அப்பா அடித்தால் அம்மா அணைப்பது போல * அப்பா அப்பா என்றால், ரங்கா ரங்கா என்கிறான் * அப்பா என்றால் உச்சி குளிருமா? * அப்பாச்சிக்கு அப்புறம் மரப்பாச்சி * அப்பா சாமிக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு * அப்பா சாஸ்திரிக்குப் பெண்ணாய்ப் பிறந்து, குப்பா சாஸ்திரிக்கு வாழ்க்கைப்பட்டு, லவணம் என்றால் எருமைச் சாணி என்று தெரியாதா? * அப்பா வலக்கை; அம்மா இடக்கை * அப்பாவி உப்பு இல்லை * அப்பாவுக்கு இட்ட கப்பரை ஆரைச் சுவரில் கவிழ்த்திருக்கிறது * அப்பாவுடன் சொல்லட்டுமா? அரக்குப் பேலாவைக் காட்டட்டுமா? * அப்பாவும் இல்லை; வெட்டுக் கத்தியும் இல்லை * அப்பியாசம் குல விருது * அப்பியாசம் கூசா வித்தை * அப்பியாச வித்தைக்கு அழிவில்லை * அப்பியாச வித்தைக்கு அழிவு இல்லை * அப்பைக் கொண்டு உப்பைக் கட்டு, உப்பைக் கொண்டு ஒக்கக் கட்டு * அப்போது விஜயநகரம்; இப்போது ஆனைக்குந்தி * அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் * அபத்தப் பஞ்சாங்கத்தில் அறுபது நாழிகையும் தியாஜ்யம் * அபரஞ்சிக் கொடி மாதிரி அகமுடையாள் இருக்கும் போது ஆதண்டங்காய்க் கொடியைக் கட்டிக் கொண்டானாம் * அபாயத்திற்கு உபாயம் * அபிடேகம் இட்ட கைக்குச் சுழிக் குற்றம் உண்டா? * அம்பட்டக்குடிக் குப்பையைக் கிளறக் கிளற மயிர்தான் * அம்பட்டக் குடியில் சிரைத்த மயிருக்குப் பஞ்சமா? * அம்பட்டக் குசும்பும் வண்ணார ஒயிலும் போகா * அம்பட்ட வேலை அரை வேலை * அம்பட்டன் குப்பையைக் கிளறினால் மயிர் மயிராக வரும் * அம்பட்டன் கைக் கண்ணாடி போல * அம்பட்டன் செய்தியை அறிந்து குடுமியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேணும் * அம்பட்டன் பல்லக்கு ஏறினது போல * அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருமையா? * அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல * அம்பட்டன் வீட்டில் மயிருக்குப் பஞ்சமா? * அம்பட்டன் வெட்டு வெட்டு அல்ல; அரைப்படிப்பும் படிப்பு அல்ல * அம்பட்டன் வேலை செய்ய வந்தால் சரியாய்ச் செய்ய வேணும் * அம்பட்டனுக்கு மயிர்ப் பஞ்சமா? * அம்பட்டனை மந்திரித்தனத்துக்கு வைத்துக் கொண்டது போல * அம்பத்துர் வேளாண்மை ஆறு கொண்டது பாதி; துாறு கொண்டது பாதி * அம்பலக் கழுதை அம்பரிலே கிடந்தால் என்ன? அடுத்த திருமாகாளத்திலே கிடந்தால் என்ன? * அம்பலக் கழுதை அம்பலத்தில் கிடந்தால் என்ன? அடுத்த திருமாளிகையில் கிடந்தால் என்ன? * அம்பலத்தில் அவல்பொரி போலே * அம்பலத்தில் ஏறும் பேச்சை அடக்கம் பண்ணப் பார்க்கிறான் * அம்பலத்தில் கட்டுச் சோறு அவிழ்த்தாற்போல * அம்பலத்தில் பொதி அவிழ்க்கலாகாது * அம்பலம் தீப்பட்டது என்றால், அதைத்தான் சொல்வானேன், வாய்தான் நோவானேன் என்றானாம் * அம்பலம் வேகிறது * அம்பாணி தைத்தது போலப் பேசுகிறான் * அம்பா பாக்கியம் சம்பா விளைந்தது; பாவி பாக்கியம் பதராய் விளைந்தது * அம்பி கொண்டு ஆறு கடப்போர் நம்பிக்கொண்டு வால் கொள்வார்களா? * அம்பிட்டுக் கொண்டாரே. தும்பட்டிப்பட்டர் * அம்பு பட்ட புண் கையில் இழை கட்டினால் ஆறாது * அம்பு விற்று அரிவாள்மனை விற்றுத் தும்பு விற்றுத் துருவுபலகை விற்றுப் போட்டால் சொல்வாயா சொல்வாயா என்றானாம் * அம்மண தேசத்திலே கோவணம் கட்டினவன் பைத்தியக்காரன் * அம்மணமும் இன்னலும் ஆயுசு பரியந்தமா? * அம்மன் காசு கூடப் பெறாது * அம்மன் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க வேண்டாமா? * அம்மனுக்குப் பூஜை ஆகித்தான் சாமிக்குப் பூஜை ஆகவேணும் * அம்மா அடித்தால் வலிக்காது; அப்பா அடித்தால் வலிக்கும் * அம்மா ஆரோ வந்திருக்கிறார். ஆனைமேலா, குதிரைமேலா? * அம்மா குதிர் போல; அய்யா கதிர் போல * அம்மா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா? * அம்மா கோதண்டராமன் * அம்மா திரண்டு வருவதற்குள் ஐயா உருண்டுபோய் விடுவா * அம்மாப் பெண் சமைக்க அஸ்தமனம்; கிருஷ்ணையர் பூஜை பண்ணக் கிழக்கு வெளுக்கும் * அம்மாப் பெண்ணுக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு; கொட்டு மேளம் கோயிலிலே, வெற்றிலை பாக்குக் கடையிலே * அம்மா பாடு அம்மணமாம்; கும்பகோணத்தில் கோதானமாம் * அம்மாமி வாயைக் கிண்டினால் அத்தனையும் பழமொழியாம் * அம்மாயி நூற்ற நூலுக்கும் நொண்டி அரைநாண் கயிற்றுக்கும் சரயாய்ப் போச்சு * அம்மாவுக்குப் பின் அகமுடையான் * அம்மாள் கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா? * அம்மாள் மிடுக்கோ, அரைப்பவள் மிடுக்கோ? * அம்மாளு அம்மாள் சமைக்க அஸ்தமனம் ஆகும்; கிருஷ்ண வாத்தி யார் பூஜை செய்யக் கிழக்கு வெளுக்கும் * அம்மாளுக்குத் தமிழ் தெரியாது; ஐயாவுக்குத் தெலுங்கு தெரியாது * அம்மான் சொத்துக்கு மருமான் கருத்தாளி * அம்மான் மகளானாலும் சும்மா வருவாளோ? * அம்மான் மகளுக்கு முறையா? * அம்மான் வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக் கேட்க வேணுமா? * அம்மானும் மருமகனும் ஒரு வீட்டுக்கு ஆள் அடிமை * அம்மி இருந்து அரணை அழிப்பான் * அம்மிக்குழவி ஆலாய்ப் பறக்கும்போது எச்சில் இலையைக் கேட்பானேன்? * அம்மி மிடுக்கோ, அரைப்பவர் மிடுக்கோ? * அம்மி மிதித்து அருந்ததி பார்த்தவள்போல் பேசுகிறாள் * அம்மியும் உரலும் ஆலாய்ப் பறக்கச்சே எச்சில் இலை என்கதி என்ன என்று கேட்டதாம் * அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கும்போது எச்சில் இலை எனக்கு என்ன கதி என்றாற் போல் * அம்மியே ஆகாயத்தில் பறக்கும்போது எச்சில் இலைக்கு வந்தது என்ன? * அம்முக்கள்ளி ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா? * அம்மை இல்லாப் பிறந்தகமும் அகமுடையான் இல்லாப் புக்ககமும் * அம்மைக்கு அமர்க்களம் ஆக்கிப் படை எனக்கு அமர்க்களம். பொங்கிப் படை * அம்மைக்கு அமர்க்களம் பொங்கிப் படையுங்கள் * அம்மை குத்தினாலும் பொம்மை குத்தினாலும் வேண்டியது அரிசி * அம்மையார் இருக்கும் இடத்தில சேமக் கலம் கொட்டாதே * அம்மையார் எப்போது சாவார்? கம்பளி எப்போது நமக்கு மிச்சம் ஆகும்? * அம்மையார் நூற்கிற நூலுக்கும் பேரன் அரைஞாண் கயிற்றுக்கும் சரி * அம்மையார் பெறுவது அரைக்காசு, தலை சிரைப்பது முக்காற் காசு * அம்மையார் வருகிற வரைக்கும் அமாவாசை காத்திருக்குமா? * அம்மையாருக்கு என்ன துக்கம்? கந்தைத் துக்கம் * அம்மையாரே வாரும்; கிழவனைக் கைக்கொள்ளும் * அம்மை வீட்டுத் தெய்வம் நம்மை விட்டுப் போமா? * அமர்க்களப்படுகிறது * அமர்த்தனுக்கும் காணி வேண்டாம்; சமர்த்தனுக்கும் காணி வேண்டாம் * அமரபட்சம் பூர்வபட்சம்; கிருஷ்ணபட்சம் சுக்கிலபட்சம் * அமரிக்கை ஆயிரம் பொன் பெறும் * அமாவாசை இருட்டிலே பெருச்சாளி போனதெல்லாம் வழி * அமாவாசை இருட்டு; சோற்றுப் பானையை உருட்டு * அமாவசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் * அமாவாசைச் சோறு என்றைக்கும் அகப்படுமா? * அமாவாசைப் பணியாரம் அன்றாடம் கிடைக்குமா? * அமாவாசைப் பருப்புச் சோறு சும்மா சும்மா கிடைக்குமா? * அமாவாசைப் பானை என்று நாய்க்குத் தெரியுமா? * அமிஞ்சி உண்டோ கும்பு நாயக்கரே * அமிஞ்சிக்கு உழுதால் சரியாய் விளையுமா? * அமிஞ்சி வெட்டிக்கு ஆள் இருக்கிறது * அமிஞ்சி வேலை * அமுக்கினால் போல் இருந்து அரணை அழிப்பான் * அமுத்தல் பேர் வழி * அமுதம் உண்கிற வாயால் விஷம் உண்பார்களோ? * அமுதுபடி பூஜ்யம்; ஆடம்பரம் சிலாக்யம் * அமைச்சன் இல்லாத அரசும் அகமுடையான் இல்லாத ஆயிழையும் * அமைதி ஆயிரம் பெறும் * அமைதி கெட்ட நெஞ்சம் ஆடி ஆடிக் கொஞ்சும் * அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால் * அயல் ஊர் லாபமும் உள்ளூர் நஷ்டமும் ஒன்று * அயல் வீட்டு ஆண்மகன் அவஸ்தைக்கு உதவான் * அயல் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே * அயல் வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவுவானா? * அயல் வீட்டுப் பையா பாம்பைப் பிடி; அல்லித் தண்டு போல் குளிர்ந்திருக்கும் * அயல் வீடு வாழ்ந்தால் பரதேசம் போகிறது * அயலார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான் * அயலார் உடைமையில் அந்தகன் போல் இரு * அயலார்க்குத் துரோகம் ஐந்தாறு நாள் பொறுக்கும்; ஆத்மத் துரோகம் அப்போதே கேட்கும் * அயலார் வாழ்ந்தால் அஞ்சு நாள் பட்டினி கிடப்பான் * அயலார் வாழ்ந்தால் அடி வயிற்றில் நெருப்பு * அயலான் வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவுமா? * அயலூர் நாணயக்காரனைவிட உள்ளூர் அயோக்கியன் மேல் * அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம் * அயன் அமைப்பை யாராலும் தள்ளக்கூடாது * அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது * அயன் இட்ட கணக்கு ஆருக்கும் தப்பாது * அயிரையும் சற்றே அருக்குமாம் வீட்டுக்குள் போட்டுப் பிசகாமல் * அயிலாலே போழ்ப அயில் * அயோக்கியர் அழகு அபரஞ்சிச் சிமிழில் நஞ்சு * அர்ச்சுனன்போல் அகமுடையான் இருக்க, அச்சான்யம்போல் திருமங்கல்யம் எதற்கு? * அர்ச்சுனன்போல் அகமுடையான் இருக்கையில் அஞ்ஞானம்போல் தாலி என்னத்துக்கு? * அர்ச்சுனன்போல் அகமுடையானும் அபிமன்யுபோல் பிள்ளையும் * அர்ச்சுனனுக்குக் கண் அரக்கு மாளிகையில் * அர்ச்சுனனுக்குப் பகை அரக்கு மாளிகை * அர்ப்பணித்து வாழ்ந்தால் அர்த்தராத்திரியிலும் கொடை கொடுப்பான் * அரக்கன் ஆண்டால் என்ன? மனிதன் ஆண்டால் என்ன? * அரக்குக் கூடு கட்டினால் வீட்டுப் பெண் தாய் ஆவாள் * அரக்கு முத்தி தண்ணீர்க்குப் போனாள்; புண் பிடித்தவன் பின்னாலே போனான் * அரகர சிவசிவ மகாதேவா, ஆறேழு சுண்டலுக்கு லவாலவா * அரகரன் ஆண்டால் என்ன? மனிதன் ஆண்டால் என்ன? * அரகரா என்கிறது பெரிதோ? ஆண்டி கிடக்கிறது பெரிதோ? * அரகரா என்கிறவனுக்குத் தெரியுமா? அமுது படைக்கிறவனுக்குத் தெரியுமா? * அரகரா என்பது பாரமா? அமுது படைப்பது பாரமா? * அரங்கன் சொத்து அக்கரை ஏறாது * அரங்கன் சொத்து அழகன் அங்கவடிக்குக் காணாது * அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடுவேனோ? * அரங்கு இன்றி வட்டாடலும் அறிவின்றிப் பேசுதலும் ஒன்று * அரங்கூடு குரங்கே, மரத்தை விட்டு இறங்கே * அரசங்கட்டையும் ஆபத்துக்கு உதவும் * அரசமரத்துப் பிள்ளையார் போல அகமுடையான் இருக்க அச்சான்யம் போலத் தாலி எதற்கு? * அரச மரத்தைப் பிடித்த சனியன் ஆலமரத்தைப் பிடித்ததாம் * அரச மரத்தைப் பிடித்த பிசாசு அடியில் இருந்த பிள்ளையாரையும் பிடித்ததாம் * அரசன் அதிகாரம் அவன் நாட்டோடே * அரசன் அருள் அற்றால் அனைவரும் அற்றார் * அரசன் அளவிற்கு ஏறிற்று * அரசன் அன்று அறுப்பான்; தெய்வம் நின்று அறுக்கும் * அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும் * அரசன் ஆட்சிக்கு ஆகாச வாணியே சாட்சி * அரசன் ஆண்டால் என்ன? மனிதன் ஆண்டால் என்ன? * அரசன் ஆனைமேல் வருகிறான் என்று வீட்டுக் கூரைமேல் ஏறினானாம் * அரசன் இருக்கப் பட்டணம் அழியுமா? * அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர் * அரசன் இல்லாத நாடு, புருஷன் இல்லாத வீடு * அரசன் இல்லாப் படை அம்பலம் * அரசன் இல்லாப் படை வெட்டுமா? * அரசன் இல்லாப் படை வெல்வது அரிது * அரசன் உடைமைக்கு ஆகாச வாணி சாட்சி * அரசன் எப்படியோ அப்படியே குடிகள் * அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி * அரசன் ஒன்றை இகழ்ந்தால் ஒக்க இகழ வேண்டும். ஒன்றைப் புகழ்ந்தால் ஒக்கப் புகழ வேண்டும் * அரசன் கல்லின்மேல் வழுதுணை காய்க்கும் என்றால் கொத்தில் ஆயிரம் குலையில் ஆயிரம் என்பார்கள் * அரசன் குடுமியையும் பிடிக்கலாமென்று அம்பட்டன் வேலையை விரும்பினது போல * அரசன் நினைத்த அன்றே அழிவு * அரசன் மகளானாலும் புருஷனுக்கு பொண்டாட்டிதான். * அரசன் மெச்சியவள் ரம்பை * அரசன் வரை எட்டியது * அரசன் வழிப்பட்டதே அவனி * அரசன் வழிப்படாதவன் இல்லை * அரசன் வீட்டுக் கோழி முட்டை ஆண்டி வீட்டு அம்மியை உடைத்தது * அரசனுக்கு அஞ்சி வலியார் எளியாருக்கு அநுகூலம் ஆகிறது * அரசனுக்கு ஒரு சொல், அடிமைக்குத் தலைச் சுமை * அரசனுக்கு ஓர் ஆனை இருந்தால் ஆண்டிக்கு ஒரு பானையாவது இராதா? * அரசனுக்குச் செங்கோல்; சம்சாரிக்கு உழவு கோல் * அரசனுக்குத் துணை வயவாள் * அரசனுக்கு வலியார் அஞ்சுவது எளியாருக்கு அநுகூலம் * அரசனும் சரி, அரவும் சரி * அரசனும் சரி அழலும் சரி * அரசனும் ஆண்டி ஆவான்; ஆண்டியும் அரசன் ஆவான் * அரசனும் நெருப்பும் பாம்பும் சரி * அரசனே முட்டி எடுக்கிறான்; அவன் ஆனை கரும்புக்கு அழுகிறதாம் * அரசனைக் கண்ட கண்ணுக்குப் புருஷனைக் கண்டால் கொசுப் போல இருக்கிறது * அரசனைக் காட்டிக் கொடுப்பது அமைச்சனுக்குத் தர்மம் அல்ல * அரசனை நம்பிப் புருஷனைக் கை விட்டது போல * அரசனோடு எதிர்த்த குடிகள் கெட்டுப்போகும் * அரசாங்கத்துக் கோழிமுட்டை அம்மிக் கல்லையும் உடைக்கும் * அரசிலையும் மண்ணாங் கட்டியும் உறவு கொண்டாடினவாம் * அரசு அறிய வீற்றிருந்த வாழ்வு விழும் * அரசு இல்லா நாடு அலைக்கழிந்தாற் போல * அரசு இல்லாப் படை வெல்வது அரிது * அரசு உடையானை ஆகாசம் காக்கும் * அரசுக்கு இல்லை சிறுமையும் பெருமையும் * அரண்மனை ஆனைக்கு அம்பாரி வைத்தாலும் ஆலய ஆனைக்குக் கொட்டு மேளம் போதுமே * அரண்மனை உறவைக் காட்டிலும் அடுக்களை உறவுதான் மேல் * அரண்மனைக் காரியம் அறிந்தாலும் சொல்லாதே * அரண்மனை காத்தவனுக்கும் அடுக்குள் காத்தவனுக்கும் குறைவு இல்லை * அரண்மனை காத்தவனும் ஆலயம் காத்தவனும் வீணாகப் போக மாட்டார்கள் * அரண்மனை ரகசியம் அங்காடிப் பரசியம் * அரண்மனை லங்கா தகனம்; அரசனுக்கோ சங்கீத கவனம் * அரண்மனை வாசல் காத்தவனும் பறிமடை வாசல் காத்தவனும் பறிபோகிறது இல்லை * அரணை அலகு திறக்காது * அரணை கடித்தால் உடனே மரணம் * அரத்தை அரம் கொண்டும் வயிரத்தை வயிரம் கொண்டும் அறுக்க வேண்டும் * அரபிக் குதிரையானாலும் ஆள் ஏறி நடத்த வேண்டும் * அரபிக் குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி மேல் * அரமும் அரமும் கூடினால் கின்னரம் * அரவணைச் சோறு வேண்டுமானால் அறைக்கீரைக்குப் பின்தான் கிடைக்கும் * அரவத்தைக் கண்டால் கீரி விடுமா? * அரவத்தோடு ஆடாதே; ஆற்றில் இறங்காதே * அரவின் வாய்த் தேரைபோல * அரவுக்கு இல்லை சிறுமையும் பெருமையும் * அரன் அருள் அல்லாது அணுவும் அசையாது * அரன் அருள் அற்றால் அனைவரும் அற்றார் * அரன் அருள் உற்றால் அனைவரும் உற்றார் * அராமி கோபால் தெய்வத்துக்குப் பாடுகோ பாதிரி * அரி அரி என்றால் ராமா ராமா என்கிறான் * அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிக்கிரமம் பண்ணலாமா? * அரி என்றால் ஆண்டிக்குக் கோபம்; அரன் என்றால் தாதனுக்குக் கோபம் * அரிக்கிற அரிசியை விட்டுச் சிரிக்கிற சின்னப் பையனைப் பார்த்தாளாம் * அரிகரப் பிரம்மாதிகளாலும் முடியாத காரியம் * அரிச்சந்திரன் அவன் வீட்டுக் கொல்லை வழியாகப் போனானாம் * அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு * அரிசி அள்ளின காக்கைபோல * அரிசி ஆழாக்கு ஆனாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டும் * அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும் * அரிசி இருந்தால் பிட்டு ஆகுமா? * அரிசி இல்லாவிட்டால் பருப்பும் அரிசியுமாய்ப் பொங்கு * அரிசி இறைத்தால் ஆயிரம் காக்கை * அரிசி உழக்கு ஆனாலும் திருவந்திக் காப்புக்குக் குறைவு இல்லை * அரிசி உண்டானால் வரிசை உண்டு. அக்காள் உண்டானால் மச்சான் உண்டு * அரிசி என்று அள்ளிப் பார்ப்பாரும் இல்லை, உமி என்று ஊதிப் பார்ப்பாரும் இல்லை * அரிசிக்குத் தக்க உலையும் அகமுடையானுக்குத் தக்க வீறாப்பும் * அரிசிக்குத் தக்க கனவுலை * அரிசிக் குற்றம் சாதம் குழைந்தது; அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்தது * அரிசி கொடுத்து அக்காள் உறவு என்ன? * அரிசி கொடுத்து அக்காள் வீட்டில் சாப்பாடா? * அரிசி கொண்டு அக்காள் வீட்டுக்குப் போவானேன்? * அரிசி சிந்தினால் அள்ளி விடலாம்; வார்த்தை சிந்தினால் வார முடியுமா? * அரிசிப் பகையும் அகமுடையாள் பகையும் கிடையாது * அரிசிப் பல்காரி அவிசாரி, மாட்டுப் பல்காரி மகராஜி * அரிசிப் பானையும் குறையக் கூடாது; ஆண்மகன் முகமும் வாடக் கூடாது * அரிசிப் பிச்சை எடுத்து அறுகங் காட்டில் கொட்டினாற் போல * அரிசிப் பிச்சை வாங்கி அரிக்கம் சட்டியில் கொட்டினேனே! * அரிசிப் புழு சாப்பிடாதவர் இல்லை; அகமுடையானிடம் அடிபடாத வளும் இல்லை * அரிசிப் பொதியுடன் திருவாரூர் * அரிசி பருப்பு இருந்தால் ஐப்பசி மாசம் கல்யாணம்; காய்கறி இருந்தால் கார்த்திகை மாசம் கல்யாணம் * அரிசி மறந்த கூழுக்கு உப்பு ஒன்று குறைவா? * அரிசியும் கறியும் உண்டானால் அக்காள் வீடு வேண்டும் * அரிசியும் உமியும் போல * அரிசியும் காய்கறியும் வாங்கிக் கொண்டு அக்காள் வீட்டுக்குச் சாப்பிடப் போன மாதிரி * அரித்தவன் சொறிந்து கொள்வான் * அரித்து எரிக்கிற சுப்பிக்கு ஆயம் தீர்வை உண்டோ? * அரிதாரம் கொண்டு போகிற நாய்க்கு அங்கு இரண்டு அடி: இங்கு இரண்டு அடி * அரிது அரிது, அஞ்செழுத்து உணர்த்தல் * அரிது அரிது, மானிடர் ஆதல் அரிது * அரிப்புக்காரச் சின்னிக்கு அடுப்பங்கரைச் சோறு; எரிப்புக்கார எசக்கி எத்திலே தின்பாள் சோறு * அரியக்குடி நகரம் அத்தனையும் அத்தனையே * அரிய சரீரம் அந்தரத்தில் எறிந்த கல் * அரியது செய்து எளியதுக்கு ஏமாந்து நிற்கிறான் * அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு * அரிவாள் ஆடுமட்டும் குடுவையும் ஆடும் * அரிவாள் சுருக்கே, அரிவாள் மணை சுருக்கே * அரிவாள் சூட்டைப் போலக் காயச்சல் மாற்றவோ? * அரிவாள் பிடி பிடித்தால் கொடுவாள் பிடியில் நிற்கட்டுமே * அரிவாள் வெட்டுகிற மரம் ஆனைக்குப் பல்லுக் குச்சி * அரிவாளுக்கு வெட்டினால் கத்திப் பிடிக்காவது உதவும் * அரிவாளும் அசைய வேண்டும்; ஆண்டை குடியும் கெடவேண்டும் * அரிவை மொழி கேட்டால் அறிஞனும் அவத்தன் ஆவான் * அருக்காணி நாச்சியார் குரங்குப் பிள்ளையைப் பெற்றாளாம் * அருக்காணி முத்து கரிக்கோலம் ஆனாள் * அருக்காணி முருக்கப்பூப்போலச் சரக்குப் பிரியப் பண்ணுகிறது * அருக்காமணி முருக்கம் பூ * அருக்கித் தேடிப் பெருக்கி அழிப்பதா? * அருகாகப் பழுத்தாலும் விளாமரத்தில் வெளவால் சேராது * அருங்கொம்பில் தேன் இருக்கப் புறங்கையை நக்கினால் வருமா? * அருங்கோடை தும்பு அற்றுப் போகிறது * அருஞ்சுனை நீர் உண்டால் அப்பொழுதே ஜூரம் * அருட்செல்வம் ஆருக்கும் உண்டு; பொருட் செல்வம் ஆருக்கும் இல்லை * அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் * அருணாம்பரமே கருணாம்பரம் * அருணோதயத்துக்கு அரிசி களைந்து வைத்தால் அஸ்தமிக்க வடிக்க மாட்டேனா? * அருத்தியைப் பிடுங்கித் துருத்தியிலே போட்டுத் துருத்தியைப் பிடுங்கி அருத்தியிலே போடுகிறது * அரும்பு ஏறினால் குறும்பு ஏறும் * அரும்பு கோணினால் அதன் மணம் குன்றுமா? * அருமந்த பெண்ணுக்கு அடியெல்லாம் ஓட்டை * அருமை அற்ற வீட்டில் எருமையும் குடி இராது * அருமை அறியாதவன் அற்றென்ன? உற்றென்ன? * அருமை அறியாதவன் ஆண்டு என்ன? மாண்டு என்ன? * அருமை அறியாதவனிடத்தில் போனால் பெருமை எல்லாம் குறைந்து போம் * அருமை பெருமை அறிந்தவன் அறிவான் * அருமை மருமகன் தலைபோனால் போகட்டும்; ஆதிகாலத்து உரல் போகலாகாது * அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது * அருவருத்த சாப்பாட்டை விட மொரமொரத்த பட்டினி மேலானது * அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது * அருவருப்புச் சோறும் அசங்கியக் கறியும் * அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை * அருள் வேணும்; பொருள் வேணும்; அடக்கம் வேணும் * அருள் வேணும்; பொருள்வேணும்; ஆகாய வாணி துணையும் வேணும் * அரே அரே என்பார் எல்லாம் அமுது படைப்பார்களா? * அரை அடி ஏறினால் ஓரடி சறுக்குகிறது * அரைக் கல்வி முழு மொட்டை * அரைக்கவும் மாயம்; இரைக்கவும் மாயம் * அரைக்காசு என்றாலும் அரண்மனைச் சேவகம் நல்லது * அரைக் காசுக் கல்யாணத்துக்கு ஆனை விளையாட்டு வேறா? * அரைக் காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம் மரக்கால் பொன் கொடுத்தாலும் வருமா? * அரைக் காசுக்குக் கல்யாணம்; அதிலே கொஞ்சம் வாண வேடிக்கை * அரைக் காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும்; ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும் * அரைக் காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது * அரைக் காசுக்கு மலம் தின்பவன் * அரைக் காசுக்கு வந்த வெட்கம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் போகாது * அரைக் காசு கொடுத்து அழச்சொல்லி அஞ்சு காசு கொடுத்து நிறுத்தச் சொன்னாற் போல * அரைக் காசு கொடுத்து ஆடச் சொல்லி, ஒரு காசு கொடுத்து ஓயச் சொன்னாளாம் * அரைக் காசு சேர்த்து முடிப்பணம் ஆக்குவது போல * அரைக் காசு பெறாத பாட்டியம்மாவுக்கு மூன்று காசு கொடுத்து மொட்டை அடிக்க வேண்டும் * அரைக் காசும் முதல் இல்லை; அங்கங்கே வைபோகம் * அரைக் காசு வேலை ஆனாலும் அரசாங்க வேலை * அரைக் காசை ஆயிரம் பொன் ஆக்குகிறவளும் பெண்சாதி; ஆயிரம் பொன்னை அரைக் காசு ஆக்குகிறவளும் பெண்சாதி * அரைக்கிற அரிசியை விட்டுவிட்டுச் சிரிக்கிற சிற்றப்பனோடே போனாளாம் * அரைக்கிறவன் ஒன்று நினைத்து அரைக்கிறான்; குடிக்கிறவள் ஒன்று நினைத்துக் குடிக்கிறான் * அரைக்கீரை போட்டால் சிறுகீரை முளைக்கும் * அரைக்குடம் தளும்பும்; நிறைகுடம் தளும்பாது * அரைகட்டி நாய்க்கு உரிகட்டித் திருநாளா? * அரை குழைத்தாலும் குழைத்தாள்; அரிசியாக வைத்தாலும் வைத்தாள் * அரை குறை வித்தையுடன் அம்பலத்தில் ஏறினால் குறையும் நிறைவாகிவிடும் * அரை குறை வேலையை ஆசானுக்குக் காட்டாதே * அரைச் சல்லியை வைத்து எருக்கு இலையைக் கடந்ததுபோல * அரைச் சீலை கட்டக் கைக்கு உபசாரமா? * அரைச் செட்டு முழு நஷ்டம் * அரைச்சொல் கொண்டு அம்பலம் ஏறினால் அரைச்சொல் முழுச்சொல் ஆகுமா? * அரைச்சொல் வித்தை கொண்டு அம்பலம் ஏறலாமா? * அரைஞாண் கயிறும் தாய்ச்சீலையும் ஆய்விடுகிறவள் பெண்சாதி * அரைத்ததும் மீந்தது அம்மி; சிரைத்ததும் மீந்தது குடுமி * அரைத்ததையே அரைப்பது போல * அரைத்தவளுக்கு ஆட்டுக்கல்; சுட்டவளுக்குத் தோகைக் கல் * அரைத்தாலும் சந்தனம் அதன்மணம் மாறாது * அரைத் துட்டிலே கல்யாணம்; அதிலே கொஞ்சம் வாண வேடிக்கை * அரைத் துட்டுக்குப் பீத் தின்றவன் * அரைத்துணியை அவிழ்த்து மேல்கட்டுக் கட்டியது போல * அரைத்து மீந்தது அம்மி; சிரைத்து மீந்தது குடுமி * அரைப்படி அரிசியில் அன்னதானம்; அதிலே கொஞ்சம் மேளதாளம் * அரைப்படி அரிசியில் அன்னதானம்; விடியும் மட்டும் மேளதாளம் * அரைப் படிப்பைக் கொண்டு அம்பலம் ஏறலாமா? * அரைப்பணச் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம் போல் ஆகுமா? * அரைப் பணத்திலே கல்யாணம், அதிலேகொஞ்சம் வாணவேடிக்கை * அரைப் பணத்துக்கு வாய் அதிகம்; ஐந்தாறு அரிசிக்குக் கொதி அதிகம் * அரைப் பணத்துக்கு மருத்துவம் பார்க்கப் போய் அஞ்சு பணத்து நெளி உள்ளே போய்விட்டது * அரைப் பணம கொடுக்கப் பால் மாறி அம்பது பணம் கொடுத்து அரி சேவை செய்த கதை * அரைப் பணம் கொடுககப் பால்மாறி ஐம்பது பணம் கொடுத்துச் சேவை செய்த கதை * அரைப் பணம் கொடுத்து அழச்சொல்லி, ஒரு பணம் கொடுத்து ஓயச் சொன்னானாம் * அரைப் பணம் கொடுத்து ஆடச் சொன்னால், ஒருபணம் கொடுத்து ஓயச் சொல்ல வேணும் * அரைப் பணம் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம் போல் ஆகுமா? * அரை பறக்கத் தலை பறக்கச் சீராட்டல் * அரை மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்தான் செட்டி * அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகா * அரையும் குறையும் * அரைவித்தை கொண்டு அம்பலம் ஏறினால் அரைவித்தை முழுவித்தை ஆகுமா? * அரை வேலையைச் சபையிலே கொண்டு வருகிறதா? * அரோகரா என்பவனுக்குப் பாரமா? அமுது படைப்பவனுக்குப் பாரமா? * அல்லக் காட்டு நரி பல்லைக் காட்டுகிறது போல * அல்லல் அற்ற படுக்கை அழகிலும் அழகு * அல்லல் அற்ற படுக்கையே அமைதியைத் தரும் * அல்லல் ஒரு காலம்; செல்வம் ஒரு காலம் * அல்லல் காட்டு நரி பல்லைக் காட்டிச் சிரித்ததாம் * அல்லல் பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும் * அல்லவை தேய அருள் பெருகும் * அல்லாத வழியில் பொருள் ஈட்டல், காமம் துய்த்தல் ஆகியவை ஆகா * அல்லாதவன் வாயில் கள்ளை வார் * அல்லார் அஞ்சலிக்கு நல்லார் உதை மேல் * அல்லாவுக்குக் குல்லாப் போட்டவன் முல்லாவுக்குச் சல்லாப் போட்டானாம் * அல்லாவை நம்பிக், குல்லாவைப் போட்டால் அல்லாவும் குல்லாவும் ஆற்றோடே போச்சு * அல்லி பேரைக் கேட்டாலும் அழுத பிள்ளை வாய் மூடும் * அல்லும் பகலும் கசடு அறக் கல் * அல்லோல கல்லோலப் படுகிறது * அலுத்துச் சலித்து அக்காள் வீட்டுக்குப் போனாளாம்; அக்காள் இழுத்து மச்சானிடம் விட்டாளாம் * அலுத்துச் சலித்து அம்பட்டன் வீட்டுக்குப் போனதற்கு இழுத்துப் பிடித்துத் தலையைச் சிரைத்தானாம் * அலுத்து வியர்த்து அக்காள் வீட்டுக்குப் போனால், அக்காள் இழுத்து மச்சானண்டை போட்டாளாம் * அலுவல் அற்றவன் அக்கிரகாரத்துக்குப் போக வேணும் * அலுவலகத்தில் ஐயா அதிகாரம்; அகத்தில் அம்மா அதிகாரம் * அலை அடங்கியபின் ஸ்நானம் செய்ய முடியுமா? * அலை எப்பொழுது ஓயும்? தலை எப்பொழுது முழுகுகிறது? * அலை ஓய்ந்த பிறகு ஸ்நானம் செய்வது போல * அலை ஒய்ந்து கடல் ஆடுவது இல்லை * அலைகடலுக்கு அணை போடலாமா? * அலை நிற்கப் போவதும் இல்லை; தம்பி தர்ப்பணம் செய்து வரப் போவதும் இல்லை * அலை போல நாக்கும் மலைபோல மூக்கும் ஆகாசம் தொட்ட கையும் அரக்கனுக்கு * அலை மோதும் போதே கடலாட வேண்டும் * அலையில் அகப்பட்ட துரும்பு போல * அலையும் நாய் பசியால் இறக்காது * அலைவாய்த் துரும்பு போல் அலைகிறது * அவ்வளவு இருந்தால் அடுக்கி வைத்து வாழேனோ? * அவகடம் உடையவனே அருமை அறியான் * அவகுணக்காரன் ஆகாசம் ஆவான் * அவசம் அடைந்த அம்மங்காள் அரைப்புடைவை இல்லா விட்டால் சொல்ல லாகாதா? * அவசரக்காரனுக்கு ஆக்கிலே பெட்டு; நாக்குச் சேத்திலே பெட்டு * அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு * அவசரக் குடுக்கை * அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாளாம் * அவசரச் சுருக்கே, அரிவாள் மனணக் கருக்கே * அவசரத்தில் குண்டுச் சட்டியிலும் கை நுழையாது * அவசரத்தில் செத்த பிணத்துக்குப் பீச்சூத்தோடு மாரடிக்கிறான் * அவசரத்திலும் உபசாரமா? * அவசரத்துக்கு அரிக்கும் சட்டியிலும் கை நுழையாது * அவசரத்துக்குத் தோஷம் இல்லை * அவசரப்பட்ட மாமியார் மருமகனைக் கணவனென்று அழைத்தாளாம் * அவசரப் படேல் * அவசரம் ஆனால் அரிக்கும் சட்டியிலும் கை நுழையாது * அவசரம் என்றால் அண்டாவிலும் கை நுழையாது * அவத்தனுக்கும் காணி வேண்டாம்; சமர்த்தனுக்கும் காணி வேண்டாம் * அவத்தனுக்கும் சமர்த்தனுக்கும் காணிக்கை இல்லை * அவத்தனைக் கட்டி வாழ்வதை விடச் சமர்த்தனைக் கட்டி அறுத்துப் போடலாம் * அவதந்திரம் தனக்கு அந்தரம் * அவதிக் குடிக்குத் தெய்வமே துணை * அவப் பொழுதிலும் தவப்பொழுது வாசி * அவமானம் பண்ணி வெகுமானம் பேசுகிறான் * அவர் அவர் அக்கறைக்கு அவர் அவர் படுவார் * அவர் அவர் எண்ணத்தை ஆண்டவன் அறிவான் * அவர் அவர் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான்; அழித்தாலும் அழிப்பான் * அவர் அவர் மனசே அவர் அவர்க்குச் சாட்சி * அவர்களுக்கு வாய்ச்சொல்; எங்களுக்குத் தலைச் சுமை * அவருடைய இறகு முறிந்து போயிற்று * அவரை எம்மாதம் போட்டாலும் தை மாதம் காய்க்கும் * அவரை ஒரு கொடியும் வடமன் ஒரு குடியும் * அவரைக்கு ஒரு செடி; ஆதீனத்துக்கு ஒரு பிள்ளை * அவரை நட்டால் துவரை முளைக்குமா? * அவல் பெருத்தது ஆர்க்காடு * அவலக் குடித்தனத்தை அம்பலப்படுத்தாதே * அவலட்சணம் உள்ள குதிரைக்குச் சுழி சுத்தம் பார்க்கிறது இல்லை * அவலப் பிணத்துக்கு அத்தையைக் கொண்டது * அவலமாய் வாழ்பவன் சபலமாய்ச் சாவான் * அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பது போல * அவலை முக்கித் தின்னு; எள்ளை நக்கித் தின்னு * அவள் அவள் என்பதைவிட அரி அரி என்பது நலம் * அவள் அழகுக்குத் தாய் வீடு ஒரு கேடா? * அவள் அழகுக்குப் பத்துப் பேர் வருவார்கள்; கண் சிமிட்டினால் ஆயிரம் பேர் மயங்கிப் போவார்கள் * அவள் ஆத்தாளையும் அவள் அக்காளையும் கூத்தாடிப் பையன் அழைக்கிறான் * அவள் எமனைப் பலகாரம் பண்ணுவாள் * அவள் சம்பத்து அறியாமல் கவிழ்ந்தது * அவள் சமத்து, பானை சந்தியிலே கவிழ்ந்தது * அவள் சாட்டிலே திரை சாட்டா? * அவள் சொல் உனக்குக் குரு வாக்கு * அவள் பாடுவது குயில் கூவுவது போல * அவள் பேர் கூந்தலழகி; அவள் தலை மொட்டை * அவள் பேர் தங்கமாம்; அவள் காதில் பிச்சோலையாம் * அவள் மலத்தை மணிகொண்டு ஒளித்தது * அவளிடத்தில் எல்லோரும் பிச்சை வாங்க வேண்டும் * அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள் * அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு அவளே சோடு * அவளுக்கு நிரம்பத் தளுக்குத் தெரியும் * அவளைக் கண்ட கண்ணாலே இன்னொருத்தியைக் காணுகிறதா? * அவளைத் தொடுவானேன்? கவலைப் படுவானேன்? * அவன் அசையாமல் அனுவும் அசையாது * அவன் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது * அவன் அருள் அற்றார் அனைவரும் அற்றார்; அவன் அருள் உற்றார் அனைவரும் உற்றார் * அவன் அவன் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான்; அழித்தாலும் அழிப்பான் * அவன் அவன் செய்த வினை அவன் அவனுக்கு * அவன் அவன் மனசே அவன் அவனுக்குச் சாட்சி * அவன் அவன் தலையெழுத்தின்படி நடக்கும் * அவன் அவன் நிழல் அவன் அவன் பின்வரும் * அவன் அன்றி ஓரணுவும் அசையாது * அவன் ஆகாரத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்கிறான் * அவன் இட்டதே சட்டம் * அவன் இவன் என்பதைவிட அரி அரி என்பது நலம் * அவன் உள் எல்லாம் புண்; உடம்பெல்லாம் கொப்புளம் * அவன் உனக்குக் கிள்ளுக் கீரையா? * அவன் எங்கே இருந்தான்? நான் எங்கே இருந்தேன்? * அவன் எரி பொரி என்று விழுகிறான் * அவன் என் தலைக்கு உலை வைக்கிறான் * அவன் என்னை ஊதிப் பறக்கடிக்கப் பார்க்கிறான் * அவன் எனக்கு அட்டமத்துச் சனி * அவன் ஒரு குளிர்ந்த கொள்ளி * அவன் ஓடிப் பாடி நாடியில் அடங்கினான் * அவன் கணக்குப் புத்தகத்தில் ஒரு பத்திதான் எழுதியிருக்கிறது * அவன் கல்வெட்டான ஆள்; அவன் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை * அவன் கழுத்துக்குக் கத்தி தீட்டுகிறான் * அவன் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்வான் * அவன் காலால் கீறினதை நான் நாவால் அழிக்கிறேன் * அவன் காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்க முடியாது * அவன் கிடக்கிறான் குடிகாரன்; எனக்கு ஒரு திரான் போடு * அவன் கெட்டான் என் கொட்டிலின் பின்னே * அவன் கெட்டான் குடியன்; எனக்கு இரண்டு திரான் வாரு * அவன் கேப் மாறி, அவன் தம்பி முடிச்சு மாறி * அவன் கை மெத்தக் கூர் ஆச்சே * அவன் கை மெத்த நீளம் * அவன் கையைக் கொண்டே அவன் கண்ணில் குத்தினான் * அவன் கொஞ்சப் பள்ளியா? * அவன் சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது * அவன் சாதி அறிந்த புத்தி, குலம் அறிந்த ஆசாரம் * அவன் சாதிக்கு எந்தப் புத்தியோ குலத்துக்கு எந்த ஆசாரமோ அதுதான் வரும் * அவன் சாயம் வெளுத்துப் போய்விட்டது * அவன் செய்த வினை அவனைச் சாரும் * அவன் சொன்னதே சட்டம்; இட்டதே பிச்சை * அவன் சோற்றுக்குத் தாளம் போடுகிறான் * அவன் சோற்றை மறந்துவிட்டான் * அவன் தம்பி அங்கதன் * அவன் தம்பி நான்தான்; எனக்கு ஒன்றும் வராது * அவன் தலையில் ஓட்டைக் கவிழ்ப்பான் * அவன் தவிடு தின்று போவான் * அவன் தன்னாலேதான் கெட்டால், அண்ணாவி என்ன செய்வான்? * அவன் தொட்டுக் கொடுத்தான்; நான் இட்டுக் கொடுத்தேன் * அவன் நடைக்குப் பத்துப்பேர் வருவார்கள்; கைவீச்சுக்குப் பத்துப் பேர் வருவார்கள் * அவன் நா அசைந்தால் நாடு அசையும் * அவன் நிரம்ப வைதிகமாய்ப் பேசுகிறான் * அவன் நின்ற இடம் ஒரு சாண் வெந்து இருபது சாண் நீறாகும் * அவன் பசியாமல் கஞ்சி குடிக்கிறான் * அவன் பிடித்த முயலுக்கு மூன்றே கால் * அவன் பின்புறத்தைத் தாங்குகிறான் * அவன் பூராய மாயம் பேசுகிறான் * அவன் பேச்சு விளக்கெண்ணெய்ச் சமாசாரம் * அவன் பேச்சைத் தண்ணீரில்தான் எழுதி வைக்க வேணும் * அவன் பேசுகிறது எல்லாம் தில்லுமுல்லு, திருவாதிரை * அவன் போட்டதே சட்டம்; இட்டதே பிச்சை * அவன் மனசே அவனுக்குச் சாட்சி * அவன் மிதித்த இடத்தில் புல்லும் முளையாது * அவன் மூத்திரம் விளக்காய் எரிகிறது * அவன் மெத்த அத்து மிஞ்சின பேச்சுக்காரன் * அவன் ராஜ சமூகத்துக்கு எலுமிச்சம்பழம் * அவன் வம்புக்கும் இவன் தும்புக்கும் சரி * அவன் வல்லாள கண்டனை வாரிப் போர் இட்டவன் * அவன் வலத்தை மண் கொண்டு ஒளித்தது * அவனண்டை அந்தப் பருப்பு வேகாது * அவனியில் இல்லை ஈடு; அவளுக்கு அவளே சோடு * அவனுக்கு ஆகாசம் மூன்று விரற்கடை * அவனுக்குக் கத்தியும் இல்லை; கபடாவும் இல்லை * அவனுக்குக் கபடாவும் இல்லை; வெட்டுக்கத்தியும் இல்லை * அவனுக்குச் சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது * அவனுக்கச் சுக்கிாதசை அடிக்கிறது * அவனுக்குப் பொய்ச் சத்தியம் பாலும் சோறும் * அவனுக்கும் அவளுக்கும் ஏழாம் பொருத்தம் * அவனுக்கும் இவனுக்கும் அஜகஜாந்தரம் * அவனுக்கும் இவனுக்கும் எருமைச் சங்காத்தம் * அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறதா என் பிழைப்பு எல்லாம்? * அவனுக்க ஜெயில் தாய் வீடு * அவனுடைய பேச்சுக் காற் சொல்லும் அரைச் சொல்லும் * அவனுடைய வாழ்வு நண்டுக்குடுவை உடைந்ததுபோல இருக்கிறது * அவனே இவனே என்பதை விடச் சிவனே சிவனே என்பது நல்லது * அவனே வெட்டவும் விடவும் கர்த்தன் * அவனை அவன் பேசிவிட்டுப் பேச்சு வாங்கி ஆமை மல்லாத்தினாற் போல மல்லாத்திப் போட்டான் * அவனை உரித்து வைத்தாற்போல் பிறந்திருக்கிறான் * அவனோடு இவனை ஏணிவைத்துப் பார்த்தாலும் காணாது * அவிக்கிற சட்டியை விட மூடுகிற சட்டி பெரிதாக இருக்கிறது * அவிசல் கத்தரிக்காய் ஐயருக்கு * அவிசாரி அகமுடையான் ஆபத்துக்கு உதவுவானா? * அவிசாரி ஆடினாலும் அதிர்ஷ்டம் வேண்டும்; திருடப் போனாலும் திசை வேண்டும் * அவிசாரி ஆனாலும் ஆனைமேல் போகலாம்; திருடன் தெருவழியே கூடப் போக முடியாது * அவிசாரி என்று ஆனைமேல் ஏறலாம்; திருடி என்று தெருவில் வரலாமா? * அவிசாரி என்று பெயர் இல்லாமல் ஐந்து பிராயம் கழித்தாளாம் * அவிசாரிக்கு ஆணை இல்லை; திருடிக்குத் தெய்வம் இல்லை * அவிசாரிக்கும் ஆற்றில் விழுகிறவளுக்கும் காவல் போட முடியுமா? * அவிசாரிக்கு வாய் பெரிது; அஞ்சாறு அரிசிக்குக் கொதி பெரிது * அவிசாரி கையில் சாப்பிடாதவனும் அரிசிப் புழுத் தின்னாதவனும் இல்லை * அவிசாரி பிள்ளை கோத்திரத்துக்குப் பிள்ளை * அவிசாரி பிள்ளை சபைக்கு உறுதி * அவிசாரி போக ஆசையாய் இருக்குது; அடிப்பானென்று பயமாய் இருக்குது * அவிசாரி போனாலும் முகராசி வேணும்; அங்காடி போனாலும் கைராசி வேணும் * அவிசாரியிலே வந்தது பெரு வாரியிலே போகிறது * அவிசாரி வாயாடுகிறாற் போலே * அவிட்டத்தில் பிறந்த தங்கச்சியை அந்நியத்தில் கொடுக்கக் கூடாது * அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டுப் பானையிலும் பொன் * அவிட்டத்துப் பெண் தொட்டதெல்லாம் பொன் * அவித்த பயறு முளைக்குமா? * அவிர்ப் பாகத்தை நாய் மோந்த மாதிரி * அவிவேகி உறவிலும் விவேகி பகையே நன்று * அவிழ்த்துக் கொண்டதாம் கழுதை; எடுத்துக் கொண்டதாம் ஓட்டம் * அவிழ்த்து விட்ட காளை போல * அவிழ்த்து விட்டதாம் கழுதை; எடுத்து விட்டதாம் ஓட்டம் * அவிழ்த்து விட்டால் பேரளம் போவான் * அவிழ்தம் என்ன செய்யும்? அஞ்சு குணம் செய்யும்; பொருள் என்ன செய்யும்? பூவை வசம் செய்யும் * அவுங்க என்றான், இவுங்க என்றான்; அடிமடியிலே கையைப் போட்டான் * அவையிலும் ஒருவன், சவையிலும் ஒருவன் * அழ அழச் சொல்வார் தமர்; சிரிக்கச் சிரிக்கச் சொல்வார் பிறர் * அழகர் கோயில் மாடு தலை ஆட்டினது போல * அழகன் நடைக்கு அஞ்சான்; செல்வன் சொல்லுக்கு அஞ்சான் * அழகால் கெட்டாள் சீதை, வாயால் கெட்டாள் திரெளபதி * அழகிலே அர்ஜூனனாம்; ஆஸ்தியிலே குபேரனாம் * அழகிலே பவளக் கொடி; அந்தத்திலே மொந்தை மூஞ்சி * அழகிலே பிறந்த பவளக்கொடி, ஆற்றிலே மிதந்த சாணிக் கூடை * அழகிற்கு மூக்கை அழிப்பார் உண்டா? * அழக இருந்து அழும்; அதிர்ஷ்டம் இருந்து உண்ணும் * அழகு இருந்து உண்ணுமா? அதிருஷ்டம் இருந்து உண்ணுமா? * அழக இருந்து என்ன? அதிருஷ்டம் இருக்க வேண்டும் * அழகு இல்லாதவள் மஞ்சள் பூசினாள்: ஆக்கத் தெரியாதவள் புளியைக் கரைத்து ஊற்றினாள் * அழக ஒழுகுகிறது; நாய் வந்து நக்குகிறது: ஓட்டைப் பானை கொண்டு வா, பிடித்து வைக்க * அழகு ஒழுகுகிறது, மடியில் கட்டடி கலயத்தை * அழகுக்கா மூக்கை அறுப்பாள்? * அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும் * அழகுக்கு அழகு செய்வது போல * அழகுக்கு இட்டால் ஆபத்துக்கு உதவும் * அழகுக்குச் செய்தது ஆபத்துக்கு உதவும் * அழகுக்கு மூக்கை அழித்து விட்டாள் * அழகு கிடந்து அழும்; அதிர்ஷ்டம் கிடந்து துள்ளும் * அழகு கிடந்து புலம்புகிறது; அதிர்ஷ்டம் கண்டு அடிக்கிறது * அழகு சொட்டுகிறது * அழகு சோறு போடுமா? அதிர்ஷ்டம் சோறு போடுமா? * அழகுப் பெண்ணே காத்தாயி, உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி * அழகு வடியது; கிளி கொஞ்சுது * அழச் சொல்கிறவன் பிழைக்கச் சொல்லுவான்; சிரிக்கச சொல்கிறவன் கெடச் சொல்லுவான் * அழப் பார்த்தான் கல்யாணம் போய்ப் பார்த்தால் தெரியும் * அழலாம் என்று நினைப்பதற்குள் அகமுடையான் அடித்தானாம் * அழிக்கப் படுவானைக் கடவுள் அறிவினன் ஆக்குவார் * அழித்தால் ஐந்த ஆள் பண்ணலாமே! * அழித்துக் கழித்துப் போட்டு வழித்து நக்கி என்று பெயர் இட்டானாம்! * அழிந்த கொல்லையில் ஆனை மேய்ந்தால் என்ன? குதிரை மேய்ந்தால் என்ன? * அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன? * அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்து என்ன? கழுதை மேய்ந்து என்ன? * அழிந்தவன் ஆரோடு போனால் என்ன? * அழிய உழுது அடர விதை * அழியாச் செல்வம் விளைவே ஆகும் * அழியாத செல்வத்துக்கு அசுவம் வாங்கிக் கட்டு * அழி வழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன் * அழிவுக்கு முன்னால் அகந்தை * அழுக்குக்குள் இருக்கும் மாணிக்கம் * அழுக்குச் சீலைக்குள் மாணிக்கம் * அழுக்குத் துணியில் சாயம் தோய்ப்பது போல * அழுக்கை அழுக்குக் கொல்லும்; இழுக்கை இழுக்குக் கொல்லும் * அழுக்கைத் துடைத்து மடியிலே வைத்தாலும் புழுக்கைக் குணம் போகாது * அழுகலுக்கு ஒரு புழுத்தல் * அழு கள்ளன், தொழு கள்ளன், ஆசாரக் கள்ளன் * அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது * அழுகிறதற்கு அரைப்பணம் கொடுத்து ஓய்கிறதற்கு ஒரு பணம் கொடு * அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம் * அழுகிற பிள்ளையும் வாயை மூடிக் கொள்ளும் * அழுகிற வீட்டில் இருந்தாலும் ஒழுகுகிற வீட்டில் இருக்கக் கூடாது * அழுகிற வீட்டுக்குப் போனாலும் திருட்டுக் கை சும்மா இராது * அழுகிற வேளை பார்த்து அக்குளில் பாய்ச்சுகிறான் * அழுகின பழம் ஐயருக்கு * அழுகை ஆங்காரத்தின் மேலும், சிரிப்புக் கெலிப்பின் மேலுந்தான் * அழுகைத் தூற்றல் அவ்வளவும் பூச்சி * அழுகையும் ஆங்காரமும் சிரிப்புக் கெலிப்போடே * அழுகையும் சிணுங்கலும் அம்மான் வீட்டில்; சிரிப்பும் களிப்பும் சிற்றப்பன் வீட்டில் * அழுத்தந் திருத்தமாய் உழுத்தம் பருப்பு என்றான் * அழுத்த நெஞ்சன் ஆருக்கும் உதவான்; இளகின நெஞ்சன் எவருக்கும் உதவுவான் * அழுத கண்ணீரும் கடன் * அழுத கண்ணும் சிந்திய மூக்கும் * அழுத பிள்ளை உரம் பெறும் * அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் * அழுத பிள்ளை சிரித்ததாம்; கழுதைப் பாலைக் குடித்ததாம் * அழுத பிள்ளை பசி ஆறும் * அழுத பிள்ளை பால் குடிக்கும் * அழுத பிள்ளையும் வாய் மூடும் அதிகாரம் * அழுத மூஞ்சி சிரிக்குமாம்; கழுதைப் பாலைக் குடிக்குமாம் * அழுதவளுக்கு வெட்கம் இல்லை; துணிந்தவளுக்குத் துக்கம் இல்லை * அழுதவனுக்கு ஆங்காரம் இல்லை * அழுதால் துக்கம்; சொன்னால் வெட்கம் * அழுதால் தெரியாதோ? ஆங்காரப் பெண் கொள்ளாதோ? * அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும் * அழுது கொண்டு இருந்தாலும் உழுது கொண்டிரு * அழுது முறையிட்டால் அம்பலத்தில் கேட்கும் * அழுபிள்ளைத் தாய்ச்சிக்குப் பணம் கொடுத்தால் அநுபவிக்க ஒட்டுமா குழந்தை? * அழுவார் அழுவார் தம் தம் கரைச்சல்; திருவன் பெண்டிருக்கு அழுவார் இல்லை * அழுவார் அழுவார் எல்லாம் தன் கரைச்சல்; திருவன் பெண்டிருக்கு அழுவார் இல்லை * அழுவார் அழுவார் தம் துக்கம்; அசலார்க்கு அல்ல * அழுவார் அற்ற பிணமும் சுடுவார் அற்ற சுடலையும் * அழையாத வீட்டில் நாய்போல நுழையாதே * அழையாத வீட்டில் நுழையாத விருந்து * அழையாத வீட்டுக்கு விருந்துக்குப் போனால் மரியாதை நடக்காது * அழையாத வீட்டுக்குள் நுழையாத சம்பந்தி * அழையா வீட்டுக்குள் நுழையாச் சம்பந்தி * அள்ளப் போனாலும் அதிர்ஷ்டம் வேண்டும் * அள்ளரிசி புள்ளரிசி அவளானால் தருவாள்; அறியாச் சிறுக்கி இவள் என்ன தருவாள்? * அள்ளாது குறையாது; இல்லாது பிறவாது * அள்ளிக் குடிக்கத் தண்ணீர் இல்லை; அவள் பேர் கங்காதேவி * அள்ளிக் கொடுத்தால் சும்மா; அளந்து கொடுத்தால் கடன் * அள்ளிக் கொண்டு போகச்சே கிள்ளிக்கொண்டு வருகிறான் * அள்ளித் துள்ளி அரிவாள் மணையில் விழுந்தாளாம் * அள்ளி நடுதல் கிள்ளி நடுதல் * அள்ளிப்பால் வார்க்கையிலே கொள்ளிப்பால் வார்த்திருக்குது * அள்ளிய காரும் கிள்ளிய சம்பாவும் * அள்ளுகிறவன் இடத்தில் இருந்தாலும் கிள்ளுகிறவன் இடத்தில் இருக்கக் கூடாது * அள்ளும்போதே கிள்ளுவது * அள்ளுவது எல்லாம் நாய் தனக்கு என்று எண்ணுமாம் * அளக்கிற நாழி அகவிலை அறியுமா? * அளகாபுரி கொள்ளை ஆனாலும் அதிர்ஷ்ட ஈனனுக்கு ஒன்றும் இல்லை * அளகாபுரியிலும் விறகு தலையன் உண்டு * அளகேசன் ஆனாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும் * அளந்த அளந்த நாழி ஒளிஞ்சு ஒளிஞ்சு வரும் * அளந்த நாழி கொண்டு அளப்பான் * அளந்தால் ஒரு சாண் இல்லை; அரிந்தால் ஒரு சட்டி காணாது * அளந்து ஆற்றிலே ஒழிக்க வேணும் * அளவு அறிந்து அளித்து உண் * அளவு அறிந்து உண்போன் ஆயுள் நீளும் * அளவு அறிந்து வேலை செய்தால் விரல் மடக்கப் பொழுது இல்லை * அளவு இட்டவரைக் களவு இடலாமா? * அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் * அளிஞ்சு பழஞ் சோறாய்ப் போச்சுது * அளுக்கு வீட்டு நாய் உளுக்கையிலே; ஐயா வீட்டு நாய் சவுக்கையிலே * அளுங்குப்பிடி பிடித்தாற் போல * அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும் * அற்பக் கோபத்தினால் அறுந்த மூக்கு ஆயிரம் சந்தோஷம் வந்தாலும் வருமா? * அற்பச் சகவாசம் பிராண சங்கடம் * அற்ப சகவாசம் பிராண சங்கடம் * அற்ப சந்தோஷம் * அற்ப சுகம், கோடி துக்கம் * அற்பத்திற்கு அரைக்காசு அகப்பட்டால் திருக்குளத்தில் போட்டுத் தேடி எடுக்குமாம் * அற்பத்திற்கு அழகு குலைகிறதா? * அற்பத் துடைப்பம் ஆனாலும் அகத் தூசியை அடக்கும் * அற்பப் படிப்பு ஆபத்தை விளைவிக்கும் * அற்பம் அற்பம் அன்று * அற்பன் கை ஆயிரம் பொன்னிலும் சற்புத்திரன் கைத் தவிடு நன்று * அற்பன் பணம் படைத்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் * அற்பன் பணம் படைத்தால் வைக்க வகை அறியான் * அற்பன் பவிஷு அரைக்காசு பெறாது * அற்பனுக்குப் பவிஷு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் * அற்றதுக்கு உற்ற தாய் * அற்றது கழுதை, எடுத்தது ஓட்டம் * அறக்கப் பறக்கப் பாடுபட்டாலும் படுக்கப் பாய் இல்லை * அறிக் கல்வி முழு மொட்டை * அறக்காத்தான் பெண்டு இழந்தான்; அறுகாத வழி சுமந்து அழுதான் * அறக் காய்ந்தால் வித்துக்கு ஆகாது * அறக் கூர்மை முழு மொட்டை * அறங்கையும் புறங்கையும் நக்குதே * அறச் செட்டு முழு நட்டம் * அறச் செட்டு முழு நஷ்டம் * அறத்துக்கும் பாடி, கூழுக்கும் பாடி * அற நனைந்தவருக்குக் கூதல் என்ன? * அறப்படித்த பூனை காடிப் பானையில் தலையை விடும் * அறப்படித்த மூஞ்சூறு கழுநீர்ப் பானையில் விழுந்தாற் போல * அறப்படித்தவர் கூழ்ப் பானையில் விழுவாராம் * அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான் * அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான்; வாங்கவும் மாட்டான் * அறப்பத்தினி அகமுடையானை அப்பா என்று அழைத்தாளாம் * அறப் பேசி உறவாட வேண்டும் * அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறு * அறம் கெட்ட நெஞ்சு திறம்கெட்டு அழியும் * அறம் செய்ய அல்லவை நீங்கி விடும் * அறம் பெருக மறம் தகரும் * அறம் பொருள் இன்பம் எல்லார்க்கும் இல்லை * அறம் வெல்லும்; பாவம் தோற்கும் * அறமுறுக்கினால் அற்றும் போகும் * அற முறுக்கினால் கொடி முறுக்குப் படும் * அற முறுக்குக் கொடும்புரி கொண்டு அற்று விடும் * அறவடித்த ...........சோறுகழுநீர்ப் பானையில் விழுந்தாற் போல் * அறவில்............. வாணிகம் * அறவும் கொடுங்கோலரசன் கீழ்க் குடியிருப்பிலும் குறவன் கிழ்க் குடியிருப்பு மேல் * அறவைக்கு வாய் பெரிது; அஞ்சாறு அரிசிக்குச் கொதி பெரிது * அறிவுக்கு அழகு அகத்து உணர்ந்து அறிதல் * அறிந்த ஆண்டை என்று கும்பிடப் போனால் உங்கள் அப்பன் பத்துப்பணம் கொடுக்கவேணும் கொடு என்றான் * அறிந்த பார்ப்பான் சிநேகிதக்காரன், ஆறு காசுக்கு மூணு தோசை * அறிந்தவன் அறிய வேண்டும், அரியாலைப் பனாட்டை * அறிந்தவன் என்று கும்பிட அடிமை வழக்கு இட்டாற் போல * அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும் * அறிந்து அறிந்து கெட்டவர் உண்டா? * அறிந்து அறிந்து செய்கிற பாவத்தை அழுது அழுது தொலைக்க வேணும் * அறிந்து அறிந்து பாவத்தைப் பண்ணி அழுது அழுது அனுபவித்தல் * அறிந்து கெட்டேன்; அறியாமலும் கெட்டேன்; சொறிந்தும் புண்ணாச்சு * அறிய அறியக் கெடுவார் உண்டா? * அறியாக் குளியாம் கருமாறிப் பாய்ச்சல் * அறியாத ஊருக்குப் புரியாத வழி காட்டினாற் போல் * அறியாத நாள் எல்லாம் பிறவாத நாள் * அறியாப் பாவம் பறியாய்ப் போச்சு * அறியாப் பிள்ளை ஆனாலும் ஆடுவான் மூப்பு * அறியாப் பிள்ளை புத்தியைப் போல * அறியாமல் தாடி வளர்த்து அம்பட்டன் கையிற் கொடுக்கவா? * அறியா விட்டால் அசலைப் பார்; தெரியா விட்டால் தெருவைப்பார் * அறிவார் அறிவார், ஆய்ந்தவர் அறிவார் * அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம் * அறிவிலே விளையுமா? எருவிலே விளையுமா? * அறிவினை ஊழே அடும் * அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம் * அறிவீனனிடத்தில் புத்தி கேளாதே * அறிவு அற்றவனுக்கு ஆண்மை ஏது? * அறிவு அற்றவனுக்கு ஆர் சொன்னால் என்ன? * அறிவுடை ஒருவனை அரசனும் விரும்புவான் * அறிவு இருந்தென்ன? அதிருஷ்டம் வேண்டும் * அறிவு இல்லாச் சயனம் அம்பரத்திலும் இல்லை * அறிவு இல்லாதவன் பெண்களிடத்திலும் தாழ்வு படுவான் * அறிவு இல்லாதவனுக்கு வேலை ஓயாது * அறிவு இல்லார் சிநேகம் அதிக உத்தமம் * அறிவு இல்லார் தமக்கு ஆண்மையும் இல்லை * அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை * அறிவு உடையார் ஆவது அறிவார் * அறிவு உடையாரை அடுத்தால் போதும் * அறிவு உடையாரை அரசனும் விரும்பும் * அறிவு உள்ளவனுக்கு அறிவது ஒன்று இல்லை * அறிவு கெட்ட நாய்க்கு அவலும் சர்க்கரையுமா? * அறிவு கெட்டவனுக்கு ஆர் சொல்லியும் என்ன? * அறிவுடன் ஞானம்; அன்புடன் ஒழுக்கம் * அறிவுடையாரை அரசனும் விரும்புவான் * அறிவு தரும் வாயும் அன்பு உரைக்கும் நாவும் * அறிவு புறம் போய் ஆடினது போல * அறிவு பெருத்தோன், அல்லல் பெருத்தோன் * அறிவு மனத்தை அரிக்கும் * அறிவு யார் அறிவார்? ஆய்ந்தவர் அறிவா * அறிவேன், அறிவேன், ஆல் இலை புளியிலை போல் இருக்கும் என்றானாம் * அறுக்க ஊறும் பூம் பாளை, அணுக ஊறும் சிற்றின்பம் * அறுக்க ஒரு யந்திரம்; அடிக்க ஒரு யந்திரம் * அறுக்க மாட்டா கையிலே 56 கறுக்கு அறிவாளாம் * அறுக்கத் தாலி இல்லை; சிரைக்க மயிரும் இல்லை * அறுக்கப் பிடித்த ஆடுபோல * அறுக்க மாட்டாதவன் இடையில் அம்பத்தெட்டு அரிவாள் * அறுக்கு முன்னே புடுக்கைத்தா: தீக்கு முன்னே தோலைத்தா என்ற கதை * அறுக்கையிலும் பட்டினி; பொறுக்கையிலும் பட்டினி; பொங்கல் அன்றைக்கு பொழுதன்றைக்கும் பட்டினி * அறுகங் கட்டைபோல் அடிவேர் தளிர்க்கிறது * அறுகங் கட்டையும் ஆபத்துக்கு உதவும் * அறுகங் காட்டை உழுதவனும் கெட்டான்; அடங்காப் பெண்ணைக் கொண்டவனும் கெட்டான் * அறுகங் காட்டை விட்டானும் கெட்டான்; ஆன மாட்டை விற்றவனும் கெட்டான் * அறுகு போல் வேர் ஓடி * அறுகு முளைத்த காடும் அரசை எதிர்த்த குடியும் கெடும் * அறுத்த கைக்குச் சுண்ணாம்பு தர மாட்டான் * அறுத்த தாலியை எடுத்துக் கட்டினாற் போல * அறுத்தவள் ஆண்பிள்ளை பெற்றது போல * அறுத்தவளுக்கு அகமுடையான் வந்தாற் போல * அறுத்தவளுக்கு அறுபது நாழிகையும் வேலை * அறுத்தவளுக்குச் சாவு உண்டா? * அறுத்த விரலுக்குச் சுண்ணாம்பு தரமாட்டான் * அறுத்துக் கொண்டதாம் கழுதை; எடுத்துக் கொண்டதாம் ஓட்டம் * அறுத்தும் ஆண்டவள் பொன்னுருவி * அறுதலி பெண் காலால் மாட்டிக் கிழிக்கும் * அறுதலி மகனுக்கு வாழ்க்கைப்பட்டு விருதாவியா அறுத்தேன் * அறுந்த மாங்கனி பொருந்திய செங்கம் * அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கிடையாது * அறு நான்கில் பெற்ற பிள்ளையும் ஆவணி ஐம்மூன்றில் நடுகையும் அநுகூலம் * அறு நான்கில் பெற்ற புதல்வன் * அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி * அறுப்புக் காலத்தில் எலிக்கு நாலு கூத்தியார் * அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும் * அறுபத்து நாலு அடிக்கம்பத்தில் ஏறி ஆடினாலும் அடியில இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும் * அறுபத் தெட்டுக்கு ஓர் அம்பலம் * அறுபதாம் கலக்கம் * அறுபது அடிக் கம்பம் ஏறினாலும் கீழே வந்துதான் யாசகம் வாங்கவேண்டும் * அறுபதுக்கு அப்புறம் பொறுபொறுப்பு * அறுபதுக்கு அறுபது சென்றால் வீட்டுக்கு நாய் வேண்டாம் * அறுபதுக்கு மேல் அடித்ததாம் யோகம் * அறுபதுக்கு மேல் அறிவுக் கலக்கம் * அறுபது நாழிகையும் பாடுபட்டும் அரை வயிற்றுக்கு அன்னம் இல்லை * அறுபது நாளைக்கு எழுபது கதை * அறுபது வயது சென்றால் அவன் வீட்டுக்கு நாய் வேண்டாம் * அறுவடைக் காலத்தில் எலிக்கும் ஐந்து பெண் சாதி * அறுவாய்க்கு வாய்பெரிது; அரிசிக்குக் கொதி பெரிது * அறைக் கீரைப் புழுத் தின்னாதவனும் அவிசாரி கையில் சோறு உண்ணாதவனும் இல்லை * அறைக்குள் நடந்தது அம்பலத்தில் வந்து விட்டது * அறை காத்தான் பெண்டு இழந்தான்; அங்கேயும் ஒரு கை தூக்கி விட்டான் * அறை காத்தான் பெண்டு இழந்தான்; ஆறு காதம் சுமந்தும் செத்தான் * அறையில் ஆடி அல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்? * அறையில் இருந்த பேர்களை அம்பலம் ஏற்றுகிற புரட்டன் * அறையில் சொன்னது அம்பலத்துக்கு வரும் * அறையில் நடப்பது அம்பலத்துக்கு வரலாமா? * அறைவீட்டுச் செய்தி அம்பலத்தில் வரும் * அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறியலாம் * அன்பின் பணியே இன்ப வாழ்வு * அன்பு அற்ற மாமிக்குக் கும்பிடும் குற்றமே * அன்பு அற்றார் பாதை பற்றிப் போகாதே * அன்பு இருக்கும் இடம் அரண்மனை * அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும் * அன்பு இல்லாக் கூழும் இன்பம் இல்லா உடன்பிறப்பும் * அன்பு இல்லாத தாயும் அறிவு இல்லாத புத்திரனும் இன்பம் இல்லாத உடன்பிறப்பும் எதற்குப் பிரயோசனம்? * அன்பு இல்லாதவர்க்கு ஆதிக்கம் இல்லை * அன்பு இலாதார் பின்பு செல்லேல் * அன்பு இலாள் இட்ட அமுது ஆகாது * அன்பு உடையானைப் பறிகொடுத்து அலையறச்சே அசல் வீட்டுக் காரன் வந்து அழைத்தானாம் * அன்பு உள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறான் * அன்பு உள்ள குணம் அலை இல்லா நதி * அன்புக்குத் திறக்காத பூட்டே இல்லை * அன்புடனே ஆண்டவனை வணங்கு * அன்பே சிவம் * அன்பே பிரதானம்; அதுவே வெகுமானம் * அன்பே மூவுலகுக்கும் ராஜா * அன்றாடம் காய்ச்சி * அன்றாடம் சோற்றுக்கு அல்லாடி நிற்கிறது * அன்று அடிக்கிற காற்றுக்குப் படல் கட்டிச் சாத்தலாம் * அன்று அற ஆயிரம் சொன்னாலும் நின்று அற ஒரு காசு பெரிது * அன்று இல்லை, இன்று இல்லை; அழுகற் பலாக்காய் கல்யாண வாசலிலே கலந்துண்ண வந்தாயே * அன்று இறுக்கலாம்; நின்று இறுக்கலாகாது * அன்று எழுதினவன் அழித்து எழுத மாட்டான் * அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா? * அன்று கட்டி அன்று அறுத்தாலும் ஆக்கமுள்ள ஆண் மகனுக்கு வாழ்க்கைப்பட வேண்டும் * அன்று கண்டதை அடுப்பில் போட்டு ஆக்கின பானையைத் தோளில் போட்டுக் கொண்டு திரிகிறது போல * அன்று கண்ட மேனிக்கு அழிவில்லை * அன்று கண்டனர் இன்று வந்தனர் * அன்று கழி, ஆண்டு கழி * அன்று கிடைக்கிற ஆயிரம் பொன்னிலும் இன்று கிடைக்கிற அரைக்காசு பெரிது * அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம் * அன்று கொள், நின்று கொள், என்றும் கொள்ளாதே * அன்று சாப்பிட்ட சாப்பாடு இன்னும் ஆறு மாசத்துக்குத் தாங்கும் * அன்று தின்ற ஊண் ஆறு மாசத்துக்குப் பசியை அறுக்கும் * அன்று தின்ற சோறு ஆறு மாசத்துக்கு ஆகுமா? * அன்று தின்னும் பலாக்காயினும் இன்று தின்னும் களாக்காய் மேல் * அன்று நடு; அல்லது கொன்று நடு; தப்பினால் கொன்று நடு * அன்று பார்த்ததற்கு அழிவில்லை * அன்றும் இல்லை காற்று; இன்றும் இல்லை குளிர் * அன்றும் இல்லை தையல்; இன்றும் இல்லை பொத்தல் * அன்று விட்ட குறை ஆறு மாசம் * அன்றே போச்சுது நொள்ளைமடையான்; அத்தோடே போச்சுது கற்றாழை நாற்றம் * அன்றை ஆயிரம் பொன்னிலும் இன்றை ஒரு காசு பெரிது * அன்றைக்கு அடித்த அடி ஆறு மாசம் தாங்கும் * அன்றைக்கு அறுத்த கார் ஆறு மாசச் சம்பா * அன்றைக்கு ஆடை; இன்றைக்குக் கோடை; என்றைக்கு விடியும் இடையில் தரித்திரம் * அன்றைக்கு இட்டது பிள்ளைக்கு * அன்றைக்கு எழுதியதை அழித்து எழுதப் போகிறானா? * அன்றைக்குக் கிடைக்கிற ஆயிரம் பொன்னிலும் இன்றைக்குக் கிடைக்கிற அரைக்காசு பெரிது * அன்றைக்குச் சொன்ன சொல் சென்மத்துக்கும் போதும் * அன்றைக்குத் தின்கிற பலாக்காயை விட இன்றைக்குத் தின்கிற களாக்காய் மேல் * அன்றைப்பாடு ஆண்டுப் பாடாய் இருக்கிறது * அன்னக் கொட்டிக் கண்ணை மறைக்குது * அன்னச் சுரணை அதிகமானால் அட்சர சுரணை குறையும் * அன்னத் துவேஷமும் பிரம்மத் துவேஷமும் கடைசிக் காலத்துக்கு * அன்னதானத்துக்கு நிகர் என்ன தானம் இருக்கிறது? * அன்னதானம் எங்கு உண்டு; அரன் அங்கு உண்டு * அன்ன நடை நடக்கத் தன் நடையும் போச்சாம் * அன்ன நடை நடக்கப் போய்க் காகம் தன் நடையும் இழந்தாற் போல * அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான் * அன்னப்பிடி வெல்லப் பிடி ஆச்சுது * அன்னம் அதிகம் தின்பானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர் * அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இடலாமா? * அன்னம் இறங்குவது அபான வாயுவால் * அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும் * அன்னம் பித்தம்; கஞ்சி காமாலை * அன்னம் மிகக் கொள்வானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர் * அன்னம் முட்டானால் எல்லாம் முட்டும் * அன்னம் வில்வாதி லேகியம் * அன்னமயம் இன்றிப் பின்னை மயம் இல்லை * அன்னமயம் பிராண மயம் * அன்னமும் தண்ணீரும் கேட்காமல் இருந்தால் பெற்ற பிள்ளைக்கு மேலே பத்துப் பங்காய் வளர்ப்பேன் * அன்னமோ ராமசந்திரா * அன்ன வலையில் அரன் வந்து சிக்குவான் * அன்னிய சம்பத்தே அல்லாமல் அதிக சம்பத்து இல்லை என்றான் * அன்னிய சம்பந்தமே அல்லாமல் அத்தை சம்பந்தம் இல்லை என்கிறான் * அன்னிய மாதர் அவதிக்கு உதவார் * அன்னைக்கு உதவாதான் ஆருக்கும் உதவான் * அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான் * அன்னைக்குப் பின் பெற்ற அப்பன் சிற்றப்பன் * அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் * அனந்தங் காட்டிலே என்ன இருக்கப் போகிறது? * அனந்தத்துக்கு ஒன்றாக உறையிட்டாலும் அளவிடப் போகாது * அனல், குளிர், வெதுவெதுப்பு இம்மூன்று காலமும் ஆறு காலத்துக்குள் அடங்கும் * அனலில் இட்ட மெழுகுபோல * அனற்றை இல்லா ஊரிலே வண்ணார் இருந்து கெட்டார்கள் * அனுபோகக்காரனுக்கு ஆளாய்க் காக்கிறான் * அனுபோகம் தெளிகிற காலத்தில் ஒளஷதம் பலிக்கும் * அனுமந்தராயரே, அனுமந்தராயரே என்றானாம்; பேர் எப்படித் தெரிந்தது என்றானாம்; உன் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியாதா என்றானாம் * அனுமந்தராயனுக்குத் தெப்பத் திருநாளாம் * அனுமார் இலங்கையைத் தாண்டினாராம்; ஆனை எதைத் தாண்டும்? * அனுமார் தம்பி அங்கதன் போலே * அனுமார் வால் நீண்டது போல * அஜகஜாந்தரம் * அஜாகளஸ்தம் போல் * அஷ்ட சஹஸ்ரத்துக்குப் பிரஷ்ட தோஷம் இல்லை * அஷ்ட சஹஸ்ரப் பிலுக்கு * அஷ்டதரித்திரம் * அஷ்டதரித்திரம் ஆற்றோடு போ என்றால் நித்திய தரித்திரம் நேரே வருகிறது * அஷ்ட தரித்திரம் தாய் வீடு; அதிலும் தரித்திரம் மாமியார் வீடு * அஷ்டதரித்திரம் பிடித்தவன் அமராவதியில் வாழ்கிறான் என்று நித்திய தரித்திரம் பிடித்தவன் நின்ற நிலையிலே நட்டுக் கொண்டு வந்தான் * அஷ்டதரித்திரம் புக்ககத்திலே ஆறாவது போது வாடுகிறேன் * அஷ்டதிக்குக் கஜம் மாதிரி குடித்தனத்தைத் தாங்குகிறான் * அஷ்டப் பிரபந்தம் கற்றவன் அரைப் புலவன் * அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது * அஷ்டமத்துச் சனி போல * அஷ்டமத்துச் சனியன் கிட்ட வந்தது போல * அஷ்டமி இல்லை; நவமி இல்லை; துஷ்ட வயிற்றுக்குச் சுருக்க வேணும் * அஷ்டமி நவமி ஆகாச பாதாளம் * அஷ்டமி நவமி ஆசானுக்கு ஆகாது * அஷ்டமி நவமியிலே தொட்டது துலங்காது * அஷ்டமியிலே கிருஷ்ணன் பிறந்து வேஷ்டி வேஷ்டி என்று அழுகிறானாம் * அஸ்தச் செவ்வானம் அடை மழைக்கு லட்சணம் * அஸ்தி சகாந்தரம் என்றது போல் இருக்கிறது * அஸ்தியிலே ஜூரம் * அஸ்மின் கிராமே ஆச்சாள் பிரசித்தா * அக்ஷர லக்ஷம் பெறும் ==ஆ== * ஆ ஆ என்பவருக்கு என்ன? அன்னம் படைப்பவர்க்கல்லவா தெரியும். * ஆ என்ற ஏப்பமும் அலறிய கொட்டாவியும் ஆகா. * ஆ என்று போனபிறகு அள்ளி இடுகிறதா? * ஆக்கம் கெட்ட கூகை * ஆக்க அறியாவிட்டால் புளியைக் கரை; அழகு இல்லாவிட்டால் மஞ்சளைப் பூசு. * ஆக்க பொறுத்தவன் ஆற பொறுக்கமாட்டையா? * ஆக்கப் பிள்ளை நம் அகத்தில்; அடிக்கப் பிள்ளை அயல் வீட்டிலோ? * ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கல் ஆகாதா? * ஆக்கம் கெட்ட அக்காள் மஞ்சள் அரைத்தாலும் கரி கரியாக வரும். * ஆக்கம் கெட்ட அண்ணன் வேலைக்குப் போனால் வேலை கிடைக்காது; வேலை கிடைத்தாலும் கூலி கிடைக்காது. * ஆக்க மாட்டாத அழுகல் நாரிக்குத் தேட மாட்டாத திருட்டுச் சாவான். * ஆக்க மாட்டேன் என்றால் அரிசியைப் போடு. * ஆக்கவில்லை, அரிக்கவில்லை; மூக்கெல்லாம் முழுக்கரியாக இருக்கிறதே! * ஆக்க வேண்டாம், அரிக்க வேண்டாம் பெண்ணே; என் அருகில் இருந்தால் போதுமடி பெண்ணே. * ஆக்கி அரித்துப் போட்டவள் கெட்டவள்; வழி காட்டி அனுப்பினவள் நல்லவள். * ஆக்கிக் குழைப்பேன்; அரிசியா இறக்குவேன். * ஆக்கிப் பெருக்கி அரசாள வைத்தேன்; தேய்த்துப் பெருக்கித் திரிசமம் பண்ணாதே. * ஆக்கினவள் கள்ளி; உண்பவன் சமர்த்தன். * ஆக்கினையும் செங்கோலும் அற்றன அரை நாழிகையிலே. * ஆக்குகிறவள் சலித்தால் அடுப்புப் பாழ்; குத்துகிறவள் சலித்தால் குந்தாணிபாழ். * ஆக்குகிறவளும் பெண்; அழிக்கிறவளும் பெண். * ஆகட்டும் போகட்டும், அவரைக் காய் காய்க்கட்டும்; தம்பி பிறக்கட்டும்; தம்பட்டங்காய் காய்க்கட்டும்; அவனுக்குக் கல்யாணம் ஆகட்டும்; உன்னைக் கூப்பிடுகிறேனா, இல்லயா பார் என்றானாம். * ஆகடியக்காரன் போகடியாய்ப் போவான். * ஆக வேணும் என்றால் காலைப் பிடி; ஆகா விட்டால் கழுத்தைப்பிடி. * ஆகாசத் தாமரை. * ஆகாசக் கோட்டை கட்டியது போல. * ஆகாசத்தில் எறிந்தால் அங்கேயே நிற்குமா? * ஆகாசத்தில் பறக்க உபதேசம் சொல்லுகிறேன்; என்னை ஆற்றுக் கப்பால் தூக்கிவிடு என்கிறார் குரு. * ஆகாசத்திலிருந்து அறுந்து விட்டேன்; பூமி தேவி ஏற்றுக் கொண்டாள். * ஆகாசத்தக்கு மையம் காட்டுகிறது போல். * ஆகாசத்துக்கு வழி எங்கே என்றால் போகிறவன் தலைமேலே. * ஆகாசத்தைப் பருந்து எடுத்துக் கொண்டு போகிறதா? * ஆகாசத்தையும் வடிகட்டுவேன். * ஆகாசத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்றான். * ஆகாசம் பார்க்கப் போயும் இடுமுடுக்கா? * ஆகாசம் பெற்றது, பூமி தாங்கினது. * ஆகாசமே விழுந்தாற் போலப் பேசுகிறாயே! * ஆகாசம் பூமி பாதாளம் சாட்சி. * ஆகாச வர்த்தகன். * ஆகாச வல்லிடி அதிர இடித்தது. * ஆகாத்தியக்காரனுக்கு ஐசுவரியம்; அஷ்ட தரித்திரனுக்குப் பெண்ணும் பிள்ளையும். * ஆகாத்தியக்காரனுக்கு ஐசுவரியம் வந்தால் பிரம்மகத்திக்காரனுக்குப் பிள்ளை பிள்ளையாய்ப் பிறக்குது. * ஆகாத்தியக்காரனுக்குப் பிரம்மகத்திக்காரன் சாட்சி. * ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு; அதிலும் கெட்டது குருக்களுக்கு. * ஆகாத நாளில் பிள்ளை பிறந்தால் அண்டை விட்டுக்காரனை என்ன செய்யும்? * ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாச்சியம். * ஆகாதவற்றை ஏற்றால் ஆராய்ந்து ஏற்றுக் கொள். * ஆகாதவன் குடியை அடுத்துக் கெடுக்க வேண்டும். * ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் அப்பனையும் ஆத்தாளையும் கொல்லுமேயொழிய, பஞ்சாங்கம் சொன்ன பார்ப்பானை என்ன செய்யும்? * ஆகாதே உண்டது நீலம் பிறிது. * ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்குமா? * ஆகாயத்தில் கூட அரைக் குழிக்கு அவகாசம் இல்லை. * ஆகாயத்தில் போகிற சனியனை ஏணி வைத்து இறக்கின மாதிரி. * ஆகாயத்துக்கு மையம் காட்டுகிறது போல. * ஆகாயத்தைப் படல் கொண்டு மறைப்பது போல. * ஆகாயத்தை வில்லாக வளைப்பான்; மனலைக் கயிறாகத் திரிப்பான். * ஆகாயப் புரட்டனுக்கு அந்தரப் புரட்டன் சாட்சி சொன்னானாம். * ஆகாயம் பார்க்கப் போயும் இடுமுடுக்கா? * ஆகாயம் போட்டது; பூமி ஏந்திற்று. * ஆகாயம் மணல் கொழித்தால் அடுத்தாற் போல் மழை. * ஆகாயம் விழுந்து விட்டது போல. * ஆகாயம் மட்டும் அளக்கும் இருப்புத் தூணைச் செல் அரிக்குமா? * ஆகிற காலத்தில் அடியாளும் பெண் பெறுவாள். * ஆகிற காலத்தில் அவிழ்தம் பலிக்கும். * ஆகிற காலத்திலெல்லாம் அவிசாரி ஆடி, சாகிற காலத்தில் சங்கரா என்றாளாம். * ஆகிறது அரைக் காசில் ஆகும்; ஆகாதது ஆயிரம் பொன்னாலும் ஆகாது. * ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்; ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் ஆகான். * ஆகும் காய் பிஞ்சிலே தெரியும். * ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும். * ஆகும் காலம் வந்தால் தேங்காய்க்கு இளநீர் போல் சேரும். * ஆங்காரத்தாலே அழிந்தவர் அனந்தம் பேர். * ஆங்காரிகளுக்கு அதிகாரி. * ஆங்காரியை அடக்குபவன் அதிகாரி. * ஆச்சாபுரம் காட்டிலே ஐம்பது புலி குத்தினவன் * ஆச்சானுக்குப் பீச்சான்; மதனிக்கு உடன் பிறந்தான்; நெல்லுக் குத்துகிறவளுக்கு நேர் உடன் பிறந்தான். பறைச்சேரி நாயோடே பங்கம் அழிகிறான். * ஆச்சா விதைத்தால் ஆமணக்கு விளையுமா? * ஆச்சி, ஆச்சி, மெத்தப் படித்துப் பேசாதே. * ஆச்சி திரளவும் ஐயா உருளவும் சரியாக இருக்கும். * ஆச்சி நூற்கிற நூல் ஐயர் பூணூலுக்குச் சரி. * ஆச்சி நூற்பது ஐயர் பூணூலுக்கும் காணாது. * ஆசந்திரார்க்கம். * ஆசன கீதம் சீவன நாசம். * ஆசரித்த தெய்வமெல்லாம அடியோடே மாண்டது என்கிறான். * ஆசாரக் கள்ளன். * ஆசாரத்துக்கு ஆசாரம்; கைத்துக்குச் சுகம். * ஆசாரப் பூசைப்பெட்டி; அதன்மேல் கவிச்சுச் சட்டி. * ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப் பாசாங்கு பேசிப் பதி இழந்து போனேனே! * ஆசாரி குத்து. * ஆசாரி செத்தான் என்று அகத்திக் கழி கட்டி அழுகிறாற்போல். * ஆசாரி பெண்ணுக்கு அழகா பார்க்கிறது? * ஆசாரி வீட்டுக்கு அடுப்பு இரண்டு. * ஆசானுக்கும் அடைவு தப்பும்; ஆனைக்கும் அடி சறுக்கும். * ஆசிரியர் சொல் அம்பலச் சொல், * ஆசீர்வாதமும் சாபமும் அறவோர்க்கு இல்லை. * ஆசை அண்டாதானால் அழுகையும் ஆண்டாது. * ஆசை அண்டினால் அழுகையும் அண்டும். * ஆசை அதிகம் உள்ளவனுக்கு ரோசம் இருக்குமா? * ஆசை அவள் மேலே; ஆதரவு பாய் மேலே. * ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்; தொண்ணுாறு நாளும் போனால் துடைப்பக் கட்டை அடி. * ஆசை இருக்கிறது. ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கிறது கழுதை மேய்க்க. * ஆசை இருக்கிறது தாசில் பண்ண; அதிருஷ்டம் இருக்கிறது மண் சுமக்க. * ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு. * ஆசை உண்டானால் பூசை உண்டு. * ஆசை உள்ள இடத்தில் பூசை நடக்கும். * ஆசை உள்ள இடத்தில் பூசையும் அன்பு உள்ள இடத்தில் தென்பும். * ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு. * ஆசைக்கு இல்லை அளவென்ற எல்லை. * ஆசை உறவு ஆகுமா? ஆதரவு சோறு ஆகுமா? * ஆசை நோய்க்கு அவிழ்தம் ஏது?. * ஆசை எல்லாம் தீர அடித்தான் முறத்தாலே. * ஆசைக்காரனுக்கு ரோசம் இல்லை. * ஆசைக்காக அக்காளுக்கு தாலி கட்டினானாம். கொஞ்சுவதற்காக கொழுந்தியாளுக்கு தாலி கட்டினானாம். * ஆசைக்கு அளவு இல்லை. * ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையும். * ஆசைக்கு ரோசம் இல்லை. * ஆசை கடுக்குது; மானம் தடுக்குது. * ஆசை காட்டி மோசம் செய்கிறதா? * ஆசை கொண்ட பேருக்கு ரோசம் இல்லை. * ஆசைப்பட்டது கிடைக்கவில்லையென்றால் ஆண்பிள்ளை அடுத்த கண்ணும் பாரான். * ஆசை தீர்ந்தால் அல்லல் தீரும். * ஆசைப்பட்ட பண்டம் ஊசிப் போயிற்று. * ஆசைப்பட்டு மோசம் போகாதே. * ஆசை பெரிதோ? ஆனை பெரிதோ? * ஆசை பெருக அலைச்சலும் பெருகும். * ஆசை மருமகன் தலைபோனாலும் ஆதிகாலத்து உரல் போகக் கூடாது. * ஆசையினால் அல்லவோ பெண்களுக்கு மீசை முளைப்ப தில்லை? * ஆசையும் நாசமும் அடுத்து வரும். * ஆசை ரோசம் அறியாது. * ஆசை வெட்கம் அறியுமா? * ஆசை வைத்தால் நாசந்தான். * ஆட்காட்டி சொந்தக்காரனையும் திருடனையும் காட்டிக் கொடுக்கும். * ஆட்டு உரம் ஒராண்டு நிற்கும்; மாட்டு உரம் ஆறாண்டு நிற்கும். * ஆட்டுச் சாணம் அவ்வருடம், மாட்டுச் சாணம் மறு வருடம் * ஆட்டுக்கடாச் சண்டையிலே நரி அகப்பட்டதுபோல. * ஆட்டம் நாலு பந்தி; புறத்தாலே குதிரை. * ஆட்டாளுக்கு ஒரு மோட்டாள்; அடைப்பக் கட்டைக்கு ஒரு துடைப்பக் கட்டை. * ஆட்டம் போட்ட வீட்டுக்கு விட்டம் ஒரு கேடா? * ஆட்டம் எல்லாம் ஆடி ஓய்ந்து நாட்டுப் புறத்துக்கு வந்தான். * ஆட்டத்துக்குத் தகுந்த மேளம்; மேளத்துக்குத் தகுந்த ஆட்டம். * ஆட்காட்டி தெரியாமல் திருடப் போகிறவன் கெட்டிக்காரனோ? அவன் கால் அடிபிடித்துப் போகிறவன் கெட்டிக்காரனோ? * ஆட்டு உரம் பயிர் காட்டும்; ஆவாரை நெல் காட்டும். * ஆட்டைக் காட்டி வேங்கை பிடிக்க வேண்டும். * ஆட்டு வெண்ணெய் ஆட்டு மூளைக்கும் காணாது. * ஆட்டுக்குட்டி எவ்வளவு துள்ளினாலும் ஆனைஉயரம் வருமா?. * ஆட்டுக்கடா பின் வாங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம். * ஆட்டுக்குட்டிக்கு ஆனை காவு கொடுக்கிறதா?. * ஆட்டுக் குட்டி வந்து வேட்டியைத் தின்கிறது; ஓட்டு ஓட்டு. * ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளையே கடித்ததாம். * ஆட்டுக்கு வேகம் பள்ளத்திலே; ஆனைக்கு வேகம் மேட்டிலே. * ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு; அறிவு இல்லாதவனுக்கு மூன்று கொம்பு. * ஆட்டுக்குத் தோற்குமா கிழப்புலி? * ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு மாட்டைத் தூக்கி மந்தையில் போடுகிறான். * ஆட்டைத் தேடி அயலார் கையில் கொடுப்பதைவிட வீட்டைக் கட்டி நெருப்பு வைப்பது மேல். * ஆட்டைத் தோளில் போட்டுக் கொண்டு காடெங்கும் தேடினது போல. * ஆட்சி புரிய அரண்மனை வாசலிலே பாரக் கழுக்காணி பண்ணிப் புதைத்திருக்கிறது. * ஆட்டி அலைத்துக் காசு வாங்கினேன்; செல்லுமோ செல்லாதோ? அதைக் கொண்டு எருமை வாங்கினேன்; ஈனுமோ, ஈனாதோ? * ஆடத் தெரியாதவள் கூடம் கோணல் என்றாளாம். * ஆடப் பாடத் தெரியாதவருக்கு இரண்டு பங்கு உண்டு. * ஆடப்போன கங்கை அண்டையில் வந்தாற் போல. * ஆட மாட்டேன், பாட மாட்டேன், குடம் எடுத்துத் தண்ணீர்க்குப் போவேன். * ஆடவிட்டு நாடகம் பார்ப்பது போல். * ஆடடா சோமாசி, பெண்டாட்டி பாடையில் போய்ப் படுத்தாளாம். * ஆடம்பரம் டம்பம், அபிஷேகம் சூன்யம். * ஆட லோகத்து அமுதத்தை ஈக்கள் மொய்த்துக் கொண்டது போல. * ஆடவன் செத்த பின்பு அறுதலிக்கும் புத்தி வந்தது. * ஆடாட பூதிக்கு ஆயிரம் சொர்க்கம். * ஆடாச் சாதி ஊடாச் சாதியா? * ஆடாதது எல்லாம் ஆடி அவரைக்காயும் பறித்தாச்சு. * ஆடாததும் ஆடி ஐயனாருக்குக் காப்பும் அறுத்தாச்சு. * ஆடாதே, ஆடாதே, கம்பங்கதிரே; அதற்கா பயந்தாய் சிட்டுக்குருவி?. * ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும். * ஆடி அமர்ந்தது ஒரு நாழிகையில். * ஆடி அரை மழை. * ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம் * ஆடி மாதத்தில் நாய் போல. * ஆடி அழைக்கும்; தை தள்ளும். * ஆடி அறவெட்டை, அகவிலை நெல் விலை. * ஆடி அறவெட்டை, போடி உன் ஆத்தாள் வீட்டுக்கு. * ஆடி அவரை தேடிப் போடு. * ஆடி அடி அமுங்கினால் கார்த்திகை கமறடிக்கும். * ஆடி அடி பெருகும்; புரட்டாசி பொன் உருகும். * ஆடிச்சீர் தேடி வரும். * ஆடிப் பட்டம் தேடிவிதை * ஆடிப் பட்டத்து மழை தேடிப் போனாலும் கிடைக்காது. * ஆடி அமாவாசையில் மழை பெய்தால் அரிசி விற்ற விலை நெல் விற்கும். * ஆடிக்கு ஒரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம். * ஆடி ஆனை வால் ஒத்த கரும்பு, புரட்டாசி பதினைந்தில் விதைத்த வித்து. * ஆடி ஒரு குழி அவரை போட்டால் கார்த்திகை ஒரு சட்டி கறி. * ஆடி இருந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படா. * ஆடி ஓடி நிலைக்கு வந்தது. * ஆடினது ஆலங்காடு; அமர்ந்தது தக்கோலம்; மணக்கோலம் பூண்டது மணவூர். * ஆடி ஓடி நாடியில் அடங்கிற்று. * ஆடிச் செவ்வாய் தேடிக் குளி; அரைத்த மஞ்சளைத் தேய்த்துக் குளி. * ஆடி மாதத்தில் விதைத்த விதையும் ஐயைந்தில் பிறந்த பிள்ளையும் ஆபத்துக்கு உதவும். * ஆடியில் போடாத விதையும் அறுநான்கில் பிறக்காத பிள்ளையும் பிரயோசனம் இல்லை. * ஆடிக் காற்றில் ஆனையும் அசையும் போது கழுதைக்கு என்ன கதி? * ஆடிக்கு ஒரு விதை போட்டால் கார்த்திகைக்கு ஒரு காய் காய்க்கும். * ஆடி பிறந்தால் ஆசாரியார்; தை பிறந்தால் தச்சப்பயல். * ஆடிக்குத் தை ஆறு மாசம். * ஆடி விதைப்பு, ஆவணி நடவு. * ஆடிக் கீழ்காற்றும் ஐப்பசி மேல்காற்றும் அடித்தால் அவ்வாண்டும் இல்லை, மறு ஆண்டும் இல்லை மழை. * ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும். * ஆடி கழிந்த எட்டாம் நாள் கோழி அடித்துக் கும்பிட்டானாம். * ஆடிச் செவ்வாய் நாடிப் பிடித்தால் தேடிய கணவன் ஓடியே வருவான். * ஆடி பிறந்தால் வெல்லப் பானையைத் திற; தை பிறந்தால் உப்புப் பானையைத் திற. * ஆடி முதல் பத்து, ஆவணி நடுப்பத்து, புரட்டாசி கடைப்பத்து, ஐப்பசி முழுதும் நடலாகாது. * ஆடிய காலும் பாடிய நாவும் சும்மா இரா. * ஆடு அடித்தால் அந்தப் பக்கம்; அகப்பை தட்டினால் இந்தப் பக்கம். * ஆடு அடித்தாலும் அன்றைக்குக் காணாது; மாடு அடித்தாலும் மறு நாள் காணாது. * ஆடு அப்பூ, ஆவாரை முப்பூ. * ஆடு அறியுமோ அங்காடி வாணிபம்? * ஆடு அறுபது என்பானாம்; வெள்ளாட்டைக் கண்டால் விலுக்கு விலுக்கு என்பானாம். * ஆடு இருக்கப் புலி இடையனை எடாது. * ஆடு இருந்த இடத்தில் அதர் இல்லை; மாடு இருந்த இடத்தில் மயிர் இல்லை. * ஆடு இருந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படா. * ஆடு உதவுமா குருக்களே என்றால், கொம்பும் குளம்பும் தவிரச் சமூலமும் ஆகும் என்கிறான். * ஆடு ஊடாடக் காடு விளையாது. * ஆடு எடுத்த கள்ளனைப் போல் விழிக்கிறான். * ஆடு ஓடின காடும் அரசன் போன வீதியும் அம்மா வீடு தேடிப் போன பெண்ணும் அடுத்த மாதம் குட்டிச் சுவராம். * ஆடு கடிக்கிறதென்று அறையில் இருப்பாளாம்; அகமுடையான் சம்பாதிக்கப் பேயாய்ப் பறப்பாளாம். * ஆடு கறக்கவும் பூனை குடிக்கவும் சரியாக இருந்தது. * ஆடு கொண்டவன் ஆடித் திரிவான்; கோழி கொண்டவன் கூவித் திரிவான். * ஆடு கொண்டு உழுது ஆனை கொண்டு போர் அடித்தாற் போல் இருக்கிறது. * ஆடு கொழுக்கக் கொழுக்கக் கோனானுக்குச் சந்தோஷம். * ஆடு கொழுத்தால் என்ன? ஆனை கட்டி வாழ்ந்தால் என்ன?. * ஆடு கோழி ஆகாது; மீன் கருவாடு ஆகும். * ஆடு கோனான் இன்றித் தானாய்ப் போகுமா?. * ஆடுதன் துருப்புச் சொல்லி ஆர் வாழ்ந்தார் அம்மானை?. * ஆடு தழை மேய்ந்தாற் போல. * ஆடுதன் ராஜா மாதிரி. * ஆடு திருடுகிற கள்ளனுக்கு ஆக்கிப் போடுகிறவள் கள்ளி. * ஆடு தின்பாளாம், ஆட்டைக் கண்டால் சீசீ என்பாளாம். * ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம். * ஆடு நினைத்த இடத்தில் பட்டி போடுகிறதா?. * ஆடு பகை, குட்டி உறவா?. * ஆடு பிடிக்கக் கரடி அகப்பட்டது போல். * ஆடு போல் சாப்பிட வேண்டும்; ஆனைபோல் குளிக்க வேண்டும். * ஆடு மாடு இல்லாதவன் அடைமழைக்கு ராஜா; பெண்டு பிள்ளை இல்லாதவன் தண்டுக்கு ராஜா. * ஆடு மிதியாக் கொல்லையும் ஆளன் இல்லாப் பெண்ணும் வீண். * ஆடு மேய்த்தாற் போலவும் அண்ணனுக்குப் பெண் பார்த்தாற் போலவும். * ஆடு வாங்கப் போனவன் ஆனை விலை கேட்டானாம். * ஆடு வீட்டிலே, ஆட்டுக்குட்டி காட்டிலே. * ஆடு வெட்டுகிற இடத்திலே பார்ப்பானுக்கு என்ன வேலை?. * ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன். * ஆடை உடையான் அவைக்கு அஞ்சான். * ஆடை வாய்க்கவும் ஆபரணம் வாய்க்கவும் அதிர்ஷ்டம் வேணும். * ஆடை வாய்ப்பதும் அகமுடையான் வாய்ப்பதும் அவரவர் அதிர்ஷ்டம். * ஆடைக்கும் கோடைக்கும் ஆகாது. * ஆடே பயிர், ஆரியமே வேளாண்மை. * ஆண் அழகனும் சோறும் அடைவாய் இருந்தால் வீடெல்லாம் பிள்ளை விட்டெறிந்து பேசும். * ஆண் அவலம், பெண் அவலம், ஆக்கி வைத்த சோறும் அவலம். * ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தைப் பழிப்பான். * ஆண்பிள்ளையை அடித்து வளர்; முருங்கையை ஒடித்து வளர். * ஆண் தாட்சண்யப் பட்டால் கடன்; பெண் தாட்சண்யப் பட்டால் விபசாரம். * ஆண்பிள்ளை அழுதால் போச்சு; பெண்பிள்ளை சிரிச்சால் போச்சு. * ஆண் இன்றிப் பெண் இல்லை; பெண் இன்றி ஆண் இல்லை. * ஆண் பிள்ளைக்கு அநியாயப்பட்டால் தீரும்; பெண் பிள்ளைக்கு அழுதால் தீரும். * ஆண் உறவும் உறவல்ல; வேலி நிழலும் நிழலல்ல. * ஆண் முந்தியோ? பெண் முந்தியோ? * ஆண் சிங்கத்தை ஆனை அடுக்குமா? * ஆண் பிள்ளைச் சிங்கத்திற்கு யார் நிகர்? * ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம். * ஆண் பிள்ளைகள் ஆயிரம் ஒத்திருந்தாலும் அக்காளும் தங்கையும் ஒத்திரார்கள். * ஆண் இணலிலே நின்று போ; பெண் இணலிலே இருந்து போ.(யாழ்ப்பாண வழக்கு. இணல் - நிழல்.) * ஆண்ட பொருளை அறியாதார் செய் தவம் மாண்ட மரத்துக்கு அணைத்த மண். * ஆண்டவர் தரிசனம் அன்பர் விமோசனம். * ஆண்டவன் ஒருவன் இருக்கிறான். * ஆண்டவன் விட்ட வழி. * ஆண்டவன் பலம் இருந்தால் குப்பை ஏறிச் சண்டை போடலாம். * ஆண்டார் அன்னத்தை அதிரப் பிடிக்கவும் போகாது; செட்டியார் எட்டிக் கன்னத்தில் அடிக்கவும் போகாது. * ஆண்டார் இருக்கும் வரையில் ஆட்டும் கூத்தும். * ஆண்டாருக்குக் கொடுக்கிறாயோ? சுரைக் குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ? * ஆண்டாருக்கும் பறப்பு; கோயிலுக்கும் சிறப்பு. * ஆண்டாரைப் பூதம் அஞ்சும்; மாண்டால் ஒழியப் போகாது. * ஆண்டால் அம்மியும் தேயும். * ஆண்டி அடித்தானாம்; கந்தை பறந்ததாம். * ஆண்டி அண்ணாமலை, பாப்பாரப் பஞ்சநதம். * ஆண்டி அன்னத்துக்கு அழுகிறான்; அவன் நாய் அப்பத்துக்கு அழுகிறது. * ஆண்டி ஆனைமேல் ஏறிவர நினைத்தது போல. * ஆண்டிக்கு அரண்மனை இருந்தால் என்ன? எரிந்தால் என்ன? * ஆண்டிக்கு இடுகிறாயோ? சுரைக்குடுக்கைக்கு இடுகிறாயோ? * ஆண்டிக்கு அவன் பாடு; தாசனுக்குத் தன் பாடு. * ஆண்டிக்கு அம்பாரக் கணக்கு என்ன? * ஆண்டிக்கு இடச் சொன்னால் தாசனுக்கு இடச் சொல்வான். * ஆண்டிக்கு இடுகிறதே பாரம். * ஆண்டிக்கு எதற்கு அரிசி விலை? * ஆண்டிக்கு எதற்கையா ஆனை? * ஆண்டிக்கு எந்த மடம் சொந்தம்? * ஆண்டிக்கு என்ன பித்து? கந்தல் பித்து. * ஆண்டிக்கு வாய்ப் பேச்சு; அண்ணாவுக்கு அதுவும் இல்லை. * ஆண்டிகள் கூடி மடம் கட்டுவதும் நாய் போர்வை வாங்கியதும் போல. * ஆண்டி கிடக்கிறான் அறையிலே; அவன் சடை கிடக்கிறது தெருவிலே. * ஆண்டி கிடப்பான் அறையிலே; கந்தை கிடக்கும் வெளியிலே. * ஆண்டி கிடப்பான் மடத்திலே; சோளி கிடக்கும் தெருவிலே. * ஆண்டிச்சி பெற்றது அஞ்சும் குரங்கு. * ஆண்டி கையில் அகப்பட்ட குரங்குபோல் அலைதல். * ஆண்டி குண்டியைத் தட்டினால் பறப்பது சாம்பல். * ஆண்டி சங்கை ஏன் ஊதுகிறான்? * ஆண்டி செத்தான்; மடம் ஒழிந்தது. * ஆண்டி சொன்னால் தாதனுக்குப் புத்தி எங்கே போச்சு? * ஆண்டிச்சி பெற்ற அஞ்சும் குரங்கு; பாப்பாத்தி பெற்ற பத்தும் பதர். * ஆண்டி சோற்றுக்கு அழுகிறான்; லிங்கம் பஞ்சாமிர்தத்துக்கு அழுகிறது. * ஆண்டி பெற்ற அஞ்சும் அவலம். * ஆண்டி பெற்ற அஞ்சும் குரங்கு; முண்டச்சி பெற்ற மூன்றும் முண்டைகள். * ஆண்டி பெற்ற அஞ்சும் பேய்; பண்டாரம் பெற்ற பத்தும் பாழ். * ஆண்டி மகன் ஆண்டி. * ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான். * ஆண்டி மடம் கட்டினது போலத்தான். * ஆண்டியும் ஆண்டியும் கட்டிக் கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக் கொள்ளும். * ஆண்டியும் தாசனும் தோண்டியும் கயிறும். * ஆண்டியே சோற்றுக்கு அலையும் போது லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறதாம். * ஆண்டியைக் கண்டால் லிங்கன்; தாசனைக் கண்டால் ரங்கன். * ஆண்டியை அடித்தானாம்; அவன் குடுவையைப் போட்டு உடைத்தானாம். * ஆண்டி வேஷம் போட்டும் அலைச்சல் தீரவில்லை. * ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தில். * ஆண்டு மறுத்தால் தோட்டியும் கும்பிடான். * ஆண்டு மாறின காரும் அன்று அறுத்த சம்பாவும் ஆளன் கண்ணுக்கு அரிது. * ஆண்டைக்கு ஆளைக் காட்டுகிறான்; ஆண்டை பெண்டாட்டிக்கு ஆள் அகப்படுவது இல்லை. * ஆண்டை கூலியைக் குறைத்தால் சாம்பான் வேலையைக் குறைப்பான். * ஆண்டைமேல் வந்த கோபத்தைக் கடாவின்மேல் காண்பித்தான். * ஆணவம் அழிவு. * ஆணமும் கறியும் அடுக்கோடே வேண்டும். * ஆணன் உறவுண்டானால் மாமி மயிர் மாத்திரம். * ஆணிக்கு இணங்கின பொன்னும் மாமிக்கு இணங்கின பெண்ணும் அருமை. * ஆணாய்ப் பிறந்தால் அருமை; பெண்ணாய்ப் பிறந்தால் எருமை. * ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழை கேடு செய்யாதே. * ஆணுக்குப் பெண் அழகு. * ஆணுக்குக் கேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழை செய்தல் ஆகாது. * ஆணுக்குப் பெண் அஸ்தமித்துப் போச்சா? * ஆணுக்கு மீசை அழகு; ஆனைக்குத் தந்தம் அழகு. * ஆணும் அவலம்; பெண்ணும் பேரவலம். * ஆணை அடித்து வளர்; பெண்ணைப் போற்றி வளர். * ஆணையும் வேண்டாம்; சத்தியமும் வேண்டாம்; துணியைப் போட்டுத் தாண்டு. * ஆத்தாடி நீலியடி, ஆயிரம் பேரைக் கொன்றவன்டி. * ஆத்தாள் அம்மணம்; அன்றாடம் கோதானம். * ஆத்தாள் என்றால் சும்மா இருப்பான்; அக்காள் என்றால் மீசைமேல் கை போட்டுச் சண்டைக்கு வருவான். * ஆத்தாள் படுகிற பாட்டுக்குள்ளே மகள் மோருக்கு அழுகிறாள். * ஆத்தாள் வீட்டுப் பெருமை அண்ணன் தம்பியோடே சொல்லிக் கொண்டாளாம். * ஆத்தாளும் மகளும் காத்தானுக்கு அடைக்கலம்; அவன் காத்தாலும் காத்தான்; கை விட்டாலும் விட்டான். * ஆத்தாளை அக்காளைப் பேசுகிறதில் கோபம் இல்லை; அகமுடையாளைப் பேசுகிறதற்குத்தான் கோபம் பொங்கிப் பொங்கி வருகிறது. * ஆத்தாளோடு போகிறவனுக்கு அக்காள் எது? தங்கச்சி ஏது? * ஆத்தி நார் கிழித்தாற்போல் உன்னைக் கிழிக்கிறேன். * ஆத்திரக்காரன் கோத்திரம் அறிவானா? * ஆத்திரத்துக்கு அவிசாரி ஆடினால் கோத்திரம் பட்ட பாடுபடுகிறது. * ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. * ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம்; மூத்திரத்தை அடக்க முடியாது. * ஆத்திரப் பட்டவனுக்கு அப்போது இன்பம். * ஆத்திரம் உடையான் தோத்திரம் அறியான். * ஆத்திரம் கழிந்தால் ஆண்டவன் ஏது? * ஆத்திரம் கஷ்டத்தைக் கொடுக்கும். * ஆத்திரம் பெரிது; ஆனாலும் புத்தி மிகப் பெரிது. * ஆத்தும சுத்தியாகிய நெஞ்சிலக்கணம் தெரியாதவனுக்குப் பஞ்ச லக்ஷணம் தெரிந்து பலன் என்ன? * ஆத்துமத் துரோகம் செய்தால் அப்போதே கேட்கும். * ஆத்தூர் பாலூர் அழகான சீட்டஞ்சேரி, அழகு திருவானைக் கோவில் இருந்துண்ணும் விச்சூரு முப்போகம் நிலம் விளைத்தாலும் உப்புக்காகாத காவித்தண்டலம். * ஆத்தூரான் பெண்டாட்டி ஆரோடோ போனாளாம்; சேத்தூரான் தண்டம் அழுதானாம். *ஆத்துரு அரிசியும் வேற்றூர் விரகும் இருந்தால் சாத்தூர் சௌக்கியம் * ஆத்தை படுகிற பாட்டுக்குள்ளே மகன் மோருக்கு அழுகிறான். * ஆத்தை வீட்டுச் சொண்டே, மாமியார் வீட்டேயும் வந்தாயோ. * ஆத்ம ஸ்துதி ஆறு அத்தியாயம்; பர நிந்தை பன்னிரண்டு அத்தியாயம். * ஆதரவு அற்ற வார்த்தையும் ஆணி கடவாத கை மரமும் பலன் செய்யாது. * ஆதரவும் தேவும் ஐந்து வருடத்திலே பலன் ஈயும். * ஆதவன் உதிப்பதே கிழக்கு; அக்கம நாயக்கர் சொல்வதே வழக்கு; அதைக் கேட்டு நடத்தல் மினுக்கு; எதிர்த்துப் பேசினால் தொழுக்கு. * ஆதவன் உதிப்பதே கிழக்கு; கணக்கன் எழுதுவதே கணக்கு. * ஆதனக் கோட்டைக்கும் செவ்வாய்க் கிழமையாம். * ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றைக் கட்டி இறைப்பானா? * ஆதாயம் உள்ளவரை ஆற்றைக் கட்டி இறைத்து விட்டுப் போகிறான். * ஆதாயமே செலவு; அறை இருப்பதே நிலுவை. * ஆதி அந்தம் இல்லா அருமைப் பொருளே கர்த்தன். * ஆதி கருவூர், அடுத்தது. வெஞ்சமாக் கூடலூர். * ஆதி கருவூர், அழும்பப் பயல் வேலூர். * ஆதித்தன் தெற்கு வடக்கு ஆனாலும் சாதித்தொழில் ஒருவரையும் விடாது. * ஆதி முற்றினால் வியாதி. * ஆதீனக்காரனுக்குச் சாதனம் வேண்டுமா? * ஆந்தை சிறிது; கீச்சுப் பெரிது. * ஆந்தை விழிக்கிறது போல விழிக்கிறான். * ஆந்தை விழி விழித்தால் அருண்டு போவாரோ? * ஆப்பக்காரியிடம் மாவு விலைக்கு வாங்கின மாதிரி. * ஆப்பைப் பிடுங்கின குரங்கு நாசம் அடைந்தது போல. * ஆபத்தில் அறியலாம் அருமைச் சிநேகிதனை. * ஆபத்தில் காத்தவன் ஆட்சியை அடைவான். * ஆபத்தில் காத்தவன் ஆண்டவன் ஆவான். * ஆபத்துக்கு உதவாத நண்பனும் சமயத்துக்கு உதவாத பணமும் ஒன்றுதான். * ஆபத்துக்கு உதவாத பெண்டாட்டியை அழகுக்கா வைத்திருக்கிறது? * ஆபத்துக்கு உதவினவனே நண்பன். * ஆபத்துக்கு உதவுவானா அவிசாரி அகமுடையான். * ஆபத்துக்குப் பயந்து ஆற்றில் நீந்தினது போல. * ஆபத்துக்குப் பாபம் இல்லை. * ஆபத்து சம்பத்து. * ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு? * ஆபஃபுனந்து, ஒருபிடி நாகக் கொழுந்து. * ஆபால கோபாலம். * ஆம் என்ற தோஷம், கனத்தது வயிற்றிலே. * ஆம் என்றும் ஊம் என்றும் சொல்லக் கூடாது. * ஆம் காலம் ஆகும்; போம் காலம் போகும். * ஆம் காலம் எல்லாம் அவிசாரி ஆடிச் சாங்காலம் சங்கரா சங்கரா என்றாளாம். * ஆமணக்கு எண்ணெய் வார்த்துப் புட்டம் கழுவினாற் போல. * ஆமணக்கும் பருத்தியும் அடர விதைத்தல் ஆகாது. * ஆமணக்கு முத்து ஆணி முத்து ஆகுமா? * ஆமணக்கு விதைத்தால் ஆச்சா முளைக்குமா? * ஆமை அசையாமல் ஆயிரம் முட்டையிடும். * ஆமை எடுக்கிறது மல்லாத்தி; நாம் அதைச் சொன்னால் பொல்லாப்பு. * ஆமைக்குப் பத்து அடி என்றால் நாய்க்கு நாலு அடி. * ஆமை கிணற்றிலே, அணில் கொம்பிலே. * ஆமை தன் வாயால் கெட்டது போல. * ஆமை திடலில் ஏறினாற் போல. * ஆமை பிடிப்பார் மல்லாத்துவார்; நாம் அதைச் சொன்னால் பாவம். * ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த விடும் உருப்படா. * ஆமை புகுந்த வீடும் வெள்ளைக்காரன் காலடி வைத்த ஊரும் பாழ். * ஆமை மல்லாத்துகிறாற் போல. * ஆமையுடனே முயல் முட்டையிடப் போய் கண் பிதுங்கிச் செத்ததாம். * ஆமையைக் கவிழ்த்து அடிப்பார்களோ; மல்லாத்திச் சுடுவார்களோ? நான் சொன்னால் பாவம். * ஆமை வேகமா, முட்டை வேகமா? * ஆய்ந்து ஓய்ந்து பாராதான் தான் சாவக் கடவான். * ஆய்ந்து ஓய்ந்து அக்காளிடம் போனால் அக்காள் இழுத்து மாமன்மேல் போட்டாளாம். * ஆய்ச்சல் ஆய்ச்சலாய் மழை பெய்கிறது. * ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும். * ஆய் பார்த்த கல்யாணம் போய்ப் பார்த்தால் தெரியும். * ஆய் பிச்சை எடுக்கிறான்; பிள்ளை நீதிபதி வேலை பார்க்கிறான். * ஆய உபாயம் அறிந்தவன், அரிது அல்ல வெல்வது. * ஆயிரம் அரைக் காசு. * ஆயிரக் கல நெல்லுக்கு ஓர் அந்து போதும். * ஆயிரத்தில் ஒருவனே அலங்காரப் புருஷன். * ஆயிரம் ஆனாலும் ஆரணிச் சேலை ஆகாது. * ஆயிரத்திலே பிறந்து ஐந்நூற்றிலே கண் விழிக்கிறது. * ஆயிரத்திலே பிறந்து ஐந்நூற்றிலே கால் நீட்டினது போல. * ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன். * ஆயிரம் பேருக்கு போய் சொல்லி திருமணத்தை நடத்தலாம். * ஆயிரம் அகணியால் கட்டிய வீட்டுக்கு ஆனைப்பலம். * ஆயிரம் ஆனாலும் அவிசாரி சமுசாரி ஆகமாட்டாள். * ஆயிரம் ஆனாலும் பெண் புத்தி பின்புத்தி. * ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது. * ஆயிரம் ஆனாலும் மாயூரம் வெண்ணெய் ஆகுமா? * ஆயிரம் இரவுகள் வந்தாலும் அது முதலிரவுக்கு ஈடாகுமா? * ஆயிரம் உடையார் அமர்ந்திருப்பார்; துணி பொறுக்கி தோம் தோம் என்று கூத்தாடுவான். * ஆயிரம் உளி வாய்ப்பட்டு ஒரு லிங்கம் ஆக வேணும். * ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்; அரைப்பணம் உடையான் ஆடி விழுவான். * ஆயிரம் எறும்பும் ஆனைப்பலம். * ஆயிரம் கட்டு ஆனைப் பலம். * ஆயிரம் கட்டு அண்டத்தைத் தாங்கும். * ஆயிரம் கப்பியில் நழுவின சுப்பி. * ஆயிரம் காக்கைக்கு ஒரு கல். * ஆயிரம் காக்கைக்குள் ஓர் அன்னம் அகப்பட்டது போல. * ஆயிரம் காலத்தில் ஆனி அடி அருகும்; தேக்கு நீர் வற்றும்; தேவதாரு பால் வற்றும். * ஆயிரம் காலத்துப் பயிர். * ஆயிரம் காலம் குழலில் இட்டாலும் நாயின் வால் நிமிர்ந்து விடுமா? * ஆயிரம் காலே அரைக்காற் பணம். * ஆயிரம் காலே மாகாணி. * ஆயிரம் குணத்துக்கு ஒரு லோப குணம் தட்டு. * ஆயிரம் குதிரையை அற வெட்டின சிப்பாய்தானா இப்போது பறைச் சேரியில் நாயோடு பங்கம் அழிகிறான்? * ஆயிரம் குருடர்கள் சேர்ந்தாலும் சூரியனைப் பார்க்க முடியுமா? * ஆயிரம் கொடுத்து ஆனை வாங்கி அங்குசம் வாங்கப் பேரம் பண்ணினானாம். * ஆயிரம் கொடுத்து ஆனை வாங்குகிறோமே, அது பல் விளக்குகிறதா? * ஆயிரம் கோவிந்தம் போட்டாலும் அமுது படைக்கிறவனுக்கு அல்லவோ தெரியும் வருத்தம்? * ஆயிரம் கோழி தின்ற வரகு போல். * ஆயிரம் செக்கு ஆடினாலும் அந்திக்கு எண்ணெய் இல்லை. * ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து. * ஆயிரம் சொன்னாலும் அவிசாரி சமுசாரி ஆவாளா? * ஆயிரம் தடவை சொல்லி அழுதாச்சு. * ஆயிரம் தலை படைத்த ஆதிசேடனாலும் சொல்ல முடியாது. * ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது. * ஆயிரம் நற்குணம் ஒரு லோப குணத்தால் கெடும். * ஆயிரம் நாள் இருந்தாலும் அநியாயச் சாவு. * ஆயிரம் பசுக்களில் ஒரு பசு உதைத்துக் கொண்டால் நஷ்டமா? * ஆயிரம் பட்டும் அவம் ஆச்சு; கோயிலைக் கட்டியும் குறை ஆச்சு. * ஆயிரம் பனை உள்ள அப்பனுக்குப் பிறந்தும் பல்லுக் குத்த ஓர் ஈர்க்கு இல்லை. * ஆயிரம் பாட்டுக்கு அடி தெரியும்; நூறு பாட்டுக்கு நுனி தெரியும். * ஆயிரம் பாம்பில் ஒரு தேரை பிழைக்கிறாற் போல. * ஆயிரம் பேர் கூடினாலும் ஓர் அந்துப்பூச்சியைக் கொல்லக் கூடாது. * ஆயிரம் பேர் இடத்தில் சிநேகம் பண்ணினாலும் ஆண்பிள்ளைகளுக்கென்ன? * ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்து வை. * ஆயிரம் பொய் சொல்லிக் கோயிலைக் கட்டு. * ஆயிரம் பொன் பெற்ற குதிரைக்கு அரைப்பனத்தில் சவுக்கு. * ஆயிரம் பொன் போட்டு ஆனை வாங்கி அரைப் பணத்து அங்குசத்துக்குப் பால் மாறுகிறதா? * ஆயிரம் பொன் பெற்ற குதிரையானாலும் சவுக்கடி வேண்டும். * ஆயிரம் பொன்னுக்கு ஆனை வாங்கினாலும் அரைக் காசுக்குத் தான் சாட்டை வாங்க வேணும். * ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை. * ஆயிரம் முடி போட்டாலும் ஆனைப் பலம் வருமா? * ஆயிரம் ரூபாய் முதலில்லாமல் பத்து ரூபாய் நஷ்டம். * ஆயிரம் வந்தாலும் அவசரம் ஆகாது. * ஆயிரம் வந்தாலும் ஆயத்தொழில் ஆகாது. * ஆயிரம் வந்தாலும் கோபம் ஆகாது. * ஆயிரம் வருஷம் ஆனாலும் ஆனை மறக்குமா? * ஆயிரம் வருஷம் சென்று செத்தாலும் அநீதிச் சாவு ஆகாது. * ஆயிரம் வித்தை கற்றாலும் உலகத்தில் ஆடம்பரம் வேண்டும். * ஆயில்யத்தில் மாமியார் ஆசந்தியிலே. * ஆயுசுக்கும் வியாதிக்கும் சம்பந்தம் இல்லை. * ஆயுசு கெட்டியானால் ஒளடதம் பலிக்கும். * ஆயுசு பூராவாக இருந்தால் மாந்தம் மயிரைப் பிடுங்குமா? * ஆயுதப் பரீட்சை அறிந்தவன் ஆயிரத்தில் ஒருவன். * ஆயுதம் இல்லாரை அடிக்கிறதா? * ஆயோதன முகத்தில் ஆயுதம் தேடுகிறது போல. * ஆர் அடா என் கோவிலிலே ஆண் நாற்றம், பெண் நாற்றம்? * ஆர் அடா விட்டது மான்யம்? நானே விட்டுக் கொண்டேன். * ஆர் அற்றுப் போனாலும் நாள் ஆற்றும். * ஆர் ஆக்கினாலும் சோறு ஆகவேணும். * ஆர் ஆத்தாள் செத்தாலும் பொழுது விடிந்தால் தெரியும். * ஆர் ஆர் என்பவர்கள் எல்லாம் தீக்குளிப்பார்களா? * ஆர் ஆருக்கு ஆளானேன், ஆகாத உடம்பையும் புண்ணாக்கிக் கொண்டு. * ஆர் இட்ட சாபமோ அடி நாளின் தீவினையோ? * ஆர் கடன் ஆனாலும் மாரி கடன் ஆகாது. * ஆர் கடன் நின்றாலும் மாரி கடன் நிற்காது. * ஆர் கடன் பட்டாலும் மாரி கடன் வைக்கக் கூடாது. * ஆர் குடியைக் கெடுக்க ஆண்டி வேஷம் போட்டாய்? * ஆர் குத்தினாலும் அரிசி ஆவது ஒன்று. * ஆர் கெட்டால் என்ன? ஆர் வாழ்ந்தால் என்ன? * ஆர் சமைத்தாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும். * ஆர் சுட்டாலும் பணியாரம் ஆகவேண்டும். * ஆர்த்தார் எல்லாம் போருக்கு உரியவர் அல்லர். * ஆர் புருஷனை ஆர் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியும்? * ஆர்மேல் கண்? அனந்திமேல் கண். * ஆர் வாழ்வு ஆருக்கு நின்றது? * ஆர் வாழ்வுதான் சதம்? * ஆர் வைத்த கொள்ளியோ வீடு பற்றி எரிகிறது. * ஆரக் கழுத்தி அரண்மனைக்கு ஆகாது. * ஆரணியமான அழகாபுரிக்கு ஒரு கோரணியான குரங்கு வந்து தோன்றிற்று. * ஆரம்ப சூரத்தனம். * ஆரல்மேல் பூனை அந்தண்டை பாயுமோ இந்தண்டை பாயுமோ? * ஆராகிலும் படி அளந்து விட்டதா? * ஆரால் கேடு, வாயால் கேடு. * ஆராய்ந்து பாராதவன் காரியம் தான் சாந் துயரம் தரும். * ஆராய்ந்து பாராமுன் தலையிடாதே. * ஆராவது என்னைத் தூக்கி மாத்திரம் பிடிப்பார்களானால் நான் பிணக்காடாக வெட்டுவேன் என்று முடவன் கூறியது போல. * ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு. * ஆருக்கு அழுவேன் அப்பா ஹைதர் அலி. * ஆருக்கு ஆகிலும் துரோகம் செய்தால் ஐந்தாறு நாள் பொறுத்துக் கேட்கும்; ஆத்மத் துரோகம் செய்தால் அப்போதே கேட்கும். * ஆருக்கு ஆர் சதம், ஆருக்கு என்று அழுவேனடா ஹைதர் அலி? * ஆருக்குப் பிறந்து மோருக்கு அழுகிறாய்? * ஆருக்கும் அஞ்சான், ஆர் படைக்கும் தோலான். * ஆருக்கும் பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும். * ஆருக்கும் மாட்டாதவன் பெண்டுக்கு மாட்டுவான். * ஆருக்கு வந்ததோ, எவருக்கு வந்ததோ என்று இருக்காதே. * ஆருக்கு வந்த விருந்தோ என்று இருந்தால் விருந்தாளி பசி என்னாவது? * ஆரும் அகப்படாத தோஷம், மெத்தப் பதிவிரதை. * ஆரும் அற்றதே தாரம்; ஊரில் ஒருத்தனே தோழன். * ஆரும் அற்றவருக்குத் தெய்வமே துணை. * ஆரும் அறியாத அரிச்சந்திரன் கட்டின தாலி. * ஆரும் அறியாமல் கொண்டு கொடுத்தானாம்; காடு மேடெல்லாம் கரி ஆக்கினானாம். * ஆரும், ஆரும் உறவு? தாயும் பிள்ளையும் உறவு. * ஆரும் இல்லாத ஊரிலே அசுவமேதம் செய்தான். * ஆரும் இல்லாப் பெண்ணுக்கு அண்டை வீட்டுக்காரன் மாப்பிள்ளை. * ஆரே சாரே என்கிறவனுக்குத் தெரியுமா? அக்கினி பார்க்கிறவனுக்குத் தெரியுமா? * ஆரை இறுக்கி முகம் பெறுகிறது? பிள்ளையை இறுக்கி முகம் பெறுகிறது. * ஆரைக் காது குத்துவது? * ஆரைப் பகைத்தாலும் ஊரைப் பகைக்காதே. * ஆரை நம்பித் தோழா, ஆற்றுக்கு ஏற்றம் போட்டாய்? * ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக் கூடாது. * ஆரை பற்றிய நஞ்சையும் அறுகு பற்றிய புஞ்சையும். * ஆரோக்கியம் பெரும் பாக்கியம். * ஆரோக்கியமே ஆயுசு விருத்தி. * ஆரோ செத்தாள்? எவளோ அழுதாளாம். * ஆரோடு போனாலும் போதோடு வந்துவிடு. * ஆல் என்னிற் பூல் என்னுமாறு. * ஆல் பழுத்தால் அங்கே கிளி; அரசு பழுத்தால் இங்கே கிளி. * ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர். * ஆலகால விஷம் போன்றவன் அந்தரம் ஆவான். * ஆலங்காட்டுப் பேய் மாதிரி அலைகிறான். * ஆலசியம் அதிக விஷம். * ஆலம்பாடி அழகு எருது; உழவுக்கு உதவா இழவு எருது. * ஆலமரத்துக்கு அறுகம்புல்லின் வேரா? * ஆலமரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தது போல. * ஆலமரத்தைப் பிடித்த பேய் அத்தி மரத்தைப் பிடித்ததாம். * ஆலமரத்தை விழுது தாங்குவது போல. * ஆலமரம் பழுத்தால் பறவைக்குச் சீட்டு அனுப்புவார்களா? * ஆலயத்துக்கு ஓர் ஆனையும் ஆஸ்தானத்துக்கு ஒரு பிள்ளையும். * ஆலயம் அறியாது ஓதிய வேதம். * ஆலயம் இடித்து அன்னதானம் பண்ணப் போகிறான். * ஆலயம் தொழுவது சாலவும் நன்று. * ஆலின்மேற் புல்லுருவி. * ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி. * ஆலூரு, சாலுரு, அறுதலிப் பாக்கம், முண்டை களத்துாரு; மூதேவி முறப்பாக்கம். * ஆலே பூலே என்று அலம்பிக் கொண்டிருக்கிறது. * ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை. * ஆலைக் கரும்பு போலவே நொந்தேன். * ஆலைக் கரும்பும் வேலைத் துரும்பும் போல ஆனேன். * ஆலைக்குள் அகப்பட்ட சோலைக் கரும்பு போல. * ஆலை பாதி; அழிம்பு பாதி. * ஆலை வாயிலே போன கரும்பு போல். * ஆலை விழுது தாங்கினது போல. * ஆவணி அழகன். * ஆவணி அழுகல் தூற்றல். * ஆவணி அவிட்டத்திற்கு அசடியும் சமைப்பாள். * ஆவணி இலை அசையக் காவேரி கரை புரள. * ஆவணி தலை வெள்ளமும் ஐப்பசி கடை வெள்ளமும் கெடுதி. * ஆவணி பறந்தால் புரட்டாசி வரும்; தாவணி பறந்தால் புடைவையாகி வரும். * ஆவணி மருதாணி அடுக்காய்ப் பற்றும். * ஆவணி மாதம் அழுகைத் துாற்றல். * ஆவணி மாதம் ஐந்தாந் தேதி சிங்க முழக்கம், அவ்வருஷம் மழை. * ஆவணி மாதம் தாவணி போட்டவள் புரட்டாசி மாதம் புருஷன் வீடு போனாளாம். * ஆவணியில் அகல நடு; ஐப்பசியில் அனைத்து நடு. * ஆவணி முதல் நட்ட பயிர் பூவணி அரசன் புகழ் போலும். * ஆவணியில் நெல் விதைத்தால் ஆனைக் கொம்பு தானாய் விளையும். * ஆவத்தை அடரான் பாவத்தைத் தொடரான். * ஆவதற்கும் அழிவதற்கும் பேச்சே காரணம். * ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும். * ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே. * ஆவர்க்கும் இல்லை; தேவர்க்கும் இல்லை. * ஆவர் மாத்திரம் இருந்தால் என்ன? அன்னம் இறங்கினால் அல்லவோ பிழைப்பான். * ஆவாரை இலையும் ஆபத்துக்கு உதவும். * ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ? * ஆவுடையாரையும் லிங்கத்தையும் ஆறு கொண்டு போகச்சே சுற்றுக் கோயில் சுவாமி எல்லாம் சர்க்கரைப் பொங்கலுக்கு அழுகின்றனவாம். * ஆவுடையார் கோயில் அடங்கலுக்குப் புறத்தி. * ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும். * ஆவும் தென்னையும் அஞ்சு வருஷத்தில் பலன் ஈயும். * ஆவென்று போனபின் அள்ளி இடுவது ஆர்? * ஆ வேறு நிறம் ஆனாலும் பால் வேறு நிறம் ஆகுமா? * ஆழ்வார் சாதித்தது ஆயிரம்; அம்மையார் சாதித்தது பதினாயிரம். * ஆழ்வாரே போதாதோ? அடியாரும் வேண்டுமோ? * ஆழ அமுக்கினாலும் நாழி நானாழி கொள்ளாது. * ஆழ உழுதால் ஆட்டுரத்துக்கும் அதிகம். * ஆழமறியாமல் காலை இடாதே. * ஆழ உழுதாலும் அடுக்க உழு. * ஆழ உழுது அரும் பாடு பட்டாலும் பூமி விளைவது புண்ணியவான்களுக்கே. * ஆழங்கால் சேற்றில் அழுந்தியிருக்கிறான். * ஆழப் பொறுத்தாலும் வாழப் பொறுக்க மாட்டார்கள். * ஆழம் அறியாமல் காலை விட்டுக் கொண்டேன்; அண்ணாமலை அப்பா காலை விடு. * ஆழம் அறியும் ஓங்கில்; மேளம் அறியும் அரவம். * ஆழாக்கு அரிசி அன்ன தானம்; போய் வருகிற வரைக்கும் புண்ணிய தானம். * ஆழாக்கு அரிசி, மூழாக்குப் பானை, முதலியார் வருகிற வீறாப்பைப் பார். * ஆழாக்கு அரிசி வாங்கி ஐந்து கடை மீனை வாங்கிப் பொல்லாத புருஷனுக்குப் போட நேரம் இல்லை. * ஆழி எல்லாம் வயல் ஆனால் என்ன? அவனி எல்லாம் அன்னமயம் ஆனால் என்ன? * ஆழி கொண்டாலும் காழி கொள்ளாது. * ஆழுக்கும் பாழுக்கும் ஒருவந்துாரான்; கடா வெட்டுக்கு மோகனுராான். * ஆழும் பாழும் அறைக்கீரைப் பாத்தியும். * ஆழும் பாழும் ஆகிறது. * ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு. * ஆள் அகப்பட்டால் மிரட்டுகிறதா? * ஆள் அண்டிப் பேசாதவனும் செடி அண்டிப் பேளாதவனும் ஒன்று. * ஆள் அரை முழம்; கோவணம் முக்கால் முழம். * ஆள் அற்ற பாவம் அழுதாலும் தீராது. * ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்குப் போடு. * ஆள் ஆளும் பண்ணாடி எருது ஆர் மேய்க்கிறது? * ஆள் ஆளை இடிக்கும்; ஆள் மிடுக்குப் பத்துப் பேரை இடிக்கும். * ஆள் ஆளைக் குத்தும்; பகரம் பத்துப் பேரைக் குத்தும். * ஆள் ஆனையை மறந்தாலும் ஆனை ஆனை மறக்குமா? * ஆள் இருக்கக் குலை சாயுமா? * ஆள் இருக்கும் இளக்காரத்தில் ஆவாரையும் பீயை வாரி அடிக்கும். * ஆள் இல்லா ஊருக்கு அழகு பாழ். * ஆள் இல்லாத இடத்தில் அசுவமேத யாகம் பண்ணினது போல. * ஆள் இல்லாப் படை அம்பலம். * ஆள் இல்லாப் பத்தினி, இடம் இல்லாப் பத்தினி, ஆளைக் கண்டால் ஈடு இல்லாப் பத்தினி. * ஆள் இல்லாமல் அடிக்கடி ஓடுமா? * ஆள் இல்லாமல் ஆயுதம் வெட்டுமா? * ஆள் இளந்தலை கண்டால் தோணி மிதக்கப் பாயும். * ஆள் இளப்பமாய் இருந்தால் எமனையும் நமனையும் பலகாரம் பண்ணுவான். * ஆள் இளப்பமாய் இருந்தால் எருதும் மச்சான் முறை கொண்டாடும். * ஆள் இளைத்ததைக் கண்டால் ஆவாரையும் பீ வாரி அடிக்கும். * ஆள் உள்ளுக்குள்ளே இருக்கிறான். * ஆள் ஏற நீர் ஏறும். * ஆள் ஏறினால் உலை ஏறும்; உலை ஏறினால் உப்பு ஏறும். * ஆள் கண்ட சமுத்திரம். * ஆள் கண்டு ஏய்க்குமாம் ஆலங்காட்டு நரி. * ஆள் காட்டி சொந்தக்காரனையும் திருடனையும் பிடித்துக் கொடுக்கும். * ஆள் காட்டி தெரியாமல் திருடப் போகிறவன் கெட்டிக்காரனா? அவன் காலடி பிடித்துப் போகிறவன் கெட்டிக்காரனா? * ஆள் காட்டிய விரலுக்கும் அன்னதானப் பலன். * ஆள் கால், வாய் முக்கால். * ஆள்கிறவளும் பெண்; அழிக்கிறவளும் பெண். * ஆள் கொஞ்சம் ஆகிலும் ஆயுதம் மிடுக்கு. * ஆள் பஞ்சையாய் இருந்தாலும் ஆயுதம் திறமாய் இருக்க வேண்டும். * ஆள் பாதி, அலங்காரம் பாதி. * ஆள் பாதி, ஆடை பாதி. * ஆள் பாதி, ஏர் பாதி. * ஆள் பாரம் பூமியிலே. * ஆள் போகிறது அதமம்; மகன் போகிறது மத்தியமம்; தான் போகிறது உத்தமம். * ஆள் போனால் சண்டை வருமென்று நாயை விட்டு ஏவின மாதிரி. * ஆள் மதத்தால் கீரை; ஆனை மதத்தால் வாழை. * ஆள் மெத்தக் கூடினால் மீன் மெத்தப் பிடிக்கலாம். * ஆள் மறந்தாலும் ஆனை மறக்காது. * ஆள் ஜம்பமே தவிர வேலை ஜம்பம் கிடையாது. * ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ். * ஆளத் தெரியாத அண்ணாக்கள்ளன் ஒரு குழம்பு வைக்கத் தெரியவில்லை என்றானாம். * ஆள மாட்டாதவனுக்குப் பெண்டாட்டி ஏன்? * ஆளவந்தாரும் உடையவரும் சேர்ந்தால் வைகுண்டத்துக்குப் படி கட்டியிருப்பார்கள். * ஆளன் இல்லாத துக்கம் அழுதாலும் தீராது. * ஆளன் இல்லாத மங்கைக்கு அழகு பாழ். * ஆளன் இல்லாதவள் ஆற்று மணலுக்குச் சரி. * ஆளன் உறவு உண்டானால் மாமி மயிர் மாத்திரம். * ஆளனைப் பிரிந்திருத்தல் அரிவையர்க்கு அழகன்று. * ஆளான ஆள் புகுந்தால் ஆமணக்கு விளக்கெண்ணெய் ஆகும். * ஆளான ஆளுக்கு அவிழ் அகப்படாக் காலத்திலே காக்காய்ப் பிசாசு கஞ்சிக்கு அழுகிறது. * ஆளில் கட்டை அரண்மனைக்கு உதவான். * ஆளிலும் ஆள் அம்மாப் பேட்டை ஆள். * ஆளுக்கு ஆள் வித்தியாசம். * ஆளுக்கு ஒத்த ஆசாரமும் ஊருக்கு ஒத்த உபசாரமும். * ஆளுக்கு ஒரு குட்டு வைத்தால் அடியேன் தலை மொட்டை. * ஆளுக்கு ஒரு குட்டுக் குட்டினாலும் அவனுக்குப் புத்தி வராது. * ஆளுக்கு ஒரு மயிர் பிடுங்கினால் அடியேன் தலை மொட்டை. * ஆளுக்குக் கீரைத்தண்டு; ஆனைக்கு வாழைத்தண்டு. * ஆளுக்குத் தக்கபடி வேஷம் போடுதல். * ஆளுக்குத் தகுந்த சொட்டுக் கொடுக்கிறது. * ஆளுக்குத் துக்குணி ஆள் பாரம். * ஆளுக்குள்ளே ஆளாய் இருப்பான். * ஆளும் அம்பும். * ஆளும் கோளும் படைத்தவனை வேலும் கோலும் என்ன செய்யும்? * ஆளை அடித்தால் அரைப்பணம். * ஆளை அறிந்து தாண்டுகிறதா? * ஆளை அறிந்துதான் அறுக்கிறான். * ஆளை ஆள் அறிய வேண்டும்; மீனைப் புளியங்காய் அறிய வேண்டும். * ஆளை ஆள் குத்தும்; ஆள் மிடுக்குப் பத்துப் பேரைக் குத்தும். * ஆளை ஏய்க்குமாம் நரி: அதனை ஏய்க்குமாம் ஒற்றைக்கால் நண்டு. * ஆளைக் கண்டால் ஆறு மணி; ஆளைக் காணா விட்டால் மூன்று மணி. * ஆளைக் கண்டு ஏமாற்றுமாம் ஆலங்காட்டுப் பேய். * ஆளைக் கண்டு மலைக்காதே; ஊது காமாலை. * ஆளைச் சுற்றிப் பாராமல் அளக்கிறதா? * ஆளைச் சுற்றிப் பாராமல் அழுகிறாள் ஒரு காலே. * ஆளைச் சேர்த்தாயோ? அடிமையைச் சேர்த்தாயோ? * ஆளை நீட்டிப் போடு. * ஆளைப் பார் சோளக்காட்டிலே. * ஆளைப் பார், சோளக் கொல்லைப் பொம்மை மாதிரி. * ஆளைப் பார்த்தால் அழகுதான்; ஏரில் கட்டினால் குழவுதான். * ஆளைப் பார்த்தால் அழகுபோல; வேலையைப் பார்த்தால் குழவு போல. * ஆளைப் பார்த்தால் அழகு மலை; வேலையைப் பார்த்தால் குழவு மலை. * ஆளைப் பார்த்தான்; தலையில் அடித்தான். * ஆளைப் பார்த்தான் வாயால் ஏய்த்தான். * ஆளைப் பார்த்து ஆசனம் போடுவான். * ஆளைப் பார்த்துக் கூலி கேட்கிறது; அவனைப் பார்த்துப் பெண்டு கேட்கிறது. * ஆளைப் பார்த்து மலைக்காதே; ஊது கணை. * ஆளைப் பார்; முகத்தைப் பார். * ஆற்றங்கரை மரம் விழும். * ஆற்க்காட்டு நவாபு என்றாலும் அரைக்காசுக்குப் பயன் இல்லை. * ஆற்றித் தூற்றி அம்பலத்திலே வைக்கப் பார்க்கிறான். * ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு. * ஆற்றங்கரையில் தண்ணீர்; அடுப்பங்கரையில் வெந்நீர். * ஆற்றப் புழுதி ஈரம் தாங்கும். * ஆற்றாக் குலைப் பொல்லாப்பு அடித்துக் கொள்ளுகிறான். * ஆற்றில் இருந்து அரகராப் பாடினாலும் சோற்றில் இருக்கிறான் சொக்கப்பன். * ஆற்றில் கரைத்த புளியும் அங்காடிக்கு இட்ட பதரும் ஆயிற்று. * ஆற்றில் கரைத்த பெருங்காயம் போல். * ஆற்றில் கரைத்த மஞ்சள். * ஆற்றில் நிறையத் தண்ணீர் போனாலும் அள்ளிக் குடிக்கப் போகிறதா நாய்? * ஆற்றில் நிறையத் தண்ணீர் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும். * ஆற்றில் பெரு வெள்ளம் நாய்க்கு என்ன? சளப்புத் தண்ணீர். * ஆற்றிலே ஆயிரம் காணி தானம் பண்ணினாற் போலே. * ஆற்றிலே இறங்கினால் ஐம்பத்தெட்டுத் தொல்லையாம். * ஆற்றிலே ஊறுகிறது, மணலிலே சுவருகிறது. * ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால். * ஆற்றிலே கணுக்கால் தண்ணீரிலும் அஞ்சி நடக்க வேண்டும். * ஆற்றிலே போகிற தண்ணீரை அப்பா குடி, ஐயா குடி. * ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு; குப்பையிலே போட்டாலும் குறிப்பேட்டில் பதிந்து போடு. * ஆற்றிலே போட்டுக் குளத்திலே தேடுவது போல. * ஆற்றிலே போனாலும் போவேனே அன்றித் தெப்பக்காரனுக்குக் காசு கொடுக்க மாட்டேன் என்றானாம். * ஆற்றிலே வந்தது மடுவிலே போயிற்று. * ஆற்றிலே வருகிறது, மணலிலே சொருகுகிறது. * ஆற்றிலே விட்ட தர்ப்பை போல் தவிக்கிறேன். * ஆற்றிலே விட்ட தெப்பத்தைப் போலத் தவிக்கிறேன். * ஆற்றிலே விளைகிறது மணலிலே சிதறுகிறது. * ஆற்றிலே வெள்ளம் போனால் அதற்கு மேலே தோணி போகும். * ஆற்றிலே வெள்ளம் வந்தால் ஆனை தடுக்குமா? * ஆற்று அருகில் இருந்த மரமும் அரசு அறிந்த வாழ்வும் நிலை அல்ல. * ஆற்றுக்கு அருகில் குடியிருந்த கதை. * ஆற்றுக்கு ஒரு நாணல்; நாட்டுக்கு ஒரு பூணல். * ஆற்றுக்குச் செய்து அபத்தம்; கோயிலுக்குச் செய்து குற்றம். * ஆற்றுக்கு நெட்டையும் சோற்றுக்குக் குட்டையும் வாசி. * ஆற்றுக்குப் பார்ப்பான் துணையா? சோற்றுக்குப் பயற்றங்காய் துணையா? * ஆற்றுக்குப் போகிறதும் இல்லை; அழகரைக் கும்பிடுகிறதும் இல்லை. * ஆற்றுக்குப் போவானேன்? செருப்பைக் கழற்றுவானேன்? * ஆற்றுக்குப் போன ஆசாரப் பாப்பாத்தி துலுக்கச்சி மேலே துள்ளி விழுந்தாளாம். * ஆற்றுக்கும் பயம்; காற்றுக்கும் பயம். * ஆற்றுக்கு மிஞ்சி அரகராப் போட்டாலும் சோற்றுக்கு மிஞ்சித் சொக்கேசன். * ஆற்றுக்குள்ளே போய் அரகரா சிவசிவா என்றாலும் சோற்றுக்குள்ளே இருக்கிறானாம் சொக்கலிங்கம். * ஆற்றுதே, என்னைத் தேற்றுதே, அம்பலத்திலே என்னை ஏற்றுதே என்றான். * ஆற்றுநீர் ஊற்றி அலசிக் கழுவினாலும் வேற்று நீர் வேற்று நீர் தான். * ஆற்று நீர் பித்தம் போக்கும்; குளத்து நீர் வாதம் போக்கும்; சோற்று நீர் எல்லாம் போக்கும். * ஆற்று நீர் வடிந்த பின் ஆற்றைக் கடக்க நினைத்தானாம். * ஆற்று நீரில் அலசிக் கழுவினாலும் அலை. * ஆற்று நீரை நாய் நக்கிக் குடிக்குமோ? எடுத்துக் குடிக்குமோ? * ஆற்றுப் பெருக்கும் அரச வாழ்வும் அரை நாழிகை. * ஆற்று மண்ணுக்கு வேற்று மண் உரம். * ஆற்று மணலிலே தினம் புரண்டாலும் ஒட்டுகிறதுதான் ஒட்டும். * ஆற்று மணலை அரைத்துக் கரைத்தாலும் வேற்று முகம் வேற்று முகந்தான். * ஆற்று மணலை அளவிடக் கூடாது. * ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம்; அருச்சுனன் மனைவியரை எண்ண முடியாது. * ஆற்று மணலையும் ஆகாசத்து நட்சத்திரத்தையும் அளவிடப்படுமோ? * ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. * ஆற்றுவார் இல்லாத துக்கம் நாளடைவில் ஆறும். * ஆற்றுவாரும் இல்லை; தேற்றுவாரும் இல்லை. * ஆற்று வெள்ளம் ஆனையை என்ன செய்யும்? * ஆற்றுார் அரிசியும் வேற்றூர் விறகும் இருந்தால் சாத்தூர் செளக்கியம். * ஆற்றுார் சேற்றுார் ஆற்றுக்கு அடுத்த ஊர், ஆறுமுக மங்கலம் ஆர் ஒருவர் போனாலும் சோறு கொண்டு போங்கள் சொன்னேன், சொன்னேன். * ஆற்றை அடைக்கும் அதிவிடையம். * ஆற்றைக் கட்டிச் செட்டியார் இறைத்தால் சும்மாவா இறைப்பார்? * ஆற்றைக் கடக்க ஒருவன் உண்டானால் அவனைக் கடக்கவும் ஒருவன் உண்டு. * ஆற்றைக் கடக்கும்வரையில் அண்ணன் தம்பி; அப்புறம் நீ ஆர்? நான் ஆர்? * ஆற்றைக் கடத்தி விடு; ஆகாசத்தில் பறக்கக் குளிகை தருகிறேன் என்கிறான் மந்திரவாதி. * ஆற்றைக் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு. * ஆற்றைக் கண்டாயோ? அழகரைச் சேவித்தாயோ? * ஆற்றைக் காணாத கண்களும் அழகரை வணங்காத கைகளும் இருந்தும் பயன் இல்லாதவை. * ஆற்றைக் கெடுக்கும் நாணல்; ஊற்றைக் கெடுக்கும் பூணுால். * ஆற்றைத் தாண்டியல்லவோ கரை ஏறவேண்டும்? * ஆற்றோடு போகிற பிள்ளையில் பெண்ணுக்கு ஓர் அகமுடையான் கருப்பாகப் போச்சோ? * ஆற்றோடு போகிறவன் நல்ல வேலைக்காரன். * ஆற்றோடு போனாலும் ஆற்றூரோடே போகாதே. * ஆற்றோடு போனாலும் கூட்டோடு போகாதே. * ஆற்றோடு போனாலும் தெப்பக்காரனுக்குக் காசு தர மாட்டேன். * ஆற்றோடு போனாலும் போவான் செட்டி; தோணிக்காரனுக்கு அரைக்காசு கொடுக்கமாட்டான். * ஆற்றோடு வந்த நீர் மோரோடு வந்தது. * ஆறாம் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் ஆனான குடித்தனமும் நீறாய் விடும். * ஆறாம் திருநாள் ஆனை வாகனம். * ஆறாம் மாசம் அரைக் கல்யாணம். * ஆறா மீனின் ஓட்டம். * ஆறாவது பிள்ளை ஆனை கட்டி வாழ்வான். * ஆறாவது பிள்ளை பிறந்தால் ஆனை கட்டி வாழலாம். * ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு. * ஆறின கஞ்சி பழங் கஞ்சி. * ஆறிலே செத்தால் அறியா வயசு; நூறிலே செத்தால் நொந்த வயசு. * ஆறின சோறு ஆளனுக்கு மிஞ்சும். * ஆறின சோறு பழஞ் சோறு. * ஆறின புண்ணிலும் அசடு நிற்கும். * ஆறினால் அச்சிலே வார்; ஆறாவிட்டால் மிடாவிலே வார். * ஆறு அல்ல, நூறு அல்ல, ஆகிறது ஆகட்டும். * ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்? * ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ். * ஆறு இல்லா ஊருக்குக் கேணியே கங்கை. * ஆறு எல்லாம் கண்ணீர்; அடி எல்லாம் செங்குருதி. * ஆறு எல்லாம் பாலாய் ஓடினாலும் நாய் நக்கித்தானே குடிக்கும்? * ஆறுக்கு இரண்டு பழுதில்லை. * ஆறு கடக்கைக்குப் பற்றின தெப்பம் போகவிடுமாப் போலே. * ஆறு கல்யாணம்; மூன்று பெண்கள்; மார்போடே மார்பு இடிபடுகிறது. * ஆறு காதம் என்கிறபோது கோவணத்தை அவிழ்ப்பானேன்? * ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு. * ஆறு காதம் என்ன, அவிழ்த்துக் கொண்டானாம் அரைத்துணியை. * ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு. * ஆறு காதம் என்கிற போதே கோவனம் கட்டினானாம். * ஆறு கெட நாணல் இடு; ஊறு கெடப் பூணூல் இடு; காடு கெட ஆடு விடு; மூன்றும் கெட முதலையை விடு. * ஆறு கெடுத்தது பாதி; தூறு கெடுத்தது பாதி. * ஆறு கொத்து, நூறு இறைப்பு; ஆறு சீப்பு, நூறு காய். * ஆறு கொத்து, நூறு தண்ணீர். * ஆறு கோணலாய் இருந்தாலும் நீரும் கோணலோ? மாடு கோணலாய் இருந்தாலும் பாலும் கோணலோ? * ஆறு நாள் நூறு உழவிலும் நூறு நாள் ஆறு உழவு மேல். * ஆறு நிறையத் தண்ணீர் போனாலும் அள்ளிக் குடிக்கப் போகிறதா நாய்? * ஆறு நிறையத் தண்ணீர் போனாலும் பாய்கிறது கொஞ்சம், சாய்கிறது கொஞ்சம். * ஆறு நீந்தின எனக்குக் குளம் நீந்துவது அரிதோ? * ஆறு நீந்தினவனுக்கு வாய்க்கால் எவ்வளவு? * ஆறு நூறு ஆகும்; நூறும் ஆறு ஆகும். * ஆறு நேராய்ப் போகாது. * ஆறு நேரான ஊர் நில்லாது. * ஆறு நேரான ஊரும், அரசனோடு எதிர்த்த குடியும், புருஷனோடு ஏறு மாறான பெண்டிரும் நீறு நீறு ஆகிவிடும். * ஆறு பாதிக் குரங்கே, மரத்தை விட்டு இறங்கே. * ஆறு பார்த்து வந்தாலும் நாய் நக்கிக் குடிக்கும். * ஆறு பார்க்கப் போக ஆய்க்குப் பிடித்தது சளிப்பு. * ஆறு பார்ப்பானுக்கு இரண்டு கண். * ஆறு பிள்ளை அழிவுக்கு லட்சணம். * ஆறு பிள்ளை பெற்றவளுக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவமாம். * ஆறு போவதே கிழக்கு; அரசன் செல்வதே வழக்கு. * ஆறும் கடன்; நூறும் கடன், பெரிசாச் சுடடா பணியாரத்தை. * ஆறும் கருவில் அமைத்தபடி. * ஆறும் நாலும் பத்து; நாலும் ஆறும் பத்து. * ஆறு மாசப் பயணம் அஞ்சி நடந்தால் முடியுமா? * ஆறு மாசம் பழுத்தாலும் விளா மரத்தில் வௌவால் சேராது. * ஆறு மாதத்துக்குச் சனியன் பிடித்தாற் போல. * ஆறு மாதத்துக்கு வட்டி இல்லை; அப்புறம் முதலே இல்லை. * ஆறு மாதம் வீட்டிலே; ஆறு மாதம் காட்டிலே. * ஆறுமுக மங்கலத்துக்கு ஆர் போனாலும் சோறு உண்டு போங்கள், சொன்னேன்; சொன்னேன். * ஆறு வடியும் போது கொல்லும்; பஞ்சம் தெளியும் போது கொல்லும். * ஆறு வடிவிலேயும் கருப்புத் தெளிவிலேயும் வருத்தும். * ஆன காரியத்துக்கு மேளம் என்ன? தாளம் என்ன? * ஆன குலத்தில் பிறந்து ஆட்டை மாட்டை மேய்க்காமல் ஓலைவாரியாய்ப் போனானே! * ஆனதுக்கு ஓர் ஆகாதது; ஆகாததற்கு ஓர் ஆனது. * ஆனது அல்லாமல் ஆவதும் அறிவமோ? * ஆன தெய்வத்தை ஆறு கொண்டு போகிறது; அனுமந்தராயனுக்குத் தெப்பத் திருவிழாவா? * ஆனந்த தாண்டவபுரத்தில் எல்லோரும் அயோக்கியர்கள், உங்களைத் தவிர. * ஆனந்த பாஷ்பத்துக்கு அரைப்பலம் மிளகு. * ஆனமட்டும் ஆதாளி அடித்துப் போட்டு ஆந்தை போல் விழிக்கிறான். * ஆன மாட்டை விற்றவனும் அறுகங் காட்டைத் தொட்டவனும் கெட்டான். * ஆன முதலை அழிப்பவன் மானம் இழப்பது அரிதல்ல. * ஆனா ஆதிவாரம் ஆகாவிட்டால் சோமவாரம் * ஆனவன் ஆகாதவன் எல்லாவற்றிலும் உண்டு. * ஆனாங் கோத்திரத்துக்கு ஏனாந் தர்ப்பயாமி. * ஆனால் ஆதி வாரம்; ஆகாவிட்டால் சோம வாரம். * ஆனால் அச்சிலே வார்; ஆகா விட்டால் மிடாவிலே வார். * ஆனால் தெரியாதா? அழுகைக் குரல் கேட்காதா? * ஆனால் பிரம்ம ரிஷி; ஆகாவிட்டால் ரோம ரிஷி. * ஆனால் விட்டு அடுப்பு எரியும்; போனால் விட்டுப் புத்தி வரும். * ஆனான ஆளெல்லாம் தானானம் போடுகிறபோது, கோணல் கொம்பு மாடு கொம்பைக் கொம்பை அலைக்கிறது. * ஆனானப்பட்ட சாமி எல்லாம் ஆடிக் காற்றில் பறக்குது; அனுமந்தப் பெருமாளுக்குத் தெப்பத் திருநாளாம். * ஆனானப் பட்டவர்கள் எல்லாம் தானானம் அடிக்கறச்சே அழுகற் பூசணிக்காய் தெப்பம் போடுகிறதே! * ஆனி அடி எடார்; கூனி குடி புகார். * ஆனி அடை சாரல், ஆவணி முச்சாரல், ஆடி அதி சாரல். * ஆனி அரணை வால் பட்ட கரும்பு, ஆனை வால் ஒத்தது. * ஆனி அரை ஆறு; ஆவணி முழு ஆறு. * ஆனி அறவட்டை, போடி உங்கள் ஆத்தாள் வீட்டுக்கு. * ஆனி ஆவணியில் கிழக்கு வில் பூண்டால் பஞ்சம் உண்டு. * ஆனி ஆனை வால் ஒத்த கரும்பு. * ஆனித் தூக்கம். * ஆனி மாதம் போடுகிற பூசணியும் ஐயைந்து வயசிற் பிறந்த பிள்ளையும் ஆபத்துக்கு உதவும். * ஆனி முற்சாரல்; ஆடி அடைசாரல். * ஆனியில் அடி கோலாதே; கூனியில் குடி போகாதே. * ஆனியும் கூனியும் ஆகா. * ஆனை அசைந்து உண்ணும். * ஆனை அசைந்து தின்னும்; வீடு அசையாமல் தின்னும். * ஆனை அசைந்து வரும்; அடி பெயர்ந்து வரும். * ஆனை கறுத்தால் ஆயிரம் பொன். * ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம். * ஆனைக்கும் அடிசறுக்கும். * ஆனை படுத்தால் ஆள் மட்டம். * ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே. * ஆனை அசைந்து வரும்; அடி மேகம் சுற்றி வரும். * ஆனை அசைந்து வரும்; பூனை பாய்ந்து வரும். * ஆனை அசைந்து வாங்கும், வீடு அசையாமல் வாங்கும். * ஆனை அடம் பிடிக்கிறது போல. * ஆனை அடம் வைத்தாற்போல் அமர அமரப் பதித்த வைத்திருக்கிறார். * ஆனை அடமும் பூனைப் பாய்ச்சலும். * ஆனை அடியில் அடங்கா அடி இல்லை. * ஆனை அடியும் சரி, குதிரை குண்டோட்டமும் சரி. * ஆனை அத்தனை தீப்போட்டாலும் பானை அடியிலேதான். * ஆனை அம்பலம் ஏறும்; ஆட்டுக்குட்டி அம்பலம் ஏறுமா? * ஆனை அயர்ந்தாலும் பூனை அயராது. * ஆனை அரசன் கோட்டையைக் காக்கும்; பூனை எலிவளையைக்காக்கும். * ஆனை அரசு செய்த காட்டிலே பூனை அரசு செய்வது போல. * ஆனை அரைக் காசுக்குக் கிடைத்தாலும் வேண்டாம். * ஆனை அழிகுட்டி போட்டாற் போல. * ஆனை அழிப்பது தெரிய வில்லையாம்; ஆடுஅழிப்பது தெரிகிறதாம். * ஆனை அழுக்கு அலம்பினால் தெரியும். * ஆனை அழுதால் பாகன் பழியா? * ஆனை அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும். * ஆனை அறிவு பூனைக்கு ஏது? * ஆனை ஆங்காரம் அடி பேரு மட்டும். * ஆனை ஆசார வாசலைக் காக்கும்; பூனை புழுத்த மீனைக் காக்கும். * ஆனை ஆயிரம் கேட்டாலும் கொடுப்பானே கர்ணப்பிரபு. * ஆனை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா? * ஆனை ஆனை என்றால் தந்தம் கொடுக்குமா? * ஆனை இருக்கும் இடத்தைக் காட்ட வேண்டாம். * ஆனை இருந்த இடமும் அரசன் இருந்த இடமும் ஒரு நாளும் பொய்யாகா. * ஆனை இருந்தால் சேனைக்குப் பலம். * ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன். * ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது. * ஆனை இல்லாத ஊர்வலம் பருப்பு இல்லாத கல்யாணம். * ஆனை இல்லாத ஊர்வலம் மாதிரி. * ஆனை இளைத்தால் ஆடு ஆகுமா? * ஆனை இளைத்தால் எவ்வளவு இளைக்கும்? * ஆனை உயரம் பூனை ஆகுமா? * ஆனை உண்ட விளாங்கனி போல. * ஆனை உறங்குவதும் ஆட்டுக்கிடா பிந்துவதும். * ஆனை ஊர்வலத்தில் அடைபட்டதாம் காவேரி. * ஆனை ஊற்றுக்குக் கொசு எம்மட்டோ? * ஆனை எதிர்த்து வந்தாலும் ஆனைக்காவில் நுழையாதே. * ஆனை எவ்வளவு பெரிதானாலும் அங்குசக் குச்சிக்கு அடக்கந்தானே? * ஆனை ஏற அங்குசம் இல்லாமல் முடியுமா? * ஆனை ஏற ஆசை; தாண்டி ஏறச் சீவன் இல்லை. * ஆனை ஏறிச் சந்தின் வழியாக நுழைவானேன்? * ஆனை ஏறித் திட்டிவாசலில் நுழைவதுபோல. * ஆனை ஏறி விழுந்தவனைக் கடா ஏறி மிதித்தாற்போல. * ஆனை ஏறினால் மாவுத்தன்; குதிரை ஏறினால் ராவுத்தன். * ஆனை ஏறினால் வானம் எட்டுமோ? * ஆனை ஏறினாலும் அம்பலத்தில் இறங்கத்தான் வேண்டும். * ஆனை ஏறும் பெரும்பறையன் ஆரூரில் இருப்பான். * ஆனை ஒட்டினாலும் மாமி ஒட்டான். * ஆனை ஒரு குட்டி போட்டும் பலன்; பன்றி பல குட்டி போட்டும் பலன் இல்லை. * ஆனை ஒரு குட்டி போடுவதும் பன்றி பல குட்டி போடுவதும் சரி ஆகுமா? * ஆனைக்கண் ஐசுவரியம். * ஆனைக் கண்ணிலே மோதிரம் பண்ணி வானக் கண்ணி போட்டாளாம். * ஆனைக்கண் விழுந்த பலாக்காய் போல. * ஆனைக் கவடும் பூனைத் திருடும். * ஆனைக் கறுப்பைக் கண்ட அட்டை, எனக்கு என்ன குறைச்சல் என்று சொல்லிக் கொண்டதாம். * ஆனைக் கன்றும் வளநாடும் கொண்டு வந்தானோ? * ஆனைக்காரன் ஆனைக்குத் தன் வீட்டைக் காண்பித்துக் கொடாதது போல. * ஆனைக்காரன் பெண் அடைப்பைக்காரனுக்கு வாழ்க்கைப் பட்டாளாம். * ஆனைக்காரன் பெண்டாட்டி பூனைக்குட்டியைப் பெற்றாளாம். * ஆனைக்காரன் மனைவி ஆண் பிள்ளை பெற்றால் காச்சு மூச்சென்றிருக்கும். * ஆனைக்காரனுக்கு ஆனையாலே சாவு. * ஆனைக்கால்காரன் மிதித்து விடுவதாகப் பயங்காட்டலாம்; மிதிக்கக் கூடாது. * ஆனைக் காலில் அகப்பட்ட செல்லுப் போல. * ஆனைக் காலில் பாம்பு நுழைந்தாற் போல. * ஆனைக் காலில் மிதிபட்ட சுண்டெலி போல. * ஆனைக் காலின்கீழ் எறும்பு எம்மாத்திரம்? * ஆனைக்கு அகங்காரமும் பெண்களுக்கு அலங்காரமும். * ஆனைக்கு அடி தூரம், எறும்புக்கு ஏழு காதம். * ஆனைக்கு அம்பாரி அழகு; அரசனுக்கு முடி அழகு. * ஆனைக்கு அரைஅடி; எலிக்கு எட்டு அடி. * ஆனைக்கு அறுபது முழம், அறக்குள்ளனுக்கு எழுபது முழம். * ஆனைக்கு ஆயிரம் பாத்தி வேணும்; தோட்டக்காரன் என்ன செய்வான்? * ஆனைக்கு ஆயிர முழம் அகல வேணும் * ஆனைக்கு ஆறு அடி; பூனைக்கு இரண்டு அடி. * ஆனைக்கு ஆனை கைகொடுத்தாற் போல. * ஆனைக்கு இல்லை கானலும் மழையும். * ஆனைக்கு உடல் எல்லாம் தந்தம்; மனிதனுக்கு உடல் எல்லாம் பொய். * ஆனைக்கு எதிரி நெருஞ்சி முள். * ஆனைக்கு ஏற்ற கோடாலி. * ஆனைக்கு ஒரு கவளம்; ஆளுக்கு ஒரு வேளைச் சோறு. * ஆனைக்கு ஒரு காலம்; பூனைக்கு ஒரு காலம். * ஆனைக்கு ஒரு பிடி; எறும்புக்கு ஒன்பது பிடி. * ஆனைக்குக் கட்டிய கூடாரம் போல. * ஆனைக்குக் கண் அளந்தார்; ஆட்டுக்கு வால் அளந்தார். * ஆனைக்குக் கண் அளந்து வைத்திருக்கிறது. * ஆனைக்குக் கண் சிறுத்து வர, காது அசைந்து வர. * ஆனைக்குக் கரும்பு; கழுதைக்குத் தாள்; நாய்க்குக் கருப்புக் கட்டி. * ஆனைக்குக் கரும்பும் நாய்க்கு வெள்ளெலும்பும் போல. * ஆனைக்குக் கால் குட்டை; பானைக்குக் கழுத்துக் குட்டை. * ஆனைக்குக் கொட்டாங்கச்சித் தண்ணீர் போதுமா? * ஆனைக்குக் கோபம் வந்தால் அகத்தைப் பிளக்கும்; பூனைக்குக் கோபம் வந்தால் புல்லுப்பாயைப் பிறாண்டும். * ஆனைக்குக் கோவணம் கட்ட ஆராலே முடியும்? * ஆனைக்குச் சிட்டுக்குருவி மத்தியஸ்தம் போனாற்போல. * ஆனைக்குச் செருப்புத் தைத்தாற்போல. * ஆனைக் குட்டிக்குப் பால் வார்த்துக் கட்டுமா? * ஆனைக் குட்டி கொழுக்கவில்லையே என்று உட்கார்ந்து அழுததாம் சிங்கக் குட்டி. * ஆனைக்குத் தலை மட்டம்; தவளைக்குத் தொடை மட்டம். * ஆனைக்குத் தீனி அகப்பையில் கொடுத்தால் போதாது. * ஆனைக்குத் தீனி இடும் வீட்டில் ஆட்டுக்குட்டிக்குப் பஞ்சமா? * ஆனைக்குத் தீனி வைத்துக் கட்டுமா? * ஆனைக்குத் துறடும் அன்னத்துக்கு மிளகாயும் வேண்டும். * ஆனைக்குத் தெரியுமா அங்காடி விலை? * ஆனைக்குத் தேரை இட்டது போல. * ஆனைக்கு நீச்சம், முயலுக்கு நிலை. * ஆனைக்குப் பகை சுள்ளெறும்பு. * ஆனைக் குப்பத்தான் போலே * ஆனைக்குப் பனை சர்க்கரை. * ஆனைக்குப் புண் வந்தால் ஆறாது. * ஆனைக்குப் பூனை போலவும் வால் இல்லையே! * ஆனைக்கும் அசையாதது ஆட்டுக்கு அசையும். * ஆனைக்கும் அடி சறுக்கும். * ஆனைக்கும் அடி தவறும்; பூனைக்கும் எலி தவறும். * ஆனைக்கும் அடி தவறும்; வேடனுக்கும் குறி தவறும். * ஆனைக்கும் உண்டா ஏழரை நாட்டுச் சனி? * ஆனைக்கும் உண்டு அவகேடு. * ஆனைக்கும் சரி, பூனைக்கும் சரி. * ஆனைக்கும் பானைக்கும் சரியாய்ப் போச்சு. * ஆனைக்கும் புலிக்கும் நெருப்பைக் கண்டால் பயம். * ஆனைக்கு மங்கள ஸ்நானம்; கிண்ணத்தில் எண்ணெய் எடு. * ஆனைக்கு மதம் பிடிக்க, பாகனுக்குக் கிலி பிடிக்க. * ஆனைக்கு மதம் பிடித்தால் காடு கொள்ளாது. * ஆனைக்கு முன் முயல் முக்கினது போல. * ஆனைக்கு ராஜா மூங்கில் தடி. * ஆனைக்கு லாடம் அடித்ததைக் கண்டதுண்டா? * ஆனைக்கு வாழைத்தண்டு; ஆளுக்குக் கீரைத்தண்டு. * ஆனைக்கு வேகிற வீட்டில் பூனைக்குச் சோறு இல்லையா? * ஆனைக் கூட்டத்தில் சிங்கம் புகுந்தது போல. * ஆனைக் கூட்டம் எதிர்த்தால் பூனைக்குட்டி என்ன செய்யும்? * ஆனைக் கேடும் அரசு கேடும் உண்டா? * ஆனை கட்டச் சங்கிலியைத் தானே எடுத்துக் கொடுக்கும். * ஆனை கட்டத் தாள்; வானை முட்டப் போர். * ஆனை கட்டி ஆண்டால் அரசனும் ஆண்டி ஆவான். * ஆனை கட்டி ஆளும் அரசனோ? * ஆனை கட்டி உழுகிறான். * ஆனை கட்டித் தீனி போட முடியுமோ? * ஆனை கட்டியார் வீட்டில் வாழ்க்கைப்பட்டால் ஆறு கலம் அரிசி யாவது சிறப்பு வைக்க வேண்டாமா? * ஆனை கட்டி வாழ்ந்தவன் வீட்டில் பானை சட்டிக்கு வழி இல்லை. * ஆனை கட்டின மரம் ஆட்டம் கொடுக்கும். * ஆனை கட்டும் தொழுவத்தில் பூனை கட்டலாமா? * ஆனை கண்ட பிறவிக் குருடன் அடித்துக் கொள்கிறது போல. * ஆனை கண் பருத்தால் அகிலத்தை ஆளாதா? * ஆனை கலக்குகிற குட்டையில் கொக்கு மீனைப் பிடிக்கச் சென்றதாம். * ஆனை கவுளில் அடக்கிய கல்லைப்போல. * ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்; அட்டைகறுத்தால் உதவி என்ன? * ஆனை கறுத்தால் ஆயிரம் பொன், பூனை கறுத்தால் என்ன பெறும்? * ஆனை கறுத்தால் என்ன? அசல் வீடு வாழ்ந்தால் என்ன? * ஆனை கறுத்திருந்தும் ஆயிரம் பொன் பெறும். * ஆனைகறுப்போ வெள்ளையோ, கொம்பு வெள்ளைதான். * ஆனை காட்டுக்கு ராஜாவாக இருந்தாலும் பாகனுக்கு அடிமை. * ஆனை காணாமற் போனால் இரண்டு சட்டியில் தேடினால் அகப்படுமா? * ஆனை காதில் கட்டெறும்பு புகுந்தாற் போல. * ஆனை கிட்டப் போக ஆசையாக இருக்கிறது; மாணி எட்ட வில்லை. * ஆனை குட்டி போட்டாற் போல். * ஆனை குட்டி போட்டதென்று முயல் முக்கினாற்போல. * ஆனை குட்டி போடுகிறது என்று ஆடும் போட்டால் புட்டம் கீறி விடும். * ஆனை குட்டி போடும் போடும் என்று எண்ணி லத்தி போட்டதாம். * ஆனை குட்டையைக் குழப்புவது போல. * ஆனை குடிக்கும் தண்ணீர் பூனை குடிக்குமா? * ஆனை குண்டு சட்டியிலும் குழிசியிலும் உண்டோ? * ஆனை குப்புற விழுந்தால் தவளைகூட உதைத்துப் பார்க்குமாம். * ஆனை குளிக்கச் செம்பு தண்ணீரா? * ஆனை குளித்த குளம் போல. * ஆனை குறட்டில் அவல் அடக்குகிறதுபோல எந்த மட்டும் அடக்குகிறது? * ஆனை கெட்டுக் குடத்தில் கை இடுகிறதா? * ஆனை கெட்டுப் போகக் குடத்தில கைவிட்டுப் பார்க்கிறதா? * ஆனை கெடுத்தவன் குடத்தில் கை இட்டாற் போல. * ஆனை கெடுத்தவன் பானையில் தேடினாற் போல. * ஆனை கேட்ட வாயால் ஆட்டுக்குட்டி கேட்கிறதா? * ஆனை கேடு, அரசு கேடு உண்டா? * ஆனை கொடுத்தவன் அங்குசம் கொடானா? * ஆனை கொடுத்து ஆடு வாங்கினான். * ஆனை கொடுத்தும் அங்குசத்துக்குப் பிணக்கா? * ஆனை கொழுத்தால் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும் * ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு; மனிதன் கொழுத்தால் கீரைத்தண்டு. * ஆனை கொடிற்றில் அடக்குகிறது போல எந்த மட்டும் அடக்குகிறது? * ஆனைச் சிவப்பிலும் அதிகச் சிவப்பு! * ஆனைக் கவடும் பூனைத் திருடும். * ஆனைச் சொப்பனம் கண்டவருக்குப் பானைப் பொன். * ஆனை சிங்கக்குட்டி போடுவது போல. * ஆனை சிந்திய சிறு கவளம் எறும்புக் கூட்டத்துக்குப் பெருவளம். * ஆனை சீர் தந்த எங்கள் அம்மான் கத்திரிக்காய்க்குக் குண்டா கரணம் போடுகிறான். * ஆனை செத்தாலும் ஆயிரம் பொன். * ஆனை சொற்படி பாகன்; பாகன் சொற்படி ஆனை. * ஆனைத் தலையளவு பெருங்காயம் கரைத்த வீடா? * ஆனைத் துதிக்கையில் எலும்பே கிடையாது. * ஆனைத் தோலை எலி கரண்டினது போல. * ஆனை தம்பட்டம் அடிக்க ஓநாய் ஒத்து ஊதிற்றாம்.ஆனை தம்பட்டம் அடிக்க ஓநாய் ஒத்து ஊதிற்றாம். * ஆனை தரைக்கு ராஜா; முதலை தண்ணீருக்கு ராஜா. * ஆனை தழுவிய கையால் ஆட்டுக்குட்டியைத் தழுவுகிறதா? * ஆனை தன் கோட்டிடை வைத்த கவளம் போல. * ஆனை தன் தலையிலே மண்ணைப் போட்டுக் கொள்வது போல. * ஆனை தன் பலம் அறியாது. * ஆனை தன் பலம் அறியாமல் மத்தகத்தில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது போல. * ஆனை தன் பலம் அறியாமல் மத்தகத்தை மதில் சுவரில் முட்டிக் கொண்டது போல. * ஆனை தன்னைக் கட்டும் சங்கிலியைத் தானே எடுத்துக் கொடுத்தது போல. * ஆனை தாழ்ந்து அரசு வளர்ந்தது. * ஆனை திரும்ப அரைக்கால் நாழிகை. * ஆனை தின்ற விளாங்கனி போல. * ஆனை தும்பிக்கையில் வீசுகிறது என்று கழுதை வாலால் வீசினது போல. * ஆனை துரத்தி வந்தாலும் ஆலயத்தில் நுழையலாகாது. * ஆனை துறடு அறியும்; பாகன் நோக்கு அறிவான். * ஆனை தொட்டாலும் மரணம் வரும். * ஆனை தொடுவுண்ணின் மூடும் கலம் இல்லை. * ஆனை நடைக்கும் குதிரை ஓட்டத்துக்கும் சமம். * ஆனை நிழல் பார்க்கத் தவளை அழித்தாற் போல. * ஆனை நிற்க நிழல் உண்டு; மிளகு உருட்ட இலை இல்லை. * ஆனை நீட்டிப் பிடிக்கும்; பூனை தாவிப் பிடிக்கும். * ஆனை நுழைய அடுக்களை பிடிக்குமா? * ஆனைப் பசிக்கு ஆத்திக் கீரையா? * ஆனைப் பசிக்குச் சோளப் பொறியா? * ஆனைப் பாகன் மனைவி ஆறுமாசத்துக்கு விதவை. * ஆனைப் பாகன் வீட்டை ஆனைக்குக் காட்ட மாட்டான். * ஆனைப் பாகனுக்கு ஆனையால் சாவு. * ஆனைப் பாகனும் குதிரைப் பாகனும் சவாரி செய்தாற் போல. * ஆனை பட்டால் கொம்பு; புலி பட்டால் தோல். * ஆனை படுத்தால் ஆட்டுக்குட்டி உயரமாவது இருக்காதா? * ஆனை படுத்தால் ஆட்டுக்குட்டிக்குத் தாழுமா? * ஆனை படுத்தால் ஆள் மட்டம். * ஆனை படுத்தால் குதிரை உயரம் வராதா? * ஆனை பழக்க ஆனை வேண்டும். * ஆனை பாய்ந்தால் ஆர் பிடிப்பார்? * ஆனை பார்க்க வெள்வெழுத்தா? * ஆனை பிடிக்கப் பூனைச் சேனை. * ஆனை பிடிப்பவனுக்குப் பூனை எம்மாத்திரம்? * ஆனை புக்க புலம் போல. * ஆனை புகுந்த கரும்புத் தோட்டமும் அமீனா புகுந்த வீடும் உருப்படா. * ஆனை புலி வந்தாலும் தாண்டுவான். * ஆனை பெரிது, ஆனாலும் அதன் கண் சிறிது. * ஆனை பெருத்தும் ஊனம் உதறாதே. * ஆனை பெருமாளது; ஆர் என்ன சொன்னால் என்ன? * ஆனை போக அதன் வால் போகாதோ? * ஆனை போகிற வழியிலே எறும்பு தாரை விட்டது போல். * ஆனை போய் ஆறு மாசம் ஆனாலும் தாரை மறையுமா? * ஆனை போல் ஐந்து பெண் இருந்தாலும் பூனை போல் ஒரு நாட்டுப் பெண் வேண்டும். * ஆனை போல வந்தான்; பூனை போலப் போகிறான். * ஆனை போனதே வீதி. * ஆனை போன வீதியிலே ஆட்டுக்குட்டி போகிறது வருத்தமா? * ஆனை போன வீதியையும் கேட்க வேண்டுமா? * ஆனை போனாலும் அடிச்சுவடு போகாது. * ஆனை மதத்தால் கெட்டது; அரசன் பயத்தால் கெட்டான். * ஆனை மதம் பட்டால் அழகாகும்; பூனை மதம் பட்டால் என்ன ஆகும்? * ஆனை மதம் பட்டால் காடு கொள்ளாது; சாது மதம் பட்டால் ஊர் கொள்ளாது. * ஆனை மதத்தால் வாழைத்தண்டு; ஆண் பிள்ளை மதத்தால் கீரைத்தண்டு. * ஆனை மயிர் கட்டின ஆண் சிங்கம். * ஆனை மிதித்த காசு பானை நிரம்பும். * ஆனை மிதித்தால் பிழைப்பார்களா? * ஆனை மிதித்து ஆள் பிழைக்கவா? * ஆனை மிதித்துக் கொல்லும்; புலி இடிந்து கொல்லும். * ஆனை முட்டத் தாள்; வானம் முட்டப் போர். * ஆனை முட்டத் தேர் நகரும். * ஆனை முதல் எறும்பு வரைக்கும். * ஆனை முன்னே ஆட்டுக்குட்டி; பின்னே சிங்கக்குட்டி. * ஆனை முன்னே முயல் முக்கினது போல. * ஆனை மூத்திரத்தை நம்பிக் கட்டுச் சோற்றை அவிழ்த்தானாம். * ஆனை மேய்கிற காட்டில் ஆட்டுக்குட்டிக்குப் புல் கிடைக்காமல் போகுமா? * ஆனை மேயும் காட்டில் ஆடு மேய இடம் இல்லையா? * ஆனைமேல் அங்கு மணி எடுத்தாலும் ஆனை வால் கூழை வால். * ஆனைமேல் அங்குமணிச் சீர் எடுத்துக் கொண்டு வந்தாலும் மாமியார் இல்லை என்பாள். * ஆனைமேல் அம்பாரி போனால் பூனைக்கு என்ன புகைச்சலா? * ஆனைமேல் அம்பாரி வைத்து வரிசை வந்தாலும் ஆனை வால் கூழை என்பார். * ஆனைமேல் இடும் பாரத்தைப் பூனை மேல் இடலாமா? * ஆனைமேல் இருக்கிற அரசன் சோற்றைக் காட்டிலும் பிச்சை எடுக்கிற பார்ப்பான் சோறு மேல். * ஆனைமேல் இருப்பவனைச் சுண்ணாம்பு கேட்டாற் போல. * ஆனைமேல் உட்கார்ந்திருப்பவன் வெறிநாய் கடிக்குமென்று அஞ்சுவானா? * ஆனைமேல் ஏறிப் பாறை மேல் விழுவதா? நாயின் மேல் ஏறி மலத்தின்மேல் விழுவதா? * ஆனைமேல் ஏறினால் ஆருக்கு லாபம்? * ஆனை மேல் ஏறு என்றால் பானை மேல் ஏறுவார்? பானைமேல் ஏறு என்றால் ஆனைமேல் ஏறுவார். * ஆனைமேல் ஏறுவேன்; வீரமணி கட்டுவேன். * ஆனைமேல் திருமஞ்சனம் வருவதென்றால் பெருமாளுக்கு யோகந்தான். * ஆனைமேல் போகிறவன் அந்து காலன்; குதிரை மேல் போகிறவன் குந்து காலன். * ஆனைமேல் போகிறவனையும் பானையோடு தின்றான் என்கிறது. * ஆனைமேல் வந்தானா? குதிரை மேல் வந்தானா? * ஆனையின் அதிகாரம் சிற்றெறும்பினிடம் செல்லாது. * ஆனையின் கண்ணுக்குச் சிற்றெறும்பும் மலையாம். * ஆனையின் கரும்புக்குக் காட்டெருமை வந்ததாம். * ஆனையின் காதில் எறும்பு புகுந்தது போல. * ஆனையின் மூச்சில் அகப்பட்ட கொசுப் போல. * ஆனையின்மேல் இருப்பவனைச் சுண்ணாம்பு கேட்டால் அகப்படுமா? * ஆனையின் வாலைப் பிடித்துக் கரை ஏறலாம்; ஆட்டின் வாலைப் பிடித்துக் கரை ஏறலாமா? * ஆனையும் அறுகம் புல்லினால் தடைப்படும். * ஆனையும் ஆனையும் உரசிக் கொள்ளக் கொசுவுக்குப் பிடித்ததாம் அனர்த்தம். * ஆனையும் ஆனையும் மோதும் போது இடையிலே அகப்பட்ட கொசுவைப் போல. * ஆனையும் நாகமும் புல்லினால் தடைப்பட்டன. * ஆனையும் பானையும் ஒன்றானால் பானையே நல்லது. * ஆனையை அடக்கலாம்? அடங்காப் பிடாரியை அடக்க முடியாது. * ஆனையை அடக்கலாம்? ஆசையை அடக்க முடியாது. * ஆனையை அடக்குபவனும் அகமுடையாளுக்கு அடக்கம். * ஆனையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இரும்பு அங்குசத்துக்கு ஏமாந்து நிற்பானேன்? * ஆனையை இடுப்பிலே கட்டிச் சுளகாலே மறைப்பான். * ஆனையைக் கட்ட ஊணான் கொடி போதுமா? * ஆனையைக் கட்டி ஆள ஆண்டியால் முடியுமா? * ஆனையைக் கட்டி ஆளலாம்; அரைப் பைத்தியத்தைக் கட்டி ஆள முடியாது. * ஆனையைக் கட்டிச் சுளகாலே மறைப்பாள். * ஆனையைக் கட்டித் தீனி போட முடியுமா? * ஆனையைக் கண்டு அஞ்சாதவன் ஆனைப் பாகனைக் கண்டால் அஞ்சுவானா? * ஆனையைக் குடத்தில் அடைக்க முடியுமா? * ஆனையைக் குத்தி முறத்தினால் மறைப்பாள். * ஆனையைக் குளிப்பாட்ட அண்டா நீர் போதுமா? * ஆனையைக் கெடுத்தவன் பானையில் தேடினாற் போல். * ஆனையைக் கொட்டத்தில் அடைத்தாற் போல. * ஆனையைக் கொடுத்துத் துறட்டுக்கு மன்றாடினாற் போல. * ஆனையைக் கொன்றவன் பூனையை வெல்ல மாட்டானா? * ஆனையைக் கொன்று அகப்பையால் மூடினாற் போல். * ஆனையைச் சுளகால் மறைப்பது போல. * ஆனையைத் தண்ணீரில் இழுக்கிற முதலை பூனையைத் தரையில் இழுக்குமா? * ஆனையைத் துரத்த நாயா? * ஆனையைத் தேடப் பானையில் கை விட்டது போல. * ஆனையை நம்பிப் பிழைக்கலாம்; ஆண்டியை நம்பிப் பிழைக்க முடியுமா? * ஆனையை நோண்டினால் அது உன்னை நோண்டிவிடும். * ஆனையைப் படைத்த பகவான் பூனையையும் படைத்திருக்கிறார். * ஆனையைப் பார்க்க ஆயிரம் பேர். * ஆனையைப் பார்க்க வெள்ளெழுத்தா? * ஆனையைப் பார்த்த கண்ணுக்குக் கரடியைப் பார்ப்பதுபோல் இருந்ததாம். * ஆனையைப் பார்த்துவிட்டுப் பூனையைப் பார்த்தால் பிடிக்குமா? * ஆனையைப் பிடிக்க ஆனைதான் வேண்டும். * ஆனையைப் பிடிக்க எலிப் பொறியா? * ஆனையைப் பிடித்துக் கட்ட அரை ஞாண் கயிறு போதுமா? * ஆனையைப் பிடிப்பதும் கரகத்தில் அடைப்பதும் அதுவே செல்லப் பிள்ளைக்கு அடையாளம். * ஆனையைப் பிடிப்பான் ஆண் பிள்ளைச் சிங்கம்; பானையைப் பிடிப்பாள் பத்தினித் தங்கம். * ஆனையைப் புலவனுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு. * ஆனையைப் பூனை மறைத்ததாம். * ஆனையைப் போக்கினவன் குடத்திலே தேடின மாதிரி. * ஆனையைப் போல் சுவர் எழுப்பினால் ஆர் தாண்டுவார்கள்? * ஆனையைப் போல வஞ்சனை; புலியைப் போலப் போர். * ஆனையை முறுக்கி ஆளச் சாமர்த்தியம் இருந்தாலும் அகமுடையாளை அடக்கி ஆளத் திறமை இல்லாதவன் இருந்தென்ன பிரயோசனம்? * ஆனையை வாங்கலாமா லஞ்சம்? * ஆனையை வாங்கிவிட்டுத் துறட்டுக்கு மன்றாடுகிறான். * ஆனையை வித்துவானுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு. * ஆனையை விழுங்குவான்; கடைவாயில் ஒட்டிய ஈயைக் கண்டு நடுங்குவான். * ஆனையை விற்றா பூனைக்கு மருத்துவம் பார்ப்பது? * ஆனையை விற்றுத் துறட்டுக்கு மன்றாடுகிறான். * ஆனையோடு பிறந்த அலங்காரி, சேனையோடு பிறந்த சிங்காரி. * ஆனை லத்தி ஆனை ஆகுமா? * ஆனை லத்தி போடுகிற மாதிரி குதிரை லத்தி போட்டால் குண்டி கிழிந்து போகும். * ஆனை வந்தால் ஏறுவேன்; சப்பாணி வந்தால் நகருவேன். * ஆனை வந்தாலும் ஏற வேண்டும்; சப்பாணி வந்தாலும் ஏற வேண்டும். * ஆனை வந்தாலும் தாண்டுவான்; புலி வந்தாலும் தாண்டுவான். * ஆனை வந்து விரட்டினாலும் ஆனைக் காவில் நுழையாதே. * ஆனை வயிறு ஆனாலும் பானைக்குள்ளேதான். * ஆனை வயிறு நிறைந்தாலும் ஆட்டுக் குட்டிக்கு வயிறு நிறையாது. * ஆனை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே: * ஆனை வலம் கிடைத்தாலும் பூனை வலம் கிடைக்காது. * ஆனை வாகனம் ராச லட்சணம். * ஆனைவாய்க் கரும்பும் பாம்பின் வாய்த் தேரையும் யமன்கைக் கொண்ட உயிரும் திரும்பி வரா. * ஆனை வாயில் அகப்பட்ட கொசுவைப் போல். * ஆனை வாயில் போன விளாம் பழம் போல. * ஆனை வால் பிடித்துக் கரை ஏறலாம்; ஆட்டின் வால் பிடித்துக் கரை ஏறலாமா? * ஆனை வால் பிடித்துக் கரை ஏறலாம்; நாய் வால் பிடித்து ஆவது என்ன? * ஆனை வாழ்ந்தால் என்ன? பூனை தாலி அறுத்தால் என்ன? * ஆனை விலை, குதிரை விலை. * ஆனை விழுங்கிய அம்மையாருக்குப் பூனை ஒரு சுண்டாங்கி. * ஆனை விழுந்தால் அதுவே எழுந்திருக்கும். * ஆனை விழுந்தாலும் குதிரை மட்டம். * ஆனை விற்றால் ஆனை லாபம்; பானை விற்றால் பானை லாபம் * ஆனை விற்றும் துறட்டுக்குப் பிணக்கா? * ஆனை வீட்டிலே பிறந்து அடைப்பக்காரனுக்கு வாழ்க்கைப் பட்டாளாம். * ஆனை வெளுக்கத் தாழி செய்தது போல. * ஆனை வேகம் அடங்கும் அங்குசத்தால். * ஆச்சியம் பூச்சியம். * ஆஸ்தி இல்லாதவன் அரை மனிதன். * ஆஸ்தி உள்ளவன் ஆஸ்திக்கு அடிமை. * ஆஸ்தி உள்ளவனுக்கு நாசம் இல்லை. * ஆஸ்திக்கு ஓர் ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும். * ஆஸ்திக்கு மிகுந்த அபராதமும் இல்லை; தலைக்கு மிஞ்சின தண்டமும் இல்லை. * ஆஸ்தி பாஸ்தி. ==இ== * இக்கரைக்கு அக்கரை பச்சை * இக்கரையில் பாகலுக்கு அக்கரையில் பந்தல் * இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை * இகழ்ச்சி உடையோன் புகழ்ச்சி அடையான் * இங்கிதம் தெரியாதவளுக்குச் சங்கீதம் தெரிந்து பலன் என்ன? * இங்கு அற்றவருக்கு அங்கு உண்டு * இங்கு அற்றவருக்கு அங்கு ஒரு விஸ்வரூப தரிசனம் * இங்கு இருந்த பாண்டம் போல * இங்கும் புதையல் இருக்குமா ரங்கா? அதற்குச் சந்தேகமா வெங்கா? * இங்கே தலையைக் காட்டுகிறான்; அங்கே வாலைக் காட்டுகிறான் * இங்கே வாடா திருடா, திருட வந்தாயா என்றாளாம்; உன் வீடு இருக்கிற அழகுக்கா விழித்துக் கொண்டிருக்கிறாய் என்றானாம் * இங்கே வா நாயே என்றால் மூஞ்சியை நக்குகிறது * இச்சிக் கொண்டே என்னோடே நிற்கிறான் * இச்சித்த காரியம் இரகசியம் அல்ல, * இச்சிப் பெட்டின வாரிக்கு இஞ்சினீரிங் டிபார்ட்மெண்ட் * இச்சை உள்ள காமுகர்க்குக் கண் கண்ட இடத்திலே * இச்சைச் சொல் யாசகத்தால் இடர்ப்பட்டவன் இல்லை * இச்சையாகிய பாக்கியம் இருக்கப் பிச்சைக்குப் போவானேன்? * இச்சையும் இல்லை; இருமையும் இல்லை * இசலிக் கொண்டே என்னோடே நிற்கிறான் * இசை இல்லாப் பாட்டு இழுக்கு * இசைவில்லாப் பாட்டு இழுக்கு * இசைவு வந்தது வடமலை அப்பா! * இஞ்சி இலாபம் மஞ்சளில் * இஞ்சி என்றால் தெரியாதா? எலும்மிச்சம் பழம் போலத் தித்திப்பாய் இருக்குமே! * இஞ்சி தின்ற குரங்கு போல * இஞ்சியில் பாய்ந்தால் என்ன? மஞ்சளில் பாய்ந்தால் என்ன? இஞ்சி லாபம் மஞ்சளிலே * இட்ட அடி கொப்புளிக்க எடுத்த அடி தள்ளாட * இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு * இட்ட உறவு ஏனாதிக்கூட்டம்; வார்த்த உறவு வண்ணாரக் கூட்டம் * இட்ட எழுத்திற்கு மேல் ஏற ஆசைப்பட்டால் கிடைக்குமா? * இட்ட கடன் பட்ட கடனுக்கு ஈடாகாது * இட்ட குடி கெடுமா? * இட்ட குடியும் கெட்டது; ஏற்ற குடியும் கெட்டது * இட்ட கையை நத்துமா? இடாத கையை நத்துமா? * இட்டத்தில் ஒன்றும் குறையாது * இட்டத்தின் மேலே ஏறாசைப்பட்டால் கிடைக்குமோ? * இட்டது எல்லாம் கொள்ளும் பட்டி மகள் கப்பரை * இட்டது எல்லாம் பயிர் ஆகுமா? பெற்றது எல்லாம் பிள்ளை ஆகுமா? * இட்ட படியே ஒழிய ஆசைப்பட்டுப் பலன் இல்லை * இட்டம் அற்ற முனியன், அட்டமத்துச் சனியன் * இட்டலிக் குப்பன் * இட்டவர்கள் தொட்டவர்கள் கெட்டவர்கள்; இப்போது வந்தவர்கள் நல்லவர்கள் * இட்டவள் இடா விட்டால் வெட்டுப் பகை * இட்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாமா? * இட்ட வீட்டுக்குப் பிட்டு இட்டுக்கொண்டு, இடிந்த வீட்டுக்கு மண் இட்டுக் கொண்டு திரிகிறான் * இட்டார்க்கு இட்ட படி * இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர் * இட்டாருக்கு இட்ட பலன் * இட்டார்க்கு இட்ட பலன்; ஆண்டிக்கு அமைந்த பலன் * இட்டாருக்கு இடலும், செத்தாருக்கு அழுதலும் * இட்டாருக்கு இட வேணும்; செத்தாருக்கு அழ வேணும் * இட்டு ஆளாப் பெண்ணுக்குச் சுட்டாலும் தெரியாது * இட்டு உண்டான் செல்வம் தட்டுண்டாலும் கெடாது * இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான். * இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை * இட்டுக் கெட்டாரும் இல்லை; ஈயாது வாழ்ந்தாரும் இல்லை * இட்டுப் பிறந்தால் எங்கும் உண்டு * இட்டுப் பேர் பெறு; வெட்டிப் பேர் பெறு * இட்டு வைத்தால் தின்னவும் எடுத்து வைத்தால் அடுக்கவும் தெரியும் * இடக்கண், வலக்கண் * இடக்கனுக்கு வழி எங்கே? கிடக்கிறவன் தலை மேலே * இடக்காதில் வாங்கி வலக்காதில் விடுவது * இடக்குக் குடை பிடிக்கலாமா? * இடது கைக்கு வலது கை துணை; வலது கைக்கு இடது கை துணை * இடது கை பிட்டத்துக்கு எளிது * இடது கை வலது கை தெரியவில்லை * இடம் அகப்படாத தோஷம்; மெத்தப் பதிவிரதை * இடம் இராத இடத்தில் அகமுடையானைப் பெற்றவள் வந்தாளாம்; போதாக் குறைக்குப் புக்ககத்து அத்தையும் வந்தாளாம் * இடம் கண்டால் மடத்தைப் பிடிக்கலாம் * இடம் கண்டால் விடுவானோ யாழ்ப்பாணத்தான் * இடம் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கலாம் * இடம் பட வீடு இடேல் * இடம் வலம் தெரியாதவனோடு இணக்கம் பண்ணல் ஆகாது * இட மாட்டாதவன் எச்சில் என்றானாம் * இட வசதி இல்லாத பதிவிரதை * இடறின காலிலே இடறுகிறது * இடன் அறிந்து ஏவல் செய் * இடாதவனுக்கு இட்டுக் காட்டு * இடான், தொடான், மனுஷர்மேல் செத்த பிராணன் * இடி இடி எங்கே போகிறாய்? ஏழையின் தலையில் விழப் போகிறேன் * இடி இடித்தாலும் படபடப்பு ஆகாது * இடி ஓசை கேட்ட பாம்பு போல * இடிக்கிறவன் ஒன்றை நினைத்துக்கொண்டு இடித்தால், குடிக்கிறவன் ஒன்றை நினைத்துக்கொண்டு குடிப்பான் * இடிக்கிற வானம் பெய்யாது * இடிக்குக் குடை பிடிக்கலாமா? * இடி கொம்புக்காரன் கோழிக் குஞ்சின் சத்தத்திற்கு அஞ்சுவானா? * இடி கொம்பும் விட்டுப் பிடி கொம்பும் விட்டது போல * இடி சோறு தின்கிறான் * இடித்த புளி போல் இருக்கிறான் * இடித்தவளுக்கும் புடைத்தவளுக்கும் ஒன்று; ஏன் என்று வந்தவளுக்கு இரண்டு * இடித்த வானம் பெய்யாது * இடித்து அடித்து ஒரு கூடை இடுவதிலும் பிடி சோறு அன்பாய்ப் போடுவது போதும் * இடிந்து கிடந்த அம்பலம் போல * இடியேறு கேட்ட நாகம் போல * இடி விழுந்த ஊரில் குடி இருந்தாலும் இடை விழுந்த ஊரில் குடியிருக்கல் ஆகாது * இடி விழுந்த மரம்போல ஏங்குதல் * இடி விழுவானுக்கு வாழ்க்கைப்பட்டு எந்நேரமும் குடி சாமம் * இடுகிற தெய்வம் எங்கும் இடும் * இடுகிறவன் தன்னவன் ஆனால் இடைப் பந்தியில் இருந்தால் என்ன? கடைப் பந்தியில் இருந்தால் என்ன? * இடுப்பில் இரண்டு காசு இருந்தால் சருக்கென்று இரண்டு வார்த்தை வரும் * இடுப்பிலே காசு இருந்தால் அசப்பிலே வார்த்தை வரும் * இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரல் குழியே கதி * இடுப்புக்கு மேலே அந்தரங்கம் இல்லை * இடுப்புச் சுருங்குவது பெண்களுக்கு அழகு * இடுப்பு வைத்த இடமெல்லாம் அடுப்பு வைத்தான் * இடும்பனுக்கு வழி எங்கே? இருக்கிறவன் தலை மேலே * இடும்பு செய்வாருக்கு இராப்பகல் நித்திரை இல்லை * இடும்பும் கரம்பும் அழியும் * இடும்பைக்கு ஈன்ற தாய் போல * இடுவது பிச்சை; ஏறுவது மோட்சம் * இடுவார் இடுவதையும் கெடுவார் கெடுப்பார் * இடுவார்க்கு இல்லை கெடுவாழ்வு * இடுவார் பிச்சையைக் கெடுக்கிறதா? * இடுவான் இடுவான் என்று ஏக்கற்று இருந்தாளாம்; நாலு நாழி கொடுத்து நாலாசை தீர்த்தாளாம் * இடை ஆண்டியும் இல்லை; குயத் தாதனும் இல்லை * இடைக் கணக்கன் செத்தான்; இனிப் பிழைப்பான் நாட்டான் * இடைக் கிழவி எப்போது சாவாளோ? இடம் எப்போது ஒழியுமோ? * இடைக் கோழி இராத் தங்குமா? * இடைச்சன் பிள்ளைக்காரிக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் சொன்னாளாம் * இடைச்சி ஆத்தாள் தோளிக்கு * இடைச்சிக்கு எட்டுத் தாலி; பறைச்சிக்குப் பத்துத் தாலி * இடைச்சிக்கு மாப்பிள்ளை என்றைக்கிருந்தாலும் வருவான் * இடைச்சி சம்பத்தும் சாணாத்தி வாழ்வும் சரி * இடை சாய்ந்த குடம் கவிழும் * இடைத் தெருவில் ஊர்வலம் வரும்போது குசத்தெரு எங்கே என்கிறான் * இடைப் பிறப்பும் கடைப் பிறப்பும் ஆகா * இடைப் புத்தி பிடரியிலே * இடையன் எப்போது சாவானோ, கம்பளி எப்போது மிஞ்சுமோ? * இடையன் எறிந்த மரம் போல * இடையன் கரடிமேல் ஆசைப்பட்டது போல * இடையன் கல்யாணம் பொழுது விடிந்து போச்சு * இடையன் கல்யாணம் விடியும் பொழுது * இடையன் கெடுத்தது பாதி; மடையன் கெடுத்தது பாதி * இடையன் செய்வது மடையன் செய்யான் * இடையன் பிடரியிலே ஆட்டைப் போட்டுக்கொண்டு தேடினாற் போல் * இடையன் பெருத்தாலும் இடையன் கிடை நாய் பெருக்காது * இடையன் பேரிலே சந்நதம் வந்தது போல் * இடையன் பொறுத்தாலும் இடையன் நாய் பொறாதது போல * இடையன் வந்ததும் படுக்க வேண்டியதுதான் * இடையன் வெட்டின கொம்பு போல * இடையன் வெட்டு அறா வெட்டு * இடையனில் ஆண்டி இல்லை; குசவனில் தாதன் இல்லை * இடையனுக்குப் பிடரியிலே புத்தி * இடையனும் பள்ளியும் இறைத்த புலம் பாழ் * இடையாலும் கடையாலும் சங்கம் அழிவதாக * இடையூறு செய்தோன் மனையில் இருக்காது பேய் முதலாய் * இண்டம் பிடித்தவன் * இணக்கம் அறிந்து இணங்க வேண்டும் * இணக்கம் இல்லாதவனோடு என்ன வாது? * இணங்காரோடு இணங்குவது இகழ்ச்சி * இணங்கினால் தித்திப்பு; பிணங்கினால் கசப்பு * இணை பிரியா அன்றில் போல * இத்தனை அத்தனை ஆனால் அத்தனை எத்தனை ஆகாது? * இத்தனை பெரியவர் கைப்பிடித்து இழுத்தால் மாட்டேன் என்று எப்படிச் சொல்வது? * இத்தனை பேர் பெண்டுகளில் என் பிள்ளைக்கு ஒரு தாய் இல்லை * இத்தனையும் செய்து கத்தரி நட்டவன் இல்லையென்று சொன்னான் * இதற்கா பயப்பட்டேன் என் ஆண்டவனே, ஆனை குதிரை வந்தாலும் தாண்டுவனே * இது எமன் ஆச்சே! * இது எல்லாம் பொம்மலாட்டம் * இது என் குலாசாரம்; இது என் வயிற்று ஆகாரம் * இது என்ன வெள்ளரிக்காய் விற்ற பணமா? * இது சொத்தை; அது புழுத்தது * இது தெரியாதா இடாவே? நுகத்தடிக்கு நாலு துளை * இது பெரிய இடத்துப் பேச்சு * இதைச் சொன்னான் பரிகாரி; அதைக் கேட்டான் நோயாளி * இந்த அடிக்கு எந்த நாயும் சாகும் * இந்த அம்பலம் போனால் செந்தி அம்பலம் * இந்த அமாவாசைக்கும் வெட்கம் இல்லை; வருகிற அமாவாசைக்கும் வெட்கம் இல்லை * இந்த உலக வாழ்வு சதமா? * இந்த ஊருக்கு எமனாக வந்தான் * இந்த எலும்பைக் கடிப்பானேன்? சொந்தப் பல்லும் போவானேன்? * இந்தக் கண்ணிற் புகுந்து அந்தக் கண்ணிற் புறப்படுகிறான் * இந்தக் கருப்பிற் செத்தால் இன்னும் ஒரு கருப்பு மயிரைக் பிடுங்குமா? * இந்தக் குண்டுக்குத் தப்பினாலே மக்கமே கதி * இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்? * இந்தக் கூழுக்கோ பதினெட்டுத் திருநாமமும் நடுவிலே ஒரு திருச்சூர்ணமும் * இந்தக் கைப் புழுதி தேவலையா? இந்தக் கைச் சாம்பல் தேவலையா? * இந்தச் சளுக்கனுக்கு இரண்டு பெண்சாதி; வந்தவாசி மட்டும் வல்ல வாட்டு * இந்தச் சிற்றுண்டி எனக்குத் தெவிட்டிப் போயிற்று * இந்த நாயை ஏன் இப்படிச் செய்கிறாய்? * இந்தப் பூராயத்தில் குறைச்சல் இல்லை * இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா? * இந்தப் பெரிய கொள்ளையிலே அப்பா என்னப் பிள்ளை இல்லை * இந்தப் பெருமையையும் பந்தல் அழகையும் பார்த்தாயா பண்ணைக்காரா? * இந்தப் பையனுக்கு இந்த வீட்டு ஓதம் உறைத்து விட்டது * இந்த மடம் இல்லாவிட்டால் இன்னொரு சந்தை மடம் * இந்த மூஞ்சிக்குத் தஞ்சாவூர்ப் பொட்டு; வந்தவாசி வரையில் வல்லவாட்டு; அதைக் கழுவப் புழலேரித் தண்ணீர் * இந்த வளைவு சிக்கினால் எப்படித்தான் பிள்ளை பிழைக்கும்? * இந்த வீட்டிலே வைத்தது மாயமாய் இருக்கிறது * இந்த வீட்டுக்கு வந்தாலும் வந்தேன்; பக்கத்து வீட்டுக் கருவாட்டு நாற்றம் போச்சு * இந்திரன் கெட்டதும் பெண்ணாலே; சந்திரன் கெட்டதும் பெண்ணாலே * இந்திரனைச் சந்திரனை இலையாலே மறைப்பாள்; எமதர்ம ராசாவைக் கையாலே மறைப்பாள் * இந்திராணிக்கு இந்திரன் வாய்த்தது போல * இந்திராதி தேவர்க்கும் வந்திடும் தீவினை * இந்திரைக்கு மூத்தவள் மூதேவி * இப்படிப் பார்த்தால் ஸ்த்ரீ ஹத்தி; அப்படிப் பார்த்தால் பிரம்ம ஹத்தி * இப்போது இல்லையெனின் எப்போதும் இல்லை * இம்பூரல் தெரியாமல் இருமிச் செத்தான் * இம்மிய நுண்பொருள் ஈட்டி நிதியாக்கிக் கம்மியருள் மூவர் களிறு * இம்முனு போனாளாம்; பிள்ளையைப் பெற்றாளாம் * இமயம் சேர்ந்த காக்கையும் பொன்னாகும் * இமயம் முதல் குமரி வரையில் * இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது * இயல்பாய் மணம் இல்லாச் சந்தனக் கட்டை இழைத்தாலும் மணக்காது * இயற்கை அழகே லேசான ஆபரணம் * இயற்கை வாசனையோ? செயற்கை வாசனையோ? * இரக்கப் போனாலும் சிறக்கப் போ * இரக்கம் இல்லாதவன் நெஞ்சு இரும்பினும் கொடிது, * இரங்காதவர் உண்டா? பெண் என்றால் பேயும் இரங்கும் * இரட்டைத் தோணியில் கால் வைத்தாற் போல * இரண்டு ஆட்டில் ஊட்டின குட்டியாய்த் தீர்ந்தது * இரண்டு ஆட்டிலே ஒட்டின குட்டி * இரண்டு எழுத்து மந்திரம், பச்சிலையால் தந்திரம் * இரன்டு ஏற்றம் இறைக்க எங்கள் அப்பனுக்குத் தெரியாது * இரண்டு ஓடத்தில் கால் வைக்கிறதா? * இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே * இரண்டு கண்ணும் பொட்டை; பெயர் புண்டரீகாக்ஷன் * இரண்டு கை தட்டினால்தான் ஓசை உண்டு * இரண்டு கை போதாது * இரண்டு கையும் போதாது என்று அகப்பையும் கட்டிக்கொண்டான் * இரண்டு சாஸ்திரிகள், இரண்டு ஜோசியர்கள், இரண்டு புலவர்கள், இரண்டு தாசிகள், இரண்டு வைத்தியர்கள், இரண்டு நாய்கள், இரண்டு கடிகாரங்கள், சேர்ந்து போக மாட்டார்கள் * இரண்டு தோணியில் கால் வைக்கிறதா? * இரண்டு நாய்க்கு ஓர் எலும்பு போட்டாற் போலே * இரண்டு பட்ட ஊரிலே குரங்கும் குடி இராது * இரண்டு பெண் கொண்டானுக்கு நடையிலே வாருகோல்; ஒரு பெண் கொண்டானுக்கு உறியிலே சோறு * இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடு திண்டாட்டம் * இரண்டு பெண்டாட்டிக்காரன் வீட்டில் நெருப்பு ஏன்? * இரண்டு பெண்டாட்டிக்காரனுக்குக் கொண்டை உண்டோடி? * இரண்டும் இரண்டு அகப்பை; * இரண்டும் கழன்ற அகப்பை * இரண்டும் கெட்டான் பேர்வழி * இரண்டு வீட்டிலும் கல்யாணம்; இடையே செத்ததாம் நாய்க்குட்டி * இரண்டு வீட்டு விருந்தாளி கெண்டை புரட்டிச் செத்தான் * இரத்தினத்தைச் சேர்ந்த இழை போல * இரந்தவன் சோறு என்றைக்கும் பஞ்சம் இல்லை *.இரந்து உண்டவன் இருந்து உண்ணான் * இரந்து குடித்தாலும் இருந்து குடி * இரந்தும் பரந்தவைக்குக் கொடுக்கவேணும் * இரந்தும் பருந்துக்கு இடு * இரந்தோர்க்கு ஈவது உடையார் கடன் * இரப்பவனுக்கு ஈவார் பஞ்சமா? * இரப்பவனுக்கு எங்கும் பஞ்சம் இல்லை * இரப்பவனுக்கு வெறுஞ் சோறு பஞ்சமா? * இரப்பான் சோற்றுக்கு எப்போதும் பஞ்சம் இல்லை * இரப்பான் சோற்றுக்கு வெண்சோறு பஞ்சமா? * இரப்பானைப் பிடித்ததாம் பறைப் பருந்து * இரவல் உடைமை இசைவாய் இருக்கிறது; என் பிள்ளை ஆணை, நான் கொடுக்கமாட்டேன் * இரவல் உடைமையும் இல்லாதாள் புடைவையும், அவிசாரி அக முடையானும் ஆபத்துக்கு உதவா * இரவல் கொடாதவை இருந்தாளமாட்டினம் * இரவல் சதம் ஆகுமா? மதனி உறவு ஆகுமா? * இரவல் சதமா? திருடன் உறவா? * இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம் * இரவல் சோறு தஞ்சம் தாங்காது * இரவல் துணியாம்; இரவல் துட்டாம்; இழுத்துக் கொட்டு மேளத்தை; இறுகிக் கட்டு தாலியை * இரவல் நகையும் இல்லாத வஸ்துவும் அவிசாரி அகமுடையானும் ஆபத்துக்கு உதவார் * இரவல் புடைவையிலே இது நல்ல கொய்சகந்தான் * இரவல் புருஷா, கதவைத் திற; ஏமாளிப் புருஷா, வீட்டை விடு * இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே * இரவிமுன் பணி போல * இரவில் உண்ணாமல் பகல் உண்ணாதவனுக்குப் பெருத்தல் இல்லை * இரவில் எதுசெய்தாலும் அரவில் செய்யாதே * இரவில் போனாலும் பரக்கப் போக வேண்டும் * இரவு உண்ணான் பருத்திருப்பான் * இரவு எல்லாம் இறைத்தும் பொழுது விடிந்து போச்சு * இரவு எல்லாம் திருடினாலும் கன்னக்கோல் சாத்த ஓர் இடம் வேண்டாமா? * இரவு வேளையில் ருத்திராட்சப் பூனை போல் * இராக் கண்ட கனவு மிடாப் போல வீங்கின கதை * இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை * இராச் செத்தால் பகல் பிழைக்கிறான் * இராச திசையில் கெட்டவணுமில்லை * இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான் * இராத்திரி செத்தால் விளக்கெண்ணெய்க்கு இல்லை; பகலில் செத்தால் வாய்க்கரிசிக்கு இல்லை * இராப்பகல் கண்ணிலே * இராப் பட்டினி கிடந்தவன் அகவிலை கேட்பானா? * இராப் பட்டினி கிடந்தவன் உரித்த வாழைப்பழம் விற்கிறதா என்று விசாரித்தானாம் * இராப் பட்டினி கிடந்தவனுக்குப் பாதித் தோசை போதாதா? * இராப் பட்டினி, பகல் கொட்டாவி * இராப் பட்டினி பாயோடே * இராப் பிறந்த குழவி பகலிலே கத்தும்; பகல் பிறந்த குழந்தை இராவிலே கத்தும் * இராப் பிறந்த பிள்ளையும் ஆகாது; பகல் பிறந்த பிள்ளையும் ஆகாது * இராமனைப் போல் அரசன் இருந்தால் அனுமனைப் போல் சேவகன் இருப்பான் * இரா முழுதும் ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன வேண்டும் என்றானாம் * இராவணன் என்றால் படையும் நடுங்கும் * இரிசிக்குப் புருஷன் ஆசை உண்டா? * இரிசியார் உடைமை இராத் தங்கப் போகாது * இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்டாற் போல், * இருக்க இருக்க எல்லாம் இசைவாகும் * இருக்கச் சாண் இடம் இல்லாமல் போனாலும் பெருக்கப் பெருக்கப் பேசுவதில் மாத்திரம் குறைவில்லை * இருக்க வேண்டும் என்றால் இரும்பைத் தின்னு * இருக்கிற அளவோடு இருந்தால் எல்லாம் தேடி வரும் * இருக்கிற அன்றைக்கு எருமை மாடு தின்றாற் போல * இருட்டினால் எப்போதும் இரண்டு பணம் கேட்கிறான் * இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம் * இருக்கிற இடத்தை விளக்கேற்றித்தான் பார்க்க வேண்டும் * இருக்கிறது மூன்று மயிர்; அதில் இரண்டு புழுவெட்டு * இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடித்தானாம் * இருக்கிறபோது பெருங்கும்பம்; இல்லாத போது காவிக் கும்பம் * இருக்கிற வரையில் இருள் மூடிச் போச்சாம்; செத்தவன் கண் செந்தாமரை என்றானாம் * இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவன் செவ்வயாய்ச் சிரைப்பான் * இருக்கிறவன் நல்லவன் ஆனால் இடைப்பந்தியில் இருந்தால் என்ன? கடைப்பந்தியில் இருந்தால் என்ன? * இருக்கிறவனுக்கு ஒரு வீடு; இல்லாதவனுக்கு அநேக வீடு * இருக்கிறவனுக்கு ஒன்று; இல்லாதவனுக்குப் பத்து * இருக்கும் இடம் ஏவுமா? * இருக்கும் போதே இரக்கப் போவானேன்? * இருக்கும் வளையில் எலியையும் கொல்ல முடியாது * இருசி உடைமை இராந் தங்கல் ஆகாது * இரு சுழி இருந்து உண்டாலும் உண்ணும், இரந்து உண்டாலும் உண்ணும் * இருட்டில் உதட்டைப் பிதுக்கின மாதிரி * இருட்டில் சிவப்பாய் இருந்தால் என்ன; கறுப்பாய் இருந்தால் என்ன? * இருட்டில் போனால் திருட்டுக் கை நில்லாது * இருட்டிலே குருட்டு ஆண்டி * இருட்டு அறையில் மங்கு கறந்து எய்த்தாற் போல * இருட்டு உள், சுருட்டுப் பாய், முரட்டுப் பெண்டாட்டி * இருட்டுக்கு எல்லாம் சரி * இருட்டுக் குடிவாழ்க்கை திருட்டுக்கு அடையாளம் * இருட்டு வீட்டில் குருட்டுப் பிள்ளை பெற்றாளாம் * இருட்டு வீட்டில் நுழைந்தாலும் திருட்டுக் கை சும்மா இராது * இருட்டு வீட்டில் குருட்டுக் காக்காய் ஒட்டுகிறது போல; * இருட்டு வீட்டிலே குருட்டுக் கொக்குப் பிடித்தாற் போல * இருட்டு வேலையோ? குருட்டு வேலையோ? * இருட்டைக் கொண்டு ஓட்டையை அடைத்தது போல், * இருத்தினவன் தோளில்தான் அழுத்துவார்கள் * இருதயத்தில் நினைத்தது எல்லாம் எழுதிக் கட்டு * இருதயத்து எழுந்த புண் போல * இருதலைக் கொள்ளி எறும்பு போல் * இருதலைக் கொள்ளியில் எறும்பு பிழையாது * இருதலை மணியன் பாம்பைப் போல் * இருதலை வழக்கு நூலினும் செம்மை * இரு தோணியில் கால் வைக்காதே * இருந்த இடத்து வேலை என்றால் எங்கள் வீட்டுக்காரரையும் கூப்பிடுங்கள் * இருந்த இடத்து வேலைக்காரன் எங்கள் வீட்டு ஆண் பிள்ளையாம் * இருந்த இடம் ஏழு முழம் ஆழம் வெந்து போகும் * இருந்த இடம் தெரியாமல் புல் முளைத்துப் போயிற்று * இருந்த கால் மூதேவி; நடந்த கால் சீதேவி * இருந்த நாள் எல்லாம் இருந்துவிட்டு ஊர்ப் பறையனுக்குத் தாரை வார்த்தது போல * இருந்தல்லவோ படுக்க வேணும்? * இருந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி * இருந்தவன் எழுந்திருக்கிறதற்குள்ளே நின்றவன் ஒரு காதம் போவான் * இருந்தவன் தலையிலே இடி விழுந்தாற் போல * இருந்தவனுக்குப் போனவன் குணம் * இருந்த வெள்ளத்தைத் தள்ளிற்றாம் வந்த வெள்ளம் * இருந்தால் அப்பன்; இல்லாவிட்டால் சுப்பன் * இருந்தால் இடுவது; இல்லையேல் விடுவது * இருந்தால் ஓணம்; இல்லா விட்டால் ஏகாதசி * இருந்தால் இருப்பீர்; எழுந்தால் நிற்பீர் * இருந்தால் செட்டி; எழுந்திருந்தால் சேவகன் * இருந்தால் துவாதசி; இல்லா விட்டால் ஏகாதசி * இருந்தால் நவாப் சாயபு; இல்லா விட்டால் பக்கிரி சாயபு * இருந்தால் பூனை; பாய்ந்தால் புலி * இருந்து அடித்தேன்; பறந்து போயிற்று * இருந்து இருந்து இடையனுக்கு வாழ்க்கைப்பட்டாளாம் * இருந்து இருந்து ஒரு பிள்ளை பெற்றாள், மலமும் ஜலமும் இல்லாமல் * இருந்து இருந்து ஒரு பெண்ணைக் கொண்டான்; மலஜலம் எல்லாம் வீட்டுக்குள்ளே * இருந்து இருந்து பார், இடி விழுவான் காரியத்தை * இருந்து கொடுத்தால் நடந்து வாங்கு * இருந்து பணம் கொடுத்து நடந்து வாங்க வேண்டியதாய் இருக்கிறது * இருந்தும் கெடுத்தான்; செத்தும் கெடுத்தான் * இரு நாய்க்கு இட்ட எலும்பு போல * இருப்பது எல்லாம் இருந்துவிட்டு இளித்த வாயன் ஆவானேன்? * இருப்பது பொய்; போவது மெய் * இருப்பவனுக்கும் கேளாதவனுக்கும் கொடுக்காதே * இருப்பிடம் தலைப்பிள்ளை; தலைக்கடை தென்னம் பிள்ளை * இரும்புக்கட்டியைக் காற்று அடித்தபோது இலவம் பஞ்சு எனக்கு என்ன புத்தி என்கிறதாம் * இரும்புக் கதவை இடித்துத் தவிட்டுக் கொழுக்கட்டை எடுப்பதா? * இரும்பு கோணினால் ஆனையை வெல்லலாம்; கரும்பு கோணினால் சுட்டியும் பாகும் ஆகும் * இரும்புச் சலாகையை விழுங்கிவிட்டு இஞ்சிச் சாற்றைக் குடிப்பதா? * இரும்பு செம்பு ஆனால் திரும்பிப் பொன் ஆகும் * இரும்பு செம்பு ஆனால் துரும்பு தூண் ஆகும் * இரும்புத் துறட்டுக்கு அசையாத புளியங்காய் திருப்பாட்டுக்கு அசையுமா? * இரும்புத் தூணை எறும்பு அரித்தாற்போல் * இரும்புத் தூணைச் செல் அரிக்குமா? * இரும்புப் பட்டறையில் ஈக்கு என்ன வேலை? * இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா * இரும்பும் குறும்பும் இருக்கக் கெடும் * இரும்பு முளைத்தாலும் கரும்பு முளைக்காது * இரும்பை எலி கவ்விற்று என்கிறான், படுக்காளி * இரும்பை எலி தின்னுமா? * இரும்பை எறும்பு அரிக்குமா? * இரும்பைக் கறையான் அரித்தால் குழந்தையைப் பருந்து கொண்டு போகாதா? * இருமலே இடி விழுகிறது; தும்மல் எப்படியோ? * இரு மனசு மங்கையோடு இணங்குவது அவம் * இருமும்போது கட்டிய தாலி தும்மும்போது அறுந்து விட்டது * இருவர் ஒத்தால் ஒருவருக்கும் பயம் இல்லை * இருவர் நட்புக்கு ஒருவர் பொறுமை * இருவர் நட்பு ஒருவர் பொறை * இருவரும் ஒத்தால் பிணக்கு வருவானேன்? * இருவிரல் தோலும் அவற்றின்மேல் மயிரும் எனக்கு இல்லையே! * இருளன் பிள்ளைக்கு எலி பஞ்சமா? * இருளன் பிள்ளைக்கு எலி பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? * இருளன் ராஜவிழி விழிப்பானா? * இருளுட் ஒரு காலம்; நிலவும் ஒரு காலம் * இரை விழுங்கின பாம்பு போல * இல்லது வாராது; உள்ளது போகாது * இல்லறம் பெரிது; துறவறம் சிறிது * இல்லறம் அல்லது நல்லறம் அன்று * இல்லறம் நல்லறம் * இல்லாத சொல் அல்லல்படும் * இல்லாததைக் கொண்டு கல்லாததைக் கனா என்றால் யாரால் முடியும்? * இல்லாத பிள்ளைக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை * இல்லாதவன் கோபம் பொல்லாதது * இல்லாதவன் பெண்சாதி எல்லாருக்கும் தோழி * இல்லாதவன் பொல்லாதவன் * இல்லாதவனோ, பொல்லாதவனோ? * இல்லாத வீட்டுக்கு இலஞ்சியம் * இல்லாது சொல்லி அல்லற்படுதல் * இல்லாது பிறவாது; அள்ளாது குறையாது * இல்லாது இல்லன்; இருப்பதும் இல்லன் * இல்லார் இருமையும் நல்லது எய்தான் * இல்லாளை விட்டு வல்லாண்மை பேசுகிறதா? * இல்லிடம் இல்லார்க்கு நல்லிடம் இல்லை * இல்லு அலுக்கானே பண்டுக வச்சுனா * இல்லை என்கிற மகராசி இல்லை என்றாள்; தினம் போடுகிற மூதேவிக்கு என்ன வந்தது? * இல்லை என்ற வீட்டில் பல்லியும் சேராது * இல்லையா இலை மறைவு, காய் மறைவு? * இல்லையே ஒன்றுக்கும் உதவாத ஒன்று * இல்லோர் இரப்பது இயல்பு * இலக்கணப் பெண்சாதி மானியம் காக்கிறாள் * இலக்கணம் கற்றவன் கலக்கம் அற மன்னர் சபை காண்பான் * இலக்கணம் புலவர்க்கு அணிகலன் * இலங்கையில் பிறந்தவன் எல்லாம் இராவணன் ஆவது இல்லை * இலங்கையைச் சுட்ட குரங்கு * இலந்தைப் பழப் புழுப் போலத் துடிக்கிறது * இலவசமாய் வந்த மாட்டை நிலவிலே கட்டி ஓட்டு * இலவு காத்த கிளி போல * இலுப்பைச் சர்க்கரைக் கொடையாம்; துரைகள் மெச்சின நடையாம் * இலுப்பைப் பூப்போல் * இலுப்பைப் பூவைத் திருப்பினால் இரண்டு புறமும் பொத்தல் * இலை அசைந்தாலும் இலைக்குக் கேடு; முள் அசைந்தாலும் இலைக்குக் கேடு * இலைக்கும் உண்டு, மட்டையும் பழுப்பும் * இலை சாய்கிற பக்கம் குலை சாயும் * இலை தின்னி காய் அறியான் * இலைப் பழுப்பு ஆனாலும் குலப்பழுப்பு ஆகாது * இலைப் புரை கிளைத்தல் * இலைமறை காய் போல் * இலை மறைவு, காய் மறைவு * இலை மறைவு, தலை மறைவு * இலையும் பழுப்பும் எங்கும் உண்டு * இவ்வூர்ப் பூனையும் புலால் தின்னாது * இவருக்குச் சொல்லும் புத்தி கடலிற் பெருங்காயம் கரைத்தாற் போல் ஆகிறது * இவ நான் தாலி கட்டின பொண்டாட்டி. இவள நான் அடிப்பேன், உதைப்பேன், எதுவேண்டுமானாலும் செய்வேன். * இவன் ஊராருக்குப் பிள்ளை * இவன் கல்லாது கற்றவன் உள்ளங்கையில் வைகுந்தம் காட்டுவான் * இவன் புத்தி உலக்கைக் கொழுந்து, * இவன் மகா பெரிய கள்ளன்; காலாலே முடிந்ததைக் கையாலே அவிழ்ப்பது அரிது * இவன் வாழ்ந்த வாழ்வு மறுகிலேன் மல்லாக்கினேன் * இவனுக்கும் அவனுக்கும் ஏழு பொருத்தம் * இழப்பாரை ஜயிப்பார் இல்லை; எதிர்ப்பாரை ஜயிப்பார் உண்டு * இழந்த சொத்துப் பெரிய சொத்து * இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா? * இழவுக்கு வந்தவளை உழவுக்கு அழைத்தானாம் * இழவு கொடுப்பானுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை * இழவு சொன்னவன் மேலா பழி? * இழவு வீட்டுக்குப் போனாலும் இடக்கை நீளும் * இழவைத் துறப்பவர் எல்லாம் துறப்பார் * இழுக்கான பொன்னைப் புடத்தில் வைத்து எடுப்பார் * இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று * இழுத்தபடி எல்லாம் வரும் தங்கக் கம்பி * இளங்கன்று பயமறியாது * இழுத்துப் பிடித்து நின்றாலும் வழுக்கி வழுக்கிப் போகும் * இழுத்து மூட வேணும் * இழுவை கண்டால் அடி பார்ப்பானேன்? * இழை ஆயிரம் பொன் பெற்ற இந்திர வர்ணப்பட்டு * இழை ஊடாடா நட்புப் பொருள் ஊடாடக் கெடும் * இழையத் தீட்டிக் குழைய வடித்தது போல * இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் குண்டியைத் தூக்கி அடிப்பான் * இளங் கன்று பயம் அறியாது * இளஞ்சிங்கம் மதயானைக்கு அஞ்சுமா? * இளநீர்க் காய் உதிர்க்கிறது போல * இளமைச் சோசியம்; முதுமை வைத்தியம் * இளமையில் கல்வி எப்போதும் நிற்கும் * இளமையில் கல்வி சிலையில் எழுத்து * இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து * இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம் * இளமையில் சோம்பல், முதுமையில் வறுமை * இளமையில் பழக்கம் எப்போதும் மறவாது * இளமையில் பழக்கம் சுடுகாடு மட்டில் * இளமையில் பழக்கம் முதுமையில் சுபாவம் * இளமையில் முயற்சி முதுமையில் காக்கும் * இளமையும் முதுமையும் சரியான வயசு அல்ல * இளவெயில் காயாத நீயா தீப் பாயப் போகிறாய்? * இளிச்ச கண்ணி பிளிச்சை வாங்காள் * இளிச்ச வாயனைக் கண்டால் எல்லாருக்கும் இளக்காரம் * இளித்துக் கொண்டிருந்தாளாம் மடத்தாயி; ஏறி அடித்தானாம் தவசிப் பிள்ளை * இளைஞன் ஆனாலும் ஆடுவான் மூப்பு * இளைத்த உடம்புக்கு இரும்பைக் கொடு * இளைத்த நாயை ஏறி மிதிப்பது போல, * இளைத்த நேரத்துக்குப் புளித்த மோர் * இளைத்தவர் கிளைப்பார்; கிளைத்தவர் இளைப்பார் * இளைத்தவரைச் செயிப்பார் உண்டோ? * இளைத்தவன் இரும்பு தின்ன வேண்டும் * இளைத்தவன் இரும்பை உண்; வலுத்தவன் வாளம் உண் * இளைத்தவன் எள்ளு; வலுத்தவன் கரும்பு * இளைத்தவன் எள்ளு; வலுத்தவன் வாழை * இளைத்தவன் எள்ளு விதைக்க வேண்டும்; கொழுத்தவன் கொள்ளு விதைக்க வேண்டும் * இளைத்தவன் எள்ளு விதைப்பான்; பருத்தவன் கரும்பு போடுவான் * இளைத்தவன் ஒரு வருஷத்துக்கு எள் விதைக்க வேண்டும் * இளைத்தவன் சிநேகிதனைச் சேர் * இளைத்தவன் தலையில் ஈரும் பேனும் * இளைத்தவன் தலையில் சொட்டு * இளைத்தவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மச்சினி * இளைத்தவனைக் கண்டானாம், ஏணிப் பந்தம் பிடித்தானாம் * இளைத்தவனை வலியான் கோபித்தால் வலியானை வல்லவன் கேட்பான் * இளைத்து இனத்தாரிடம் போவானேன்? * இறங்கு பொழுதில் மருந்து குடி * இறடுங்கால் இறடும் * இறந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி * இறந்தவன் பிள்ளை இருந்தவன் அடைக்கலம் * இறந்தவனுக்கு எள்ளும் தண்ணீரும் * இறந்தால் போச்சு மூச்சு; மறந்தால் போச்சுக் காசு * இறந்தாலும் சிங்காரக் கழுவில் இறக்க வேண்டும் * இறந்து இறந்து பிறந்தாலும் இருவக்கரையானாய்ப் பிறக்க வேணும் * இறப்பில் இருந்த அகப்பை சோற்றில் விழுந்த மாதிரி * இறாக் கறியோ, புறாக் கறியோ? * இறுகினால் களி , இளகினால் கூழ் * இறுத்த குடிக்கு அனர்த்தம் இல்லை * இறுப்பானுக்குப் பணமும் கிடையாது; உழைப்பானுக்குப் பெண்ணும் கிடையாது * இறைக்க, இறைக்கக் கிணறு சுரக்கும் * இறைக்க ஊறும் மணற்கேணி; ஈயப் பெருகும் பெருஞ் செல்வம் * இறைக்கிறவன் இளிச்ச வாயனாக இருந்தால் மாடு மச்சான் முறை கொண்டாடும் * இறைக்கும் கிணறு ஊறும் * இறைச்சி தின்றவன் கடுப்புக்கு மருந்து அறிவான் * இறைச்சி தின்றாலும் எலும்பைக் கோத்துப் போட்டுக் கொள்ளலாமா? * இறைத்த கிணறு ஊறும், இறையாத கேணி நாறும் * இறைத்த கிணறு சுரக்கும் * இறைத்தோறும் ஊறும் கிணறு * இறையாத கிணறு பாழும் கிணறு * இறைவனை ஏற்று; அரசனைப் போற்று * இன்சொல் இடர்ப்படுவது இல்லை * இன்சொல்லால் இடர் வராது * இன்பத்தில் ஆசை எவர்க்கும் உண்டு * இன்ப துன்பம் இரண்டும் காவடிப் பானைகள் போல * இன்பம் உற்றிடில் துன்பம் இல்லை * இன்பம் வருவதும் துன்பம் வருவதும் எடுத்த உடலுக்கு வரம் * இன்பமும் துன்பமும் இணை விடா * இன்பமும் துன்பமும் இதயத்தே ஆம் * இன்பமும் துன்பமும் எடுத்த உடலுக்கு இயல்பு * இன்பமும் துன்பமும் பொறுமையிலே * இன்பமும் துன்பமும் யாருக்கும் உண்டு * இன்று அற்று இன்று போகிறதா? * இன்று இருப்பவர் நாளைக்கு இல்லை * இன்றைக்கு அரசன் நாளைக்கு ஆண்டி * இன்றைக்கு அறையில் இருந்தால் நாளைக்கு அம்பலத்தில் வந்தே தீரும் * இன்றைக்கு ஆகிறது நாளைக்கு ஆகட்டும் * இன்றைக்கு ஆவது நாளைக்கு ஆகுமா? * இன்றைக்கு ஆளுவார் நாடு; நாளைக்குக் கையில் ஆளுவார் ஓடு * இன்றைக்கு இருப்பார் நாளைக்கு இல்லை * இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கும் இலை அறுப்பான் * இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான். * இன்றைக்கு எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் அழகை; பசியாது * இன்றைக்கு என்பதும் நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம், * இன்றைக்குச் சிரிப்பு; நாளைக்கு அழுகை, * இன்றைக்குச் சின்னதுக்கு வந்தால் நாளைக்குப் பெரியதுக்கு வரும் * இன்றைக்கு செத்தால் நாளைக்கு இரண்டு நாள் இன்னம் இருக்கிறது தேருக்குள் சிங்காரம் (இன்னும்) இன்னம் இன்னம் இசைச்சொல் அனேகம் இன்னமும் கெடுகிறேன் பந்தயம் என்ன என்றது போல இன்னமும் பேயோடேனும் பிரிவு * இன்றும் கிடக்குது ரியோ ரியோ இனக்கூட்டு ஆனாலும் நிலக்கூட்டு ஆகாது இனத்தால் இனம் ஆகும்;பணத்தால் ஜனம் ஆகும் இனத்தை இனம் சேரும் இனத்தை இனம் தழுவும் * இனம் இனத்தோடு சேரும்;பணம் பணத்தோடு சேரும் இனம் இனத்தோடே;வெள்ளாடு தன்னோடே இனம் கெட்ட ஏகாதசிக்கு என்ன பலகாரம்? இனம் பிரிந்த மான் போல * இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே * இனாம் வந்த மாட்டை நிலவில் கட்டி ஓட்டு என்றானாம் இனிமேல் எமலோகம் பரியந்தம் சாதிக்கலாம் இனிமேல் ஒரு தெய்வத்தை கை எடுக்கிறதா? இஷ்கா இஷ்பாவாக இருக்கிறான் இஷ்டம் அற்ற முனியன் அஷ்டமத்து சனியன் * இஷ்ராவினால் தெரிந்து கொள்ளாதவன் என்ன சொன்னாலும் தெரிந்து கொள்ள மாட்டான் ==ஈ== * ஈ அடித்தான் காப்பி. * ஈ எறும்பு எண்ணாயிரமும் சிரிக்கிறது. * ஈ என்று போயிருக்கிறான். * ஈ ஏறி மலை குலுங்கினது போல. * ஈ ஏறி மலை சாயுமா? * ஈ ஓட்டுகிறான் * ஈ முட்டுவது எருமைக்கடா முட்டுவது போல. * ஈ விழுந்தாலும் எடுத்தாலொழியப் போகுமா? * ஈ விஷ்டித்ததும் நாய் திருடித் தின்றதும். * ஈகை உடையோன் எக்களிப்பு அடைவான் * ஈக் கடித்த பெண்ணுக்கு இழை ஒட்டுவதா? * ஈக் கலையாமல் தேன் எடுப்பார்கள்; எடுக்காமல் பிடிப்பார்கள் * ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில். * ஈக்கு விடம் தலையில்; தேளுக்கு விடம் கொடுக்கில் * ஈக்கும் ஆனைக்கும் சம்பந்தமா? * ஈக்கும் நாய்க்கும் தடை இல்லை. * ஈக்கும் பாலுக்கும் எச்சில் இல்லை. * ஈசல் இறகு எல்லாவற்றிலும் மிருது. * ஈசல் பறந்தால் மழை. * ஈசல் பிறந்தால் மழை மாறும். * ஈசல் புற்றில் கரடி வாய் வைத்தாற் போல. * ஈசல் பெறும் போக்கில் சொறியாந் தவளை வேட்டை ஆடும். * ஈசல் பெறும் போக்கில் தவளை தத்தி விழுங்குது. * ஈசல் பொறுக்கி பேசவும் அறியான். * ஈசல் மடிந்தாற் போலே மாண்டதே சேனை. * ஈசனுடைய அடியார் மனம் எரிந்து புகைந்தால் வீண் போகுமா?3745 * ஈசனைப் போற்று; அரசனை வாழ்த்து. * ஈசனைப் போற்று; அரசனை வாழ்த்து. * ஈசான்ய மின்னலுக்கு எருதும் நடுங்கும் * ஈசான்ய மின்னலுக்கு எருதும் நடுங்கும். * ஈசுவரனுக்குத்தான் வெளிச்சம் * ஈசுவரன் கிருபை எல்லார்க்கும் போதும். * ஈசுவரன் கிருபை எல்லார்க்கும் போதும். * ஈசுவரன் கோவில் திருநாள் ஒரு நாள் கந்தாயம். * ஈசூரும் பூதூரும் என்றும் இழப்பு. * ஈச்ச முள் கொண்டு இறுக இறுகத் தைத்தாலும் தேற்றிய வசனம் சொல்லாமல் விடான். * ஈச்சங் கள் எதிலும் குளிர்ச்சி. * ஈச்சங் காட்டில் எருமை குடி இருந்தது போல. * ஈச்சங் குலையில் தேன் வைத்த மாதிரி. * ஈச்சமுள்ளாலே இருவாயும் தைத்தாலும் தேங்காய்க்கு மஞ்சள் இல்லை, பூவுக்கு மணம் இல்லை என்கிறான். * ஈஞ்சைக் கண்டால் கிழி; எருக்கைக் கண்டால் சொடுக்கு. * ஈடன் பாடு அஞ்சான்? கூழை எருது நுளம்புக்கு அஞ்சாது. * ஈடு ஆகாதவனை எதிராக்காதே. * ஈடு இணை அற்றது * ஈடு உள்ள குடிக்குக் கேடு இல்லை. * ஈடு ஜோடு எங்கும் கிடையாது. * ஈடு ஜோடு சொல்ல முடியாது. * ஈடும் எடுப்பும் இல்லாதது. * ஈட்டி எட்டின மட்டும் பாயும்; பணம் பதின் காதம் குத்தும். * ஈட்டி எட்டின மட்டும் பாயும்; பணம் பாதாளம் வரையில் பாயும். * ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும். * ஈட்டி வாயன் தேடிக் கற்பூர வாயனுக்குக் கொடுத்தது போல * ஈட்டிய பொருளினும் எழுத்தே உடைமை * ஈட்டுக்கு ஈடும் சோட்டுக்குச் சோடுமாய் இருந்தால் வாசி. * ஈட்டுக்கும் பாட்டுக்கும் இருந்தாள் இரு குமரி. * ஈதல் உடையானை யாவரும் புகழ்வர். * ஈந்து பார்த்தால் இம்மி வெளியாகும். * ஈப் பறக்க இசை கேடு வந்தாற் போல் ஆச்சுது. * ஈப் பிசினி இரப்பதுகூடக் கஞ்சிசம். * ஈப்பாக்கு வைத்த மாதிரி. * ஈமக் கடனை எழுந்து முறை செய் * ஈயத்தைக் காதில் காய்ச்சி ஊற்றினாற் போல. * ஈயத்தைக் காய்ச்சலாம்; இரும்பைக் காய்ச்சலாமா? * ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை * ஈயத்தைப் புடம் வைத்தால் ஈயம் வெள்ளி ஆகுமா? * ஈயப் பெருகும் பெருஞ் செல்வம். * ஈயம் பிடித்தவன் எது சொல்லினும் கேளான். * ஈயாத கருமிக்கு ஏராளச் செலவு. * ஈயாத பத்தினியிடம் ஈ என்றாலும், இல்லையே அது கொசு என்பாளாம் * ஈயாத புல்லர் இருந்தென்ன? போய் என்ன? * ஈயாத புல்லனை எவ்விடத்திலும் காணோம். * ஈயாத லோபி இருந்தென்ன? போய் என்ன? * ஈயாதார் வாழ்ந்தென்ன? இண்டஞ்செடி பழுத்து என்ன? * ஈயாப் பத்தன் பேராசை கொண்டு பெருக்கத் தவிக்கிறான் * ஈயார் உறவும் ஈகை இல்லா அன்பும் பாழ் * ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் * ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். * ஈயார் பொருளுக்குத் தீயார். * ஈயுந்தனையும் எரு விடு; காயுந்தனையும் களை பறி * ஈயும் எறும்பும் எங்கும் உண்டு * ஈயைப் பிடித்தால் கை வேறு, கால் வேறு. * ஈயைப் போல் சுத்தமும் எறும்பைப்போல் சுறுசுறுப்பும். * ஈர நாவிற்கு எலும்பில்லை. * ஈர நாவுக்கு எலும்பு இல்லை. * ஈர நிலத்தில் ஏரைப் பிடி. * ஈர நெஞ்சம் இரங்கும்; இரங்கா நெஞ்சம் அரங்கும். * ஈரச் சீலையைப் போட்டுக் கழுத்தை அறுப்பான். * ஈரத் துணியைப் போட்டுக் கழுத்தை வெட்டுவான். * ஈரத்தில் ஏரைப் பிடி. * ஈரமும் கொங்கும் எதிர்த்து மின்னினால் சாமத்துக்கு மழை தப்பாமல் வரும். * ஈரம் அற்ற இடத்திலே ஈ மொய்க்குமா? * ஈரம் இருக்கிற இடத்திலே ஈ மொய்க்கும். * ஈரம் இல்லா நெஞ்சத்தார்க்கு என் செய்தும் என்ன? * ஈரம் உடையோரை யாவரும் புகழ்வர். * ஈரம் உள்ள இடத்தில் ஈ மொய்க்கும். * ஈரம் கண்டு அவிசாரி பிடிக்கிறவர். * ஈரம் காய்ந்தால் பிட்டத்தில் மண் ஒட்டாது. * ஈரம் போகாமல் எருவை மூடு. * ஈரலிலே மயிர் முளைத்தவன். * ஈரூரில் உழுதவனும் கெட்டான்; இரண்டு பெண் கட்டினவனும் கெட்டான். * ஈரூர் வேளாண்மையும் தாரம் இரண்டும் தனக்குப் பகை. * ஈரை நினைப்பான், பேரை மறப்பான். * ஈரைப் பேன் ஆக்கிப் பேனைப் பெருமாள் ஆக்குகிறது. * ஈர் உருவப் பேன் அகப்படும். * ஈர் பேன் ஆகிப் பேன் பெருமாள் ஆனதுபோல, * ஈர்க்கிலே குத்தி இறப்பிலே வைத்தாற்போல. * ஈர்ந்து உழும் புன்செய் ஈரம் தாங்கும். * ஈவதினும் மேல் இல்லை; இரப்பதினும் தாழ்வு இல்லை. * ஈவதைக் கண்டார் யாவரும் அண்டார்.3820 * ஈவோனுக்கு ஒரு போது உணவு; இரப்போனுக்குப் பல போது உணவு. * ஈனம் மானம் அற்றவன் இரந்து வயிறு வளர்ப்பான். * ஈனருக்கு இடம் கொடுத்தால் இல்லிடம் எல்லாம் பாழ். * ஈனரை அடுத்தால் மானம் அழியும். * ஈனவும் தெரியாது; எடுக்கவும் தெரியாது. * ஈனனுக்கு இரு செலவு. * ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய். * ஈனாப் பெண்கள் இருவர் கூடினால் காயா வரகு நீறாய்ப் போம். ==உ== * உகம் முடிய மழை பெய்தாலும் ஓட்டாங் கிளிஞ்சல் பயிர் ஆகுமா? * உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை. * உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும். * உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா * உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை. * உச்சத்தில் சொன்னால் அச்சம் இல்லை * உச்சந் தலையில் செருப்பால் அடித்தது போல. * உச்சந் தலையில் முள் தைத்து உள்ளங்காலில் புரை ஓடிற்றாம். * உச்சந் தலையில் செருப்பால் அடித்தாலும் உச்சி குளிருமா? * உச்சனை உச்சன் பார்த்தால் மச்சு வீடும் குச்சு வீடாகும். * உங்கள் அப்பன் ஆர்க்காட்டு நவாபா? * உங்கள் அப்பன் ஏழரைக் கோடி. * உங்கள் அப்பன் சீமை ஆளுகிறானா? * உங்கள் அப்பன் செத்தான்; பழி உன்னை விடேன். * உழக்கு அரிசி ஆனாலும் ஓயாது மெல்லுவாள். * உலகம் பல விதம் * உச்சி குளிர்ந்தது. * உங்கள் அப்பன் பூச்சிக்குப் பயப்பட்டானா, உன் பூச்சிக்குப்பயப்பட? * உங்கள் உறவிலே வேகிறது ஒருகட்டு விறகிலே வேகிறது மேல். * உங்களைக் கடலிலே கை கழுவினேன். * உங்கள் பெண்டுகள் கொண்டான் அடித்தால் கண்கள் கொள்ளாது * உங்கள் வீட்டுப் பனங்கட்டை ஒற்றைப் பணத்தை முடிந்து கொண்டு கிடக்குமோ? * உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா? * உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு. * உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும். * உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது. * உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும். * உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும். * உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும். * உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா? * உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை. * உலோபிக்கு இரட்டை செலவு. * உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை. * உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது. * உளவு இல்லாமல் களவு இல்லை. * உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல * உள்ளது போகாது இல்லது வாராது. * உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய * உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன் * உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்] * உகிர்ச் சுற்றின்மேல் அம்மி விழுந்தாற் போல். * உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம். * உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பார். * உச்சஸ்தானே ஷு பூஜித. * உச்சாணிக் கிளையில் ஏறினால் உயிருக்கு ஆபத்துத்தானே? * உச்சி இட உச்சி இட உள்ளே குளிர்ந்தது. * உச்சி மீனுக்கு எட்டாம் மீன் உதய மீன். * உசிர் இருந்தால் உப்பு மாற்றிக் குடிக்கலாம். * உசு பிடி என்றால் நீ பிடி என்கிறது நாய். * உஞ்ச விருத்திக்குப் போனாலும் பஞ்சம் இல்லாமல் இருக்க வேணும். * உட்கார்ந்தவன் காலில் மூதேவி; ஓடுபவன் காலிலே சீதேவி. * உட்கார்ந்தவனைக் கட்டமாட்டாதவன் ஓடுகிறவனைக் கட்டுவானா? * உட்கார்ந்து அல்லவோ படுக்க வேண்டும்? * உட்கார்ந்து இருக்கச்சே அடித்தால் பொன்னாகும்; ஓடச்சே அடித்தால் செம்பானாலும் ஆகும்;இரும்பானாலும் ஆகும். * உட்காரச் சொல்லாத சர்க்கரை போல் பேச்சு. * உட்சுவர் இருக்க வெளிச்சுவர் பூசலாமா * உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று. * உட்புறத்துக்கு வெளிப்புறம் கண்ணாடி. * உடம்பிலே காய்த்துத் தொங்குகிறதா? * உடம்பிலே பயம் இருந்தால் நன்றாகச் செய்வான். * உடம்பு உளைந்த கழுதை உப்புக் களத்துக்குப் போனது போல. * உடம்பு எங்கும் சுடுகிற தழலை மடியிலே கட்டுகிறாய். * உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தவன். * உடம்பு எல்லாம் புழுத்தவன் அம்மன் கோவிலைக் கெடுத்தானாம். * உடம்பு எல்லாம் புளுகு; பல் எல்லாம் ஊத்தை. * உடம்புக்குப் பால் குடிப்பதா? ஊருக்குப் பால் குடிப்பதா? * உடம்பு தேற்றிக் கொண்டு அல்லவா யோகத்தில் போக வேண்டும்? * உடம்பு முழுவதும் நனைந்தவர்க்குக் கூதல் என்ன? * உடம்பை ஒடித்துக் கடம்பில் விடு. * உடம்பைச் செருப்பாகத் தைத்துப் போட்டாலும் சமானமாகாது. * உடம்போடே ஒரு நாட்டியம் உண்டா? உடம்போடே பிறந்தது. * உடல் அளவு விரதம்; பொருள் அளவு தானம். * உடல் இரண்டு, உயிர் ஒன்று. * உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாக் கவலை. * உடல் ஒருவனுக்குப் பிறந்தது; நாக்குப் பலருக்குப் பிறந்தது. * உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு தெரு முழுவதும் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும். * உடல் மெச்சப் பால் குடிக்கிறாயா? ஊர் மெச்சப் பால் குடிக்கிறாயா? * உடலுக்குக் கை துரோகம். * உடலுக்குள்ளே நாக்கை வளைக்கிறதா? * உடலுக்கோ பால் வார்த்து உண்பது? ஊருக்கோ பால் வார்த்து உண்பது? * உடலும் உயிரும் போல. * உடன் பிறந்தே கொல்லும் வியாதி. * உடன் பிறப்பால் தோள் வலி போம். * உடன் பிறப்பு இல்லாத உடம்பு பாழ். * உடாப் புடைவை பூச்சிக்கு இரை. * உடுக்காத புடைவையைச் செல் அரிக்கும். * உடுக்கு அடிக்கிறவனுக்கு நடுக்கக் கை வேறு. * உடுக்கைக்கு இடை சிறுத்தால் ஓசை உண்டு; உரலுக்கு இடை சிறுத்தால் உதவி என்ன? * உடுத்த சீலை பாம்பாய்க் கடித்தது போல. * உடுத்துக் கெட்டான் துலுக்கன்; உண்டு கெட்டான் மாத்துவன். * உடுத்துக் கெட்டான் வெள்ளைக்காரன்; உண்டு கெட்டான் சோனகன்; புதைத்துக் கெட்டான் தமிழன். * உடுப்பது பீறல் ஆடை; நடப்பது தந்தக் குறடாம். * உடுப்பாரைப் பார்த்தாலும் உண்பாரைப் பார்க்கலாமா? * உடும்பு உடும்பே இண்டிக்குப் போ. * உடும்புக்கு இரண்டு நாக்கு; மனிதனுக்கு ஒரு நாக்கு. * உடும்புப் பிடி. * உடும்பு பிடித்தது போதும்; கையை விடு. * உடும்பு போனால் போகிறது; கை வந்தால் போதும். * உடும்பு வேண்டாம்; கை வந்தால் போதும். * உடை குலைந்த பிறகு முறை கொண்டாடுவதோ? * உடைத்த சட்டி உலைக்கு உதவாது, உடைத்து ஓடு பொறுக்குகிறான். * உடைந்த சங்கில் காற்றுப் பரியுமா? * உடைந்த சங்கு ஊது பரியுமா? * உடைந்த தடியை ஒரு போதும் நம்பாதே. * உடை முள்ளுக்கு எதிரே உதைக்கலாமா? * உடைமை என்பது கல்வி உடைமை. * உடைமைக்கு ஒரு முழுக்கு; உடையவனுக்கு ஒன்பது முழுக்கு. * உடைமையும் கொடுத்து அருமையும் குலைகிறதா? * உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா. * உடையவன் அறிந்திடாத சடுக்கு இல்லை. * உடையன் இல்லாச் சேலை ஒருமுழம் கட்டை. * உடையவன் கண் ஓடாப் பயிர் உடனே அழியும். * உடையவன் காற்றுப் படாப் பயிர் ஒருமுழம் கட்டை. * உடையவன் சொற்படி உரலைச் சுற்றிக் குழி பறி. * உடையவன் பாராப் பயிர் உருப்படுமா? * உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை. * உடையவன் பொறுத்தாலும் உடையவன் வீட்டு நாய் பொறுக்காது. * உடையார் இல்லாவிட்டாலும் உடையார் பொல் இருக்கிறது. * உடையார் உண்டைக் கட்டிக்கு அழும் போது லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்கிறதாம். * உடையார் வீட்டு மோருக்கு அகப்பைக் கணக்கு என்ன? *உண் உண் என்று உபசரிப்பான் இல்லாத வாசலிலே உண்ணுமை கோடி பெறும். * உண்கிற சோற்றிலே கல்லைப் போடுகிறதா? * உண்கிற சோற்றிலே நஞ்சைக் கலக்கிறதா? * உண்கிற சோறு வெல்லம். * உண்கிற வயிற்றை ஒளிக்கிறதா? * உண்ட இடத்தில் உட்கார்ந்திருந்தால் கண்ட பேர் கரிப்பார்கள். * உண்ட இலையில் உட்கார்ந்தால் சண்டை வளரும் * உண்ட இளைப்புத் தொண்டருக்கும் உண்டு. * உண்ட உடம்பு உருளும்; தின்ற பாக்குச் சிவக்கும். * உண்டவன் உடம்புக்கு உறுதி, உழுத புலத்தில் நெல் * உண்ட சுற்றம் உருகும் * உண்ட சோற்றிலே நஞ்சைக் கலந்தாற்போல். * உண்ட சோற்றுக்கு இரண்டகம் பண்ணுகிறதா? * உண்டதுதானே ஏப்பம் வரும்? * உண்டதும் தின்றதும் லாபம்; பணியில் கிடந்தது லோபம். * உண்ட பிள்ளை உரம் பெறும். * உண்ட பேர் உரம் பேசுவார். * உண்ட வயிற்றுக்கு உபசாரமா? * உண்ட வயிற்றுக்குச் சோறும் மொட்டைத் தலைக்கு எண்ணெயும் போல. * உண்ட வயிறு கேட்கும்; தின்ற பாக்குச் சிவக்கும். * உண்டவன் உண்டு போக என் தலை பிண்டு போகிறது. * உண்டவன் உரம் செய்வான். * உண்டவன் பாய் தேடுவான்; உண்ணாதவன் இலை தேடுவான். * உண்ட வீட்டிலே உட்காராமல் போனால் கண்டவர்கள் எல்லாம் கடுகடு என்பார்கள். * உண்ட வீட்டிலே கிண்டி தூக்குவது போல. * உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா? * உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கிறவன் உண்டா? * உண்டார் மேனி கண்டால் தெரியும். * உண்டால் உடம்பு சொல்லும், விளைந்தால் வைக்கோற்போர் சொல்லும். * உண்டால் கொல்லும் விஷம். * உண்டால் கொல்லுமோ? கண்டால் கொல்லுமோ? * உண்டால் தின்றால் உறவு; கொண்டால் கொடுத்தால் உறவு. * உண்டால் தின்றால் ஊரிலே காரியம் என்ன? * உண்டால் தீருமா பசி? கண்டால் தீருமா? * உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டு * உண்டான தெய்வங்கள் ஒதுங்கி நிற்கையில் சுற்றுப்பட்ட தெய்வம் ததியோதனத்துக்கு அழுததாம். * உண்டான போது கோடானுகோடி * உண்டானால் உண்டு. உலகு அஸ்தமனமா? * உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல். * உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. * உண்டு இருக்க மாட்டாமல் ஊர் வழியே போனானாம்; தின்று இருக்க மாட்டாமல் தேசாந்தரம் போனானாம். * உண்டு உறியில் இரு என்றால் உருண்டு கீழே விழுந்தானாம். * உண்டு என்ற பேருக்கு ஈசன் உண்டு; இல்லை என்ற பேருக்கு இல்லை. * உண்டு என்று பெண் கொடுத்தால் சாதிகுலம் கேட்டானாம். * உண்டு கண்ட பூனை உறியைத் தாவும். * உண்டு களித்தவனிடம் சோற்றுக்குப் போ; உடுத்துக் களித்தவனிடம் துணிக்குப் போ. * உண்டு கெட்டவனும் தின்று கெட்டவனும் இல்லை. * உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இருக்குமா? * உண்டு தின்று உயரமானால் ஊரிலே காரியம் என்ன? * உண்டு தின்று உள்ளே இரு என்றால் உயர எழும்பி ஏன் குதிக்கிறாய்? * உண்டு ருசி கண்டவன் ஊரை விட்டுப் போகான்; பெண்டு ருசி கண்டவன் பேர்த்து அடி வையான். * உண்டை பட்டு உறங்குகிற குருவிபோல. * உண்ண இலை தேடி உறங்கப் பாய் தேடிச் சிவனே என்று இருந்தேன் * உண்ண உணவும் நிற்க நிழலும். * உண்ணக் கை சலித்திருக்கிறான். * உண்ணச் சோறும் உடுக்கத் துணியும் ஒண்டக் கூரையும் வேண்டும். * உண்ணப் படை உண்டு; வெல்லப் படை இல்லை. * உண்ணப் பார்த்தாலும் உழைக்கப் பாராதே, * உண்ண வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்திற்றாம். * உண்ண வருகிறாயோ சோம்பலே, உன் குறுணி அரை நாழிவேலைக்கு வருகிறாயோ சோம்பலே; நான் சற்றே நோயாளி. * உண்ண வா என்றால் குத்த வருகிறான். * உண்ணவும் தின்னவும் என்னைக் கூப்பிடு; ஊர்க்கணக்குப் பார்க்க என் தம்பியை அழை. * உண்ணா உடம்பு உருகாது; தின்னாப் பாக்குச் சிவக்காது. * உண்ணாக்கை அறுத்துச் சுண்ணாம்புக் குறி இடுவேன். * உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும், உடுக்காப் புடைவை புட்டிலாக்கும். * உண்ணாத தின்னாத ஊர் அம்பலம். * உண்ணா நஞ்சு ஒருகாலும் கொல்லாது. * உண்ணாமல் ஊர் எல்லாம் திரியலாம்; உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகலாகாது * உண்ணாமல் ஒன்பது வீடு போகலாம்; உடுக்காமல் ஒரு வீடும் போகலாகாது. * உண்ணாமல் கெட்டது உறவு; கேளாமல் கெட்டது கடன். * உண்ணாமல் தின்னாமல் உறவின் முறையுாருக்கு ஈயாமல். * உண்ணாமல் தின்னாமல் ஊர் அம்பலம் ஆனேனே! * உண்ணாமல் தின்னாமல் வயிறு உப்புசம் கொண்டேன். * உண்ணி கடித்த நாய் உதறுவது போல. * உண்ணியைக் கண்டால் ஊரிள் பஞ்சம் தெரியும். * உண்ணுகிற சோறு வெல்லம். * உண்ணுகிற வயிற்றை ஒளிக்கிறதா? * உண்ணுபவன் உண்டு விட்டுப் போனால் உன் தலைப்புண் விட்டுப்போகிறது. * உண்ணும் கீரையிலே நண்ணும் புல்லுருவி. * உண்ணுவார் இல்லை; உறங்குவார் இல்லை. ஒரு கட்டு வெற்றிலை தின்பார் இல்லை, சாந்து சந்தனம் பூசுவார் இல்லை. தலைக்குத் தப்பளம் போடுவார் இல்லை, வா மருமகளே வா * உண்ணுவாளாம், தின்னுவாளாம் சீதா தேவி; உடன்கட்டை ஏறுவாளாம் பெருமா தேவி. * உண்ணேன், உண்ணேன் என்றால் உடலைப் பார்த்தால் தெரியும். * உண்பது நாழி; உடுப்பது நான்கு முழம்; எண்பது கோடி நினைந்து எண்ணும் மனம். * உண்பன, தின்பன உறவுதான்; செத்தால் முழுக்குத்தாள். * உண்பது இருக்க ஒரு கருமம் செய்யேல். * உண்பார் பாக்கியம், சம்பா விளையும். * உண்பாரைப் பார்த்தாலும் உழுவாரைப் பார்த்தல் ஆகாது. * உண்பான் தின்பான் திவசப்பிராமணன்; குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி. * உண்பான் தின்பான் சேவைப் பெருமாள்; குத்துக்கு நிற்பான் வைராகி. * உண்பான் தின்பான் பைராகி; குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி. * உண்மை உயர்வு அளிக்கும். * உண்மைக்கு உத்தரம் இல்லை. * உண்மை சொல்லிக் கெட்டாரும் இல்லை; பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை. * உண்மை சொன்னால் உண்மை பலிக்கும்; நன்மை சொன்னால் நன்மை பலிக்கும். * உண்மை நன்மொழி திண்மை உறுத்தும். * உண்மைப் படு, உறுதிப்படு. * உண்மையைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன். * உண்மையைச் சொன்னால் உடம்பு எரிச்சல். * உணர்வு இல்லாக் கருவியும் உப்பு இல்லாச் சோறும் சரி. * உணவு விளைவிப்பது சட்டியில்; உறவு விளைவிப்பது பட்டியில். * உத்தமச் சேரிக் குயவனுக்கு ஒன்றால் ஒன்று குறைவு இல்லை, உத்தம சேவகன் பெற்ற தாய்க்கு அதிகம். * உத்தமம் ஆன பத்தினி ஊர்மேலே வருகிறாள்; வீட்டுக்கு ஒரு துடைப்பக்கட்டை, உஷார், உஷார். * உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை. * உத்தமனுக்கு ஓலை எதற்கு? * உத்தமனுக்கும் தப்பிலிக்கும் உடம்படிக்கை வேண்டாம். * உத்தரத்தில் ஒரு பிள்ளை; உறவுக்கெல்லாம் ஒரு தொல்லை.உத்தரத்தில் ஒரு பிள்ளை; உறவுக்கெல்லாம் ஒரு தொல்லை. * உத்தரத்து அளவு கேட்டால் அரிவாள் பிடி அளவு வரும். * உத்தரம் இல்லாமல் வீடு கட்டுகிற மாதிரி. * உத்தராயணம் என்று உறியைக் கட்டிக் கொண்டு சாகிறதா? * உத்தராயணம் என்று உறியைக் கட்டிக் கொண்டு சாகிறதா? * உத்தராயணம் என்று உறியைக் கட்டிக் கொண்டு சாகிறதா? * உத்தியோகத்துக்குத் தக்க ககம். * உத்தியோகம் குதிரைக் கொம்பாய் இருக்கிறது. * உத்தியோகம் தடபுடல்; சேவிக்கிற இவர் இன்னார் இனியார் என்று இல்லை; சம்பளம் கணக்கு வழக்கு இல்லை; குண்டையை விற்று நாலு வராகன் அனுப்பச் சொல்லு. * உத்தியோகம் போன ஊரில் மத்தியானம் இருக்கதே. * உதட்டிலே புண், மாடு கறக்க முடியவில்லை. * உதட்டிலே புன்னகையும் உள்ளத்திலே எரிச்சலும். * உதட்டிலே வாழைப்பழம் உள்ளே தள்ளுவார் உண்டோ? * உதட்டுக்குப் பால் மாறின தாசியும் மேட்டுக்குப் பால் மாறின கணக்கனும். * உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகா * உதட்டுத் துரும்பு ஊதப் போகாது. * உதட்டு வாழைப் பழத்தை உள்ளே தள்ள ஓர் ஆள் வேண்டும். * உதடு ஒட்டாமல் பேசுகிறான். * உதடு தேய்வதைவிட உள்ளங்கால் தேயலாம். * உதடு தேன் சொரிய, உள்ளே நெஞ்சு எரிய. * உதடு வெல்லம்; உள்ளம் கள்ளம். * உதயத்தில் வந்த மழையும் ஆஸ்தமிக்க வந்த மாப்பிள்ளையும் விடா. * உதர நிமித்தம் பகுக்குத வேஷம். * உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினது போல. *உதவாப் பழங்கலமே, ஓசை இல்லா வெண்கலமே. * உதவா முட்டி சுத்தரம், ஒதுகிறாளாம் மந்திரம் * உதவி செய்வாருக்கு இடையூறு ஏது? * உதறி முடிந்தால் ஒரு குடுமிக்குப் பூ இல்லையா? * உதறு காலி முண்டை உதறிப் போட்டாள். * உதறு காலி வந்தாள், உள்ளதும் கெடுத்தாள். * உதாரிக்குப் பொன் துரும்பு. * உதிக்கின்ற கதிரோன் முன்னே ஒளிக்குய் மின்மினியைப் போல். * உதி பெருத்தாலும் உத்தரத்துக்கு உதவாது. * உதிரத்துக்கு அல்லவோ உருக்கம் இருக்கும்? * உதிரம் உறவு அறியும். * உதைத்த கால் புழுக்கிறதற்கு முன்னே அடி வயிறு சீழ்க்கட்டுகிறது. * உதைத்த காலை முத்தம் இடுவது. * உதைத்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் உபயோகப்படா. * உதைப்பானுக்கு வெளுப்பான் ஜாதி வண்ணான். * உதைப்பானுக்கு வெளுப்பான் ஜாதி வண்ணான்; கொட்டி வெளுப்பான் கொங்கு வண்ணான். * உதைபட்ட நாய் ஊரெல்லாம் சுற்றினாற்போல. * உப்பளத்து மண்ணும் உழமண்ணும் செம்மண்ணும் காவேரி மண்ணும் கலந்து வழங்குகிறது. * உப்பின் அருமை உப்பு இல்லாவிட்டால் தெரியும். * உப்பு இட்ட பாண்டமும் உபாயம் மிகுந்த நெஞ்சமும் தட்டி உடையாமல் தாமே உடையும். * உப்பு இட்டவரை உள்ளளவும் நினை. * உப்பு இட்டுக் கெட்டது மாங்காய், உப்பு இடாமற் கெட்டது தேங்காய். * உப்பு இருக்கிறதா என்றால் பப்பு இருக்கிறது என்றார். * உப்பு இருந்தால் பருப்பு இராது; பருப்பு இருந்தால் உப்புஇராது. * உப்பு இருந்த பாண்டமும் உளவு அறிந்த நெஞ்சமும் தப்பாமல் தட்டுண்டு உடையும். * உப்பு இல்லாக் கீரை குப்பையில் இருந்தால் என்ன? உபயோகம் அற்ற அகமுடையான் பக்கத்தில் இருந்தால் என்ன? * உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே. * உப்பு இல்லாமல் கலக்கஞ்சி குடிப்பான். * உப்பு இல்லாவிட்டால் தெரியும் உப்பு அருமை; அப்பன் இல்லா விட்டால் தெரியும் அப்பன் அருமை. * உப்பு உந்தியா செட்டியாரே என்றால் பப்பு உந்தி என்கிறார். * உப்பு உள்ள பாண்டம் உடையும். * உப்பு எடுத்த கையாலே கர்ப்பூரமூம் எடுக்க வேண்டும். * உப்புக் கட்டினால் உலகம் கட்டும். * உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி போல. * உப்புக்கு ஆகுமா, புளிக்கு ஆகுமா? * உப்புக்கும் உதவாதவன் ஊருக்கு உதவமாட்டான். * உப்புக்கும் உதவாத விஷயம். * உப்புச் சப்பு இல்லாத காரியம். * உப்புச் சட்டியும் வறை ஓடும் தோற்றுவிட்டான். *உப்புச் சமைந்தால் உப்பின் அருமை தெரியும்; அப்பன் சமைந்தால் அப்பன் அருமை தெரியும். * உப்புத் தண்ணீரும் கப்பு மஞ்சளும் ஊறிப் போச்சுது. * உப்புத் தண்ணீருக்கு விலாமிச்சவேர் வேண்டுமா? * உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பான். * உப்பு நளபாகமாய் இருக்கிறது. * உப்பு நீர் மேகம் உண்டால் உலகில் பிரவாகம். * உப்புப் புளிக்கு ஆகாத சமாசாரம், உப்புப் பெறாத காரியத்துக்கு ஊரைக் கூட்டினானாம். * உப்புப் பெறாதவன் பருப்புப் பெற்றான்; உறித்தயிரைப் போய் எட்டி எட்டிப் பார்த்தானாம். * உப்புப் பொதிக்காரன் உருண்டு உருண்டு அழுதானாம், வெற்றிலைப் பொதிக்காரன் விழுந்து விழுந்து சிரித்தானாம். * உப்புப் போட்டுச் சோறு தின்றால் சுரணை இருக்கும். * உப்பும் இல்லை, சப்பும் இல்லை. * உப்பும் இல்லை, புளியும் இல்லை. * உப்பும் இல்லை, புளியும் இல்லை, உண்டைக் கட்டியே, உன்னை விட்டால் கதியும் இல்லை பட்டைச் சாதமே! * உப்பும் கர்ப்பூரமும் ஒன்றாய் வழங்குமா? * உப்பும் சோறும் உணர்த்தியாய் உண்ணவில்லையோ? * உப்பு மிஞ்சினால் உப்புச் சாறு; புளி மிஞ்சினால் புளிச் சாறு. * உப்பு மிஞ்சினால் தண்ணீர்; தண்ணீர் மிஞ்சினால் உப்பு. * உப்பு முதல் கர்ப்பூரம் வரையில். * உப்பு வண்டிக்காரன் உருண்டு அழுதான்; வெற்றிலை வண்டிக்காரனும் விழுந்து அழுதான் * உப்பு வாணிகன் அறிவானோ கர்ப்பூர விலை? * உப்பு விற்கச் சொன்னாளா? ஊர்ப் பெரிய தனம் செய்யச் சொன்னாளா? * உப்பு வைத்த மண்பாண்டம் போல. * உப்பைக் கடித்துக் கொண்டு உரலை இடித்தானாம். * உப்பைச் சிந்தினையோ, துப்பைச் சிந்தினையோ? * உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான். * உப்பைத் தொட்டு உப்பைத் தின்னாதே. * உப்பைத் தொட்டுக் கொண்டு உரலை விழுங்குவான் * உப்போடு ஒன்பதும் பருப்போடு பத்தும் வேண்டும். * உப்போடே முப்பத்திரண்டும் வேண்டும். * உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிருஷ்டம். * உபகாரம் செய்தவருக்கு அபகாரம் செய்யலாமா? * உபகாரம் செய்யாவிட்டாலும் அபகாரம் செய்யாதே. * உபகாரம் வீண் போகாது. * உபசரிப்பு இல்லாத உணவு கசப்பு ஆகும். * உபசரியாத மனையில் உண்ணாது இருப்பதே கோடி தனம். * உபசாரம் செய்தவருக்கு அபசாரம் பண்ணுகிறதா? * உபசார வார்த்தை காசு ஆகுமா? * உண்டால் ஒழியப் பசி தீருமா? * உபசார வார்த்தை வாய்க்குக் கேடு; தூற்றுப் பருக்கை வயிற்றுக்குக் கேடு. * உபநயனம் இல்லாமல் கல்யாணம் பண்ணினானாம். * உபாத்தியாயர் நின்று கொண்டு பெய்தால் சிஷ்யன் ஓடிக்கொண்டே பெய்வான். * உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா? * உம் என்றாளாம் காமாட்சி, ஒட்டிக் கொண்டாளாம் மீனாட்சி, * உமக்கு என்ன, வயசுக்கு நரைத்ததோ, மயிருக்கு நரைத்ததோ? * உமி குத்திக் கை நோகலாமோ? * உமி குத்திக் கை வருந்துமாறு * உமி சலித்து நொய் பொறுக்கினாற் போல. * உமியும் கரியும் இருக்கின்றன; உடைமை செய்யப் பொன் இல்லை. * உமியைக் குத்திக் கை சலித்தது போல. * உயர்ந்த அடுப்பு அமர்ந்த அடுப்பு * உயர்ந்த காற்றைக் காற்று மோதும். * உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்து ஆகுமா?0 * உயிர் அறியும் உறவு, * உயிர் இருக்க ஊனை வாங்குகிறது போல. *உயிர் இருக்கும் போது குரங்கு; இறந்த பிறகு அநுமார். * உயிர் இருந்தால் உப்பு மாறித் தின்னலாம். * உயிர் உதவிக்கு மிஞ்சின உதவி வேறு இல்லை. * உயிர் உள்ள மட்டும் தைரியம் விடலாமா? * உயிர் என்ன வெல்லமா? * உயிர் காப்பான் தோழன். * உயிர் தப்பியது தம்பிரான் புண்ணியம். * உயிர் போகும் போதும் தைரியம் விடலாகாது. * உயிருக்கு மிஞ்சின ஆக்கினையும் இல்லை; கோவணத்துக்கு மிஞ்சின தரித்திரமும் இல்லை. * உயிருக்கு வந்தது மயிரோடே போயிற்று, * உயிரும் உடலும் போல. * உயிரைக் கொடுத்த சாமிக்கு மயிரைக் கொடுக்க வேணும். * உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம். * உயிரைப் பகைத்தேனோ! ஒரு நொடியில் கெட்டேனோ? * உயிரோடு இருக்கும் போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை. * ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய் விட்டது போல. * உயிரோடு ஒரு முத்தம் கொடுக்கவில்லை; செத்த பிறகு கட்டிக் கட்டி முத்தமிட்டாளாம். * உயிரோடு ஒரு முத்தம் தராதவள் செத்தால் உடன் கட்டை ஏறுவாளா? * உயிரோடு திரும்பிப் பாராதவள் செத்தால் முத்தம் கொடுப்பாளா? * உரத்த குடிக்கு அனர்த்தம் இல்லை. * உரத்தைத் தள்ளுமாம் உழவு. * உம் உதவுவது ஊரார் உதவார். * உரம் ஏற்றி உழவு செய். * உரம் செய்கிறது உறவுடையான் செய்யமாட்டான். * உரல் பஞ்சம் அறியுமா? * உரல் போய் மத்தளத்தோடு முறையிட்டது போல. * உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா? * உரலிலே தலையை விட்டுக்கொண்டு உலக்கைக்குப் பயப்படலாமா? * உரலிலே தலை விட்டால் உலக்கைக்குத் தப்பலாமா? * உரலிலே தலை விட்டால் உலக்கைக்குத் தப்பலாமா? * உரலிலே துணி கட்டியிருந்தாலும் உரிந்து பார்க்கவேண்டும் என்கிறான். * உரலுக்கு ஒரு பக்கம், இடி; மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி. * உரலுக்குப் பஞ்சம் உண்டா? * உரலுக்குள் தலையை விட்டு உலக்கைக்கு அஞ்சலாமா? * உரலும் கொடுத்துக் குரலும் போக வேண்டும். * உரித்த பழம் என்ன விலை? உரிக்காத பழம் என்ன விலை என்றானாம் ஒரு சோம்பேறி. * உரித்த வாழைப் பழத்தை ஒன்பது வெட்டு வெட்டும். * உரிய உரிய மழை பெய்து எரிய எரிய வெயில் காய்கிறது. * உரியிலே ஒக்குமாம் உருளைக் கிழங்கு; கண்டு பிடிக்குமாம் கருணைக் கிழங்கு. * உரியை இரட்டித்தால் உழக்கு. * உரு ஏறத் திரு ஏறும். * உருக்கம் உருக்கமாய் ஊட்டி உள்ளே போச்சுது. * உருக்கம் உள்ள சிற்றாத்தை, ஒதுக்கில் வாடி கட்டி அழலாம். * உருக்கின நெய் வார்த்தாலும் கண்ட நியாயத்தான் சொல்லுவேன். * உருக்கின நெய் வார்த்தாலும் கண்ணாரக் கண்டதைத் சொல்லுவான். * உருசி கண்ட பூனை உறியை உறியைத் தாவுமாம்; வரிசை கண்ட மாப்பிள்ளை வந்து வந்து நிற்பானாம். * உருட்சிக்கு நீட்சி, புளிப்புக்கு அவள் அப்பன். * உருட்டி விளையாடுகிற தஞ்சாவூர்ப் பொம்மை. * உருட்டுப் புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும். * உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை. * உருட்டும் புரட்டும் சிரட்டையும் கையும். * உருட்டும் புரட்டும் மிரட்டும் சொல்லும். * உருண்டு உருண்டு புரண்டாலும் உடம்பில் ஒட்டுவதுதான் ஒட்டும். * உருண்டு புரண்டாலும் ஒட்டுகிற மண்தான் ஒட்டும். * உருப்படத் திருப்படும். * உருப்படாக் கோயிலில் உண்டைக் கட்டி வாங்கி விளக்கு இல்லாக் கோயிலில் விண்டு விண்டு தின்றானாம். * உருவத்தினால் அல்ல; பேச்சினால் கிளி நன்கு மதிக்கப்படும். * உருவத்தை அல்ல; குணத்தைப் பார். * உருவிக் குளிப்பாட்டி உள்ளாடை கட்டாமல். * உருவிய வாளை உறையில் இடாத வீரன். * உருவின கத்தி உறையில் அடங்கும். * உருவு திருவூட்டும். * உருளுகிற கால் பாசி சேர்க்காது. * உரைத்த கட்டை வாசனை பெறும். * உரையார் இழித்தக்க காணிற் கனா * உல்லாச நடை மெலுக்குக் கேடு; மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு. * உலக்கைக்குப் பூண் கட்டினது போல. * உலக்கைக் கொழுந்தும் குந்தாணி வேரும் * உலக்கை சிறுத்துக் கழுக்காணி ஆயிற்று. * உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆனது போல. * உலக்கைப் பூசைக்கு அசையாதது திருப்பாட்டுக்கு அசையுமா? * உலக்கை பெருத்து உத்தரம் ஆயிற்று. * உலக்கையாலே காது குத்தி உரலாலே தக்கை போட்டது போல * உலகத்துக்கு ஞானி பேய்; ஞானிக்கு உலகம் பேய் * உலகம் அறிந்த தாசிக்கு வெட்கம் ஏது? சிக்கு ஏது? * உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே. * உலகம் முழுவதும் உடையான் அருள் * உலகமே ஒரு நாடக சாலை. * உலகிலே பெண் என்றால் பேயும் இரங்கும். * உலகின்கண் இல்லததற்கு இல்லை பெயர். * உலர்ந்த தலைக் கோலமும் ஓர்ப்படி பெற்ற பிள்ளையும் ஒட்டா. * உலுத்தன் விருந்திற்கு ஒப்பானது ஒன்றும் இல்லை. * உலுத்தனுக்கு இரட்டைச் செலவு. * உலையில் ஈ மொய்த்ததுபோல * உலை வாய் மெழுகு உருகுவது போல. * உலை வாயை மூடினாலும் மூடலாம்; ஊர் வாயை மூட முடியாது. * உலை வைத்த சந்தியிலே சாறு காய்ச்சுகிறது. * உலை வைத்த சந்தியிலே சாறு காய்ச்சுகிறது. * உவர் நிலத்தில் இட்ட விதையும் சமரிடத்தில் சென்ற சேனையும் இரண்டாம் பட்சம். * உழக்கில் கிழக்கு மேற்கு. * உழக்கிலே கிழக்கு மேற்கு எது? * உழக்கிலே வழக்கு. * உழக்கு அரிசி ஆனாலும் ஓயாது மெல்லுவாள். * உழக்கு உள்ளூருக்கு; பதக்குப் பரதேசிக்கு. * உழக்கு உற்றாருக்கு; பதக்குப் பரதேசிக்கு. * உழக்கு உற்றாருக்கும் பதக்குப் பரதேசிக்கும் ஆனால் உழுதவனுக்கு என்ன? * உழக்கு உறிஞ்சப் போய்ப் பதக்குப் பன்றி கொண்டு போச்சுதாம். * உழக்கு எண்ணெய் வாங்கி உழக்கு எண்ணெய் விற்றாலும் மினுக்கு எண்ணெய் மிச்சம். * உழக்கு நெல்லுக்கு உழைக்கப் போய்ப் பதக்கு நெல்லைப் பன்றி தின்றதாம். * உழக்கு மிளகு கொடுப்பானேன்? ஒளிந்திருந்து இளநீர் குடிப்பானேன்? * உழக்கு மிளகு கொடுப்பானேன்? ஒளிந்திருந்து மிளகு சாறு குடிப்பானேன்? * உழக்கு விற்றாலும் உரலுக்குப் பஞ்சமா? * உழக் குளிர் அடித்தால் நாற்றுப் பிடுங்கப்படாதா? * உழவன் மேட்டை உழுதால் அரசன் நாட்டை ஆளலாம். * உழவனுக்கு உழவுக் கம்புதான் மிச்சம். * உழவால் பயிர் ஆகிறது எருவாலும் ஆகாது. * உழவில் பகை ஆனால் எருவிலும் தீராது. * உழவிலே இல்லாவிட்டால் மழையிலே. * உழவிலே பகை எருவிலும் தீராது. * உழவினும் மிகுந்த ஊதியம் இல்லை. * உழவுக்குப் பகை எருவில் தீருமோ? * உழவின் பகை எருவிலும் தீராது. * உழவின்றி ஊதியம் இல்லை, உடையவன் இருந்தக்கால். * உழவு அற உழுதவன் விளைவு அற விளையும் * உழவு ஆள் மேற்கே பார்ப்பான்; கூத்தாடி கிழக்கே பார்ப்பான். * உழவு உழுது காய்ந்தால் வித்து இரட்டி காணும். * உழவு ஏற உழுதால் நெல் ஏற விளையும். * உழவு ஒழிந்த மாடு பட்டிப் புறத்திலே. * உழவுக்கு ஏற்ற கொழு. * உழவுக்கு ஒரு சுற்றும் வராது; ஊணுக்குப் பம்பரம். * உழவுக்குப் பிணைத்து விடுகிற மாடும் கூட்டுக்குப் பிணைத்து விடுகிற ஆளும் உதவா. * உழவுக்கும் அக்கினி ஹோத்திரத்துக்கும் வெகு தூரம். * உழவுக்கு மிஞ்சிய ஊதியம் இல்லை. * உழவு காலத்தில் ஊரை விட்டே போய்விட்டால், அறுப்புக் காலத்தில் ஆள் தேட வேண்டியதே இல்லை. * உழவு குளிர அடித்தால் நாற்றுப் பிடுங்கப் படாதா? * உழவு நட்பு இல்லா நிலமும் மிளகு நட்பு இல்லாக் கறியும் வழ வழ. * உழவும் தரிசும் ஓரிடத்திலே; ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே. * உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலை போகாதா? * உழவு மாடு ஊர் வெளியே போனாலும் அங்கேயும் ஏரில் பூட்டி அடிப்பார்கள். * உழுகிற எருமையும் உள்ளூர் மருமகனும் ஒன்று. * உழுகிற காலத்தில் ஊர் சுற்றிவிட்டு அறுக்கிற காலத்தில் அரிவான் எடுத்துக் கொண்டு போனானாம். * உழுகிற குண்டை ஆனால் உள்ளூரில் விலை ஆகாதா? * உழுகிறது ஓர் ஏர்; முன் ஏரை மறி என்றானாம். * உழுகிறதை விட்டு உழவன் சாமி ஆடினானாம். * உழுகிற நாளில் ஊருக்குப் போய்விட்டு அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தாற்போல். * உழுகிற நாளில் ஊரை விட்டுப் போனால் அறுக்கிற நாளில் ஆள் தேட வேண்டாம். * உழுகிற மாட்டுக்கும் ஒரு படி கொள்ளு; ஊர் சுற்றுகிற மாட்டுக்கும் ஒரு படி கொள்ளா? * உழுகிற மாட்டை எருது நக்கினது போல. * உழுகிற மாட்டைக் கொம்பிலே அடித்தாற் போல. * உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தாற் போல. உழுகிற மாடு ஆனால் உள்ளூரில் விலை போகாதா? * உழுகிற மாடு ஆனால் உள்ளூரில் விலை போகாதா? * உழுகிற மாடு ஊருக்குப் போனால் ஏரும் கலப்பையும் எதிர்த்தாற் போல் வரும். * உழுகிற மாடு பரதேசம் போனால் அங்கு ஒருவன் கட்டி உழுவான்; இங்கு ஒருவன் கட்டி உழுவான். * உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும். * உழுகிறவன் கணக்குப் பார்த்தால் உழவுக் கோலும் மிஞ்சாது * உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது. * உழுகிறவன்தான் வைக்கோல் போட வேண்டும். * உழுகிறவனுக்குத்தான் தெரியும், உடம்பு வருத்தம். * உழுத எருது ஆனாலும் ஒரு முடி நாற்றைத் தின்ன ஒட்டார். * உழுத காலாலே உழப்பி விடு. * உழுத சேறு காய்ந்தால் உழக்கு நெல் காணாது. * உழுத மாடு ஊருக்குப் போனால் அங்கும் ஒருசால் அடித்துக் கொண்டானாம். * உழுத மாடு பரதேசம் போச்சாம்; அங்கும் ஒரு சால் கட்டி உழுதானாம். * உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது. * உழுதவன் காட்டைப் பார்; மேய்த்தவன் மாட்டைப் பார். * உழுதவன் கெட்டது இல்லை. * உழுது இல்லாது உலகில் ஒன்றும் செல்லாது. * உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை ஒரு காலும். * உழுது உப்பு விதைத்து விடுவேன். * உழுது உலர்ந்தது பழுது ஆகாது. * உழுது உழுது காய்ந்தால் வித்து இரட்டி காணும். * உழுது பிழைக்கிறவன் ஒரு கோடி; ஏய்த்துப் பிழைக்கிறவன் ஏழு கோடி. * உழுந்து அரைத்த அம்மி போல. * உழுபவன் ஊர்க்கணக்குப் பண்ணுவானோ? * உழுபவன் ஏழை ஆனால் எருதும் ஏழைமை முறை கொண்டாடும். * உழுபவன் கணக்கு எடுத்தால் உழவுக் கோலும் மிஞ்சாது. * உழுவார் உலகத்துக்கு ஆணி. * உழுவார் கூலிக்கு அழுவார். * உழுவாரைப் பார்த்தாலும் பார்க்கலாம்; உண்பாரைப் பார்க்க மனம் தாங்காது. * உழுவானுக்கு ஏற்ற கொழு; ஊராருக்கு ஏற்ற தொழு. * உழுவோர் உழைப்பால்தான் உலகோர் பிழைப்பார். * உழைக்காத உடம்பு உரம் கொள்ளாது. * உழைக்கிற கழுதை எந்நாளைக்கும் உழைத்தே தீர வேண்டும். * உழைத்த அளவுக்கு ஊதியம். * உழைப்பவன் ஒரு கோடி; உண்பவன் ஒன்பது கோடி. * உழைப்பாளி சுகம் அடைந்தால் வரப்பு ஏறிப் பேளமாட்டான். * உழைப்புக்கு ஊர்க்குருவி; இழைப்புக்கு வான் குருவி. * உழைப்புக்குத் தகுந்த ஊதியம். * உள் ஆள் இல்லாமல் கோட்டை அழியாது * உள் ஆளும் கள்ளாளும் கூட்டமா? * உள் இருந்தாருக்குத் தெரியும் உள் வருத்தம். * உள் இருத்து கள்வன் உளவறிந்து செய்வான். * உள் எல்லாம் புண்ணும் உடம்பெல்லாம் புண்ணுமாய் இருக்கிறான். * உள் சுவர் இருக்கப் புறச்சுவர் பூசுவார் போல. * உள் சுவர் இருக்கப் புறச்சுவர் மண் இட்டு, பிள்ளை பெற்றவள் இருக்கப் பீத்துணியை மோந்து பார்த்தாளாம். * உள் சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று. * உள் நாக்கும் தொண்டையும் அதிர அடித்தது போல. * உள் வீட்டிலே கீரையை வைத்துக்கொண்டு அயல் வீட்டுக்குப் போவானேன்? * உள் வீட்டுக் கடனும் உள்ளங்கைச் சிரங்கும் கெட்டவை. * உள்ள அன்றுக்கு ஓணம்; இல்லாத அன்றைக்கு ஏகாதசி. * உள்ளக் கருத்து வள்ளலுக்குத் தெரியும். * உள்ளங்கால் வெள்ளெலும்பு தேய உழைத்தான். * உள்ளங் காலில் முள்ளுத் தைக்காமல் இருக்க வேண்டும். * உள்ளங்கை நெல்லிக் கனி போல. * உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கையை நக்கினது போல. * உள்ளங் கைப் புண்ணுக்குக் கண்ணாடி ஏன்? * உள்ளங்கையில் அஞ்சு கொண்டை முடிக்கிறேன். * உள்ளங்கையில் இட்டவர்களை உள்ளளவும் நினை. * உள்ளங்கையில் இட்டுப் புறங்கையை நக்குவதா? * உள்ளங்கையில் உப்பிட்டாரை உள்ளளவும் நினை. * உள்ளங்கையில் தேனை வைத்துப் புறங்கையை நக்கினாற் போல. * உள்ளங்கையில் போட்டுப் புறங்கையை நக்கலாமா? * உள்ளங்கையில் ரோமம் முளைத்ததாயின் அறிவிலான் அடங்குவான். * உள்ளங்கையில் வைகுண்டம் காட்டுகிறேன். * உள்ளத்தில் ஒன்றும் குறையாது, கள்ளம் இல்லா மனத்தார்க்கு. * உள்ளத்தில் கள்ளமும், உதட்டில் வெல்லமும். * உள்ளத்தில் நஞ்சும், உதட்டில் வெல்லமும். * உள்ளத்துக்கு ஒன்றும் இல்லை; குப்பத்துக்கு ஆள் தள்ளு என்றானாம். * உள்ளதுக்குக் காலம் இல்லை. * உள்ளது குற்றம் ஒரு கோடி ஆனாலும் பிள்ளைக்கும் தாய்க்கும் பிணக்கு உண்டோ? * உள்ளது குறைவதும் நிறைவதும் ஊழ்வினை * உள்ளது சொல்ல ஊரும் அல்ல; நல்லது சொல்ல நாடும் அல்ல. * உள்ளது போகாது; இல்லது வராது. * உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணு! * உள்ளதைச் சொல்லி ஊரை விட்டு ஓடு. * உள்ள தெய்வங்களை எல்லாம் ஒருமிக்க வருந்தினாலும் பிள்ளை கொடுக்கிற தெய்வம் புருஷன். * உள்ளதை எல்லாம் விற்று உள்ளான் மீனைத் தின்று பார். * உள்ளதைக் கொண்டு இல்லதைப் பாராட்டலாம். * உள்ளதைக் கொண்டுதான் ஊராள வேண்டும். * உள்ளதைச் சொல்லு; உலகத்தை வெல்லு. * உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பகை. * உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன். * உள்ளதைச் சொன்னால் உடம்பெரிச்சல். * உள்ளதைச் சொன்னால் உடம்பெல்லாம் புண் ஆகும். * உள்ளதைச் சொன்னால் உறவு அற்றுப் போகும். * உள்ளதைச் சொன்னால் எல்லோருக்கும் பகை. * உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணிக்கு நோப்பாளமாம். * உள்ளதையும் கெடுத்தாள், உதறு காலி வந்து. * உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன். * உள்ளதை விற்று நல்லதைக் கொள்ளு. *உள்ள பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறான். * உள்ளம் அறியாத கள்ளம் இல்லை. * உள்ளம் எல்லாம் புண்ணும் உடம்பெல்லாம் கொப்புளமும். * உள்ளம் களிக்கக் கள் உண்டு கலங்காது. * உள்ளம் தீ எரிய உதடு தேன் சொரிய. * உள்ளம் படர்ந்ததே கூறும் முகம். * உள்ள மயிருக்கு எண்ணெய் இல்லை; சுற்றுக் குடுமிக்கு எண்ணெய் ஏது? * உள்ள மாற்றைக் காட்டும், உரை கல்லும் மெழுகுண்டையும். * உள்ளவன் பிள்ளை உப்போடு உண்ணும்; இல்லாதவன் பிள்ளை சர்க்கரையோடு உண்ணும். * உள்ளவனிடம் கள்ளன் போனாற் போல. * உள்ளனும் கள்ளனும் கூடினால் விடிகிற மட்டும் திருடலாம். * உள்ளி இட உள்ளி இட உள்ளே போச்சுது. * உள்ளிக்கு நாற்றம் உடந்தை. * உள்ளிப் பூண்டுக்கு எத்தனை வாசனை கட்டினாலும் துர்க்கந்தத்தையே வீசும். * உள்ளிய தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை பைய நுழைந்து விடும். * உள்ளுக்குள்ளே கொட்டின தேளே, ஒரு மந்திரம் செய்கிறேன் கேளே. * உள்ளூர் ஆண்டி காத்தாண்டி; நீ பீத்தாண்டி. * உள்ளூர்க் குளம் தீர்த்தக் குளம் ஆகாது. * உள்ளூர்க் குறுணியும் சரி; அசலூர்ப் பதக்கும் சரி. * உள்ளூர்ச் சம்பந்தம் உள்ளங்கைச் சிரங்கு போல. * உள்ளூர்ச் சம்பந்தியும் உள்ளங்கைப் புண்ணும் ஒரே மாதிரி. * உள்ளூர்ப் பகையும் உலகத்துக்கு உறவும். * உள்ளூர்ப் பிறந்தகமோ? உள்ளங்கைப் புண்ணோ? * உள்ளூர்ப் புலி, வெளியூர் எலி. * உள்ளூர்ப் பூனை, அசலூர் ஆனை. * உள்ளூர்ப் பெண்ணும் அசலூர் மண்ணும் ஆகா. * உள்ளூர் மருமகனும் உழுகிற கடாவும் ஒன்று. * உள்ளூர் மேளம். * உள்ளூரான் தண்ணீர்க்கு அஞ்சான்; அயலூரான் பேய்க்கு அஞ்சான். * உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன் அயலூரில் ஆனை பிடிக்கப் போகிறானாம். * உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன் உடையார் பாளையம் சென்று உடும்பு பிடிப்பானா? * உள்ளூரில் பூனை பிடிக்காதவன் அசலூரில் ஆனை பிடிப்பானா? * உள்ளூரில் விலைப்படாத மாடா வெளியூரில் விலைப்படும்? * உள்ளூருக்கு ஆனை, அயலூருக்குப் பூனை. * உள்ளூறக் கொட்டின தேளே, ஒரு மந்திரம் சொல்கிறேன் கேளே. * உள்ளே இருக்கிற பூபம்மா, பிள்ளை வரம் கேளம்மா. * உள்ளே இருக்கும் சாமி உண்டைக்கட்டி, உண்டைக்கட்டி என்கிறது; வெளியிலே இருக்கும் சாமி தத்தியோன்னம். தத்தியோன்னம் என்கிறதாம். * உன் தாலி அறுந்து தண்ணீர்ப் பானையில் விழ. * உள்ளே பகையும் உதட்டிலே உறவும் கள்ளம் இல்லா மனசுக்கு ஏன்? * உள்ளே பகையும் உதட்டிலே உறவுமா? * உள்ளே பார்த்தால் ஓக்காளம்; வெளியே பார்த்தால் மேற்பூச்சு. * உள்ளே போனால் பிணம்; மேலே வந்தால் பணம். * உள்ளே வயிறு எரிய, உதடு பழம் சொரிய. * உளவன் இல்லாமல் ஊர் அழியுமா? * உளவு இல்லாமல் களவு இல்லை. * உளவு போல இருந்து குளவி போலக் கொட்டுகிறதா? * உளறிக் கொட்டிக் கிளறி மூடாதே. * உளி எத்தனை? மலை எத்தனை? * உளுவைக் குஞ்சுக்கு நீஞ்சக்கற்றுக் கொடுக்க வேண்டுமா? * உளுவைக் குட்டிக்கு ராய பாரமா? * உளை வழியும் அடைமழையும் பொதி எருதும் ஒருவனுமாய் அலைகிறான். * உற்சாகம் செய்தால் மச்சைத் தாண்டுவான். * உற்ற கணவனும் ஒரு நெல்லும் உண்டானால் சித்திரம் போலே குடிவாழ்க்கை செய்யலாம். * உற்ற சிநேகிதன் உயிருக்கு அமிர்தம். * உற்றது சொல்ல ஊரும் அல்ல; நல்லது சொல்ல நாடும் அல்ல. * உற்றது சொன்னால் அற்றது பொருந்தும். * உற்ற பேர்களைக் கெடுக்கிறதா? * உற்றார் உதவுவரோ? அன்னியர் உதவுவரோ? * உற்றார்க்கு ஒரு பிள்ளை கொடான்; நமனுக்கு நாலு பிள்ளை கொடுப்பான். * உற்றார் தின்றால் புற்றாய் விளையும்; ஊரார் தின்றால் போராய் விளையும். * உற்றாருக்கு ஒரு மாசம்; பகைத்தாருக்குப் பத்து நாள். * உற்றாருக்கு ஒன்று கொடான்; பகைவருக்கு நாலும் கொடுப்பான். * உற்றுப் பார்க்கில் சுற்றம் இல்லை. * உற்றுப் பார்த்த பார்வையிலே ஒன்பது பேர் பட்டுப் போவார். * உறக்கத்தில் காலைப் பிடிப்பது போல. * உறக்கம் சண்டாளம் * உறங்காப் புளி, ஊறாக் கிணறு, காயா வருளம், தோரா வழக்குத் திருக்கண்ணங்குடி. * உறங்கின நரிக்கு உணவு கிட்டாது. உறவிலே நஞ்சு கலக்கிறதா? * உறவிலே போகிறதைவிட ஒரு கட்டு விறகிலே போகலாம். * உறவு உண்ணாமல் கெட்டது; உடை உடுக்காமல் கெட்டது. * உறவு உறவுதான்; மடியிலே கைவைக்காதே. * உறவுக்கு ஒன்பது படி; ஊருக்குப் பத்துப் படி. * உறவுக்கு ஒன்பது படி; பணத்துக்குப் பத்துப் படி. * உறவுக்கும் பகைக்கும் பொருளே காரணம். * உறவுதான்; பயிரிலே கை வாயாதே. * உறவுதானே உணர்ந்து கொள்ளும். * உறவு போகாமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது. * உறவுபோல் இருந்து குளவிபோல் கொட்டுகிறதா? * உறவும் பகையும் ஒரு நிலை இல்லை. * உறவும் பாசமும் உதட்டோடே. * உறவு முறையான் மூத்திரத்தை உமிழவும் முடியாது; விழுங்கவும் முடியாது. * உறவு முறையான் வீட்டில் உண்ட வரைக்கும் மிச்சம். * உன் தாலி அறுக்கச்சே ஒரு கட்டுத் தாலி ஒருமிக்க அறுக்க வைக்கிறேன். * உறவைப் பகைத்தாலும் ஊரைப் பகைக்காதே. * உறவைப்போல் இருந்து குளவியைப்போல் கொட்டுவர். * உறள் பால தீண்டா விடுவது அரிது. * உறி அற மூளி நாய்க்கு வேட்டை. * உறிப் பணம் போய்த் தெருச் சண்டை இழுக்கிறது. * உறியிலே கட்டித் தூக்கினாலும் அழுகற் பூசணிக்காய் அழுகலே * உறியிலே தயிர் இருக்க ஊர் எங்கும் அலைவானேன்? * உறியிலே தயிர் இருந்தால் உறங்குமோ பூனைக்குட்டி? * உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அழுவானேன். * உறுத்து உள்ளவன். <small>(மதுரை வட்டாரம்-சொந்தம் உள்ளவன்)</small> * உறுதி எதிலும் பெரிது. * உறுதியான் காரியம் ஒரு போதும் கெடாது. * உறு தீங்குக்கு உதவாதவன் உற்றவனா? * உறை மோருக்கு இடம் இல்லாத வீட்டில் விலை மோருக்குப் போனது போல. *உன் அப்பன்மேல் ஆணை; என்மேலே ஆசையாய் இருக்க வேண்டும். * உன் இழவு எடுக்க. * உன் உத்தமித் தங்கை ஊர் மேயப் போனதால் என் பத்தினிப் பானை படபட என்கிறது. * உன் உபசாரம் என் பிராணனுக்கு வந்தது. * உன் உயிரினும் என் உயிர் கருப்பட்டியா? * உன் எண்ணத்தில் இடி விழ. * உன் எண்ணத்தில் எமன் புகுத. * உன் காரியம் முப்பத்திரண்டிலே . * உன் காலை நீயே கும்பிட்டுக் கொள்ளாதே. * உன் குதிரை குருடு; ஆனாலும் கொள்ளுத் தின்பது கொள்ளை. * உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம். * உன் கொண்டை குலைய. * உன் சமர்த்திலே குண்டு பாயாது. * உன் சொல்லிலே உப்பும் இல்லை; புளியும் இல்லை. * உன் தலையில் எழுதி மயிரால் மறைத்து விட்டான் ஆண்டவன். * தொடையைப் பாம்பு பிடுங்க. * உன் நெஞ்சில் தட்டிப் பார். * உன் பாடு கொள்ளைதானே * உன் பாடு கொள்ளைதானே? * உன் பாடு யோகம். * உன் பிள்ளையைத் தின்று தண்ணீர் குடிக்க. * உன் பெண்சாதி தாலி பிணத்தின்மேல் விழ. * உன் பொங்கு மங்க. * உன்மத்தம் பிடித்தது போல. * உன் மதம் மண்ணாய்ப் போக. * உன் மஹலூத்தைக் கேட்டுக் காது புளிச்சாறு மாதிரி புளித்துப் போயிற்று. * உன் முகத்தது தஞ்சாவூர் மஞ்சளா? * உன் முறுக்குத் திறுக்கு எல்லாம் என் உடுப்புக்குன்ளே. * உன் வண்டவாளம் எல்லாம் எனக்குத் தெரியும். * உன் வாயில் நாகராஜா பிரசாதத்தைத்தான் போடவேணும். * உன் வாயிலே சீதேவி. * உன் வாயிலே மண் விழ. * உன் வீடு இருக்கிற அழகுக்கா விழித்துக் கொண்டிருக்கிறாய்? * உன்ன ஓராயிரம்; பன்னப் பதினாயிரம் * உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட்டாய். * உன்னுடைய கர்வத்தால் ஓதுகிறாய் சூதும் வாதும். * உன்னை அடித்துப் போட்டால் பத்துக் காணிக்கு எரு ஆகும். * உன்னை அள்ளத் துள்ளிக்கொண்டு போக. * உன்னை ஒண்டிப் பாடை கட்ட. * உன்னைக் கடலிலே கை கழுவினேன். * உன்னைக் கேடு அடிக்க. * உன்னைக் கொடுத்து என்னை மறந்தேன். * உன்னைக் கொடுப்பேனோ ஒரு காசு; உன்னோடே போச்சுது புரட்டாசி. * உன்னைக் கொடுப்பேனோ சென்னைக் கிளி? நீ சுமை சுமந்தல்லவோ கூனிப்போனாய்? * உன்னை நீ அறிவாயாகில் உனக்கொரு கேடும் இல்லை * உன்னை நீ அறிவாயாகில் உனக்கொரு கேடும் இல்லை. * உன்னைப் பாடையிலே வைத்துப் பயணம் இட ,உன்னைப் பிடி, என்னைப் பிடி, உலகாத்தாள் தலையைப் பிடி, உன்னைப் பிடி, என்னைப் பிடி என்று ஆய் விட்டது. * உன்னைப் பிழிந்தெடுத்துப் போடுவேன். * உன்னையும் என்னையும் ஆட்டுகிறது மன்னி கழுத்துச் சிறு தாலி. * உன்னை வஞ்சித்தவனை ஒருபோதும் நம்பாதே * உன்னை வாரிக் கொண்டு போக. * உன்னை வெட்டிப் பலி போட. * உன்னோடே பிறந்ததில் மண்ணோடே பிறக்கலாம். * உனக்கு ஆச்சு, எனக்கு ஆச்சு; பார்க்கிறேன் ஒரு கை. * உனக்கு இருக்கிற கஞ்சியை எனக்கு வார்; பசியாமல் இருக்க வரந் தருகிறேன் என்ற கதை. * உனக்கு உட்பட்டும் பின்பாட்டுப் பாடுகிற மனிதர்கள் போல. * உனக்கு என்ன, கொம்பு முளைத்திருக்கிறதோ? * உனக்கு ஒட்டுத் திண்ணைபோல் இருக்கிறான். * உனக்குக் கொடுப்பேனோ ஒரு காசு; நேற்றோடு போச்சு புரட்டாசு. * உனக்கு நான் அபயம்; எனக்கு நீ அபயம். * உனக்குப் போடும் தண்டத்தை நாய்க்குப் போட்டாலும் வாலையாவது ஆட்டும். * உனக்கும் பெப்பே; உங்கள் அப்பனுக்கும் பெப்பே. * உனக்கு மழை பெய்யும், எனக்கு நீர் தா என்றானாம். * உனக்கு முதுகு வளைகிறதா? == ஊ == * ஊ என்றாளாம் காமாட்சி; ஒட்டிக் கொண்டளாம் மீனாட்சி. * ஊக்கமது கைவிடேல். * ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு. * ஊசல் ஆடித் தன் நிலையில் நிற்கும். * ஊசி ஒரு முழத் துணியையாவது கொடுக்கும்; உற்றார் என்ன கொடுப்பார். * ஊசி குத்திக் கொண்டவன் அழாமல் இருக்கப் பார்த்தவன் அழுவானேன்? * ஊசி கொண்டு கடலாழம் பார்ப்பது போல, * ஊசி கொள்ளப் போய்த் துலாக் கணக்குப் பார்க்கிறதா? * ஊசி கோக்கிறதற்கு ஊரில் உழவாரம் ஏன்? * ஊசி நூலால் இறுகத் தைத்தாலும் தேங்காய்க்கு மஞ்சள் இல்லை என்றாளாம். * ஊசி பொன்னானால் என்ன விலை பெறும். * ஊசி போகிறது கணக்குப் பார்ப்பான்; பூசணிக்காய் போகிறது தெரியாது. * ஊசி போல மிடறும் தாழி போல வயிறும். * ஊசி மலராமல் சரடு ஏறுமா? * ஊசி மலிவு என்று சீமைக்குப் போகலாமா? * ஊசி முனையிலே நிற்கிறான். * ஊசி முனையில் தவம் செய்தாலும் உள்ளதுதான் கிடைக்கும். * ஊசி மூஞ்சியை ஊதை என்ன செய்யும். * ஊசிக் கணக்குப் பார்க்கிறான். * ஊசிக் கண்ணிலே ஆகாயம் பார்த்தது போல. * ஊசிக் குத்தின்மேல் உரல் விழுந்த கதை. * ஊசிக்குக் கள்ளன் உடனே வருவான். * ஊசித் தொண்டையும் தாழி வயிறும். * ஊசியின் காதில் ஒட்டகம் நுழையுமா? * ஊசியும் அல்லவோ ஒரு சரட்டைக் கோத்துக் கொண்டிருக்கிறது. * ஊசியும் கருமானும் உருண்டு ஓடிப் போனான். * ஊசியும் சரடும் போல. * ஊசியை ஊசிக் காந்தம் இழுக்கும்; உத்தமனைச் சிநேகம் இழுக்கும். * ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும். * ஊடைக்குப் பாவு இருந்தால் அல்லவோ ஓடி ஓடி நெய்வான்? * ஊணன் கருமம் இழந்தான்; உலுத்தன் பெயர் இழந்தான். * ஊணினால் உறவு; பூணினால் அழகு. * ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான். * ஊணுக்கு முந்து, படைக்குப் பிந்து. * ஊணுக்கும் உடைக்கும் என்னைக் கூப்பிடு; ஊர்க் கணக்குக்குத் தம்பியைக் கூப்பிடு. * ஊணும் இல்லை; உறக்கமும் இல்லை. * ஊணும் உறக்கமும் ஒத்தார்க்கு ஒத்த படி. * ஊண் அருந்தக் கருமம் இழப்பர். * ஊண் அற உயிர் அறும். * ஊண் அற்ற போதே உடல் அற்றுப் போம். * ஊண் அற்ற போதே உளம் அற்றது போல. * ஊண் அற்றபோது உடலற்றது. * ஊண் ஒடுங்க வீண் ஒடுங்கும். * ஊண் பாக்கு ஒழிய வீண் பாக்கு ஆகாது. * ஊத அறிந்தவன் வாதி, உப்பு அறிந்தவன் யோகி. * ஊதி ஊதி உள்ளதெல்லாம் பாழ். * ஊதின சங்கு ஊதினால் விடிகிற போது விடியட்டும். * ஊதினால் போம்; உறிஞ்சினால் வரும். * ஊத்தை திரண்டு கழுக்காணி ஆச்சுது. * ஊத்தை போகக் குளித்தவனும் இல்லை; பசி போகத் தின்றவனும் இல்லை. * ஊத்தை போனாலும் உள்வினை போகாது. * ஊத்தை வாயன் தேட நாற்ற வாயன் தின்ன. * ஊத்தை வாய்க்கும் உமிழ் நீருக்கும் கேடு. * ஊத்தைப் பல்லுக்கு விளாங்காய் சேர்ந்தது போல. * ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும். * ஊமை ஊரைக் கெடுப்பான்; ஆமை ஆற்றைக் கெடுக்கும். * ஊமை ஊரைக்கெடுக்கும்; வாயாடி பேரைக் கெடுக்கும். * ஊமை கண்ட கனா. (+ ஆருக்குத் தெரியும்.) * ஊமை கண்ட கனாப்போலச் சீமைப் பட்டணம் ஆகுமா? * ஊமை பிரசங்கம் பண்ணச் செவிடன் கேட்டது போல. * ஊமை போல இருந்து எருமை போலச் சாணி போட்டதாம். * ஊமைக்கு உளறு வாயன் உற்பாத பிண்டம். * ஊமைக்கு உளறு வாயன் சண்டப் பிரசண்டன். * ஊமைக்கு வாய்த்தது ஒன்பதும் பிடாரி. * ஊமைக்குத் தெத்து வாயன் உயர்ந்த வாசாலகன். * ஊமையர் சபையில் உளறு வாயன் மகாவித்துவான். * ஊமையன் கனவு கண்டது போலச் சிரிக்கிறான். * ஊமையன் பாட, சப்பாணி ஆட, செவிடன் கேட்க, குருடன் பார்க்க. * ஊமையன் பேச்சுப் பழகின பேருக்குத் தெரியும். * ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு * ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு. * ஊமையின் பிரசங்கத்தைச் செவிடன் கேட்டானாம்.4640 * ஊமையும் அல்ல, செவிடனும் அல்ல. * ஊமையும் ஊமையும் மூக்கைச் சொறிந்தாற் போல். * ஊமையை விட உளறு வாயன் மேல். * ஊராருக்கெல்லாம் ஒரு வழி; இவனுக்கு ஒரு வழி. * ஊராருக்கெல்லாம் ஒரு வழி; இவனுக்கு ஒரு வழி. * ஊராருக்கெல்லாம் ஒரு வழி; ஓச்சனுக்கு ஒரு வழி. * ஊராருக்கெல்லாம் ஒரு வழி; ஓச்சனுக்கு ஒரு வழி. * ஊராரே வாருங்கள்; முதுகிலே குந்துங்கள். * ஊராரே வாருங்கள்; முதுகிலே குந்துங்கள். * ஊராரைப் பகைத்து உயிரோடு இருந்தவர் இல்லை. * ஊராரைப் பகைத்து உயிரோடு இருந்தவர் இல்லை. * ஊரார் உடைமைக்கு உலை வைக்கிறான். * ஊரார் உடைமைக்கு உலை வைக்கிறான். * ஊரார் உடைமைக்கு ஓயாண்டி போல் திரிவான். * ஊரார் உடைமைக்கு ஓயாண்டி போல் திரிவான். * ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான். * ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான். * ஊரார் உடைமைக்குப் பேராப் பேராசை கொள்ளாதே. * ஊரார் உடைமைக்குப் பேராப் பேராசை கொள்ளாதே. * ஊரார் எருமை பால் கறக்கிறது; நீயும் ஊட்டுகிறாய்; நானும் உண்ணுகிறேன்.4720 * ஊரார் எருமை பால் கறக்கிறது; நீயும் ஊட்டுகிறாய்; நானும் உண்ணுகிறேன். * ஊரார் கணக்கு உடையன் பிடரியிலே. * ஊரார் கணக்கு உடையன் பிடரியிலே. * ஊரார் சிரித்தால் என்ன? நாட்டார் நகைத்தால் என்ன? நான் நடக்கிற நடை இவ்வளவுதான். * ஊரார் சிரித்தால் என்ன? நாட்டார் நகைத்தால் என்ன? நான் நடக்கிற நடை இவ்வளவுதான். * ஊரார் சொத்துக்குப் பேயாய்ப் பறக்கிறான். * ஊரார் சொத்துக்குப் பேயாய்ப் பறக்கிறான். * ஊரார் சொத்துத் தூமகேது. * ஊரார் நாய்க்குச் சோறு போட்டால் அது உடையவன் வீட்டிலே போய்த்தான் குரைக்கும். * ஊரார் நாய்க்குச் சோறு போட்டால் அது உடையவன் வீட்டிலே போய்த்தான் குரைக்கும். * ஊரார் பண்டம் உமி போல்; தன் பண்டம் தங்கம் போல். * ஊரார் பண்டம் உமி போல்; தன் பண்டம் தங்கம் போல். * ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். * ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். * ஊரார் புடைவையில் தூரம் ஆவது. * ஊரார் புடைவையில் தூரம் ஆவது. * ஊரார் வீட்டு நெய்யே; என் பெண்டாட்டி கையே. * ஊரார் வீட்டு நெய்யே; என் பெண்டாட்டி கையே. * ஊரார் வீட்டுக் கல்யாணமே; ஏன் அவிழ்ந்தாய் கோவணமே! * ஊரார் வீட்டுக் கல்யாணமே; ஏன் அவிழ்ந்தாய் கோவணமே! * ஊரார் வீட்டுச் சோற்றைப் பார்; ஓசு பாடி வயிற்றைப் பார். * ஊரான் ஆகில் உழுது விட்டுப் போகப் பண்ணைக்காரன் தண்ட வரி செலுத்த வேண்டியிருக்கிறது. * ஊரான் ஆகில் தாசனுக்குப் பேள இடம் இல்லையா? * ஊரான் ஆகில் தாசன் பார்க்கிறதற்குச் சந்தேகமா? * ஊரான் சொத்தை உப்பு இல்லாமல் தின்பான். * ஊரான் மகன் நீரோடே போன கதை. * ஊரான் வீட்டுச் சோற்றைப் பார்; சோனிப் பையன் வயிற்றைப் பார். * ஊரிலே அழகியைப் பிடிக்கப் போகிறானென்று ஆந்தையும் குரங்குமாய் ஓடிப் போச்சாம். * ஊரிலே எளியாரை வண்ணான் அறிவான்; சாதிப் பொன் பூண்பாரைத் தட்டான் அறிவான். * ஊரிலே கல்யாணம்; மாரிலே சந்தனம். * ஊரிலேயும் போவான்; சொன்னால் அழுவான். * ஊரில் இருக்கும் சனியனை வீட்டிலே அழைத்தாற் போல. * ஊரில் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும். * ஊரில் ஒருத்தனே தோழன்; ஆரும் அற்றதே தாரம்.4745 * ஊரில் நடக்கும் விஷயம் எல்லாம் ஊசல் குமரிக்குத் தெரியும். * ஊருகிற அட்டைக்குக் கால் எத்தனை என்று அறிவான். * ஊருக்கு அரசன் ஆனாலும் தாய்க்குப் பிள்ளைதான். * ஊருக்கு அரசன் காவல்; வீட்டுக்கு நாய் காவல். * ஊருக்கு ஆகாத பிள்ளை தாய்க்கு ஆவானா? * ஊருக்கு இட்டு ஊதாரி ஆனான். * ஊருக்கு இரண்டு பைத்தியக்காரன். * ஊருக்கு இரும்பு அடிக்கிறான்; வீட்டுக்குத் தவிடு இடிக்க முடியவில்லை. * ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி; அதற்கும் இளைத்தவன் பள்ளிக்கூடத்து வாத்தியார். * ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி; அதற்கும் இளைத்தவன் மச்சினன் பெண்டாட்டி. * ஊருக்கு உழைக்கிற கிராமணி. * ஊருக்கு எல்லாம் ஒரு வழி; உச்சிப் பிள்ளையாருக்கு ஒரு வழி. * ஊருக்கு எல்லாம் ஒரு வழி; உனக்கு ஒரு வழியா? * ஊருக்கு எல்லாம் சாஸ்திரம் சொல்லுகிற பல்லி, கூழ்ப் பானையில் விழுந்தது போல. * ஊருக்கு ஏற்ற மாடு வாங்கினவனும் இல்லை; தாய்க்கு ஏற்ற பெண் கட்டினவனும் இல்லை. * ஊருக்கு ஏற்றுக் கெட்டான்; உள்ளதைச் சொல்லிக் கெட்டான். * ஊருக்கு ஒடுங்கான், யாருக்கும் அடங்கான். * ஊருக்கு ஒரு தேவடியாள் ஆருக்கென்று ஆடுவாள்? * ஊருக்கு ஒரு வழி; ஒன்றரைக் கண்ணனுக்கு ஒரு வழி. * ஊருக்கு ஓமல்; வீட்டுக்கு வயிற்றெரிச்சல். * ஊருக்கு நாட்டான் பெண்டாட்டி என்றால் ஓ என்னுவாளாம்; ஓர் ஆளுக்குச் சோறு என்றால் ஹூம் என்னுவாளாம். * ஊருக்கு முன்னால் விளக்கு ஏற்றினால் ஒரு பிடி உயரும். * ஊருக்கு விளைந்தால் ஓட்டுக்குப் பிச்சை. * ஊருக்கு வேலை செய்வதே மணியமாய் இருக்கிறான். * ஊருக்குக் கடைசி உலகம்பட்டி. * ஊருக்குப் பால் வார்த்து உண்கிறாயா! உடம்புக்குப் பால் வார்த்து உண்கிறாயா? * ஊருக்குப் பேரும் உறவின் முறைக்குப் பொல்லாப்பும். * ஊருக்கும் பேருக்கும் வடுகு இல்லை. * ஊருக்குள் நடக்கிற விஷயம் யாருக்குத் தெரியும்? உள்ளே இருக்கிற குமரிக்குத் தெரியும். * ஊருக்கே மகாராணியாக இருந்தாலும் அவள் புருஷனுக்கு அடங்கத்தான் வேண்டும். * ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். * ஊரூராய்ப் போகிறவனுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை. * ஊரே தாய்; வேலியே பயிர். * ஊரை அடித்து உலையில் போடுகிறான். * ஊரை ஆண்டாயோ? ஊரான் பெண்ணை ஆண்டாயோ? * ஊரை ஆள்கிற ராசாவுக்கு உட்கார இடம் இல்லையாம்! * ஊரை உழக்கால் அளக்கிறான்; நாட்டை நாழியால் அளக்கிறான். * ஊரை வளைத்தாலும் உற்ற துணை இல்லை; நாட்டை வளைத்தானும் நல்ல துணை இல்லை. * ஊரை விட்டுப் போகும்போது தாரை விட்டு அழுதாளாம். * ஊரை விழுங்குகிற மாமியாருக்கு அவளையே விழுங்குகிற மருமகள் வந்தாளாம். * ஊரை விழுங்கும் மாமனாருக்கு அவரையே விழுங்கும் மாப்பிள்ளை. * ஊரைக் கண்டவுடனே உடுக்கையைத் தோளில் போட்டுக் கொண்டானாம். * ஊரைக் காட்ட ஒரு நாய் போதும். * ஊரைக் கெடுத்தான் ஒற்றை மாட்டுக்காரன். * ஊரைக் கெடுத்தான் ஒற்றைக் கடைக்காரன். * ஊரைக் கொளுத்துகிற ராஜாவுக்கு ஊதிக் கொடுக்கிறவன் மந்திரி. * ஊரைச் சுற்றி வந்த யானை ஒற்றடம் வேணும் என்றாற்போல். * ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே.4800 * ஊரைப் பகைத்தேனோ? ஒரு நொடியில் கெட்டேனோ? * ஊரைப் பார்க்கச் சொன்னால் பறைச்சேரியைப் பார்க்கிறான். * ஊரைப் பார்த்து ஓம்பிப் பிழை. * ஊரைப் பிடித்த சனி பிள்ளையாரையும் பிடித்தது. * ஊரைப் பிடித்த சனியனுக்கு நாயைப் பிடித்துக் சூலம் போட்டது போல்.4805 * ஊரோடு ஒக்க ஓடு; ஒருவன் ஓடினால் கேட்டு ஓடு.4810 * ஊரோடு ஒக்க நட; நாட்டோடு நடுவே ஓடு. * ஊரோடு ஒட்டி வாழ். * ஊரோடே ஒக்கோடே. * ஊர் அருகே ஒரு வயலும் உத்தரத்தில் ஒரு புத்திரனும். * ஊர் அறிந்த பார்ப்பான். * ஊர் அறிந்த பிராமணனுக்குப் பூணூல் எதற்கு? * ஊர் ஆளுகிற ராஜாவுக்குப் பேள இடம் கிடைக்கவில்லையாம். * ஊர் ஆளுகிறவனுக்குப் பேளப் புறக்கடை இல்லையா? * ஊர் ஆளுகிறவன் பெண்டாட்டிக்குப் பேள இடம் இல்லையாம். * ஊர் ஆளுகிறவன் பெண்டு பிடித்தால் ஆருடன் சொல்லி முறையிடுகிறது? * ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு எளிது. * ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குத் தொக்கு. * ஊர் இருக்கிறது பிச்சை போட; ஓடு இருக்கிறது வாங்கிக் கொள்ள. * ஊர் இருக்கிறது; ஓடு இருக்கிறது. * ஊர் இருக்கிறது; வாய் இருக்கிறது. * ஊர் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்; வீட்டு இளக்காரம் மாப்பிள்ளைக்குத் தெரியும், * ஊர் உண்டாகி அல்லவோ, கிழக்கு மேற்கு உண்டாக வேண்டும்? * ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு. * ஊர் உண்டு பிச்சைக்கு; குளம் உண்டு தண்ணீருக்கு. * ஊர் ஊராய்ப் போவானுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை. * ஊர் எங்கும் சம்பை; என் பேரோ வம்பை. * ஊர் எங்கும் சுற்றி உனக்கு ஏதடா புத்தி? * ஊர் எங்கும் பேறு; வீடு பட்டினி. * ஊர் எச்சம்; வீடு பட்டினி. * ஊர் எல்லாம் உறவு; ஒரு வாய்ச் சோறு இல்லை. * ஊர் எல்லாம் உற்றார்; அந்தி பட்டால் பொதுச் சந்தியிலே. * ஊர் எல்லாம் கடன்; உடம்பெல்லாம் பொத்தல். * ஊர் எல்லாம் கல்யாணம்; மார் எல்லாம் சந்தனம். * ஊர் எல்லாம் சதமாகுமோ? ஒரு மரம் தோப்பாகுமோ? * ஊர் எல்லாம் சுற்றி எனக்கென்ன புத்தி? * ஊர் எனப்படுவது உறையூர். * ஊர் என்று இருந்தால் பறைச் சேரியும் இருக்கும் * ஊர் ஒக்க ஓட வேண்டும். * ஊர் ஓசை அடங்க நெய் காய்ச்சினாளாம். * ஊர் ஓசை அடங்கும் வரை வெண்ணெய் காய்ச்சினாளாம், * ஊர் ஓச்சன் பட்டினி. * ஊர் ஓட உடன் ஓட. * ஊர் ஓட ஒக்க ஓடு; நாடு ஓட நடு ஓடு. * ஊர் ஓடினால் ஒத்தோடு; ஒருவன் ஓடினால் கேட்டு ஓடு. * ஊர் ஓமல் ஆனது அல்லால் ஒன்றும் அறியேன். * ஊர் ஓரத்தில் கொல்லை; உழுதவனுக்குப் பயிர் இல்லை. * ஊர் ஓரத்து உழவுக்காரனும் உண்டவுடன் பேளாதவனும் உருப்படமாட்டான். * ஊர் கூடிச் செக்குத் தள்ள, வாணியன் எண்ணெய் கொண்டு போக. * ஊர் கூடிச் செக்குத் தள்ளலாமா? * ஊர் கூடித்தானே தேர் இழுக்க வேண்டும்? * ஊர் கோப்பழிந்தால் ஓடிப் பிழை. * ஊர் திரிந்த தேவடியாளுக்குப் பூணுால் அபூர்வமா? * ஊர் நடு நின்ற ஊர் மரம் போல. * ஊர் நத்தத்தில் நாய் ஊளையிட்டாற் போல. * ஊர் நல்லதோ? வாய் நல்லதோ? * ஊர் நஷ்டம் ஊரிலே; தேர் நஷ்டம் தெருவிலே. * ஊர் பேர் அறியாதவன் ஊர்வலம் வருகிற மாதிரி. * ஊர் மெச்சப் பால் குடிக்கலாமா? * ஊர் மேலே போனவளுக்குத் தோள்மேலே கொண்டையாம்; அதைப் போய்க் கேட்கப் போனால் லடாபுடா சண்டையாம். * ஊர் வாயை அடக்கினாலும் உளறு வாயை அடக்க முடியாது. * ஊர் வாயை மூட உலை மூடி இல்லை. * ஊர் வாயை மூட உலைமுடி இல்லை. * ஊர் வாயை மூடலாமா? உலை வாயை மூடலாமா? * ஊர் வாயைப் படல் இட்டு மூடலாமா? * ஊர் வாரியில் ஒரு கொல்லையும் உத்தராட நட்சத்திரத்தில் ஒரு பிள்ளையும். * ஊர் வாழ்த்தால் ஓட்டுப் பிச்சைக்கு வழி இருக்கும். * ஊர் வாழ்த்தால் ஓட்டுப் பிச்சைக்கு வழி இருக்கும். * ஊர் வாழ்ந்தால் ஒக்க வாழலாம். * ஊர் வாழ்ந்தால் ஒக்க வாழலாம். * ஊர் விஷயங்களில் ஊமை செவிடாய் இரு. * ஊர் விஷயங்களில் ஊமை செவிடாய் இரு. * ஊர்கிறதென்றால் பறக்கிறது என்று சொல்லும் ஜனம். * ஊர்க் கழுதை இருக்கக் கூத்தாடிக் கழுதைக்குச் சனி பிடித்தது. * ஊர்க் காக்காய் கரையிலே; வந்தட்டிக் காக்காய் வரப்பிலே. * ஊர்க் கோழியும் நாட்டுக் கோழியும் கூடினால் உரலில் உள்ள புழுங்கல் அரிசிக்குச் சேதம். * ஊர்க்கடனும் உள்ளங்கைச் சிரங்கும் போல. * ஊர்க்குருவிமேலே ராம பாணம் தொடுக்கிறதா? * ஊர்க்கோடியில். ஒரு வீடு கட்டி ஓர்ப்படி தம்பிக்குப் பெண் கொடுத்தாற்போல். * ஊர்ச் சக்கிலி எல்லாம் சேர்ந்து தோலைக் கெடுத்தனராம். * ஊர்ச் சண்டை கண்ணுக்கு அழகு. * ஊர்ப் பசங்களெல்லாம் கால் பாடம்; பிச்சைக்கு வந்த பெண் அகமுடையாள். * ஊர்ப் பிள்ளையை முத்தமிட்டால் உதட்டுக்குக் கேடு. * ஊர்ப் பொருளை உப்பு இல்லாமல் கூடச் சாப்பிடுவான். * ஊர்வலத்தைக் காண வந்தவன் அடித்துக் கொள்வது போல. * ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல். * ஊழி பெயரினும் கலங்கார் உறவோர். * ஊழி பேரினும் ஊக்கமது கைவிடேல். * ஊழிக் காய்ச்சல் அதிகமானால் சூனியக்காரன் கொள்ளை. * ஊழும் உற்சாகமும் ஒத்துக்கொள்ள வேண்டும். * ஊழ்வினை ஓநாய் மாதிரி இருக்கும். * ஊறச்சே துடைக்க வேண்டும். * ஊறல் எடுத்தவன் சொறிந்து கொள்வான். * ஊறாக் கிணறு, உறங்காப் புளி, தீரா வழக்கு, திருக்கண்ணங் குடி. * ஊறுகாயைக் கடித்துக் கொண்டு ஒரு பானைச் சோற்றை என்னது என்பான். * ஊறுகாயைக் கடித்துக் கொண்டு ஒரு பானைச் சோற்றைத் திணிப்பது போல. * ஊற்றுத் தண்ணீரில் நாய்க்குப் பால் வார்த்தது போல. * ஊற்றுப் பாய்ச்சல் ஆற்றுப் பாய்ச்சல் பத்துக் குழியும், ஏரிப் பாய்ச்சல் நூறு குழியும் ஒன்று. * ஊற்றை நம்பினாலும் ஆற்றை நம்பாதே. * ஊற்றை மலத்தைக் கண்ட பன்றி உதட்டுக்குள்ளே சிரித்துக் கொண்டதாம். * ஊற்றைப் பல்லுக்கு விளாங்காய் சேர்ந்தாற் போல். * ஊற்றைப் பெண் பிள்ளை கழுவக் கழுவத் தேயும். * ஊனம் இல்லா உடம்புக்கு நாணம் ஏன்? * ஊனம் இல்லான் மானம் இல்லான். * ஊனுக்கு ஊன் உற்ற துணை. * ஊன்ற வைத்த கொம்பு உச்சி மோட்டை உச்சி மோட்டைப் பிளக்கிறது. * ஊன்றக் கொடுத்த தடி உச்சியை உடைக்கிறது. * ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது போல. ==எ== * எக்கியத்தில் மூத்திரம் பெய்தது போல * எக்குப் புடைவை சோர்ந்தால் கைக்கு உண்டோ உபகாரம்? * எக்கேடு கெட்டுப் போ; எருக்கு முளைத்துப் போ * எகனை முகனை பார்க்கிறான் * எங்கள் அகத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் * எங்கள் அகத்துக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உங்கள் அகத்துக்கு வந்தால் என்ன தருகிறாய்? * எங்கள் அகத்துப் பெண் பொல்லாதது; உங்கள் அகத்துப் பிள்ளையை அடக்குங்கள் * எங்கள் அப்பன் பிறந்தது வெள்ளி மலை; ஆய் பிறந்தது பொன் மலை * எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை * எங்கள் வீட்டில் விருந்து வைக்கிறேன் வாருங்கள்; இலை வாங்க மறந்துவிட்டேன் போங்கள் * எங்கள் வீட்டு அகமுடையானுக்கும் அரண்மனையில் சேவகம் * எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய்? * எங்களால் ஒன்றும் இல்லை; எல்லாம் உங்கள் தர்மம் * எங்கு இருந்தாலும் ஆனை பெருமாளதுதானே? * எங்கும் சுற்றி ரங்கநாதா என்றான் * எங்கு ஏறிப் பாய்ந்தாலும் கொங்கு ஏறிப் பாயேன் * எங்கும் சிதம்பரம் பொங்கி வழிகிறது * எங்கும் சிரித்து எள்ளுக் கொல்லை காக்கிறவன் * எங்கும் சுற்றி ரங்கனைச் சேவி * எங்கும் செத்தும் நாக்குச் சாகவில்லை * எங்கும் பருத்தி எழுபது பலம் * எங்கும் பொன்னம்பலந்தான் * எங்கும் மடமாய் இருக்கிறது; இருக்கத்தான் இடம் இல்லை * எங்கே அடித்தாலும், நாய்க்குக் காலிலே முடம் * எங்கே அடித்தாலும் நாய் காலைத் தூக்கும் * எங்கே சுற்றியும் ரங்கனைத்தான் சேவிக்க வேணும் * எங்கே திருடினாலும் கன்னக்கோல் வைக்க இடம் ஒன்று வேண்டும் * எங்கே புகை உண்டோ, அங்கே நெருப்பு உண்டு * எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு * எங்கேயோ இடித்தது வானம் என்று இருந்தேன்; தப்பாது என் தலையிலேயே இடித்தது * எங்கேயோ எண்ணெய் மழை பெய்ததென்று இருந்தாளாம் * எங்கே வந்தது இரை நாய்? பங்குக்கு வந்தது மர நாய் * எங்கே வெட்டினாலும் எப்படிச் சாயும் என்று பார்க்க வேணும் * எச்சரசம் ஆனாலும் கைச்சரசம் ஆகாது * எச்சில் அறியாள், துப்பல் அறியாள்; என் பெண் பதின்கலக் காரியம் செய்வாள் * எச்சில் இரந்து அடிக்கும்; பற்றுப் பறக்க அடிக்கும் * எச்சில் இரக்கும்; தூமை துடைக்கும் * எச்சில் இலை எடுக்க வந்ததா நாய்? எண்ணிப் பார்க்க வந்ததா நாய்? * எச்சில் இலைக்கு அலையும் நாய் போல * எச்சில் இலைக்கு இச்சகம் பேசுகிறது * எச்சில் இலைக்கு இதம் பாடுகிறது * எச்சில் இலைக்கு எதிர் இலை போடலாமா? * எச்சில் இலைக்கு ஏஜெண்டு; குப்பைத் தொட்டிக்குக் குமாஸ்தா * எச்சில் இலைக்கு நாய் அடித்துக்கொண்டு நிற்கிறது போல * எச்சில் இலைக்குப் போட்டி போடும் நாய் மாதிரி * எச்சில் இலைக்கு மண்ணாங்கட்டி ஆதரவு; மண்ணாங்கட்டிக்கு எச்சில் இலை ஆதரவு * எச்சில் இலை கண்ட நாய் போல * எச்சில் இலை நாய்க்கும் பிறந்த நாள் கொண்டாட்டமா? * எச்சில் இலை நாயானாலும் எசமான் விசுவாசம் உண்டு * எச்சில் இலையை எடுக்கச் சொன்னார்களா? எத்தனை பேர் என்று எண்ணச் சொன்னார்களா? * எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் என்ன சாமி? என்ன பூஜை? * எச்சில் கையால் காக்கை ஓட்டமாட்டான் * எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை இடுவானா? * எச்சில் தின்றாலும் வயிறு நிரம்பத் தின்னவேண்டும்; ஏச்சுக் கேட்டாலும் பொழுது விடியும்மட்டும் கேட்க வேண்டும் * எச்சில் நாய்க்குக் கண்டது எல்லாம் ஆசை * எச்சிலை எடுக்கச் சொன்னாளா? இலையை எண்ணச் சொன்னாளா? * எச்சிலைக் கழுவி உன் சுத்தத்திலே வார் * எச்சிலைக் குடித்துத் தாகம் தீருமா? * எச்சிலைத் தின்றாலும் எஜமானன் விசுவாசம் காட்டும் நாய்; பாலைக் குடித்தாலும் பகையை நினைக்கும் பூனை * எச்சிலைத் தின்று ஏப்பம் விட்டாற் போல * எச்சிலைத் தின்று பசி தீருமா? * எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா? * எசமான் கோபத்தை எருமைக் கடாவின்மேல் காண்பித்தானாம் * எசமான் வீடு நொடித்து விட்டதென்று நாய் பட்டினியாக இருந்ததாம் * எசமான் வெளிலே போனால் பசங்கள் எல்லாம் கும்மாளம் போடுவார்கள் * எட்கிடை நெற்கிடை விட்டு எழுது * எட்டாக் கனியைப் பார்த்து இச்சித்து என்ன பயன்? * எட்டாத தேனுக்கு ஏறாத நொண்டி கொட்டாவி விட்ட கதை போல * எட்டாத பழம் புளிக்கும் * எட்டாத மரத்து இளநீர் போல ஒட்டாத பேரோடே உறவாக நிற்காதே * எட்டாப் பழத்திற்குக் கொட்டாவி விட்டாற் போல * எட்டாப் பூத் தேவருக்கு எட்டும் பூத் தங்களுக்கு * எட்டாம் நாள் வெட்டும் குதிரை; ஒன்பதாம் நாள் ஓடும் குதிரை * எட்டாம் பேறு பெண் பிறந்தால் எட்டிப் பார்த்த வீடு குட்டிச்சுவர் * எட்டாவது ஆண் பிறந்தால் வெட்டி அரசாளும் * எட்டாளம் போனாலும் கிட்டாதது எட்டாது * எட்டி எட்டிப் பார்த்துக் குட்டிச் சுவரில் முட்டிக் கொள்ளலாம் * எட்டி எட்டிப் பார்ப்பாரும், ஏணி வைத்துப் பார்ப்பாரும், குட்டிச்சுவர் போலக் குனிந்து நின்று பார்ப்பாரும் * எட்டிக் கனியின்மேல் அழகாய் இருந்தும் உள்ளே இருக்கும் வித்தைப் போல் * எட்டிக் குட்டி இறக்கிக் காலைப் பிடித்துக் கொள்கிறது * எட்டிக் குடுமியைப் பிடித்து இறங்கிக் காலைப் பிடிக்கிறவன் * எட்டிக்குப் பால் வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது * எட்டிக் கோட்டை கட்டினால் கிட்டி மழை உண்டு * எட்டிப் பழத்தை இச்சிக்கிறது போல் * எட்டிப் பார்த்தால் எட்டு இழை நட்டம் * எட்டிப் பார்த்தாற்போலக் கொட்டிக் கொண்டு போகிறான் * எட்டிப் பிடித்தால் ஒரு கத்திப் பிடிக்கு ஆகாதா? * எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன? * எட்டி பழுத்தால் என்ன? ஈயாதார் வாழ்ந்தால் என்ன? * எட்டி மரம் ஆனாலும் பச்சென்று இருக்க வேண்டும் * எட்டி மரம் ஆனாலும் வைத்த மரத்தை வெட்டாதே * எட்டி மரம் ஆனாலும் வைத்தவர்க்குப் பாசம் * எட்டி முளையிலும் இரட்டி அதிகம் உண்டாகுமா? * எட்டியிலே கட்டு மாம்பழம் உண்டாகுமா? * எட்டியுடன் சேர்ந்த இலவும் தீப்படும் * எட்டின மட்டும் வெட்டும் கத்தி; எட்டாத மட்டும் வெட்டும் பணம் * எட்டினவன் ஆனாலும் முட்டப் பகை ஆகாது * எட்டினால் குடுமியைப் பிடித்து எட்டாவிட்டால் காலைப் பிடிப்பது * எட்டு அடி வாழை, கமுகு; ஈரடி கரும்பு, கத்தரி; இருபதடி பிள்ளை * எட்டு அடி வாழையும் பத்தடி பிள்ளையும் * எட்டு ஆள் வேலையை ஒரு முட்டாள் செய்வான் * எட்டு இருக்கிறது, எழுந்திரடி அத்தையாரே * எட்டு எருமைக்காரி போனாளாம், ஓர் எருமைக்காரியிடம் * எட்டு எள்ளுக்குச் சொட்டு எண்ணெய் எடுப்பான் * எட்டு என்றால் இரண்டு அறியேன் * எட்டுக் கிழவருக்கு ஒரு மொட்டைக் கிழவி * எட்டுக் குட்டுக் குட்டி இறங்கிக் காலைப் பிடிக்கிறது * எட்டுக் கோவில் பூசை பண்ணியும் எச்சன் வீடு பட்டினி * எட்டுச் சந்தைக்கு ஒரு சந்தை பொட்டைச் சந்தை * எட்டுச் சிந்தாத்திரை ஒரு தட்டுதலுக்கு ஒக்கும் * எட்டுச் செவ்வாய் எண்ணித் தலை முழுகில் தப்பாமல் தலைவலி போம் * எட்டு நாயும் பெட்டைக் குட்டியும் போல் * எட்டுப் படி அரிசியும் ஒரு கவளம்; ஏழூர்ச் சண்டை ஒரு சிம்மாளம் * எட்டுப் பிள்ளைக்கு ஒரு செட்டுப் பிள்ளை போதும் * எட்டும் இரண்டும் அறியாதவன் * எட்டும் இரண்டும் அறியாத பேதை * எட்டு மாட்டுக்கு ஒரு சாட்டை * எட்டு முழமும் ஒரு சுற்று; எண்பது முழமும் ஒரு சுற்று * எட்டு வருஷத்து எருமைக் கடா ஏரிக்குப் போக வழி தேடுகிறது * எட்டு வட்டம் கட்டிக் கொண்டு எதிர்ப்புறம் போனாளாம்; அவள் பத்து வட்டம் கட்டிக் கொண்டு பரக்கப் பரக்க வந்தாளாம் * எட்டு வீடு தட்டியும் ஓச்சன் குடி பட்டினி * எட்டே கால் லக்ஷணமே, எமனேறும் வாகனமே * எடக்கு நாட்டுக்குப் போனானாம் தேங்காய் வாங்க * எடுக்கப் பிடிக்க ஆள் இருந்தால் வரப்பு ஏறிப் பேள்கிறதற்கும் கஷ்டம் * எடுக்கப் போன சீமாட்டி இடுப்பு ஒடிந்து விழுந்தாளாம் * எடுக்கிறது எருத்து மட்டுச் சுமை; படுக்கிறது பஞ்சணை மெத்தை * எடுக்கிறது சந்தைக் கோபாலம்; ஏறுகிறது தந்தப் பல்லக்கா? * எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு * எடுக்கிறது வறட்டிச் சுமை; நடக்கிறது தங்கச் சிமிழ்ப் பாதரட்சை * எடுக்கு முன்னே கழுதை இடுப்பு ஒடிந்து விழுந்ததாம் * எடுத்த அடி மடங்குமா? * எடுத்த கால் வைப்பதற்குள் வைத்த கால் செல் அரிக்கிறது * எடுத்த கை சிவக்கும் * எடுத்த சுமை சுமத்தல்லவோ இறக்க வேண்டும்? * எடுத்தாலும் பங்காருப் பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்காரக் கழுவில் இருக்க வேண்டும் * எடுத்தாலும் பெயர் சரியாய் எடுக்க வேணும் * எடுத்தாற் போல் தப்பட்டைக்காரன் பட்டான் * எடுத்து ஆளாத பொருள் உதவாது * எடுத்து எடுத்து உழுதாலும் எருதாகுமா கடா * எடுத்து எறிந்து பேசுகிறான் * எடுத்துக் கவிழ்த்துப் பேசுகிறான் * எடுத்துச் சொல்; முடித்துச் சொல் * எடுத்துப் பிடித்தால் வெட்டுவேன் என்ற கதை * எடுத்துப் போட்டு அடிக்கிறது; முறத்தைப் போட்டுக் கவிழ்க்கிறது * எடுத்து மூடிவிட்டு எதிரே வந்து நிற்பான் * எடுத்து விட்ட எருது போல * எடுத்து விட்ட நாய் எத்தனை நாளைக்குக் குரைக்கும்? * எடுத்து விட்ட மாடு எத்தனை தூரம் ஓடும்? * எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேணும் * எடுப்பது பிச்சை; ஏறுவது பல்லக்கு * எடுப்பார் கைப் பாவை போல * எடுப்பார் கைப் பிள்ளை * எடுப்பார் மழுவை; தடுப்பார் புலியை; கொடுப்பார் அருமை * எடுப்பாரும் பிடிப்பாரும் இருந்தால் பிள்ளை களைத்தாற் போல இருக்கும் * எடுப்பாரும் பிடிப்பாரும் உண்டானால் இளைப்பும் தவிப்பும் உண்டு * எடுப்பாரைக் கண்டால் குடமும் கூத்தாடும் * எடுப்புண்ட கலப்பை இருந்து உழுமா? * எண் அற்றவர் கண் அற்றவர்; எழுத்தற்றவர் கழுத்தற்றவர் * எண் அறக் கற்று எழுத்து அற வாசித்தாலும் பெண்புத்தி பின் புத்திதான் * எண் இல்லாதவர் கண் இல்லாதவர் * எண் காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே * எண்சாண் இருக்க இடி விழுந்ததாம் வயிற்றிலே * எண்சாண் உடம்பிலே எள்ளத்தனை இரத்தம் இல்லை * எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம் * எண்சாண் உடம்பு இருக்கக் கோவணத்திலே விழுந்ததாம் இடி * எண்சாண் உடம்பும் ஒரு சாண் ஆனேன் * எண்ணத்தில் மண் விழுந்தது * எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது * எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணைப் போட்டுக் கொள்ள, தட்டுவாணிக் குதிரை வந்து கொள்ளுக்கு அழுகிறதாம் * எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணை மண்ணைத் தின்னு கையில் குருட்டுக் கழுதை கோதுமை ரொட்டிக்கு அழுகிற தாம் * எண்ணம் அற்ற ராஜா பன்றிவேட்டை ஆடினாற்போல் * எண்ணம் இட்டவன் தூங்கான்; ஏடு எடுத்தவனும் தூங்கான் * எண்ணம் எல்லாம் பொய்; எமன் ஓலை மெய் * எண்ணம் எல்லாம் பொய்; எழுதிய எழுத்து மெய் * எண்ணம் எல்லாம் பொய்; ஏளிதம் மெய் * எண்ணம் எல்லாம் பொய்; மெளனமே மெய் * எண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும் * எண்ணிச் சுட்டது தேசை * எண்ணிச் செய்கிறவன் செட்டி; எண்ணாமல் செய்கிறவன் மட்டி * எண்ணிச் சுட்ட பணியாரம், பேணித் தின்னு மருமகனே மருமகனே * எண்ணிச் செட்டுப் பண்ணு; எண்ணாமல் சாகுபடி பண்ணு * எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி * எண்ணிச் செய்வது செட்டு; எண்ணாமல் செய்வது வேளாண்மை * எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவது இழுக்கு * எண்ணிப் பார் குடித்தனத்தை; எண்ணாதே பார் வேளாண்மையை * எண்ண முடியாது; ஏட்டில் அடங்காது * எண்ணிய எண்ணம் எல்லாம் பொய்; எழுதிய எழுத்து மெய் * எண்ணிய எண்ணம் என்னடி? அண்ணா என்று அழைத்த முறை என்னடி? * எண்ணிய ஒரு குடிக்கு ஒரு மின்னிய குடி * எண்ணினேன் ஒரு கோடி, இழப்பது அறியாமல் * எண்ணும் எழுத்தும் கண்ணும் கருத்தும் * எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் * எண்ணெய் இல்லாத பந்தம், எரியுதடி தங்கம் * எண்ணெய்க்குச் சேதமே ஒழியப் பிள்ளை பிழைக்கிறதில்லை * எண்ணெய்க் குடத்தில் குளிப்பாட்டின ஆனைக்குட்டி போல * எண்ணெய்க் குடத்திலே பிடுங்கி எடுத்தாற் போல * எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்பு போல * எண்ணெய்க் குடம் உடைந்தவளும் அழுகிறாள்; தண்ணீர்க்குடம் உடைந்தவளும் அழுகிறாள்? * எண்ணெய்க் குடம் உடைந்தாலும் ஐயோ! தண்ணீர்க்குடம் உடைந்தாலும் ஐயோ! * எண்ணெய்க் குடம் போட்டவனும் அப்பாடா. அம்மாடி; தண்ணீர்க் குடம் போட்டவனும் அப்பாடி, அம்மாடி * எண்ணெய்க் குடமும் வெறும் குடமும் முட்டினால் எதற்குச் சேதம்? * எண்ணெய் கண்ட இடத்தில் தடவிக் கொண்டு சீப்புக் கண்ட இடத்தில் தலை வாரிக் கொள்கிறது * எண்ணெய் காணாத மயிரும் தண்ணீர் காணாத பயிரும் * எண்ணெய் குடித்த நாய் திண்ணையில் கிடக்க, எதிரே வந்த நாய் உதைபட்டது மாதிரி * எண்ணெய்ச் சேதமே ஒழியப் பிள்ளை பிழைக்கவில்லை * எண்ணெய் தடவிக் கொண்டு மண்ணில் புரண்டாலும் ஒட்டுவது தானே ஒட்டும்? * எண்ணெய்ப் பிள்ளையோ? வண்ணப் பிள்ளையோ? * எண்ணெய் போக முழுகினாலும் எழுத்துப் போகத் தேய்ப்பார் உண்டோ? * எண்ணெய் முந்துமோ? திரி முந்துமா? * எண்ணெயில் இட்ட அப்பம் போலக் குதிக்கிறான் * எண்ணெயில் விழுந்த ஈயைப் போல * எண்ணெயைத் தேய்க்கலாம்; எழுத்தைத் தேய்க்க முடியாது * எண்பது அடிக் கம்பத்தில் ஏறி ஆடினாலும் இறங்கி வந்துதான் சம்மானம் வாங்க வேண்டும்! * எண்பது வயசுக்கு மண் பவளம் கட்டிக் கொண்டாளாம் * எண்பது வேண்டாம்; ஐம்பதும் முப்பதும் கொடு * எண் மிகுத்தவனே திண் மிகுத்தவன் * எத்தனை ஏழையானாலும் எலுமிச்சங்காய் அத்தனை பொன் இல்லாமற் போகாது * எத்தனை சிரமம் இருந்தாலும் திண்டிக்குச் சிரமம் இல்லை *எத்தனை தரம் சொன்னாலும் பறங்கி வெற்றிலை தின்னான் * எத்தனை தரம் துலக்கினாலும் பித்தளை நாற்றம் போகுமா? * எத்தனை தேய்த்தாலும் பித்தளைக்குத் தன் நாற்றம் இயற்கை * எத்தனை பாட்டுப் பாடினாலும் எனக்கு நீ அருகதையோ? * எத்தனை பிரியமோ அத்தனை சவுக்கை * எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா? * எத்தனை பேர் துடுப்புப் போட்டாலும் தோணி போவது சுக்கான் பிடிப்பவன் கையில் இருக்கிறது * எத்தனைமுறை சொன்னாலும் பறங்கி வெற்றிலை போடமாட்டான் * எத்தனை வந்தாலும் மிச்சம் இல்லை * எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனைப் பிழைப்பிக்க அறியான் * எத்தால் உரைத்தாலும் தட்டான் பவுனாக வளர்ந்ததாம் உண்டை * எத்தால் கெட்டான் என்றால் நோரால் கெட்டான் * எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம் * எத்திக் கழுத்தை அறுக்கிறதா * எத்திலே பிள்ளை பெற்று இலவசத்திலே தாலாட்டுவது * எத்துவாரை எத்தி நான் எலி பிடிச்சுக்கிட்டு வாரேன்; கேட்பாரை கேட்டு நாழி கேப்பை வாங்கித் திரி * எத்தூருக்குப் போனாலும் புத்தூருக்குப் போகாதே * எத்தேச காலமும் வற்றாப் பெருஞ் சமுத்திரம் * எத்தைக் கண்டு ஏய்த்தான்? துப்பைக் கண்டு ஏய்த்தான் * எத்தைச் சொன்னானோ பரிகாரி, அத்தைக் கேட்பான் நோயாளி * எத்தைத் தின்றால் பித்தம் தீரும்? * எதற்கும் உருகாதவன் இச்சைக்கு உருகுவான் * எதற்கு ஜோடிக்க வேணும், இடித்துக் கிழிக்க வேணும் * எதற்கு தலம் பேசினால் அகப்பைச் சூன்யம் வைப்பேன் * எதார்த்த வாதி வெகுஜன விரோதி * எதிர்த்தவர் மார்புக்கு ஆணியாய் இரு * எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம் * எதிர்த்த வீடு ஏகாலி வீடு; அடுத்த வீடு அம்பட்டன் வீடு * எதிர்த்தும்மல் எடுத்துக் கொடுக்கும் * எதிர் நீச்சம் போடுகிறான் * எதிர்ப்பாரைச் செயிப்பார் உண்டு * எதிர் வீட்டுக் கல்யாணமே, ஏன் அழுதாம் கோவணமே? * எதிர் வீடு ஏகாலி வீடு; பக்கத்து வீடு பணி செய்வோன் வீடு; அடுத்த வீடு அம்பட்டன் வீடு * எதிரி இளப்பமானால் கோபம் சண்டப் பிரசண்டம் * எதிரிக்கு அஞ்சிப் படைக்குப் போகாதவன் நல்ல சேவகன் என்று கூறிக் கொண்டானாம் * எதிரிக்கு இளக்காரமாய்ச் சொல்லுகிறதா? * எதிரிக்குச் சகுனத் தடை என்று மூக்கை அறுத்துக் கொள்கிறதா? * எதிரி சுண்டெலி ஆனாலும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் * எதிரி போட்டு மா இடித்தால் குளுமை நெல்லுக்குச் சேதாரம் * எதிரும் புதிரும் உட்கார்ந்து கொள்ளுதல் * எது எப்படிப் போனாலும் தன் காரியம் தனக்கு * எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும் * எதை வாரிக் கட்டிக் கொண்டு போகிறது? * எந்த ஆண்டாருக்கு எந்த மடம் சதம்? * எந்த ஆயுதமும் தீட்டத் தீட்டச் சுடர் * எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்சம் இலை உதிராது * எந்தத் தலைமுறையிலோ ஒரு நாத்தனாராம்; அவள் கந்தல் முறத்தை எடுத்துச் சாத்தினாளாம் * எந்தத் துரை வந்தாலும் தோட்டிக்குப் புல்லுச் சுமை போகாது * எந்த நாய் எந்தச் செருப்பைக் கடித்தால் என்ன? * எந்த நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்கு ஆகாது * எந்தப் புராணத்தில் இல்லாவிட்டாலும் கந்த புராணத்தில் இருக்கும் * எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ? * எந்தப் பொருளும் கந்த புராணத்திலே * எந்த மடத்துக்கு எந்த ஆண்டி சதம்? * எந்த வேஷம் வந்தாலும் தீவட்டிக்காரனுக்குக் கேடு * எந்நேரமும் அவள் பேரில் கண்ணாய் இருக்கிறான் * எப்படியாவது என் கோயில் வாழ * எப்பயிர் செய்யினும் நெற்பயிர் செய் * எப்பிறை கோணினாலும் தைப்பிறை கோணலாகாது * எப்போது பார்த்தாலும் என்ன சண்டை, நாயும் பூனையும் மாதிரி? * எம்மதமும் சம்மதம் * எமன் ஏறுகிற கிடாவாக இருந்தாலும் உழுது விடுவான் * எமன் ஒருவனைக் கொல்லும்; ஏற்றம் மூவரைக் கொல்லும் * எமன் கடாவை ஏரில் பூட்டினது போல * எமன் கையில் அகப்பட்ட உயிர் போல * எமன் நினைக்கவும் பிள்ளை பிழைக்குமா? * எமன் பிடித்தால் எவன் பிழைப்பான்? * எமன் பிள்ளையைப் பேய் பிடிக்குமா? * எமன் வாயிலிருந்து மீண்டது போல * எமனுக்கு வழி காட்டுவான் * எமனைப் பலகாரம் பண்ணிச் சுப்பிரமணியனைத் துவையல் அரைத்தாற் போல * எமனையும் நமனையும் பலகாரம் செய்வான் * எய்த்து இளைத்த நாய் போல ஓடி வருகிறான் * எய்தவன் இருக்க அம்பை நோகலாமா? * எய்தவன் எய்தால் அம்பு என்ன செய்யும்? * எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்க்காதே * எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? * எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளியது போல * எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும் * எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தாற் போல் * எரிகிற நெருப்பில் தண்ணீரைக் கொட்டலாமா? * எரிகிற நெருப்பில் எண்ணெய் விட்டு அடக்கலாமா? * எரிகிற நெருப்புக்குப் பயந்து எண்ணெய்க் கொப்பரையில் விழுந்த மாதிரி * எரிகிற நெருப்பை ஊதிக் கெடுத்தது போல * எரிகிற புண்ணில் எண்ணெய் விட்டது போல * எரிகிற புண்ணில் புளி இட்டது போல * எரிகிற மூக்கில் திரியைக் கொளுத்தினாற் போல * எரிகிற விளக்கில் எண்ணெய் விட்ட மாதிரி * எரிகிற விளக்கு ஆனாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் * எரிகிற வீட்டில் எண்ணெயை ஊற்றினாற் போல் * எரிகிற வீட்டில் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டான் * எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் * எரிகிற வீட்டை அணைக்கக் கிணறு வெட்ட நாள் பார்த்தது போல * எரிச்சல் வந்தல்லவோ அடிக்கும்? எழுப்பி விட்டா அடிக்கும்? * எரிந்த பசியில் இழந்த மணியைத் தேடிப் போனாற் போல * எரிநெருப்பை எண்ணெய் விட்டு அணைக்கலாமா? * எரிப்புக்கு ஆற்றாமல் ஏர் உழப் போகிறேன்; கஞ்சியுடனே சாறு கொண்டு வா என்ற கதை * எரிப்புக்காரன் பின்னோடு போனாலும் போகலாம்; செருப்புக்காரன் பின்னோடு போகக் கூடாது * எரியும் உடம்பில் எண்ணெய் வார்த்தாற்போல் * எரியும் கொள்ளியை ஏறத் தள்ளாதே * எரு இல்லாப் பயிர் மாடு இல்லாக் கன்று போல * எரு இல்லா வயல் கன்று இல்லா மாட்டுக்குச் சமம் * எரு இல்லையேல் மறு பயிரும் இல்லை * எரு உள்ள காட்டில் மடையனும் பயிர் செய்வான் * எருக்கம் புதரில் மறைந்து ஆனையை வெகுள்விப்பான் போல * எருக்கிலைக்கு மருக்கொழுந்து வாசனையா? * எருக்குழியின்றி ஏர் பிடியாதே * எருக்கைச் சொடுக்க வேணும்; ஈச்சைக் கிழிக்க வேணும் * எருக்கை வெட்டி அடித்து ஏரைக் கட்டி உழு * எருச் செய்கிறது இனத்தான் செய்ய மாட்டான் * எருதாலம்மாவுக்குக் கல்யாணம்; எரு முட்டைப் பணியாரம் * எருதில் ஏழை உண்டா? * எருதின் நோய் காக்கை அறியுமா? * எருதின் புண்ணுக்குச் சாம்பல் மருந்து * எருது இளைத்தால் எல்லாம் இளைக்கும் * எருது இளைத்தால் காக்கை மச்சான் முறை வைத்துக் கூப்பிடும் * எருது ஈன்றது என்றால் தோட்டத்திலே கட்டு என்பது போல * எருது ஈன்றது என்னுமுன் என்ன கன்று என்றது போல * எருது உழவுக்குக் காய்கிறது; உண்ணி எதற்குக் காய்கிறது? * எருது உழுகிறதாம்; உண்ணி விடாய்க்கிறதாம் * எருது ஏழை ஆனால் பசு பத்தினித்துவம் கொண்டாடும் * எருது ஏறாதவரையும் பசு பத்தினி கொண்டாடும் * எருதுக்குச் சூடு போட்டது போல * எருதுக்கு நோய் வந்தால் கொட்டகையைச் சுடுகிறதா? * எருதுக்கும் தன் புண் அழற்சி; காக்கைக்கும் தன் பசி அழற்சி * எருது கூடா விட்டால் பசு பத்தினி விரதம் கொண்டாடும் * எருது கெட்டார்க்கும் எட்டுக் கடுக்காய்; இளம் பிள்ளைத் தாய்ச்சிக்கும் எட்டுக் கடுக்காய் * எருது கெடுத்தார்க்கும் ஏழே கடுக்காய்; ஈனாப் பெண்டிர்க்கும், ஏழே கடுக்காய், படை எடுத்த மன்னர்க்கும் ஏழே கடுக்காய் * எருது கொழுத்தால் தொழுவத்தில் இராது; பறையன் கொழுத்தால் பாயில் இருக்க மாட்டான் * எருது கோபம் கொண்டு பரதேசம் போனது போல * எருது சுமந்தது; கோணி கொண்டது * எருது தன் கொம்பால் பிடிபடுகிறது; மனிதன் தன் நாவால் பிடிபடுகிறான் * எருது தன் நோயை நினைக்கும்; காக்கை தன் பசியை நினைக்கும் * எருது நினைத்த இடத்தில் தோழம் கட்டுகிறதா? * எருது நினைத்த இடத்தில் புன்செய்க்கு உழுகிறதா? * எருது நினைத்தால் கொட்டகை கட்டுகிறதா? * எருது நோய் உண்ணிக்கு என்ன தெரியும்? * எருது நோய் காக்கைக்குத் தெரியுமா? * எருது நோயை நினைக்கும்; காக்கை பசியை நினைக்கும் * எருது பொதி சுமந்தாற் போல * எருதும் எருதும் போராட நடுப்புல்லுத் தேய்ந்தாற் போல * எருதும் வண்டியும் ஒத்தால் மேடு எது? பள்ளம் ஏது? * எருது மறைவில் புல்லுத் தின்கிறாயா? * எருப் போட்டவன் காடு விளையுமா? ஏர் உறிஞ்சாக் காடு விளையுமா? என்றாற் போல * எருப்போட்டு ஏர் இடு * எருமணம் இல்லாத பயிரும் நறுமணம் இல்லாத மலரும் வீணே * எருமுட்டைப் போரைப் பேய் அடிக்குமா? * எருமை இருந்தால் அல்லவோ பால் கறக்க வேணும்? * எருமைக்கடா சந்தைக்குப் போச்சாம்; அங்கேயும் கட்டி உழுதானாம் * எருமைக் கடா என்றாலும் குழந்தைக்கு ஒரு பீர் பால் கொடு என்கிறாய் * எருமைக் கன்று அருமைக் கன்று * எருமைக் கிழமும் மாப்பிள்ளைக் கிழமும் இல்லை * எருமைக்குச் சூடு போட்டது போல * எருமைக்கு வெள்ளாடு ஏத்தக் கறக்குமா? * எருமைக் கொம்பு காய்வதற்கு முன் எட்டுத்தரம் மழை பெய்யும் * எருமைக் கொம்பு நனைகிறதற்குள்ளே எழுபது தரம் மழை வருகிறது * எருமைக் கோமயம் எக்கியத்துக்கு ஆகுமா? * எருமைச் சாணி ஓமத்திற்கு ஆகுமா? * எருமைப் பிட்டத்திலே விளக்கு வைத்தாற் போல * எருமை போய் ஏரியிலே விழுந்தால் தவளைத் தானே குதித்தோடும் * எருமை மாட்டின்மேல் எத்தனை சூடு இருந்தாலும் தெரியாது; பசு மாட்டின்மேல் ஒரு சூடு இருந்தாலும் தெரியும் * எருமை மாட்டின்மேல் மழை பெய்தது போல * எருமை மாட்டுப் பிட்டத்தில் விளக்கு வைத்துப் படித்தான் * எருமை மாட்டைத் தண்ணீரில் போட்டுக் கொண்டு விலை பேசுகிறது * எருமை மாடு கன்றுக்குட்டி போட்டாற் போல * எருமை மாடு மூத்திரம் பெய்தாற் போல * எருமை முட்டைப் புராணம் வாசிக்கிறான் * எருமை மூத்திரம் லேகியத்திற்கு ஆகுமா? * எருமையிலும் வெள்ளாடு ஏறக் கறக்குமா? * எருமை வாங்குமுன் ஏன் விலை கூறுகிறாய்? * எருமை வாங்கும்முன் நெய் விலை பேசுகிறதா? பிள்ளை பெறுமுன் பெயர் வைக்கிறதா? * எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறுகிறதா? * எருவுக்குப் போனவன் இளையாளைக் கைப்பிடித்தாற் போல * எருவுக்குப் போனவன் எலுமிச்சம் பழம் எடுத்தது போல * எருவும் தண்ணீரும் உண்டானால் எந்த நிலமும் விளையும் * எல்லப்ப செட்டி லக்க ஏக லக்க * எல்லா ஓட்டும் குல்லாவிலே * எல்லாத் தாட்டோட்டும் என் குல்லாய்க்குள்ளே * எல்லாம் அதிசயந்தான்; ஆக்குகிறது பூஜ்யந்தான் * எல்லாம் அறிந்தவனும் இல்லை; ஒன்றும் அறியாதவனும் இல்லை * எல்லாம் அறிந்தும் கழுநீர்ப் பானையில் கை இடுகிறதா? * எல்லாம் அறியாதவனும் இல்லை; யாதும் அறிந்தவனும் இல்லை * எல்லாம் இருக்கிறது பெட்டியிலே, இலைக்கறி கடையச் சட்டி இல்லை * எல்லாம் ஈசல் செயல் * எல்லாம் ஏறி இளைத்த குதிரையின்மேல் தம்பி பொற்பட்டம் கட்டிப் புறப்பட்டான் * எல்லாம் களத்தின்மேல் விளைவு * எல்லாம் கிடக்க எருதுக்குச் சீமந்தமாம் * எல்லாம் கிடக்க எருமை மாட்டுக்கு என்ன? * எல்லாம் சரி என்று எண்ணலாமா? * எல்லாம் செய்து விட்டுக் கழுநீர்ப் பானையில் கையை விட்டான் * எல்லாம் சொல்லும் பல்லி கழுநீர்ப் பானையில் விழுந்ததாம் துள்ளி * எல்லாம் தபோபலத்தால் கைகூடும் * எல்லாம் தெரிந்த நாரி, நிமிண்டி ஏற்றடி விளக்கை * எல்லாம் தெரிந்தவர்களுக்குக் கொஞ்சம் தெரியாது * எல்லாம் தெரியும்; ஒன்றும் தெரியாது * எல்லாம் மாயை என்கிறதைக் கண்டேன் * எல்லா மீனுக்கும் பெரிய மீன் நான்தான் * எல்லார் தலையிலும் எட்டு எழுத்து; பாவி தலையில் பத்து எழுத்து * எல்லார் வீட்டுத் தோசையிலும் ஓட்டை * எல்லாருக்கும் உண்டு இலையும் பழுப்பும் * எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிது * எல்லாருக்கும் சளி துரும்பு போல; எனக்குச் சளி மலை போல * எல்லாருக்கும் சொல்லும் பல்லி தான் போய்க் காடிப் பானையில் விழுமாம் * எல்லாருக்கும் புத்தி இருந்தால் புத்தி இல்லாதவன் ஆர்? * எல்லாருக்கும் ஆளின் கீழே நுழைந்தால், இவன் ஆளின் நிழலின் கீழே நுழைவான் * எல்லாரும் ஆளை மேய்ந்தால், இவன் அவன் நிழலை மேய்ப்பான் * எல்லாரும் உலர்த்தினார்கள் என்று எலியும் தன் வாலை உலர்த்தியதாம் * எல்லாரும் உழுதார்களென்று ஈழவனும் உழுதானாம் * எல்லாரும் எல்லாரும் என் தலையில் குட்டுகிறார்; என்னைப் பெற்ற தாயாரும் என் தலையில் குட்டுகிறாள் * எல்லாரும் என் மண்டையில் பொங்கித் தின்கிறார்கள் * எல்லாரும் சட்டியைப் போட்டு உடைத்தால் இவன் சிரட்டையைப் போட்டு உடைக்கிறான் * எல்லாரும் ஏறி இளைத்த குதிரையின் மேல் சாஸ்திரியார் ஏறிச்சரிந்து விழுந்தார் * எல்லாரும் கப்பல் ஏறி ஆயிற்று; இனி அம்மானார் பொற்பட்டம் கட்டப் போகிறார் * எல்லாரும் கூடி எனக்குக் குல்லாப் போட்டார்கள் * எல்லாரும் கூடிக் குல்லாவைத் தந்தார்கள் * எல்லாரும் தடுக்கின் கீழே நுழைந்தால் அவன் கோலத்தின் கீழ் நுழைகிறான் * எல்லாரும் தேங்காய் உடைத்தால் நான் சிரட்டையாவது உடைக்கலாம் * எல்லாரும் நல்லவர்கள், சேர்ந்தால் பெரியவர்கள் * எல்லாரும் நல்லாரா? கல் எல்லாம் மாணிக்கமா? * எல்லாரும் நெல்லை உலர்த்தினால் எலி வாலை உலர்த்திற்றாம் * எல்லாரும் ரெட்டியார் ஆனால் பின்னே ஓடுகிறது ஆர்? * எல்லாரும் பல்லக்கு ஏறினால் சுமப்பவர் யார்? * எல்லாரும் பாக்கு; இவன் ஒரு தோப்பு * எல்லாரையும் காக்க ஓர் ஈசன் இருக்கிறான் * எல்லாரையும் சொல்லி ராஜா குசு விட்டானாம் * எல்லாவற்றுக்கும் உண்டு இலையும் பழுப்பும் * எல்லாவற்றுக்கும் ஒரு சொட்டு உண்டு * எல்லாவற்றுக்கும் ஓர் அழுகை அழுங்கள் * எல்லாவற்றையும் செய்து கழுநீர்ப் பானையில் கைவிட்டது போல * எல்லா வீட்டிற்கும் இரும்பு அடுப்பே ஒழியப் பொன் அடுப்பு இல்லை * எல்லா வேலையும் செய்வான்; செத்தால் பிழைக்கமாட்டான் * எல்லி செட்டி லக்க ஏக லக்க * எல்லை கடந்தால் தொல்லை * எல்லை சுற்றின பிடாரி மாதிரி * எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக் கடமை விடார் * எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது * எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்? * எலக்ட்ரியை நம்பி இலை போடாதே * எலி அம்மணத்தோடே போகிறது என்கிறான் * எலி அழுதால் பூனை விடுமா? * எலி அழுது புலம்பினாலும் பூனை விட்டுவிடுமா? * எலி அறுக்கும்; தூக்க மாட்டாது * எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும் * எலி எட்டப் பாம்பு குடிகொள்ள * எலிக்கு அஞ்சிச் சந்நியாசம் போனது போல * எலிக்கு அஞ்சுவான்; புலிக்கு அஞ்சானாம் * எலிக்கு அநுகூலம் பாம்பு பிடாரனுக்கு அஞ்சுதல்; எளியார்க்கு அநுகூலம் வலியார் அரசனுக்கு அஞ்சுதல் * எலிக்கு இரணம்; பூனைக்குக் கொண்டாட்டம் * எலிக்குத் திண்டாட்டம்; பூனைக்குக் கொண்டாட்டம் * எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டது போல * எலிக்குப் பிராணாவஸ்தை பூனைக்குக் கொண்டாட்டம் * எலிக்குப் பூனை பயப்படுமா? * எலிக்கு மணியம், சுவரை அறுக்கிறது * எலிக்கு வலி, பூனைக்குக் கொண்டாட்டம் * எலி கடித்தால் சிறுபாலை அடி * எலி தலையிலே கோடரி விழுந்தது போல * எலி தலையிலே கோபுரம் இடிந்து விழுந்தது போல * எலிப் பகை தொலைக்க, இருந்த வீட்டில் தீயிடல் போல * எலிப் பாழாக இருந்தாலும் தனிப் பாழாக இருக்க வேண்டும் * எலிப் புழுக்கை இறப்பில் இருந்தென்ன? வரப்பில் இருந்தென்ன? * எலி பூனைக்குச் சலாம் போடுவது போல * எலி பூனைய வெல்லுமா? * எலி பெருத்தால் பெருச்சாளி ஆகுமா? * எலியாரைப் பூனையார் வாட்டினால் பூனையாரை நாயார் வாட்டுவார் * எலியின் சிறங்கை சில தானியத்தால் நிரம்பும் * எலியும் பூனையும் இணைந்து விளையாடினது போல * எலியும் பூனையும் போல * எலியைக் கண்டு பூனை ஏக்கம் அடையுமா? * எலியைக் கண்டு பூனை ஏங்கி ஏங்கிக் கிடக்குமோ? * எலியைத் தவற விட்ட பூனை போல * எலியோ, பூனையோ சர சர என்கிறது; என்னடி சிறுக்கி பயமுறுத்துகிறாய்? * எலி வளை ஆனாலும் தனி வளை வேண்டும் * எலி வளையில் பாம்பு குடிபுகுந்தாற் போல * எலி வீட்டைச் சுற்றுகிறது; விருந்தாளி பெண்டுகளைச் சுற்றுகிறான் * எலி வீடு கட்டப் பாம்பு குடி கொள்ளும் * எலி வெட்டிச் சோதிக்கிறாற் போல் * எலி வேட்டை ஆடத் தவில் வேணுமா? * எலும்பு இல்லா நாக்கு எல்லாம் பேசும் * எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா? * எலும்பு கடிக்கிற நாய்க்குப் பருப்பும் சோறும் ஏன்? * எலும்பு ருசியை நாய்தான் அறியும்? * எலும்பைக் கடிப்பானேன்? சொந்தப் பல்லும் போவானேன்? * எலும்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்த்தான் * எலும்பே இல்லாத நாக்கு எலும்பு உள்ள மனிதனை எழவிடாமல் பண்ணிவிடுகிறது * எலுமிச்சங் காய்க்குப் புளிப்பு ஏற்றுகிறது போல * எலுமிச்சஞ் செடிக்கு எருப் போட்டாற் போல * எலுமிச்சம் பழம் என்றால் தெரியாதா? இஞ்சி போலக் கசக்கும் என்றானாம் * எவ்வளவு தின்றாலும் நாய் வயிறு ஒட்டித்தான் இருக்கும் * எவ்வளவு புரண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும் * எவர் வைத்த தீயோ, வீடு வெந்து போயிற்று * எவன் ஆகிலும் தான் சாக மருந்து உண்பானா? * எவன் பெண்டாட்டி எவனோடு போனாலும் லெப்பைக்கு மூன்று பணம் * எவனோ செத்தான்; அவள் ஏன் அழுதாள்? * எவனோ சொல்வானாம் கதை; அதைப் போல இருக்கிறதே! * எவனோ வைத்தான் தோப்பு; அதை இழுத்தடித்ததாம் காற்று * எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி * எழுத்து அறச் சொன்னாலும் பெண் புத்தி பின்புத்தி * எழுத்து அறிந்த மன்னன் கிழித்தெறிந்தான் ஓலை * எழுத்து அறிந்த வண்ணான் குறித்து எறிந்தான் ஓலை * எழுத்து அறியாதவன் ஏட்டைச் சுமந்தது போல * எழுத்து இல்லாதவன் கழுத்து இல்லாதவன் * எழுத்து எண்ணிப் படித்தவன் * எழுத்துக்குப் பால் மாறின கணக்கனும் உடுக்கைக்குப் பால் மாறிய தாசியும் கெடுவர் * எழுதத் தெரியாதவன் ஏட்டைக் கெடுத்தான் * எழுத வழங்காத வாழ்க்கை கழுதை புரண்ட களம் * எழுத வாசிக்கத் தெரியாமற் போனாலும் எடுத்துக் கவிழ்க்கத் தெரியும் * எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா? * எழுதாத ஓலையும் பீற்றல் முறமும் வந்தது போல் * எழுதி அறான் கணக்குக் கழுதை புரண்ட களம் * எழுதிய விதி அழுதால் திருமா? * எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம் * எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான் * எழுதுகிற எழுத்தாணி இரட்டைக் கூர்பட்டாற் போல * எழுதுகிற எழுத்தாணி குத்துகிறது போல * எழுதுகிறது பெரிது அல்ல; இனம் அறிந்து சேர்க்கிறது பெரிது * எழுதுவது அருமை; எழுதினதைப் பழுதற வாசிப்பது அதிலும் அருமை * எழுந்ததும் தொழு; தொழுததும் படு * எழுந்தருளும் கோவிலுக்கு விளக்குப் பிடிக்க * எழுந்திருக்கச் சொன்னவர்கள் என் பாவம் கொண்டவர்கள் * எழுந்திருக்கப் பால் மாறி இல்லை என்றாளாம் பிச்சை * எழுந்திருப்பான்; கால் இல்லை * எழுப்பவோ, துஞ்சு புலியைத் துயில் * எழுபது சொன்னாலும் பறை ஏவினால்தான் செய்யும் * எழுபது பேரைக் கொன்ற படுநீலி * எள் அத்தனையை மலை அத்தனை ஆக்குகிறது * எள் உருண்டை போல * எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருவான் * எள் என்பதற்கு முன்னே எண்ணெய் எங்கே என்கிறான் * எள் ஏன் காயுது? எள் எண்ணெய்க்கு; எலிப் புழுக்கை ஏன் காயுது? கூடக் கிடந்த குற்றத்துக்கு * எள் போட்டால் எள் விழாது * எள் விதைத்த காட்டில் கொள் முளையாது * எள் விதைத்தால் துவரை விளையுமா? * எள் விழுந்தால் எடுக்க மகா சேனை; இடறி விழுந்தால் எடுக்க மனிதர் இல்லையே! * எள் விழுந்தால் கீழே விழாது * எள்ளாக இருந்தாலும், ஏழு பேருக்கு பகுத்து உண். * எள்ளிலும் சின்ன இலை என்ன இலை? விடத்தாரி இலை * எள்ளுக்காய் பிளந்த விவகாரம் * எள்ளுக்காய் பிளந்தாற் போலப் பேச வேண்டும் * எள்ளுக்காய் முள்ளுத் தெறிப்பது போல * எள்ளுக்கு ஏழு உழவு உழுகிற வேளை, வேளாளா, கொள்ளுக்கு ஓர் உழவு உழுது பயிர் செய் * எள்ளுக்கு ஏழு உழவு, கொள்ளுக்கு ஓர் உழவு * எள்ளுக்குத் தக்க எண்ணெய், எண்ணெய்க்குத் தகுந்த பிண்ணாக்கு * எள்ளுக்குப் புள்ளு வரும்; எச்சிற்கு எறும்பு வரும் * எள்ளுக்குள் எண்ணெய் போல * எள்ளுக்குள் எண்ணெய் எங்கும் நிறைந்திருக்கும் * எள்ளுக் குறுணி; எலி முக்குறுணி * எள்ளுடன் ஏதோ காய்கிறது என்பார்கள் * எள்ளுத்தான் எண்ணெய்க்குக் காய்கிறது; எலிப் புழுக்கை எதற்குக் காய்கிறது? கூடக் கிடந்த பாவம் * எள்ளுத் தின்றால் எள்ளளவு பசி தீரும் * எள்ளுப் பயிரானாலும் நெல்லுப் பயிர் செய் * எள்ளுப் பயிருக்கு எழுபது நாள் * எள்ளுப் போட்டால் எள் எடுக்கப் போகாது * எள்ளும் அரிசியும் கலந்தாற் போல * எள்ளும் கரும்பும் இறுக்கினாற் பலன் தரும் * எள்ளும் கரும்பும் எடுக்கும் பயிராம் * எள்ளும் கொள்ளும் எழுபது நாள் * எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டியதுதான் * எள்ளும் தண்ணீரும் கரத்தில் ஏந்திச் செல்கிறான் * எள்ளும் தண்ணீரும் விட்டுத் தத்தம் பண்ணினேன் * எள்ளும் தினையும் எழுபது நாளில் பலன் தரும் * எள்ளும் பச்சரிசியும் கலந்தாற் போல் * எள்ளும் பச்சரியும்போல் இருக்க வேண்டும் * எள்ளு விதைக்க எறங்காடு; கொள்ளு விதைக்கக் கல்லங்காடு * எள்ளுள் எண்ணெய் போல் * எள்ளைத் தின்றான், எனக்கு உழைக்கிறான் * எள்ளை நீக்கிக் கொண்டு வரப்போன பேய் எண்ணெய் கொண்டு வர இசைந்தது போல * எள்ளைப் பிய்த்து எழுபது பேருக்குக் கொடுப்பது போல * எளியவன் பிள்ளை ஆனாலும் செய்ய வேண்டிய சடங்கு செய்ய வேண்டும் * எளியவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மைத்துணி * எளியவனாய்ப் பிறந்தாலும் இளையவனாய்ப் பிறக்கக் கூடாது * எளியவனுக்குப் பெண்டாட்டியாய் இருக்கிறதைவிட வலியவனுக்கு அடிமையாகிறது நலம் * எளியவனைக் கண்டு புளியங்காய் பறிக்கிறான் * எளியவனைக் கண்டு வாயால் ஏய்க்கிறான் * எளியாரை எதிரிட்டுக் கொண்டால் பிரான ஹாளி * எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும் * எளியாரை வலியார் அடித்தால் வலியாரை வாசற்படி அடிக்கும் * எளியாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும் * எற்று சால் எண்ணாயிரம் பொன் * எறிகிறது முயலுக்கு; படுகிறது பற்றைக்கு * எறிச்ச கறி பழையமுது எந்நாளும் கிடைக்குமா? * எறிந்த கல் விழுகிற மட்டும் * எறிந்த கல்லைக் கவுளிற் கொண்ட களிறு போல * எறிவார் கையிலே கல்லைக் கொடுக்கிறதா? * எறிவானேன்? சொறிவானேன்? * எறும்பின் கண் அதன் அளவுக்குப் பெரிது; ஆனையின் கண் அதன் அளவுக்குச் சிறிது * எறும்பு ஆனை ஆகுமா? துரும்பு தூண் ஆகுமா? * எறும்பு இட்டலியைத் தூக்கியது போல * எறும்பு ஊர்வது போல * எறும்பு ஊர இடம் கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான் * எறும்பு ஊர கல்லும் தேயும் * எறும்பு ஊரில் பெரும்புயல் வரும் * எறும்பு எடுத்துப் போவதற்குத் தடி எடுத்து நிற்கிறதா? * எறும்பு எண்ணாயிரம், அப்பாற் கழுதையும் கை கடந்தது என்றபடி * எறும்பு எண்ணாயிரம் கோடிக்கும் தெரியும் * எறும்புக் கடிக்கு மருந்தா? * எறும்புக்குக் கொட்டாங்கச்சித் தண்ணீர் சமுத்திரம் * எறும்புக்குத் தெரியாத கரும்பா? * எறும்புக்குத் தன் மூத்திரமே வெள்ளம் * எறும்பு கட்டிய புற்றில் பாம்பு குடிபுகுந்தாற் போல் * எறும்பு கடிக்கப் பொறுக்காதா? * எறும்பு சேர்ப்பது போல எல்லோரும் சேர்க்க வேண்டும் * எறும்பு தின்றால் எண்ணாயிரம் காலம் * எறும்பு தின்றால் நூறு வயசு * எறும்பு நுழைந்த ஆனைக் காது போல * எறும்பு நுழைய இடம் கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான் * எறும்புப் புற்றில் பாம்பு குடி கொள்வது போல * எறும்பும் தன் கையால் எண் சாண் * எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்யும் * எறும்பு முதல் ஆனை வரையில் * என் காரியம் எல்லாம் நந்தன் படை வீடாய்ப் போயிற்று * என் கிண்டி லட்சம் பொன் * என் குடி கெட்டதும் உன் குடி கெட்டதும் பொழுது விடிந்தால் தெரியும் * என் குடுமி அவன் கையில் அகப்பட்டுக் கொண்டது * என் கை பூப்பறிக்கப் போகுமா? * என் கையிலே எலும்பு இல்லையா? * என் கை வெல்லம் தின்கிறதா? * என் சீட்டுக் கிழிந்து போனால் அல்லவோ சாவு வரும்? * என் தலைக்கு எண்ணெய் ஊற்று; எருமை மாட்டுக்கும் புல் போடு * என் தோலைச் செருப்பாய்த் தைத்துப் போடுவேன் * என் பிழைப்புச் சிரிப்பாய்ச்சிரிக்கிறது தெருவிலே * என் புத்தியைச் செருப்பால் அடிக்க வேணும் * என் புருஷனுக்கும் அரண்மனையில் வேலை * என் பெண் பொல்லாது; உன் பிள்ளையை அடக்கிக் கொள் * என் பேரில் தப்பு இருந்தால் என்னை மொட்டை அடித்துக் கழுதையின்மேல் ஏற்றிக் கொள் * என்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்ந்தார் * என் மகள் வாரத்தோட வாரம் முழுகுவாள்? என் மருமகள் தீவிளிக்குத் தீவிளி முழுகுவாள் * என் மருமகனுக்கு வேப்பெண்ணெயாம் தூக்கெண்ணெய்; விளக்கெண்ணெயாம் தலைக்கு எண்ணெய் * என் முகத்தில் கரி தடவாதே * என் முகத்தில் கரி பூசினாயே! * என் முகத்திலே பவிஷு இல்லை; கையிலே பணம் இல்லை * என் முகுதுத் தோல் உனக்குச் செருப்பாய் இருக்கிறது * என் முதுகை நீ சொறிந்தால் உன் முதுகை நான் சொறிவேன் * என் வயிற்றிலே பாலை வார்த்தாய் * என் வீட்டுக்குப் பூவாயி வரப் பொன்னும் துரும்பாச்சு * என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உன் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய்? * என் வீடும் பாழ்; எதிர்த்த வீடும் பாழ் * என்று நின்றும் பொன்றுவர் ஒரு நாள் * என்றும் இடி குலைச்சல் எப்பொழுதும் நீங்குவது இல்லை * என்றும் காய்க்கும் எலுமிச்சை * என்றும் பயப்படுவதிலும் எதிரே போதல் உத்தமம் * என்றைக்கு இருந்தாலும் கிணற்றங்கரைப் பிள்ளையார் கிணற்றிலேதான் * என்றைக்கு இருந்தாலும் கொங்கல் காற்றோடே, குமுமம் ஆற்றோடே * என்றைக்கு இருந்தாலும் திருடன் பெண்டாட்டி தாலி அறுக்கத்தான் வேண்டும் * என்றைக்கு இருந்தாலும் திருமழபாடி ஆற்றோடே * என்றைக்கும் போடாத லட்சுமி இன்றும் போடவில்லை; தினம் போடுகிற தேவடியாளுக்கு இன்றைக்கு என்ன கேடு வந்தது? * என்ன, சின்னமலைக் கவுண்டன் அதிகாரம் போல் இருக்கிறதே! * என்ன சொன்னாலும் என் புத்தி போகாது * என்னடா அப்பா என்றானாம்; எலி அம்மணமாய் ஓடுகிறது என்றானாம் * என்னடா ஒன்று ஒன்றாகக் குருவி போலப் கொரிக்கிறாய்? * என்னடா. குச்சுக் கட்டிப் பேசுகிறாய் * என்னடா கெட்டுப் போனாய் என்றால், இன்னமும் கெட்டுப் போகிறேன், பந்தயம் போடு என்கிறான் * என்னடா சவுக்கம் கட்டிப் பேசுகிறாய்? * என்னடா தாதா, புரட்டாசி மாசம் முப்பதும் ஒரு கந்தாயம் * என்னடா பிரம்ம வித்தையோ? * என்னடி அம்மா தெற்கத்தியாள், எந்நேரம் பார்த்தாலும் தொள்ளைக் காது * என்னடி பெண்ணே கும்மாளம் என்றால் சின்ன மச்சானுக்குக் கல்யாணம் * என்ன தின்றாலும் அதற்கு மேல் நாலு பேரீச்சம் பழம் தின்றால் எல்லாம் அடிபடும் * என்னது இல்லை இரவல், மாமியாரது மரவை * என்ன பிள்ளை? அணிற் பிள்ளை, தென்னம் பிள்ளை * என்ன பெருமையடி ஏகாலி என்றால் அமுக்குப் பெருமையடி குருநாதா! * என்னமாய்ச் சொல்லி இதமாய் உரைத்தாலும் கழுதைக்கு உபதேசம் காதில் ஏறாது * என்ன மாயம் இடைச்சி மாயம்? மோரோடுதண்ணீர் கலந்த மாயம் * என்ன விலை ஆனாலும் நாய் நாய்தானே? * என்னவோ சொன்னாளாம் பொம்மனாட்டி; அதைக் கேட்டானாம் கம்மனாட்டி * என்ன ஜன்மம் வேண்டியிருக்கிறது? நாய் ஜன்மம் * என்னால் ஆகாதது என் குசுவாலா ஆகும்? * என்னால் ஆன உப்புத் திருமஞ்சனம் * என்னிலும் கதி கெட்டவன் என்னை வந்து மாலையிட்டான் * என்னிலும் மேல் இல்லை; என் நெல்லிலும் சாவி இல்லை * என்னுடைய வீட்டுக்குப் பூவாயி வரப் பொன்னும் துரும்பாச்சு * என்னை ஆட்டுகிறது, உன்னை ஆட்டுகிறது, மன்னி கழுத்துத் தாலி * என்னை இடுக்கடி, பாயைச் சுருட்டடி * என்னை ஏண்டா அடிக்கிறாய்? பிள்ளையாண்டிருக்கிறேன் * என்னைக் கண்டால் சணலுக்குள்ளே ஒளிக்கிறாய்? என் பெண் சாதியைக் கண்டால் சட்டிக்குள்ளே ஒளிக்கிறாய் * என்னைக் கலந்தவர்கள் என்றாலும் கைநிறையப் பொன் கொடுத்தால் புணர்ந்து விடுவேன் * என்னைக் கெடுத்தது நரை, என் மகளைக் கொடுத்து முலை * என்னை நம்பாதே, தாலி வாங்காதே * என்னைப் பவிஷு ஆற்றுகிறான் * என்னைப் பார் என் மேனி அழகைப் பார் * என்னைப் போலக் குரலும் என் அக்காளைப் போல ஒயிலும் இல்லை என்கிறதாம் கழுதை * என்னையும் பார்த்து இரவல் கேட்கிறதா? * என்னை விடைந்தால் உன்னை விடைவேன்; அம்மலாமா * எனக்கா கல்யாணம் என்றானாம் * எனக்கு அஷ்டமத்துச் சனி * எனக்கு ஊணும் இல்லை; உறக்கமும் இல்லை * எனக்கு என்று ஒரு பெண்டாட்டி இருந்தால் சடக்கென்று ஓர் அடி அடிக்கலாம் * எனக்குக் கட்டின லிங்கத்தைக் குழிப்பாக்கு விளையாடுவேன் * எனக்குக் கொடுக்கிறதைக் கொடுத்தால் போகிறேன் * எனக்குப் பழையது போடு; உனக்குப் பசியா வரம் தருகிறேன் * எனக்குப் பாக்குப் பிடிக்கப் பார்க்கிறான் * எனக்கு வேண்டாம் பூசணிக்காய் * எனது நாட்கள் எல்லாம் ஊமை கண்ட கனாப்போல் ஆயின ==ஏ== * ஏஊரையா என்றால் கேழ்வரகு எட்டுப் படி என்றானாம். * ஏகமும் செத்தவனே ஏறடா பாடையிலே. * ஏகாத்தே என்றால் பூகாத்தே என்றாள். * ஏகாதசி என்றைக்கு என்றால் அகமுடையாள் புடைவையைப் பார்த்துச் சொல்கிறேன் என்றாளாம். * ஏகாதசித் திருடியை ஏற்றடா ரதத்தின்மேல். * ஏகாதசிக்கு மா இடித்தாற் போல. * ஏகாதசி தோசை; இளையாள்மேல் ஆசை. * ஏகாதசி பாஞ்சோத்; துவாதசி அச்சா ஹை. * ஏகாதசி மரணம் என்று நாக்கைப் பிடுங்கிக் கொண்டானாம். * ஏகாதசி மரணம், துவாதசி தகனம். * ஏகாதசி மரணம் முக்தி என்று நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகிறதா? * ஏகாதசியார் வீட்டுக்குச் சிவராத்திரியார் வந்து போன கதை. * ஏகாதசி விரதம் என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வார்களா? * ஏகாசி வீட்டில் சிவராத்திரி நுழைந்தாற் போல. * ஏகாலி வாகனம் பொதி சுமந்தாற் போல. * ஏகாக்ஷி லோக நாசினி. * ஏகோதிஷ்டக் காரனுக்குச் சபிண்டிக்காரன் சாட்சி. * ஏச்சிலும் பேச்சிலும் வல்லவனே. * ஏச்சுக்கு ஒன்றும் இல்லை என்றால் எருமைக்காரனுக்கு முட்டியில் சிரங்கு. * ஏட்டில் அடங்காது, எண்ணத் தொலையாது. * ஏட்டில் சர்க்கரை என்று எழுதி நக்கினால் இனிக்குமா? * ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா? * ஏட்டுச் சுரைக்காயோ, வீட்டுச் சுரைக்காயோ? * ஏட்டிக்குப் போட்டி, எகனைக்கு மொகனை. * ஏடா கூடக்காரனுக்கு இடம் எங்கே என்றால் இருக்கிறவன் தலைமேலே என்பான். * ஏடாகூடம் எப்படி என்றால் போகின்றவன் தலையில் பொத்தென்று அடித்தான். * ஏடாகூடம் பேசினால் அகப்பைச் சூனியம் வைப்பேன். * ஏடு அறியாதவன் பீடு பெறாதவன். * ஏடு கிடக்கத் தோடு முடைந்தாளாம். * ஏடைக்கும் கோடைக்கும் இருந்தால் இழி கண்ணி. * ஏண்டா கருடா சுகமா என்றால், இருக்கிற இடத்தில் இருந்தால் சுகந்தான் என்றான். * ஏண்டா தம்பி குருநாதா, இதற்குள் வந்து புகுந்து கொண்டாய்? * ஏண்டா தென்ன மரத்தில் ஏறுகிறாய் என்றால் கன்றுக்குட்டிக்குப் புல்பிடுங்க என்றான்; தென்ன மரத்தில் ஏதடா புல் என்றால் அதுதானே கீழே இறங்கி வருகிறேன் என்றான். * ஏண்டா பட்டப்பகலில் திருடினாய் என்றால் என் அவசரம் உனக்குத் தெரியுமா என்கிறான். * ஏண்டா புளிய மரத்தில் ஏறினாய் என்றால் புளிய மரத்தில் புல் பறிக்க என்கிறான். * ஏண்டி கிழவி மஞ்சள் குளிக்கிறாய்? பழைய நினைப்படா பேரா. * ஏணிக் கழிக்குக் கோணற் கழி வெட்டலாமா? * ஏணிக்குக் கோணி. * ஏணிக்குக் கோணியும் ஏட்டிக்குப் போட்டியும். * ஏணிக் கொம்புக்குக் கோணற் கொம்பு போடலாமா? * ஏணியைத் தள்ளிவிட்டுப் பரண்மேல் ஏறலாமா? * ஏணி வைத்தாலும் எட்டாது * ஏணைக் கழிக்குக் கோணற் கழி வெட்டுகிறதா? * ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டாற்போல். * எது என்று கேட்பாரும் இல்லை; எடுத்துப் பிடிப்பாரும் இல்லை. * ஏதுக்கு வீணும் சாணும். * ஏதும் அற்றவனுக்கு எரிமுட்டைப் பாளையம் திருவிழா; போக்கற்றவனுக்குப் பொன்னேரித் திருவிழா. * ஏதும் அற்றவனுக்கு ஏன் இரண்டு பெண்டாட்டி? * ஏதும் இல்லை, எக்காந்தமும் இல்லை; பூநாகம். * ஏதும் இல்லை, எக்காந்தமும் இல்லை; பூநாகம். * ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை. * ஏப்பம் பரிபூரணம்; சாப்பாடு பூஜ்யம். * ஏமாந்த சோணகிரி. * ஏமாந்தால் நாமம் போடுவான்; இணைப்பு ஒட்டவில்லை. * ஏய்த்தால் மதனியை ஏய்ப்பேன்; இல்லாவிட்டால் பரதேசம் போவேன். * ஏர் அற்றவன் இரப்பாளி. * ஏர் அற்றுப் போனால் சீர் அற்றுப் போகும். * ஏர் உழுகிறது; கன்னி கரைகிறது. * ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம். * ஏர் உழுகிற பிள்ளை இளைத்துப் போனால் போகிறது; பரியம் போட்ட பெண்ணைப் பார்த்து வளர். * ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மைத்துனன் முறை கொண்டாடும். * ஏர் உழுகிறவனுக்கு ஏகாதசி விரதமா? * ஏர் ஓட்டுவதிலும் எரு விடுதல் நன்று. * ஏர் நடந்தால் பேர் நடக்கும். * ஏர் பிடிக்கிறவனுக்கு இடது கையில் மச்சம்; வாழப் புகுந்தவளுக்கு வலது கையில் மச்சம். * ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம். * ஏர் பிடித்தவன் முன்னேறினால் செங்கோல் பிடித்தவன் செழிப்பான். * ஏர் பூட்டுவதற்குள் பிராணன் போய்விடும். * ஏரி நிறைந்தால் கரை கசியும். * ஏரி உடைகிறதற்கு முன்னே அணை போட வேண்டும். * ஏரி உடைத்தவள் கம்பளியைப் பிடித்துக் கொண்டால் சரியா? * ஏரி எத்தனை ஆள் கண்டிருக்கும்? ஆள் எத்தனை ஏரி கண்டிருப்பான். * ஏரிக்கு ஏற்ற எச்சக்கலை; குலத்துக்கு ஏற்ற குசவன் குட்டை. * ஏரிக்குப் பயந்து கால் கழுவாமல் ஓடினானாம். * ஏரிக்கும் மடுவுக்கும் ஏற்ற வித்தியாசம். * ஏரி நிமிர்ந்தால் இடையனையும் பாராது. * ஏரி நிரம்பினால் இடைக்கரை பொசியும். * ஏரி நிறைந்தால் கரை கசியும். * ஏரி நீரைக் கட்டுவது அரிது; உடைப்பது எளிது. * ஏரி பெருகில் எங்கும் பெருக்கு. * ஏரி மடை என்றால் நோரி மழை. * ஏரி மிதந்தால் குடை அணை மிறியாது. * ஏரி மேலே கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போனாள். * ஏரியோடு பகை செய்து ஸ்நானம் செய்யாதிருப்பதா? * ஏரியோ தண்ணீர், சூரிய தேவா. * ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும். * ஏரை அடித்தேனோ, கூழை அடித்தேனோ? * ஏரை இழந்தார் பேரை இழந்தார். * ஏலவே தொலைந்தது எங்களை தொட்ட கர்மம். * ஏலாத நாய்க்கு வால் டேங்குவது போல. * ஏலேல சிங்கன் பொருள் ஏழு கடல் போனாலும் திரும்பும். * ஏலேலம்! ஏலேலம்! எருமைச் சாணி காய்கிறது. * ஏவற்பேய் கூரையைப் பிடுங்கும். * ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை. * ஏழரை நாட்டுச் சனியனை இரவல் வாங்கின கதை. * ஏழு அறை கட்டி அதிலே வைத்தாலும் ஓர் அறையில் சோரம் போவாள். * ஏழாம் பொருத்தம். * ஏழு உழவு உழுதால் எருப் போட வேண்டாம். * ஏழு உழவுக்கு ஓர் எடுப்புழவு சரி என்பது போல். * ஏழு ஊர் சுற்றிப் பாழூர் மணத்தட்டை. * ஏழு ஊர் லங்கடா, எருமைக்கடா காவு, வீட்டுக்கு ஒரு துடைப்பக் கட்டை, உஷார், உஷார். * ஏழு ஊருக்கு ஒரு கொல்லன். * ஏழு ஊருக்கு ஒரு தட்டான். * ஏழு மடிப்பு உழுத புலமும் ஏழு உலர்த்து உலர்த்தின விதையும் எழுபதுநாள் காய்ச்சல் தாளும். * ஏழு வருஷம் மஞ்சள் பயிர் இட்டால் என் நிறம் ஆக்கிடுவேன் என்று அது சொல்லும். * ஏழேழு ஜன்மத்துக்கும் போதும். * ஏழை அழுத கண்ணீர் கூரிய வாள் ஒக்கும். * ஏழைபேச்சு அம்பலம் ஏறாது. * ஏழை அடித்தானோ? கூழை அடித்தானோ? * ஏழை என்கிற பிராமணனையும் சாது என்கிற பசுவையும் நம்பாதே. * ஏழை என்றால் எவர்க்கும் எளிது. * ஏழை என்றால் மோழையும் பாயும். * ஏழைக்கு இரங்கி வேளைக்கு உதவு. * ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை; பணக்காரனுக்கு ஏற்ற பருப்புருண்டை. * ஏழைக் குடித்தனம், ராஜவைத்தியம். * ஏழைக்கும் மோழைக்கும் காடுகாள் அம்மை. * ஏழை பாக்குத் தின்ன எட்டு வீடு அறிய வேண்டுமா? * ஏழைக்கு வாழை. * ஏழைக் குறும்பு. * ஏழை கர்வம் சும்மா இருக்கவிடாது. * ஏழைகளின் செல்வம் பிள்ளைகளே. * ஏழை கூழுக்கு உப்பில்லை என்று ஏங்குகிறான்; பணக்காரன் பாலுக்குக் சக்கரை இல்லை என்று ஏங்குகிறான். * ஏழை சொல் அம்பலம் ஏறாது. * ஏழை தலையில் கங்கை குதித்தாற் போல். * ஏழைப் பிள்ளைக்கு எவர்களும் துணை. * ஏழைப் பிள்ளைக்குத் தெய்வமே துணை. * ஏழை பேச்சு அம்பலம் பாயுமா? * ஏழையைக் கண்டால் மோழையும் பாயும். * ஏழை வீட்டில் ஆனையைக் கட்டுவது போல. * ஏழை வைத்தான் வாழை; மகளை வைத்தான் காவல். * ஏளிதம் பேசி இவ்வேடம் ஆனேன். * ஏற்கனவே கோணல் வாய்; அதிலும் கொட்டாவி விட்டால் எப்படி? * ஏற்கனவே துர்ப்பலம்; அதிலும் கர்ப்பிணி. * ஏற்கனவே மாமியார் அலங்கோலம்; அதிலே கொஞ்சம் பேய்க் கோலம். * ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் இப்போது கிழக்கோலம். * ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் கொஞ்சம் அக்கிலி, பிக்கிலி. * ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் கொஞ்சம் மாக்கோலம். * ஏற்கை வாசனை, சேர்க்கை வாசனை. * ஏற்பது இகழ்ச்சி. * ஏற்றக் கோலுக்குப் பிடித்தால் அரிவாள் பிடிக்கு வரும். * ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம். * ஏற்றக் கோலுக்கும் அரிவாள் பிடிக்கும் உள்ள தாரதம்யம். * ஏற்றத்துக்கு மேல் காத்து நிற்பதை விட இரண்டு சால் தண்ணீருக்குக் கஞ்சி குடிக்கலாம். * ஏற்றப் பறி நிரம்பினால் சோற்றுப் பானை தானே நிரம்பும். * ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு இல்லை; பூசாரி பாட்டுக்குப் பின்பாட்டு இல்லை. * ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு. * ஏற ஆசைப்பட்டால் சாணாரப் பிறவி வேண்டும். * ஏற ஒன்று இறங்க ஒன்று, எனக்கு ஒன்று, உனக்கு ஒன்று, இன்னொன்று இருக்குது தந்தால் தா, தராவிட்டால் போ. * ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம். * ஏறச் சொன்னால் குதிரைக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் ராவுத்தருக்குக் கோபம். * ஏறப் படாத மரத்திலே எண்ணப் படாத மாங்காயாம். * ஏறப் பார்க்கும் நாய்; இறங்கப் பார்க்கும் பூனை. * ஏற முடியாத மரத்திலே எண்ணாயிரம் மாங்காய். * ஏற விட்டு ஏணியை வாங்குகிறதா! * ஏறாத வார்த்தை வசமாகுமா? * ஏறா மடைக்கு நீர் பாய்ச்சுவது போல. * ஏறா மேடும் பாயாத் தண்ணீரும். * ஏறி அடுத்து வில் போட்டால் மாறி அடித்து மழை பெய்யும். * ஏறி இருந்த கொம்பை வெட்டுபவனைப்போல. * ஏறி இறங்கும் திருமேனி, எங்கும் கண்ட திருமேனி, தட்டிக் கொட்டும் திருமேனி, வெள்ளை வெளுக்கும் திருமேனி. * ஏறிய கொக்கு என்று இருந்தாயோ கொங்கணவா? * ஏறின வரையும் திருப்பணி; கீழே கிடப்பதுகல். * ஏறினால் எருதுக்குக் கோபம்; இறங்கினால் நொண்டிக்குக் கோபம். * ஏறினால் குற்றம்; இறங்கினால் அபராதம். * ஏறுகிற குதிரைக்கு எருதே மேல். * ஏறுகிற குதிரையிலும் உழவு மாடு அதிக உத்தமம். * ஏறுகிறவன் இடுப்பை எத்தனை தூரம் தாங்கலாம்? * ஏறு நெற்றி ஆறுதலை எதிர்க்க வந்தால் ஆகாது. * ஏறும் தேமல், இறங்கும் தேமல். * ஏறும் தேமல், இறங்கும் படர் தாமரை, கூடும் புருவம் குடியைக் கெடுக்கும். * ஏறும் மடைக்கு நீரைப் பாய்ச்சுவது போல. * ஏறு மாறாய்ப் பேசுகிறதா? * ஏன் அடா இடறி விழுந்தாய் என்றால் இதுவும் ஒரு கெருடி வித்தை என்றானாம். * ஏன் அடா கருடா சுகமா? இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம் என்கிறது. * ஏன் அடா கிழவா, இளைத்தாய் குதிர் போல? * ஏன் அடா தம்பி இளைத்தாய் என்றால், இதிலும் துரும்பானாலும் உனக்கு என்ன என்ற கதை. * ஏன் அடா தம்பி, ரகுநாதா, இதற்குள் வந்து புகுந்து கொண்டாய்? * ஏன் அடா தென்ன மரத்தில் ஏறினாய் என்றால், கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க, என்கிறான்; தென்ன மரத்தில புல் ஏதடா என்றால், அதுதானே கீழே இறங்குகிறேன் என்கிறான். * ஏன் அடா பட்டப் பகலில் திருடுகிறாய் என்றால் என் அவசரம் உனக்குத் தெரியுமா என்கிறான். * ஏன் அடா புளிய மரத்தில் ஏறினாய் என்றால் பூனைக் குட்டிக்குப் புல்பறிக்க என்கிறான். * ஏன் அடா பையா, இடறி விழுந்தாய் என்றால் இதுதான் ஒரு கெருடி வித்தை என்றானாம். * ஏன் அடா முடிச்சை அவிழ்க்கிறாய்? என் பசி உனக்குத் தெரியுமா? * ஏன் அடா விழுந்தாய் என்றால், கரணம் போட்டேன் என்றானாம். * ஏன் அடி அக்கா இலையாய்ப் பறக்கிறாய்? எங்கள் வீட்டுக்கு வா, காற்றாய்ப் பறக்கலாம். * ஏன் அடி சிறுக்கி, புல்லு ஆச்சா? ஒரு நொடிக்குமுன் கட்டு ஆச்சே. * ஏன் அடி பாட்டி, மஞ்சள் குளித்தாய் பழைய நினைப்படா பேராண்டி. * ஏன் அடி பெண்ணே, இளைத்தாய் குதிர் போலே? * ஏன் அடி பெண்ணே, குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல். * ஏன் அயலானைக் கண்டாளாம்; ஏணிப் பந்தம் பிடித்தாளாம். * ஏன் உதட்டாண்டே என்றால் ஏன் பல்லாண்டே என்ற கதை. * ஏன் என்பாரும் இல்லை; எடுத்து விழிப்பாரும் இல்லை. * ஏன் காணும் தாதரே, ஆண்டி புகுந்தீர்? இரவும் ஒரு மண்டலம் பார்த்து விடுவோம். * ஏன் கொழுக்கட்டை சவுக்கிட்டாய்? ஒருகாசு வெல்லம் இல்லாமல் சவுக்கிட்டேன் * ஏன் கொழுக்கட்டை நட்டுக் கொண்டாய்? வெல்லம் இல்லாமல் பிட்டுக் கொண்டேன். * ஏன் பறையா என்கிறதைவிட வள்ளுவப் பறையா என்கிறது மேல். * ஏன வாயனைக் கண்டானாம்; ஏணிப் பந்தம் பிடித்தானாம். * ஏனானாம் கோத்திரத்துக்குத் தானானாம் தர்ப்பயாமி. * ஏனோ தானோ எவனோ செத்தான். * ஏனோ தானோ என்றிருத்தல். ==ஐ== * ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு. * ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது * ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா? * ஐங்கலக் கப்பியில் நழுவின கப்பி. * ஐங்காதம் போவதற்கு அறிமுகம் தேவை. * ஐங்காதம் போனாலும் அகப்பை அரைக் காசு. * ஐங்காதம் போனாலும் தன் நிழல் தன்னுடன்தானே வரும்? * ஐங்காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே. * ஐங்காதம் போனாலும் தன் பாவம் தொலையாது. * ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச் சுரைக்காய்க்கு. * ஐங்காயம் இட்டு அவரைப் பருப்பு இட்டாலும் தன் நாற்றம் போகாது பேய்ச் சுரைக்காய். * ஐதது நெல்லு; அடர்ந்தது சுற்றம். * ஐதர் அலி என்றால் அழுத பிள்ளையும் வாய் மூடும்; * ஐதர் காலம். * ஐந்து சிட்டுக்கு இரண்டு காசு விலை. * ஐந்தும் மூன்றும் எட்டு; அத்தை மகளைக் கட்டு. * ஐந்து வயதில் ஆதியை ஓது * ஐந்தும் மூன்றும் எட்டு; அத்தை மகளைக் கட்டு. * ஐந்து வயதில் ஆதியை ஓது. * ஐந்து வருஷம் கொஞ்சி வளர்; பத்து வருஷம் அடித்து வளர்; பதினாறு வருஷம் தலைக்கு மேல் பழகி வளர். * ஐந்து விரலும் ஐந்து கன்னக்கோல். * ஐந்து விரலும் ஒன்று போல இருக்குமா? * ஐந்துக்கு மேலே அரசனும் ஆண்டி.</br>[ஐந்து பெண்களுக்கு மேல் பிறந்து விட்டால், பெற்றோரின் செல்வம் காலியாகும்.] * ஐந்தூரான் புஞ்சை போல. * ஐப்பசி அடை மழை; கார்த்திகை கடு மழை. * ஐப்பசி அழுகல் தூற்றல். * ஐப்பசி அறக் காய்ந்தால் அண்ணன் இட்ட பயிரும் சரி; தம்பி இட்ட பயிரும் சரி. * ஐப்பசி அறக் காய்ந்தால் ஆடு ஒரு மாடு; மாடு ஒரு மலை. * ஐப்பசிக்கும் கார்த்திகைக்கும் மழை இல்லா விட்டால் அண்ணனுக்கும் சரி, தம்பிக்கும் சரி. * ஐப்பசி தலை வெள்ளமும் கார்த்திகை கடை வெள்ளமும் கெடுதி. * ஐப்பசி நட்ட கரும்பு ஆனை வால் ஒத்ததாம். * ஐப்பசி நெல் விதைத்தால் அவலுக்கும் நெல் ஆகாது. * ஐப்பசிப் பிறை கண்ட வேளாளா, கைப்பிடி நாற்றைக் கண்டு கரையேறு. * ஐம்பசிப் பணி அத்தனையும் மழை * ஐப்பசி மருதாணி அரக்காகப் பற்றும். * ஐப்பசி மாதத்தில் சம்பா நட்டால் ஆனைக் கொம்பு முளைக்கும். * ஐப்பசி மாதத்து எருமைக் கடாவும் மார்கழி மாதத்து நம்பியானும் சரி. * ஐப்பசி மாதத்து நடவும் அறுபது பிராயத்திற் பிள்ளையும். * ஐப்பசி மாதத்து நாற்றை அருகில் சாத்து. * ஐப்பசி மாதத்து வெயிலில் அன்று உரித்த தோல் அன்றே காயும். * ஐப்பசி மாதம் அடை மழை. * ஐப்பசி மாதம் பசு கறக்குமுன் பன்னிரண்டு பாட்டம் மழை. * ஐப்பசி மேல்காற்று அப்போதே மழை. * ஐப்பசி விதைப்பாட்டிற்கு ஐயப்பாடு இல்லை. * ஐப்பசி வெள்ளாமை அரை வெள்ளாமை * ஐ பை சுரைக்காய பக்கா நெய், வெள்ளைக்காரன் கப்பலிலே தீயைக் கொளுத்தி வை. * ஐம்பதாம் பிராயத்திலே கருக்கோலை கட்டிச் சாகிற காலத்தில் பிச்சோலை கட்டினாளாம். * ஐம்பதிலே அறிவு; அறுபதிலே அடக்கம்; அதற்கு மேல் ஒன்றும் இல்லை. * ஐம்பதுக்கு மேலே மண் பவழம் கட்டுகிறதா? * ஐம்பது வந்தாலும் அவசரம் கூடாது. * ஐம்பது வயசிலே ஆண்பிள்ளைக்கு மறு மகிழ்ச்சி. * ஐம்பது வயசு ஆனவனுக்கு அஞ்சு வயசுப் பெண்ணா? * ஐம்பது வயசு ஆனவனுக்கு அரிவை ஏன்? * ஐயங்கார் அம்மானையில் சறுக்கினார். * ஐயங்காரும் தத்துக் கொடுப்பார். * ஐயங்காரைக் கெடுத்தவள் ஐயங்காரிச்சி, தாதச்சியைக் கெடுத்தவன் தாதன். * ஐயப்பட்டால் பைய நட. * ஐயப்பன் குதிரையை வையாளி விட்டாற் போல. * ஐயப்பா கையை விடு. * ஐயம் ஆன காரியத்தைச் செய்தல் ஆகாது. * ஐயம் உண்டானால் பயம் உண்டு. * ஐயம் ஏற்றும் அறிவே ஓது. * ஐயம் தீர்ந்தும் நெஞ்சு ஆறவில்லை. * ஐயம்பேட்டைத் துலுக்கன் போல். * ஐயர் இடம் கொடுத்தாலும் அடியார்கள் இடம் கொடார்கள். * ஐயர் உண்டு தீர்ப்பார்; கர்ணன் கொடுத்து அழிப்பான். * ஐயர் உருள; அம்மை திரள. * ஐயர் என்பவர் துய்யர் ஆவர். * ஐயர் கொண்டு வருகிற பிச்சைக்கு அறுபத்தாறு பை. * ஐயர் தின்னும் பருப்பு ஐந்து குடி கெடுக்கும். * ஐயர் பாதி, அரண்மனை பாதி. * ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமோ? * ஐயருக்கு அரை வார்த்தை சொல்; ஆண்டிக்கு அதுவும் சொல்லாதே. * ஐயன் அமைப்பை ஆராலும் தள்ளக் கூடாது. * ஐயன் அளந்த படி. * ஐயன் பாழியில் ஆனை போர்க்கு உதவுமோ? * ஐயனார் கோயில் ஆனையைப் போல. * ஐயனார் கோயில் செங்கல் அத்தனையும் பிடாரி. * ஐயனார் கோயில் மண்ணை மிதித்தவர் அத்தனை பேரும் பத்திர காளி. * ஐயனார் கோயிலிலே ஆனை பிடிக்க வேண்டும். * ஐயனார் படையில் குயவனார் பட்டது போல. * ஐயனாரே வாரும்; கடாவைக் கொள்ளும். * ஐயா, ஐயா, அம்மா குறைக் கேழ்வரகும் அரைக்க வரச் சொன்னாள். * ஐயா கதிர் போல; அம்மா குதிர் போல. * ஐயாசாமிக்கு கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு. * ஐயா சொல்படி காலைக் கிளப்படி. * ஐயாட்டுக் கிடைக்குச் சமம் தை உழவு. * ஐயாத்துரைக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு; கொட்டு மேளம் கோயிலிலே; வெற்றிலை பாக்குக் கடையிலே; சுண்ணாம்பு சூளையிலே. * ஐயா தாசி கவனம் பண்ண, அஞ்சாளின் சுமையாச்சு. * ஐயா நாளிலே அம்மா மூடு பல்லக்கு ஏறினாள். * ஐயா நூற்பது அம்பியின் அரைஞாண் கயிற்றுக்கும் ஆகாது. * ஐயா பாட்டுக்கு அஞ்சடியும் ஆறடியும் தாண்டும். * ஐயாவுக்கு வித்தை இல்லை; அம்மாளுக்குக் கர்வம் இல்லை. * ஐயா வீட்டுக் கூழுக்கு அப்பணையங்கார்த் தாதாவா? * ஐயாவைத் தவிர ஆனைதாண்டவ புரத்தார் அத்தனை பேரும் அயோக்கியர்கள். * ஐயா வையர் கூழுக்கு அப்பையங்கார் தாதாவா? * ஐயைந்தில் பிறத்த பிள்ளையும் தை ஐந்தில் நட்ட நடவும். * ஐயோ என்றால் ஆறு மாசத்துப் பாவம் சுற்றும். * ஐயோ பாவ மென்றால் கையோடே. * ஐவருக்கும் தேவி, அழியாத பத்தினி ==ஒ== * ஒக்கலிலே பிள்ளையை வைத்து ஊரெல்லாம் தேடினாளாம்(தேடினாற் போல) * ஒச்சியம் இல்லாத ஊரிலே பெண் வாங்கின கதை. * ஒட்ட உலர்ந்த ஊமத்தங்காய் போல. * ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்(கொட்டைத் தாழ்ப்பாள்) * ஒட்டகத்தின் முதுகுக்குக் கோணல் ஒன்றா இரண்டா? * ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள். * ஒட்டகத்துக்கு உடம்பெல்லாம் கோணல். * ஒட்டகத்துக்குக் கல்யாணம், கழுதை கச்சேரி * ஒட்டகத்துக்குத் தொட்ட இடம் எல்லாம் கோணல், * ஒட்டகமே, ஒட்டகமே, உனக்கு எவ்விடத்தில் செவ்வை. * ஒட்டத்து அப்பம் தின்பாரைப் போலே. * ஒட்டப் பார்த்து மட்ட நறுக்கு. * ஒட்டன் கண்டானா லட்டுருண்டை? போயன் கண்டானா பொரியுருண்டை? * ஒட்டன் குச்சி வைத்துப் பெருக்குகிற விளக்குமாறும் அல்ல; வீட்டைப் பெருக்குகிற விளக்குமாறும் அல்ல. * ஒட்டன் சுவருக்குச் சுண்ணாம்பு அடித்தாற் போல * ஒட்டன் வீட்டு நாய் கட்டில் ஏறித் தூங்கிற்றாம் * ஒட்டன் வீட்டு நாய் கூழுக்குக் காத்த மாதிரி. * ஒட்டன் வீட்டு நாய் திட்டையில் இருந்தாற் போல * ஒட்டனுக்குத் தெரியுமா லட்டுருண்டை? * ஒட்டாது பாவம்; கிட்டாது சேவை. * ஒட்டி உலர்ந்து ஊமத்தங்காயாய்ப் போய்விட்டான்(உலர்ந்த) * ஒட்டிய உடம்பும் ஒடுக்கிட்ட வாழ்நாளும். * ஒட்டிய சீதேவி நெட்டியோடே போம்(சீதாதேவி. * ஒட்டின பேரைத் தொட்டிலும் கொள்ளும்; ஒட்டாத பேரைக் கட்டிலும் கொள்ளாது(ஒட்டினால் கொள்ளும். ஒட்டினாரை.) * ஒட்டினாலும் உழக்குப் பீச்சுகிறதா?(உழக்குப் பீர் செல்கிறதா?) * ஒட்டுக் கதை கேட்பவர் செவிட்டுப் பாம்பாய்ப் பிறப்பார்(யாழ்ப்பாண வழக்கு.) * ஒட்டுத் திண்ணை நித்திரைக்குக் கேடு. * ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாய் போட்டவன். * ஒட்டு மூத்திரத்துக்கு ரக்ஷாபந்தனம் செய்தாளாம்; பட்டறைப் பீயைப் பாயோடு பிடித்தாளாம். * ஒட்டைக்குக் கரும்பு மெத்தக் கசப்பு. * ஒட்டைக்குச் சுளுவு பட்டாற் போல(அளவு மீட்டர் போல்.) * ஒட்டைக்குப் பளுவு ஏற்றுகிறது போல. * ஒடக்கான் முட்டு வைக்காத காடு * ஒடம்பில எண்ணெ தடவி பொரண்டாலும் ஒட்ற மண்ணுதான் ஒட்டும் * ஒடிந்த கோல் ஆனாலும் ஊன்று கோல் ஆகும்.(வேண்டும்.) * ஒடுக்கம் சிதம்பரம். * ஒடுக்கி ஒடுக்கிச் சொன்னாலும் அடங்குமா? * ஒண்ட வந்த எலி உரம் பெற்றது; அண்டியிருந்த பூனை ஆலாய்ப் பறக்கிறது. * ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்தியதாம் * ஒண்டாதே, ஒண்டாதே, ஓரிக்கால் மண்டபமே; அண்டாதே, அண்டாதே ஆயிரங்கால் மண்டபமே என்றாற் போல. * ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று. * ஒண்ணாங் குறையாம் வண்ணான் கழுதைக்கு. * ஒண்ணாந் தேதி சீக்கிருப்பவனும் ஒற்றைக் கடையில் சாமான் வாங்குபவனும் உருப்பட மாட்டான்(இலங்கை வழக்கு.) * ஒண்ணுக்குள்ளே ஒண்ணு, எள்ளுக்குள்ளே எண்ணெய்: * ஒண்ணுக்குள்ளே ஒண்ணு, கண்ணுக்குள்ளே மண்ணாகியது. * ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு. * ஒண்ணைப் பெற்றாலும் கண்ணைப் பெறு * ஒண்ணோ, கண்ணோ? * ஒத்த இடத்தில் நித்திரை கொள். * ஒத்த கணவனும் ஒரு நெல்லும் உண்டானால் சித்திரம் போலக் குடிவாழ்க்கை செய்யலாம். * ஒத்தான் ஓரகத்தாள் ஒரு முற்றம்; நாத்தனார் நடு முற்றம். * ஒத்தி வெள்ளம் வருமுன்னே அணை வோலிக்கொமின வேண்டும். * ஒத்துக்கு ஏற்ற மத்தளம். ஒத்தைக்கு ஒரு பிள்ளை என்றால் புத்தி கூடக் கட்டையாகப் போகுமா?(ஒத்திக்கு.) * ஒதி பெருத்தால் உரல் ஆகுமா? * ஒதி பெருத்தாலும் உத்தரத்துக்கு ஆகாது. * ஒதி பெருத்து என்ன? உபகாரம் இல்லாதவன் வாழ்ந்து. என்ன?(உதவாதவன்.) * ஒதி பெருத்துத் தூண் ஆமா? ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ? * ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ? * ஒதிய மரமும் ஒரு சமயத்துக்கு உதவும். * ஒப்புக்குச் சப்பாணி. ஊருக்கு மாங்கொட்டை. * ஒப்புக்கு மாங்கொட்டை, ஊருக்குச் சப்பாணி. * ஒய்யாரக் கொண்டையாம், தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும். * ஒயிலாய்ப் பேசுகிறாள்; ஆனால் கனம் அறிந்த கப்பறையும் அல்ல; கண்டறிந்த நாயும் அல்ல. * ஒரு அச்சிலே உருக்கி வார்த்தாற் போல. * ஒரு அடி அடித்தாலும் பட்டுக் கொள்ளலாம்; ஒரு சொல் மட்டும் கேட்க முடியாது. * ஒரு அப்பம் தின்னாலும் நெய்யப்பம் தின்ன வேணும். * ஒரு இழவு என்றாள் உள்ளபடி ஆகும்.(ஆகும்.) * ஒரு உறையிலே இரண்டு கத்தியா? * ஒரு ஊர் நட்பு, ஒரு ஊருக்குப் பழிப்பு. * ஒரு ஊரில் இரண்டு பைத்தியக்காரர்களா? * ஒரு ஊருக்கு ஒரு வழியா? * ஒரு ஊருக்கு வழி கேட்க ஒன்பது ஊருக்கு வழி காட்டுகிறான். * ஒரு கட்டு வைக்கோலைத் தண்ணீரில் போட்டு ஒன்பது ஆள் கட்டி இழுத்தாற் போல.(எட்டு ஆள்.) * ஒரு கண்ணிலே புகுந்து மறு கண்ணிலே புறப்படுகிறான்.(வருகிறவன்.) * ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; ஒரு கண்ணுக்குச் சுண்ணாம்பு. * ஒரு கண் முடி ஒரு கண் விழிக்கிறவன். * ஒரு கம்பத்தில் இரண்டு ஆனையைக் கட்டினாற் போல் * ஒரு கரண்டி எண்ணெய் கொண்டு பலகாரம் சுட்டுப் பந்தி விசாரித்து வந்த பெண்டுகள் வாரி முடித்துப் பெண்டுகளால் பிடிமானம் இல்லாமல் புறக்கடை வழியாய்ப் போய் விட்டது. * ஒரு கல்லில் இரண்டு மாங்காய். * ஒரு கல விதையடி உவட்டை மாற்றிட, ஆறு பல வேப்பம் * ஒரு கவளம் சோற்றுக்கு நாய் பல்லை இளிப்பது போல, * ஒரு கழிச்சலில் உட்கார்ந்து மறு கழிச்சலில் மல்லாந்து போக, * ஒரு காசு அகப்படுகிறது குதிரைக் கொம்பு. * ஒரு காசு என்ற இடத்தில் அழுகிறான். * ஒரு காசுக்கு மூக்கு அரிந்தால் ஒன்பது காசு கொடுத்தால் ஒட்டுமா? * ஒரு காசுக்கு மோர் வாங்கி ஊரெல்லாம் தானம் பண்ணினாளாம். * ஒரு காசு கொடாதவன் ஒரு வராகன் கொடுப்பானா? * ஒரு காசு பேணின் இரு காசு தேறும் * ஒரு காதில் வாங்கி ஒரு காதில் விடுவது. * ஒரு கால் செய்தவன் இரு கால் செய்வான். * ஒரு கால் பார்த்தால் புஞ்சை; இரு கால் பார்த்தால் நஞ்சை * ஒரு காலிலே நிற்கிறான். * ஒரு காலை செய்த தச்சன் மறு காலும் செய்வான். * ஒரு குட்டியும் பெட்டையும் போல. * ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை * ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும். * ஒரு குண்டிலே கோட்டை பிடிக்கலாமா? (முடியுமா?) * ஒரு குருவி இரை எடுக்க ஒன்பது குருவி வாய் திறக்க, :(திறக்குமாம்.) * ஒரு குலைத் தேங்காய். * ஒரு குளப்படி நீரைக் கண்டு திரைகடல் ஏங்குமா? * ஒரு கூடை முடைந்தவன் ஒன்பது கூடை முடைவான். * ஒரு கூடைக் கல்லும் தெய்வமானால் கும்பிடுகிறது எந்தக் கல்லை? * ஒரு கூடைச் செங்கல்லும் பிடாரி. * ஒரு கூடைச் செங்கலில் அத்தனையும் வேகாத செங்கல், * ஒரு கூன் சர்க்கரையா ஒத்து வாழ். * ஒரு கை சத்தம் எழுப்புமா? * ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா? * ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா? * ஒரு கோபம் வந்து கிணற்றில் விழுந்தால் ஆயிரம் சந்தோஷம் வந்தாலும் எழும்பலாமா? * ஒரு கோமுட்டியைக் கழுவில் போட்டதற்கு ஒன்பது கல எள் ஆச்சுதே; ஊர்க் கோமுட்டிகளை எல்லாம் கழுவில் போடு, என்றானாம். * ஒரு சந்திப் பானையை நாய் அறியுமா? * ஒரு சாதிக்கு ஏச்சு: ஒரு சாதிக்குப் பேச்சு. * ஒரு சாண் காட்டிலே ஒருமுழத்தடி வெட்டலாமா? * ஒரு சுருட்டைப் பத்து நாள் பிடிப்பான். * ஒரு சுற்றுச் சுற்றி வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டது போல, * ஒரு செடியிலே விளைந்தாற் போல். * ஒரு செவியில் வார்த்தாற் போல. * ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை * ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா? * ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். * ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல் * ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல். * ஒருத்தர் போன வழி ஒருத்தர் போகிறது இல்லை. * ஒருத்தன் ஜோலிக்குப் போகவும் மாட்டேன்: என் காலை மிதித்தால், விடவும் மாட்டேன். * ஒருத்திக்கு ஒருமகன். * ஒரு தட்டில் ஒர் ஆனை மறுதட்டில் ஆயிரம் பூனை. * ஒரு தம்படி மிச்சப்படுத்தியது ஒரு தம்படி சம்பாதித்தது ஆகுமா? * ஒரு தரம் விழுந்தால் தெரியாதா? * ஒரு தலைக்கு இரண்டு ஆக்கினையா? * ஒரு தலை வழக்கு நூலிலும் செவ்வை. * ஒரு தாய் அற்ற பிள்ளைக்கு ஊர் எல்லாம் தாய். * ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை * ஒரு துட்டு ஒரு ரூபாயாய் இருக்கிறது. * ஒரு துரும்பு பழுதை ஆகுமா?. * ஒரு துஷ்டனுக்கும், ஒரு துஷ்டனுக்கும் ஒரே வழி; * ஒரு துஷ்டனுக்கும். ஒரு நல்லவனுக்கும் இரண்டு வழி;இரண்டு நல்லவர்களுக்கு மூன்று வழி. * ஒரு தையல் ஒன்பது தையலைத் தவிர்க்கும். * ஒரு தொழிலும் இல்லாதவர் நாடகக்காரர் ஆனார். * ஒரு தொழுமாடு முட்டிக் கொள்ளவும் செய்யும், நக்கிக் கொள்ளவும் செய்யும். * ஒரு நன்றி செய்தாரை உள்ளளவும் நினை. * ஒரு நாக்கா, இரண்டு நாக்கா? * ஒரு நாய் ஊளையிட ஊர் எல்லாம் நாய் ஊளை. * ஒரு நாய்க்குத் தலை வலித்தால் ஒன்பது நாய்க்குத் தலை வலிக்கும். * ஒரு நாய் குரைத்தால் எல்லா நாயும் குரைக்கும் * ஒரு நாய்க்கு வலித்தால் எல்லா #நாய்க்கும் வலிக்கும். * ஒரு நாய் குரைத்தால் பத்து நாய் பதில் கொடுக்கும். * ஒரு நாய் வீட்டில் இருந்தால் பத்துப் பேர் காவல் காத்தது போல் ஆகும். * ஒரு நாள் ஆகிலும் திருநாள். * ஒரு நாள் ஒரு யுகமாக இருக்கிறது. * ஒரு நாள் கூத்துக்கு மீசையைக் சிரைத்தானாம்(தலையைச் சிரைத்தானாம்.) * ஒரு நள் பஞ்சத்தை உற்றாரிடம் காட்டினாளாம். * ஒரு நாளும் இல்லாத திருநாள் * ஒரு நாளும் இல்லாமல் திருநாளுக்குப் போனால் திருநாள் எல்லாம் வெறு நாள் ஆச்சு. * ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளிலே சிரித்தான்; திருநாளும் வெறு நாள் ஆச்சு. * ஒரு நாளும் நான் அறியேன். உள்ளே விளக்கெரிந்து. * ஒரு நாளைக்கு இறக்கிறது கோடி, பிறக்கிறது கோடி. * ஒரு பக்கம் பெய்தால் ஒரு பக்கம் காயும். * ஒரு பசியும் இல்லை என்பாள் ஒட்டகத்தையும் விழுங்கி விடுவாள் * ஒரு பணம் இரண்டு பாளை; ஒன்று கள்; ஒன்று நுங்கு. * ஒரு பணம் கொடுத்து அழச் சொல்லி ஒன்பது பணம் கொடுத்து ஓயச்சொன்னது போல. * ஒரு பணம் கொடுப்பானாம்; ஓயாமல் அழைப்பானாம். * ஒரு பானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம். * ஒரு பிள்ளை என்று ஊட்டி வளர்த்தாளாம்; அது சொரிமாந்த குணம் பிடித்துச் செத்ததாம். * ஒரு பிள்ளை பிள்ளை ஆகுமா? ஒரு மரம் தோப்பு ஆகுமா? * ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உள்ளங்கையில் சோறு; நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுச் சந்தியிலே சோறு. * ஒரு பிள்ளை பெற்றவருக்கு உறியிலே சோறு; நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவிலே சோறு. * ஒரு பிள்ளை பேளவும் ஒரு பிள்ளை நக்கவும். * ஒரு புடலங்காயை நறுக்கிப் பாதி கறிக்கும் பாதி விதைக்கும் வைத்துக் கொள்ள முடியுமா? * ஒரு புத்திரன் ஆனாலும் குருபுத்திரன் ஆவானா? * ஒரு பூனை மயிர் ஒடிந்தால் ஒன்பது பிராமணனைக் கொன்ற பாவம். * ஒரு பெட்டை நாய்க்கு ஒன்பது ஆண் நாயா? * ஒரு பெண் என்று ஊட்டி வளர்த்தாள்; அது ஊர்மேலே போச்சுது. * ஒரு பெண்ணுக்கு அவளது வாழ்நாளில் அவளின் கழுத்தில் ஒரேயொரு முறை தான் தாலி ஏற வேண்டும். அதுவும் ஒருவரின் கைகளால் தான். * ஒரு பொய்க்கு ஒன்பது பொய். * ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்ல வேண்டும். * ஒரு பொருள் ஆகிலும் எழுதி அறி. * ஒரு பொழுது சட்டி; அதன்மேல் கவிச்சுச் சட்டி. * ஒரு மயிர் போனாலும் கவரிமான் வாழாது. * ஒரு மரத்துக் கொம்பு ஒரு மரத்தில் ஒட்டாது. * ஒரு மரத்துப் பட்டை ஒரு மரத்திலே ஒட்டுமா? * ஒரு மரத்துப் பழம் ஒரு மரத்தில் ஒட்டுமா? * ஒரு மரத்துப் பழமா ஒருமிக்க? * ஒரு மரத்தை அதன் கனியால் அறியலாம். * ஒரு மரம் இரண்டு பாளை, ஒன்று நுங்கு; ஒன்று கள்; அறிவுடன் பார்க்கும் போது அதுவும் கள்ளே; இதுவும் கள்ளே. * ஒரு மரம் தோப்பு ஆகுமா? * ஒரு மனப்படு: ஓதுவார்க்கு உதவு. * ஒரு மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்த செட்டி. * ஒரு மிளகும் நாலு உப்பும் போதும். * ஒரு மிளகைப் போட்டு விட்டுப் பொதி மிளகு என்னது என்றாற்போல. * ஒரு முத்தும் கண்டறியாதவனைச் சொரிமுத்துப் பிள்ளை என்றானாம். * ஒரு முருங்கையும் ஓர் எருமையும் உண்டானால் வருகிற விருந்துக்கு மனம் களிக்கச் செய்வேன். * ஒரு முழுக்காய் முழுகிவிட வேண்டும். * ஒரு முழுக்கிலே மண் எடுக்க முடியுமா? * ஒரு முறை செய்தவன் ஒன்பது முறை செய்வான். * ஒருமைப்பாடு இல்லாத குடி ஒருமிக்கக் கெடும் * ஒரு மொழி அறிந்தவன் ஊமை; பல மொழி அறிந்தவன் பண்டிதன். * ஒரு ரோமம் போனாலும் கவரிமான் வாழாது. * ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம். * ஒருவர் கூறை எழுவர் உடுக்க. * ஒருவர் துணியை இருவர் உடுத்தினால் இருவரும் அம்மணமாம் * ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம். * ஒருவர் பொறை, இருவர் நட்பு. * ஒருவருக்கு இடுக்கண் வந்தால் அடுக்கடுக்காய் வரும். * ஒருவருக்கு நிறைவும் குறைவும் ஊழ்வினைப் பயன். * ஒருவரும் அறியாத உச்சித ராமன், * ஒருவன் அறிந்த ரகசியம் உலகத்தில் பரவும். * ஒருவன் குழியிலே விழுந்தால் எல்லாரும் கூடி அவன் தலையில் கல்லைப் போடுகிறதா? * ஒருவன் செய்த தீமை அவன் காலைச் சுற்றி வேரை அறுக்கும் * ஒருவன் தலையில் மாணிக்கம் இருக்கிறதென்று வெட்டலாமா? * ஒருவன் துணையாக மாட்டான்; ஒரு மரம் தோப்பாக மாட்டாது. * ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை. * ஒருவனாய்ப் பிறப்பது ஒரு பிறப்பாமா? ஒன்றி மரம் தோப்பாமா? * ஒருவனுக்கு இருவர் துணை * ஒருவனுக்குத் தாரம்; மற்றவனுக்குத் தாய். * ஒருவனேனும் உயிருடன் உளனோ? * ஒருவனை அறிய இருவர் வேண்டும். * ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான்; பல பேரைக் கொன்றவன் பட்டம் ஆள்வான். * ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும் * ஒரு விரல் நொடி இடாது. * ஒரு விரல் முடி இடாது. * ஒருவிலே இருந்தாலும் இருக்கலாம்; ஒழுக்கிலே இருக்க முடியாது. * ஒரு விளக்கைக் கொண்டு ஓராயிரம் விளக்கை ஏற்றலாம், * ஒரு வீடு அடங்கலும் பிடாரி. * ஒரு வேலைக்கு இரு வேலை. * ஒரு வேலைக்கு இரு வேலை, ஓதி வைத்தார் வாத்தியார். * ஒரு வேளை உண்போன் யோகி; இருவேளை உண்போன் போகி; மூவேளை உண்போன் ரோகி. * ஒரே காலில் நிற்கிறான். * ஒரே துறையில் குளித்த உறவு * ஒல்லி நாய்க்கு ஒட்டியாணம் வேண்டுமாம். * ஒலி இருந்த சட்டி, இன்ன சட்டி என்று தெரியாது. * ஒவ்வாக் கட்டிலும் தனிமை அழகு. * ஒவ்வாப் பேச்சு வசையோடு ஒக்கும். * ஒவ்வொரு நாய்க்கும் அதன் நாள் உண்டு. * ஒவ்வொருவனும் தன் தன் பாட்டைத் தானே அனுபவிக்கவேண்டும். * ஒவ்வொன்றாய் நூறா?.ஒரேயடியாய் நூறா? * ஒழிந்த இடம் பார்க்கிறதா? * ஒழிந்த இடமும் தாவாரமும் தேடுகிறதா? * ஒழுக்கத்தைக் காட்டிலும் உயர்வில்லை. * ஒழுக்கம் உயர் குலத்தில் நன்று, * ஒழுக்கிலே முக்காடா? * ஒழுக்குக்கு வைத்த சட்டி போல. * ஒழுக்குக்கு வீட்டிலே வெள்ளம் வந்தது போல. * ஒழுகாத வீடு உள்ளங்கையத்தனை போதும். * ஒழுகுகிற வீட்டில் ஒன்றுக்கு இருந்தால் வெள்ளத்தோடு வெள்ளம். * ஒழுங்கா புடுச்சி ஒண்ணுக்கு அடிக்கத் தெரியாத பய * ஒழுங்கு ஒரு பணம்; சளுக்கு முக்காற் பணம். * ஒழுங்கு கணக்கப்பிள்ளை; இடுப்பு இறக்கவில்லை. * ஒள்ளியர் தெள்ளியராயினும் ஊழ்வினை பைய நுழைந்து விடும். * ஒளி இல்லா விட்டால் இருளையும் இருள் இல்லா விட்டால் ஒளியையும் காணலாம். * ஒளிக்கத் தெரியாமல் விதானையார் வீட்டில் ஒளித்துக்கொண்டானாம் * ஒளிக்கப் போயும் இடம் இடைஞ்சலா? * ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டில் ஒளிந்தது போல். * ஒளிக்கும் சேவகனுக்கு முகத்தில் ஏன் மீசை? * ஒளிகிற சேவகனுக்கு மீசை எதற்கு? * ஒற்றியும் சீதனமும் பற்றி ஆள வேண்டும். * ஒற்றுமை இல்லாத குடி ஒருமிக்கக் கெடும். * ஒற்றுமையே வலிமை. * ஒற்றை ஆளுக்கு விளையாட்டு இல்லை. * ஒற்றைக் காலில் நிற்கிறான். * ஒற்றுமையே வலிமை. * ஒற்றை ஆளுக்கு விளையாட்டு இல்லை. * ஒற்றைக் காலில் நிற்கிறான். * ஒன்றரைக் கண்ணன் ஓரைக் கண்ணனைப் பழித்தானாம். * ஒன்றாம் குறைவு வண்ணான் கழுதைக்கு. * ஒன்றால் ஒன்று குறைவு இல்லை; முன்னாலே கட்டத் துணி இல்லை. * ஒன்றான தெய்வம் உறங்கிக் கிடக்கும் போது பிச்சைக்கு வந்த தெய்வம் ததியோதனத்துக்கு அழுகிறதாம். * ஒன்றான தெய்வம் ஒதுங்கிக் கிடக்கச்சே, மூலை வீட்டுத் தெய்வம் குங்கிலியம் கேட்குமாம். * ஒன்றான தெய்வம் ஒதுங்கிக் கிடக்க ஹனுமந்தராயனுக்குத் தெப்பத் திருநாளாம். * ஒன்றான தெய்வம் ஒதுங்கி நிற்கிறதாம்; சுற்றுப்பட்ட தெய்வம் ததியோதனத்துக்கு அழுகிறதாம். * ஒன்றான பிரபு உறங்கிக் கிடக்கையில் பிச்சைக்கு வந்தவன் ததியோதனத்துக்கு அழுகிறானாம். * ஒன்று இருந்தால் இன்னொன்று இல்லை. * ஒன்று ஒன்றாய் நூறோ? ஒருமிக்க நூறோ? * ஒன்றுக்கு இரண்டாம் வாணிபம் இல்லை. * ஒன்றுக்கு இரண்டு: உபத்திரவத்துக்கு மூன்று * ஒன்றுக்குப் பத்து; உரைக்குப் பதினாறு. * ஒன்றுக்கும் அற்ற தங்காளுக்குக் களாக்காய்ப் புல்லாக்கு. * ஒன்றுக்கும் ஆகாத ஊர்ப்பறை. * ஒன்றுக்கும் ஆகாதவன் உபாத்தியாயன் ஆகட்டும். * ஒன்றுக்கு வாங்கி எட்டுக்கு விற்றால் லாபம். * ஒன்று கட்டி விதை; ஒன்று வெட்டி விதை. * ஒன்று குறைந்தது கார்த்திகை: ஒக்கப் பிறந்தது மார்கழி * ஒன்று செய்தாலும் உருப்படியாகச் செய்ய வேண்டும். * ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது. * ஒன்று நினைக்க ஒன்று ஆயிற்று. * ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. * ஒன்றும் அற்ற தங்காளுக்கு ஒன்பது நாள் சடங்கா? * ஒன்றும் அற்ற நாரிக்கு ஒன்பது நாள் சடங்கு; அதுவும் அற்ற நாரிக்கு ஐந்து நாள் சடங்கு * ஒன்றும் அறியாத கன்னி, அவளைப் பிடித்தது சனி. * ஒன்றும் அறியாளாம் கன்னி, ஓடிப் பிடித்ததாம் ஆறு மாத ஜன்னி(அவளைப் பிடித்ததாம்.) * ஒன்றும் இல்லாத தங்கைக்கு ஒன்பது நாள் சடங்காம். * ஒன்றும் இல்லாததற்கு ஒரு பெண்ணையாவது பெற்றாளாம். * ஒன்றும் இல்லாத தாசனுக்கு ஒன்றரைத் தோசை. * ஒன்றும் இல்லாவிட்டால் அத்தை மகள் இருக்கிறாள். * ஒன்றும் இல்லை என்று ஊதினான்; அதுதானும் இல்லை என்று கொட்டினான். * ஒன்றும் தெரியாத சின்னக் கண்ணு, பானை தின்னுவாள் பன்றிக் கறி. * ஒன்றும் தெரியாத பாப்பா, போட்டுக் கொண்டாளாம் தாழ்ப்பாள். * ஒன்றும் தெரியாதவனுக்கு எதிலும் சந்தேகம் இல்லை. * ஒன்றே ஆயினும் நன்றாய் அறி. * ஒன்றே குதிரை; ஒருவனே ராவுத்தன். * ஒன்றே குலமும்; ஒருவனே தேவனும். * ஒன்றே செய்க, இன்றே செய்க, இன்னே செய்க. * ஒன்றே செயினும் நன்றே செய். * ஒன்றே பிறப்பு, ஒன்றே சிறப்பு. * ஒன்றே ராசா, ஒன்றே குதிரை. * ஒன்றைத் தொடினும் நன்றைத் தொடு. * ஒன்றைப் பத்தாக்கு * ஒன்றைப் பத்தாகவும், பத்தை ஒன்றாகவும் சாதிக்கிறான். * ஒன்றைப் பிடித்தால் உடனே சாதிக்க வேண்டும். * ஒன்றைப் பெற்றால் நன்றே பெற வேண்டும். * ஒன்றைப் பெற்றாலும் கடுகப் பெறு. * ஒன்றைப் பெற்றாலும் கன்றைப் பெறு. * ஒக்கச் சிரித்தார்க்கு வெட்கம் இல்லை. (சிரித்தால்.) * ஒக்கப் பிறந்த தங்கை ஓலமிட்டு அழுதாளாம்; ஒப்பாரி தங்கைக்குச் சிற்றாடையாம். ==ஓ== * ஓ கெடுவானுக்கு வாழ்க்கைப்பட்டு ஒட்டமே ஒழிய நடை இல்லை. * ஓங்கி அறைந்தால் ஏங்கி அழச் சீவன் இல்லை. * ஓங்கில் அறியும் உயர்கடலின் ஆழம்; பாங்கி அறிவாள் தன் பர்த்தாவின் வலிமை. * ஓங்கின கை நிற்காது. * ஓங்கின கோடரி நிற்காது. * ஓங்கு ஒன்று: அடி இரண்டு. * ஓசிக்கு அகப்பட்டால் எனக்கு ஒன்று; எங்கள் அண்ணனுக்கு ஒன்று * ஓசை காட்டிப் பூசை செய். * ஓசை பெறும் வெண்கலம்; ஓசை பெறாது மண்கலம். * ஓட்டத்துக்குப் பாக்குப் பிடிக்கிறான். * ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம். * ஒட்டமும் ஆட்டமும் உடம்புக்கு நல்லது. * ஓட்டி ஓட்டி மிளகு அரைக்கப் பாட்டி வந்தாளாம்; பையனுக்குச் சோறு போடக் குட்டி வந்தாளாம். * ஓட்டின சீமாள் ஓட்டினான்; பழமுள்ள காட்டில் ஓட்டினான். * ஓட்டுகிறவன் சரியாய் இருந்தால் எருது மச்சான் முறை கொண்டாடாது * ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி. * ஓட்டைக் குடத்திலும் சர்க்கரை நிற்கும்; கருப்பட்டியிலும் கல் இருக்கும். * ஓட்டைக் குடத்திலேதான் சர்க்கரை இருக்கும். * ஓட்டைக் கோயிலுக்குச் சர்க்கரை கசக்குமா? * ஓட்டைச் சங்கு ஊது பரியாது(சங்கால் ஊத முடியாது.) * ஓட்டைச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி(வேக உதவும்.) * ஓட்டைத் தோண்டியும் அறுந்து போன தாம்புக் கயிறும் சரி(தோண்டிக்கு.) * ஓட்டை நாழிக்குப் பூண் கட்டுவது போல(கட்டி ஆவதென்ன?) * ஓட்டைப் பானைச் சர்க்கரை கசக்குமா? * ஓட்டைப் பானையில் உலையிட்டாற் போல். * ஓட்டைப் பானையில் கொழுக்கட்டை வேகுமா? * ஓட்டைப் பானையில் சர்க்கரை இருக்கும். * ஓட்டைப் பானையில் நண்டை விட்டாற் போல. * ஓட்டைப் பானையில் விட்ட தண்ணீர் போல, * ஓட்டை மணி ஆனாலும் ஓசை நீங்குமா? * ஓட்டை மதகிலே தண்ணீர் போனால் தோட்டிக்கு என்ன வாட்டம்? * ஓட்டை வீட்டிலே மூத்திரம் பெய்தால் ஒழுக்கோடு ஒழுக்கு. * ஓடக்காரனிடம் கோபித்துக் கொண்டு ஆற்றோடு போன மாதிரி. * ஓடம் கட்டின தூலம். * ஓடம் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு. * ஓடம் கவிழ்த்த பிரமசாரியைப் போல. * ஓடம் வண்டியிலே; வண்டி ஓடத்திலே(வண்டி மேலே, ஓடத்து மேலே.) * ஓடம் விட்ட ஆற்றிலும் அடி சுடும்(ஆறும்.) * ஓடம் விட்ட ஆறே அடி சுடும் என்பது அறியாயா? * ஓடம் விட்ட இடம் அடி சுடும்; அடி சுட்ட இடத்தில் ஓடப்படும். * ஓடம் விட்டு இறங்கினால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு, * ஓட மாட்டாதவன் திரும்பிப் பார்த்தானாம். * ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறியே ஆக. * ஓடவும் மாட்டேன்; பிடிக்கவும் மாட்டேன். * ஓடவும் முடியவில்லை; ஒதுங்கவும் முடியவில்லை. * ஓடி ஆடி உள்ளங்காலும் வெளுத்தது. * ஓடி உழக்கு அரிசி சாப்பிடுவதைவிட உட்கார்ந்து ஆழாக்கு அரிசி சாப்பிடலாம். * ஓடி ஒரு கோடி தேடுவதிலும் இருந்து ஒரு காசு தேடுவது நலம். * ஓடி ஒன்பது பணம் சம்பாதிப்பதிலும் உட்கார்ந்து ஒரு பணம் சம்பாதிப்பது மேல். * ஓடி ஓடி உடையவன் வீட்டில் ஒளிந்தாற் போல். * ஓடி ஓடி உள்ளங்கால் வெளுத்தது. * ஓடி ஓடி நூறு குழி உழுவதைவிட அமர்ந்து அமர்ந்து ஆறு குழி உழுவதே நன்று * ஓடி ஓடிப் பறந்தாலும் ஓடக்காரன் தாமசம். * ஓடி ஓடி வேலை செய்தாலும் நாய் உட்காரப் போவதில்லை. * ஓடிப் போகிறவன் பாடிப் போகிறான். * ஓடிப் போன ஊரில் ஆதரித்தவன் கவுண்டன். * ஓடிப் போன புருஷன் வந்து கூடிக் கொண்டானாம்; உடைமைமேல் உடைமை போட்டு மினுக்கிக் கொண்டாளாம். * ஓடிப் போன முயல் எல்லாம் ஒரே முயல். * ஓடிப் போன முயல் பெரிய முயல். * ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் ராஜா; அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி. * ஓடிப் போனால் உமிக்காந்தல்; உள்ளே வந்தால் செந்தணல். * ஓடி மேய்ந்த சிறுக்கிக்கு ஒன்றியிருக்க மனம் வருமா? * ஓடியம் ஆகிலும் ஊடுருவக் கேள். * ஓடிய முயல் பெரிய முயல் அல்லவோ? * ஓடியும் கிழவிக்குப் பிறகேயா? * ஓடி வந்து உமிக்காந்தலை மிதித்தாளாம்; திரும்பி வந்து தீக்காந்தலை மிதித்தாளாம். * ஓடி வரும் பூனை; ஆடி வரும் ஆனை. * ஓடி வரும் போது தேடி வருமாம் பொருள். * ஓடின மாட்டைத் தேடுவாரும் இல்லை; மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை. * ஓடினால் மூச்சு, நின்றால் போச்சு. * ஓடு இருக்கிறது, நான் இருக்கிறேன். * ஓடுக ஊர் ஓடுமாறு. * ஓடுகள் விதையைக் கேடறக் காக்கும். * ஓடுகாலிக்கு வீடு மரம். * ஓடுகாலி வீடு மறந்தாள். * ஓடுகிற ஆறு ஓடிக் கொண்டே இருக்குமா? * ஓடுகிற கழுதையை வாலைப் பிடித்தால் உடனே கொடுக்கும் உதை. * ஓடுகிற தண்ணீரை ஓங்கி அடித்தாலும் அது கூடுகிற பக்கம்தான் கூடும். * ஓடுகிறது பஞ்சையாய் இருந்தாலும் சிமிட்டுவது இரண்டு முழம். * ஓடுகிற நாய்க்கு ஒரு முழம் விட்டுக் கல் எறி. * ஓடுகிற நாயைக் கண்டால் துரத்துகிற நாய்க்கு எளிது. * ஓடுகிற நீரில் எழுதிய எழுத்தைப் போல. * ஓடுகிற பாம்புக்குக் கால் எண்ணுகிறவன் சாமர்த்தியசாலி * ஓடுகிற பாம்பைக் கையால் பிடிக்கிற பருவம். * ஓடுகிற பாம்பைக் கையினால் பிடித்து உண்ணுகிற வாயில் மண்ணைப் போட்டுக் கொள்கிற காலம். * ஓடுகிற பாம்பை மிதிக்கிற பருவம். * ஓடுகிற மாட்டைக் கண்டால் துரத்துகிற மாட்டுக்கு எளிது. * ஓடுகிற மாடு விழுந்து விடும். * ஓடுகிற முயலுக்கு ஒரு முழம் தள்ளி எறிய வேண்டும். * ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு எளிது. * ஓடுகிறவனை விரட்டுகிறது எளிது. * ஓடுகிற வெள்ளம் அணையில் நிற்குமா? * ஓடுபவனும் அம்மணம்; துரத்துகிறவனும் அம்மணம். * ஓடும் இருக்கிறது: நாடும் இருக்கிறது. * ஓடும் நாயைக் கண்டால் குரைக்கும் நாய்க்கு இளக்காரம் * ஓணான் கடித்தால் ஒரு நாழிகையில் சாவு: அரணை கடித்தால் அரை நாழிகையில் சாவு. * ஓணான் தலை அசைத்தால் ஒன்பது கலம் நெல் மசியும் * ஓணான் விழுங்கிய கதை போல. * ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது. * ஓணானுக்கு வேலி சாட்சி; வேலிக்கு ஓணான் சாட்சி. * ஓணானை அடித்தால் உழக்குப் புண்ணியம். * ஓதப் பணம் இல்லை; உட்காரப் பாய் இல்லை; உனக்கு என்ன வாய்? * ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம். * ஓதின மஞ்சள் உறியிலே இருக்கும் போது வேதனை என்ன செய்யும்? * ஓதும் வேதம் பேதம் அகற்றும். * ஓதுவார் எல்லாம் உழுவார் தலைக்கடையில். * ஓதுவார்க்கு உதவு. * ஓதுவானுக்கு ஊரும் உழுவானுக்கு நிலமும் இல்லையா? * ஓந்தி வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது. * ஓநாய்க்கு அதிகாரம் வந்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும். * ஓம் என்ற தோஷம் வயிற்றில் அடைத்தது. * ஓம பிண்டத்தை நாய் இச்சித்தாற் போல். * ஓமல் இட்ட பண்டம் உள்ளே வந்து சேரவில்லை. * ஓமலுக்குப் பிள்ளை அன்றி உறுதிக்குப் பிள்ளை இல்லை. * ஓய்ச்சலும் இல்லை; ஒழிவும் இல்லை. * ஓய்ந்ததடி பனங்காடு; உட்கார்ந்தாளடி சாணாத்தி. * ஓய்ந்ததாம் பானை; உட்கார்ந்தாளாம் சாணாத்தி. * ஓய்ந்த முழுக்கு ஒரே முழுக்கு. * ஓய்ந்த வேளையில் அவிசாரி ஆடினால் உப்புப் புளிக்கு ஆகும். * ஓய்வு இலா நேசமே, ஓலமே சரணம். * ஓயாக் கவலை தீரா வியாதி. * ஓயாது சிரிப்பவள் உன்னையே கெடுப்பாள் * ஓயாமல் அழு, நோவாமல் அடிக்கிறேன் என்ற கதை. * ஓயா மழையும் ஒழியாக் காற்றும். * ஓர் ஆடு நீர் விட்டால் எல்லா ஆடும் நீர் விடும். * ஓர் ஆடு மேய்த்தவனே என்றாலும் அதுவும் கெட்டவனே என்றானாம். * ஓர் ஆண்டி பசித்திருக்க உலகமெல்லாம் கிறுகிறு என்று சுழலுகிறது. * ஓர் ஆறு தாண்டமாட்டாதவன் ஒன்பது ஆறு தாண்டுவானா? * ஓர் உறையில் இரண்டு கத்தியா? * ஓர் ஊர் நடப்பு: ஓரூர் பழிப்பு. * ஓர் ஊர்ப் பேச்சு ஓரூருக்கு ஏச்சு. * ஓர் ஊருக்கு ஒரு பேர் இட்டுக் கொள்ளலாமா? * ஓர் ஊருக்கு ஒரு வழியா? * ஓர் எருமை, ஒரு முருங்கமரம், கால் காணி இருந்தால் பஞ்சம் போகும். * ஓர் ஏர்க்காரன் உழுது கெட்டான்; நாலு ஏர்க்காரன் நிறுத்திக் கெட்டான், பத்து ஏர்க்காரன் பார்த்துக் கெட்டான். * ஓர் ஏரை விரைவில் மறி. * ஓர்ப்படியாள் பிள்ளை பெற்றாள் என்று ஒக்கப் பிள்ளை பெறலாமா? * ஓரக் கண்ணனைப் பழிக்கிறான் ஒன்றரைக் கண்ணன். * ஓரக் கண்ணும் காகக் கண்ணும் ஆகா. * ஓரண்டைக் காடும் காடு அல்ல; ஓரேர் உழவு உழவும் அல்ல. * ஓரம் சொன்னவன் ஆருக்கும் ஆகான். * ஓரம் வெளுத்து ஒரு பக்கம் செல் அரிக்க. * ஓராம் கண்ணியா, ஒருத்தன் ஆள? * ஓலை டப்பாசு உதறிக் கடாசு. * ஓலைப் பாயில் நாய் மோண்டாற்போல. * ஓலைப் பாயில் பேண்ட நாயைப்போல ஏன் சள சள என்கிறாய்? ==ஒள== * ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை. ==க== * கக்கரிக்குப் பந்தல், கத்தரிக்குக் கொத்து * கக்கித் தின்னும் குக்கல் * கக்கின பிள்ளை தக்கும் * கங்கணம் கட்டிக் கொள்ளுதல் * கங்கா ஸ்நானம், துங்கா பானம் * கங்கை ஆடப் போன கடாவைக் கட்டி உழுதானாம். * கங்கை ஆடப் போனவன் கடாவைக் கட்டி அழுதானாம் * கங்கை ஆடி மங்கை பார் * கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தில் போவேனாக * கங்கைக்கு நிகரான நதியும் இல்லை; காசிக்கு நிகரான பதியும் இல்லை * கங்கைக்குப் போன கடாவைப் போல * கங்கைக்குப் போனாலும் கர்மம் தொலையாது * கங்கையில் ஆடினாலும் கணமும் விடாமல் செய்த பாவம் தீராது * கங்கையில் ஆடினாலும் கர்மம் தொலையாது * கங்கையில் ஆடினாலும் பாவம் தீராது * கங்கையில் நீராடுபவன் குட்டையில் முழுக வேணுமோ? * கங்கையில் படர்ந்தாலும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது * கங்கையில் பிறந்த நத்தை சாளக்கிராமம் ஆகாது * கங்கையில் முழுகினாலும் கடன்காரன் விடான் * கங்கையில் முழுகினாலும் பாவம் போகாது * கங்கையில் முளைத்தாலும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது * கங்கையில் மூழ்கினாலும் கறுப்புக் காக்கை வெள்ளை ஆகுமா? * கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா? * கச்ச நிலமானாலும் கை சேர்க்கை * கச்சல் கருவாடு மோட்சத்துக்குப் போனாலும் பிச்சைக்காரன் மோட்சத்துக்குப் போக மாட்டான் * கச்சான் பெண்களுக்கு மச்சான் * கச்சினம் குளப்பாடு கண்டவர்க்கெல்லாம் சாப்பாடு * கச்சேரிக்கு முன்னே போகாதே; கழுதைக்குப் பின்னே போகாதே * கசக்கி மோந்து பார்க்கலாமா? * கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை * கசடருக்கு இல்லை கற்றோர் உறவு * கசடருக்கு யோகம் வந்தால் கண்ணும் மண்ணும் தெரியாது; காதும் கேளாது * கசடான கல்வியிலும் கல்வியீனம் நலம் * கசடு அறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை * கசந்தாலும் பாகற்காய்; காறினாலும் கருணைக் கிழங்கு * கசந்து வந்தவன் கண்ணைத் துடை * கசாப்புக் கடைக்காரன் தர்ம சாஸ்திரம் பேசுவது போல * கசாப்புக் கடைக்காரனைக் கண்ட நாய் போல * கசாப்புக் கடையில் ஈ மொய்த்தது போல * கசாப்புக் கடையை நாய் காத்த மாதிரி * கஞ்சனுக்குக் காசு பெரிது கம்மாளனுக்கு மானம் பெரிது * கஞ்சனுக்குக் கொள்ளை பஞ்சம் இல்லை * கஞ்சி ஊற்ற ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் உண்டு * கஞ்சிக் கவலை, கடன்காரர் தொல்லை சொல்லத் தொலையுமோ? * கஞ்சிக்குக் காணம் கொண்டாட்டம் * கஞ்சிக்குப் பயறு போட்டாற் போல * கஞ்சிக்கு லாட்டரி, கைக்குப் பாட்டரியா? * கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம் * கஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி * கஞ்சி குடித்தாலும் கடன் இல்லாமல் குடிக்க வேணும் * கஞ்சித் தண்ணீருக்குக் காற்றாய்ப் பறக்கிறான் * கஞ்சியைக் காலில் கொட்டிக் கொள்ளும் அவசரம் * கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்றானாம் * கஞ்சி வார்க்க ஆள் இல்லாமல் போனாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது * கட்கத்தில் நிமிண்டுகிற கை நமன் கை * கட்கத்தில் வைப்பார்; கருத்தில் வையார் * கட்டக் கருகுமணி இல்லாமற் போனாலும் பேர் என்னவோ பொன்னம்மாள் * கட்டச் சங்கிலி வாங்கியாகிவிட்டது; ஆனைதான் பாக்கி * கட்டத் துணி இல்லை; கூத்தியார் இரண்டு பேர் * கட்டத் துணியும் இல்லை; நக்கத் தவிடும் இல்லை * கட்டப்பாரை பறக்கச்சே எச்சிற்கலை எனக்கு என்னகதி என்கிறதாம் * கட்டப்பாறையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கஷாயம் குடிப்பதா? * கட்டப்பாலை முற்றப் பழுக்குமோ? * கட்டாணித் தனமாய்க் கல்யாணம் செய்தான் * கட்டாந்தரை அட்டை போல * கட்டாந்தரை அட்டை போலக் கட்டிக்கொண்டு புரளுகிறதா? * கட்டாந்தரையில் தேள் கொட்டக் குட்டிச்சுவரில் நெறி கட்டினதாம் * கட்டாந்தரையில் முக்குளிக்கிறது * கட்டி அடித்தால் என்ன? விட்டு அடித்தால் என்ன? * கட்டி அழுகிற போது கையும் துழாவுகிறதே! * கட்டி அழுகையிலே. என்மகளே, உனக்குப் பெட்டியிலே கை என்ன? * கட்டி இடமானால் வெட்டி அரசாளலாம் * கட்டிக் கறக்கிற மாட்டைக் கட்டிக் கறக்க வேண்டும்; கொட்டிக்கறக்கிற மாட்டைக் கொட்டிக் கறக்க வேண்டும் * கட்டிக் கிடந்தால்தான் உள் காய்ச்சல் தெரியும் * கட்டிக் கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த வார்த்தையும் எவ்வளவு நாளைக்கு? * கட்டிடம் கட்டச் சங்கீதம் பாடு * கட்டிடம் கட்டியவன் முட்டாள்; வாழுகிறவன் சமர்த்தன் * கட்டித் தங்கம் ஆனால் கலீர் என்று ஒலிக்குமா? * கட்டிப்படுத்தால் அல்லவோ உட்காய்ச்சல் தெரியும்? * கட்டிப் பீ எல்லாம் கூழ்ப் பீயாய்க் கரைந்தது * கட்டிப் பீ எல்லாம் தண்ணீர்ப்பீ ஆச்சுது * கட்டிமகள் பேச்சு, கல்லுக்குக்கல் அண்டை கொடுத்தது போல் * கட்டிய கட்டிலிருந்து கின்னரி வாசிக்கிறது போல * கட்டில் உள்ள இடத்தில் பிள்ளை பெற்று சுக்குக் கண்ட இடத்தில் காயம் தின்பாள் * கட்டிலின்மேல் ஏறியும் முறைபார்க்கிறது உண்டா? * கட்டிலைத் திருப்பிப் போட்டால் தலைவலி போகுமா? * கட்டி வழி விட்டால் வெட்டி அரசாளலாம் * கட்டி விதை, வெட்டி விதை. கட்டி வைத்த பணத்தைத் தட்டிப் பறித்தாற் போல * கட்டி வைத்த பூனையை அவிழ்த்துவிட்டு, வாபூஸ் வாபூஸ் என்றால் வருமா? * கட்டிவைத்த முதல் அழியக் கச்சவடம் பண்ணாதே * கட்டின கோவணத்தைக் காற்றில் விட்டவன் * கட்டின பசுப் போல் * கட்டின பொண்டாட்டி இருக்கக் காத்தாயியைக் கண் அடித்தானாம் * கட்டின பொண்டாட்டி பட்டி மாடு மாதிரி * கட்டின பொண்டாட்டியையும் உடுத்தின துணியையும் நம்பாதவன் * கட்டின மாட்டை அவிழ்ப்பாரும் இல்லை; மேய்த்த கூலியைக் கொடுப்பாரும் இல்லை * கட்டினவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு ஆயிரம் வீடு * கட்டினவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு ஊரெல்லாம் வீடு * கட்டின விதை வெட்டின விதை. * கட்டின வீட்டுக்கு எட்டு வக்கணை. * கட்டின வீட்டுக்குக் கருத்துக் கருத்துச் சொல்லுவார். * கட்டின வீட்டுக்குப் பணிக்கை சொல்லாதவர் இல்லை. * கட்டின வீட்டுக்குப் பழுது சொல்வது எளிது. * கட்டினது கட்டாயத்தாலி ஆனாலும் கல்யாணம் கல்யாணம்தான். * கட்டினான் தாலி; காட்டினான் கோலம். * கட்டு அறிந்த நாயும் அல்ல; கனம் அறிந்த கப்பரையும் அல்ல. * கட்டுக் கட்டு விளக்குமாறு கப்பலிலே வருகிறது என்றால் ஒரு காசு விளக்குமாறு இரண்டு காசு. * கட்டுக் கலம் காணும்; கதிர் உழக்கு நெல் காணும். * கட்டுக் காடை இடமானால் குட்டிச் சுவரும் பொன் ஆகும். * கட்டுக்கு அடங்காக் காளை போல. * கட்டுக்கு அடங்காப் பிடாரியைப் போல, * கட்டுக்குக் கட்டு மாற்றிக் கட்ட வேண்டும். * கட்டுக் குலைந்தால் கனம் குலையும். * கட்டுச் சோற்று மூட்டையில் எலியை வைத்துக் கட்டினது போல. * கட்டுச் சோற்று மூட்டையில் பெருச்சாளியை வைத்துக் கட்டின மாதிரி. * கட்டுச் சோற்று மூட்டையையும் கைக்குழந்தையையும் எடுக்கல் ஆகாது. * கட்டுச் சோறு எத்தனை நாளைக்கு? * கட்டுத் தறியை விட்டு மேய்ச்சற் காட்டில் பிடிப்பது. * கட்டுத் துறை சரியாக இருந்தால் கன்றுக்குட்டி துள்ளி விளையாடும். * கட்டுப் பட்டாலும் கவரிமான் மயிரால் கட்டுப்பட வேண்டும்; குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும். * கட்டுப் படாத பெண் சொட்டுக் கொண்டு போயிற்று. * கட்டுப் பானை ஊற்று எட்டு நாளைக்கே. * கட்டு மரத்தைச் சென்னாக்குனி அரிக்கிறது போல. * கட்டுருட்டிக் காளை போல. * கட்டெறும்பு இட்டலியைத் தூக்கினது போல. * கட்டை இருக்கிற மட்டும் கஷ்டம் உண்டு. * கட்டைக் கலப்பையும் மொட்டைக் காளையும் காணிக்கு உதவாது. * கட்டைக்குப் போகும் போது காலாழி பீலாழியா? * கட்டைக் கோணல் அடுப்பில் நிமிர்ந்தது. * கட்டை கிடக்கிற கிடையைப் பார்;கழுதை குதிக்கிற குதியைப் பார். * கட்டை போனால் அடுப்போடு. * கட்டை போனால் வெட்டை. * கட்டையிலே வைக்க. * கட்டையைச் சுட்டால் கரி ஆகுமா? மயிரைச் சுட்டால் கரி ஆகுமா? * கட்டை விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டினாற் போல. * கட்டோடே போனால் கனத்தோடே வரலாம் * கடகச் சந்திர மழை கல்லையும் துளைக்கும். * கடந்த நாள் கருதினால் வருமா? * கடந்தவர்க்குச் சாதி இல்லை. * கடந்து போன காலம் கதறினாலும் வராது. * கடந்து போனது கரணம் போட்டாலும் வராது. * கடப்பாரையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கஷாயம் குடிக்கலாமா? * கடல் உப்பும் மலை நாரத்தங்காயும் போலே. * கடல் உப்பையும் மலை நெல்லையும் கலந்தாற் போல. * கடல் கொதித்தால் விளாவ நீர் எங்கே? * கடல் தண்ணீர் வற்றினாலும் பள்ளிச்சி தாலி வற்றாது. * கடல் தாண்ட மனம் உண்டு; கால்வாய் தாண்டக் கால் இல்லை. * கடல் திடல் ஆகும்; திடல் கடல் ஆகும். * கடல் நீர் நிறைந்து ஆவதென்ன? காஞ்சிரை பழுத்து ஆவதென்ன? * கடல் பாதி, கடம்பாக்குளம் பாதி. * கடல் பெருகினால் கரை ஏது? * கடல் பெருகினால் கரையும் பெருகுமா? * கடல் போயும் ஒன்று இரண்டாம் வாணிகம் இல். * கடல் மடை திறந்தது போல. * கடல் மணலை எண்ணக் கூடுமா? * கடல் மீனுக்கு நீச்சம் பழக்க வேணுமா? * கடல் மீனுக்கு நுளையன் இட்டதே பேர். * கடல் முழுவதும் கவிழ்ந்து குடிக்கலாமா? * கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு. * கடலில் அகப்பட்ட மரத்துண்டு போல. * கடலில் அலையும் துரும்பு போல. * கடலில் இருக்கும் கள்ளியைக் கொள். * கடலில் ஏற்றம் போட்ட கதை. * கடலில் கரைத்த புளி போல. * கடலில் கரைத்த பெருங்காயம் போல. * கடலில் கிடக்கும் துரும்புகளை அலைகளோடு தூக்கித் தரையில் தள்ளுகிறது போல. * கடலில் கையைக் கழுவி விடுகிறதா? * கடலில் துரும்பு கிடந்தாலும் கிடக்கும்; மனசிலே ஒரு சொல் கிடவாது. * கடலில் பிறக்கும் உப்புக்கும் மலையில் விளையும் நாரத்தங்காய்க்கும் தொந்தம். * கடலில் பெருங்காயம் கரைத்தது போல. * கடலில் போட்டு விட்டுச் சாக்கடையில் தேடுகிறதா? * கடலில் மூழ்கிப் போனாலும் கடனில் மூழ்கிப் போகாதே * கடலிலும் பாதி கடம்பாக்குளம். * கடலின் ஆழத்தை அளந்தாலும் மனசின் ஆழத்தை அளக்க முடியாது. * கடலினுள் நா வற்றினது போல. * கடலுக்குக் கரை போடுவார் உண்டா? * கடலை அடைக்கக் கரை போடலாமா? * கடலைக்காய்ப் பானையிலே கையை விட்டாற்போல. * கடலைத் தாண்ட ஆசை உண்டு; கால்வாயைத் தாண்டக் கால் இல்லை. * கடலைத் தாண்டினவனுக்கு வாய்க்கால் தாண்டுகிறது அரிதா? * கடலைத் தூர்த்தாலும் காரியம் முடியாது. * கடலைத் தூர்த்தும் காரியத்தை முடிக்க வேண்டும். * கடலை விதைத்தால் கடுத்த உரம். * கடலை விதைப்பது கரிசல் நிலத்தில் * கடவுள் இருக்கிறார். * கடவுள் சித்தத்துக்கு அளவேது? * கடவுளுக்குத்தான் வெளிச்சம். * கடவுளை நம்பினோர் கைவிடப் படார். * கடற்கரைத் தாழங்காய் கீழே தொங்கி என்ன? மேலே தொங்கி என்ன? * கடற்கரையில் தாழங்காய் அக்கரையில் கிடந்தால் என்ன? இக்கரையில் கிடந்தால் என்ன? * கடன் ஆச்சு; உடன் ஆச்சு; வீட்டு மேலே சீட்டு ஆச்சு; அடித்து விடடா தேவடியாள் தெருவிலே பல்லக்கை. * கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு போதும். * கடன் இல்லாத சோறு கால் வயிறு போதும். * கடன் இல்லாவிட்டால் காற்றுப் போல. * கடன் இழவுக்கு அழுகிறாய். * கடன்காரனுக்குக் கடனும் உடன்பிறந்தானுக்குப் பங்கும் கொடுக்க வேண்டும். * கடன்காரனுக்குக் கடனும் பழிகாரனுக்குப் பழியும் கொடுத்துத் தீர வேணும் * கடன்காரனுக்கு மயிரும் எமனுக்கு உயிரும். * கடன்காரனை வைத்த கழு உண்டா? * கடன், காலச் சனியன். * கடன் கேட்காமல் கெட்டது; வழி நடக்காமல் கெட்டது, * கடன் கொடுத்துப் பொல்லாப்பு அடைவதைவிடக் கடன் கொடுக்காமல் பொல்லாப்பு அடையலாம். * கடன் கொண்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்.(தனிப்பாடல்.) * கடன் கொண்டும் செய்வன செய். * கடன் கொண்டும் செய்வார் கடன். * கடன் சிறிது ஆனாலும் கடமை பெரிது. * கடன் நெஞ்சைக் கலக்கும். * கடன் பட்ட சோறு கால் வயிறு நிரம்பாது. * கடன் பட்டவன் சோறு காற் சோறு. * கடன் பட்டார் நெஞ்சம் போல. * கடன் பட்டாயோ, கடை கெட்டாயோ? * கடன் பட்டு உடன் பட்டு அம்மை கும்பிட, நீயார் கூத்தி கும்பிட * கடன் பட்டு உடன் பட்டு உடம்பைத் தேற்று மகனே கடன்காரன் வந்தால் தடியைத் தூக்கு மகனே! * கடன் பட்டும் பட்டினியா? * கடன் படுகிறவன் எப்போதும் சஞ்சலப் படுகிறவனே. * கடன் வாங்கி உடன் வாங்கிச் சாமி கும்பிட, நீயாரடா கூத்திமகன் விழுந்து கும்பிட? * கடன் வாங்கிக் கடன் கொடாதவனும் கெட்டான்; வட்டியிலே சாப்பிடாதவனும் கெட்டான்.* * கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான். * கடன் வாங்கிச் செலவு செய்தவனும் மரம் ஏறிக் கைவிட்டவனும் சரி. * கடன் வாங்கித் தின்றவன் கடைத்தேற மாட்டான். * கடன் வாங்கிப் பயிர் இட்டவனும் மரம் ஏறிக் கைவிட்டவனும் ஒன்று. * கடன் வாங்கியும் கல்யாணம் செய் * கடன் வாங்கியும் பட்டினி; கல்யாணம் ஆகியும் பிரமசாரி. * கடன் வாங்கினவன் மடியில் கல நெருப்பு. * கடன் வாங்குகிறபோது இனிப்பு; கடன் கொடுக்கிறதென்றால் கசப்பு. * கடன் வாங்குகிறவன் கடைத்தேற மாட்டான். * கடனாகக் கிடைக்கிறதானாலும் ஆனையை வாங்கிக் கட்டிக் கொள்வதா? * கடனா உடனா வாங்கிக் காரியத்தை முடி. * கடனோடு கடன் ஆகிறது; அண்டை வீட்டில் மேல் சீட்டு ஆகிறது; பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணு. * கடனோடு கடன் கந்தப் பொடி காற்பணம். * கடனோடே கடன்; உடனோடே உடன். * கடன் ஆனாலும் உழக்குப் பால் கறக்காதா என்கிறான் * கடா இடுக்கில் புல் தின்கிறது போல. * கடா கடா என்றால் கால் ஆழாக்குப் பீச்சு என்கிறாயே! * கடா கடா என்றால் உழக்குப் பால் என்று கேட்கிறாயே! * கடா கடா என்றால் கன்றுக்கு உழக்குப் பாலா என்கிறான். * கடா கடா என்றால் மருந்துக்கு ஒரு பீர் என்கிறான். * கடா மேய்க்கிறவன் அறிவானோ, கொழுப் போன இடம்? * கடாரங் கொண்டான் கிணற்றில் கல்லைப் போட்டது போல. * கடாவின் சந்தில் புல்லைத் தின்னுகிறது போல * கடாவும் கடாவும் சண்டை போடுகிறபோது உண்ணி நசுங்கினாற்போல * கடிக்க ஓர் எலும்பும் இல்லை * கடிக்க மாட்டாத பாக்கு உத்தம தானம் * கடிக்க வந்த நாய்க்குத் தேங்காய்க் கீற்றுப் போட்டாற் போல * கடிக்கிற நாகம் கலந்து உறவாகுமா? * கடிக்கிற நாய்க்குக் கழுத்திற் குறுங்கயிறு * கடிக்கிற பாம்பை நல்ல பாம்பு என்ற கதை * கடிகோலிலே கட்டின நாய் * கடித்த நாய்க்குக் காடியைக் கொடு * கடித்த நாயைக் கொன்றாலும் பயன் உண்டாகாது * கடித்த நாயை வெறி நாய் என்பது போல * கடித்த நாயைப் பைத்தியம் கொண்டது என்பார்கள் * கடித்த பாக்குக் கொடாத சிற்றன்னை கடற்கரை மட்டும் வழியனுப்பினாளாம் * கடித்த பாக்கும் கொடாத சிற்றப்பன் கடைத்தெரு வரையில் வழி விட்டானாம் * கடித்த பாம்புக்குப் பால் வார்த்தால் அது விஷத்தைத்தான் தரும் * கடித்த பாம்புக்குப் பால் வார்த்தால் கடித்தே தீரும் * கடித்த மூட்டை, கடியாத மூட்டை, எல்லா மூட்டையும் சரிதான் * கடித்த மூட்டையும் சரி, கடியாத மூட்டையும் சரி * கடித்த வாய் துடைத்தாற் போல * கடித்தால் நாய்; மிதிபட்டால் வாய் இல்லா ஜந்து * கடித்தாலும் கடிக்கட்டும்; நீ சொல்லாதிரு * கடித்த பாக்குக் கொடுக்காத சிற்றப்பன் கடைத்தெரு வரையில் வழித்துக் கொண்டு வழிவிடுவான் * கடிதான சொல் அடியிலும் வலிது * கடிதான பிள்ளை பெற்றோருக்கு உதவுமா? * கடிந்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை * கடி நாய் எலும்புக்குப் பறந்தாற் போல * கடிப்பதற்கு ஓர் எலும்பும் இல்லை; காதில் மினுக்க ஓலையும் இல்லை * கடிய மாட்டுக்குக் கம்பு உடையும், கொடிய மாட்டுக்குக் கொம்பு உடையும் * கடியாத மூட்டை என்று விட்டு விடுவார்களா? * கடியும் சுருக்குத்தான்; அடியும் சுருக்குத்தான் * கடிவாளம் இல்லாத குதிரை போல * கடுக்கன் இட்ட நேற்றுக்குள் காது அறுந்த சுருக்கு * கடுக்கன் ஜோடியும் காளைமாட்டு ஜோடியும் அமைவது கடினம் * கடுக்காய்க்கு அகணி நஞ்சு: சுக்கிற்குப் புறணி நஞ்சு * கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும் * கடுகிலும் கால் திட்டம் கரண்டி; அதிலும் கால் முட்டை எண்ணெய் கடன் வாங்கி என் தலை சீவிக் கட்டி, மகள் தலை வாரிக் கட்டி, மருமகன் தலை கோதிக் கட்டி, குறை எண்ணெய் வைத்த இடத்தில் அயல் வீட்டுக்காரி வந்து இடறி விட்டாள் ; அது ஏரி பெருகினாற் போலப் போயிற்று * கடுகிற்று, முடுகிற்று, வடுகச்சி கல்யாணம் * கடுகு அத்தனை நெருப்பு ஆனாலும் போரைக் கொளுத்தி விடும் * கடுகு அளவும் களவுதான்; கர்ப்பூரக் களவும் களவுதான் * கடுகு சிந்தினால் கலகம் வரும் * கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? * கடுகு செத்தாலும் கறுப்புப் போகாது * கடுகு செத்தும் காரம் போகாது * கடுகு போகிற இடத்தில் தடி எடுத்துக் கொண்டு திரிவான்; பூசணிக்காய் போவது தெரியாது * கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது * கடுகு மலை ஆச்சு; மலை கடுகு ஆச்சு * கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டினது போல * கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும் * கடுஞ் சிநேகிதம் கண்ணுக்குப் பொல்லாதது * கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும் * கடு நட்பும் பகை விளைப்பு * கடும் காற்று மழை காட்டும்; கடு நட்புப் பகை காட்டும் * கடும் கோபம் கண்ணைக் கெடுக்கும். கடும் சிநேகம் கண்ணைக் கெடுக்கும் * கடும் செட்டுக் கண்ணைக் கெடுக்கும் * கடும் செட்டுக் காரியக் கேடாம் * கடும் செட்டுத் தயவைக் கெடுக்கும் * கடும் சொல் கேட்டால் காதுக்குக் கொப்புளம் * கடும் பசி கல்மதில் உடைத்தும் களவு செய்யச் சொல்லும் * கடும் போரில் கைவிடலாமா? * கடு முடுக்கடா சேவகா, கம்பரிசியடா சம்பளம் * கடுவெளியைக் கானல் ஜலமாய்க் கண்டது போல * கடை அரிசி கஞ்சிக்கு உதவுமா? * கடை ஓடித் தாவும் நிலத்துக்குக் கரையடி மேட்டு நிலம் எளிது * கடைக்குக் கடை ஆதாயம் * கடைக்குக் கடை ஆள் இருப்பார்கள் * கடைக்குக் கடை ஆள் தாவியென * கடைக்குட்டி கட்டி மாம்பழம் * கடைக்குப் போகக் கண்ணிக்குப் போக * கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவார் * கடை கெட்ட நாய் கல்யாணத்துக்குப் போனதாம்; எச்சில் இலை கிடைக்காமல் எட்டி எட்டிப் பார்த்ததாம் * கடை கெட்ட மூளிக்குக் கோபம் கொண்டாட்டம் * கடை கெட்ட மூளி சூல் ஆனாலும் காற்பணத்துக் காசு செல்லும் * கடை கெட்ட வாழ்வு, தலை கட்ட நேரம் இல்லை * கடைச் சோற்றுக்கு மோரும் கால் மாட்டுக்கு அணையும் * கடைசிச் சோற்றுக்கு மோரும் கால் மாட்டிற்குப் பாயும் வேண்டும் * கடைசிப் பிடி கட்டி மாம்பழம் * கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தானாம் * கடைத் தேங்காயை எடுத்து விநாயக பூஜை செய்த கதை * கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுப்பாள் * கடைப் பிறப்பு கழுதைப் பிறப்பு * கடையச்சே வாராத வெண்ணெய் குடையச்சே வரப் போகிறதா? * கடையில் அரிசி கஞ்சிக்கு உதவுமா? அண்டை வீட்டுக்காரி புருஷன் ஆபத்துக்கு உதவுவானா? * கடையில் அரிசி கஞ்சிக்கு உதவுமா? அவிசாரி புருஷன் ஆபத்துக்கு உதவுவானா? * கடையில் இருக்கும் கன்னியைக் கொள் * கடையில் வந்ததும் அரிசியோ? நடையில் வெந்ததும் சாதமோ? * கடையிலே கட்டித் தூக்கினாலும் அழுகற் பூசணிக்காய் அழுகலே * கடையிலே கொண்டு மனையிலே வைக்கிறான் * கடையிலே தேளைக் கண்டு கை அசக்கினால் நிற்குமா? * கடையும் போது வராத வெண்ணெய் குடையும் போது திரண்டு விடுமா? * கடைவாயில் ஆனை ஒதுக்கினாற் போல * கடைவாயில் ஓட்டின பீயைப் போல * கண் அளக்காததைக் கை அளந்து விடுமா? * கண் அறிந்தும் அயல் மனையில் இருக்கிறதா? * கண் இமை, கை நொடி அளவே மாத்திரை * கண் இமை போலக் காக்கிறான் கடவுள் * கண் இமை போலே கரிசனமாய்க் காக்கிறது * கண் இமையா முன்னே பறந்து போனான் * கண் இரண்டும் இல்லாதவன் வீட்டுக்கு வைத்த விளக்கு * கண் இருக்கிற போதே காக்கை பிடுங்குகிறது போல * கண் இருந்தும் கண்டமங்கலத்தில் பெண் கொடுப்பார்களா? * கண் இருந்தும் கிணற்றில் விழுந்ததுபோல * கண் இருந்தும் குழியில் விழலாமா? * கண் இல்லாக் குருடனுக்கு மூக்குக் கண்ணாடி ஏன்? * கண் உள்ள போதே காட்சி; கரும்புள்ள போதே ஆலை * கண் ஊனன் கைப் பொருள் இழப்பான் * கண் ஒளி பெரிதா? கதிர் ஒளி பெரிதா? * கண் கட்டி மந்திரமா காட்ட வந்தாய்? * கண் கட்டி வித்தை காட்ட வந்தாயோ? * கண் கட்டின புழுவைப் போல * கண் கண்ட தெய்வம் * கண் கண்டது கை செய்யும் * கண் கண்டு வழி நட * கண் காணாமல் கடும் பழி சொல்கிறதா? * கண்குத்திப் பாம்பு போல் இருந்தாலும் கண்ணில் மண்ணைப்போடுகிறான் * கண் குருட்டுக்கு மருந்து இட்டால் தெரியுமா? * கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா? * கண் குருடு ஆனாலும் நித்திரையிலே குறைவில்லை * கண் குற்றம் கண்ணுக்குத் தெரியுமா? * கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? * கண் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது * கண் கொண்டு அல்லவோ வழி நடக்க வேண்டும்? * கண் பழுதுற்ற ஒரு பயணிக்கு குத்துக்கோல் ஒன்று கிடைத்த மாதிரி * கண்ட இடத்தில் கத்தரி போடுவான் * கண்ட இடத்தில் திருடன் கண் போகிறது * கண்ட இடம் கைலாசம் * கண்ட கண்ட கோயிலெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டேன் காணாத கோயிலுக்குச் காணிக்கை நேர்ந்து வைத்தேன் * கண்ட தண்ணீருக்கு நிறை வேளாண்மை, கண்டது எல்லாம் ஓடித் தின்னும் ஆடு; நின்று நின்று மேய்ந்து போகும் மாடு * கண்டதில் பாதி சவுசிகம்; சீமையில் பாதி ஶ்ரீவத்ஸம்; பாதியில் பாதி பாரத்துவாஜம் * கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் * கண்டது கை அளவு காணாதது உலகளவு * கண்டது சொன்னால் கொண்டிடும் பகை * கண்டது பாம்பு கடித்தது கருக்குமட்டை * கண்டது பாம்பு. கடித்தது சோளத்தட்டை * கண்டது பாம்பு கடித்தது மாங்கொட்டை * கண்டதும் மருதாணியைக் காலில் இட்டுக் கொண்டால் கொண்டவனுக்கு முன்னால் குதித்தோடிப் போகலாம் * கண்டதே காட்சி, கொண்டதே கோலம் * கண்டதைக் காலை வாரி அடிக்கிறதா? * கண்டதைக் கேட்டதைச் சொல்லாதே: காட்டு மரத்திலே நில்லாதே * கண்டதைக் கேளா விட்டால் கொண்டவன் அடிப்பான் * கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும் * கண்ட பாவனையா கொண்டை முடிக்கிறது? * கண்டம் இல்லாத எருமை தண்டம் * கண்டம் ஒருத்தன் கழுத்து ஒருத்தன், துண்டம் ஒருத்தன்; துடை ஒருத்தன் * கண்ட மங்கலத்து அஞ்சு பெண்களும் ஒருத்தர் போன வழி ஒருத்தர் போகார் * கண்ட மாப்பிள்ளையை நம்பிக் கொண்ட மாப்பிள்ளையைக் கைவிட்டாற் போல * கண்டர மாணிக்கத்துக் கட்டுத் தறியும் வேதம் சொல்லும் * கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் * கண்டவன் எடுக்கானா? * கண்டவன் எடுத்தால் கொடுப்பானா? * கண்டவன் கொள்ளையும் கணியாகுளப் போரும் * கண்டவன் விலை சொன்னால் கொண்டவன் கோடி உடான் * கண்டார் கண்டபடி பேசுகிறது * கண்டாரைக் கேட்டாரைச் சொல்லாதே. கண்டால் அல்லவோ பேசுவார் தொண்டைமான்? * கண்டால் ஆயம்; காணா விட்டால் மாயம் * கண்டால் ஒரு பேச்சு; காணா விட்டால் ஒரு பேச்சு * கண்டால் ஒன்று; கானா விட்டால் ஒன்று * கண்டால் கரிச்சிருக்கும்; காணா விட்டால் இனித்திருக்கும் * கண்டால் காமாட்சி நாயக்கர்; காணா விட்டால் காமாட்டி நாயக்கன் * கண்டால் காயம்; காணாவிடில் மாயம் * கண்டால் சரக்கறியேன்; காணாமல் குருக்கறியேன் * கண்டால் கீச்சுக் கீச்சு; காணா விட்டால் பேச்சுப் பேச்சு * கண்டால் தண்டம்; வந்தால் பிண்டம் * கண்டால் துணை; காணா விட்டால் மலை * கண்டால் தெரியாதா, கம்பளி ஆட்டு மயிரை? * கண்டால் முறை சொல்கிறது; காணா விட்டால் பெயர் சொல்கிறது * கண்டால் ரங்கசாமி, காணா விட்டால் வடுகப்பயல் * கண்டால் வத்தி; காணா விட்டால் கொள்ளி * கண்டி ஆயிரம், கப்பல் ஆயிரம், சிறு கம்பை ஆயிரம் * கண்டிப்பு இருந்தால் காரியம் * கண்டியிலே ஆனைகுட்டி போட்டால் உனக்காச்சா? எனக்காச்சா? * கண்டிருந்தும் மலத்தைக் கவிழ்ந்திருந்து தின்பார்களா? * கண்டு அறிந்த நாயும் அல்ல; கனம் அறிந்த பேயும் அல்ல * கண்டு அறிய வேண்டும் கரும்பின் சுகம்; உண்டு அறிய வேண்டும் * கண்டு அறியாதவன் பெண்டு படைத்தால் காடு மேடு எல்லாம் இழுத்துத் திரிவானாம் * கண்டு எடுத்தவன் கொடுப்பானா? * கண்டு எடுத்தானாம், ஒரு சுண்டு முத்தை * கண்டு கழித்ததைக் கொண்டு குலாவினான் * கண்டு செத்த பிணமானால் சுடுகாட்டுக்கு வழி தெரியும் * கண்டு நூல் சிடுக்கெடுத்தாச்சு: வண்டி நூல் இருக்கிறது * கண்டு பேசக் காரியம் இருக்கிறது; முகத்தில் விழிக்க வெட்கமாய் இருக்கிறது * கண்டும் காணவில்லை, கேட்டும் கேட்கவில்லை என்று இருக்க வேண்டும் * கண்டும் காணாதது போல் விட்டுவிட வேண்டும் * கண்டும் காணாமலும் கேட்டும் கேட்காமலும் இருக்க வேண்டும் * கண்டும் காணவில்லை, கேட்டும் கேட்கவில்லை என்று இருக்க வேண்டும் * கண்டும் காணாததுபோல் விட்டுவிட வேண்டும் * கண்டு முட்டு; கேட்டு முட்டு * கண்டேன் சீதையை என்றாற் போல * கண்ணாடி, பித்தன், கருங்குரங்கு, காட்டானை, மண்ணாளும் வேந்தனோடு ஐந்தும் பித்து * கண்ணாடியில் கண்ட பணம் கடன் தீர்க்க உதவுமா? * கண்ணாரக் கண்டதற்கு ஏன் அகப்பைக் குறி? * கண்ணாரக் காணாதது மூன்றில் ஒரு பங்கு * கண்ணால் கண்டது பொய்; அகப்பைக்குறி மெய் * கண்ணாலே கண்டது பொய்; கருதி விசாரித்தது மெய் * கண்ணாலே கண்டது பொய்; காதாலே கேட்டது மெய் * கண்ணாலே கண்டதும் பொய்; காதாலே கேட்டதும் பொய்; ஆராய்ந்து பார்ப்பது மெய் * கண்ணாலே கண்டதை எள்ளுக்காய் பிளந்ததுபோல் சொல்ல வேண்டும் * கண்ணாலே கண்டதைக் கையாலே செய்வான் * கண்ணாலே கண்டாலும் மண்ணாலே மறைக்க வேண்டும் * கண்ணாலே சீவன் கடகடவென்று போனாலும் வண்ணானுக்கு மழை நஞ்சு * கண்ணாலேயும் கண்டதில்லை. காதாலேயும் கேட்டதில்லை * கண்ணான பேர்களை மண் ஆக்குகிறான் * கண்ணான பேரை எல்லாம் புண் ஆக்கிக் கொண்டு, கரும்பான பேரை எல்லாம் வேம்பாக்கிக் கொண்டான் * கண்ணான மனசைப் புண் ஆக்குகிறான் * கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ? * கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா? * கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது * கண்ணுக்கு ஆனால் புண்ணுக்கு ஆகாது * கண்ணுக்கு இமை காதமா? * கண்ணுக்கு இமை; பெண்ணுக்கு நாணம் * கண்ணுக்கு என்ன கரிப்பு? * கண்ணுக்குக் கண் அருகே காணலாம் * கண்ணுக்குக் கண்ணாய் இருந்தும் கடைப் பெண்ணுக்கு வழி பார்க்கிறதா? * கண்ணுக்குக் கலம் தண்ணீர் விடுகிறது * கண்ணுக்குப் புண்ணும் அல்ல; காண்பார்க்கு நோவும் அல்ல * கண்ணுக்கு மூக்குக் காத தூரம் இல்லை * கண்ணுக்கும் மூக்குக்கும் காலம் இப்படி வந்ததே! * கண்ணுக்கும் மூக்குக்கும் நேராகப் பார் * கண்ணுக்குள் சம்மணம் கொட்டுவான்; கம்பத்தில் ஐந்தானை கட்டுவான் * கண்ணும் கருத்தும் உள்ள போது இல்லாமல், கண் பஞ்சு அடைந்த பின் என்ன கிடைக்கும்? * கண்ணும் கலத் தண்ணீர் விடும் * கண்ணும் கருத்தும் உள்ள போதே காணோம்; அவை போனபின் என்ன கிடைக்கும்? * கண்ணும் நமது; விரலும் நமது: கண்ணைக் குத்துவதா? * கண்ணும் புண்ணும் உண்ணத் தீரும் * கண்ணும் மூக்கும் வைத்தான்; காரமும் கொஞ்சம் சேர்த்தான் * கண்ணே. கண்ணே என்றால் உச்சி குளிருமா? * கண்ணே, காதே, நமஸ்காரம்; கண்டதைக் கேட்டதைச் சொல்லாதே * கண்ணை அலம்பி விட்டுப் பார்க்க வேண்டும் * கண்ணை இமை காப்பது போல * கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல * கண்ணைக் கண்ணைக் காட்டுது, அண்ணி கழுத்துக் கருகுமணி * கண்ணைக் காட்டினால் வராதவள் கையைப் பிடித்து இழுத்தால் வருவாளா? * கண்ணைக் குத்திய விரலைக் களைந்து எறிவார் உண்டோ? * கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது * கண்ணைக் கெடுத்த தெய்வம் மதியைக் கொடுத்தது * கண்ணைக் கொசு மொய்க்கக் கடை வாயை ஈ மொய்க்கப் புண்ணைப் புழு அரிக்கப் பெண்ணைப் போக விட்டாள் புங்காத்தை * கண்ணைக் கொண்டு நடந்தது போல உன்னைக் கண்டு நடந்தேன் * கண்ணைத் தின்ற குருடனும் நியாயத்தை ஒத்துக் கொள்ள வேணும் * கண்ணைப் பிடுங்கி முன்னே எறிந்தாலும் கண்கட்டு வித்தை என்பார்கள் * கண்ணைப் பிதுக்கிக் காட்டியும் வித்தையா? * கண்ணை மூடிக் குட்டுகிறதா? * கண்ணை மூடிக் கொண்டு காட்டில் நடப்பது போல * கண்ணை விறைச்சுக் கொண்டு எங்கே போனாய்? கவுண்டன் செத்தான்; இழவுக்குப் போனேன் * கண்ணோடே பிறந்த காவேரி ஆனாலும் உதட்டைச் சுட்டு உறவாடுவேன் * கண்ணோடே பிறந்த காவேரி ஆனாலும் நம் எண்ணம் சரி ஆகுமா? * கண்ணோ, புண்ணோ? * கண்ணோ புண்ணோ என்று கலங்கி மனம் திடுக்கிடுகிறது * கண் தெரிந்து நடப்பவர்கள் பள்ளத்தில் விழ மாட்டார்கள் * கண் தெரிந்து வழி நடக்கும்படி நினை * கண் தெரியாமல் வழி நடக்கிறது போல * கண் படைத்தும் குழியில் விழலாமா? * கண் பறிகொடுத்துக் கலங்கினாற் போல * கண் பார்த்தால் கை செய்யும் * கண் பார்த்துக் கையால் எழுதாதவன் கசடனாவான் * கண் புண்ணிலே கோல் இட்டது போல * கண் பெருவிரலைப் பார்க்கும் போதே கடைக்கண் உலகமெல்லாம் சுற்றும் * கண் மூடர் கைப் பொருளை அழிப்பர் * கண் மூடித் துரைத்தனம் ஆச்சே? * கண் மூடிப் பழக்கம் மண் மூடிப் போகும் * கணக்கதிகாரத்தைப் பிளக்கும் கோடாலி * கணக்கப் பிள்ளை எல்லாம் எழுத்துப் பிள்ளையா? * கணக்கப் பிள்ளை கொடுக்கைத் தூக்கி, கண்டவளெல்லாம் செருப்பைத் தூக்கி * கணக்கப் பிள்ளை பொண்டாட்டி கடுக்கன் போட்டுக் கொண்டாள் என்று காரியக்காரன் பொண்டாட்டி காதை அறுத்துக் கொண்டாளாம் * கணக்கப் பிள்ளை பொண்டாட்டி குணுக்கைப் போட்டு ஆடினாளாம் * கணக்கன் கண் வைத்தால் கால் காணி பொட்டை * கணக்கன் கணக்கு அறிவான்; தன் கணக்கைத் தான் அறியான் * கணக்கன் கணக்கைத் தின்னா விட்டாலும் கணக்கனைக் கணக்குத் தின்று விடும் * கணக்கன் கெட்டால் பள்ளிக்கூடம் * கணக்கன் கணக்கைத் தூக்கி; கண்டவனெல்லாம் செருப்பைத்தூக்கி * கணக்கன் மனைவி கடுக்கன் அணிந்தாளென்று காரியக்காரன் மனைவி காதை அறுத்துக் கொண்டாளாம் * கணக்கன் வீட்டுக் கல்யாணம் விளக்கெண்ணெய்க்குக் கேடு * கணக்கனுக்குக் கைக் கூலி கட்டிக் குடியிருக்கக் கடன் என்றாராம் * கணக்கனுக்குப் பட்டினி உடன் பிறப்பு * கணக்கனுக்கு மோட்சம் இல்லை; ஒட்டனுக்கு நரகம் இல்லை * கணக்கனைக் கண்ட இடத்தில் கண்ணைக் குத்து * கணக்கனைப் பகைத்தாயோ? காணியை இழந்தாயோ? * கணக்கனோ, குணக்கனோ? * கணக்கிலே கயிறு கோத்திருக்கிறது * கணக்கு அதிகாரத்தைப் பிளக்கும் கோடாலி * கணக்கு அரைக்கால், முக்காலே அரைக்கால், கணக்கன் பொண்டாட்டி தாலி அறுத்தாள் * கணக்கு அறிந்த பிள்ளை வீட்டில் இருந்தால் வழக்கு அறாது * கணக்கு அறிவான், காலம் அறிவான் * கணக்குக் குஞ்சையும் காக்கைக் குஞ்சையும் கண்ட இடத்திலே கண்ணைக் குத்து * கணக்கிலே கயிறா கோத்திருக்கிறது? * கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும் * கணபதி பூஜை கைமேலே பலன் * கணவன் இல்லாத கற்புடைய பெண்ணின் கட்டழகு பயன்படாதது போல * கணவன் கட்டிய தாலியை கட்டையில் போகும் வரை கழற்றாதே * கணவனுக்கு கீழ்ப்படிவதே மனைவிக்கு அழகு * கணவனுக்கு மிஞ்சித் தெய்வம் இல்லை * கணவனுக்கு மிஞ்சின கடவுள் இல்லை; கடலுக்கு மிஞ்சின ஆழம் இல்லை * கணவனே கண்கண்ட தெய்வம் * கணவனைப் பிரிந்து அயல் வீட்டில் இருக்கிறதா? * கணவனை வைத்துக் கொண்டு அல்லவோ கள்ள மாப்பிள்ளையைக் கொள்ள வேண்டும்? * கணிகாலங்காரம் போல * கணிசத்துக்கு இவள்; காரியத்துக்கு அவள் * கணுக் கணுவாகக் கரும்பானாலும் ஆனைக்கு என்னவோ கடைவாய்க்குத்தான் * கணுக்கால் பெருத்தால் கணவனைத் தின்பாள் * கணை முற்றினால் கட்டையிலே * கணையாழி கண்டான் ஆறு கொண்டது பாதி; தூறு கொண்டது பாதி * கத்தரிக்காய் என்று சொன்னால் பத்தியம் முறிந்து போகுமா? * கத்தரிக்காய்க்குக் காம்பு ருசி; வெள்ளரிக்காய்க்கு விதை ருசி * கத்தரிக்காய்க்குக் கால் முளைத்தால் கடைத்தெருவுக்கு வந்தால் தெரிகிறது * கத்தரிக்காய்க்குக் கையும் காலும் முளைத்தாற் போல் * கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள் மணை குற்றம் என்கிறாள் * கத்தரிக்காய் நறுக்குகிற கையும் காலும் பார்த்தால் பூசணிக்காய் வழி போகாதே, போகாதே என்கிறதாம் * கத்தரிக்காய் வாங்கப் பூசணிக்காய் கொசுரா? * கத்தரிக்காய் விதை சுரைக்காயாய் முளைக்காது * கத்தரிக்காய்க்குக் காலும் தலையும் முளைத்தது போல் * கத்தரிக்காய் விற்ற பெட்டி காசுப் பெட்டி; வெள்ளரிக்காய் விற்ற பெட்டி வெறும் பெட்டி * கத்தரிக்காயை நறுக்கிக் காலும் கையும் வெட்டிக் கொண்ட பெண்ணே, நீ பூசணிக்காய்ப் பக்கம் போகாதே * கத்தரிக் கொல்லையிலே கூத்து வேடிக்கை பார்த்தது போல * கத்தரித் தோட்டக்காரனுக்குக் கண் தெரியாது; வெள்ளரித் தோட்டக்காரனுக்குக் காது கேளாது * கத்தரித் தோட்டத்துக் களை பிடுங்கினாற் போலும் இருக்க வேண்டும்; கன்றுக் குட்டிக்குப் புல் பிடுங்கினாற் போலும் இருக்க வேண்டும் * கத்தி இருக்கும் இடத்துக்கு மரை காவுகிறதா? * கத்தி எட்டின மட்டும் வெட்டும்; பணம் எட்டாத மட்டும் வெட்டும் * கத்தி கட்டி பெண்சாதி எப்போதும் கைம்பெண்டாட்டி * கத்திப் பிடிக்குப் பிடித்தால் அரிவாள் பிடிக்கு ஆகட்டும் * கத்தியும் கடாவும் போல * கத்தியும் வெண்ணெயும் காய்ச்சித் துவைத்துக் கடை * கத்தியைப் பார்க்கிலும் கனகோபம் கொலை செய்யும் * கத்து, கத்து என்றால் கழுதையும் கத்தாது; சொல் சொல் என்றால் புலவனும் சொல்லான் * கத்துகிற மட்டும் கத்திவிட்டுப் போகச்சே கதவைச் சாத்திக்கொண்டு போ * கதலீனாம் முதலீனாம் பலகாலே வக்ர கதி * கதவின் கீழே நின்று கொண்டு காலைக் காலைக் காட்டினாளாம் * கதவைச் சாத்தினால் நிலை புறம்பு * கதி இருவர் கன்னித் தமிழுக்கு * கதி கெட்ட மாப்பிள்ளைக்கு எரு முட்டை பணியாரம் * கதிர் களைந்தும் களை எடு * கதிர் நூல் குறைந்தாலும் கள்ளச்சி கழுத்து நூல் குறையாது * கதிர் போல இளைத்துக் குதிர் போல் பெருப்பது * கதிர் முகத்தில் என்ன ராசி முழக்கம் வேணும்? * கதிரவன் சிலரை காயேன் என்குமோ? * கதிரிலே ஒடிக்காதே என்றால் கணுவிலே ஒடித்துப் போடுகிறாயே! * கதிருக்கு முந்நூறு நெல் இருந்தால் முழு வெள்ளாண்மை * கதிரைக் களைந்தும் களையைப் பிடுங்கு * கதிரைப் பார்க்கிறதா? குதிரைப் பார்க்கிறதா? * கதை அளக்கிறான் * கதைக்குக் கண் இல்லை; காமத்திற்கு முறை இல்லை * கதைக்குக் கால் இல்லை; கண்ட புருஷனுக்கு முறை இல்லை * கதைக்குக் கால் இல்லை; கொழுக்கட்டைக்குத் தலை இல்லை; கூத்தாடிக்கு முறை இல்லை * கதைக்குக் கால் இல்லை, பேய்க்குப் பாதம் இல்லை * கதைக்குக் காலும் இல்லை; கத்தரிக்காய்க்கு வாலும் இல்லை * கதைக்குக் காலும் இல்லை; தலையும் இல்லை * கதை கதையாம் காரணமாம்; காரணத்தில் ஒரு தோரணமாம் * கதை கேட்ட நாயைச் செருப்பால் அடி * கதை பண்ணுகிறான் * கதை முடிந்தது; கத்தரிக்காய் காய்த்தது * கதையை நிறுத்திக் காரியத்தைப் பேசு * கதையோ பிராமணா, கந்தையோ பொத்துகிறாய்? அல்லடி பேய் முண்டை, சீலைப்பேன் குத்துகிறேன் * கந்தப்பூர் சிற்றப்பா நமஸ்காரம்; பாதி பொச்சை மூடிக்கொண்டு பாக்கியசாலியாய் இரு * கந்தப் பொடிக் கடைக்காரனுக்குக் கடுகு வாசனை தெரியுமா? * கந்த புராணத்தில் இல்லாதது எந்தப் புராணத்திலும் இல்லை * கந்த புராணம், நம் சொந்தப் புராணம் * கந்தர் அந்தாதியைப் பாராதே; கழுக்குன்ற மாலையை நினையாதே * கந்தலில் கால் இட்டது போல * கந்தன் களவுக் கல்யாணத்துக்குக் கணபதி சாட்சி * கந்தனுக்குப் புத்தி கவட்டிலே * கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு; கூழ் ஆனாலும் குளித்துக் குடி * கந்தை உடுத்துக் கடைவீதி போனாலும் கண்ணாடி கண்ணாடியே * கந்தைக்கு ஏற்ற பொந்தை; கழுவுக்கு ஏற்ற கோமுட்டி * கந்தைக்குச் சரடு ஏறுகிறது எல்லாம் பலம் * கந்தைத் துணி கண்டால் களிப்பாள்; எண்ணெய்த் தலை கண்டால் எரிவாள் * கந்தைத் துணியும் கரி வேஷமும் ஆனான் * கந்தையை அவிழ்த்தால் குட்டி வெளிச்சம் தெரியும் * கந்தையை அவிழ்த்தால் சிந்தை கலங்கும் * கந்தையைக் கட்டி வெளியே வந்தால் கண்ணாட்டி; வெள்ளையைக் கட்டி வெளியே வந்தால் வெள்ளாட்டி * கப்பரையிலே கல் விழுகிறது * கப்பல் அடிப்பாரத்துக்குக் கடற்கரை மண்ணுக்குத் தாவு கெட்டாற் போல * கப்பல் உடைந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே * கப்பல் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல * கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும் * கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றுப் போகுமா? * கப்பல் ஏறிய காகம் போலக் கலங்குகிறது * கப்பல் ஏறிவிட்ட காகம் கலங்குமா? * கப்பல் ஒட்டிய வாழ்வு காற்று அடித்தால் போச்சு * கப்பல் போம்; துறை கிடக்கும் * கப்பலில் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல * கப்பலில் ஏறிய காகம் போல * கப்பலில் பாதிப் பாக்கு * கப்பலில் பாதிப் பாக்கைப் போட்டுவிட்டுத் தேடுவது போல * கப்பலில் பெண் வருகிறது என்றானாம்; அப்படியானால் எனக்கு ஒன்று என்றானாம் * கப்பலை விற்றுக் கப்பல் விற்றான். கொட்டை வாங்கித் தின்றானாம் * கப்பலே கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கை வைக்காதே * கப்பற்காரன் பொண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி * கப்பற்காரன் வாழ்வு காற்றடித்தால் போச்சு * கப்பி என்றால் வாயைத் திறக்கிறது குதிரை; கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்கிறது * கபடச் சொல்லிலும் கடிய சொல்லே மேல் * கபடாவும் இல்லை; வெட்டுக் கத்தியும் இல்லை * கபடு இருந்த நெஞ்சும் களை இருந்த பயிரும் உருப்படா * கபடு சூது கடுகாகிலும் தெரியாது * கபாலக் குத்துக் கண்ணைச் சுழிக்கும் * கம்பங் கொல்லையில் மாடு புகுந்தது போல * கம்ப சூத்திரமோ? கம்ப சித்திரமோ? * கம்பத்தில் ஏறி ஆடினாலும் கீழ் வந்துதான் தியாகம் வாங்க வேணும் * கம்பத்தில் கொடுத்த பெண்ணும் வாணியனுக்குக் கொடுத்த பாரும், விளங்கா * கம்பப் பிச்சையோ? கடைப் பிச்சையோ? * கம்பமே காவேரி, ரங்கனே தெய்வம் * கம்பர் போன வழி * கம்பர் போன வழி கண்டு கழித்தது * கம்பராமாயணம் போல் * கம்பளி மூட்டை என்று கரடி மூட்டையை அவிழ்த்தானா * கம்பளி மேல் பிசின் * கம்பளியிலே ஒட்டின கூழைப் போல * கம்பளியிலே ஒட்டின பீ மாதிரி * கம்பளியிலே சோற்றைப் போட்டு மயிர் மயிர் என்கிறதா? * கம்பளி வேஷம் * கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் * கம்பன் வீட்டு வெள்ளாட்டியும் கவி பாடுவாள் * கம்பனோ, பம்பனோ? * கம்பி நீட்டினான் * கம்புக்குக் களை பிடுங்கினாற் போலவும் தம்பிக்குப் பெண் பார்த்தாற் போலவும் ஆகும் * கம்புக்குக் கால் உழவு * கம்பு கொண்டு வந்து நாயை அடிப்பதா? கம்பு கிடக்கும் இடத்துக்கு நாயைத் தூக்கிக்கொண்டு போவதா? * கம்பு மாவு கும்பினால் களிக்கு ஆகுமா? * கம்மரீகமோ, ராஜரீகமோ? * கம்மாளப் பிணம் விறைத்தாற் போல * கம்மாளன் இருந்த இடமும் கழுதை இருந்த இடமும் சரி * கம்மாளன் எடுக்காத சிக்கலை வாணியன் எடுப்பான் * கம்மாளன் குடித்தனம் பண்ணாதே * கம்மாளன் துணி வாங்கினால் கால்மயிர் தெரிய வாங்குவான் அதைச் சலவைக்கும் போடும் போது அடுப்பிலே போட்டாலும் வேகாது * கம்மாளன் நாய் பட்டி ஒலிக்கு அஞ்சுமா? * கம்மாளன் பசுவைக் காது அறுத்துக் கொண்டாலும் உள்ளே செவ்வரக்குப் பாய்ச்சியிருப்பான் * கம்மாளன் பசுவை காதறுத்துக் கொள் * கம்மாளன் பசுவைக் காது அறுத்து வாங்கு * கம்மாளன் பசுவைக் காது அறுத்துக் கொள்ள வேண்டும் * கம்மாளன் பணம் கரியும் பொறியுமாய்ப் போய் விட்டது * கம்மாளன் பல்லக்கு ஏறினால் கண்டவர்க்கு எல்லாம் இறங்க வேண்டும் * கம்மாளன் பிணத்தைக் காது அறுத்தாலும் ரத்தம் வராது * கம்மாளன் வீட்டிற் பிள்ளை பிறந்தால் தேவடியாள் வீட்டில் சர்க்கரை வழங்குவாள் * கம்மாளன் வீட்டு நாய் சம்மட்டிக்கு அஞ்சுமா? * கம்மாளன் வீட்டுப் பசுவை காதறுத்துப் பார்த்தாலும் அங்கும் செவ்வரக்குப் பாய்ந்திருக்கும் * கமரில் ஊற்றிய பால் * கமரில் கவிழ்த்த பால், அமரர்க்கு அளித்த அன்னம் * கயா கயா * கயிற்றுப் பிள்ளை, கைப்பிள்ளை * கயிற்றைப் பாம்பு என்று எண்ணிக் கலங்குகிறது போல * கயிறு அறுந்த பட்டம் போல * கயிறு இல்லாப் பம்பரம் போல * கயிறு திரிக்கிறான் * கர்ணன் கொடை பாதி, காவேரி பாதி * கர்ணனுக்குப் பட்டினி உடன் பிறப்பு * கர்த்தனைக் குருடன் கண்தான் வேண்டுவான் * கர்த்தா, போக்தா, ஜனார்த்தனா * கர்த்தாவின் செயல் உள்ளபடி * கர்த்தாவைக் குருடன் வேண்டுவது கண் பெறத்தானே? * கர்ப்பத்துக்குச் சுகம் உண்டானால் சிசுவுக்குச் சுகம் * கர்ப்பிணியின் பேரில் துர்ப்பலம் * கர்ப்பூர மலையில் ஆக்நேயாஸ்திரம் பிரயோகித்தது போல * கர்மத்தினாலே வந்தது தர்மத்தினாலே போக வேண்டும் * கர்மம் முந்தியா? ஜன்மம் முந்தியா? * கர்விக்கு மானம் இல்லை; கோபிக்குப் பாபம் இல்லை * கரகத்துத் தண்ணீர் காத வழி * கரகத்து நீர் காதம் காக்கும் * கரட்டுக் காட்டுக்கு முரட்டு மண் வெட்டி * கரடிக்கு உடம்பெல்லாம் மயிர் * கரடிக்குப் பயந்து ஆனையிடம் தஞ்சம் புகுந்தாற் போல * கரடிக்குப் பிடித்த இடம் எல்லாம் மயிர் * கரடி கையில் அகப்பட்டவனுக்கு கம்பளிக்காரனைக் கண்டாலும் பயம் * கரடி துரத்தினாலும் கைக்கோளத் தெருவில் போக இடம் இராது * கரடி பிறையைக் கண்டது போல * கரடியைக் கைவிட்டாலும் கரடி கையை விடவில்லை * கரண்டி ஆபீஸ்காரனுக்குக் காதிலே கடுக்கன் என்ன? * கரண்டி பிடித்த கையும் கன்னக்கோல் பிடித்த கையும் சும்மா இருக்குமா? * கரணம் தப்பினால் மரணம் * கரதலாமலகம் போல் காண்கிறது * கரம் கொண்டவன் அறம் வழுவலாகாது * கரம் பற்றிய கன்னியைக் கதற அடிக்கக் கூடாது * கரம் மாறிக் கட்டினால் கனம் குறையாது * கரிக்காலி முகத்தில் விழித்தால் கஞ்சியும் கிடையாது * கரிக்குருவியார் கண்ணுக்குக் காக்கையார் பொன்னொத்துத் தோன்றும் * கரிச்சுக் கொட்டினால் எரிச்சல் வராதா? * கரிசனப்பட்ட மாமியார் மருமகளைப் பார்த்து ஏக்கம் உற்றாளாம் * கரிசனம் உள்ள கட்டியம்மா, கதவைத் திற பீப்பெய்ய * கரிசனம் உற்ற சிற்றாத்தே, நீ கம்பங்கொல்லையில் வாடி கட்டி அழ * கரிசனம் எல்லாம் கண்ணுக்குள்ளே; வஞ்சனை எல்லாம் நெஞ்சுக்குள்ளே * கரியாய் உமியாய்க் கட்டை விளக்குமாறாய் * கரியை வழித்து முகத்தில் தடவினாள் * கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா? * கரு இல்லாத முட்டையும் குரு இல்லாத வித்தையும் * கருக்கலில் எழுந்தாலும் நறுக்கென்று சமைக்க மாட்டாள் * கருக்கலில் கயிற்றைப் பாம்பு என்ற கதை * கருக்கி உருக்கி நெய் வார்த்தாலும் கண்ட நியாயந்தான் சொல்லுவான் * கருங்கண்ணி பட்டாலும் கரையான் கண்ணாலும் திரும்பிப்பாரான் * கருங்கல்லில் ஈரம் ஏறாத் தன்மை போல * கருங்கல்லில் எழுதிய எழுத்தைப் போல * கருங்கல்லிலே நார் உரிப்பான் * கருங்காலி உலக்கைக்கு வெள்ளிப் பூண் கட்டினது போல * கங்காலிக் கட்டைக்கு வாய் நாணாத கோடாலி இளவாழைத்தண்டுக்கு வாய் நாணும் * கருங்குரங்கு போல மலங்க விழிக்காதே * கருங்கொல்லன் உலைக்களத்தில் நாய்க்கு என்ன வேலை? * கருடன் இடம் போனால் எவன் கையில் பொருளும் தன் கையில் சேரும் * கருடன் காலில் கெச்சை கட்டினது போல * கருடன் பறக்க ஒரு கொசு பறந்தாற் போல * கருடனுக்கு முன் ஈ ஆகுமா? * கருடன் முன்னே கொசு பறந்த கதை * கருடனுடன் ஊர்க்குருவி பறந்தது போல * கருடனைக் கண்ட பாம்பு போல * கருடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை * கருப்பங்கட்டி ஆதாயத்தை எறும்பு இழுத்துக் கொண்டு போச்சுதாம் * கருப்பங்கட்டியிலும் கல் இருக்கும் * கருப்பங் கொல்லையிலே நெருப்புப் பொறி விழுந்தாற்போல் * கருப்பட்டி என்றவுடனே சளப்பட்டி என்று நக்கக் கூடாது * கருப்பட்டியிலும் கல் இருக்கும் * கருப்பட்டியைக் கொடுத்துக் கட்டிக்கொண்டு அழுதாலும் கசக்குது என்று சொல்கிறான் * கருப்பட்டி லாபம் என்று புழுத்துப் போன கதை * கருப்பிலே பிள்ளை விற்றாற்ப் போல * கருப்புக் கட்டி ஆதாயத்தை எறும்பு இழுத்துக் கொண்டு போயிற்றாம் * கருப்புக் கட்டிக்கு எறும்பு தானே வரும் * கருப்புக் கட்டியிலும் கல் கிடக்கும் * கருப்புக்கு இருந்து பிழை; கலகத்துக்கு ஒடிப் பிழை * கருப்பூர் மத்யஸ்தம் போல * கருப்பூர் வழக்குப் போல * கரும்பில் எறும்பு இருந்தால் ஆனைக்கு என்ன? * கரும்பிலும் தேன் இருக்கும் * கரும்பிலும் தேன் இருக்கும், கள்ளியிலும் பால் இருக்கும் * கரும்பு ஆலையில் பட்ட எறும்பு போல * கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்ந்தாற்போல் * கரும்பு உள்ள போதே ஆலை ஆட்டிக்கொள் * கரும்புக் கட்டாலே கழுதையை அடித்தால் கழுதைக்குத் தெரியுமா கரும்பு ருசி? * கரும்புக்கு உழுத புழுதி காயச்சின பாலுக்குச் சர்க்கரை ஆகுமா? * கரும்புக்குக் கணு இருந்தாலும் கசக்குமா? * கரும்புக்குப் பழமும் கற்றவருக்குப் பணமும் பொன்னுக்கு மணமும் இல்லை * கரும்புக் கொல்லையைக் காக்க ஆனையை விட்டது போல * கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தன்னோடு வரும் * கரும்பு கசத்தல் வாய்க் குற்றம் * கரும்பு கசந்தால் வாய்க்குப் பொல்லாப்பு * கரும்பு கசந்தது காலத்தோடே. வேம்பு தித்தித்தது வேளையோடே * கரும்பும் எள்ளும் கசக்கினால்தான் பலன் * கரும்பு முறித்துக் கழுதையை அடித்த கதை * கரும்பும் வேம்பு ஆகும் காதல் போதையிலே * கரும்பும் வேம்பு ஆச்சே * கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா? * கரும்பு லாபம் எறும்பு கொண்டு போகும் * கரும்பு வைப்பது காணி நிலத்தில் * கரும்பைக் கழுதை முன் போட்டால் அதற்குத் தெரியுமோ கரும்பு ருசி? * கரும்பைக் கையில் பிடித்தவன் எல்லாம் மன்மதன் ஆகிவிடுவானா? * கரும்பை நறுக்கிப் பிழிந்தாற் போல * கரும்பை முறித்தாற் போல * கரும்பை முறித்துக் கழுதையை அடித்த கதை * கரும்பை விரும்ப அது வேம்பு ஆயிற்று * கரும்பை விரும்ப விரும்ப வேம்பு * கரும்பை வேம்பு ஆக்கினாற் போல * கரும ஒழுங்கு பெருமைக்கு அளவு * கருமத்தை முடிக்கிறவன் அருமை பாரான் * கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான் * கருமத்தை முடிக்கிறவன் கடலை ஆராய்வான் * கருமம் தொலையாது * கருமான் இருந்த இடமும் கழுதை புரண்ட களமும் சரி * கருமான் உலைக்களத்தில் நாய்க்கு என்ன வேலை? * கருமான் வீட்டு நாய் சம்மட்டித் தொனிக்கு அஞ்சுமா? கருவளையும் கையுமாய் * கருவேல மரத்திற்கு நிழல் இல்லை; கன்னானுக்கு முறை இல்லை * கருவை உரு அறியான், கண்டாரைப் பேரறியான் * கரைக்கும் கரைக்கும் சங்கிலி, நடுவிலே இருக்கிறவன் நாய் விட்டை * கரை காணாத தோனிபோலத் தவிக்கிறது * கரைப் பக்கம் பாதை இருக்கக் கப்பல் ஏறினவனும், சொல்லாததை மனையாளுக்குச் சொன்னவனும் பட்ட பாடுபோல * கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் * கல் அடிச் சித்தன் போனவழி காடு வீடெல்லாம் தவிடு பொடி * கல் அடி பட்டாலும் கண் அடி படக் கூடாது * கல் ஆனாலும் கணவன்; புல் ஆனாலும் புருஷன் * கல் ஆனாலும் தடி ஆனாலும் பல் போகிறது ஒன்று * கல் உள்ளதே கிணறு: கரை உள்ளதே தோட்டம் * கல் எடுத்தால் நாய் ஓடும்; கம்பு எடுத்தால் பேய் ஓடும் * கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆமோ? * கல் எறிக்குத் தப்பினாலும் கண் எறிக்குத் தப்பிக்க முடியாது * கல் என்றாலும் கணவன்; புல் என்றாலும் புருஷன் * கல் ஒன்று, கணக்கு ஒன்று. குதிரை ஒன்று, கூத்தியாள் ஒன்று * கல் கிணற்றுக்கு ஏற்ற இரும்புத் தோண்டி * கல் கிள்ளிக் கை உய்ந்தார் இல் * கல் பிறவாத காடே உழு * கல்மேல் எழுத்துக் கலைமான் * கல்மேல் எழுத்துப் போல * கல்மேல் நெல் விளையும் கல்யாணம் முடி * கல்யாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்த கதை போல * கல்யாணத்தில் பஞ்சம் இல்லை * கல்யாணத்திலும் பஞ்சம் இல்லை; களத்திலும் பஞ்சம் இல்லை * கல்யாணத்துக்கு உதவாத பூசணிக்காய் பந்தலிலே கட்டி ஆடுகிறது * கல்யாணத்துக்கு வந்த பெண்டுகளிடத்தில் போனால் போவேன்; இல்லாவிட்டால் கல்லிலே வைத்து நறுக்குவேன் * கல்யாணத்தை நிறுத்தச் சீப்பை ஒளித்து வைத்தது போல * கல்யாணப் பஞ்சமும் களப்பஞ்சமும் இல்லை * கல்யாணப் பந்தலிலே கட்டின ஆடு போல * கல்யாணப் பந்தலிலே தாலி கட்ட மறந்தது போல் * கல்யாணம் ஆகாதவனுக்கு ஒரு கவலை: கல்யாணம் ஆனவனுக்கு ஆயிரம் கவலை * கல்யாணம் எங்கே? காசுப் பையிலே * கல்யாணம் என்றால் கிள்ளுக் கீரையா? * கல்யாணம் கழிந்தால் கைச்சிமிழ் கிட்டாது * கல்யாணம், கார்த்திகை, சீர், செனத்தி * கல்யாணம் செய்கிறதும் கதவைச் சாத்துகிறதும் * கல்யாணம் செய்தும் சந்நியாசியா? * கல்யாணம் பண்ணவில்லையென்று களிப்பு: ஊர்வலம் வரவில்லையென்று உளப்பு * கல்யாணம் பண்ணாமல் பைத்தியம் தீராது: பைத்தியம் தீராமல் கல்யாணம் ஆகாது * கல்யாணம் பண்ணிக்கொள் என்றால், நீயே பெண்டாட்டியாய் இரு என்றது போல * கல்யாணம் பண்ணியும் சந்நியாசி, கடன் வாங்கியும் பட்டினி * கல்யாணம் பண்ணின வீட்டில் ஆறு மாசம் கருப்பு * கல்யாணம் பண்ணும் வரையில் பிள்ளை; கண்ணை மூடும் வரையில் பெண் * கல்யாணம் போவதும் கட்டி அழுவதும் வட்டியில்லாக் கடன் * கல்யாணம் முடிந்த பிறகு பந்தலில் வேலை என்ன? * கல்யாணம் என்றால் ஆணுக்கு கால்கட்டு; பெண்ணுக்கு நூல்கட்டு. * கல்யாணமும் வேண்டாம்; கல்லெடுப்பும் வேண்டாம் * கல்யாண மேடையில் மணப்பெண் அமர கழுத்தில் தாலி ஏறியது போல * கல்யான வீட்டில் ஆறு மாதம் கருப்பு * கல்யாண வீட்டில் கட்டி அழுகிறவள் இழவு வீட்டில் விட்டுக் கொடுப்பாளா? * கல்யாண வீட்டிலே கட்டி அழலாமா? * கல்யாண வீட்டிலே பந்தற்காலைக் கட்டி அழுகிறவன் செத்த வீட்டில் சும்மா இருப்பாளா? * கல்யாண வீட்டிலே பிள்ளை வளர்த்தாற்போல் * கல்யாண வீட்டிற்குப் போய் அறியான்; மேளச்சத்தம் கேட்டு அறியான் * கல்யாண வீட்டுக் கறி அகப்பை, சாவு வீட்டுச் சோற்று அகப்பை * கல்யாணி என்கிற பெண்ணுக்குக் கல்யாணமும் வேண்டுமோ? * கல்லடி சித்தன் போன வழி காடு மேடு எல்லாம் தவிடுபொடி * கல்லன் கரியும் கொல்லன் குசுவுமாய்ப் போச்சு * கல்லா ஒருவன் குல நலம் பேசுதல் நெல்லுடன் பிறந்த பதராகும்மே * கல்லாடம் படித்தவனோடு சொல்லாடாதே * கல்லாதவரே கண் இல்லாதார் * கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம் * கல்லாமல் குல வித்தை பாதி வரும் * கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் * கல்லார் உறவிலும் கற்றார் பகை நலம் * கல்லார் உறவு அகல்; காமக் கடல் கட * கல்லாலே கட்டிச் சாந்தாலே பூசியிருக்கிறதா? * கல்லில் நார் உறிப்பவன் * கல்லில் நெல் முளைத்தாற்போல * கல்லிலும் வன்மை கண்மூடர் நெஞ்சு * கல்லிலே நார் உரிக்கிறது போல * கல்லிலே வெட்டி நாட்டினது போல * கல்லின்மேல் இட்ட அம்புகளைப் போல * கல்லின்மேல் இட்ட கலம் * கல்லினுள் தேரையையும் முட்டைக்குள் குஞ்சையும் ஊட்டி வளர்ப்பது யார்? * கல்லுக் கிணற்றுக்கு ஏற்ற இருப்புத் தோண்டி * கல்லுக்கும் முள்ளுக்கும் அசையாது வெள்ளிக்கிழமைப் பிள்ளையார் * கல்லுக்குள் இருக்கிற தேரையையும் முட்டைக்குள் இருக்கிற குஞ்சையும் ஊட்டி வளர்க்கிறவர் யார்? * கல்லுக்குள் தேரையைக் காப்பாற்றவில்லையா? * கல்லுப் பிள்ளையாரைக் கடித்தால் பல்லுப் போம் * கல்லும் கரியும் கொல்லன் குசுவுமாய்ப் போச்சு * கல்லும் கரைய மண்ணும் உருக அழுதாள் * கல்லும் கரையுமே, கற்றூணும் இற்றுப் போமே! * கல்லும் காவேரியும் உள்ள மட்டும் வாழ்க! * கல்லும் தேங்காயும் சந்தித்தது போலப் பேசுகிறான் * கல்லுளிச் சித்தன் போன வழி காடு மேடெல்லாம் தவிடுபொடி * கல்லுளி மங்கா, கதவைத் திற * கல்லே தலையணை, கானலே பஞ்சு மெத்தை * கல்லை ஆகிலும் கரைக்கலாம்; கல்மனத்தைக் கரைக்கலாகாது * கல்லை இடறினாலும் கணக்கனை இடறாதே * கல்லை எதிர்த்தாலும் கணக்கனை எதிர்க்காதே * கல்லைக் கட்டிக் கொண்டு கசத்தில் இறங்குவது போல * கல்லைக் கட்டி முத்தம் கொடுத்தாற்போல * கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம் * கல்லைக் கிள்ளிக் கை இழந்தது போலாம் * கல்லைக் கிள்ளினால் கை நோகும் * கல்லைக் குத்துவானேன்? கைநோகுதென்று அழுவானேன்? * கல்லைப் பிளக்கக் காணத்தை விதை * கல்லைப்போல் அகமுடையான் இருக்கக் கஞ்சிக்கு அழுவானேன்? * கல்லைப் போலக் கணவன் இருக்க நெற்சோற்றுக்கு அழுவானேன்? * கல்லைப் போலப் பெண்டாட்டி இருக்கக் கடப்பை அரிசிச் சோற்றுக்கு நிற்பானேன்? * கல்லோடு இடறினாலும் கணக்கனோடு இடறாதே * கல் வருகிற விசையைக் கண்டால் பல்லைச் சிக்கென மூட வேண்டும் * கல்வி அழகே அழகு * கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு * கல்வி உள்ள வாலிபன் கன கிழவனே * கல்வி என்ற பயிருக்குக் கண்ணீர் என்ற மழை வேண்டும் * கல்வி ஒன்றே அழியாச் செல்வம் * கல்விக்காரப் பெண்ணாள் களைவெட்டப் போனாள்;களைக்கொட்டு இல்லையென்று மெனக்கெட்டுப் போச்சு * கல்விக்கு அழகு கசடு அற மொழிதல் * கல்வி கரை இல; கற்பவர் நாட் சில * கல்வி கற்கிறதைவிடக் கருத்தை ஆராய்கிறது நன்மை * கல்வி கற்றும் கழுநீர்ப் பானையில் கை இடுகிறது * கல் விதைத்து நெல் அறுத்தவர் யார்? * கல்வியிற் பெரியவன் கம்பன் * கல்வியும் குலமும் வெல்வது வினவின் * கல் விழுந்தாலும் விழும்; காய் விழுந்தாலும் விழும். கல் வீட்டில் இருக்கும் கடனும் தெரியாதாம்; கறுப்புப் புடைவையில் இருக்கும் அழுக்கும் தெரியாதாம் * கல்வீட்டுக்காரி போனால் கமுக்கம்; கூரை வீட்டுக்காரி போனால் கூச்சம் * கல உமி நின்றால் ஓர் அரிசி தட்டாதா? * கல உமி தின்றால் ஓர் அவல் கிடைக்காதா? * கலக்கத்தில் கலக்கம் கடன் கொண்டார் நெஞ்சக் கலக்கம் * கலக்கந்தை கட்டிக் காணப் போனால் இருகலக் கந்தை கட்டி எதிரே வந்தாள் * கலக்கம் இல்லா நெஞ்சுக்கு இனக்காப்பு என்ன? * கலக்கம்பு தின்றாலும் காடை காட்டிலே * கலக்கம்பு போட்டு வளர்த்தாலும் காடை காட்டிலே * கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும்; அடர விதைத்தால் போர் உயரும் * கலக்கிய தண்ணீரில் கெளிற்று மீன் வாய் திறந்து தவிப்பது போல * கலக்கினும் தண் கடல் சேறு ஆகாது * கலத்தில் இட்டாயோ, வயிற்றில் இட்டாயோ? * கலத்தில் சாதம் போட்டதும் காசிக்குப் போனவனும் வருவான் * கலகத்திலே புளுகாதவன் நரகத்திலே போவானாம் * கலகத்திலே புளுகாதவர் இல்லை * கலகத்திலே போயும் கால்மாடு தலைமாடா? * கலகம் கலந்தால் உலகம் கலங்கும் * கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் * கலகமே மெய்யானால் புளுகாதவன் பாவம் * கலத்தில் இட்டுக் கையைப் பிடிக்காதே * கலத்தில் சோற்றை இட்டுக் கையைப் பிடித்தாற்போல * கலத்துக்குத் தெரியுமா, கர்ப்பூர வாசனை? * கலந்த விதைப்புச் சிறந்த பலனைத் தரும் * கலப் பணத்தைக் காட்டிலும் ஒரு கிழப் பிணம் நல்லது * கலப் பயறு விதைத்து உழக்குப் பயிர் விளைந்தாலும் புதுப் பயறு புதுப் பயறுதான் * கலப் பால் கறக்கலாம்; துளிப் பால் முலைக்கு ஏற்றலாமா? * கலப் பால் கறந்தாலும் கன்று முதலாகுமா? * கலப் பால் குடித்த பூனை ஆழாக்குப் பால் குடியாதா? * கலப் பால் குடித்த பூனை ஓர் உழக்காகிலும் கறக்கத் தருமா? * கலப் பால் கூடி ஒரு கன்று ஆகுமா? * கலப் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாற் போல * கலப் பாலுக்குத் துளி பிரை * கலப் பாலை ஒருமிக்கக் குடித்த பூனையை உழக்காகிலும் கறக்கச் சொன்னால் கறக்குமா? * கலப் பாலைக் காலால் உதைத்துவிட்டு விலை மோருக்கு வெளியே அலைகிறதா? * கலப்பு ஆனாலும் பூசப் பூசப் பொன் நிறம் * கலப்புல் தின்றாலும் காடை காட்டுக்குள்ளே * கலப்புழுவை நீக்கின கர்ணன் * கலம் கந்தை கொண்டு காண வந்தாள்; இருகலக் கந்தை கொண்டு எதிரே வந்தாள் * கலம் கலந்தால் குலம் கலக்கும் * கலம் கிடக்கிறது கழுவாமல் * கல நெல் கிடக்கிறது குத்தாமல் * கலம் குத்தினாலும் பதர் அரிசி ஆகாது * கலம் குத்துகிறவள் காமாட்டி, கப்பி குத்துகிறவள் சீமாட்டி * கலம் பதரைக் கத்தினாலும் அரிசி ஆகாது * கலம் பாலுக்குத் துளிப் பிரை * கலம் போனதும் அல்லாமல் கண்ணுக்கும் மூக்குக்கும் வந்ததுபோல * கலம் மா இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா? * கலவன் கீரை பறிப்பது போலப் பேசுகிறாள் * கலிக்குப் புதுமையான காரியம் இருக்கிறது * கலிக்கும் கிலிக்கும் கந்தனை எண்ணு * கலி காம தேனு * கலி காலத்திலே கண்ணுக்கு முன் காட்டும் * கலியன் பாற்சோறு கண்டது போல * கலெக்டரோடு வழக்குக்குப் போனாலும் கணக்கனோடு வம்புக்குப் போகக் கூடாது * கலை பல கற்றாலும் மலைப்பது போல இருக்கும் * கலையும் மப்பைக் கண்டு கட்டி இருந்த விதையை வட்டிக்கு விட்டானாம் * கலையும் மப்பைக் கண்டு கரைத்த மாவை வட்டிக்கு விட்டதுபோல * கவ்வை சொல்லின் எவ்வர்க்கும் பகை * கவடு இருந்த நெஞ்சும் களை இருந்த பயிரும் கடைத்தேறா * கவண் எறி நிலை நில்லாது; கண்டவன் தலையை உடைக்கும் * கவண் எறி நெறியில் நில்லாதே; கண்டவன் தலையை உடைக்கும்? * கவரைச் செட்டி மேலே கழுதை புரண்டு ஏறினாற் போல * கவலை இல்லாக் கஞ்சி கால் வயிற்றுக்குப் போதும் * கவலை உடையாருக்குக் கண் உறக்கம் வராது * கவி அறியாவிடில் ரவியும் அறியான். கவி கண் காட்டும் * கவி கொண்டாருக்குக் கீர்த்தி; அதைச் செவி கொள்ளாருக்கு அபகீர்த்தி * கவி கொண்டாருக்கும் கீர்த்தி: கலைப்பாருக்கும் கீர்த்தியா? * கவிதை எழுதின கை கணக்கு எழுதுகிறது * கவிழ்ந்த பால் கலம் ஏறாது * கவிந்திரானாம் கஜேந்திராணாம் ராஜாவே நிர்பயோகி * கவுண்டன் கல்யாணம் ஒன்று இரண்டாய் முடிந்து போச்சு * கவுண்டன் வீட்டு எச்சில் இலைக்கு கம்பன் வீட்டு நாய்கள் எல்லாம் அடித்துக் கொள்கின்றன * கவைக்கு உதவாத காரியம் * கவைக்குக் கழுதையையும் காலைப் பிடி * கவைக்குத் தகாத காரியம் சீமைக்குத் தகுமா? * கவையை ஓங்கினால் அடி இரண்டு * கவையைப் பற்றிக் கழுதையின் காலைப் பிடி * கழனிக்கு அண்டை வெட்டிப் பார்: கண்ணுக்கு மை இட்டுப் பார் * கழனியில் விழுந்த கழுதைக்கு அதுவே கைலாசம் * கழி இருந்தால் கழுதையை மேய்த்துக் கொள்ளலாம் * கழிச்சலும் விக்கலும் சேர்ந்தால் நம்பப் படாது * கழித்த பாக்குக் கொடுக்காத பெரியாத்தாள் கடற்கரை வரை வந்து வழி விட்டாளாம் * கழு ஒன்று, களவு ஆயிரம் * கழுக்கு மொழுக்கு என்று இருக்கிறான் * கழுக்கு மொழுக்கு என்று கட்டுருக் காளை போல * கழுகாய்ப் பிடுங்குகிறான் * கழுகுக்கு மூக்கிலே வேர்த்தாற் போல * கழுத்தில் இருக்கிறது ருத்திராட்சம், கையிலே இருக்கிறது கொடிய நகம் * கழுத்தில் இருக்கிறது ருத்திராட்சம்; மடியில் இருப்பது கன்னக் கோல் * கழுத்தில் தாலி ஏறிவிட்ட பின் குடித்தனம் நடத்துவதே பெண் மரபு * கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டவனுக்கு முந்தி விரிப்பதே கற்பு * கழுத்திலே கரிமணி இல்லை; பெயர் முத்துமாலை * கழுத்திலே குத்துகிறது கண் கெட்டவனுக்குத் தெரியாதா? * கழுத்திலே தாலி ஏறினால் நாய்மாதிரி வீட்டில் கிடக்க வேண்டியது தானே? * கழுத்திலே தாலி கட்டிவிட்டால் மட்டும் போதுமா? சேர்ந்து குடும்பம் நடத்த வேண்டாமா? * கழுத்திலே தாலி. வயிற்றிலே பிள்ளை. * கழுத்துக்குக் கருகு மணி இல்லை; பெயர் முத்தாபரணம் * கழுத்திலே தாலி வடம்; மனத்திலே கரவடம் * கழுத்து அறுக்கக் கத்தி கையில் கொடுத்தது போல * கழுத்துக்குக் கீழே போனால் கஷ்டம் * கழுத்துக்குமேல் கத்தி வந்திருக்கச்சே செய்ய வேண்டியது என்ன? * கழுத்துக்குமேல் சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன? * கழுத்து மாப்பிள்ளைக்குப் பயப்படாவிட்டாலும் வயிற்றுப் பிள்ளைக்குப் பயப்பட வேண்டும் * கழுத்து வெளுத்தாலும் காக்கை கருடன் ஆகுமா? * கழுத்தைக் கொடுத்தாச்சு: கைவிலங்கு போட்டாச்சு; பத்து நாள் சிறையில் பதுங்கிக் கிடக்க வேணும் * கழுத்தைக் கொடுத்தாலும் எழுத்தைக் கொடாதே * கழுத்தை நீட்டாமல் தாலி ஏறுமா? * கழுத்தை நீட்டியவளுக்கு இன்னமும் தலை நிமிரவில்லை. * கழுதை அறியுமா, கந்தப்பொடி வாசனை? * கழுதை உழவுக்கு வராது * கழுதை உழுகிறவன் குடியானவனா? * கழுதை உழுது கம்பு விளையுமா? கண்டியான் உழுது நெல் விளையுமா? * கழுதை உழுது குறவன் குடி ஆனானா? * கழுதை உழுது வண்ணான் குடி ஆனானா? * கழுதைக் காமம் கத்தினால் தீரும்; நாய்க் காமம் அலைந்தால் தீரும் * கழுதைக்கு உபதேசம் காதில் ஏறுமா? * கழுதைக்கு உபதேசம் காதிலே ஓதினாலும் காள் காள் என்ற புத்தியை விடாது * கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அவயக் குரலன்றி அங்கொன்றும் இல்லை * கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அவயக் குரலே ஒழியச் சவைக்குரல் இல்லையாம் * கழுதைக்கு உபதேசம் பண்ணினால் அபத்தக் குரலைத் தவிர நல்ல குரல் இல்லை * கழுதைக்கு என் கடிவாளம்? * கழுதைக்குக் காது அறுந்து, நாய்க்கு வால் அறுத்தது போல * கழுதைக்குச் சேணம் கட்டினால் குதிரை ஆகுமா? * கழுதைக்குத் தெரியுமா கரும்பு ருசி? * கழுதைக்குப் பரதேசம் குட் டிச் சுவர் * கழுதைக்குப் பின்னால் போகாதே; எஜமானுக்கு முன்னால் போகாதே * கழுதைக்கு வரி கட்டினால் குதிரை ஆகுமா? * கழுதைக்கு வாழ்க்கைப்பட்டு உதைக்கு அஞ்சலாமா? * கழுதை கத்து என்றால் கத்தாதாம்; தானாகக் கத்துமாம் * கழுதை கெட்டால் குட்டிச் சுவர்; நாய் கெட்டால் குப்பைத் தொட்டி * கழுதை தப்பினால் குட்டிச் சுவர் * கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல * கழுதை நினைத்ததாம் கந்தலும் கதக்கலும் * கழுதை தினைத்ததாம் கெண்டை போட்ட முண்டாசு * கழுதைப் பாரம் வண்ணானுக்கு என்ன தெரியும் * கழுதைப் பால் குடித்தவன் போல் இருக்கிறான் * கழுதைப் புட்டை ஆனாலும் கைநிறைய வேண்டும் * கழுதைப் புண்ணுக்குத் தெருப்புழுதி மருந்து * கழுதைப் பொதியில் உறை மோசமா? * கழுதைப் பொதியில் ஐங்கலம் மாறாட்டமா? * கழுதை புரண்ட களம் போல * கழுதை புரண்டால் காடு கொள்ளாது * கழுதை புவியில் இருந்தால் என்ன? பாதாளத்தில் இருந்தால் என்ன? * கழுதை மயிர் பிடுங்கித் தேசம் கட்டி ஆள்கிறதா? * கழுதை மூத்திரத்தை நம்பிக் கட்டுச் சோற்றை அவிழ்க்கிறதா? * கழுதைமேல் ஏறி என்ன? இறங்கி என்ன? * கழுதைமேல் ஏறியும் பெருமை இல்லை: இறங்கியும் சிறுமை இல்லை * கழுதையாகப் போய்க் கட்டெறும்பாய்த் திரும்பி வந்தது * கழுதையாய்ப் பிறந்தாலும் காஞ்சீபுரத்திலே பிறக்க வேணும் * கழுதையின் எறியைக் கழுதைதான் தாங்க வேணும் * கழுதையின் காதிலே கட்டெறும்பை விட்டாற் போல * கழுதையும் குதிரையும் சரி ஆகுமா? * கழுதையும் நாயும் சேர்ந்து கத்தினாற்போல * கழுதையும் பணமும் சேர்ந்து வந்தால் பணத்தை வாங்கிக் கொண்டு கழுதையைத் துரத்தி விடு * கழுதையைக் கட்டி ஓமம் வளர்த்தது போல * கழுதையைக் கொண்டு உழுது குறவன் உழவன் ஆனான் * கழுதையையும் குதிரையையும் பிணைத்தாற் போல * கழுதை லத்தி கை நிறைய * கழுதை வளையற்காரன் கிட்டப் போயும் கெட்டது; வண்ணான் கிட்டப் போயும் கெட்டது * கழுதை வாலைப் பிடித்துக் கரை ஏறுகிறதா? * கழுதை விட்டை ஆனாலும் கைநிறைய வேண்டும் * கழுதை விட்டை கை நிரம்பினால் போதும் என்ற கதை * கழுதை விட்டையிலே மேல் விட்டை வேறே; அடி விட்டை வேறேயா? * கழுதை விட்டையைக் கைநிறையப் பொறுக்கினது போல * கழுநீர்த் தொட்டி நாய் போல * கழுநீர்ப் பானையில் விழுந்த பல்லியைப் போல * கழுநீருக்கு அண்டை வீட்டைப் பார்; கண்ணுக்கு மையிட்டுப் பார் * கழுவிக் கழுவி ஊற்றினாலும் கவிச்சு நாற்றம் போகாது * கழுவிக் கழுவிப் பின்னும் சேற்றை மிதிக்கிறதா? * கழுவிக் குளித்தாலும் காக்கை நிறம் மாறாது; உருவிக் குளித்தாலும் ஊத்தை நாற்றம் போகாது * கழுவிய காலைச் சேற்றில் வைக்கிறதா? * கழுவில் இருந்து கை காட்டுவான் * கழுவிலே நெய் உருக்குகிற கள்ளி முண்டை * கழுவுக்கு ஏற்ற கோமுட்டி * கழுவுகிற மீனிலும் நழுவுகிற மீன் * கழைக் கூத்து ஆடினாலும் காசுக்குக் கீழேதான் வரவேணும் * கழைமேல் ஏறி ஆடினாலும் கீழே வந்துதான் பிச்சை கேட்க வேணும் * கள் உண்ட குரங்கு போல * கள் உண்ட நாய் போல * கள் கலப்பணத்திலும் கர்ப்பூரம் கால் பணத்திலும் * கள் குடித்தவன் பேச்சு, பொழுது விடிந்தால் போச்சு * கள் குடித்தவனுக்குக் கள் ஏப்பம் * கள் விற்ற காற்காசிலும் அமிர்தம் விற்ற அரைக் காசு நேர்த்தி * கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல் * கள்ளத்தனம் எல்லாம் சொல்லத்தானே போகிறேன்? * கள்ள நெஞ்சம் துள்ளிக் குதிக்கும் * கள்ள நெஞ்சு காடு கொள்ளாது * கள்ளப் பிள்ளையிலும் செல்லப் பிள்ளை உண்டா? * கள்ளப் பிள்ளையும் செல்லப் பிள்ளையும் ஒன்றா? * கள்ளப் புருஷனை நம்பிக் கணவனைக் கைவிடலாமா? * கள்ளம் பெரிதா? காப்புப் பெரிதா? * கள்ளம் போனால் உள்ளது காணும் * கள்ள மனம் துள்ளும் * கள்ள மாடு சந்தை ஏறாது * கள்ள மாடு துள்ளும் * கள்ள மாப்பிள்ளைக்குக் கண்ணீர் முந்தும் * கள்ள வாசலைக் காப்பானைப் போல * கள்ள விசுவாசம், கழுத்தெல்லாம் செபமாலை * கள்ளன் அக்கம் காடு கொள்ளாது * கள்ளன் ஆனால் கட்டு; வெள்ளன் ஆனால் வெட்டு * கள்ளன் உறவு உறவு அல்ல; காசா விறகு விறகு அல்ல * கள்ளன் கொண்ட மாடு எத்துறை போய் என்ன? * கள்ளன் செய்த சகாயம் காதை அறுக்காமல் கடுக்கனைக் கொண்டான் * கள்ளன் பிள்ளைக்குக் கள்ளப் புத்தி * கள்ளன் பின் போனாலும் குள்ளன் பின் போகக் கூடாது * கள்ளன் புத்தி கன்னக் கோலிலே * கள்ளன் பெண்சாதி கைம்பெண்டாட்டி * கள்ளன் பெரியவனா? காப்பான் பெரியவனா? * கள்ளன் போன மூன்றாம் நாள் கதவை இழுத்துச் சாத்தினானாம் * கள்ளன் மறவன் கலந்த அகம்படியான், மெல்ல மெல்ல வந்த வெள்ளாளன் * கள்ளன் மனையாளைக் களவுப் பொருளைக் குறி கேட்கலாமா? * கள்ளன் மனைவி கைம்பெண் என்றும் * கள்ளனுக்கு ஊர் எல்லாம் பகை * கள்ளனுக்குக் களவிலே சாவு * கள்ளனுக்குக் காண்பித்தவன் பகை * கள்ளனுக்குக் கூ என்றவன் பேரிலே பழி * கள்ளனுக்குத் தெரியும் களவு முறை * கள்ளனுக்குத் தோன்றும் திருட்டுப் புத்தி * கள்ளனுக்குப் பாதி, கறிக்குப் பாதி * கள்ளனுக்கும் பாதி, வெள்ளனுக்கும் பாதி * கள்ளனுக்குள் குள்ளன் பாய்ந்தது போல * கள்ளனும் ஆகி விளக்கும் பிடிக்கிறான் * கள்ளனும் உண்டு, பயமும் இல்லை என்கிறது போல * கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம் * கள்ளனும் வெள்ளனும் ஒன்று * கள்ளனை ஆரும் நள்ளார் என்றும் * கள்ளனை உள்ளே விட்டுக் கதவைச் சார்த்தினாற் போல * கள்ளனைக் காட்டிக் கொடுத்தவன் பகை * கள்ளனைக் காவல் வைத்தது போல * கள்ளனைக் குள்ளன் கிள்ளியது போல * கள்ளனைக் குள்ளன் பிடித்தான் * கள்ளனைக் கொண்டுதான் கள்ளனைப் பிடிக்க வேணும் * கள்ளனைத் தேடிய கள்ளப் பசுப் போல * கள்ளனை நம்பினாலும் நம்பலாம்; குள்ளனை நம்பக்கூடாது * கள்ளனையும் தண்ணீரையும் கட்டி விட வேணும் * கள்ளனையும் புகையிலையையும் கட்டித் தீர் * கள்ளனையும் வெள்ளனையும் கட்டி விடு * கள்ளா வா, புலியைக் குத்து * கள்ளி என்னடி கல் இழைப்பது? காதில் இருப்பது பித்தளை * கள்ளிக்கு ஏன் முள் வேலி? கழுதைக்கு ஏன் கடிவாளம்? * கள்ளிக்குக் கண்ணீர் முந்தும்; கொள்ளிக்கு வாய் முந்தும் * கள்ளிக்குக் கண்ணீர் முந்தும்; அவள் கணவனுக்குக் கை முந்தும் * கள்ளிக்குக் கல நீர் கண்ணிலே * கள்ளிக்குத் தண்ணீர் கண்ணீர்; நீலிக்குத் தண்ணிர் நிமையிலே * கள்ளிக்கு நாடு எல்லாம் காடு * கள்ளிக்கும் கற்றாழைக்கும் களை வெட்டுவதா? * கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்? * கள்ளிக்கு வேலி ஏன்? சுள்ளிக்குக் கோடாலி ஏன்? * கள்ளிக் கொம்புக்கு வெள்ளிப்பூண் கட்டினது போல * கள்ளிகள் எல்லாம் வெள்ளிகள் ஆவார்; காசு பணத்தாலே; வெள்ளிகள் எல்லாம் கள்ளிகள் ஆவார், விதியின் வசத்தாலே * கள்ளிச் செடிக்கு மகாவிருட்சம் என்று பெயர் வைத்தது போல * கள்ளி நீண்டு வளர்ந்தால் காய் உண்டோ? கனி உண்டோ? * கள்ளிப் பூவைக் கட்டிச் சூட்டினது போல * கள்ளி பெருத்து என்ன? காய் ஏது? பழம் ஏது? * கள்ளியிலும் சோறு: கற்றாழையிலும் சோறு * கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் * கள்ளி வேலியே வேலி; கரிசல் நிலமே நிலம் * கள்ளுக் குடித்தவன் கொள்ளுப் பொறுக்கான் * கள்ளுக் குடியனுக்கு வாய் என்றும் பிட்டம் என்றும் தெரியாது * கள்ளுக் கொள்ளா வயிறும் இல்லை; முள்ளுக் கொள்ளா வேலியும் இல்லை * கள்ளும் சூதும் இருக்கும் இடத்தில் விலை மகளும் கள்ளனும் கண்டிப்பாய் இருப்பார்கள் * கள்ளை ஊற்றி உள்ளதைக் கேள் * கள்ளைக் காலால் உதைத்தது தவறா? * கள்ளைக் குடித்தவன் உள்ளதைக் கக்குவான் * கள்ளைக் குடித்தவனுக்குக் கள் ஏப்பம்: பாலைக் குடித்தவனுக்குப் பால் ஏப்பம் * கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்வான் * கள்ளைக் கொடுத்துக் காரியத்தை அறி * கள்ளை விட்டுக் காட்டுத் தேனைக் குடித்தது போல * களக்காடு * களக்காடு மடக்ராமம், அன்ன வஸ்த்ரம் ஜலம் நாஸ்தி; நித்யம் கலக மேவச * களஞ்சியத்தில் பெருச்சாளி சாப்பிடுவது போல * களம் காக்கிறவனை மிரட்டுவானாம், போர் பிடுங்குகிறவன் * களர் உழுது கடலை விதை * களர் கெடப் பிரண்டை இடு * களர் நிலத்தில் கரும்பு வை * களர் நிலத்திலே சம்பா விளையுமோ? * களர் முறிக்க வேப்பந் தழை * களரை ஒழிக்கக் காணம் விதை * களரை நம்பிக் கெட்டவனும் இல்லை; மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை * களவாண்டு பிழைப்பதிலும் கச்சட்டம் கழுவிப் பிழைக்கலாம் * களவு ஆயிரம் ஆனாலும் கழு ஒன்று * களவுக்கு ஒருவர்; கல்விக்கு இருவர். களவு கற்றாலும் தன்னைக் காக்க வேண்டும் * களவு கொண்டு ஆபரணம் பூண்டாற் போல * களவும் கற்று மற * களி கிளறிக் கல்யாணம் செய்தாலும் காளியண்ணப் புலவனுக்குப் பத்துப் பணம் * களியப் பேட்டை களக்ராமம் * களிறு பிளறினால் கரும்பைக் கொடு * களிறு வாயில் அகப்பட்ட கரும்பு மீளுமா? * களை எடாப் பயிர் கால் பயிர் * களை எடாப் பயிரும் கவடுள்ள நெஞ்சும் கடைத்தேறா * களை எடுக்காதவன் கபோதி * களை எடுத்தவன் கைமூடி உள்ளான் * களை கிளைத்தால் போச்சு: பயிர் கிளைத்தால் ஆச்சு * களைத்தவன் கம்பைத் தின்ன வேண்டும். களைந்த பழம் தானே விழும் * களை பிடுங்காப் பயிர் கால் பயிர் * களை மூடிக்கொண்டது போல * களையக் கூடாததைக் கண்டால் அடிபெயர்ந்து அப்புறம் போ * களையக் கூடாததைக் கண்டியாமல் சகித்துக் கொள் * களையை முளையிலே கிள்ளு * கற்க கசடு அறக் கற்க * கற்க கசடு அற; கற்றபின் அதுவே இனிப்பு * கற்கண்டால் செய்த எட்டிக் கனியும் கசக்குமா? * கற்கையில் கல்வி கசப்பு: கற்றபின் அதுவே இனிப்பு * கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும் * கற்பகத்தைச் சார்ந்தும் காஞ்சிரங்காய் கேட்கலாமா? * கற்பக விரும் சத்தண்டை போயும் காஞ்சிரங்காய் வாங்கினாற் போல் * கற்பனை கல்லைப் பிளக்கும் * கற்பாறையில் அடிக்கும் முளைக் கச்சானது அப்பாறையில் இறங்காதது போல * கற்பித்தவன் கண்ணைக் கொடுத்தவன் * கற்பித்தவன் காப்பாற்றுவான் * கற்பித்தவனுக்குக் காக்கக் கடன் * கற்பித்தவனுக்குக் காக்க வல்லமை இல்லையா? * கற்பு இல்லா அழகு வாசனை இல்லாப் பூ * கற்பு எனப்படுவது சொல் தவறாமை * கற்ற இடத்திலா வித்தையைக் காட்டுகிறது? * கற்றது எல்லாம் வித்தை அல்ல; பெற்றது எல்லாம் பிள்ளை அல்ல. நட்டது எல்லாம் பயிர் அல்ல * கற்றது கடுகளவு: கல்லாதது கடல் அளவு * கற்றது கை மண் அளவு: கல்லாதது உலகளவு * கற்றது சொல்வான்; மற்று என்ன செய்வான்? * கற்றதைக் காய்ச்சியா குடிக்கப் போகிறாய்? * கற்றலிற் கேட்டலே நன்று * கற்றவர் கோபம் நீர்ப்பிளவு போல் மாறும் * கற்றவன் உண்பான்; பெற்றவளும் உண்பாள் * கற்றவனிடத்திலா வித்தையைக் காட்டுவது? * கற்றவனுக்கு எந்த வித்தையும் கால் நாழிகையில் வரும் * கற்றவனுக்கு மயிர் அத்தனை: கல்லாதவனுக்கு மலை அத்தனை * கற்றவனும் உண்பான்; பெற்றவனும் உண்பான் * கற்ற வித்தையைக் காய்ச்சிக் குடிக்கிறவன் போல * கற்ற வித்தையைப் பெற்ற தாயிடம் காட்டுவதா? * கற்றறி மூடன் * கற்றறிவு இல்லாத மாந்தர் கதிகெட்ட மடையர் ஆவார் * கற்றாழை காய்ச்சியா குடிக்கப் பார்க்கிறாய்? * கற்றாழைச் சோறும் வெண்டைக்காய்க் குழம்பும் விளக்கெண்ணெய்த் தாளிதமும் சேர்ந்தாற் போல * கற்றாழை சிறுத்தாலும் ஆனை அடி வைக்காது * கற்றாழை நாற்றமும் பித்தளை வீச்சும் போகா * கற்றது அறிந்தார் கண்டது அடக்கம் * கற்றுக் கற்றுச் சொல்லியும் காரியத்தின்மேல் கண் * கற்றுக் கற்றுப் பேசாதே * கற்றுக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாள் நிற்கும்? * கற்றும் கற்றறி மோழை; கண் இருந்தும் குருடு * கற்றோர் அருமை கற்றோர் அறிவர் * கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு * கறக்க ஊறும் ஆவின் பால். கற்க ஊறும் மெய்ஞ்ஞானம் * கறக்கிறது நாழிப் பால்; உதைக்கிறது பல்லுப் போக * கறக்கிற பசுவையும் கைக் குழந்தையையும் கண்ணாரப் பார்க்க வேண்டும் * கறக்கிற மாட்டைக் கள்ளன் கொண்டு போனால் வறட்டு மாடு மகாலட்சுமி ஆகும் * கறந்த பால் கறந்த படியே பேசு * கறந்த பால்போல் பேசுகிறான் * கறந்த பால் முலைக்கு ஏறுமா? * கறந்த பாலும் எச்சில்; பிறந்த பிள்ளையும் எச்சில் * கறந்த பாலைக் காக்கையும் தொடாது * கறந்த பாலைக் காய்ச்சாமல் குடித்தால் காச வியாதி தானே வரும் * கறந்த மேனியாய்ப் பேசுகிறது * கறவை உள்ளான் விருந்துக்கு அஞ்சான் * கறவை மாடு கண்ணுக்குச் சமானம் * கறிக்கு அலைந்தவன் பீர்க்குப் போடு * கறிக்கு இல்லாத வாழைக்காய் கட்டித் தொங்குகிறதாம் * கறிக்கு இல்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்கிற்றாம் * கறிக்கு உழக்கு நெய் வார்த்தாலும் கண்ணாரக் கண்டதைச் சொல் * கறிக்குக் கலநெய் வார்த்தாலும் கணக்கோடே வார்க்க வேண்டும் * கறிக்குக் கறி நெய் விட்டாலும் கணக்குக் கணக்காய் இருக்க வேணும் * கறி மீனுக்காகக் குளத்தை வெட்டி விடுவதா? * கறியிலே உயர்த்தி கத்தரிக்காய்; உறவிலே உயர்த்தி சின்னாயி * கறியிலே கத்தரிக்காய்; உறவிலே சிற்றம்மை * கறி வேப்பிலை கண்போல் * கறுத்தது எல்லாம் தண்ணீர்: வெளுத்தது எல்லாம் பால் * கறுத்த பார்ப்பானையும் வெளுத்த பறையனையும் நம்பாதே * கறுத்த மூஞ்சியும் வெளுத்த சோறும் * கறுப்பாய் இருந்தாலும் சந்திரன் சந்திரன்தான் * கறுப்பிலும் குறிப்பு அழகு * கறுப்புக்கு நகை பூட்டிக் கண்ணாலே பார் * கறுப்புக்கு நகை போட்டுக் காதவழி நின்று பார்; சிவப்புக்கு நகை போட்டுச் செருப்பால் அடி * கறுப்பு நாய் வெள்ளை நாய் ஆகுமா? * கறுப்புப் பார்ப்பானையும் சிவப்புப் பறையனையும் நம்பக் கூடாது * கறுப்பும் வெள்ளையும் கண்ணுக்குத் தெரியாவா? * கறுப்பு மாடு கால் மாடு * கறுப்பு வெளுப்பு ஆகாது; கசப்பு இனிப்பு ஆகாது * கறுப்பே ஓர் அழகு; காந்தலே ஒரு ருசி * கறுப்பைக் கண்டு சிரிக்காதே * கறுமுறு காந்தப்படலம் வாசிக்கிறார் கவிராயர் * கறையான் புற்றில் அரவம் குடிகொண்டது போல * கறையான் புற்று எடுக்கப் பாம்பு குடி புகுகிறது போல * கறையான் புற்றுப் பாம்புக்கு உதவாது * கறையானும் வாய் ஈரம் கொண்டு பிழைப்பது போல * கன்மத்தினால் சாதியன்றிச் சன்மத்தினால் இல்லை * கன்மத்தினால் வந்தது தன்மத்தினால் போக வேண்டும் * கன்யாகுமரி முதல் கருக்கரை வரை * கன்றின் கீழேயும் கடன்காரன் கீழேயும் நிற்காதே * கன்றும் ஆடும் களத்தில் படுத்தால் வைக்கோலும் இல்லை; செத்தையும் இல்லை * கன்று இருக்கக் காசு அத்தனை பால் கறவாப் பசு, கன்று செத்த பிறகு கலப்பால் கறக்குமா? * கன்று இருக்கச்சே கரண்டிப் பால் இல்லை; கன்று செத்த பிறகா கலப் பால் கறக்கும்? * கன்று இருக்கையில் கறவாத பசு கன்று செத்த பிறகு கறக்குமா? * கன்று உள்ளபோதே காணோம்; செத்த பிறகா கொட்டப் போகிறது? * கன்றுக் குட்டி களம் படுக்குமா? * கன்றுக்குட்டி கிட்டவும் கடன்காரன் கிட்டவும் இருக்கக் கூடாது * கன்றுக் குட்டி பயம் அறியாது * கன்றுக்குட்டி மன்றைத் தின்று மன்று மன்றாய்ப் பேன்றது * கன்றுக் குட்டியை அவிழ்க்கச் சொன்னார்களா? கட்டுத் தறியைப் பிடுங்கச் சொன்னார்களா? * கன்றுக்குப் புல் பிடுங்கியது போலவும் தென்னைக்குக் களை எடுத்தது போலவும் * கன்றுகளாய்க் கூடிக் களம் பறிக்கப் போனால் வைக்கோல் ஆகுமா? * கன்று கூடிக் களம் அடித்தால் வைக்கோலும் ஆகாது; கற்றையும் ஆகாது * கன்று கெட்டால் காணலாம் தாய் அருகே * கன்று செத்தது கமலம்; மாடு செத்தது நிமிளம் * கன்று செத்துக் கைமேலே கறக்கலாமா? * கன்றும் தாயும் காடு ஏறி மேய்ந்தால் கன்று ஒரு பக்கம், தாய் ஒரு பக்கம் * கன்று தின்னப் போரும் பசங்கள் தின்னப் பந்தியும் * கன்றும் பசுவும் காடு ஏறி மேய்ந்தால் கன்று கன்று வழியே; பசு பசு வழியே * கன்றை இழந்த பசுவைப் போல. கன்றைக் கண்டு ஓடிவரும் பசுவைப் போல * கன்றைத் தேடிப் பசு தவிக்கிறது போல * கன்றைப் பார்த்துப் பசுவைக் கொள் * கன்றைப் பிரிந்த பசுவைப் போல * கன்றை விட்டுக் கட்டுத்தறியைப் பிடித்தது போல * கன்றை விட்டுக் கல்யாணம் போவதா? * கன்றை விட்டு மாட்டை முட்ட விடுகிறது * கன்னக் கோலை மறைத்துக் கொண்டு கைச் செபமணியைச் செபிக்கிறது போ * கன்னத்தில் அடித்தாலும் கதறி அழச் சீவன் இல்லை * கன்னவாசல் கரிப் பானை போல் * கன்னா பின்னா என்று பிதற்றுகிறான் * கன்னான் கொண்டது. கடை கொண்டது * கன்னான் நடமாடக் குயவன் குடிபோவான் * கன்னானுக்கும் குயவனுக்கும் ஜன்மப் பகை * கன்னானுக்கு முன்னே கழுதை பரதேசம் போனாற் போல * கன்னி அறிவாளோ காம ரசம்? * கன்னி இருக்கும் பொழுது காளை மணை ஏறக் கூடாது * கன்னிக் காற்றுக் கடலும் வற்றும் * கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும் * கன்னிச் சேற்றைக் காய விடாதே; கண்ட மாட்டைக் கட்டி உழு * கன்னி நிலவிலே கட்டி ஓட்டடா கடா மாட்டை * கன்னிப் பூ மலரவில்லை * கன்னியாகுமரிக் கடலறியார்; சுசீந்திரம் தேரறியார் * கன்னியும் துக்கமும் தனிவழிப் போகா * கன்னி வளரக் காடு எரிய * கன ஆசை, கன நஷ்டம் * கன எலி வளை எடாது * கன எலி விளையாடாது * கனக மாரி பொழிந்தது போல * கனத்த உடைமைக்கு அனர்த்தம் இல்லை * கனத்தால் இனம் ஆகும்; மனத்தால் ஜனம் ஆகும் * கனத்திற்கு நற்குணம் சுமைதாங்கி * கனத்தைக் கனம் அறியும்; கருவாட்டுப் பொடியை நாய் அறியும் * கனத்தைக் கனம் காக்கும்; கருவாட்டுச் சட்டியைப் பூனை காக்கும் * கனத்தைக் கனம் காக்கும்; கறிச் சட்டியை நாய் காக்கும் * கனத்தைக் கனம் தேடும்; கருவாட்டுத் தலையை நாய் தேடும் * கனதாராளம்; மனசு குறுகல் * கனபாடிகள் வீட்டுக் கட்டுத்தறியும் வேதம் சொல்லும் * கன நேசம் கண்ணைக் கெடுக்கும் * கனம் கனத்தைப் பார்க்கும்; கருவாட்டுப் பானையைப் பூனை பார்க்கும் * கனம் செய்தால் இஷ்டம்; கன ஈனத்தால் நஷ்டம் * கன மழை பெய்தாலும் கருங்கல் கரையுமா? * கனமழை பெய்து காடு தளிர்த்தது போல * கண்மூடன் கைப் பொருள் இழப்பான் * கனவில் உண்ட சோறு பசி தீர்க்குமா? * கனவில் கண்ட கத்தரிக்காய் கறிக்கு ஆகுமா? * கனவில் கண்ட பணம் கைச் செலவுக்கு உதவுமா? * கனவில் கண்ட பணம் கடனைத் தீர்க்குமா? * கனவில் கண்ட பொருள் கானில் கண்ட புல் * கனவில் கண்ட பொருள் கைக்கு எட்டுமா? * கனவில் கண்டவனுக்குப் பெண் கொடுத்த கதை * கனவிலும் காக்கைக்கு மலம் தின்கிறதே நினைப்பு * கனவோ, நனவோ என்று ஐயுற்றான் * கனா முந்துறாத வினை இல்லை * கனி இருக்கக் காய் கவர்வது போல * கனிந்த பழம் தானே விழும் * கனிந்த பழம் நீர் தின்றீர்; காயை உலுக்கி விட்டீர் * கனிந்த பொங்கலில் கரும்புச் சாறும் கலந்ததாம் * கனிந்த மரத்தில் கல்லடி கில்லடி * கனியாத கனியை அடித்துப் பழமாக * கனியிலே முள் ஏறினது போல * கனியை விட்டுக் காயைத் தின்கிறதா? * கஜ கரணம் * கஜ கரணம் கோ கரணம் போட்டுப் பார்க்கிறான் * கஜ கர்ப்பம் * கஜப் புளுகு * கஷ்டம் தெரியாமல் நெல்லுக் குத்தலாமா? * கஷ்டத்திற்கு நஷ்டம் அதிகம் * கஷ்டத்தின் அந்தியத்தில் சுகம் * கஷ்டப் படலாம்; துக்கப்படல் ஆகாது * கஷ்டப் படாவிட்டால் லாபம் இல்லை ==கா== * காக்கனுக்கும் பூக்கனுக்கும் பூத்தாயோ புன்னை? * கண்ணாளன் வரும் வரையில் பொறுக்கவில்லையே புன்னை? * காக்கனும் பூக்கனும் சேர்ந்து ராக்கன் வீட்டு நெல்லுக்கு வினை வைத்தார்கள் * காக்கை இருந்த கொம்பு அசையாது * காக்கை ஏறப் பனம்பழம் விழுந்தது போல * காக்கை ஏறின கொம்பு அசையாதா? * காக்கைக் கழுத்தில் சீட்டுக் கட்டினது போல * காக்கைக்கு இருட்டில் கண் தெரியாது * காக்கைக்கு ஐந்து குணம் * காக்கைக்கு ஒரு கீர்த்தி, நரிக்கு ஒர் அபகீர்த்தி * காக்கைக்குக் கொண்டாட்டம்; எருதுக்குத் திண்டாட்டம் * காக்கைக் குஞ்சையும் கணக்கன் குஞ்சையும் கண்ட இடத்தில் குத்தவேண்டும் * காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு * காக்கைக்குப் பயந்திருப்பாள்; கழுகுக்குத் துணிந்திருப்பாள் * காக்கைக்குப் பயந்து அழுவாள்; கழுகுக்குத் துணிந்து எழுவாள் * காக்கைக்கு புடுக்கு உண்டானால் பறக்கிற போது தெரியாதா? * காக்கைக்குப் போடு என்றால் நாய்க்குப் போட்டாற் போல * காக்கைக்கும் காக்கையிலும் கன சிறப்பு * காக்கைக் கூட்டம் போலக் கட்டுக் கோப்பு * காக்கைக் கூட்டில் குயிற் குஞ்சு வளர்வது போல * காக்கை கண்ணுக்குப் பீர்க்கம் பூப்பொன் நிறம் * காக்கை கதறப் பயந்து கணவனைக் கட்டிக் கொண்டாளாம் * காக்கை கர் என்றதாம்; அகமுடையானை இறுகக் கட்டிக்கொண்டாளாம் * காக்கை கரிச் சட்டியைப் பழித்ததாம் * காக்கை கரைந்தால் ஆரோ வருவார் * காக்கை கரைந்து உண்ணும் * காக்கை குசுவினாற் போல் இருக்கிறது * காக்கை குருவி மூக்காலே கொரிக்கிறது போல * காக்கை குளிக்கிறது போல * காக்கை நோக்கு அறியும்; கொக்கு உப்பு அறியும் * காக்கை பிடிக்கி போல் இருக்கிறான் * காக்கை பிடிக்கிறவருக்குக் காலம் * காக்கை பிடிக்கிறவனை நம்பாதே, காக்கை பிடித்தல் * காக்கை மிளகாய்ப்பழம் கொத்தினாற் போல் * காக்கை மூக்கு நிழலிலே கண்டாலும் கம்மாளன் கண்ணிலே எழுபது கோடி பசும் பொன் படும் * காக்கையிற் கரிது களம் பழம் * காக்கையின் கண்ணுக்குப் பீர்க்கம்பூப் பொன் நிறம் * காக்கையின் கழுத்தில் பனம்பழம் கட்டினது போல * காக்கையினும் கன சிவப்பு * காக்கையும் கத்திப் போகிறது; கருவாடும் உலர்ந்து போகிறது * காக்கையும் காற்றும் போக்கு உண்டானால் வரும் * காக்கையும் குயிற்குஞ்சைத் தன் குஞ்சு போல் வளர்க்கும் * காக்கையைக் கண்டு அஞ்சுவான்; கரடியைப் பிடித்துக் கட்டுவான் * காக்கையைக் கண்டு அஞ்சுவான்; காவேரி ஆற்றை நீந்துவான் * காக்கையைக் கண்டு பயப்படுவான்; கள்ளன் கூடப் புறப்படுவான் * காக்கையை விடக் கரியது களாப்பழம் * காக்கை விரும்பும் கனி வேம்பு * காகத்திலே வெள்ளை உண்டா? * காகத்தின் கழுத்துக் கறுத்தென்ன? வெளுத்தென்ன? * காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல * காகம் இல்லாத ஊர் சோனகன் இல்லாத ஊர் * காகம் இல்லாத ஊர் பாவி இல்லாத ஊர் * காகம் உட்கார்ந்த கிளை ஆடாமல் இருக்குமா? * காகம் ஏறிப் பனங்காய் உதிருமா? * காசா லேசா? * காசி இரண்டு எழுத்துத்தான்;காண எத்தனை நாள் செல்லும்? * காசிக்குத் திருவையாறு அதிகம் * காசிக்குப் போய்த் தயிர் கொண்டு வந்ததைப் போல் * காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை * காசிக்குப் போயும் மூடத் தவசி காலில் விழுகிறதா? * காசிக்குப் போன கடா மாடு போல * காசிக்குப் போனால் கால் ஆட்டலாம்; கால் ஆட்டக் கால் ஆட்டத் தோள் ஆட்டலாம் * காசிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசு * காசிக்குப் போனாலும் கட்கத்தில் மூட்டையா? * காசிக்குப் போனாலும் கதி பெற வழி இல்லை * காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது * காசிக்குப் போனாலும் தன் பாவம் தன்னோடே * காசிக்குப் போனான்; கங்கை கொணர்ந்தான் * காசிக்குப் போனான்; காவடி கொண்டு வந்தான் * காசிக்கு வீசம் அதிகம் திருப்பூவணம் * காசி முதல் ராமேசுவரம் வரையில் * காசியில் இருக்கிறவன் கண்ணைக் குத்தக் காஞ்சீபுரத்திலிருந்து கையை நீட்டிக் கொண்டு போகிறதா? * காசியில் இறக்க முக்தி; கமலையில் பிறக்க முக்தி * காசியில் தண்டம்; பிரயாகையில் முண்டம்; கயையில் பிண்டம் * காசியில் பாதி கல்பாத்தி * காசியில் வாசி அவிநாசி * காசியிலே கலமானால் நமக்கு என்ன? * காசி வாசி கண்ணைக் குத்தக் காஞ்சியிலிருந்து கை நீட்டிப்போனானாம் * காசி விசாலாட்சி, கஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி * காசு இருந்தால் பெட்டியிலே, பவிசு இருந்தால் மூஞ்சியிலே; எனக்கு என்ன ஆச்சு? * காசு இல்லாதவன் முழுவதும் போட்டது போல * காசு இல்லாதவனுக்கு வராகன் பேச்சு என்ன? * காசு இல்லாதவனை வேசியும் துப்பமாட்டாள் * காசுக்கு இரண்டு ஆனை வேணும், காற்றைப் போல் பறக்கவும் வேணும் * காசுக்கு இரண்டு: பீசுக்கு நான்கு * காசுக்கு இரண்டும் பீசுக்கு ஒன்றும் * காசுக்கு எட்டுச் சட்டி வாங்கிச் சட்டி எட்டுக் காசுக்கு விற்றாலும் வட்டிக்குக் கட்டாது * காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கணக்கன் குஞ்சு ஆகாது * காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கம்மாளன் குஞ்சு ஆகாது * காசுக்கு ஒரு குட்டி ஆனாலும் கருர்க் குட்டி ஆகாது * காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும்; அது காற்றைப் போல் பறக்கவும் வேண்டும் * காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும் * காசுக்கு ஒரு தம்பி ஆனாலும் கள்ளத் தம்பி ஆகாது * காசுக்கு ஒரு படி என்றால் பணத்துக்குப் பத்துப் படி என்கிறாயே! * காசுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாய்க்கு லாபம் என்ன? * காசுக்கு ஒரு முழம் விற்றாலும் நாய் அம்மணந்தான் * காசுக்குக் கம்பன் * காசுக்குப் பத்துப் பெண்டாட்டி; கொசுவுக்கு ஒரு குத்து * காசுக்குப் போன மானம் கோடி கொடுத்தாலும் வராது * காசுக் கூடு கரிக் கூடாய்ப் போயிற்று * காசுக்கு லோபி கழுதையினிடத்தில் போனாற் போல * காசு கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம் * காசு கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்கிறது * காசு கொடுத்தவனே கணவன் * காக கொடுத்தால் வேசி வருவாள்; கலம் நெல் கொடுத்தால் அவள் ஆத்தாளும் வருவாள் * காசுப் பையோடே களவு போனால் கடையிலே செட்டிக்குக் காரியம் என்ன? * காசைக் கரி ஆக்காமல் சீனி வெடி வாங்கிச் சுடு * காசைக் கொடுத்தால் தாசி வருவாள்;கலம் நெல்லைக் கொடுத்தால் அவள் தாயும் வருவாள் * காசைக் கொடுத்து நோயை விலைக்கு வாங்காதே * காசைப் பார்த்தால் ஆசையாய் இருக்கிறது; கண்ணைப் பார்த்தால் போதையாய் இருக்கிறது * காசையும் கொடுத்து தேளையும் கொட்டிக் கொண்டதுபோல் * காஞ்சிக்குப் போனாலும் மஞ்சத்தின் கால் நான்கு * காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி. காசி விசாலாட்சி * காஞ்சிரங் கனி கடுஞ்சிவப்பாய் இருந்தால் கடிதாக உயிர் மாய்க்கும் * காஞ்சீபுரத்து உபசாரம் * காஞ்சீபுரத்துக்குப் போனால் காலை ஆட்டிக் கொண்டு சாப்பிடலாம் * காஞ்சீபுரம் குடை அழகு * காஞ்சீபுரம் குடை, திருப்பதி வடை, சீரங்கத்து நடை * காட்சிகள் காணக் கண்ணுக்கு அலுப்பா? * காட்டக் கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு குமர கண்ட வலிப்பு வருகிறது * காட்ட முடியுமே தவிர ஊட்ட முடியுமா? * காட்டாளுக்கு ஒரு நீட்டாள்; நீட்டாளுக்கு ஒரு முடக்கான்; முடக்காளுக்கு ஒரு நொண்டிக் குதிரை * காட்டாளுக்கு ஒரு மோட்டாள்; மோட்டாளுக்கு ஒரு மொண்டி ஆள் * காட்டாற்றுச் சரசாப்புக் காட்டானைக்குப் பரபரப்பா? * காட்டாற்று வெள்ளம் போல * காட்டான் மோட்டான் சண்டைக்கு இளைச்சான் * காட்டானை உண்ட கனி போல் இருக்கும், தேட்டாளன் திரவியம் * காட்டானை தின்ற கனிபோலே * காட்டானைக்கு வீட்டு ஆனையைக் கண்டால் இளப்பம் * காட்டானை கனவில் நாட்டுச் சிங்கம் வந்தது போல * காட்டானையைக் காட்டி வீட்டுப் பெண்ணைத் தள்ளுகிறது * காட்டானையைப் பிடிக்க வீட்டானை வேண்டும் * காட்டானை ராஜாவுக்கு எலிக்குஞ்சு மந்திரியாம் * காட்டானை விட்டாலும் கவியானை விடாது * காட்டிக் கொடுத்தாலும் கூட்டிக் கொடுக்காதே * காட்டிக் கொடுத்துக் கடக்கப்போய் நிற்கலாமா? * காட்டில் அழுத குரல் * காட்டில் ஆனையைக் காட்டி வீட்டில் பெண்ணைக் கொடுக்கிறது போல * காட்டில் உள்ள ஆனையைக் காட்டி வீட்டில் உள்ள பெண்ணைக் கடத்து * காட்டில் எரித்த நிலாவும் கசட்டுக்குச் செய்த நன்றியும் வீண் * காட்டில் எரித்த நிலாவும் கானலில் பெய்த மழையும் * காட்டில் கடுவாய்; கடலில் கொடுவாய் * காட்டில் செத்தாலும் வீட்டில்தான் தீட்டு * காட்டில் செய்த சபதம் வீட்டில் மறந்தது போல * காட்டில் புதைத்த கன தனமும் பாட்டில் புதைத்த பழம் பொருளும் வீட்டில் மனையாள் மனமும் நாட்டில் அறிவது அரிது * காட்டில் புலி கொல்லும்; நாட்டில் புளி கொல்லும் * காட்டில் யானையைக் காட்டி வீட்டில் பெண்ணைக் கொடுப்பது போல * காட்டிலே மேயுதடி காடை, அவன் காட்டுகிறானடி பெண்ணை ஜாடை * காட்டு எரு முட்டை பொறுக்கி மட்கலம் சுட்ட புகை போய் மேற்கே மேகம் கிளம்ப, மின்னிக் குமுறி மழை பொழிய, ஆற்றில் வெள்ளம் பெருகி அடித்துப் போன பலசரக்கை ஊரார் இழுப்பது வழக்கு; குயவன் இழுப்பது கணக்கு * காட்டுக் கட்டைக்கு ஏற்ற முரட்டுக் கோடாலி * காட்டுக் களாக்காயும் கண்கெட்ட தயவு இல்லாத ஒணானும் கோத்துக் குலாவுவது போல * காட்டுக் காடையைப் பிடிக்க வீட்டுக் காடை வேணும் * காட்டுக்காரன் சும்மா இருந்தாலும் பூட்டைப் பிடுங்கி சும்மா இருக்க மாட்டானாம் * காட்டுக்கு எறித்த நிலாவும் கசட்டுக்குச் செய்த நன்றியும் வீண் * காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும் * காட்டுக்கு ஒரு தெய்வம்; வீட்டுக்கு ஒரு தெய்வமா? * காட்டுக்குப் புலி ஆதரவு; புலிக்குக் காடு ஆதரவு * காட்டுக்குப் பெய்த மழை, கானலுக்கு எறித்த நிலா * காட்டேரி உடைமை இராத் தங்காது * காட்டேரிக்கும் கணக்கனுக்கும் அடிக்கடி கொடுக்க வேணும் * காட்டைக் காத்த நரியும் வீட்டைக் காத்த நாயும் வீண் போகா * காட்டைக் காத்தவனும் கடையைக் காத்தவனும் வீண் போவது இல்லை * காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா? * காட்டை வைத்துக் கொண்டு அல்லவோ வேட்டை ஆட வேணும்? * காடிக் கஞ்சி ஆனாலும் மூடிக் குடி * காடிக்குப்போய்த் தயிர் கொண்டு வந்தது போல * காடு அழிந்தால் நாடு அழியும். காடு அறியாதவன் கல்லாங் காட்டை உழுவான் * காடு ஆறு மாசம்; நாடு ஆறு மாசம் * காடு எரியும் பொழுது வீடு எரியக் கூடாது * காடுகள் இருப்பின் நாடுகள் செழிக்கும் * காடு காத்த நாயும் வீடு காத்த நாயும் வீண் போகுமா? * காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான் * காடு கெட ஆட்டை விடு * காடு கெட வீடு கெடு * காடு திருத்திப் பருத்தி விதைக்கப் போகிறேன் என்றானாம் அப்பன்; அதற்குள் மகன் அந்த நூலில் தனக்குத் துப்பட்டி நெய்து தர வேணும் என்றானாம் * காடும் செடியும் அவளாகத் தோன்றுகின்றன என் கண்களுக்கே * காடும் செடியும் இல்லாத ஊருக்குக் கழுதை முள்ளி கற்பக விருட்சம் * காடு வளம் குண்டை வளம், குண்டை வளம் குடி வளம், குடி வளம், கோல் வளம், கோல் வளம் கோன் வளம் * காடு வா வா என்கிறது; வீடு போ போ என்கிறது * காடு விளைந்தாலும் ஒரு மேடு விளைந்தாலும் கடன் கழிந்துவிடும் * காடு விளைந்து என்ன மச்சானே, நம் கையும் காலுந்தானே மிச்சம்? * காடு விளையாவிட்டாலும் கடமை போகுமா? * காடு வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு வெட்டப் பயமா? * காடு வெட்டி நஞ்சை பண்ணு: மாடு கட்டி வைக்கோல் போடு * காடு வெந்தால் சந்தன மரமும் வேகாதோ? * காடை இடம் ஆனால் நாட்டை ஆளலாம் * காடை கத்தினால் பாடை கட்டும் * காத்து வலம் பார்த்து மூத்திரம் பெய்யத் தெரியாதவன் * காண்பாரைக் கண்டு கழுதையும் பரதேசம் போயிற்றாம் * காண ஒரு தரம், கும்பிட ஒரு தரமா? * காணக் கிடைக்காத தங்கம் * காணக் கிடைக்குமோ? காண என்றால் கிட்டுமோ? * காணக் கிடைத்தது. கார்த்திகைப் பிறை போல * காணப் பட்டன எல்லாம் அழியப் பட்டன * காணம் என்றால் வாயைத் திறக்கிறது; கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்கிறது * காணம் விற்று ஒணம் கொண்டாட வேண்டும் * காணலாம், கேட்கக் கூடாது; கேட்கலாம். காணக்கூடாது; காணவும் காணலாம், கேட்கவும் கேட்கலாம் * காண வேண்டி இருப்பாரைக் கிள்ள வேண்டி இருக்குமாம் * காணாத கனவு கண்டால் ஒருவரோடும் சொல்லாதே * காணாததை எல்லாம் காணலாம் கந்த புராணத்திலே * காணாத நாயைக் கண்ட மனிதன் போல * காணாத மூளி கஞ்சியைக் கண்டால் ஓயாமல் கூட்டரைப்பாளாம் * காணாதவன் கஞ்சியைக் கண்டானாம்; ஓயாமே ஓயாமே ஊதிக் குடித்தானாம் * காணாதவன் கண்டால் கண்டதெல்லாம் கைலாசம் * காணாது கண்ட கம்பங் கூழைச் சிந்தாது குடியடா சில்லி மூக்கா * காணாது கண்டாற் போல * காணாப் பால் கலப் பால் * காணாப் பீ கழுவாமல் போம் * காணாமல் கண்டேனே கம்பங்கதிரை * காணாமல் கோணாமல் கண்டு கொடு * காணாமல் போன முயல் பெரிய முயல் * காணார் என மாணாவினை செய்யார் * காணி அறுத்தாலும் கோணி கொள்ளவில்லை * காணி ஆசை கோடி கேடு, காணி ஏறக் கோடி அழியும் * காணிக்கு ஒத்தது கோடிக்கு * காணிக்குச் சோம்பல், கோடிக்கு வருத்தம் * காணி கவிழ்ந்து போகிறதா? காணி காணியாய்ச் சம்பாதித்துக் கோடி கோடியாய்ச் செலவழிக்கிறது * காணிச் சோம்பல் கோடி கேடு * காணி தேடிக் கோடி அழிப்பதா? * காணி தேடினும் கரிசல் தேடு * காணி நாணம், ஊண் நாணம் உயிர்க்கே சேதம் * காணி மந்தம். கோடி துக்கம் * காணியாளன் வீடு வேகும் போது காலைப் பிடித்து இழுத்த கதை * காணியில் இல்லாததா கோடியில் வரப் போகிறது? * காணியை நட்டபின் களத்தில் நிற்பதே நன்மை * காணி லாபம், கோடி நஷ்டம் * காத்திருந்த நாய்க்குக் கல்லெறிதான் மிச்சம் * காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனான் * காதம் ஓடினும் முயலுக்குக் கைத்துாக்கு * காதம் கொடுத்து இரு காதம் வாங்குகிறது போல * காதம் போனாலும் கண்ணுக்கு உரியவர் வேண்டும் * காதம் விட்டு இரு காதம் சுற்றுவது போல * காதலரோடு ஆடார் கவறு * காத வழிதான் குத்தும் வெட்டும்; அப்புறம் ராமராஜ்யம் * காத வழி பேர் இல்லாதவன் கழுதைக்குச் சமானம் * காத வழி போய் அறியாதவன் மாதம் எல்லாம் நடந்தானாம் * காத வழி போய் அறியான் கழுதைப் பிறப்பு * காதில் கடுக்கன் இட்டால் முகத்தினுக்கு அழகு * காதில் கேட்டதும் பொய்; கண்ணில் கண்டதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் * காதில் சிலந்தி, ஓதடி ஆனந்தி * காதில் நாராசம் காய்ச்சி விட்டது போல * காது அற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே * காது அறுத்த கூலி கை மேலே * காது அறுத்தாலும் அறுக்கும், பேன் எடுத்தாலும் எடுக்கும் குரங்கு * காதுக்கு இட்டால் முகத்துக்கு அழகு * காதுக்குக் கடுக்கன் இட்டு ஆட்டிக் கொண்டு திரிகிறான் * காதுக்குக் கடுக்கன் முகத்துக்கு அழகு * காதுக்குக் கம்மல் அழகு * காது காது என்றால் செவிடு செவிடு என்கிறான் * காது காது என்றால் நாதி நாதி என்கிறான் * காது காது என்றால் வேது வேது என்கிறான் * காது குத்த மனம் பொறுக்காதா? * காது குத்துகிறான் * காதும் காதும் வைத்தாற் போல * காதுரா காதுரா என்றால் நாதிரா நாதிரா என்கிறான் * காதை அறுத்தவன் கண்ணைக் குத்தாமல் விட்டானே! * காதை அறுத்தவன் கண்ணைக் குத்தினாலும் குத்துவான் * காதை அறுத்தவன் கண்ணையும் குத்துவானா? * காதை அறுத்தாலும் அறுக்கும்; பேனை எடுத்தாலும் எடுக்கும் குரங்கு * காதை அறுத்தாலும் அறுத்தது; பேனைப் பார் * காதைக் கடிக்கிறான் * காதோடு காது வைத்தாற்போல் இருக்க வேண்டும் * காந்தத்தின்முன் ஊசி கம்பித்தாற் போல * காந்தம் இழுத்த ஊசியைப் போல * காந்தமும் ஊசியும் போல * காந்தலே ருசி; கறுப்பே அழகு * காந்தாரி கண் பட்டால் கல்லும் கரிந்து விடும் * காந்துார் நாயும் களத்துார்ப் பேயும் * காப்பானுக்குக் கள்ளம் இல்லை * காப்புச் சொல்லும் கை மெலிவை * காப்பு இட அத்தை இல்லை; கலகமிட அத்தை உண்டு; தண்டை இட அத்தை இல்லை; சண்டை இட அத்தை உண்டு * காப் பொன்னிலும் மாப் பொன் திருடுவான் * காமத்துக்குக் கண் இல்லை * காமனுக்குக் கண் இல்லை * காமாட்டிப் பையனுக்கு ஒரு சீமாட்டி கிடைத்தது போல * காமாலைக் கண்ணனுக்குக் கண்டது எல்லாம் மஞ்சள் * காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம் * கா மாறிக் கட்டினால் கனம் குறையுமா? * காமிக்கு முறை இல்லை * காமுகனுக்குக் கண்ட இடத்தில் கண் * காய்க்கு அலைந்தவன் பீர்க்குப் போடு * காய்க்குக் கொடி இளைக்குமா? * காய் கொடிக்குக் கனமா? காய்ச்சல் இல்லா நிலம் கடுகளவும் பயன் கொடாது * காய்ச்சலும் கழிச்சலும் சேர்ந்து விட்டால் நம்பப் படாது * காய்ச்சிக் காய்ச்சித்தானே நீட்ட வேண்டும்? * காய்ச்சிக் குடிக்கிறதையும் கெடுத்தான், கன்னாரப் பட்டு விழுவான் * காய்ச்சித் தோய்த்த தயிரைக் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டாயே! * காய்ச்சி வார்த்த பெண்ணுக்குப் பேச்சு மூச்சு அற்றது * காய்ச்சின கஞ்சி வார்க்க ஆள் இல்லாமல் போனாலும், கச்சை கட்ட ஆள் இருக்கிறது * காய்ச்சினவள் காய்ச்சினால் கழுதை மூத்திரமும் ருசியாய் இருக்கும் * காய்த்த கொம்பு பணியும் * காய்த்த மரத்தில் கல் எறிபடும்; காயாத மரத்தில் எறிபடுமா? * காய்த்த மரத்திலே கல் எறியும் சில் எறியும் * காய்த்த மரம் கல் அடிபடும் * காய்த்த மரம் வளைந்து நிற்கும்; நற்குணமுடையவர் தணிந்து நிற்பார் * காய்த்த மரம் வளையாத கணக்கும் உண்டோ? * காய்த்த மரம் வளையும் * காய்ந்த இரும்பு குடித்த நீரை விடாது * காய்ந்த ஒட்டிலே தண்ணீரை ஊட்டினாற் போல * காய்ந்த ஓட்டுக்குச் சேதம் இல்லை * காய்ந்த கொம்பு பணியும் * காய்ந்த சுண்ணாம்பையும் வதங்கின வெற்றிலையையும் இளைத்த ராஜாவையும் விடக் கூடாது * காய்ந்த புலி ஆட்டு மந்தையில் விழுந்தது போல * காய்ந்த புலி ஆவிலே விழுகிறது * காய்ந்த மரம் தளிர்க்குமா? * காய்ந்த மாடு கம்பில் புகுந்தாற் போல * காய்ந்த வானம் பெய்தால் விடாது * காய்ந்த வித்துக்குப் பழுது இல்லை * காய்ந்த வெள்ளத்தில் விழுந்த பூனை பச்சை வெள்ளத்தைக் கண்டாலும் பேடிக்கும் * காய்ந்த வெற்றிலையையும் மெலிந்த ராஜாவையும் கைவிடாதே * காய்ந்தால் காயும் கார்த்திகை * காய்ந்தாலும் கவலை; பேய்ந்தாலும் கவலை * காய்ந்தாலும் வெந்நீர் அவம் போமோ? * காய்ந்து கெட்டது பிசானம்; காயாமல் கெட்டது கார் * காய்ந்து போன கார்த்திகை வந்தால் என்ன? தீய்ந்து போன தீபாவளி வந்தால் என்ன? மகாராஜன் பொங்கல் வந்தால் மார்பு முட்டும் சோறு * காய்ந்தும் கெடுத்தது வெயில்; பேய்ந்தும் கெடுத்தது மழை * காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது * காய்ப் பாரத்தைக் கொடி தாங்காதா? * காய் பறிக்கக் கத்தரி நடு * காய் மகாரன் நெஞ்சிலே கொள்ளிக் கட்டையால் சுடவேண்டும் * காய சித்தி பெற்றோர் சட்டை கழற்றுவது போல * காயத்திரி ஜபத்துக்குச் சமர்த்தியும் சமைக்க மாட்டாள் * காயம் என்ன கற்கண்டா? உயிர் என்ன தித்திப்பா? * காயாகக் காய்த்துப் பூவாகப் பூத்ததாம் * காயா? பழமா? * காயிலே கெட்டது கத்தரிக்காய் * காயும் கனியும் உண்டானால் கார்த்திகை மாதம் கல்யாணம் * காயும் பயிருக்குப் பெய்யும் மழை போல * காயும் பழமும் கலந்தது போல் * காயும் புழுவுக்குச் சாயும் நிழல் போல * காயேனவாசா-கறி என்ன சமைச்சாள்? * கார் அரிசிச் சாதம், கருணைக் கிழங்குத் துவையல். அத்தையைச் சமைக்கச் சொன்னாளாம்: அகப்பையை எடுத்துக் காட்டினாளாம் * கார் அறுக்கட்டும்; கத்தரி பூக்கட்டும் * கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய்-வழியும் * கார்த்திகை அகத்தி காம்பு எல்லாம் ருசி * கார்த்திகை எண்ணெயும் கனுவுப் பழையதும் ஆர் இடுவார் அம்மா என்று அழுதாளாம் * கார்த்திகைக் கார் கடை விலை; தைச் சம்பா தலை விலை * கார்த்திகைக் கீரை கணவனுக்குக் கொடாதே * கார்த்திகைக்குப் பின் மழை இல்லை: கர்ணனுக்குப் பின் கொடை இல்லை * கார்த்திகை கண்டு களம் இடு * கார்த்திகை கன மழை * கார்த்திகை கார்த்திகை என்று கழுத்தறுத்த பிராமணா, கார்த்திகைக்குப் பின் இந்த அகமுடையாள்தானா? * கார்த்திகை கால் கோடை * கார்த்திகை நண்டுக்குக் கரண்டி நெய் * கார்த்திகைப் பனியைப் பாராதே; கட்டி ஓட்டடா ஏர் மாட்டை * கார்த்திகைப் பிறை போல * கார்த்திகைப் பிறையைக் கண்ட கண்ணால் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு * கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை * கார்த்திகைப் பொரியும் கணுவுப் பழஞ் சோறும் * கார்த்திகை மழை கல்லை உடைக்கும் * கார்த்திகை மாசத்தில் உழுதால் கடுகு மிளகு காணாது * கார்த்திகை மாசத்தில் கடு மழை பெய்தால் கல்லின் கீழ் இருக்கிற புல்லும் கதிர் விடும் * கார்த்திகை மாசத்தில் கால் கொள்ளு விதைத்தால் மேல் கொள்ளு முதலாகாது * கார்த்திகை மாசத்தில் தண்ணீர்ப் பந்தல் வைத்தது போல * கார்த்திகை மாசத்துக் கர்க்கட சந்திர யோகம் கல்லைத் துளைக்கும் * கார்த்திகை மாசத்து நாய் படும் பாடு போல * கார்த்திகை மாசத்துப் பூமா தேவியைப் போல * கார்த்திகை மாசத்து மழை கலம் கழுவுகிறதற்கு முன்னே வந்து போகும் * கார்த்திகை மாசம் கல்லுக்குள் இருக்கும் நெல்லும் கதிராகும் * கார்த்திகை மாசம் கலம் கழுவப் போது இல்லை * கார்த்திகை மாசம் கலம் கழுவ மழை விடாது * கார்த்திகை மாசம் கையிலே; மார்கழி மாசம் மடியிலே * கார்த்திகையில் கருக்கல் கண்ட இடத்தில் மழை * கார் நடவைக் கலக்க நட்டது போல. கார்ப் பயிர் கலந்து கெட்டது; பிசானப் பயிர் நெருங்கிக் கெட்டது * கார்ப் பயிரைக் கண்ணைக் கட்டி அறு * கார் மின்னிக் கெட்டது; பருவம் மின்னாமல் கெட்டது * கார் மேக மழையில் காற்றடித்தால் போச்சு * காரண குருவே காரிய குரு * காரணம் அடா கல்லுக் கொத்தா; சாகிற கிழவி பிள்ளை பெற்றாள் * காரணம் இல்வாமல் நாய் குரைக்காதே * காரணம் இன்றிக் காரியம் இல்லை * காராம் பசுவுக்குப் புல் ஆனால் நந்தவனத்துக்குக் களையும் ஆம் * காரிகை கற்றுக் கவி பாடுவதிலும் பேரிகை அடித்துப் பிழைப்பது நன்று * காரியக்காரன் கொல்லையிலே கழுதை வந்து மேய்கிறது * காரியத்தில் வருகிற போதுதான் மாடு படுத்துக் கொள்கிறது * காரியத்திலே கண் அல்லாமல் வீரியத்திலே இல்லை * காரியத்திலே கப்பல் * காரியத்துக்குச் சோம்பினவர்களுக்குக் கைக் குழந்தை ஒரு சாக்கு * காரியத்துக்கு வாசுதேவர் கழுதையின் காலைப் பிடித்தார் * காரியத்தைப் பற்றிக் கழுதையையும் காலைப் பிடி * காரியப் பைத்தியம் * காரியம் ஆகிற வரையில் கழுதையையும் காலைப் பிடி * காரியம் ஆகிறவரையில் காலைப் பிடி; பின்னே கழுத்தைப் பிடி * காரியம் ஆகுமட்டும் காலைப் பிடி, காரியம் ஆன பிறகு குடுமியைப்பிடி * காரியம் ஆகுமானால் தலையைப் பிடி, காரியம் ஆகாவிட்டால் காலைப் பிடி * காரியம் இல்லாத மாமியாருக்குக் கல்லும் நெல்லும் கலந்து வைத்தாள் * காரியம் உண்டானால் கழுதையையும் காலைப் பிடி * காரியம் உள்ளவரை காலைப் பிடி; இல்லாவிட்டால் பல்லைப் பிடி * காரியம் செய்துவிட்டுக் கழுநீர்ப் பானையில் கைவிட்டாளாம் * காரியம் பெரிதா? வீரியம் பெரிதா? * காரியம் முடிந்தால் கம்மாளன் புறத்தே * காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி * காரியும் வெள்ளையும் கருதிப் பயிரிடு * காருக்கு ஒன்று; சம்பாவுக்கு ஒன்று * காருக்குக் களை எடுத்தாற் போல் * காருக்குப் பட்டம் இல்லை * காருக்குப் பின் பட்டம் இல்லை; கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை * காருக்கும் கத்தரிக்கும் காலம் இல்லை * காருக்கு வயலும் மோருக்குச் சாதமும் அதிகமாக வைக்கக்கூடாது * காரும் கம்பும் கதிரிலே * காரை முத்தினா பாறை * காரைக்காட்டானோ? ஊரைச் சுட்டானோ? * காரைக் கிள்ளி நடு; சம்பாவை அள்ளி நடு * காரையை வெட்டிக் கரணை போட்டால் எடையும் பணமும் காணும் * கால் அடிபட்ட நாயும் காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவுமா? * கால் அடி வைக்கச்சே நீச்சானால் கரை ஏறுகிறது எப்படி? * கால் அணாக் கொடுக்கிறேன் என்றால் காத வழி நடப்பான் * கால் அளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம்; நூல் அளவே ஆகுமாம் நுண் சீலை * கால் ஆட்டக் கால் ஆட்டத் தூணாட்டம் வீங்கிப் போயிற்று * கால் ஆட்டி வீட்டில் வாலாட்டி இருக்காது * கால் ஆட்டுகிறவர் வீட்டில் வாலாட்டி நாய் தங்காது * கால் ஆடக் கோல் ஆடும்; கோல் ஆடக் குரங்கு ஆடும் * கால் இல்லா முடவன் கடலைத் தாண்டுவானா? * கால் எட்டினால் காகுழியில் போடு * கால் ஒடிந்த கோழிக்கு உரற்குழியே கைலாசம் * கால் காசுக்குக் குதிரை வாங்க வேணும்; அது காற்றாகவும் பறக்க வேணும் * கால் காசு தாலி கட்டாதவனும் காலில் விழாத பிள்ளையும் பிரயோசனம் இல்லை * கால் காசுப் பூனை முக்காற் காசுத் தயிரைக் குடித்தது * கால் காசு பெறாது * கால் சிறிது ஆகில் கண் ஊரும்; கன்னியர்மேல் மால் சிறிது ஆகில் மனம் ஊரும் * கால் துட்டுக்குப் பசு வாங்க வேணும்; அது கால்படி பால் கறக்க வேணும் * கால் தூக்குகிற கணக்கப் பிள்ளைக்கு மாசம் பத்து ரூபாய் * கால் தூசு பெற மாட்டார்கள் * கால் நடைக்கு இரண்டு காசு, கைவீச்சுக்கு ஐந்து காசு * கால் படி அரிசி இருந்தால் கஞ்சி, அரைப் படி அரிசி இருந்தால் அன்னம் * கால் படி அரிசிக்காரன் உள்ள மட்டுந்தான் * கால் பணத்துக் குரங்கு முக்கால் பணத்து வாழைப்பழம் தின்றதாம் * கால் பாடகம் கழன்று விடுமோ? * கால் போகா இடத்தில் தலையிட்டுக் கொள்ளாதே * கால்மாடு, தலைமாடு தெரியாதவன் * கால் மாறிக் கட்டினால் கனம் குறையுமா? * கால் வந்து சூழக் கரி வந்து சூழ்ந்தது * கால்வாயைத் தாண்டாதவன் கடலைத் தாண்டுவானா? * கால கதியை ஆரும் கடக்க மாட்டார்கள் * கால சக்கரம் சுழல்கிறது * காலத்தில் ஒட்டை அடைக்கப்படாவிட்டால் கப்பலும் முழுகிவிடும் * காலத்தில் பயிர் செய்தால் கடன் வாங்க வேண்டாம் * காலத்தில் பிறந்த பிள்ளை கைக்கு உதவும் * காலத்தில் பெய்த மழை போல * காலத்தில் போனாலும் சூலத்தில் போகாதே * காலத்தினால் செய்த நன்றி * காலத்துக்கு ஏற்ற கோலம் * காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம் * காலத்துப் பயிர் கரம்பிலே * காலத்து விதை கரம்பிலே * காலத்தே பயிர் செய் * கால தாமதம் காரியம் நஷ்டம் * காலப் பயிர் கடக்க நிற்கும் * காலப் புழுதி இல்லாதவன் கைம்முதல் இழப்பான் * காலம் அல்லாத காலத்தில் கடல் ஏறிக் கதிர்காமா, கதிர்காமா என்றால் கைகொடுக்குமா? * காலம் அல்லாத காலத்தில் கப்பல் ஒட்டி * காலம் அல்லாத காலத்தில் காய்த்ததாம் பேய்ச் சுரைக்காய் * காலம் அறிந்து ஞாலம் ஒழுகு * காலம் அறிந்து பிழையாதவன் வாலறுந்த குரங்கு ஆவான் * காலம் அறிந்து பெய்யாத மழையும், நேரம் அறிந்து உண்ணாத உணவும் வீண் * காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை * காலம் கண்ட கூனி * காலம் கலி காலம் அல்லவா? * காலம் கலி காலம்; கறுப்புக் கோழி வெள்ளை முட்டை இடும் * காலம் கெட்ட கேட்டிற்குக் கருத்தான் என்ன செய்வான்? * காலம் கெட்டுக் கிடக்கிறது; ஜாக்கிரதையாய் இரு * காலம் கெட்டுக் கைப்பிச்சை எடுத்தாற் போல * காலம் செய்கிறது ஞாலம் செய்யாது * காலம் செய்த கோலத்துக்கு ஆரை வெறுப்பது? * காலம் செய்வதைக் காலன் செய்வான் * காலம் செய்வதைக் கோலம் செய்யாது * காலம் துக்கத்தை மாற்றும் * காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும் * காலம் போன காலத்தில் மூலம் வந்து குறுக்கிட்டது போல * காலம் வரும் வரைக்கும் யமன் காத்திருப்பான் * காலமே எழுந்திருந்து காக்கை பார்க்கிறது ஆகாது * காலமே எழுந்திருந்து காக்கை முகத்தில் விழித்தல் ஆகாது * காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை * காலனுக்கு விளைச்சல் கூடுதல் * கால க்ஷேபத்துக்குக் கூலிக்குக் குத்தினாலும் கமுக்கட்டு மயிர் வெளியே தெரியக்கூடாதாம் * காலா காலத்தில் செபம் பண்ணினால் மேல் ஒரு பாவமும் இல்லை * காலால் இடுவதைத் தலையால் செய்கிறான் * காலால் காட்டினதைக் கையால் செய்கிறது * காலால் நடக்காமல் காற்றாய்ப் பறக்கிறது * காலால் நடந்தால் காத வழி? தலையால் நடந்தால் எவ்வளவு தூரம்? * காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்கக் கூடாது * காலில் அழுக்கு இருந்தால் தலையில் அமேத்தியம் என்பார் * காலில் கட்டினால் விருது; குப்பையில் கிடந்தால் துணி * காலில் தைத்தது கண்ணிலே தைத்தது போல * காலில் நகம் முளைத்த நாள் முதலாக * காலில் பட்டது கண்ணில் பட்டது போல * காலில் பட்டது கையிலும் படும்; மூக்கிலும் படும் * காலில் பட்ட பிறகு கிரகசாரம் போய் விடாது * காலில் பட்ட பீ மூஞ்சிக்கு வந்தாற் போலே * காலில் விழுகிறது நல்லது; மேலில் விழுகிறது கெட்டது * காலுக்கு ஆகாத செருப்பைக் கழற்றி எறி * காலுக்கு ஆகிற செருப்புத் தலைக்கு ஆகுமா? * காலுக்கு என்றால் தலைக்கு இடுவான் * காலுக்குக் கடுப்பே தவிரக் கண்ட பலன் ஒன்றும் இல்லை * காலுக்குக் கண் வேண்டுமா? * காலுக்குக் கை உதவி, கைக்குக் கால் உதவி * காலுக்குச் சேராத செருப்பைக் கழற்றி எறிய வேண்டும் * காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும் * காலுக்குப் போட்டால் தலைக்குப் போடுகிறான் * காலும் இல்லாமல் தலையும் இல்லாமல் பேசுகிறான் * காலும் தலையும் சாமி குடுமியும் போல * காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் மண்டலம் தின்றால் கோலை ஊன்றிக் குறுகி நடந்தவர் கோலை விட்டுக் குலாவி நடப்பரே * காலை உப்பலும் கடும்பகல் வெயிலும் மாலை மேகமும் மழைதனில் உண்டு * காலைக் கடம்பர், மத்தியான்னச் சொக்கர், அந்தித் திருவேங்கிநாதர், அர்த்தஜாமம் சிம்மபுரீசுவரர் * காலைக் கல், மாலைப் புல் * காலைக் குளி மாதம் தாங்கும்; நடுப்பகல் குளி வாரம் தாங்கும்; அந்திக் குளி அன்றைக் குளி * காலைக் கடன் வாங்கச் சொல்லும்; அந்தி ஆனை கட்டச் சொல்லும் * காலைக் கூழைத் தள்ளாதே; கம்மாளன் வரவைக் கொள்ளாதே * காலைக் கேட்டுக் கொண்டா நடக்கிறது? * காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் ஒழிய விடாது * காலைச் செவ்வானம் கடலுக்குப் பெய்யும் * காலைச் செவ்வானம் கரம்பில் கட்டு; அந்திச் செவ்வானம் ஆற்றில் கட்டு * காலைச் செவ்வானம் காலத்திலும் மழை இல்லை; அந்திச் செவ்வானம் அப்பொழுதே மழை * காலைச் செல் பூத்தால் அடுத்த மழை அடங்கும் * காலைத் தூக்குகிற கணக்கப்பிள்ளைக்கு மாசம் பத்து ரூபாய் * காலைத் தென்றல் மழையைக் காட்டும்; மாலைத் தென்றல் மழையை விலக்கும் * காலை துயில்வானும் மாலை இருப்பானும் பதர் * காலைப் பனிக்கும் கண் விழிக்கும் ஒத்தது செல்வம் * காலைப் பிடி என்றால் கழுத்தைப் பிடித்தாளாம் * காலைப் பிடித்த சனி நடந்தால் ஒழிய விடாது * காலைப் பிடித்த சனியன் ஊரைச் சுற்றியடிக்கும் * காலைப் புல்லும் மாலைக் கல்லும் ஆளைக் கொல்லும் * காலை மிதித்தால் தலையை மிதிப்பான் * காலை மேகமும் கருந்தனி வெயிலும் மாலை உப்பலும் மழைதனில் இல்லையே * காலை மோட்சமும் வாலை ஞானமும் நிலைக்காது * காலையில் எழுந்து காக்கை முகத்தில் விழிக்காதே * காலையில் தயிர், கடும் பகலில் மோர், மாலையில் பால் * காலையில் பூத்த மலர் மாலையில் வாடுவதைப் போல * காலை வாடை, மாலை உப்பு, மழை அப்புறம் * காலை விருத்தைத் தட்டாதே; கசடருடன் கூடித் திரியாதே * காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும் * காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும் * காவல் காக்க வந்த குரங்கு கைத்துப்பாக்கி கேட்டதாம் * காவல்தானே பாவையர்க்கு அழகு * காவேட்டி ரங்கனுக்கு மேல் வெட்டி இரண்டாம் * காவேட்டி ரங்கனுக்கு மேல் வேட்டி வெள்ளை * காவேட்டி ரங்கனுக்கு வைப்பாட்டி இரண்டாம் * காவேரிக் கரைப் பசுப் போல் அலைகிறான் * காவேரி கடவாக் கந்தாடை அண்ணன் * காவேரித் தண்ணீர் குடித்தவனுக்குச் சாவேரி ராகம் கஷ்டமா? * காவேரி ஆறு கரை புரண்டு போனாலும் வீராணத் தேரி விதை முதலுக்குக் கட்டாது * காவேரி ஆற்றை மறிப்பாய்; கார்த்திகை மாதத்துக் கர்க்கடகச் சந்திரனையும் மறிப்பாயா? * காவேரி கஞ்சியாய்ப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கவேன்டும் * காவேரி பாதி, கர்ணன் பாதி * காவேரியைப் போல நதி இல்லை; சாவேரியைப் போல ராகம் இல்லை * காவோலை விழுந்ததென்று குருத்தோலை சிரித்ததாம் * காழி பாதி, வீழிபாதி * காளை தேட, சோமன் அழிக்க, சுந்தரன் சுகிக்க * காளவாய்க்கு மழையும் கைம்பெண்டாட்டிக்குப் பிள்ளையும் * காளி தோட்டத்துக் கற்பக விருட்சம் ஆருக்கும் உதவாது * காளிப் பட்டம் போனாலும் மூளிப் பட்டம் போகாது * காளியோடு பிறந்த மூளி, மூளியோடு பிறந்த காளி * காளை ஈன்றதென்று கேட்குமுன்னே கயிறு எடு என்றானாம் * காளை கட்டிக் கார் உழவை ஒட்டு * காளை போன வழியே கன்று போகும் * காளை மாடு ஆனாலும் கன்றுக்கு உழக்குப் பால் தா என்றானாம் * காளையைக் கட்டுத் தறியில் விட்டுவிட்டு மேயும் இடத்தில் பிடிக்க முடியுமா? * காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே * காற்றில் அகப்பட்ட இலவம் பஞ்சு போல * காற்றில் அகப்பட்ட கப்பல் போல அலைகிறது மனம் * காற்றின் இடைப்பட்ட கயவர் மனம் போல * காற்று அடிக்கக் காற்று அடிக்க நாற்று முடி தூக்குகிறாயா? வேர்த்து வேர்த்துவிட உம்மாச்சி பண்ணுகிறாயா? * காற்றில் ஆடினதாம் கம்பங்கதிர்; அதற்குப் பயந்ததாம் சிட்டுக்குருவி * காற்றில்லாமல் தூசி பறக்குமா? * காற்றிலே கருப்பிலே கண்டதில்லை * காற்றடிக்கக் காற்றடிக்க நாற்றுக் கட்டு சுமக்கிறாயா? * கரிவடியக் கரிவடியச் சிவபூஜை செய்கிறாயா? * காற்றடிக்கத் தாழை பூத்தது போல் * காற்று உள்ள போதே தூற்றிக்கொள் * காற்றுக்கா, மழைக்கா, போர்த்துக் கொள்ளத் துணிக்கா? * காற்றுக் காற்றோடே போயிற்று * காற்றுக்கு எதிர் ஏற்றிய விளக்குப் போல * காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும் * காற்றிலே அகப்பட்ட கப்பல் போல் அலைகிறது மனம் * காற்றுக்கு எதிரே ஏற்றின விளக்கைப் போல * காற்றிலே கருப்பிலே கண்டது இல்லை * காற்று இல்லாமல் தூசி பறக்குமா? * காற்றுக்கு எதிரே சுற்றினால் முகத்துக்கு நேரே விழும் * காற்றுக்குத் தகுந்தாற் போல் பாயை மாற்றிக் கட்டு * காற்றுக்குத் தோணி எதிர்த்து ஓடாது * காற்றுக்கோ மழைக்கோ போர்த்திக் கொள்ளத் துணி இருக்கிறதா? * காற்று காற்றோடு போயிற்று * காற்றுப் படாமல் காப்பாற்றுகிறேன் * காற்றும் சிலரை நீக்கி வீசுமோ? * காற்றும் மழையும் கலந்து அடித்தது போல் * காற்றைப் பார்த்துக் கப்பல் நாட்டு * காற்றைப் பிடித்துக் கரகத்தில் அடைத்த கதை * காற்றைப் பிடித்துக் கையினில் அடக்க முடியுமா? * காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் * கானகத்து உக்க நிலா * கானல் நீர் போல * கானலைத் தண்ணீராய்க் கண்டதைப் போல * கானலை நீர் என்று எண்ணும் மான் போலே * கானலைச் சலமாய்க் கண்டது போல * காஷ்மீர்க் கண்டமோ? * காஷ்மீரம் முதல் கன்யாகுமரிவரை * காஷ்மீருக்குப் போனால் காசு மீறாது ==கி== * கிட்டத்தில் கட்டினால் எட்டத்தில் மழை, எட்டத்தில் கட்டினால் கிட்டத்தில் மழை * கிட்டாதாயின் வெட்டென மற * கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான். * கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்? * கிங்கிணிக்குக் கிங்கிணியும், மங்கிணிக்கு மங்கிணியும் கெட்டது. * கிட்ட உறவு முட்டப் பகை. ( + தூர இருந்தால் நீள உறவு.) * கிட்டக் கிட்ட வந்தாலும் எட்ட எட்டப் போகிறான். * கிட்ட வா நாயே, என்றால் எட்டி மூஞ்சியை நக்க வந்தாற் போல. * கிட்டிற்று, முட்டிற்று, வடுகச்சி கல்யாணம். * கிட்டினால் ராமா, கோவிந்தா; கிட்டாவிட்டால் ஒன்றும் இல்லை. * கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும்; கிழவனைத் தூக்கி மனையில் வை.(கிழவியை, கிழவனை எடுத்து மடியில் வைத்துக்கொள்) * கிடக்கிறது எல்லாம் கிடக்கக் கிழவியைத் தூக்கி மனையில் வைத்தாளாம். * கிடக்கிறது ஒட்டுத் திண்ணை; கனவு காண்கிறது மச்சு வீடு. * கிடக்கிறது கிடக்கட்டும்; கிழவனையும் கிழவியையும் உள்ளே விடுங்கள். * கிடக்கிறது குட்டிச்சுவர்; கனாக் காண்கிறது மச்சு வீடு. (மச்சு மாளிகை.) * கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல். * கிடந்த பசியைக் கிள்ளிக் கிளப்பினானாம். * கிடாக் கன்று போட்டது என்றால் பிடித்துக் கட்டு என்றானாம். * கிடாரம் உடைந்தால் கிண்ணிக்கு ஆகும்; கிண்ணி உடைந்தால் என்னத்துக்கு ஆகும்? * கிடாவும் காளையும் பிணைத்தாற் போல. * கிடைக்காத சரக்குக் கிடைத்ததைப் போல. (கிடையா.) * கிடைக்குத் கிடை ஆடுதான். * கிடை கிடந்த இடத்தில் மயிர் கூடக் கிடையாது. * கிடைப்பது குதிரைக் கொம்பு. * கிண்டக் கிண்ட அம்பட்டன் குப்பையிலே மயிரே புறப்படும். * கிண்டக் கிண்டக் கீரையும் மயிரும். * கிண்டி விட்டுக் கிளறி வைக்கிறது. (கிளறி விடு.) * கிண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது. * கிண்ணி பட்டாலும் பட்டது; கிடாரம் பட்டாலும் பட்டது. * கிண்ணி வைத்துக் கிண்ணி மாற்றுகிறது. * கிணற்றில் அகப்பட்டது போல. * கிணற்றில் இருக்கும் ஆமைபோல் இருப்பவனுக்கு உலகம் தெரியுமோ? * கிணற்றில் கல்லைப் போட்டது போல. (கிணற்றில் தள்ளிக் கல்லையும் போட்டான்.) * கிணற்றில் தண்ணீர் உதித்தது. * கிணற்றில் போட்ட கல் மாதிரி. * கிணற்றில் போட்டாலும் எண்ணிப் போடு. * கிணற்றில் விழுந்தவன் மறுபடியும் விழுவானா? * கிணற்றின் ஆழமும் கயிற்றின் நீளமும் பார்க்க வேண்டும். * கிணற்று ஆழத்தைக் கண்டாலும் காணலாம்; நெஞ்சு ஆழத்தைக் காண முடியுமா? * கிணற்றுக்குத் தப்பித் தீயில் பாய்ந்தான். (விழுந்தது போல.) * கிணற்றுக்குள் இருந்து பேசுகிறவனைப் போல் பேசுகிறான். * கிணற்றுக்குள் இருப்பவனை விளக்கிட்டுத் தேடினாற்போல. * கிணற்றுக்குள்ளே கங்கை குதித்தாற் போல. * கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போகும்? * கிணற்றுத் தவளைக்குக் கிணறுதான் சமுத்திரம். * கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்? * கிணற்றுத் தவளை தண்ணீர் குடித்ததைக் கண்டது யார்? கேட்டது யார்? (குடியாததை.) * கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போகுமா? * கிணற்றைக் கண்டு கடல் ஒதுங்கிப் போகுமா? * கிணற்றைக் காத்தால் வயிற்றைக் காக்கும். * கிணற்றைத் தூர்த்தால் வயிற்றைத் தூர்க்கும். * கிணறு இருக்க மலை தோண்டாதே. (கிடக்க மலை கல்லாதே.) * கிணறு இறைக்க இறைக்கச் சுரக்கும். * கிணறு தப்பித் துரவில் விழலாமா? * கிணறு மெத்தினால் கீழ்வரை பொசியும். * கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டாற் போல. * கிணறு வெட்டித் தவளையையும் பிடித்து விடுகிறதா? * கிணறு வெட்டித் தாகம் தீர்க்கலாமா? * கிரக சாந்திக்கு க்ஷவரம் செய்து கொள்கிறதா? * கிராக்கி மொச்சைக் கொட்டை; வராகனுக்கு இரண்டு கொட்டை. (பத்துக் கொட்டை,) * கிராம சாந்திக்காகத் தலையைச் சிரைத்துக் கொண்டானாம். * கிராமத்தைப் பார்க்கச் சொன்னால் சேரியைப் பார்க்கிறான். * கிராம தேவதை முதல் க்ஷாம தேவதை வரை ராம தேவனுக்குச் சரியாமோ? * கிரிசை கெட்டு வரிசை மாறுகிறது. * கிரியை அற்றோன் மறை சாற்றுவது ஏன்? * கிரியை அறிந்து சொன்னால் கிழித்துக் கொள்கிறதா? * கிருக சாந்திக்கு க்ஷவரம் பண்ணுவதா? * கிருபா நிதியே கருணாநிதி. (சருவா நிதி.) * கிருஷ்ண பட்சத்துச் சந்திரனைப் போல். * கிருஷ்ண வாத்தியார் திவசம் பண்ணுகிறதற்கும் கிழக்கு வெளுக்கிறதற்கும் சரியாய்ப் போகும். * கிருஷ்ணா ராமா கோவிந்தா. கிழக்கு எப்போது வெளுக்குமடா? * கிலி பிடித்ததோ? புலி பிடித்ததோ? * கிழ ஓணான் மரம் ஏறாதா? * கிழக் கிடாவைப் புகழ்கிறது இகழ்ச்சி அல்லவா? * கிழக்கிலும் மேற்கிலும் கருவிலும் கடன் படாதே. (கொடாதே.) * கிழக் குடலுக்குச் சோறும் இடி சுவருக்கு மண்ணும் இடு. * கிழக் குரங்கு குட்டி போட்டாற் போல. * கிழக் குரங்குபோல விழிக்கிறதைப் பார். * கிழக்கே கடன் கொடாதே.(செங்கற்பட்டு வழக்கு.) * கிழட்டுக் குதிரைக்குச் சவுக்கடி கொடுத்து போல். * கிழத்துக்குச் சாதமும் முறத்துக்குச் சாணியும். * கிழ நாய் குரைப்பதற்கும் காரணம் உண்டோ? * கிழப் பேச்சுக் கவைக்கு உதவுமா? * கிழம் ஆனாலும் கெட்டு ஆனாலும் கட்டிக் கொண்டவன் பிழைப்பான். * கிழமைக்கு வைத்து அழுவது. (8ஆம் நாளில் திருநெல்வேலி வேளாளர் இறந்தவன் விரும்பிய பொருள்களை வைத்து அழுவார்கள்.) * கிழவன் கொடுத்த பணத்துக்கு நரை உண்டா? * கிழவன்தான் நரை, கிழவன் கொடுத்த பணமுமா நரை? * கிழவன் பேச்சுக் கிண்ணாரக்காரனுக்கு ஏற்குமா? (கிழவி பேச்சு. கேட்குமா?) * கிழவனுக்கு வாழ்க்கைப் படுவதிலும் கிணற்றில் விழலாம். * கிழவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் கடைசி வரையில் சாப்பாடு. * கிழவி இருந்த வீடும், கிளி இருந்த காடும் ஈடேற முடியா. * கிழவி கிண்ணாரம் போடுகிறாள். * கிழவி சொல்லக் குமரி கேளாள். (யாழ்ப்பாண வழக்கு) * கிழவி தலை நரைத்தது என்ன? அதை மழுங்கச் சிரைத்தது என்ன? * கிழவி திரண்டாளாம்; பஞ்சாங்கக்காரன் பிட்டுக்கு அழுதானாம். * கிழவி பாட்டைக் கிண்ணாக்காரன் கேட்பானா? (கிழவி பேச்சைக் கின்னரக்காரன்.) * கிழவி போன போது சுவர் இடிந்து விழுந்ததாம். * கிழவியும் காதம் குதிரையும் காதம். (ஒளவையார் கூற்று.) * கிழவியும் காலை மடக்க மாட்டாள். * கிழவியை அடித்தால் வழியிலே பேளுவாள். * கிழவியை எடுத்து மணையிலே வைத்தாற் போல. * கிழவியைப் பாட்டி என்பதற்குக் கேட்க வேண்டுமா? * கிழிஞ்சாப்பிள்ளை மணியத்திலே நீட்டின விரல் அற்றுப் போம். * கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான். * கிழிந்த சேலை காசுக்கு இரண்டு. * கிழிந்த சேலையும் பேச்சுக் கற்ற வாயும் சும்மா இரா. * கிழிந்தது கிருஷ்ணன் வேட்டி; தைத்தது தாசன் வேட்டி. * கிழிந்த பம்பரம் காசுக்கு இரண்டு,(கிழிந்த பட்டு.) * கிள்ளப் பழுக்குமாம்; கிளி இருந்து கொஞ்சுமாம். * கிள்ளாவுக்குச் செல்லும் கெடி மன்னர் போல. * கிள்ளி எடுக்கச் சதை இல்லை; பேர் தொந்தியா பிள்ளை. * கிள்ளுக் கீரை போல் உள்ளத்தில் எண்ணாதே. * கிள்ளுக் கீரையா? * கிள்ளுகிறவனிடத்தில் இருந்தாலும் அள்ளுகிறவனிடத்தில் இருக்கக் கூடாது. * கிள்ளுவார் கீழே இருந்தாலும் இருக்கலாம்; அள்ளுவார் கீழே இருக்க முடியாது. * கிள்ளை பழுக்குமாம்; கிளி வந்து கொஞ்சுமாம். * கிளர்த்தும் கல்வி தளர்ச்சி படாது. * கிளி அருமையைப் பூனை அறியுமா? * கிளி அழுதால் பூனை விடுமா? * கிளி போலப் பெண்டாட்டி இருந்தாலும் குரங்குபோலக் கூத்தியாள் வேணுமாம். * கிளியைப் போலப் பேச்சும் மயிலைப் போல நடையும். * கிளியை வளர்த்துக் குரங்கு கையில் கொடுத்தது போல. ==கீ== * கீர்த்தியால் பசி தீருமா? * கீறி ஆற்றினால் புண் ஆறும். * கீர்த்தி பெற்றும் கிலேசம் என்ன? * கீர்த்தியால் பசி தீருமா? * கீர்த்தியும் அபகீர்த்தியும் வந்தால் போகா. * கீரிக்கும் பாம்புக்கும் தீராப் பகை. * கீரி கடித்த பாம்பு போல. * கீரி கீரி நண்டு பிடி, வாய்க்கால் கீரி நண்டு பிடி, வயலுக்கு கீரி நண்டு பிடி. (வாயை மூடித் திறக்கும் விளையாட்டு.) * கீரியும் பாம்பும் போல * கீரி வாய்ப் பாம்பு போல. * கீரை இல்லாச் சோறும் கிழவன் இல்லா பட்டணமும் பாழ். * கீரைக் கட்டை வெட்டச் சொன்னால் தோரணம் கட்டுவதற்கா? (கட்டுகிறதா?) * கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும். (வைப்பது போல.) * கீரைக்குக் கழுவின தண்ணிர் கிண்டி அவிக்கப் போதும். * கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற் போல். * கீரைக்குப் புழு வேரில். * கீரை, கீரைத்தண்டு, கீரைப் புளிக் குழம்பு என்றானாம். * கீரைத்தண்டு பிடுங்க ஏலேலப் பாட்டு ஏன்? (பாட்டா?) * கீரை நல்லதானால் கழுவின தண்ணீரே போதாதா? (கழுவின தண்ணீரிலே வெந்துவிடும்.) * கீரை மசித்த வாணாயில் ரசம் வைத்த உறவு. * கீரையும் இரண்டு கறி பண்ணாதே. * கீரையும் மயிரும் விரவியது போல. * கீரையும் மாவும் கெட்ட புளிச்சாறும்.(கட்ட ) * கீரை விற்ற தானியம் போல. * கீழ் அகத்து மன்னி குளித்தால் கிழக்கு வெளுக்கும். * கீழ் எலி போலத் தோண்டிக் கிளறுகிறது. * கீழ் ஏழ் உலகமும் மேல் ஏழ் உலகமும் பார்த்தவன் போல் பேசுகிறான். * கீழ் ஏழு லோகமும் மேல் ஏழு லோகமும் கண்ட காட்சியா? * கீழ்க்காது மூளி, மேற்காது மூளி, சண்டைக்கு ரணபத்திரகாளி. * கீழ்க்குலத்தான் ஆனாலும் கற்றவன் கற்றவன்தான். * கீழ்க் குலத்தான் ஆனாலும் கற்றவன் மேற்குலத்தான். * கீழக் கரை நாய் அடிபட்டாற் போல் அடிபடுகிறாயே. * கீழே பாம்பு என்றால் மேலே பார்க்கின்றான். * கீழே போட்டு உதைக்கச்சே மீசையில் மண் படவில்லை என்ற கதை. * கீழே போனால் பிணம்; மேலே வந்தால் பணம். (கோலார் தங்க வயலில்.) * கீழே விழுகிற மாப்பிள்ளைக்கு அரிவாள் மணையை முட்டுக் கொடுத்தது போல. * கீழே விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்றானாம். * கீழைத்தெருக் கிழவி அவிசாரி போனாள் என்று மேலைத் தெருக்கிழவன் கோவணத்தில் கிட்டியைக் கட்டி அடித்தானாம். * கீழைத் தெருவிலே பல்லக்குக் கொடுத்து மேலைத் தெருவிலே பிடுங்கிக் கொள்கிறது. (கீழைத் தெருவிலே கொடுத்து.) * கீழோர் ஆயினும் தாழ உரை. * கீற்றிலே கனவிலே தெரியுமா? * கீற்றிலே வேண்டாம்; காற்றிலே வாரு. * கீறி ஆற்றினால் புண் ஆறும். == கு == * குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா? * குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை. * குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும். * குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும். * குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா? * குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது. * குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும். * குணத்தை மாற்றக் குருவில்லை. * குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை. * குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று. * குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள். * குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. * குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை. * குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும். * குப்பை உயரும் கோபுரம் தாழும். * குரங்குப் புண்ணுக்கு மருந்தில்லை. * குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன? * குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான். * குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா? * குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே * குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி. * குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது. * குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது. * குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும் * குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை * குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே. * குழைகின்ற நாய் கடிக்காது. * குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா? * கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு. * குரங்கின் கைப் பூமாலை. * குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது. * குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை. * குங்குலியத் தூபம் காட்டிச் சன்னதமும் குலைந்தால் கும்பிடு எங்கே? (காட்டியும்.) * குங்குமக் கோதைக்கும் அஞ்சு பணம்; குருட்டுக் கண்ணிக்கும் அஞ்சு பணமா? * குங்குமம் இட்ட நெற்றியும் குசு விட்ட குண்டியும் சரியாகுமா? * குங்குமம் சுமந்த கழுதை வாசனை அறியுமா? (பரிமளம்.) * குச்சத்திரம் குசுவாகப் போக. * குச்சத்திரம் குடியைக் கெடுக்கும். * குச்சு நாய்க்கு மச்சு வீடா? * குச்சு வீடு கட்டி அல்லவா மச்சு வீடு கட்ட வேண்டும்? * குசத்தாதனும் இடை ஆண்டியும் இல்லை. * குசத்தி நாக்கை அறுத்தாலும் குண்டு மூன்று காசு என்பாள். * குசத்தி நாக்கைக் குட்டம் போட்டு நறுக்கினாலும் குடம் தோண்டி இரண்டு காசு என்பாள். (கூழ் கூழாய் அறுத்தாலும் கூழையாய் அறுத்தாலும்.) * குசவனுக்கு ஆறு மாதம் வேலை; தடிகாரனுக்கு அரை நாழிகை. (தடியனுக்கு ஆறு நாழிகை வேலை.) * குசவனுக்குப் பல நாள் வேலை; தடிகாரனுக்கு ஒரு நிமிஷ வேலை. (ஒரு கடின வேலை, அரை நாழிகை வேலை.) * குசு கும்பிடப் போனால் தெய்வம் திருடுக்கென்றதாம். * குசு கொண்டு வந்திருக்கிறேன், கதவைத் திற, கொட்டி வைக்க இடம் இல்லை. * குசு புடைக்க வெறும் முறம் ஆச்சு. * குசும்புக்கும் கவுண்டிக்கும் மருந்து ஏது? (பொறாமைக்கும். வழுக்கைக்கும். நாஞ்சில் நாட்டு வழக்கு.) * குசு விடாமல் இருந்தால் குங்கிலியம் மணக்கும். * குசுவுக்குப் பயந்து குடி ஓடிப்போனாளாம். * குஞ்சிரிப்புக்கு மருந்து சாப்பிட உள்ள சிரிப்பும் போனாற் போல. * குஞ்சு செத்த காக்கை சிறகு அடித்துக் கொள்வது போல. * குஞ்சுடன் மேய்ந்த கோழியைப் போல. * குட்டக் குட்டக் குனிகிறவனும் முட்டாள்; குனியக் குனியக் குட்டுகிறவனும் முட்டாள். (மடையன்.) * குட்டங்கோனி தட்டான் குறைக்கும் வரி வைத்தான். * குட்ட நாடு கெட்டால் எட்டு நாடும் கெட்டன. குட்டி ஆடு கொழுத்தாலும் வழுவழுப்புப் போகாது. (குறையாது.) * குட்டி ஆடு செத்ததென்று கோனாய் குந்தி அழுததாம். * குட்டி ஆனைக்குக் கொம்பு முளைத்தது; பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சு. * குட்டி ஆனையும் குளத்தைக் கலக்கும். * குட்டி இட்ட நாய்க்குக் குப்பை மேடு கோபுரம். * குட்டிக் கரணம் போட்டாலும் கொடுப்பது அரிது. * குட்டிக் கரணம் போட்டாலும் மட்டி புத்தி போகாது. (மட்ட) * குட்டிக் கரணம் போட்டாலும் லோபி கொடான். (காசு கொடான்.) * குட்டிக் கரணம் போட்டாலும் வட்டில் சோற்றுக்கு வழி இல்லை. * குட்டிக் கலகம் பண்ணுகிறவன் குட்டுப்பட்டுச் சாவான். (செய்பவன்.) * குட்டிக் கிடையிலே ஓநாய் புகுந்தது போல. * குட்டிக்கும் பட்டிக்கும் குடிபோகச் சந்தோஷம். (குட்டிக்கும் நாய்க்கும், பட்டி-நாய். குடிபோகக் கொண்டாட்டம்.) * குட்டிக் குரங்கானாலும் கெட்டிப் பிடி. * குட்டிக் கொழுந்தனும் கோள் சொல்லி நாத்தனாரும். * குட்டிக் கொள்ளும் போதே கண்ணில் குட்டிக் கொண்டான். (கொண்டால்.) * குட்டிக் கொள்ளும் போதே முட்டிக் கொண்டானாம். * குட்டி குரைத்து நாயின் தலையிலே வைத்தது போல. * குட்டி கொழுத்தாலும் வழுக்கை வழுக்கைதான். * குட்டிச் சுவரில் முட்டிக் கொள்ள வெள்ளெழுத்தா? * குட்டிச் சுவரிலே தேள் கொட்டக் கட்டுத் தறியிலே நெறி ஏறுமா?(இடுமா?) * குட்டிச் சுவரிலே தேள் கொட்டத் தண்ணீர் மிடாவிலே நெறி கட்டினது போல. * குட்டிச் சுவரிலே தேள் கொட்ட நெடுஞ் சுவரிலே நெறி கட்டியதாம். * குட்டிச் சுவரும் குரங்கு இருந்த மாளிகையும் பாழ். (மாளிகையும் போல.) * குட்டிச் சுவரே. கூறை இல்லா வீடே! * குட்டி செத்ததுமல்லாமல் குழி தோண்ட இரண்டு பணம். * குட்டி செத்தாலும் குரங்கு விடாது. * குட்டி நரை குடியைக் கெடுக்கும். * குட்டி நாய்க்குப் பல் முளைத்தது போல. * குட்டி நாய்க்கும் குழந்தைப் பிள்ளைக்கும் இடம் கொடுக்கக் கூடாது. * குட்டி நாய் குரைக்கிறது போல. * குட்டி நாய் குரைத்துப் பட்டி நாய்க்குக் கேடு வந்தது. (உதை வந்தது.) * குட்டி நாய் கொண்டு வேட்டை ஆடினது போல. (நாயை.) * குட்டி நாய் வேட்டை நாயை விரட்டினாற் போல. * குட்டி நாயும் குழந்தைப் பிள்ளையும் இட்ட கையைப் பார்க்கும். * குட்டிப் பாம்பை அடித்தாலும் குற்றுயிராக விடக்கூடாது. (விடாதே.) * குட்டி பெருத்தாலும் வழுக்கை வழுக்கைதான். * குட்டி போட்ட நாய் கூனி உட்கார்ந்தது போல. * குட்டி போட்ட நாய் போலக் குரைக்கிறது. * குட்டி போட்ட நாய் போல வள்ளென்று விழுகிறான். * குட்டி போட்ட நாய் முடங்கினாற் போல. * குட்டி போட்ட நாய் முணுமுணுத்தாற் போல. * குட்டி போட்டி நாயைப் போல் ஏன் உறுமுகிறாய்? * குட்டி போட்ட பூனைபோல அலைகிறான். * குட்டி மானம் விட்டுக் குசவனோடு பேசினால் சட்டையும் பண்ணான்; சட்டியும் கொடான். (சட்டியும் கொடான், சட்டையும் பண்ணான் மானம் தப்பி.) * குட்டியின் கையைப் பிடித்துக் குரங்கு கொள்ளிக் கட்டைச் சூடு பார்த்தாற் போல. * குட்டி வேதாந்தம் குடியைக் கெடுக்கும். * குட்டின குட்டும் குண்டிற் பாய்ந்த தண்ணீரும் வருமா? (குழியிற் பாய்ந்த.) * குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும். * குட்டை ஏறிக் குரைத்த நாயே, சதை வீங்கிச் செத்த நாயே! * குட்டை குழப்பினால் சேறுதான் மிஞ்சும். * குட்டை குழப்புகிறான். * குட்டைத் தாதன் குட்டையிலே விழுந்தான். * குட்டைத் தாதன் மகன் மட்டைத்தாதன் குளத்திலே விழுந்து செத்தான். * குட்டை மரம் குலை குலையாய்க் காய்த்திருக்கிறது. * குட்டையில் ஊறிய மட்டை. * குட்டையைக் கலக்கிப் பருந்து இரை இட்டதுபோல. (இரை தேடுவது.) * குட்டையைக் குழப்பி மீனைப் பிடிக்கிறது போல. * குட்டை வால் நாய்க்கு நெஞ்சில் அறிவு. * குடத்தில் பாக்குப் போடு; மிளகாய்ப் பொடிக்கு உப்புப் போடாதே. * குடத்தில் பொன் கூத்தாடுமா? * குடத்தில் விளக்கை இட்டுக் கோபுரத்தின் மேல் வைத்தாற் போல. * குடத்து விளக்குக்கும் குன்றி மணிச் சாதத்துக்கும் இருக்கிறேன். * குடத்துள் ஏற்றிய விளக்குப் போல.(குடத்தில்.) * குடத்தைக் கவிழ்த்துப் பழத்தைச் சொரிந்த கதை. * குடப் பாம்பினிடைச் சிறு தேரை. * குடப்பால் கறந்தாலும் குதிரையோட்டம் ஓட மாட்டாது. * குடப்பால் கறந்தாலும் கூரை பிடுங்குகிற மாடு ஆகாது.(கூரைபிடுங்கித் தின்னுமாம் மாடு.) * குடப்பாலில் கையைவிட்டுச் சத்தியம் செய். * குடம் தண்ணீரில் கொள்ளி வைத்தாற் போல. * குடல் அறுந்த கோழி எங்கே போகும்? * குடல் அறுந்த நரி எவ்வளவு தூரம் ஓடும்? (எந்த மட்டும்.) * குடல் ஏற்றத்துக்குக் கோடி வைத்தியம். * குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும். * குடல் காய்ந்தால் நாய்க்கு நாற்றம் நறுமணம். * குடல் காய உண்டால் உடல் காயம் ஆகும். * குடல் கூழுக்கு அழுகிறதாம்; கொண்டை பூவுக்கு அழுகிறதாம். * குடலில் கண்ட தினவு போல். * குடலும் கூந்தலும் கொண்டது மட்டும் கொள்க. (கொள்கை.) * குடலைப் பிடுங்கிக் காட்டினாலும் அதுவும் கஜகர்ண வித்தை என்கிறான். * குடலைப் பிடுங்கிக் காட்டினாலும் வாழைநார் என்பார். (உருவிக் காட்டினாலும்.) * குடலைப் பிடுங்கி மாலையாய்ப் போட்டுக் கொள்வேன். * குடிலைப் பிடுங்குகிறது ஓக்காளம். * குடி இருக்க வந்தாயோ? கொள்ளி வைக்க வந்தாயோ? * குடி இருந்த வீட்டிலே கொள்ளி வைக்கிறவன். (வீட்டுக்கே வைப்பதா?) * குடி இருந்து அறி; வழி நடந்து அறி. * குடி இருந்து பார்; கூட்டுப் பயிர் இட்டுப் பார். * குடி இருப்பது குச்சு வீடு; கனாக் காண்பது மச்சு மாளிகை. (மச்சு வீடு.) * குடி இல்லா ஊரிலே அடியிடல் ஆகாது. * குடி இல்லா ஊரிலே ஒற்றைப் பணக்காரன். (ஒற்றை விர்த்தகன்.) * குடி இல்லா ஊரிலே குருவியும் பறக்காது. * குடி இல்லா ஊருக்குக்குள்ள நரியே அரசன். * குடி இல்லா விட்டால் குண்டுப் பெருச்சாளி உலவும். (குடியில்லா வீட்டில்.) * குடி உடையானே முடி உடையான். * குடி உயரக் கோல் உயரும். குடி உயர முடி உயரும். * குடிக்கக் கஞ்சி இல்லை; கொப்புளிக்கப் பன்னீராம். * குடிக்கச் செம்பும் எரிக்க விளக்கும் வேண்டாமா? * குடிக்கச்சே குமட்டினால் எடுக்கும். * குடிக்கத் தண்ணீர் கேட்டால் குளிப்பாட்டக் கொண்டு வருவான். * குடிக்கத் தெரியாதவன் கவிழ்த்துக் கொட்டினானாம். * குடிக்கா விட்டால் கொட்டிக் கவிழ்,(குடிக்கத் தெரியாவிட்டால்.) * குடிப்பது எருமை மூத்திரம்; கடித்துக் கொள்வது இஞ்சிப் பச்சடி. * குடிக்கிறது காடி நீர்; அதற்குத் தங்க வட்டிலா? * குடிக்கிறது கூழ்; இருக்கிறது சிங்காசனம். * குடிக்கிறது கூழ், கொப்புளிக்கிறது பன்னீர். (குடிக்கிறது நீர் ) * குடிக்கிறது பழங் கஞ்சி; கொப்புளிக்கிறது பன்னீர். * குடிக்கிறது வெந்நீர்; கொப்புளிப்பது பன்னீர். * குடிக்கிற பாலை வெடிப்பிலே வார்க்கிறதா? * குடிக்கிற முலையும் சரி, பிடிக்கிற முலையும் சரியா? (ஒன்றுதானா?) * குடிக்கிறவன் கையைச் சுற்றிச் சூடு போட்டாலும் குடியை விடான். * குடிக்கிற வீடு விடியுமா? * குடிக்குச் சகுனியும் கொல்லைக்குப் பல்லியும் கூடா. * குடிகாரன் புத்தி விடிந்தால் தெரியும். * குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு. (பொழுது விடிந்தால்.) * குடிகாரன் வீட்டில் விடிய விடியச் சண்டை. * குடி கெடுத்த குஷியிலே குரங்கைக் கட்டிக்கொண்டு அழுதானாம். * குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும். * குடித்த மருந்து குடித்தாற் போல எடுத்தால் பரிகாரி வாயிலே மண்ணுதான். (பரிகாரி. வைத்தியன்.) * குடித்த மறி கூட்டில் கிடைக்காது. * குடித்தனம் என்று பண்ணினால் நன்மையும் வரும்; தீமையும் வரும். * குடித்தனம் செழித்தால் துரைத்தனம் செழிக்கும். * குடித்தனம் மேலிட வேண்டிப் பிடாரியைப் பெண்டு வைத்துக் கொண்டான். * குடித்தனமே துரைத் தனம்.(குடித்தனமோ, துரைத்தனமோ?) * குடிப்பது கூழ், ஏறுவது தந்தப் பல்லக்கு. * குடிப்பது கூழ், கொப்புளிப்பது பன்னீராம். * குடிப்பது மல ஜலம்; கொப்புளிப்பது பன்னீர். * குடிப் பெண் வயிறு எரிய, கொடிச் சீலை நின்றெரிய. * குடி போகிற வீட்டுக்கு வரச் சொன்ன கதை. * குடி போன வீட்டிலே வறட்டு நாய் காத்தது போல. * குடி மக்கள் துரைத்தனம் செய்கிறது போல். * குடி மதம் அடிபடத் தீரும்.(அடிபட்டால்.) * குடியனும் வெறியனும் அடிபடாமல் குணப்பட மாட்டார்கள். * குடியனும் வெறியனும் சரி. * குடியாத வீடு விடியாது. * குடியில் பிறந்து குரங்காட்டம் ஆடுகிறான். * குடியில் பிறந்து செடியில் விழுந்தான். * குடியில் பெண் வயிறு எரிந்தால் கொடியிற் சேலை நின்று எரியும். * குடியில்லா ஊரில் ஒற்றைப் பணக்காரன் வர்த்தகன். * குடியிலே குரங்கானாலும் கொள். * குடியும் கெட்டுக் குடிக்கிற ஓடும் கெட்டது. * குடியும் சூதும் குடியைக் கெடுக்கும். * குடியே குடியைக் கெடுக்கும். * குடி வரி உயர்த்திக் கொள்ளை அடிக்காதே. * குடி வைத்த வீட்டில் கொள்ளி வைக்கலாமா? * குடி வைத்துக் கொண்டாயோ? கொள்ளி வைத்துக் கொண்டாயோ? * குடு குடு என்று ஓடிக் குடுமியைச் சிரைத்தானாம். (ஓடி வந்தானாம்.) * குடும்பத்தில் இளையவனும், கூத்தாடியில் மூத்தவனும் உதவார். (கூத்தாடியில் சோம்பேறியும்.) * குடும்பா என்றால் கொத்து வேண்டாம். * குடுமிக்கு ஏற்ற கொண்டை. * குடுமித் தலையின் வீறாப்பைக் கொண்டைத் தலையா பாரடா.(பார்த்தாயா?) * குடுமித் தலையும் மொட்டைத் தலையும் கூடுமா? * குடுமித் தலையும் மொட்டைத் தலையுமாய்க் கட்டுகிறது. * குமரிப்பெண்ணின் தாவணி தாலிகட்டுக்குப் பின்னர் சேலையாகி விட்டதாம். == கூ== * கூத்திக்கு முடிச்சிட்டுக் குரங்கு ஆனான், வேசிக்கு முடிச்சிட்டு விறகு ஆனான் * கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம். * கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே? * கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம். * கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. == கெ == * கெஞ்சினால் மிஞ்சுவது, மிஞ்சினால் கெஞ்சுவது. * கெஞ்சும் புத்தி கேவலம் கொடுக்கும். * கெஞ்சு மணியம் பண்ணுகிறது, (கெஞ்சி பண்ணுகிறதா?) * கெடுக்கினும் கல்வி கேடுபடாது * கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது * கெடுவான் கேடு நினைப்பான் * கெட்ட இடையனுக்கு எட்டு ஆடு போதும். * கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை. * கெட்ட கழுதைக்குத் துஷ்ட புத்தி. * கெட்ட கழுதைக்குப் பட்டது கண்டது. * கெட்ட காலத்துக்கு நாரை கெளிற்று மீனை எடுத்து விழுங்கினது போல. * கெட்ட காலத்துக்கு விபரீத புத்தி. (விநோத புத்தி.) * கெட்ட குடிக்கு ஒரு கேட்டை பிறந்தது. * கெட்ட குடிக்கு ஒரு துஷ்டப் பிள்ளை. * கெட்ட குடி கட்டி வருமா? * கெட்ட குடி கெட்டது; பூராவாய்க் குடி அப்பா! * கெட்ட குடி கெட்டாலும் வட்டி நஷ்டம் இல்லாமல் வாங்கிவிடு. * கெட்ட குடியே கெடும்; பட்ட காலிலே படும். * கெட்ட கேட்டுக்குக் கொட்டு ஒன்று, முழக்கு ஒன்றா? * கெட்ட கேட்டுக்குக் கெண்டை போட்ட (கொண்டை போட்ட.) முண்டாசு குறைச்சலா? * கெட்ட கேட்டுக்கு நெட்டை ஆள் கூலியா? (இரட்டையாள்.) * கெட்ட கேட்டுக்குப் பட்டுப் பீதாம்பரம்! * கெட்ட கேட்டுக்குப் பிச்சைக் குடுவை இரண்டாம். * கெட்ட கேட்டுக்கு வட்டம் காற்பணம். * கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு * கெட்டது கிழவன் குடித்தனம். * கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே. * கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும். * கெட்டும் பட்டணம் சேர் * கெண்டையைப் போட்டு வராலை இழு. * கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான். * கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல. == கே == * கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே. * கேட்டதெல்லாம் நம்பாதே. நம்பினதெல்லாம் சொல்லாதே. * கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை. * கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம். == கை == * கை அழுத்தமானவன் கரையேற மாட்டான். * கை இல்லாதவன் கரணம் போடலாமா? கால் இல்லாதவன் ஓடலாமா? * கை ஈரம் காயாமல் காட்ட வருகிறது. * கை உண்டாவது கற்றவர்க்கு ஆமே. * கை ஊன்றி அல்லவோ கரணம் போட வேண்டும்? * கை கண்ட பலன். * கை கண்ட மாத்திரை, வைகுண்ட யாத்திரை. * கை கண்ட வேசிக்குக் கண்ணீர் குறைச்சலா? * கை கண்ணைக் குத்தினால் கையை வெட்டி விடுகிறதா? * கை கருணைக் கிழங்கு: வாய் வேப்பங்காய். * கை காய்த்தால் கமுகு காய்க்கும். * கை கைக்குமா நெய் வார்க்க வரும்? * கை கொடுத்துக் கொண்டே கடையாணி பிடுங்குகிறான். * கை தப்பிக் கண்ணில் பட்டால் கையைக் கண்டிப்பது உண்டா? * கை நிறைந்த பணத்தை விடக் கண் நிறைந்த புருஷன்தான் வேண்டும். * கை பட்டால் கண்ணாடி. * கை போடாத புருஷன் இல்லை; விரல் போடாத பெண் இல்லை. * கை முடக்காரன் கழுத்தில் தாலி கட்டியது போல * கை விதைப்பை விடக் கலந்த நடவை நல்லது. * கை வைத்தால் கை இற்றுப் போம். * கைக் காசு இல்லாமல் கடைப் பக்கம் போகாதே. * கைக் காடையைக் காட்டிக் காட்டுக் காடையைப் பிடிக்க வேண்டும். * கைக் குருவியைக் கொண்டுதான் காட்டுக் குருவியைப் பிடிக்க வேணும். * கைக் கொள்ளாத சத்தியத்தைக் கற்காதிருத்தல் நலம். * கைக்கு அடங்காத விளக்குமாறும் வாய்க்கு அடங்காத மருமகளும். * கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை. * கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை. * கைக்கு வாய் உபசாரமா? * கைக்குக் கண்ணாடியா? * கைக்குக் கை நெய் வார்த்தாலும் கணக்குத் தப்பாது. * கைக்கோளறுக்குக் கால் புண்ணும் நாய்க்குத் தலைப் புண்ணும் ஆறா. * கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா * கைத் தாலி கழுத்தில் ஏறட்டும். * கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன் மாமியாரே. * கைத்தது மானானாலும் கை ஏல்வை. * கைபிடித்து இழுத்தும் அறியாதவன் சைகை அறிவானா? * கைப் பழத்தை நம்பி வாய்ப் பழத்தை வழியில் விட்டான். * கைப் பழத்தைக் கொடுத்துத் துறட்டுப் பழத்துக்கு அண்ணாந்து நிற்பானேன்? * கைப் பறவையைப் பறக்க விட்டுக் காட்டுப் பறவைக்குக் கண்ணி வைக்கலாமா? * கைப் பிள்ளைக்கு முன் கயிற்றுப் பிள்ளை. * கைப் புண்ணுக்குக் கண்ணாடியா? * கைப் பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா? * கைப் பொருள் அற்றவனைக் கட்டின பெண்டாட்டியும் எட்டிப் பாராள். * கைப் பொருள் அற்றால் கட்டுக் கழுத்தியும் பாராள். * கைப் பொருள் இல்லா வழிப்போக்கனுக்குக் கள்வர் முன் படலாம். * கைப் பொருள் இல்லாதவனைக் கள்வன் என்ன செய்வான்? * கைப் பொருள் போனாலும் கல்விப் பொருள் போகாது * கைப் பொருள்தன்னிலும் மெய்ப் பொருள் கல்வி. * கைப் பொன்னுக்குக் கண்ணாடியா? * கைப்பண்டம் கருணைக் கிழங்கு, * கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா? * கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள் * கைம்பெண் பிள்ளை ஆனாலும் செய்கிற சடங்கு செய். * கைம்பெண் வளர்த்த கழிசடை. * கைம்பெண்டாடிக்கும் காளவாய்க்கும் எங்கே என்று காத்திருக்கும். * கைம்பெண்டாட்டி எருமையிலே கறவை பழகினாற் போல. * கைம்பெண்டாட்டி தாலியைக் கூழைக் கையன் அறுத்தானாம். * கைம்பெண்டாட்டி பெற்ற பிள்ளை ஆனாலும் செய்யும் சடங்கு சீராய்ச் செய்ய வேண்டும். * கைம்பெண்டாட்டி வளர்த்த கழுக்காணி. * கைம்பெண்டாட்டிக்கு ஒருத்தன் ஆனால் கட்டுக் கழுத்திக்கு எட்டுப் பேர். * கைம்மேல் கண்ட பலன். * கையது சிந்தினால் அள்ளலாம்;வாயது சிந்தினால் அள்ளமுடியாது. * கையாலே தொட்டது கரி. * கையால் ஆகாத சிறுக்கி வர்ணப் புடைவைக்கு ஆசைப்பட்டாளாம். * கையால் ஆகாத சுப்பி. திருவாரூர்த் திப்பி. * கையால் ஆகாததற்கு வாய் பெரிது. * கையால் ஆகாதவனுக்குக் கரம்பிலே பங்கு உழாதவனுக்கு ஊரிலே பங்கு. * கையால் கிழிக்கும் பனங் கிழங்குக்கு ஆப்பும் வல்லிட்டுக் குற்றியும் ஏன்? * கையால் கிள்ளி எறியும் வேலைக்குக் கனத்த கோடரி வேண்டுமோ? * கையால் பிடிக்கப் பொய்யாய்ப் போச்சுது. * கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும் * கையாளாத ஆயுதம் துருப் பிடிக்கும். * கையாளுகிற இரும்பு பளபளக்கும். * கையானைக் கொண்டு காட்டானையை பிடிக்க வேண்டும். * கையிலே காசு வாயிலே தோசை * கையிலே காசு; வாயிலே தோசை. * கையில் அகப்பட்ட துட்டுக் கணக்குப் பேசுகிறது. * கையில் அகப்பட்ட பொருளுக்கும் கணக்கு. * கையில் அரிசியும் கமண்டலத்தில் தண்ணீரும். * கையில் அரைக் காசுக்கும் வழி இல்லாத அஷ்ட தரித்திரம், கையில் இருக்க நெய்யிலே கைவிடுவானேன்? * கையில் இருக்கிற கனியை எறிந்து மரத்தில் இருக்கிற கனியைத் தாவுகிறது போல. * கையில் இருக்கிற குருவியை விட்டு விட்டுப் பறக்கிறதற்கு ஆசைப்பட்டாற் போல். * கையில் இருக்கிற சோற்றைப் போட்டு விட்டு எச்சிற் சோற்றுக்குக் கை ஏந்தினது போல. * கையில் இருக்கிற பறவையை விட்டு விட்டுக் காட்டுப் பறவைக்குக் கண்ணி வைக்கலாமா? * கையில் இருந்தால் கடை கொள்ளலாம். * கையில் இருந்தால் கர்ணன். * கையில் இருந்தால் பாக்கு: கையை விட்டால் தோப்பு. * கையில் இருப்பது செபமாலை; கட்கத்தில் இருப்பது கன்னக்கோல். * கையில் இல்லா விட்டால் கண்டாரும் பேச மாட்டார்; கேட்டாரும் மதிக்க மாட்டார். * கையில் இல்லாதவன் கள்ளன். * கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர். * கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர். * கையில் உள்ள களப்பழம் மரத்தில் உள்ள பலாப்பழத்துக்கு மேல். * கையில் எடுக்குமுன் கோழி மோசம் என்று அறியாது. * கையில் எடுப்பது ஜபமாலை; கட்கத்தில் வைப்பது கன்னக்கோல். * கையில் ஒரு காசும் இல்லை; கடன் கொடுப்பார் ஆரும் இல்லை. * கையில் காசு இருக்கக் கறிக்கு அலைவானேன்? * கையில் காசு இருந்தால் அசப்பில் ஒரு வார்த்தை வரும். * கையில் காசு, வாயில் தோசை. * கையில் காசும் இல்லை; முகத்தில் பொலிவும் இல்லை. * கையில் கிடைத்த அமுதைச் சமரில் ஊற்றலாமா? * கையில் குடையும் காலில் சோடும் வேண்டும். * கையில் கெளுத்தி மீனை வைத்துக்கொண்டு ஆணத்திற்குக் கத்தரிக்காயைத் தேடி அலைந்தாளாம். * கையில் சாவு, வாயில் கோல். * கையில் தாழ்வடம், மனசிலே கரவடம். * கையில் பணம் இருக்கிறதா என்றால், பணம் இருந்த கை இருக்கிறது என்றானாம். * கையில் பறவையை விட்டுக் காட்டுப் பறவைக்குக் கண்ணி வைக்கலாமா? * கையில் பிடப்பது துளசி மாலை; கட்கத்தில் இடுக்குவது கன்னக்கோல், * கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம் * கையில் பிள்ளையோடு கடலில் விழுந்தாள். * கையில் மஞ்சள் ஆனால் காரியம் மஞ்சூர்தான். * கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அழுவானேன்? * கையில் ஜபமணி கொண்டு மிரட்ட வருகிறாயே! * கையில் ஜபமாலை; கட்கத்தில் கன்னக் கோல். * கையும் இல்லை; காலும் இல்லை; திம் தடாக்கா. * கையும் கணக்கும் சரி. * கையும் களவுமாய்க் கண்டு பிடிக்கிறது. * கையூன்றிக் கரணம் போடவேண்டும். * கையெழுத்துப் போடத் தெரிந்தால் கடனுக்குத்தான் வழி. * கையை அறுத்து விட்டாலும் அகப்பையைக் கட்டிக் கொண்டு திருடுவான். * கையை உடைத்து விட்டவன் தலையை உடைத்தாலும் உடைப்பான். * கையை ஊன்றித்தான் கரணம் போட வேண்டும் * கையை மூடிக் கொண்டிருந்தால் கமுக்கம்; விரலைத் திறந்தால் வெட்டவெளி. * கையை விட்டுத் தப்பினால் காடை காட்டிலே. * கையைக் காட்டி அவலட்சணமா? * கையைச் செட்டியார் குறைத்தால் காலைக் கைக்கோளன் குறைப்பான். * கையைப் பார். முகத்தைப் பார் என்று இருந்தால் காரியம் ஆகுமா? * கையைப் பார்த்து முகத்தைப் பார். * கையைப் பிடித்தால் காலபலன். * கையைப் பிடித்து இழுத்து வராதவள் கண்ணைக் காட்டி அழைத்தால் வருவாளா? * கையைப் பிடித்துக் கண்ணைப் பார்த்து மயிரைப் பிடித்துக் காசு வாங்குவதா? * கையைப் பிடித்துக் கள்ளை வார்த்து மயிரைப் பிடித்துக் காசு வாங்குகிறது. * கையைப் பிடித்துத் தூக்கிவிடு; பிணக் காடாயக் குவிக்கிறேன் என்றானாம். * கைவரிசை இருந்தாலும் மெய்வரிசை வேண்டும். * கைவிரல் கண்ணிலே பட்டால் கையை என்ன பண்ணலாம்? ==கொ== * கொடிக்கு காய் கனமா? * கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம். * கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது. * கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை. * கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா? * கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு. * கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான். * கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா? * கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா? * கொல்லைக்குப் பல்லி, குடிக்குச் சகுனி ஆகாது. * கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது. * கொள்ளைக்குப் போனாலும் கூட்டாகாது. * கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன். ==கோ== * கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை. * கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு. * கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது. * கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு. * கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு. * கோபம் சண்டாளம். * கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா? * கோரைக்‌ கிழங்கும்‌ ஒரு வேளைக்குதவும்‌. * கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா? * கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்? * கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும் * கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும். * கோடி கொடுத்தாலும் பத்தினியின் தாலியை வாங்கமுடியாது. * கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும். == ச == * சக்களத்தி அறுத்தால் தானும் அறுப்பாள் * சக்களத்திக்கு ஆண்பிள்ளை பெற்றால் பொறாமை, மலடிக்கு எவள் பிள்ளை பெற்றாலும் பொறாமை * சக்களத்தி பிள்ளை தலைமாட்டுக் கொள்ளி * சக்களத்தி மாமியார் * சக்கிலித் தெரு நாய் சமயத்துக்கு உதவாது * சக்கிலிப் பெண் நெற்றியிலே குஜ்ஜிலிப் பொட்டைப் பார் * சக்கிலிப் பெண்ணும் சாமைக் கதிரும் பக்குவத்திலே பார்த்தால் அழகு * சக்கிலியன் சாமிக்குச் செருப்படிதான் பூஜை * சக்கிலியன் சாமியைச் செருப்பால் அடித்துக் கும்பிடுவானா? * சக்கு சக்கு என்று பாக்குத் தின்பான். சபை மெச்ச வீட்டிலே வந்து கடைவாய் நக்குவான் * சக்கை போடு போடுகிறான் * சக்தி இருந்தால் செய்; சக்தி இல்லாவிட்டால் சிவனே என்று இரு * சக்தி இல்லா விட்டால் சிவனே என்று கிட * சத்தியம் பயந்து சங்கீதம் * சகசண்டி மாட்டுக்கு இரண்டொரு சூடு: நம் சைவப் பின்னைக்கு மேலெல்லாம் சூடு * சகத்தைக் கெடுத்துச் சுகத்தை வாங்குகிறார் * சகத்தைக் கொடுத்தும் சுகம் வாங்கிக் கொள் * சகதியில் கல்லை விட்டு எறிந்தால் மேலே தெறிக்கும் * சகல தீர்த்தங்களுக்கும் சமுத்திரமே ஆதரவு * சகல நட்சத்திரமும் ஒன்றாய்க் கூடினாலும் சந்திரனுக்கு இணை ஆகுமா? * சகலமும் கற்றவன்தன்னைச் சார்ந்து இரு * சகலன் உறவில் சாண் கொடி பஞ்சமா? * சகுனம் சொன்ன பல்லி கழுநீர்ப் பானையில் விழும் * சகுனம் நன்றாக இருக்கிறது என்று பொழுது விடிகிற வரைக்கும் கன்னம் வைக்கலாமா? * சகுனம் பார்க்கப் போகும்போது மடியில் பூனையைக் கட்டிக் கொண்ட மாதிரி * சகுனம் பார்க்காதவன் காத வழியில் மாண்டான் * சகோதரன் உள்ளவன் படைக்கு அஞ்சான் * சங்கஞ் செடி ஒணானைக் கண்டு சாகிற கிழவியைக் குத்தின கதை * சங்கட சனியனே, சடுதியில் விட்டுத் தொலை * சங்கடமான பிள்ளையைப் பெற்று வேங்கடராமன் எனப் பெயர் வைப்பார் * சங்கட வேதனைக்கெல்லாம் தலையிட்டுக் கொள்கிறதா? * சங்கடப் பாட்டா, தங்கப் பாட்டா? * சங்கரா சங்கரா என்றால் சாதம் வாயில் விழுமா? * சங்கனும் புங்கனும் சந்நியாசிக்கு உதவியா? * சங்கிலே வார்த்தால் தீர்த்தம்; செம்பிலே வார்த்தால் தண்ணீர் * சங்கீதம் தெரியாவிட்டாலும் இங்கிதம் தெரியும் * சங்கு ஆயிரத்தோடு காசி போனாலும் தன் பாவம் தன்னோடே * சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால் பொன்பாளம் வந்தாலும் வந்தது: மண் பாளம் வந்தாலும் வந்தது * சங்கு உடைந்தது; மண் கரைந்தது * சங்கு ஊதாமல் தாலி கட்டுவது உண்டா? * சங்கு ஊதிப் பொழுது விடியுமா? * சங்கு சுட்டாலும் தன் வெண்மை குன்றாது * சங்கு சுட்டாலும் வெண்மை தரும் * சங்கு சூத்து ஆகிறது; ஆண்டி வாய் ஆகிறது * சங்கூதிப் பண்டாரம், அங்கு ஊதி இங்கு வராதே, இங்கு ஊதி அங்கே போ * சங்கைச் சுட்டாலும் மங்குமா நிறம்? * சங்கோசம் விட்டால் சங்கையும் இல்லை * சட்டி ஓட்டை ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி * சட்டி சுட்டது; கை விட்டது * சட்டி திருடும் நாய்க்குப் பெட்டி பணம் எதற்கு? * சட்டி பாலுக்கு ஒரு சொட்டு மோர் பிரை * சட்டி புழைக்கடையிலே; அகப்பை வாசலிலே * சட்டியில் இருந்தால் அல்லவா அகப்பையில் வரும்? * சட்டியோடு அகப்பை தட்டாமல் போகுமா? * சட்டியோடு தின்று பானையோடு கை அலம்புகிறது * சட்டுவம் கறிச் சுவையை அறியுமா? * சட்டைக்காரன் நாயை எட்ட நின்று பார் * சட்டைநாதபுரம் உழவு; சீகாழி இழவு: செம்மங்குடி வறட்டி * சடை கொண்ட இலுப்பையைத் தடிகொண்டு அடித்தாற்போல * சடை கொண்டு வெருட்டல் வேண்டா * சடைத் தம்பிரான் சோற்றுக்கு அழுகிறானாம்; லிங்கம் பஞ்சாமிர்தத்துக்கு அழுகிறதாம் * சடைத் தம்பிரான் தவிட்டுக்கு அழுகிறான்; லிங்கம் பரமான்னத்துக்கு அழுகிறதாம் * சடைத் தம்பிரானுக்குச் சாதம் இல்லாதபோது மொட்டைத் தம்பிரானுக்கு மோர் எங்கே கிடைக்கும்? * சடையைப் பிடித்தால் சந்நியாசி தன்னாலே வருவான் * சண்ட மாருதத்துக்குமுன் எதிர்ப்பட்ட சருகுபோல் * சண்டிக்கு ஏற்ற மிண்டன் * சண்டிக் குதிரைக்கு ஏற்ற மொண்டிச் சாரதி * சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி * சன்டி முறைத்தால் காடு கொள்ளாது * சண்டியிலும் சண்டி சகசண்டி * சண்டைக்குச் சிங்காரம் இல்லை * சண்டை நடந்ததற்குச் சாட்சி என் மகன் இருக்கிறான் * சண்டை பிடிக்கிறவனுக்குக் கூடச் சனிக்கிழமை ஆகாது * சண்டை முகத்திலே உறவா? * சண்டை வந்தது பிராமணா, சோற்று மூட்டையை இறக்கு * சண்டை வருகிறது மாமியாரே, சாதத்தை எடுத்து உள்ளே வையும் * சண்ணி அண்ணாமலை என்று பெயர் இடுவான் * சணப்பன் கையில் அகப்பட்ட சீலைப் பேனைக் கொல்லவும் மாட்டான்; விடவும் மாட்டான் * சணப்பன் வீட்டுக் கோழி தானாக வந்து மாட்டிக்கொள்ளும் * சணப்பன் வீட்டு நாய் சணல் கட்டிலின் மேல் ஏறினாற் போல் * சத்தத்துக்கு அளப்பதற்குமுன் பொதிக்கு அள * சத்தம் பிறந்த இடத்தே சகல கலையும் பிறக்கும் * சத்த மேகங்களும் கூடி நெருப்பு மழை பெய்தாற் போல * சத்தாவரணம் சேவித்தால் செத்தவுடனே வைகுண்டம் * சத்தியத்தில் சிறந்தவன் அரிச்சந்திரன் * சத்தியத்திலே சாமி சாட்சி என்கிற சத்தியம் பெரிது * சத்தியத்துக்கு அரிச்சந்திரன்: சாந்தத்துக்குத் தருமராஜன் * சத்தியத்துக்கு இல்லாத பிள்ளை துக்கப்பட்டு அழப்போகிறானா? * சத்திய நெறியே சன்மார்க்க நெறி * சத்தியம் இல்லாத வாய் போலே * சத்தியம் தலை காக்கும் * சத்தியம் நண்ணலை. சாவைத் தினம் நினை * சத்தியம் வெல்லும், அசத்தியம் கொல்லும் * சத்தியமே கொல்லும்; சத்தியமே வெல்லும் * சத்தியமே ஜயம் * சத்திய வாசகன் சமஸ்த சற்குணன் * சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா? * சத்திரத்தில் இன்னும் நுழைய விடவில்லை; இலை கிழிசல் என்றானாம் * சத்திரத்தில் சந்நியாசிக்குப் போஜனம், மடத்தில் நித்திரை * சத்திரத்தில் சாப்பாடு; சாவடியில் நித்திரை * சத்திரத்தில் சாப்பாடு; மடத்தில் நித்திரை * சத்திரத்தில் சோறு இல்லை என்றால் இலை பீற்றல் என்றானாம் * சத்திரத்துக் கூழுக்கு நாயக்கர் அப்பனையோ? * சத்திரத்துச் சாப்பாட்டுக்கு அப்பணையங்கார் சிபாரிசா? * சத்திரத்துச் சாப்பாட்டுக்குச் தாத்தையங்கார் அப்பனையா? * சத்திரத்துச் சாப்பாட்டுக்கு நாயின் சிபாரிசா? * சத்திரத்துச் சோற்றுக்குத் தாத்தையங்கார் அப்பணையா? * சத்திரத்து நாயை அடித்தால் கேட்பார் யார்? * சத்திரத்துப் பாட்டுக்குத் தெருப்பாட்டு மேலா? * சத்திரத்தைக் கட்டி நாயைக் காவல் வைத்தது போல * சத்திரா போஜனம்; மடத்தில் நித்திரை * சத்துக்களோடு சத்துக்கள் சேர்வர்: சந்தனத்தோடு கர்ப்பூரம் சேரும் * சத்துருக்களையும் சித்தமாய் நேசி * சத்துரு பகை; மித்துரு வதை * சத்துரு பொறுமை தனக்கே தண்டனை * சத்துருவைச் சார்ந்து கொல்ல வேண்டும் * சத்ரா போஜனம், மடா நித்ரா * சதகோடி சங்கத்திலே மொட்டைத் தாதனைக் கண்டாயோ என்கிறது போல * சத சுவோகீ ஏக பண்டித * சதி செய்கிறவர்களுக்குச் சமர்த்தர் என்று பெயர் * சதுரக் கன்னியில் அகில் உண்டாகும் * சதை இல்லாமல் கத்தி நாடுமா? * சதை உள்ள இடத்திலே கத்தி நாடும் * சதை கண்டு கத்தி நாட வேண்டும் * சந்தடி சாக்கிலே கந்தப் பொடி காற்பணம் * சந்தம் இல்லாக் கவிக்கு அந்தம் இல்லை * சந்தனக் கட்டை தேய்ந்தது; சாதமும் வடித்தாச்சு * சந்தனக் கட்டை தேய்ந்தால் கந்தம் குறையுமா? * சந்தனக் கருடன் வந்த வழி போனால் கங்கையில் போட்டதும் தன் கைக் கூடும் * சந்தனக் குறடு தேய்ந்தாலும் மணம் குறையாது * சந்தனக்கோல் குறுகினாலும் பிரப்பங் கோல் ஆகாது * சந்தனம் கொடுத்த சரஸ்வதி * சந்தனம் தெளித்த கையாலே சாணி தெளிக்கலாச்சுது * சந்தனம் தேய்ப்பவன் அலைவது போலே * சந்தனம் மிகுந்தால் பிட்டத்தில் பூசிக் கொள்கிறதா? * சந்தன மரம் போல் பிள்ளை; சம்பங்கிப்பூப் போல் பெண் * சந்தன வாள் போல * சந்தனவிருட்சக் காட்டிலே சர்ப்பம் இருக்கிறது போல * சந்திக்குச் சந்தி நாய் அடிபடுவது போல * சந்திக்கும் பொறையாற்றுக்குமாக அலையாதே * சந்தி சிரிக்கிறது * சந்தியில் அடித்தால் சாட்சிக்கு ஆர் வருவார் * சந்தியில் நிற்கிறது * சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா? * சந்திர சூரியர் உள்ள வரைக்கும் * சந்திர சூரியர் உள்ள வரைக்கும் வார்த்தை பிசகான் * சந்திரன் இல்லாத வானம் போல * சந்திரன் இல்லா வானமும் மந்திரி இல்லா அரசும் பாழ் * சந்திரன் குளிர்ச்சியாய்க் காய்ந்தாலும் சூரியனையே உலகத்தார் நாடுவார்கள் * சந்திரன் கோயிலிலும் விளக்கு எரிகிறது * சந்திரன் சண்டாளன் வீட்டிலும் பிரகாசிக்கிறான் * சந்திரன் மறைந்த பின் நிலா நிற்குமா? * சந்திரனுக்கு உண்டோ சண்டாளன் வீடு? * சந்திரனுக்குச் சரியாக முட்டை தட்டினாளாம் * சந்திரனுக்கும் களங்கம் உண்டு * சந்திரனைப் பார்த்த கண்ணுக்குச் சனியனைப் பார்த்தாற் போல * சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தாற் போல * சந்தில் சிந்து பாடுகிறான் * சந்திலே சமாராதனை செய்ய முடியுமா? * சந்துக்குச் சந்து சதிராட்டம் * சந்து விட்டால் வந்து விட்டேன் * சந்தை இரைச்சலில் குடியிருந்து கெட்டேனே * சந்தைக்குப் போகிறவன் வழித்துணை வாரான் * சந்தைக்குப் போய் வந்த நாய் போல * சந்தைக்கு வந்தவர்கள் வழிக்குத் துணையா? * சந்தைக் கூட்டம், பொம்மலாட்டம் * சந்தைக் கோபாலம்; தந்தப் பல்லக்கா? * சந்தையில் அடித்ததற்குச் சாட்சி ஏன்? * சந்தையில் அடிபட்டவனுக்குச் சாட்சி ஆர்? * சந்தையில் கும்பிட்டால் வாழ்த்துவாரும் இல்லை; வைவாரும் இல்லை * சந்தோஷம் சாண் பலம் * சந்தோஷ வார்த்தை சமயத்தில் வந்தது * சந்தியாசம் சகல நாசம் * சந்நியாசிக்கு என்ன சம்சாரக் கவலை? * சந்நியாசிக்குச் சாப்பாட்டுக் கவலையா? * சந்நியாசிக்கும் பழைய குணம் போகாது * சந்நியாசிக்கும் போகாது ஜாதி அபிமானம் * சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்துச் சம்சாரம் மேலிட்டது போல * சந்நியாசி கோவணம் கட்டினது போல * சந்நியாசி செய்த சத்திக்குள் அகப்பட்ட சடை * சந்நியாசி பயணம் திண்ணை விட்டுக் குதிப்பதுதான் * சந்நியாசி பிரயாணம் திண்ணை விட்டு இறங்கினால் ஆச்சு * சந்நியாசி பூனை வளர்த்தது போல * சந்நியாசியார் சந்தையிலே கண்டவனே என்று ஆட்டினார்: தவசிப் பிள்ளை சந்நியாசியால் கண்டவனே என்று ஆட்டினான் * சந்நியாசியைக் கடித்த நாய்க்குப் பின்னாலே நரகமாம்; சந்நியாசிக்கு முன்னே மரணமாம் * சந்நியாசி வீடு திண்ணையிலே * சப்தப் பிரம்மத்தில் அசப்தப் பிரம்மம் பிரகாசிக்கிறது * சப்தப் பிரம்மம் பரப்பிரம்மம், இரண்டையும் அறிய வேண்டியது * சப்தம் பிறந்த இடத்திலே சகல கலைகளும் பிறக்கும் * சப்த மேகங்களும் ஒன்று கூடி நெருப்பு மழை பெய்தாற்போல * சப்பரத்துக்கு முன்னே வந்தாயா? பின்னே வந்தாயா? * சப்பாணிக்கு நொண்டி குடுகுடுப்பை * சப்பாணிக்கு நொண்டி சண்டப் பிரசண்டன் * சப்பாணிககு விட்ட இடத்திலே கோபம் * சப்பாணி மாப்பிள்ளைக்கு சந்து ஒடிந்த பெண்டாட்டி * சப்பாணி வந்தால் நகர வேணும்; பல்லக்கு வந்தால் ஏறவேணும் * சப்பை கட்டுகிறான் * சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன் * சபைக் கோழை ஆகாது * சபையிலே நக்கீரன்; அரசிலே விற்சேரன் * சம்சாரக் குட்டு, வியாதி ரெட்டு * சம்சாரக் குட்டு வெளியிட்டால் நஷ்டம், சம்சாரம் சாகரம் துக்கம் * சம்சாரம் பெருத்துப்போச்சு என்று சாலுக்குக் குறுணி விதைத்தானாம் * சம்சாரி அகத்திலே சாதத்துக்கு என்ன குறைவு? * சம்பத்தும் விபத்தும் கூடவே இருக்கின்றன * சம்பந்தன் தன்னைப் பாடுவான்; அப்பன் என்னைப் பாடுவான்; சுந்தரன் பொன்னைப் பாடுவான் * சம்பந்தி கிருகஸ்தன் வந்தான்; தவலையை எடுத்து உள்ளே வை * சம்பந்தியும் சம்பந்தியும் ஒன்று; கொட்டு மேளக்காரன் தனி * சம்பந்தியும் சம்பந்தியும் ஒன்று; கொட்டு மேளக்காரனுக்குக்கோணக் கோண இழுக்கும் * சம்பந்தியும் சம்பந்தியும் சத்திரத்துக்குப் போனால் ஏச்சும் இல்லை; பேச்சும் இல்லை * சம்பந்தி வாய்க்கும் மாப்பிள்ளை குணத்துக்கும் இன்னும் ஒரு பெண்ணை இழுத்து விட்டாளாம் * சம்பளம் அரைப்பணம் ஆனாலும் சலுகை இருக்க வேண்டும் * சம்பளம் இல்லாத சேவகனும் கோபம் இல்லாத எசமானும் * சம்பளம் இல்லாத மந்திரி; கோபம் இல்லாத ராஜா * சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா * சம்பளம் இல்லாமல் ஆஜர் * சம்பளம் குறைந்தாலும் சலுகை இருக்க வேண்டும் * சம்பளம் சனிக்கிழமை; பெண்டாட்டி பேர் புதன் கிழமை * சம்பள விதத்திலேயா குண்டு படுகிறது? * சம்பா விளைந்து காய்ந்து கிடக்கிறது: உண்பார் இல்லாமல் ஊர்க்குருவி மேய்கிறது * சம்மன் இல்லாமல் ஆஜர் * சமண சந்தியாசிக்கும் வண்ணானுக்கும் சம்பந்தம் என்ன? * சமண சந்நியாசி கையில் அகப்பட்ட சீலைப்பேன் போல * சமய சஞ்சீவி * சமயத்திலே காலைப்பிடி, தீர்ந்து போனதும் தலையைப் பிடி * சமயம் வாய்த்தால் களவு செய்வான் * சமயம் வாய்த்தால் நமனையும் பலகாரம் செய்வான் * சமயம் வாய்த்தால் நமனையும் வெல்லலாம் * சமர்த்தன் சந்தைக்குப் போனால் கொள்ளவும் மாட்டான், கொடுக்கவும் மாட்டான் * சமர்த்தன் பெண் சதியும் சோரம் போவாள் * சமர்த்தனுக்கு ஏதும் பெரிது அல்ல * சமர்த்தி என்ன பெற்றாள்? சட்டிச் சோறு தின்னப் பெற்றாள் * சமர்த்தி என்ன பெற்றாள்? தலைச்சன் பெண் பெற்றாள் * சமர்த்தில் குண்டு பாயுமா? * சமர்த்தில் வாழ்ந்தவர்களும் இல்லை; அசட்டில் கெட்டவரும் இல்லை * சமர்த்து உள்ள சேவகனுக்குப் புல்லும் ஆயுதம் * சமர்த்துக்கிட்டே பேசி ஜயிக்கலாம்; அசட்டுக்கிட்டே சண்டை போட்டாலும் முடியாது * சமர்த்துச் சனியன் * சமர்த்து சந்தியில் நிற்கிறது * சமாசாரம் தெரியாமல் அமாவாசைக்குப் போகிறான் * சமிக்ஞை அறியாதவன் சதுரன் அல்ல * சமிக்ஞை காட்டிச் சண்டைக்கு அழைக்கிறான் * சமுத்திர அலைகள் ஓயப் போகிறதும் இல்லை; தம்பி தலை முழுகித் தர்ப்பணம் பண்ணப் போகிறதும் இல்லை * சமுத்திரத்தில் ஏற்றம் போட்டது போல் இருக்கிறது * சமுத்திரத்தில் ஏற்றம் போட்டுத் தண்ணீர் இறைத்தாற்போல * சமுத்திரத்திலே பாய்கிற நதி வயலிலே பாயட்டுமே என்றாற் போல் * சமுத்திரத்திலே பெருங்காயம் கரைத்தது போல * சமுத்திரத்துக்கும் சாண் துண்டுக்கும் எம்மாத்திரம்? * சமுத்திரத்து ஜலத்தை முட்டை கொண்டு அளந்தாளாம் * சமுத்திரம் பொங்கினால் கிணறு கொள்ளுமா? * சமுத்திரமும் சாக்கடையும் சரியா? * சமுத்திர வன்கணன் சண்டாளன் * சமுத்திர ஜலம் தாகத்துக்கு உதவாது * சமைக்கப் படைக்கத் தெரியாமல் போனாலும் உடைக்கக் கவிழ்க்கத் தெரியும் * சமையல் தெரிந்தவனுக்கு உமையவள் உள்ளங்கையில் * சமையல் பாகம் தெரிந்தவளுக்கு உமையவள் பாகன் உள்ளங்கையில் * சமையல் வீட்டிலே நாய் நுழைந்தாற் போல * சமையல் வீட்டிலே முயல் தானே வந்தது போல * சர்க்கரை என்றால் தித்திக்குமா? * சர்க்கரை என்று எழுதி நக்கினால் தித்திக்குமா? * சர்க்கரை தின்று பித்தம் போனால் கசப்பு மருந்து ஏன் தின்ன வேண்டும்? * சர்க்கரை தின்னக் கூலியா? * சர்க்கரை தொண்டை மட்டும்; சவ்வாது கண்ட மட்டும் * சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பெய்தது போல * சர்க்கரைப் பாகுத் தோண்டியிலே தாழ மொண்டாலும் தித்திப்பு: மேலே மொன்டாலும் தித்திப்பு * சர்க்கரைப் பொங்கலுக்கு ஒரு சத்தியமா? * சர்க்கரைப் பொங்கலுக்குப் பத்தியம் இல்லை; சாண்வயிறு நிரம்பி விட்டால் வைத்தியம் இல்லை * சர்க்கரைப் பொம்மையில் எந்தப் பக்கம் தித்திப்பு? * சர்க்கரை முத்துக்குட்டி சாதம் குழைந்து போச்சு: எடுடா பல்லக்கை; பிறந்தகத்துக்குப் போகிறேன் * சர்க்கரையும் தேனும் சிற்றப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா * சர்க்கரையும் நெய்யும் சேர்ந்தால் கம்பளத்தையும் தின்னலாம் * சர்க்கரையும் மணலும் சரி ஆகுமா? * சர்க்காரான் பணத்தை வெட்டியான் சுமந்தானாம் * சர்ச்சனர் உறவு சர்க்கரைப் பாகுபோல. * சர்த்திக்கும் பிள்ளை வர்த்திக்கும் * சர்ப்பத்தின் வாய்த் தவளை போல * சர்வ வில்லங்க சித்தி * சரக்குக் கண்ட இடத்தில் பிள்ளைக்கு அமிழ்தம் கொடுக்க நினைக்கிறது போல * சரக்குக் கண்ட இடத்திலே பிள்ளை பெறுகிறது போல * சரக்கு மலிந்தால் கடைக்கு வரும் * சரத்தைப் பார்த்து பரத்தைப் பார் * சரசம் மிஞ்சி ரவிக்கையில் கை போடக் கூடாது * சரடு ஏறுகிறது கந்தைக்கு லாபம் * சரப்பளி சந்திரஹாரம் தாங்க முடியவில்லை * சரம் பார்த்தவனைச் சருகாதே; பட்சி பார்த்தவனைப் பகைக்காதே * சரம் பார்ப்பான், பரம் பார்ப்பான் * சரமாரியாய்ப் பொழிகிறான் * சரி விற்கக் குழி மாறுகிறதா? * சரீரப் பிரயாசை எதற்கு? சாண் வயிற்றுக்குத்தான் * சருகு அரிக்க நேரம் இருந்ததன்றிக் குளிர் காய நேரம் இல்லை * சருகு உதிர்ந்த மரம் போல * சருகைக் கண்டு தழல் அஞ்சுமா? * சல்லடைக் கண் போலச் சில்லுச் சில்லாய்த் துளைக்கிறது * சல்லி கட்டின மாட்டுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? * சல்லி மோதக் கல்லி பறிக்கிறது * சல்லிய சார்த்தியம் * சல்லிவேர் அறக் கல்லி பறக்கிறது * சலித்துக் கொடுத்த காரியம் சந்தோஷம் வந்தால் தீருமா? * சலிப்போடு சம்பந்தி இழுத்தால் இலைப் பருக்கை * சலுகை உள்ள மாடு படுகை எல்லாம் மேய்ந்ததாம் * சவ்வாதில் மயிர் வாங்கினது போல * சவத்துக்கு அழுவாரும் தம் துக்கம் * சவலைப் பிள்ளை முலைக் குத்து அறியுமா? * சவுடால் பொடி மட்டை, தட்டிப் பார்த்தால் வெறு மட்டை * சவுண்டிக்குச் சாப்பிட்டவன் இருக்கச் செத்தது பொய்யா * சளி பிடிக்காத மூக்கு இல்லை; சாராயம் குடிக்காத நாக்கு இல்லை * சளி பிடித்ததோ. சனி பிடித்ததோ? * சளுக்கன் தனக்குக் சத்துரு; சவுரிக்காரனுக்கு மித்துரு * சற்குருவைப் பழித்தோர் சாய்ந்தே போவார் * சற்சனர் உறவு சர்க்கரைப் பாகு * சற்புத்திரன் இருக்கிற இடத்திலே தறிதலையும் இருக்கிறது * சன்னதம் குலைந்தால் கும்பிடு எங்கே? * சன்னம் சன்னம் பர்வதம் * சனத்தோடு சனம் சேரும்: சந்தனத்தோடு கர்ப்பூரம் சேரும் * சனப்பலம் இருந்தால் மனப் பலம் வரும் * சனமருளோ, சாஸ்திர மருளோ? * சனி ஒழிந்தது; சங்கடம் தீர்ந்தது * சனிக்கிழமையும் புதன் கிழமையும் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பான் * சனி நீராடு * சனிப்பயிர் சாத்திரத்துக்கு உதவும் * சனிப் பிணம் தனிப் போகாது * சனிப் பிணம் துணை தேடும் * சனிப் பெருக்கு * சனி பிடித்த நாரை கெளிற்றைப் பிடித்து விழுங்கினாற் போல * சனியன் தொலைந்தது * சனியன் பிடித்தவள் சந்தைக்குப் போனாலும் புருஷன் அகப்படமாட்டான் * சனியன் பிடித்தவனுக்குச் சந்தையிலும் கந்தை அகப்படாது * சனியனை அடிமடியில் கட்டியது போல * சனியனை விலைக்கு வாங்கினது போல * சனியும் புதனும் தங்கும் வழி போகக் கூடாது * சனியும் புதனும் தன்னை விட்டுப் போகாது * சனியைப் போலக் கொடுப்பவனும் இல்லை: சனியைப்போலக் கெடுப்பவனும் இல்லை * சஜ்ஜனர் உறவு சர்க்கரைப் பாகுபோல ==சா== *சாக்கடைக்குப் போக்கிடம் எங்கே? *சாக்கடைக் கும்பிக்குப் போக்கிடம் எங்கே? *சாக்கடைக்குப் போக்கிடம் இல்லை *சாக்கடைச் சேறு என்றாலும், சக்களத்தி என்றாலும் சரி *சாக்கடைப் புழு என்றாலும் சக்களத்தி என்றாலும் போதும் *சாக்கடைப் புழு என்றாலும் சக்களத்தியை வெல்லப் போகாது *சாக்கடைப் புழுவிற்குப் போக்கிடம் எங்கே? *சாக்கிரி செய்யப் போனாலும் போக்கிரித் தனம் குறைவாது *சாக்குப் போக்குச் சொல்லுதல் *சாக்கும் போக்கும் ஏற்கா ஐயன்முன் *சாக்கோ, நாக்கோ, அம்மையார் வாக்கோ? * சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் * சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்? * சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன். * சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம். * சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன். * சாண் ஏற முழம் சறுக்கிறது. * சாது மிரண்டால் காடு கொள்ளாது. * சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம். * சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார். * சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது. ==சி== * சித்திரை உழவு பத்தரை மாற்றுத் தங்கம். ==சீ== * சீரைத் தேடின் ஏரைத் தேடு ==சு == * சுக்கிர உதயத்தில் தாலி கட்டி, சூரிய உதயத்திற்குள் அறுத்தாள். * சுக துக்கம் சுழல் சக்கரம். * சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும். * சுட்ட சட்டி அறியுமா சுவை. * சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா? * சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம். * சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும். * சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு. * சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே * சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை. * சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி. * சுமங்கலிப் பெண்ணுக்கு அவள் கழுத்துத்தாலி தானே எல்லாம். * சுமங்கலி காலடி பட்ட வீடு போல * சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா? * சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும். * சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான். ==சூ== * சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது. ==செ== * செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.? * செக்கானிடம் சிக்கின மாடும் பார்ப்பானிடம் சிக்கிய ஆளும் உருப்படமாட்டார்கள் * செக்கில் அரைபட்ட எள்ளுப் போல * செக்கில் அரைபட்ட எள் திரும்ப முழுசு ஆகுமா? * செக்கில் அரைபட்ட தேங்காய் பிண்ணாக்கு ஆவது போல * செக்கு அடிக்கும் தம்பூருக்கும் ஒத்து வருமா? * செக்கு அடி முண்டம் போல உட்கார்ந்திருக்கிறான் * செக்கு அடி முத்தி, எனக்கு என்ன புத்தி? * செக்கு அளவு பொன் இருந்தாலும் செதுக்கி உண்டால் எத்தனை நாளுக்குக் காணும்? * செக்கு உலக்கைபோல் நிற்கிறான் * செக்கு உலக்கையை விழுங்கினவனுக்குச் சுக்குக் கஷாயம் மருந்து ஆமா? * செக்கு என்றும் சிவலிங்கம் என்றும் தெரியாதா? * செக்குக் கண்ட இடத்தில் எண்ணெய் தேய்த்துச் சுக்குக் கடை இடத்தில் பிள்ளை பெறுவது * செக்குக்கு ஏற்ற சிவலிங்கம் * செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன் * செக்குக்கு மாடு கொடுத்தாலும் கொடுக்கலாம்; சீவலப்பேரியில் பெண் கொடுக்கக் கூடாது * செக்கு நக்குகிற தம்பிரானே, உன் திருவடிக்குத் தண்டம்; அந்தண்டை நக்குடா பிள்ளாய்; ஐசுவரியம் பெருகி இருப்பாய், * செக்கு நக்குகிற தம்பிரானே, தண்டம்; நீ தென்புறம் நக்கு; நான் வடபுறம் நக்குகிறேன் * செக்கும் சிவலிங்கமும் தெரியாதா? * செக்குமாட்டைக் கவலையிலே கட்டினாற் போல * செக்குமாடு போல் உழைக்கிறான் * செக்கை நக்குகிற தம்பிரானே, தண்டம், நீ தென்புறம் நக்கு;நான் உட்புறம் நக்குகிறேன் * செக்கை வளைய வரும் எருதுகளைப் போல் * செக்கை விழுங்கிவிட்டுச் சுக்குத் தண்ணீர் குடித்தாற் போல * செங்கதிர் முன்னே வெண்கதிர் அடங்கினது போல * செங்கோல் அரசனே தெய்வம் ஆவான் * செங்கோல் ஓங்குபவன் திரித்துவத் தேவன் * செங்கோல் கோணினால் எங்கும் கோணும் * செங்கோலுக்கு முன் சங்கீதமா? * செஞ்சி அழிந்தது; சென்னை வளர்ந்தது * செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்? * செட்டிக்கு இறுத்துப் பைக்கும் இறுத்தேன் * செட்டிக்கு உறக்கம் உண்டு; வட்டிக்கு உறக்கம் இல்லை * செட்டிக்கு எதற்குச் செம்புச் சனியன்? * செட்டிக்கு ஏன் சென்மச் சனியன்? * செட்டிக்கு ஒரு சந்தை; திருடனுக்கு ஓர் அமாவாசை * செட்டிக்கு ஒரு தட்டு; சேவகனுக்கு ஒரு வெட்டு * செட்டிக்குத் தெற்குச் செம்புச் சனியன் * செட்டிக்கும் பயிருக்கும் சென்மப் பகை * செட்டிக்கும் மட்டிக்கும் சென்மப் பகை * செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை * செட்டிகள் மாடு மலை ஏறி மேயுமா? * செட்டி கப்பலுக்குச் செந்தூரான் துணை * செட்டி கூடிக் கெட்டான்; சேணியன் பிரிந்து கெட்டான் * செட்டி கெட்டால் பட்டு உடுத்துவான் * செட்டி கொடுத்துக் கெட்டான் * செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ? * செட்டி சிதம்பரம், * செட்டி சுற்றாமல் கெட்டான்; தட்டான் தட்டாமல் கெட்டான் * செட்டி நீட்டம் குடி தலையிலே * செட்டி நட்டம் தட்டானில்; தட்டான் நட்டம் ஊர்மேலே * செட்டிப் பிள்ளையோ? கெட்டிப் பிள்ளையோ! * செட்டி பட்டினி, கால்பணம் சொட்டினான் * செட்டி படை வெட்டாது; செத்த பாம்பு கொத்தாது * செட்டி படை வெல்லுமா? சேற்றுத் தவளை கடிக்குமா? * செட்டி பணத்தைக் குறைத்தான்; சேணியன் நூலைக் குறைத்தான் * செட்டி பிள்ளை கெட்டி * செட்டி புறப்படப் பட்டணம் முடியும் * செட்டி போன இடம் எல்லாம் வட்டம் காற்பணம் * செட்டி மகன் கப்பலுக்குச் செந்துாரான் துணை * செட்டி முறை எட்டு முறை; எட்டு முறையும் கெட்ட முறை * செட்டியார் கப்பலுக்குத் தெய்வமே துணை * செட்டியார் பிணம் சீத்தென்று போயிற்று * செட்டியார் பிள்ளை செல்லப் பிள்ளை ஆனால் படைக்குப் போகிற நாயக்கரைப் பயமுறுத்தலாமா? * செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும் * செட்டியாருக்கு ஒரு காலம்; சேவகனுக்கு ஒரு காலம் * செட்டியாரே, செட்டியாரே என்றால் சீரகம் பண எடை முக்காற் பணம் என்கிறான் * செட்டியாரே, செட்டியாரே என்றால் சீரகம் மணக்கிறது என்பாள் * செட்டியாரே, வாரும்; சந்தையை ஒப்புக் கொள்ளும் * செட்டியும் தட்டானும் ஒன்று; கட்டிப் புரண்டாலும் தனி * செட்டியை நீலி தொடர்ந்தது போல * செட்டி வீட்டில் பணம் இருக்கிறது; ஆல மரத்தில் பேய் இருக்கிறது * செட்டி வீட்டு நாய் சேர் காத்திருந்தது போல * செட்டி வீட்டு நாயும் கணக்குப் பார்த்துக் கடிக்கும் * செட்டி வெள்ளரிக்காய் என்றால் நரி நொட்டை விட்டுத் தின்னுமாம் * செட்டுக்கு ஒரு தட்டு; தேவடியாளுக்கு ஒரு மெட்டு * செட்டும் கட்டுமாக வாழ்ந்தான் * செடி இல்லாத குடி போல * செடி கண்டு பேளாதான் வாழ்க்கை தடி கொன்ட நாயோடு ஒக்கும் * செடியில் இருக்கிற ஓணானை மடியில் கட்டிக் கொண்டு குடைகிறது குடைகிறது என்றாள் * செடியில் வணங்காதது மரத்தில் வணங்குமா? * செடியை வைத்துக் கொண்டு விலை கூறலாமா? * செண்ணூருக்குப் போகிறேன்; செம்மை உண்டா என்ற கதை * செத்த அன்று வா என்றால் பத்தன்று வருவான் * செத்த ஆட்டுக்குக் கண் பெரிது; தாய் இல்லாப் பிள்ளைக்கு வயிறு பெரிது * செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம் * செத்த ஆடு காற் பணம்; சுமை கூலி முக்காற் பணம் * செத்த இடத்தில் புல் முளைத்துப் போகும் * செத்தது செத்தாயே, செட்டி குளத்தில் விழுந்து சாகலாமா? * செத்த நாய் ஊதினாற் போல * செத்த நாய் செருப்பைக் கடித்தது போல, * செத்த நாய் திரும்பக் கடிக்காது * செத்த நாயில் உண்ணி கழன்றது போல * செத்த நாயை இழுத்து எறிவது போல * செத்த பாம்பு வருகிறதே அத்தை, நான் மாட்டேன் என்றதைப் போல * செத்த பாம்பை அடிப்பது எளிது * செத்த பாம்பை ஆட்டுகிறான் * செத்த பாம்பை ஆட்டுவாளாம் வித்தைக்காரப் பெண் பிள்ளை * செத்த பாம்பை எட்ட நின்று அடிப்பான், சீனத்து அதிகாரி * செத்த பாம்பை எட்டித் தள்ளி நின்று அடிக்கும் தீரன் * செத்த பிணத்திற் கடை, உற்றார்க்கு உதவாதவன் * செத்த பிணத்துக்கு அருகே நாளைச் சாகும் பிணம் அழுகிறது * செத்த பிணத்துக்கு இனிச் சாகும் பிணம் அழுகிறது * செத்த பிணத்துக் கண் ஏன்? சிவசிவ ஆண்டிக்குப் பெண் ஏன்? * செத்த பிணத்தைச் சுற்றித் திரிந்தாற் போல * செத்த பிறகே செய்தவனுக்குச் செய்கிறது? * செத்த பிறகா செல்வம் அநுபவிக்கிறது? * செத்தபின் எப்படிப் போனால் என்ன? * செத்தபின் வீட்டில் கெட்டவன் யார்? * செத்த மாட்டை அறுக்காத கத்தி சொத்தைக் கத்தரிக்காயை அறுக்கும் * செத்த மாடு புல் தின்னுமா? * செத்தவன் இருக்கச் சவுண்டி சாப்பிட்டது நிஜம் என்பது போல் * செத்தவன் உடலம் சுமந்தவன் கண்மேலே * செத்தவன் உடைமை இருந்தவனுக்குக் கிடைக்கும் * செத்தவன் கண் கடாக்கண்; இருந்தவன் கண் இல்லிக்கண் * செத்தவன் கண் செந்தாமரைக் கண்; இருக்கிறவன் கண் நொள்ளைக் கண் * செத்தவன் கண் பெரிய கண் * செத்தவன் காதில் சுக்கு வைத்து ஊதினாற் போல * செத்தவன் கையில் வெற்றிலை பாக்குக் கொடுத்த சம்பந்தம் * செத்தவன் சாட்சிக்கு வருவது இல்லை * செத்தவன் செந்தாமரைக் கண்ணன் * செத்தவன் தலை கிழக்கே இருந்தால் என்ன? மேற்கே இருந்தால் என்ன? * செத்தவன் தலையில் எத்தனை வண்டி ஏறினால் என்ன? * செத்தவன் நான் இருக்கச் சவுண்டி சாப்பிட்டவன் நான் என்றானாம் * செத்தவன் பாரம் சுமந்தவன் தலையில் * செத்தவன் பிழைத்தால் வெற்றி கொள்கிறது ஆர்? * செத்தவன் பிட்டத்தில் நெய் எடுத்துத் திருவண்ணாமலைக்கு விளக்கு ஏற்று * செத்தவன் பிட்டம் தெற்கே கிடந்தால் என்ன? வடக்கே கிடந்தால் என்ன? * செத்தவன் பிள்ளை இருககிறவனுக்கு அடைக்கலம் * செத்தவன் பெண்டாட்டியை இருந்தவன் கொண்டது போல * செத்தவன் பெண்டினைக் கட்டினாலும் விட்டவன் பெண்டினைக் கட்டக் கூடாது * செத்தவன் வாயிலே மண்; இருந்தவன் வாயிலே சோறு * செத்தவன் வீட்டில் கெட்டிவன் யார்? * செத்தவன் வீட்டில் பாடுபட்டவர் ஆரோ? * செத்தன்று வா என்றால் பத்தன்று வருவான் * செத்தாருக்கு உவமானம் வையகத்தில் இல்லையா? * செத்தாரைச் சாவார் சுமப்பார்கள் * செத்தால் செடியைக் கா; பிழைத்தால் வீட்டைக் கா * செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு * செத்தால் பிழைக்க மாட்டான், * செத்துக் கிடக்கிற பிணத்தைக் கண்டால் சிறுக்கச் சிறுக்க வெட்டுவேன் என்ற கதை * செத்துச் சுண்ணாம்பாய்ப் போகிறேன் * செத்துத் தெய்வமாய் நிற்கிறாள் * செத்துப் போகும் போது தலையில் கட்டிக் கொண்டு போகிறானோ? * செத்துப் போன தாதன் மொட்டுப் போல முளைத்தான் * செத்துப் போன பசுவைக் கெட்டுப் போன பாப்பானுக்குத் தாரை வார்த்த கதை * செத்துப் போன பாட்டின் இருந்தால் தாடியைப் பிடித்துக் கொண்டு தொங்கலாம் * செத்துப் போன பாட்டி இருந்தால் கூட இரண்டு சிற்றப்பனைப் பெற்றிருப்பாள் * செத்துப் போன பார்ப்பானுக்குச் செட்டிப் பெண்ணைக் கொடுத்தாளாம் * செத்துப் போன பிறகு நித்திய சிராத்தம் செய்கிறது * செத்துப் போன மாடு உயிரோடு இருந்தால் உடைந்து போன கலயத்தால் ஒன்பது கலயம் கறப்பேன் என்றாளாம் * செத்தும் கொடுத்தான் சீதக்காதி * செத்தும் கொடுத்தான் சீவரத்துக் கிராமணி * செத்தும் சாகாதவன் தியாகம் கொடுப்போன் * செத்தைக்குள் கிடந்ததைத் தூக்கி மெத்தை மேலே வைத்தால் அது செத்தையைச் செத்தையைத்தான் நாடும் * செத்தைக் கூலி கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம் * செந்தழலை முன்றானையில் முடியலாமா? * செந்நாய்க் கூட்டத்துக்குச் சிறுத்தையும் அஞ்சும் * செந்நாயைச் செருப்பால் அடி; கருநாயைக் கழியால் அடி * செப்படி வித்தை எப்படிச் செய்கிறான்? * செப்படி வித்தை எப்படிப் போவேன்? * செப்பு இல்லாக் குடிக்கு அப்பாப் பட்டமா? * செப்புக் கொட்டப்பா, செப்புக் கொட்டு, அப்பம் தின்னலாம் செப்புக் கொட்டு, அவல் இடிக்கலாம் செப்புக் கொட்டு * செப்பும் பந்தும் போல * செம்பிலும் இல்லை; கல்லிலும் இல்லை * செம்பால் அடித்த காசும் கொடாத லோபி * செம்பிலும் இல்லை; கல்லிலும் இல்லை * செம்பரம்பாக்கத்தான் பெயர் பெற்றான்; மாங்காட்டான் நீர் பெற்றான் * செம்பாடு அடித்தால் என் பாடு தீர்ந்தது * செம்பு, கம்பளி, எம்பெருமான், பாதேயம், பாதரக்ஷணம் * செம்பு நடமாடினால் குயவன குடி போவான * செம்பொற் சோதி, தம்பிரான சடையைச் சோதி * செம்போத்து உண்டானால் சம்பத்து உண்டாகும் * செம்மறி ஆடு வெளியே ஓடத் திருட்டு ஓநாய் உள்ளே * செம்மறிக் குளத்தான் சுரைக் கொடிக்குப் பாத்தி வெட்டியதுபோல * செய்கிறது எல்லாம் செய்து விட்டுக் கழுநீர்ப்பானையில் கை அலம்பினாளாம் * செய்கிறது சிரைக்கிற வேலை; நினைக்கிறது சிரஸ்தார் வேலை * செய்கிறதை விட்டு விட்டுச் சினையாட்டுக்கு மயிர் பிடுங்குகிறான் * செய்கிறவர்களுக்குச் சொல்லத் தெரியாது; சொல்கிறவர்களுக்குச் செய்யத் தெரியாது * செய்த தீவினை செய்பவர்க்கே * செய்த நன்றியைச் செத்தாலும் மறக்கலாமா? * செய்த பாவத்தைச் சொல்லிக் கழி * செய்தவம் மறந்தால் கைதவம் ஆகும் * செய்தவர் பாவம் சொன்னவர் வாயோடே * செய்தவனுக்குச் செய்ய வேணும்; செத்தவனுக்கு அழ வேணும் * செய்த வினை செய்தவர்க்கே எய்திடும் * செயவன திருந்தச் செய் * செயற்கை வாசனையோ? இயற்கை வாசனையோ? * செருப்பாக உழைத்தான் * செருப்பால் அடித்தாலும் திருட்டுக்கை நில்லாது * செருப்பால் அடித்துக் கருப்பட்டி கொடுப்பது போல * செருப்பால் அடித்துக் குதிரைக் கொடை கொடுத்தாற் போல * செருப்பால் அடித்துக் குதிரையோடு தீவட்டி பிடித்தாற்போல * செருப்பால் அடித்துப் பட்டுப் புடைவை கொடுத்தாற்போல * செருப்பால் அடித்துப் பருப்புச் சோறு போட்டது போல * செருப்பின் அருமை வெயிலில் தெரியும்; நெருப்பின் அருமை குளிரில் தெரியும் * செருப்புக் கடித்தால் திருப்பிக் கடிப்பதா? * செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா? * செருப்புக்காகக் காலைக் குறைக்க முடியுமா? * செருப்புக் காலைக் கடித்தால் நாம் செருப்பைக் கடிப்பதா? * செருப்புக்கு அச்சாரம் துரும்பு * செருப்புக்குத் தகுந்தாற்போல் காலை வெட்டுவதா? * செருப்புப் போட்டவன் கூடவும் சந்நியாசி கூடவும் துணை போகாதே * செருப்பு வைத்துச் சேவடி தொழுமாப் போலே * செல் அரித்த காதுக்கு வெள்ளைக் கம்மல் ஏன்? * செல்லச் சக்கிலிப் பிள்ளை செருப்புச் செருப்பாய்த் தின்று கழிகிறது * செல்லச் சிறுக்கி அகமுடையான் செவ்வாய்க்கிழமை செத்தானாம்; வீடு வெறிச்சாய் போகுமென்று வெள்ளிக்கிழமை எடுத்தாளாம் * செல்வத்தில் ஒரு பெண் பிறந்தது; செட்டித் தெரு எல்லாம் திரிந்து விட்டு வந்தது * செல்லப் பிள்ளை; ஒன்றும் சொல்லப் புள்ளை * செல்லப் பிள்ளை சீலை உடாதாம், பிள்ளை பெறுமட்டும் * செல்லப் பிள்ளை செத்தாலும் சொல்லப் பிள்ளை சாகாது * செல்லம் சறுக்காதா? வாசற்படி வழுக்காதா? * செல்லம் சிரிப்பாணி, சீரங்கத்துத் குந்தாணி * செல்லம் சீர் அழிக்கும் * செல்லம் சொல்லுக்கு அஞ்சாள்; அழகி நடைக்கு அஞ்சாள் * செல்லம் சொல்லுக்கு அஞ்சுமா? * செல்லம் பரமண்டலத்தில் செல்லாது; எல்லா மண்டலமும் செல்லும் * செல்லன் சொல்லுக்கு அஞ்சான்; அழகன் நடைக்கு அஞ்சான் * செல்லாக் கோபம் பொறுமைக்கு அடையாளம் * செல்லாத காசு என்றைக்கும் செல்லாது * செல்லாத பணம் என்று எண்ணாதே; செட்டியார் இருக்கிறார்; காட்டிக் கொள் * செல்லிக்குச் சிரங்கு; சிறுக்கிக்கு அரையாப்பு; பார்க்க வந்த பரிகாரிக்குப் பக்கப் பிளவை * செல்லுகளால் தினந்தோறும் வளர்க்கப் படாத புற்றுப் போல் * செல்லும் காசுக்கு வட்டம் உண்டா? * செல்லும் செல்லாததற்குச் செட்டியாரைக் கேள் * செல்லும் பொழுது செலுத்துவாய் சிந்தையை * செல்வச் செருக்கினால் திரட்டுப்பால் குமட்டுகிறது * செல்வ நிலையில் சேட்டன் கீழ்க் குரு * செல்வப் பெண் சீரங்க நாயகிக்குச் சீதனம் வந்ததாம் வறையோடு * செல்வப் பொருள் கொடுத்தால் குறையும்; கல்விப் பொருள் குறையுமோ? * செல்வம் உண்டாகும் காலம் செய்கை உண்டு; வல்லமை உண்டு * செல்வம் என்பது சிந்தையின் நிறைவே * செல்வம் சகடக்கால் போல வரும் * செல்வம் சீர் அழியுமா? * செல்வம் சீரைக் கெடுக்கும் * செல்வம் செருக்குகிறது; காசுக்கு வழி இல்லை * செல்வம் செருக்குகிறது; வாசற்படி வழுக்குகிறது * செல்வம் சொல்லுக்கு அஞ்சாது * செல்வம் தொகற்பால போழ்தே தொகும் * செல்வம் நிலைகவ; சேட்டன் கீழ் இரு * செல்வம் பரமண்டலத்தில் செல்லாது; எல்லா மண்டபமும் செல்லும் * செல்வமும் சீரும் வளர்த்தாளோடே போயின * செல்வமே ஜீவாதாரம் * செல்வர் எழுந்தருள்வது காலக்ஷேபத்துக்கு விரோதம் * செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் * செல்வன் சொல்லுக்கு அஞ்சான்; வீரன் போருக்கு அஞ்சான் * செலவில் குறைந்த வரவானால் சேமிப்பது எப்படி? * செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும் * செலவு அதிகம்; வரவு போதாது * செலவு இல்லாச் செலவு வந்தால் களவு இல்லாக் களவு வரும் * செலவு இல்லாத சிங்காரம் போல * செலவு இல்லாப் பணத்துக்குச் சில்லறைக் கடை வைத்துப் பார்த்தானாம் * செலவு உண்டானால் சேவகம் உண்டு * செலவோடு செலவு, கந்தப் பொடிக்குக் காற்பணம் * செவ்வாய் நட்டுப் புதன் அறுக்கல் ஆகாது * செவ்வாய் புதன் வடக்கே சூலம் * செவ்வாய் வெள்ளி செலவிடாதே * செவ்வாயோ? வெறுவாயோ? * செவிட்டில் அடித்தால் ராகம் போட்டு அழத் தெரியாது * செவிட்டில் அறைந்தாலும் தேம்பி அழத் தெரியாது * செவிட்டுக்குச் சூன்யம்; அசட்டுக்கு ஆங்காரம் * செவிடன் காதிலே சங்கு ஊதின மாதிரி * செவிடன் பாட்டுக் கேட்கப் போனது போல் * செவிடன் பாட்டுக் கேட்ட சம்பந்தம் * செவிடனும் குருடனும் கூத்துப் பார்த்தாற் போல * செவிடு இருந்தால் ஊமை இருக்கும் * செழிப்புக்குத் தேன் குருவி * சென்மக் குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது * சென்மக் குருடனுக்குக் கண் கிடைத்தது போல * சென்மத்தில் பிறந்தது செருப்பால் அடித்தாலும் போகாது * சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி * சென்ற இடம் சிறப்பும், கொண்ட இடம் காணியும் * சென்ற காசுக்கு வட்டம் இல்லை * சென்ற காரியத்தைப் பார்த்து, வரும் காரியத்தை அறி * சென்றது எல்லாம் போகப் பிள்ளையாரே வாரும் * சென்றும் செலவழித்தும் சீர் அழிந்த குடித்தனம் * சென்னிமலை, சிவன்மலை, சேர்ந்ததொரு பழனிமலை * சென்னைக்கு வந்து சிவம் ஆனேன் ==சே== * சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும். * சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும். * சேற்றிலே செந்தாமரை போல. ==சை== * சை எனத் திரியேல் * சைகை அறியாதவன் சற்றும் அறியான் * சைகை அறியாதவன் சற்றும் சங்கதியா அறியான் * சைவத்துக்கு ஆசைப்பட்டு மரக்கறியைத் தள்ளிவிட்டேன் * சைவத்தைக் கெடுக்கப் பண்டாரம்; வைணவத்தைக் கெடுக்கத் தாதன் * சைவப் பழம், வில்வக் கிளை * சைவம் முற்றி எலும்பு எலும்பாய்க் கழிகிறது * சைவ முத்தையா முதலியாருக்குச் சமைத்துப் போட வள்ளுவப் பண்டாரம் * சைனன் கையில் அகப்பட்ட பேனைப் போல் ==சொ== * சொக்கட்டான், சோழி, சதுரங்கம் இம் மூன்றும் துக்கம் அற்றார் ஆடும் தொழில் * சொக்கட்டான் விளையாட்டு, பொல்லாத சூது * சொக்கட்டானும் செட்டியும் தோற்றினாற் போல * சொக்கநாதர் கோவிலுக்குப் புல்லுக்கட்டுக் கட்டினாற் போல * சொக்கர் உடைமை அக்கரை ஏறாது * சொக்கனுக்குச் சட்டி அளவு; சொக்கன் பெண்டிாட்டிக்கும் பானை அளவு * சொக்கனும் செட்டியும் தொற்றினது போல * சொக்கா, சொக்கா, சோறுண்டோ? சோழியன் வந்து கெடுத்தாண்டா * சொக்காயை அவிழ்த்தால் சோம்பேறி * சொக்காரன் குடியைப் பிச்சை எடுத்துக் கெடுப்பான் * சொக்குப் பொடி போட்டு மயக்குகிறான் * சொட்டையிலே உள்ள சீலம் சுடலை வரை * சொட்டை வாளைக் குட்டி போல் துள்ளி விழுகிறது * சொத்தி கை நீளாது; நீளக் கை சுருங்காது * சொத்துக் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம் * சொத்துக் குடலிலே சோறு புகுந்தால் தத்தக பித்தக என்ற கதை * சொத்தைக் கொடுத்துப் புத்தி வர வேண்டும்; இல்லாவிட்டால் செருப்படி பட்டும் புத்தி வர வேண்டும் * சொத்தைப் போல வித்தைப் பேணு * சொந்தக்காராய் இருந்தாலும் பெட்ரோல் இருந்தால் தான் கார் நகரும் * சொந்தக் கோழி தோல் முட்டை இடுகிறது * சொந்த மாப்பிள்ளையை வீட்டுக்கு அழைக்கப் பறை ஏன்? * சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா? * சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு உதவுமா? கனவு கண்ட பணம் செலவுக்கு உதவுமா? * சொப்பனத்தில் கண்ட பணம் செலவுக்கு ஆகுமா? * சொப்பிலே சோறு ஆக்கினால் சுளுவுதான்; சும்மா இருந்து பிள்ளை பெற்றால் அழகுதான் * சொர்க்கத்திலே தோட்டியும் சரி; தொண்டைமானும் சரி * சொர்க்கத்துக்கு நான் போனால் போகலாம் * சொர்க்கத்துக்குப் போகிற போதும் கட்கத்திலே மூட்டை ஆகுமா? * சொர்க்கத்துக்குப் போகிற போதும் கட்கத்திலே கழுதைக் குட்டியா? * சொர்க்கத்துக்குப் போகிற போதும் கட்கக்திலே ராட்டினமா? * சொர்க்கத்துக்குப் போகிறபோதும் பக்கத்திலே கூத்தியாரா? * சொர்க்கத்துக்குப் போயும் ராட்டினமா? * சொர்க்கத்துக்குப் போனாலும் கட்கத்திலே அக்ஷயபாத்திரமா? * சொர்க்கத்துக்குப் போனாலும் கட்கத்திலே ஒரு பிள்ளை ஏன்? * சொருக்கி போனாள், சிறுக்கி வந்தாள் * சொருக்குக் கொண்டைக்காரி, சொக்குப்பொடி போடுவாள் * சொருகி இருந்த அகப்பை சொத்தென்று விழுந்ததாம் * சொருகிக் கிடந்த அகப்பையும் சோறு அள்ளப் புறப்பட்டது * சொருகி வைத்த அகப்பை * சொல் அம்போ வில் அம்போ? * சொல்கிறது ஒன்று; செய்கிறது ஒன்று * சொல்கிறவனுக்கு வாய்ச்சொல்; செய்கிறவனுக்குத் தலைச் சுமை * சொல் கேளாப் பிள்ளையினால் குலத்துக்கு ஈனம் * சொல்திறம் கூறல் கற்றவர்க்கு அழகு * சொல்லச் சொல்லச் செவிடி புக்ககம் போனாளாம் * சொல்லச் சொல்லப் பட்டிப் பெண்ணைப் பெற்றான் * சொல்லச் சொல்ல மட்டி மண்ணைத் தின்றான் * சொல்லப் போனால் பொல்லாப்பு; சொறியப் போனால் அரையாப்பு * சொல்லாததை மனையாளுக்குச் சொன்னவன் பட்ட பாடுபோல * சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது * சொல்லாது விளையாது; இல்லாது பிறவாது * சொல்லாமல் இருக்கிறவனே பண்டிதன் * சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர் * சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எதுவரையில் நிற்கும்? * சொல்லிச் செய்வார் சிறியோர்; சொல்லாமற் செய்வார் பெரியோர்; சொல்லியும் செய்வார் கயவர் * சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு * சொல்லின் உறுதி நல்ல நெறியே * சொல்லுக்கு அரிச்சந்திரன் * சொல்லுக்குச் சொல் சிங்காரமா? * சொல்லுக்கும் பொருளுக்கும் எட்டாதான்; சோதிக்கும் சாதிக்கும் நடு ஆனான் * சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை * சொல்லும் சொல், ஆக்கமும் கேடும் தரும் * சொல்லும் சொல் கேட்டால் சுட்டாற் போல் கொடுப்பார் * சொல்லும் பொருளும் தோன்றும் கல்வி * சொல்லுவதிலும் செய்து காட்டுதல் நல்லது * சொல்வது யார்க்கும் எளிது; சொல்லியபடி செய்தல் அரிது * சொல்வது லேசு, செய்வது அல்லவா பிரயாசம்? * சொல்வல்லவனை வெல்லல் அரிது * சொல்லியும் கொடுத்து எழுதியும் கொடுத்துப் பின்னோடே போனாளாம் * சொல்வதைக் கேளாத பிள்ளையும் நீட்டின காலை மடக்காத நாட்டுப் பெண்ணும் * சொல்வதை விடச் செய்வது மேல் * சொல்வளம் இல்லாத நற்கதை, சொல்லில் அதுவே துர்க்கதை * சொல்வார் எல்லாம் துணிவாரா தீப் பாய? * சொல்வார் சொன்னால் கேட்பாருக்கு மதி எங்கே போச்சு? * சொல் பேச்சையும் கேளான்; சுய புத்தியும் இல்லை * சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம் * சொறி சொறிகிற சுவாரசியத்தில் ஆனை விலைகேட்ட மாதிரி * சொறிந்து தேய்க்காத எண்ணெயும் எண்ணெய் அல்ல; பரிந்து இடாத சாதமும் சாதம் அல்ல * சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ் * சொறி நாய்க்குக் குட்டையே சொர்க்கம் * சொறி நாய் சுகம் பெற்றது போல * சொறி நாய் சோர்ந்து விழும்; வெறி நாய் விழுந்து கடிக்கும் * சொறி பிடித்த நாயானாலும் வீட்டைக் காக்கும் * சொறியக் கொடுத்த பசுப் போல * சொறியாந் தவளையும் வேட்டை ஆடுகிறதாம் * சொன்ன சொல்லுக்கு இரண்டு இல்லாமல் வருவான் * சொன்னது இருக்கச் சுரை பிடுங்குகிறாய் * சொன்னதைச் சொல்லடி, சுரணை கெட்ட மூளி * சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை * சொன்னதை சொல்லுமாம் கிளி; செய்ததைச் செய்யுமாம் குரங்கு * சொன்னதை விட்டுச் சுரையைப் பிடுங்குகிற மாதிரி * சொன்னபடி கேட்காவிட்டால் மண்ணை வெட்டி மாப்படைப்பேன் * சொன்னபடி கேட்டால் மாப்படைப்பேன்; கேளாவிட்டால் மண்ணை வெட்டிப் படைப்பேன் * சொன்னபடியே கேட்பவனுக்குச் சோறும் இல்லை; புடைவையும் இல்லை * சொன்னபடி கேட்டால் சுட்டவுடன் தருவேன் * சொன்னால் ஆய் செத்துப் போவாள்; சொல்லாவிட்டால் அப்பன் செத்துப் போவான் * சொன்னால் குற்றம்; சொறிந்தால் அரிப்பு * சொன்னால் துக்கம்; அழுதால் வெட்கம் * சொன்னால் வெட்கக் கேடு; அழுதால் துக்கக் கேடு * சொன்னால் பெரும்பிழை; சோறு என்றால் பட்டினி * சொன்னால் போலக் கேட்டால் சுட்டாற் போலக் கொடுப்பேன் * சொன்னாலும உறைப்பதில்லை; சுட்டாலும் உறைப்பதில்லை * சொன்னாலும் பொல்லாது; சும்மா இருந்தாலும் தோஷம் * சொன்னான் சுரைக்காய்ககு உப்பு இல்லை என்று * சொன்னேன், சுரைக்காய்ககு உப்பு இல்லை, பாகற்காய்க்குப் பருப்பு இல்லை என்று ==சோ== * சோணாசலத்திற்குச் சிறந்த க்ஷேத்திரம் இல்லை; சோமவாரத்திற் சிறந்த விரதம் இல்லை * சோதி இல்லா வானமும் நீதி இல்லா அரசனும் * சோதி பிறவாதோ? சம்பா விளையாதோ? * சோதி மின்னல் * சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் * சோம்பல் அம்பலம் வேகிறதே என்றால் அதைச் சொல்வானேள்? வாய் வலிப்பானேன் என்பானாம் * சோம்பல் இல்லாத தொழில் சோதனை இல்லாத் துணை * சோம்பலுக்குத் தொடர்ச்சி இளைப்பு; சும்மா இருத்தலுக்குத் தொடர்ச்சி முடம் * சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா * சோம்பலே துன்மார்க்கத்திற்குப் பிதா * சோம்பேறி அம்பலம் தீப்பற்றி எரியுதடா; அதைத்தான் சொல்வானேன்? வாயைத்தான் நோவானேன்? * சோம்பேறிக்கு ஒரு வேலையும் தீராது * சோம்பேறிக்குச் சோளம் வேளாண்மை * சோம்பேறிக்குச் சோறு கண்ட இடம் சுகம் * சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே * சோம்பேறி கோல் எடுத்தால் நூறு ஆடு ஆறு ஆடு ஆயினவாம் * சோம்பேறித் தனத்துக்குப் பசிதான் மருந்து * சோமசுந்தரம், உம் சொம்பு பத்திரம் * சோழ நாடு சோறுடைத்து; பாண்டி நாடு முத்துடைத்து; சேர நாடு வேழம் உடைத்து * சோழ நீதி பெண்டு விற்றுப் போகிறதா? * சோழபுரத்தானோ? சூது பெருத்தானோ? * சோழ மண்டலமோ? சூது மண்டலமோ? * சோழவரத்துக் குப்பு, சோப்புப் போட்டுக் குப்பு * சோழியன் குடுமி சும்மா ஆடுமா? * சோழியன் குடுமியைச் சுற்றிப் பிடித்தாற் போல * சோழியன் கெடுத்தான் * சோளக் கொல்லைப் பொம்மை மாதிரி * சோளக் கொல்லையில் மாடு மேய்ந்தால் சொக்கனுக்கு என்ன? * சோளப் பயிரை மேய்ந்த மாட்டுக்குச் சொர்க்க லோகம் வேண்டுமா? * சோளி சோளியோடே, சுரைக் குடுக்கை ஆண்டியோடே * சோளியைப் பிடுங்கிக் கொண்டா பிச்சை போடுகிறது? * சோற்றால் எடுத்த சுவர் * சோற்றில் இருக்கிற கல்லை எடுக்க மாட்டாதவன் மோகனக் கல்லைத் தாங்குவானா? * சோற்றில் இருக்கும் கல்லைப் பொறுக்கு என்றால் சொக்கநாதர் கோயில் மதிலைப் பிடுங்குகிறேன் என்கிறான் * சோற்றில் இருக்கும் கல்லைப் பொறுக்க முடியவில்லை. சொக்கநாத சுவாமி அடிக்கல்லை பேர்க்கிறானாம் * சோற்றில் இருந்த கல்லை எடுக்காதவன் சேற்றில் கிடக்கிற எருமையைத் தூக்குவானா? * சோற்றில் கல் எடுக்க அறியாதவன் முகவணைக் கல் எடுப்பானா? * சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்க மாட்டாதவன், ஞானத்தை எப்படி அறிவான்? * சோற்றிலே மலம்; தெளிவாய் இறு * சோற்றின் மறைவில் பத்தியம் பிடிக்கிறது * சோற்றுக்கு அலைந்தவன் சோளத்தைப் போடு; காய்க்கு அலைந்தவன் பீர்க்கைப் போடு * சோற்றுக்கு ஆளாய்ப் பறக்கிறான் * சோற்றுக்கு இல்லாச் சுப்பன் சொன்னதை எல்லாம் கேட்பான் * சோற்றுக்கு இல்லாத பூசணிக்காய் பந்தலிலே கட்டி ஆட்டவோ? * சோற்றுக்கு இல்லாத வாழைக்காயைப் பந்தலில் கட்டித் தொங்கவிடுகிறதா? * சோற்றுக்கு இளைத்தாலும் சொல்லுக்கு இளைக்கிறதா? * சோற்றுக்கு ஏற்ற பலம் * சோற்றுக்குக் கதிகெட்ட நாயே, பெரும் பொங்கல் அன்றைக்கு வாயேன் * சோற்றுக்குக் கதி கெட்ட நாயே, மாட்டுப் பொங்கலுக்கு வாயேன் * சோற்றுக்குக் காற்றாய்ப் பறக்கிறது * சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம் * சோற்றுக்குச் சூறாவளி; வேலைக்கு வெட்ட வெளி * சோற்றுக்குத் தாளம் போடுகிறான் * சோற்றுக்கும் கறுப்பு உண்டு; சொல்லுக்கும் பழுது உண்டு * சோற்றுக்கு வீங்கி * சோற்றுக்கு வீங்கினவன் பேளுக்குறிச்சி போக வேண்டும்; அடிக்கு வீங்கினவன் போச்சம்பாளையம்போக வேண்டும் * சோற்றுக்கே தாளமாம்; பருப்புக்கு நெய் கேட்டானாம் * சோற்றுக்கே திண்டாடும் நாய் சிங்கத்துக்குச் சிம்மாசனம் போட முடியுமா? * சோற்றுச் சுமையோடு தொத்தி வந்த நொள்ளை * சோற்றுப் பானை உடைந்தால் மாற்றுப் பானை இல்லை * சோற்று மறைவிலே யாரடா? சுரக்காரன் பத்தியம் பிடிக்கிறேன் * சோற்றைக் கொடுத்துக் கழுத்தை அறுக்கிறதா? * சோற்றைக் கொடுத்துத் தொண்டையை நெரிப்பபது போல * சோற்றைப் போட்டு மென்னியைப் பிடித்தாற் போல * சோற்றை விடுவானேன்? சொல்லுக கேட்பானேன்? * சோறு அகப்பட்ட இடம் சொர்க்கம் * சோறு இல்லாமல் செத்தவன் இல்லை * சோறு இல்லையேல் ஜோலியும் இல்லை * சோறு எங்கே விக்கும்? தொண்டையிலே விக்கும் * சோறு என்ன செய்யும்; சொன்ன வண்ணம் செய்யும் * சோறு கண்ட இடம் சுகம் * சோறு கண்ட இடம் சொர்க்கம்; கஞ்சி கண்ட இடம் கைலாசம் * சோறு கிடைக்காத நாளில் ஜோடி நாய் எதற்கு? * சோறு சிந்தினால் பொறுக்கலாம்; சுணை சிந்தினால் பொறுக்கலாமா? * சோறு சிந்தினால் பொறுக்கலாம்; நீர் சிந்தினால் பொறுக்கலாமா? * சோறு சிந்தினால் பொறுக்கலாம்; மானம் சிந்தினால் பொறுக்கலாமா? * சோறும் சீலையும் கேளாமல் இருந்தால் சொந்தப் பிள்ளையைப் போலப் பார்த்துக் கொள்கிறேன் * சோறும் இலையும் கேளாமல் இருந்தால் பெற்ற பிள்ளைக்குச் சமானம் * சோறும் துணியும் கேளாமல் இருந்தால் பெற்ற பிள்ளைக்குச் சமானம் * சோறும் துணியும் தவிர மற்றதுக்கெல்லாம் குறைவு இல்லை * சோறு போட்டு மலமும் வார வேண்டியது ஆயிற்று * சோறு வேண்டாதவன் கருப்புக்குப் பயப்படான் == சௌ == * சௌப்யம் பேசேல் ==ஞ== * ஞயம் பட உரை ==ஞா== * ஞாபகம் இல்லை என்று எவனும் சொல்வான்; ஞானம் இல்லை என்று எவனும் சொல்லான் * ஞாயப்பிரமாணம் இல்லாத குருக்கள் வீண் * ஞாயிற்றுக் கிழமை அன்று நாய்கூட எள்ளுக்காட்டிப் போகாது * ஞாயிற்றுக்கிழமை ஒரு பொழுது; நண்டு வேண்டாம்; சாறு விடு * ஞாயிற்றுக் கிழமை சென்றால் நாய் படாத பாடு * ஞாயிற்றுக் கிழமை நாய்கூட எள்ளுக் காட்டில் நுழையாது * ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர் நாய் படாத பாடு படுவர் * ஞாயிற்றுக்கிழமை ருதுவானால் நாய்படாத பாடுதான் * ஞாயிற்றுக் கிழமை மறைப்பார் இல்லை * ஞானத்துக்கு உலகம் பகை; உலகத்துக்கு ஞானம் பகை * ஞானம் இல்லாத சேயர்கள் ஆவின் கற்றிலும் அதிகம் அல்ல * ஞானம் எல்லாம் ஒரு மூட்டை; உலகம் எல்லாம் ஒரு கோட்டை * ஞானம் தனத்தையும் கனத்தையும் கொடுக்கும் * ஞானம் முற்றி எலும்பு எலும்பாய்க் கழிகிறது * ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலே * ஞானிக்கு மன்னன் துரும்பு * ஞானிக்கு இல்லை, இன்பமும் துன்பமும் * ஞானிக்கு நார் துரும்பு * ஞானிக்கும் மூடனுக்கும் சங்காத்தம் இல்லையே * ஞானியார் ஆடும் திருக்கூத்தோடே நானும் ஆடுகிறேன் ==ட== * டக்கு டம்மாரம் * டம்பப் பொடி மட்டை; தட்டிப் பார்த்தால் வெறும் மட்டை * டம்பாசாரி பொடி மட்டை, தட்டிப் பார்த்தால் வெறுமட்டை * டமாரக் காளை போல் அலையாதே * டமாரம் அடிபட, மரகதம் உடைபட ==டா== * டா என்றால் டூ என்கிறான் * டாம்பீகனை நம்பாதே * டால் டம்மாரம் போட்டுக் கொண்டு போகாதே ==டி== * டில்லிக்குப் பாட்சாவானாலும் தல்லிக்குப் பிட்டா * டில்லிக்கு ராஜாவானாலும் பள்ளிக்குப் பிள்ளை * டில்லி ராணி சொல்லிவிட்டால் கல்லிலிருந்து நெல் விளையும் ==டீ== * டீக்காவுக்கு ஒரு டூக்கா வேணும் ==த்== * த்ரி விதம் துஷ்ட லக்ஷணம் * த்ரி ஜாக்கி யம தரிசனம் ==த== * தக்க வாசல் இருக்கத் தாளித்த வாசலிலே நுழைகிறது * தக்கா புக்கா தண்டடி தடியடி * தக்கோன் எனத் திரி * தகப்பன் ஒரு பாக்கு; பிள்ளை ஒரு தோப்பு * தகப்பன் தேடக் கர்த்தன்; பிள்ளை அழிக்கக் கர்த்தன் * தகப்பன் பட்டத்தைப் பிள்ளைக்குக் கட்டினால் தகப்பன் சாஷ்டாங்க தண்டம் செய்ய வேண்டும் அல்லவா? * தங்கம் தரையிலே தவிடு பானையிலே. * தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது. * தடி எடுத்தவன் தண்டல்காரனா ? * தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே. * தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன். * தணிந்த வில்லுத்தான் தைக்கும். * தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும். * தண்ணீரையும் தாயையும் பழிக்காதே. * தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும். * தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி. * தம்பி உடையான் படைக்கு அஞ்சான். * தருமம் தலைகாக்கும். * தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும். * தலை இருக்க வால் ஆடலாமா ? * தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ? * தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா? * தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம். * தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர். * தவளை தன் வாயாற் கெடும். * தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும். * தகப்பன் பட்டம் பிள்ளைக்கு அல்லவா? * தகப்பன் பேரை எடுக்கிற பின்ளையே பிள்ளை. * தகப்பன் வெட்டின கிணறு என்று தலைகீழாய் விழுவார்களா? * தகப்பனுக்கு இட்டது தலைச்சனுக்கு. * தகப்பனுக்க ஒட்டுக் கோவணமாம்; மகன் எடுத்துப் போட்டது வேண்டும் என்கிறான். * தகப்பனுக்கு ஒட்டுக் கோவணமாம்; பிள்ளைக்கு எங்கே இழுத்துப் போர்த்துகிறது. * தகப்பனுக்குக் கட்டக் கோவணம் இல்லை; மகன் தஞ்சாவூர் மட்டும் நடை பாவாடை போடச் சொன்னானாம். * தகப்பனுக்குக் காய்ச்சுகிற பாலில் ஆடையைத் துவைக்கிற பிள்ளை. * தகப்பனைக் கொன்ற பாவம் மாமியார் வீட்டில் ஆறு மாதம் இருந்தால் போகும். * தகப்பனைக் கொன்ற பிள்ளை. * தங்கக் கத்தி என்று கழுத்தை அறுத்துக் கொள்ளலாமா? * தங்கக் கத்தி என்று வயிற்றைக் கிழித்துக் கொள்ளலாமா? * தங்கக் குடத்துக்குப் பொட்டு இட்டுப் பார்த்தாற் போல். * தங்கக் கொழு என்றால் நெஞ்சிலா இடித்துக் கொள்வது? * தங்கச்சி பிள்ளை தன் பிள்ளை ஆகுமா? தண்ணீர்க் குடமும் தன் குடம் ஆகுமா? * தங்கச்சி பிள்ளை தன் பிள்ளை ஆனால் தவத்துக்குப் போவானேன். * தங்கச் செருப்பு ஆனாலும் தலைக்கு ஏறாது. * தங்கத் தூள் அகப்பட்டாலும் செங்கல் தூள் அகப்படாது. * தங்கத்தை உருக்கி விட்டது போல. * தங்கத்தைக் குவிக்கிறேன் என்றாலும் தன் புத்தி விடுகிறது இல்லை என்கிறான். * தங்கத்தைத் தவிட்டுக்கு மாறுவதா? * தங்கத்தை விற்றுத் தவிடு வாங்கினது போல. * தங்கப் பெண்ணே, தாராவே, தட்டான் கண்டான் பொன் என்பான்; தராசிலே வைத்து நிறு என்பான்; எங்கும் போகாமலே இங்கேயே இரு. * தங்கம் எல்லாம் தவிட்டுக்கு மாறுகிறது. * தங்கம் செய்யாததைச் சங்கம் செய்யும். * தங்கம் தரையிலே கிடக்கிறது; ஒரு காசு நார்த்தங்காய் உறி கட்டித் தொங்குகிறது. * தங்கம் தரையிலே; தவிடு பானையிலே. * தங்கம் புடத்தில் வைத்தாலும் தன் நிறம் போகாது. * தங்கம் விற்ற கையால் தவிடு விற்க வேணுமா? * தங்க முடி சூட்டினாலும் தங்கள் குணம் விடார் கசடர். * தங்கமும் பொன்னும் தரையிலே; ஒரு காசு நார்த்தங்காய் உறியிலே. * தங்க வேலை அறியாத ஆசாரியும் இல்லை; தாய்ப் பால் குடிக்காத குழந்தையும் இல்லை. * தங்கின வியாழன் தன்னோடு மூன்று பேர். * தச்ச வாசல் இருக்கத் தாளித்த வாசலாலே புறப்படுகிறது. * தச்சன் அடிக்கக் கடா இழுத்தது. * தச்சன் அடித்த தலைவாசல் எல்லாம் உச்சி கடிக்க உலாவித் திரிகிறான். * தச்சன் அடித்த வாசலில் எல்லாம் தலை குனிகிறது. * தச்சன் கருமான் தள்ளுபடி, மற்றவை எல்லாம் ஏறுபடி. * தச்சன் கோணல் நிமிர்ந்தான்; தப்பிதச் சொல்லாகப் பேசாதே. * தச்சன் தொட்டு என்றால் தச்சத்தி அரிசி என்பாள். * தச்சன் பெண்சாதி அறுத்தால் என்ன? கொல்லன் பெண்சாதி கூலிக்கு அறுத்தால் என்ன? * தச்சன் பெண்சாதி தரையிலே; கொல்லர் பெண்சாதி கொம்பிலே. * தச்சன் லொட்டு என்றால் அவன் பெண்டாட்டி துட்டு என்பான். * தச்சன் வீட்டில் தயிரும் எச்சன் வீட்டில் சோறும் எப்படிச் சேரும்? * தச்சன் வீட்டில் பால் சோற்றை நக்காதே, வெள்ளாளா. * தச்சன் வீட்டுப் பாயசம். * தசமி எண்ணெய் தந்தால் தேய்த்துக் கொள்ளலாம்; ஏகாதசி எண்ணெய் இரந்தும் தேய்க்கலாம்; துவாதசி எண்ணெய் தந்தாலும் கூடாது. * தசை கண்டு கத்தியை நாட்ட வேண்டும். * தஞ்சம் என்ற பேரைக் கெஞ்ச அடிப்பதா? * தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது. * தஞ்சாவூர் எத்தனும் திருவாரூர் எத்தனும் கூடினாற் போல. * தஞ்சாவூருக்கப் போனக்கால், சண்டை கிண்டை வந்தக்கால், ஈட்டி கிட்டி உடைந்தக்கால், ஊசிக்கு இத்தனை இரும்பு தருகிறேன். * தஞ்சி தாப்பாளு, தச்சப் பையன் கூத்தியார். * தஞ்சையில் திருட இங்கிருந்தே பம்ப வேணுமா? * தட்சிணை இல்லாவிட்டாலும் அப்பத்தில், பார்த்துக் கொள்ளலாம். * தட்சிணையோடே பட்சணமாம். * தட்டத் தட்ட எள்ளு; கொட்டக் கொட்டக் கேழ்வரகு. * தட்டார்கள் புரட்டைக் கூற எட்டாறு வழியும் போதா. * தட்டார் தட்டினால் வாழ்வர்; தட்டாமல் போனால் தாழ்வார். * தட்டாரச் சித்துத் தரையிலே; வண்ணாரச் சித்து வழியிலே. * தட்டாரச் சித்துத் தறிசித்து; வண்ணாரச் சித்துக்கு வராது. * தட்டாரப் பூச்சி தாழப் பறந்தால் தப்பாமல் மழை வரும். * தட்டான் ஆத்தாளுக்குத் தாலி செய்தாலும் மாப்பொன்னில் காப்பொன் திருடுவான். * தட்டான் இடத்தில் இருக்கிறது; அல்லது கும்பிடு சட்டியில் இருக்கிறது. * தட்டான் காப்பொன்னிலும் மாப்பொன் எடுப்பான். * தட்டான் கொசு தடுமாறுகிறது போல. * தட்டான் தட்டினால் தட்டாத்தி துட்டு என்பாள். * தட்டான் தாய்ப் பொன்னிலும் மாப்பொன் திருடுவாள். * தட்டான் தாழப் பறந்தால் தப்பாமல் மழை வரும். * தட்டான் பறந்தான் கிட்டமழை. * தட்டான் பொன் அறிவான்; தன் பெண்களுக்கு ஒன்று செய்யான். * தட்டானிடம் இருந்தால் என்ன? கும்மிட்டியில் இருந்தால் என்ன? * தட்டானுக்குப் பயந்தல்லவோ, அணிந்தான் சிவன் சர்ப்பத்தை? * தட்டானும் செட்டியும் ஒன்று ஆனால் தங்கம் கொடுத்தவன் வாயிலே மண். * தட்டானும் செட்டியும் தலைப்பட்டாற் போல. * தட்டானும் செட்டியும் கண்; சட்டியும் பானையும் மண். * தட்டானைச் சேர்ந்த தறிதலை. * தட்டானைத் தலையில் அடித்து வண்ணாணை வழி பறித்தது. * தட்டிக் கொடுத்தால் தம்பி தலைவிரித்து ஆடுவான். * தட்டிப் பேச ஆள்இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன். * தட்டிப் போட்ட வடையைத் திருப்பிப் போட நாதி இல்லை. * தட்டிப் போட்ட வறட்டியைத் திருப்பிப் போட நாதி இல்லை. * தட்டினால் தட்டான்; தட்டா விட்டால் கெட்டான். * தட்டுக் கெட்ட சால்ஜாப்பு. * தட்டுக் கெட்டு முறுக்குப் பாய்ந்து கிடக்கிறது. * தடவிப் பிடிக்க மயிர் இல்லை; அவள் பெயர் கூந்தல் அழகி. * தடவிப் பிடிக்க மயிர் இல்லை; அவன் பெயர் சவரிராஜப் பெருமாள். * தடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரனா? * தடி எடுத்தவன் தண்டல்காரன். * தடிக்கு அஞ்சிக் குரங்கு ஆடினது போல. * தடிக்கு மிகுந்த மிடா ஆனால் என்ன செய்யலாம்? * தடிக்கு மிஞ்சின மாடா? * தடிக்கு மிஞ்சின மிடாவானால் என்ன செய்யலாம்? * தடித் திருவாரூர். * தடி பிடிக்கக் கை இல்லை; அவன் பெயர் செளரியப் பெருமாள். * தடி மழை விட்டும் செடி மழை நிற்கவில்லை. * தடிமனும் தலையிடியும் தன் தனக்கு வந்தால் தெரியும். * தடியங்காய் திருடினவன் தோளைத் தடவிப் பார்த்துக் கொண்டானாம். * தடுக்கில் பிள்ளை தடுக்கிலேயா? * தடுக்கின் கீழே நுழைந்ததால், கோலத்தின் கீழே நுழைகிறான். * தடுங்கித் தள்ளிப் பேச்சுப் பேசுகிறது. * தடுக்கு விழுந்தால் தங்கப் போகிணி; எகிறி விழுந்தால் இருப்புச் சட்டி. * தடுக்கி விழுந்தால் பிடிக்குப் பாதி. * தடும் புடும் பயம் நாஸ்தி; நிஸப்தம் ப்ராண சங்கடம். * தடைக்கு அஞ்சாத பாம்பு. * தண்ட சோற்றுக்காரன் குண்டு போட்டால் வருவான். * தண்ட சோற்றுத் தடிராமன். * தண்ட சோற்று ராமா, குண்டு போட்டு வாடா. * தண்டத்துக்கு அகப்படும்; பிண்டத்துக்கு அகப்படாது. * தண்டத்துக்குப் பணமும்திவசத்துக்குக்கறியும் அகப்படும். * தண்டத்துக்குப் பணமும் திவசத்துக்குக் காசும் அகப்படும். * தண்டத்துக்குப் பெற்றுப் பிண்டத்துக்கு வளர்த்தேன். * தண்டத்துக்கு வந்தான் பண்டாரவாடையான். * தண்டரிந்த முக்கு; தலைக்கு இரண்டு அமுக்கு. * தண்டிகை ஏறப் பணம் இருக்கிறது; தலையில் கூடத் துணி இல்லை. * தண்டில் போனால் இரட்டிப்புச் சம்பளம். * தண்டிலே போனால் இரண்டிலே ஒன்று. * தண்டுக்கு ரொட்டி சுட்டுப் போடுகிறவன். * தண்டு முண்டுக்காரனுக்குத் தயிறும் சோறும்; அடிபிடிக்காரனுக்கு ஆனமும் சோறும். * தண்டு முண்டுக்காரனுக்குத் தயிறும் சோறும்; விசுவாசக்காரனுக்கு வெந்நீர்க் சோறு. * தண்டை இட அத்தை இல்லாவிட்டாலும் சண்டை இட அத்தை உண்டு. * தண்ணீர் இல்லாத வேளாண்மையும் தான் உழாத நிலமும் தரிசு. * தண்ணீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும். * தண்ணீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா? * தண்ணீர்க்குடம் உடைந்து தவியாய்த் தவிக்கையிலே கோவணத்தை அவிழ்த்துக் கொண்டு குதியாய்க் குதிக்கிறாயே! * தண்ணீர் கண்டாயா? பால் கண்டாயா? * தண்ணீர்க்குடம் உடைந்தாலும் ஐயோ! தயிர்க்குடம் உடைந்தாலும் ஐயோ! * தண்ணீர் காட்டினான். * தண்ணீர் கிடக்கும் நாக்குத் தலை கீழாய்ப் புரளும். * தண்ணீர் குடித்த வயிறும் தென்னோலை இட்ட காதும் சரி. * தண்ணீர் தகராறு, பிள்ளை பதினாறு. * தண்ணீர் தவளை குடித்ததும் குடியாததும், யார் அறிவார்? * தண்ணீர் பட்ட பாடு. * தண்ணீர் மிஞ்சினால் உப்பு; உப்பு மிஞ்சினால் தண்ணீர். * தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அவிக்கும். * தண்ணீரில் இருக்கிற தவளை குடித்ததைக் கண்டதார்? குடியாததைக் கண்டதார்? * தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்கிறான். * தண்ணீரில் இறந்தவரிலும் சாராயத்தில் இறந்தவர் அதிகம். * தண்ணீரில் உள்ள தவளை தண்ணீர் குடித்ததோ, இல்லையோ? * தண்ணீரில் மூச்சு விட்டால் தலைக்கு மேலே. * தண்ணீரில் விழுந்தவர்களுக்கும் தடுமாறி நிற்பவர்களுக்கும் ஆனைப்பலம் வந்து விடும். * தண்ணீரிலே தடம் பிடிப்பான். * தண்ணீரிலே போட்டாலும் நனையாது; கரையில் போட்டாலும் காயாது. * தண்ணீரிலேயே தன் பலம் காட்டுகிறது. * தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும். * தண்ணீருக்குள் கிடைக்கும் தவளை தண்ணீரைக் குடித்ததும் குடிக்காததும் யாருக்குத் தெரியும்? * தண்ணீரின் கீழே மூச்சுவிட்டால் தலைக்கு மேலே. * தண்ணீருக்குள் குசுவினாலும் தலைக்கு மேலே வந்துவிடும். * தண்ணீரும் கோபமும் தாழ்ந்த இடத்திலே. * தண்ணீரும் தாமரையும் போல. * தண்ணீரும் பாசியும் கலந்தாற் போல. * தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும். * தண்ணீரைத் தடிகொண்டு அடித்தாலும் தண்ணீரும் தண்ணீரும் விலகுமா? * தண்ணீரையும் தாயையும் பழிக்கலாமா? * தணிந்த வில்லுத்தான் தைக்கும். * தத்திக் குதித்துத் தலைகீழே விழுகிறது. * தத்தி விழுந்தால் தரையும் பொறுக்காது. * தத்துவம் அறிந்தவன் தவசி. * தந்தவன் இல்லை என்றால் வந்தவன் வழியைப் பார்க்கிறான். * தந்தனம் பாடுகிறான். * தந்தானா என்பது பாட்டுக்கு அடையாளம். * தந்தால் ஒன்று; தராவிட்டால் ஒன்று * தந்தி தாழ்ப்பாள் தச்சப் பையன் கூத்தியார். * தந்திரத்தால் தேங்காய் உடைக்கலாமா? * தந்திரம் படைத்தவன் தரணி முழுவதையும் ஆள்வான். * தந்திரம் பெரிதா? மந்திரம் பெரிதா? * தந்தை எவ்வழி, தனையன் அவ்வழி. * தந்தைக்குத் தலைப் பிள்ளை, தாய்க்குக் கடைப் பிள்ளை. * தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. * தப்படி எடுத்துத் தாடையில் போடாதே. * தப்பில் ஆனவனை உப்பிலே போடு. * தப்பு அடித்தவன் தாதன்; சங்கு ஊதினவன் ஆண்டி. * தப்புப் புடலுக்கு நல்ல ருசி. * தப்பும் திப்பும் தாறுமாறும். * தபசே அணிகலன்; தாழ்மையே மேன்மை. * தம் இனம் தம்மைக் காக்கும்; வேலி பயிரைக் காக்கும். * தம்பி உடையான் படைக்கு அஞ்சான். * தம்பி உழுவான்; மேழி எட்டாது. * தம்பி கால் நடையிலே; பேச்சுப் பல்லக்கிலே. * தம்பி குசு தவிடு மணக்கும்; வேற்றுக் குசுவாக இருக்கிறது, ஏற்றடி விளக்கு. * தம்பி சமர்த்தன்; உப்பு இல்லாமல் கலக் கஞ்சி குடிப்பான். * தப்பி சிம்புகிற சிம்பலுக்குத் தயிரும் சோறும் சாப்பாடு * தம்பி சோற்றுக்குச் சூறாவளி: வேலைக்கு வாரா வழி. * தம்படி நாஸ்தி; தடபுடல் ஜாஸ்தி. * தம்பி தலை எடுத்துத் தறி முதலும் பாழாச்சு. * தம்பி தாய் மொழி கற்கத் தாளம் போடுகிறான்; அண்ணன் அந்நிய மொழியிலே ஆர்ப்பாட்டம் செய்கிறானாம். * தம்பி தெள்ளு மணி; திருட்டுக்கு நவமணி. * தம்பி படித்த படிப்புக்குத் தயிரும் பழையதுமாம்; ஈரவங்காயமாம்,எலுமிச்சங்காய் ஊறுகாயாம். * தம்பி பள்ளிக்கூடத்தான். * தம்பி பிடித்த முயலுக்கு மூன்றேகால். * தம்பி பிள்ளையாண்டான் அலுவல், தலை சொறிய நேரம் இல்லை. * தம்பி பிறக்கத் தரைமட்டம் ஆச்சு. * தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி. * தம்பி பேச்சைத் தண்ணீரில்தான் எழுத வேண்டும். * தம்பி மொண்டது சமுத்திரம் போல. * தம்பி ரோசத்தில் ராஜபாளயத்தான். * தம்பி வெள்ளோலை வாசிக்கிறான். * தம்பி ஸ்ரீரங்கத்தில் கோதானம் கொடுக்கிறான்; தன்னைப் பெற்ற தாய் கும்பகோணத்தில் கெண்டிப் பிச்சை எடுக்கிறாள். * தம்ளர் தீர்த்தம் இல்லை; பேர் கங்கா பவானி. * தமக்கு மருவார் தாம். * தமக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குக் சகுனப்பிழை வேண்டும். * தமிழுக்கு இருவர் கதி. * தமிழுக்கு இருவர்; தத்துவத்துக்கு ஒருவர். * தமையன் தந்தைக்குச் சமம்; தம்பி பிள்ளைக்குச் சமம். * தயிர் குடிக்க வந்த பூனை சட்டியை நக்குமா? * தயிர்ப் பானை உடைந்தால் காக்கைக்கு விருந்து. * தயிர்ப்பானையை உடைத்துக் காகத்துக்கு அமுது இட்டாற் போல. * தயிர்ப் பானையை உடைத்து நாய்களுக்கு பங்கு வைத்தாற் போல. * தயிருக்குச் சட்டி ஆதாரம்; சட்டிக்குத் தயிர் ஆதாரம். * தயிரும் பழையதும் கேட்டான்; கயிறும் பழுதையும் பெற்றான். * தயை தாக்ஷிண்யம் சற்றாகிலும் இல்லை. * தர்மத்துக்கு அழிவு சற்றும் வராது. * தர்மத்துக்கு உள்ளும் பாவத்துக்குப் புறம்பும். * தர்மத்துக்குத் தாழ்ச்சி வராது. * தர்மத்துக்குத் தானம் பண்ணுகிற மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்க்கிறதா? * தர்மத்தைப் பாவம் வெல்லாது. * தர்ம புத்திரனுக்குச் சகுனி தோன்றினாற் போல. * தர்மம் உள்ள இடத்தில் ஜயம். * தர்மம் கெடின் நாடு கெடும். * தர்மம் தலை காக்கும். * தர்மமே ஜயம். * தரகுக்காரப் பயலுக்குத் தன் காடு பிறன் காடு ஏது? * தரத்தர வாங்கிக் கொள்ளுகிறாயா? தலையை முழுகிப் போட்டுப் போகட்டுமா? * தராதரம் அறிந்து புராதனம் படி. * தரித்திரப் பட்டாலும் தைரியம் விடாதே. * தரித்திரப் பட்டி மகன் பேர் தனபால் செட்டி. * தரித்திரம் அறியாப் பெண்டாட்டியால் பயன் இல்லை. * தரித்திரம் பிடித்தவள் தலைமுழுகப் போனாளாம்; அப்போதே பிடித்ததாம் மழையும் தூற்றலும். * தரித்திரம் பிடித்தவள் தலை முழுகப் போனாளாம்; ஏகாதசி விரதம் எதிரே வந்ததாம். * தரித்திரன் சந்தைக்குப் போனால் தங்கமும் பித்தளை ஆகும். * தரித்திரனுக்கு உடம்பெல்லாம் வயிறு. * தரித்திரனுக்குப் பணம் கிடைத்தது போல. * தரித்திரனுக்கு விஷம் கோஷ்டி. * தரைக்குப் பண்ணாடி; மலைக்கு மண்ணாடி. * தரையில் படுத்தவன் பாய்க்குப் போவான்; * * பாயில் படுத்தவன் தரைக்கு வருவான். * தரக்கு வந்தால் சரக்கு விற்கும். * தரை நீக்கிக் கரணமா? * தரையில் தேளும் தண்ணீரில் தேளி மீனும் கொட்டியது போல. * தலை அளவும் வேண்டாம்; அடி அளவும் வேண்டாம்; குறுக்கே அள அடா படியை. * தலை ஆட்டித் தம்பிரான். * தலை இடிக்குத் தலையணையை மாற்றி ஆவது என்ன? * தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும். * தலை இருக்க வால் ஆடுமா? * தலை இருக்கிற இடத்தில் கழுத்து வரட்டும் பார்த்துக் கொள்வோம். * தலை எழுத்து இருக்கத் தந்திரத்தால் ஆவது என்ன? * தலை எழுத்துத் தலையைச் சிரைத்தாற் போகுமா? * தலை எழுத்தை அரி என்று சொல்வார், அதல்ல. * தலை எழுத்தோ, சிலை எழுத்தோ? * தலைக்கு ஏற்ற குல்லாயா? குல்லாய்க்கு ஏற்ற தலையா? * தலைக்கு ஏறினால் தனக்குத் தெரியும். * தலைக்குத் தலை நாட்டாண்மையாய் இருக்கிறது. * தலைக்குத் தலை பண்ணாட்டு. * தலைக்குத் தலை மூப்பு. * தலைக்குத் தலை பெரிய தனம்; உலைக்குத்தான் அரிசி இல்லை. * தலைக்கு மிஞ்சிய தலைப்பாகை. * தலைக்கு மிஞ்சின ஆக்கினை இல்லை; காலுக்கு மிஞ்சின உபகாரம் இல்லை. * தலைக்கு மிஞ்சின ஆக்கினை இல்லை; கோவணத்திற்கு மிஞ்சின தரித்திரம் இல்லை * தலைக்கு மிஞ்சின மிடா. * தலைக்கு முடியோ? காலுக்கு முடியோ? * தலைக்கு மேல் ஐசுவரியம் இருந்தாலும் தலையணை மேல் உட்காராதே. * தலைக்கு மேல் வெள்ளம் போகும் போது சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன? * தலைக்கு மேலே கை காட்டுகிறதா? * தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு. * தலைக்கு வந்தது மயிரோடே போச்சு. * தலைக்கு வேறே, தாடிக்கு வேறா? * தலை கண்டால் பெண் சிணுங்கும். * தலை கழன்றவனுக்கு உலகமெல்லாம் சுற்றும். * தலை கழுத்தில் நிற்கவில்லை. * தலைகீழ் நின்றாலும் வராது. * தலைகீழ்ப் பாடம். * தலைகீழாய் இருந்து தபசு செய்தாலும் கூடுகிற காலந்தான் வந்து கூட வேண்டும். * தலைகீழாய் நிற்கிறான். * தலைச்சன் பிள்ளைக்காரி இடைச்சன் பிள்ளைக்காரிக்குத் தைரியம் சொன்னாளாம். * தலைச்சன் பிள்ளைக்காரிக்குத் தாலாட்டும், தாலி அறுத்தவளுக்கு ஒப்பாரியும் தாமே வரும். * தலைச்சன் பிள்ளைக்கு இல்லாத தண்டையும் சதங்கையும் இடைச்சன் பிள்ளைக்கு வந்தனவா? * தலைச்சனுக்குத் தாலாட்டும் கணவன் செத்தால் அழுகையும் தாமே வரும். * தலைச் சுமை தந்தான் என்று தாழ்வாய் எண்ணாதே. * தலை சுழன்றவனுக்கு உலகமெல்லாம் சுற்றும். * தலை சொறியக் கொள்ளி தானே வைத்துக் கொண்டது. * தலை சொறியக் கொள்ளியா? * தலை தப்பியது தம்பிரான் புண்ணியம். * தலை தெரியாமல் எண்ணெய் தேய்ப்பதா? * தலை தெரியாமல் தத்தித் தடவுகிறது. * தலை தெறிக்க ஓடி வருதல். * தலை நோய்க்குத் தலையணையைத் திருப்பிப் போட்டால் தீருமா? * தலை நோவும் தரித்திரமும் தனக்கு வந்தால் தெரியும். * தலைப்பாகை மாற்றுபவன். * தலைப் பிள்ளை ஆண்; தப்பினால் பெண். *தலைப் புறத்தைத் தந்தால் தருவேன் மருந்துப் பையை. * தலை பெரிது என்று கல்லில் முட்டிக் கொள்ளலாமா? * தலை போக வந்தது தலைப்பாகையோடு போயிற்று * தலை போனாலும் விலையைச் சொல்லாதே. * தலை மயக்கமே சர்வ மயக்கம். * தலைமாட்டில் சொல்வன் தலையணை மந்திரம். * தலைமாட்டிற்குக் கொள்ளி தானே தேடிக் கொண்டாய். *தலைமுறை இல்லாத தாழ்வு. * தலைமுறை தலைமுறையாய் மொட்டை; அவள் பேர் கூந்தலழகி. * தலைமேல் அம்பு பறந்தாலும் நிலையிற் பிரிதல் ஆகாது. * தலைமேல் ஓடின வெள்ளம் சாண் ஓடினால் என்ன? முழம் ஓடினால் என்ன? * தலைமேலே இடித்தால்தான் குனிவான். * தலைமேலே தலை இருக்கிறதா? * தலைமொட்டை; கூந்தலழகி என்று பெயர். * தலையார் உறவு தலைக்கு. * தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம். * தலையாரி வீட்டில் திருடி அதிகாரி வீட்டில் ஒளித்தது போல. * தலையாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைக்கும். * தலையாலே மலை பிளப்பான். * தலையில் இடித்த பின் தாழக் குனிவான். * தலையில் இடித்தும் குனியாதா? * தலையில் எழுத்து இருக்கத் தந்திரத்தால் வெல்லலாமா? * தலையில் எழுத்துக்குத் தாய் என்ன செய்வாள்? * தலையில் களிமண்ணா இருக்கிறது? * தலையில் விடித்தால் அரைப்பு; இலையில் விடித்தால் பருப்பு. * தலையிலே, இடி விழ. * தலையிலே கொள்ளிக் கட்டையால் சொறிந்து கொள்ளலாமா? * தலையிலே விறகுக் கட்டு; காலிலே தந்தப் பாதுசையா? * தலையும் தலையும் பொருதால் மலையும் வந்து பொறுக்கும். * தலையும் நனைத்துக் கட்டியும் நாட்டின பிறகா? * தலையைச் சுற்றிப் பிடிக்கிறான். * தலையைச் சுற்றியும் வாயாலே. * தலையைச் சுற்றுகிற மாடும் கூரையைப் பிடுங்கித் தின்கிற மாடும் குடும்பத்துக்கு ஆகா. * தலையைத் தடவி மூளையை உரிய வேண்டாம். * தலையைத் திருகி உரலில் போட்டு இடிக்கச்சே, சங்குசக்கரம் கடுக்கள் உடைந்து போகப் போகிறது என்றானாம். * தலையும் நனைத்தாச்சு; கத்தியும் வைத்தாச்சு. * தலையை வெட்டிச் சமுத்திரத்தின்மேற் போடலாமா? * தலைவலிக்குத் தலை அணையைத் தானே மாற்றிப் போட்டாற் போல. * தலைவலி போகத் திருகுவலி வந்தது. * தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும். * தலைவலியும் பசியும் தனக்கு வந்தால் தெரியும். * தலைவன் சொற் கேள். * தலைவன் நிற்கத் தண்டு நிற்கும். * தலைவன் மயங்கச் சர்வமும் மயங்கும். * தவசிக்குத் தயிரும் சாதமும் விசுவாசிக்கு வெந்நீரும் பருக்கையும். * தவசிப்பிள்ளை நமசிவாயம் கையாசாரம். * தவசே அணிகலன்; தாழ்மையே மேன்மை. * தவத்தில் இருந்தால் தலைவனைக் காணலாம். * தவத்து அளவே ஆடுமாம் தான் பெற்ற செல்வம். * தவத்துக்கு ஒருவர்; கல்விக்கு இருவர்; வழிக்கு மூவர். * தவத்துக்கு ஒருவர்; தமிழுக்கு இருவர். * தவத்தோர் மனம் அழுங்கச் செய்யக் கூடாது. * தவம் இருக்க அவம் செய்தாற் போல். * தவழும் குழந்தைக்கு நடக்கும் குழந்தை யமன். * தவளை கத்தினால் உடனே மழை. * தவளை கூவிச் சாகும். * தவளை தண்ணீருக்கு இழுக்கிறது; ஓந்தி மேட்டுக்கு இழுக்கிறது. * தவளை தன் வாயால் கெடும். * தவளை தாமரைக்குஅருகில் இருந்தும் அதன் தேனை உண்ணாது. * தவளை வாழ்வும் தனிசு வாழ்வும் ஆகா. * தவிட்டுக்கு ஆசைப்பட்டுத் தீட்டிய அரிசியை நாய் கொண்டு போனதாம். * தவிட்டுக்கு வந்த கைதான் தங்கத்துக்கும் வரும். * தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை தன் பிள்ளை ஆகுமா? * தவிட்டுப் பானைக்குள்ளே எலி குமரி ஆனது போலே. * தவிட்டை நம்பிப் போகச் சம்பா அரிசியை நாய் கொண்டு போயிற்று. * தவிடு அள்ளின கை தனம் அள்ளும். * தவிடு தவிடு என்றால் குருடு குருடு என்கிறான். * தவிடு தின்கிறதில் ஒய்யாரம் வேறா? * தவிடு தின்பவன் அமுதை விரும்புவானா? * தவிடு தின்பவனை எக்காளம் ஊதச் சொன்னாற் போல. * தவிடு தின்னும் அம்மையாருக்கு விளக்குப் பிடிக்க ஓர் ஆளா? * தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடிப்பவன் மந்திரி. * தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத பாவி. * தழைத்த மரத்துக்கு நிழல் உண்டு; பிள்ளை பெற்றவளுக்குப் பால் உண்டு. * தழைத்த மரம் வளையாத கணக்கும் உண்டோ? * தழைந்து போனால் குழைந்து வருவான். * தள்ளத் தள்ளத் தாழ்ப்பாளைப் பிடிப்பானேன்? * தள்ளத் தள்ளத் தாழ்ப்பாளை மெள்ள மெள்ளத் திறப்பானேன்? * தள்ளரிய தாறு வந்து தாய் வாழையைக் கெடுத்தாற் போல. * தள்ளாதவன் மனைவி பிள்ளைத்தாய்ச்சி; தள்ளிவிட்டு ஓடுதாம் குள்ளநரி. * தள்ளாவிட்டால் ஆசாரம் இல்லை; இல்லாவிட்டால் உபசாரம் இல்லை. * தள்ளாதவனுக்கு ஆசாரம் இல்லை; தரித்திரனுக்கு உபசாரம் இல்லை. * தள்ளி ஊட்டினது தலைக்குட்டி. * தள்ளிப் பேசினாலும் தழுவிக் குழைகிறது. * தளபதி இல்லாத தளம், கரை இல்லாத குளம். * தளர்ந்த கிழவனுக்குச் சோறும், இடிந்த சுவருக்கு மண்ணும் உண்டானால் சில நாட்கள் நிற்கும். * தறுதலைக்குத் தயவு ஏது? * தறுதலைக்கு ராஜா சவுக்கடி. * தன் அழகு தனக்குத் தெரியாது. * தன் அறிவு வேணும்; இல்லை என்றால் சொல்லறிவு வேணும். * தன் ஆள் இல்லா வேளாண்மையும்; தான் உழாத நிலமும் தரிசு. * தன் இச்சையை அடக்காவிட்டால் அது தன்னையே வருத்தும். * தன் இனம் தன்னைக் காக்கும்; வேலி பயிரைக் காக்கும். * தன் உயிர் கருப்பட்டி. * தன் உயிர் தனக்குச் சர்க்கரை. * தன் உயிர் போல மண் உயிர் காக்க * தன் உயிரைத் தின்கிறான். * தன் உயிரைப் போல மண்ணுயிருக்கு இரங்கு. *தன் ஊர் கிழக்கு, தங்கின ஊர் மேற்கு, வேட்டகம் தெற்கு, வேண்டா ஊர் வடக்கு. * தன் ஊர்ச் சுடுகாட்டுக்கும் அயல் ஊர் ஆற்றுக்கும் அஞ்ச வேண்டும். * தன் ஊரில் தாய் அடிக்காதவன் அயலூரில் ஆனை அடித்தானாம். * தன் ஊருக்கு அன்னம், பிற ஊருக்குக் காகம். * தன் ஊருக்கு ஆனை; அயலூருக்குப் பூனை. * தன் ஊருக்குக் காளை; அயல் ஊருக்குப் பூனை. * தன் ஊருக்குப் புலி; அசலூருக்கு நரி. * தன் கண் இரண்டும் போனாலும் அயலான் கண் ஒன்றாவது போகவேண்டும். * தன் கண் தனக்குத் தெரியாது. * தன் கண்ணைக் கொடுத்து வெங்கண்ணை வாங்க வேண்டும். * தன் கஷ்டத்தை விடப் பெண் கஷ்டம் பொல்லாது. * தன் காசு செல்லாவிட்டால் தட்டானைக் கட்டி அடித்தானாம். * தின் காயம் தனக்குத் தித்திப்பு. * தன் காரியதுரந்தான், பிறர் காரியம் வழவழ என்று விடுகிறவன். * தன் காரியப் புலி. * தன் காரியம் என்றால் தன் சீலையும் பதைக்கும். * தன் காரியம் தனக்குத் தித்திப்பு. * தன் காரியம் பாராதவன் சதைக்கு ஒரு புழுப் புழுப்பான். * தன் காரியம் ஜரூர், சாமி காரியம் வழவழா. * தன் கால் பெருவிரலைப் பார்த்து நடக்க வேண்டும். * தன் காலைத் தானே கும்பிட்டுக் கொள்ளலாமா? * தன் கீர்த்தியை விரும்பாதவனைத் தள்ளிவிடு. * தன் குஞ்சு என்று வளர்க்குமாம், குயிற் குஞ்சைக் காகம். * தன் குணம் போல் தனக்கு வரும் வாழ்வு. * தன் குற்றம் இருக்கப் பிறர் குற்றம் பார்க்கிறதா? * தன் குற்றம் கண்ணுக்குத் தோன்றாது. * தன் குற்றம் தனக்குத் தெரியாது. * தன் குற்றம் பார்ப்பவர் இங்கு இல்லை. * தன் குற்றம் முதுகில்; பிறர் குற்றம் எதிரில். * தன் குற்றமும் பெண்டாட்டி நாற்றமும் தெரியா. * தன் குற்றமும் முதுகும் தனக்குத் தெரியா. * தன் கை ஆயுதம் பிறன் கையிற் கொடுப்பவன் பதர். * தன் கைத் தவிடு உதவுவது போலத் தாயார் கைத்தனம் உதவாது. * தன் கையே கண்ணைக் குத்தினாற் போல. * தன் கையே தனக்கு உதவி. * தன் கொல்லையில் கீரையை வைத்துக் கொண்டு அசல் வீட்டுக்குப் போவனேன்? * தன் சோற்றில் உள்ள கல்லைப் பொறுக்கமாட்டாதவன் சொக்கனார் கோயில் மதிற் கல்லைப் பிடுங்கப் போனானாம். * தன் சோற்றைத் தின்று தரையில் இருந்தால் வீண் சொல் கேட்க விதியோ! * தன் சோறு தின்று, தன் புடைவை கட்டி, விண் சொல் கேட்க விதியோ? * தன் தப்புப் பிறருக்குச் சந்து. * தன் தலையில் அக்ஷதை போட்டுக் கொள்கிறான். * தன் தார் தார் பரதார புத்திரன். * தன் தொழிலைப் பாராதவனுக்குத் தலையளவு பஞ்சம். * தன் நாயை உசுப்பியே தன்னைக் கடிக்கச் செய்யலாம். * தன் நாற்றத்தைத் தானே. கிளப்பிக் கொள்கிறதா? * தன் நிலத்தில் குறுமுயல் தந்தியிலும் வலிது. * தன் நிழல் தன்னைக் காக்கும். * தன் நெஞ்சு அறியாத பொய் இல்லை; தாய் அறியாத சூல் இல்லை. * தன் நெஞ்சே தன்னைச் சுடும். * தன் நோய்க்குத் தானே மருந்து. * தன் பணம் செல்லா விட்டால் தட்டானைக் கட்டி அடித்தானாம். * தன் பல்லைக் குத்திப் பிறர் மூக்கில் வாசனை காட்டுவது போல. * தன் பல்லைக் குத்தித் தன்னையே நாத்திக் கொள்ளலாமா? * தன் பல்லைப் பிடுங்கிப் பிறர் வாயில் வைக்கலாமா? * தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும். * தன் பாவம் தவினோடே. * தன் பானை சாயப் பிடிக்கிறது இல்லை. * தன் பிள்ளை என்று தலைமேல் வைத்துக் கொள்ளலாமா? * தன் பிள்ளைக்குப் பதைக்காதவள் சக்களத்தி பிள்ளைக்குப் பதைப்பாளா? * தன் பிள்ளையைத் தான் அடிக்கத் தலையாரியைச் சீட்டுக் கேட்கிறது போல. * தன் மகன் போனாலும் குற்றம் இல்லை; மருமகள் தாலி அறுக்க வேண்டும். * தன் மனம் பொன் மனம். * தன் மா ஆனால் தின்னாளோ? தானே வாரி மொக்காளோ * தன் முதுகில் அழுக்கு இருப்பது தெரியாமல் பிறன் முதுகில் அழுக்கு அழுக்கு என்பது போல. * தன் முதுகு ஒரு போதும் தனக்குத் தெரியாது. * தன் மூக்கு அறுபட்டாலும் எதிரிக்குச் சகுனப் பிழை. * தன்மை உடைமை தலைமை. * தன் வயிற்றைத் தான் உலர வைக்கலாமா? * தன் வாய்க் கஞ்சியைக் கவிழ்த்துப் போட்டான். * தன் வாயிலே சீதேவி, முன் வாயிலே மூதேவி. * தன் வாயால் தவளை கெட்டது. * தன் வாயால்தான் கெட்டதாம் ஆமை. * தன் வாயால் தான் கெட்டான். * தன் வாலைச் சுற்றிக் கொள்ளும் நாய் போல. * தன் வினை தன்னைச் சுடும்; ஒட்டப்பம் வீட்டைச் சுடும். * தன் வீட்டு அகமுடையான் தலை மாட்டிலும் அசல் வீட்டு அக முடையான் கால் மாடும் நலம். * தன் வீட்டுக் கதவை இரவல் கொடுத்துவிட்டு விடிய விடிய நாய் காத்தாளாம். * தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அயல் வீட்டுக்கு வைத்தாற் போல. * தன் வீட்டுக்குத் தவிடு இடிக்கவில்லையாம்; ஊரார் வீட்டுக்கு இரும்பு இடிக்கப் போனாளாம். * தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை அசல் வீட்டுக்குப் போகச் சொன்னால் போவானா? * தன் வீட்டு நாய் என்று தாவ விடுவதா? * தன் வீட்டுப் படலை இரவல் கொடுத்துவிட்டு விடிய விடிய நாய் காத்தானாம். * தன் வீட்டு விளக்கு என்று முத்தம் இடலாமா? * தன் வீட்டு விளக்குத் தன்னைச் சுடாதா? * தன் வீடு தவிர அசல் வீட்டுக்கு மேட்டு வரி என்றான். * தன்னது தன்னது என்றால் குசுவும் மணக்கும். * தன்னந் தனியே போகிறாள்; திமிர் பிடித்து அலைகிறாள். * தன்னவன் செய்கிறது மன்னனும் செய்யான். * தன்னவன் தனக்கானவனாய் இருந்தால் தலைப் பாதியில் இருந்தால் என்ன? கடைப் பந்தியில் இருந்தால் என்ன? * தன்னால் இல்லாத வேளாண்மையும் தான் உழாத நிலமும் தரிசு. * தன்னால் தான் கெட்டான் பத்மாசுரன். * தன்னாலே தாழ் திறந்தால் தச்சன் என்ன செய்கிறது. * தன்னாலே தான் கெட்டால் அண்ணாவியார் என்ன செய்வார். * தன்னில் எளியது தனக்கு இரை. * தன்னை அழுத்தினது சமுத்திரம். * தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான். * தன்னை அறிந்தவன் தானே தலைவன். * தன்னை அறிந்து பின்னைப் பேசு. * தன்னை அறியாச் சன்னதம் உண்டா? * தன்னை அறியாதவன் தலைவனை அறியான். * தன்னை அறியாப் பேயாட்டம் உண்டா? * தன்னை இகழ்வாரைப் பொறுத்தலே தலையாம். * தன்னை ஒளித்து ஒரு வஞ்சனை இல்லை. * தன்னைக் கட்டக் கயிறு யானை தானே கொடுத்தாற் போல். * தன்னைக் காக்கிற் கோபத்தைக் காக்க வேண்டும். * தன்னைக் கொல்ல வந்தது ஆயினும் பசுவைக் கொல்லல் ஆகாது. * தன்னைக் கொல்லவந்த பசுவைத் தான் கொன்றால்பாவம் இல்லை. * தன்னைச் சிரிப்பது அறியாதாம் பல்லாவரத்துக் குரங்கு * தன்னைச் சிரிப்பாரைத் தான் அறியான். * தன்னைத் தானே பழிக்குமாம். தென்ன மரத்திலே குரங்கு இருந்து, * தன்னைத் தானே மெச்சிக் கொள்ளுமாம் தவிட்டுக் கொழுக்கட்டை. * தன்னைப் பணிவாரைத் தான் பணியக் காலம் வந்தது. * தன்னைப் பாடுவான் சம்பந்தன்; என்னைப் பாடுவான் அப்பன்; பொன்னைப் பாடுவான் சுந்தரன். * தன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லையாம் தென்னமரத்துக் குரங்கு; பார்த்துப் பார்த்துச் சிரிக்கிறதாம் பலா மரத்துக் குரங்கை. * தன்னைப் புகழ்தலும் தரும் புலவோர்க்கே. * தன்னைப் புகழ்வானும் சாண் ஏறி நிற்பானும் பொன்னைப் புதைத்துப் போவானும் பேய். * தன்னைப் புகழாத கம்மாளன் இல்லை. * தன்னைப் புகழாதவரும் இல்லை; தனித்த இடத்தில் குசுவாத வரும் இல்லை. * தன்னைப் பெற்ற ஆத்தாள் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாள்; தம்பி கும்பகோணத்தில் கோதானம் பண்ணுகிறான். * தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப்பிச்சை வாங்குகிறாள்; தங்கத்தாலே சரப்பளி தொங்க ஆடுகிறதாம். * தன்னைப் பெற்றவள் கொடும்பாவி; தன் பெண்ணைப் பெற்றவள் மகராசி. * தன்னைப் போல வேணுமாம் தவிட்டுக்குக் கட்டை. * தனக்காகப் புத்தி இல்லை; பிறத்தியார் சொல் கேட்கிறதும் இல்லை. * தனக்கு அழகு மொட்டை; பிறர்க்கழகு கொண்டை. * தனக்கு அழகு மொட்டை, பிறர்க்கு அழகு கொண்டை. * தனக்கு ஆகாத பானை உடைந்தால் என்ன? இருந்தால் என்ன? * தனக்கு இல்லாத அழகு தண்ணீர்ப் பானையைப் பார்த்தால் தீருமா? * தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு. * தனக்கு உகந்த ஊணும் பிறர்க்கு உகந்த கோலமும். * தனக்கு உண்டு; எதிரிக்கு இல்லை. * தனக்கு உதவாத பாலைக் கொட்டிக் கவிழ்த்தாளாம். * தனக்கு உதவாத பிள்ளை ஊருக்கு உதவும். * தனக்கு எளிய சம்பந்தம்; விரலுக்குந் தகுந்த வீக்கம். * தனக்கு எளியது சம்பந்தம்; தனக்குப் பெரியது விம்மந்தம். * தனக்கு என்றால் பிள்ளையும் களை வெட்டும். * தனக்கு என்றால் புழுக்கை கலம் கழுவி உண்ணான். * தனக்கு என்று அடுப்பு மூட்டித் தான் வாழும் காலத்தில் வயிறும் சிறுக்கும்; மதியும் பெருக்கும். * தனக்கு என்று இருந்தால் சமயத்துக்கு உதவும். * தனக்கு என்று ஒருத்தி இருந்தால் தலைமாட்டில் இருந்து அழுவாள். * தனக்கு என்று கொல்ல நாய் வெடுக்கென்று பாயும். * தனக்கு என்ன என்று இருக்கல் ஆகாது; நாய்க்குச் சோறு இல்லை ஆயின். * தனக்கு ஒன்று, பிறத்தியாருக்கு ஒன்று. * தனக்குக் கண்டுதானே தானம் வழங்க வேண்டும்? * தனக்குச் சந்தேகம்; அடைப்பைக்காரனுக்கு இரட்டைப் படியாம். * தனக்குத் தகாத காரியத்தில் பிரவேசிப்பவன் குரங்கு பட்ட பாடுபடுவான். * தனக்குத் தகாத காரியம் செய்தால் ஆளுக்குப் பிராண சேதத்துக்கு வரும். * தனக்குத் தங்கையும் தம்பிக்குப் பெண்டாட்டியும். * தனக்குத் தவிடு இடிக்கத் தள்ளாது; ஊருக்கு இரும்பு அடிக்கத் தள்ளும். * தனக்குத் தவிடு குத்த மாட்டாள்; அயலாருக்கு இறுங்கு இடிப்பாள். * தனக்குத் தனக்கு என்றால் தாய்ச்சீலையும் பதக்குக் கொள்ளும். * தனக்குத் தனக்கு என்றால் பிடுங்கும் களை வெட்டும். * தனக்குத் தாறும் பிறைக்குத் தூணும். * தனக்குத் தானே கனியாத பழத்தைத் தடி கொண்டு அடித்தால் கனியுமா? * தனக்கும் தெரியாது; சொன்னாலும் கேட்கமாட்டான். * தனக்குப் பிறந்த பிள்ளை தவிட்டுக்கு அழுகிறதாம்; ஊரார் பிள்ளைக்குக் கூட்டுக் கல்யாணம் செய்கிறானாம். * தனக்குப்பின் தானம். * தனக்குப் பின்னால் அகம் இருந்து என்ன? கவிழ்ந்து என்ன? * தனக்குப் பின்னால் வாழ்ந்தால் என்ன? கெட்டால் என்ன? * தனக்குப் பெரியாரைத் தடிகொண்டு அடிக்கிறது. * தனக்குப் போகத் தானம். * தனக்கும் உயர்ந்த குலத்தில் பெண்ணைக் கொடு; தன்னிலும் குறைந்த இடத்தில பெண்ணை எடு. * தனக்கு மிஞ்சித்தான் பரோபகாரம். * தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப்பிழை வேண்டும். * தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் காய்ச்சலும். * தனக்கே தகராறாம்; தம்பிக்குப் பழையதாம். * தனக்கே தாளமாம்; தம்பிக்குப் பலகாரமாம். * தனத்தால் இனம் ஆகும்; பணத்தால் ஜனம் ஆகும். * தனம் இரட்டிப்பு; தானியம் முத்திப்பு. * தனிக் காட்டு ராஜா. * தனி மரம் தோப்பு ஆகுமா? * தனி வழி போகாதே; அரவத்தொடு ஆடாதே. * தனிவழியே போனவளைத் தாரம் என்று எண்ணாதே. ==தா== மணம் க்ளா மோக்ளா இல்லை * தாகம் இருக்கிறது; இரக்கம் இல்லை * தாங்கித் தாங்கிப் பார்த்தால் தலைமேல் ஏறுகிறான் * தாங்கினால் தலைமேல் ஏறுகிறான் * தாங்குகிற ஆள் உண்டு; தளர்ச்சி உண்டு * தாசரி தப்புத் தண்டவாளத்துக்குச் சரி * தாசிக்குப் பாளையம் கொடுத்தால் தகப்பனும் போகலாம்; பிள்ளையும் போகலாம் * தாசி பகட்டும் தாவணி மிரட்டும் போகப் போகத் தெரியும் * தாசி பிள்ளைக்குத் தகப்பன் யார்? * தாசில் தடுமாறிப் போகிறது! * தாசில்தார் கோழி முட்டை சம்சாரி அம்மிக்கல்லையும் உடைக்கும் * தாசில்தாருக்குத் தாசில் வேலை போனாலும் சமையல்காரனுக்குச் சமையல் வேலை போகவில்லை * தாசில்தாருக்கு வேலை போச்சு; சமையல்காரனுக்கு என்ன கவலை? * தாசி வீட்டுக்குப் போனபின் தாய் இல்லாப் பிள்ளை என்றால் விடுவாளா? * தாலி இல்லாத கல்யாணமும், புருஷன் இல்லாத பேறும் அர்த்தமற்றது. * தாலி இல்லாமல் கல்யாணம் பண்ண முடியுமா? * தாலி கழுத்தில் இருந்தால் தான் சுமங்கலி; இல்லாவிட்டால் அமங்கலி * தாலி கட்டிய புருஷனை எதிர்த்துப் பேசலாமா? * தாலி கழுத்துல ஏறிட்டா புருஷன் கூடத்தான் சேர்ந்து வாழனும். * தாலி பெண்ணுக்கு வேலி * தாலிக்கு அக்கினி சாட்சி. வேலிக்கு ஓணான் சாட்சி. * தாட்டோட்டக்காரனுக்குத் தயிறும் சோறும்; விசுவாசக்காரனுக்கு வெந்நீரும், பருக்கையும். * தாட்டோட்டக்காரனைக் கூடுவதிலும் தனியே இருப்பது நலம் * தாடிக்குப் பூக் கட்டலாமா? * தாடிக்கும் பூண் கட்டலாமா? * தாடிக் கொம்புத் தள வரிசை மாதிரி * தாடி பற்றி எரியும் போது சுருட்டுக்கு நெருப்புக் கேட்டது போல * தாடி வளர்த்தவர்கள் எல்லாம் தத்துவ ஞானிகளா? * தாதத்தியைக் கெடுத்தவன் தாதன்; குயவனைக் கெடுத்தவள் குயத்தி * தாதன் ஆட்டம் திருப்பதியிலே தெரியும் * தாதன் கையிலே அகப்பட்ட குரங்கு போல அலைகிறான் * தாதனும் பறையனும் போல * தாதனைக் கண்டால் ரங்கன். ஆண்டியைக் கண்டால் லிங்கன் * தாதா கோடிக்கு ஒருவர் * தாது அறியாதவன் பேதை வைத்தியன் * தாதும் இல்லை, பிராதும் இல்லை * தாபரம் இல்லா இளங் கொடி போல * தாம் கெட்டாலும் பிறருக்குக் கேடு நினைக்கல் ஆகாது * தாம்பும் அறுதல், தோண்டியும் பொத்தல் * தாம்பூலத் தட்டுச் சாதிக்காதது இல்லை, * தாம்பை விட்டு வாலைப் பிடிக்கிறது போல, * தாம்வளர்த்ததோநேச்சு மாமரம் ஆயினும் கெடார் * தாம் வளைவார் பிறருக்கு ஊற்றங்கோள் ஆகார் * தாமதம் தாழ்வுக்கு ஏது * தாமரை இல்லாத் தடாகம் போல * தாமரை இலைத் தண்ணீர் போல * தாமரை இலையில் தண்ணீரைப் போல் தவிக்கிறான் * தாமரையில் விழுந்த மழைத் துளி போல * தாய் அவிடே, தாக்கோல் இவிடே * தாய் அற்றால் சீர் அறும் * தாய் அறியாத சூல் இல்லை * தாய் இட்டி பேரை ஊர் இட்டு அழைக்கும் * தாய் இடப் பிள்ளை இடந் தானே மனம் மகிழ * தாய் இருந்தால் நாய் வருமா? * தாய் இல்லாக் குழந்தை தானே வளரும் * தாய் இல்லாத போது தகப்பன் தாயாதி * தாய் இல்லாத பிள்ளை ஊருக்கு ஆகுமா? * தாய் இல்லாத பிள்ளை தறுதலை * தாய் இல்லாத பிறந்தகமும் கணவன் இல்லாத புக்ககமும் * தாய் இல்லாதவனுக்கு ஊர் எல்லாம் தாய் * தாய் இல்லாப் பிள்ளை என்றால் தேவடியாள் கேட்க மாட்டாள் * தாய் இல்லாப் பிள்ளைக்கு நாய் பட்ட பாடு * தாய்வார்த்தை கேளாப் பிள்ளை நாய்வாய்ச் சீலை * தாயும் பிள்ளையும் ஒன்றானாலும், வாயும் வயிறும் வேறு. * தாயைப் பார்த்து மகளைக் கொள்ளு. * தான் தின்னத் தவிடில்லை, தங்கத்தாலே தாலி தொங்கத் தொங்கப் போடச் சொன்னாளாம். * தாரமும் குருவும் தலைவிதிப்படி. * தாய் செத்தால் மணம்,மகள் செத்தால் பிணம். ==தீ== * தீப்பட்ட புண்ணில் ஈர்க்கினால் குத்தியது போல * தீப்பட்ட வீட்டிலே கரிக்கட்டைக்குப் பஞ்சமா? * தீப்பட்ட வீட்டிலே பிடுங்கினது ஆதாயம் * தீப்பட்ட வீட்டுக்குப் பீக்குட்டைத் தண்ணீர் * தீப்பட்ட வீட்டுக்கு மேல் காற்றுப் போல * தீப்பட்டால் பூனை காட்டிலே * தீப்பந்தம் கண்ட ஆனை போல * தீப்புண் ஆறும்; வாய்ப்புண் ஆறாது * தீபத்தில் ஏற்றிய தீவட்டி * தீபாவளிக் கோழியைப் போல * தீ மிஞ்ச வைத்தாலும் பகை மிஞ்ச வைக்கல் ஆகாது * தீமை மேலிடத் தெய்வம் கைவிட்டது * தீமையை மெச்சுகிறவன் தீமையாளிதான் * தீமையை வெல்ல நன்மையைச் செய் * தீயாரைச் சேர்ந்து ஒழுகல் தீது; தீயார் பணி செய்வதுவும் தீது * தீயாரோடு இணங்காதே; சேப்பங் கிழங்குக்குப் புளி குத்தாதே * தீயில் இட்ட நெய் திரும்பி வருமா? * தீயினால் சுட்ட புண் ஆறும்; வாயினால் சுட்ட புண் ஆறாது * தீயும் தீயும் சேர்ந்து பெருந்தீ ஆனாற் போல் * தீயும் பயிருக்குப் பெய்யும் மழைபோல * தீயைச் செல் அரிக்குமா? * தீயை மிதித்தவன்போல் திகைத்து நிற்கிறான் * தீயோரை விடுதலை ஆக்குகிறவன் நல்லோருக்கு நஷ்டம் செய்வான் * தீர்க்கத் திறன் அற்றவன் தேசிகன் ஆவான் * தீர்க்கதரிசி, பீங்கான் திருடி * தீர்த்தக் கரைப் பாவி * திரக் கற்றவன் தேசிகன் ஆவான் * தீராக் கோபம் போராய் முடியும் * தீராச் சந்தேகம் போருக்கு யத்தனம் * தீராச் செய்கை சீர் ஆகாது * தீரா நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி * தீரா நோய்க்குத் தெய்வமே கதி * தீராப் பொறிக்குத் தெய்வமே துணை * தீரா வழக்குக்குத் தெய்வமே சாட்சி * தீரா வழக்கு நேர் ஆகாது * தீவட்டிக்காரனுக்குக் கண் தெரியாது * தீவட்டிக் கொள்ளை கால் வட்டிக்கு ஈடு ஆகாது * தீவட்டிக் கொள்ளை போன பின் திருமங்கல்யச் சரடு தேடினாளாம் * தீவட்டி தூக்க வேண்டுமானாலும் திருமண் போடத் தெரியவேணும் * தீவட்டியின் கீழ் விளக்கு * தீவாள் திடுக்கிடுவாள்; திண்ணைக்கு மண் இடுவாள்; வருகிற கிழமைக்கு வாசலுக்கு மண் இடுவாள் * தீவிளிக்குத் தீவிளி தலை முழுகுகிறாள் * தீவினை செய்தவர்க்கே சேரும் * தீவினை செய்யின் பெய்வினை செய்யும் * தீவினை முற்றிப் பாழ்வினை ஆச்சுது * தீனிக்கு அடுத்த லத்தி; சாதிக்கு அடுத்த புத்தி * தீனிக்குத் திம்ம ராஜா, வேலைக்கு வெற்று ராஜா * தீக்ஷிதன் வீட்டுக் கல்யாணம் திமிலோகப்படுகிறது ==து== * துக்கத்தை எல்லாம் விட்டுவிட்டுத் தொட்டிச்சியைக் குத்தகையாக வைத்துக் கொண்டானாம் * துக்கத்தைச் சொல்லி ஆற்ற வேண்டும்; கட்டியைக் கீறி ஆற்ற வேண்டும் * துக்கப்பட்டவருக்கு வெட்கம் இல்லை * துக்கம் அற்றவனுக்குச் சொக்கட்டான் * துக்கம் உள்ள மனசுக்குத் துன்பம் ஏன் வேறே? * துக்கலூரிலும் கல்யாணம்; துடியலூரிலும் கல்யாணம்; நாய் அங்கு ஓடியும் கெட்டது; இங்கு ஓடியும் கெட்டது * துக்கிரிக்குத் துடையிலே மச்சம் * துக்குணிச் சிறுக்கிக்கு முக்கலக் கந்தை * துக்குணிச் சொகன் * துஞ்சி நின்றான்; மிஞ்சி உண்ணான் * துட்டுக்கு இரண்டு; துக்காணிக்கு மூன்று * துட்டுக்கு எட்டுக் குட்டி ஆனாலும் துலுக்கக் குட்டி உதவாது * துட்டுக்கு எட்டுச் சட்டி வாங்கிச் சட்டி எட்டுத் துட்டுக்கு விற்றாலும் வட்டிக்கு ஈடு ஆகாது * துட்டுக்கு ஒரு சேலை விற்றாலும் நாய் பிட்டம் அம்பலம் * துட்டுக்கு ஒரு பிள்ளை கொடுத்தாலும் துலுக்கப் பிள்ளை கூடாது * துட்டு வந்து பெட்டியில் விழுந்ததோ? திட்டு வந்து பெட்டியில் விழுந்ததோ? * துட்டைக் கொடுத்துத் துக்கத்தை வாங்கிக் கொண்டாளாம் * துடிக்கக் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுகிறது * துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு * துடுப்பு இருக்கக் கை வேளானேன்? * துடைகாலி முண்டை துடைத்துப் போட்டாள் * துடைகாலி வந்ததும் எல்லாம் தொலைந்து போச்சுது * துடை தட்டின மனிதனும் அடை தட்டின வீடும் பாழ் * துடைப்புக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டினது போல * துடையில் புண், மாமனார் வைத்தியம் * துடையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுகிறதா? * துண்டுப் பாளையக்காரன் இடைநடுவில் அடிக்கிறது போல * துண்டும் துணியும் சீக்கிரம் விலை போகும்; பட்டும் பணியும் பையத்தான் விலை போகும் * துணிக்குப் போதுமானபடி சொக்காய் வெட்டு; வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்யாதே * துணிகிறவளுக்கு வெட்கம் இல்லை; அழுகிறவளுக்குத் துக்கம் இல்லை * துணிந்த மல்லுக்குத் தோளில் சுட்டால் அதுவும் ஒரு ஈக்கடி * துணிந்த முண்டையைத் துடையில் சுட்டால் அதுவும் ஒர் ஈக்கடி என்று சொன்னாளாம் * துணிந்தவருக்குச் சமுத்திரம் முழங்கால் ஆழம் * துணிந்தவன் ஐயம்பேட்டையான் * துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை; அழுதவனுக்கு அகங்காரம் இல்லை * துணிந்தவனுக்குத் துணை வேண்டுமா? * துணிந்தவனுக்குப் பயமா? * துணிந்தாருக்குத் துக்கம் உண்டா? பணிந்தாருக்குப் பாடு உண்டா? * துணியைத் தூக்குவதற்கு முன்னே தொடையில் வைப்பது போல * துணிவது பின்; நினைவது முன் * துணிவும் பணிவும் துக்கம் தீர்க்கும் * துணை இரண்டானால் தூக்கணத்துக்கு மனைவி இரண்டு * துணை இருப்பாருக்கு வினை இழைப்பதா? * துணை உடையான் படைக்கு அஞ்சான் * துணைக்குத் துணையும் ஆச்சு: தொண்டைக் குழிக்கு வினையும் ஆச்சு * துணைப்பட்டால் சாக வேணும்; பிணைப்பட்டால் இருக்க வேணும் * துணை பெற்றவன் வீண் போகான் * துணை போய் இரு; பொங்கினதைத் தேடு * துணை போனாலும் வினை போகாதே * துணையோடு அல்லது நெடுவழி போகேல் * துப்பட்டியில் கிழித்த கோவணந்தானே? * துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்தாற் போல * துப்பு அற்ற நாரிக்குக் கொம்பு அழகைப் பார் * துப்பு அற்ற புருஷனுக்குத் துறுதுறுத்த பெண்டாட்டி * துப்பு அற்றவனை உப்பிலே பார்; சீர் அற்றவனை நீரிலே பார் * துப்புக் கெட்ட சாம்பானுக்கு இரட்டைப் படித்தரம், தூர்ந்த கிணற்றுக்கு இரட்டை ஏற்றம் * துப்புக் கெட்ட நாய்க்கு இரட்டைப் பங்கு * துப்புக் கெட்ட மாப்பிள்ளைக்கு இரட்டைப் பெண்டாட்டி * துப்புக் கெட்டவனுக்கு இரட்டைப் பங்கு * துப்புக் கெட்டவளுக்கு இரட்டைப் பரிசமா? * தும்பி பறந்தால் தூரத்தில் மழை * தும்பைத் தறித்து வாலைப் பிடிப்பது போல * தும்பை விட்டுப் பிடிக்க வேண்டும் * தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே * தும்மல் நன்னிமித்தம் * தும்மினால் குற்றம், இருமினால் அபராதம் * தும்பினால் மூக்கு அறுந்து போகிறதே! * தும்பினும் குற்றம்; ஒழியினும் குற்றம் * தும்முகிற போது போகிற மூக்கா? * துயரப்பட்டால் ஆறுதல் உண்டு; துன்பப் பட்டால் தேறுதல் உண்டு * துர்ச்சனப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள் * துர்ச்சனன் உறவிலும் சற்சனன் பகை நலம் * துர்ச்சனனைக் கண்டால் தூர விலகு * துர்ப்பலத்திலே கர்ப்பிணி ஆனால் எப்படி முக்கிப் பெறுகிறது? * துர்ப்புந்தி மந்திரியால் அரசுக்கு ஈனம்; சொற்கேளாப் பிள்ளைகளால் குலத்துக்கு ஈனம் * துரியோதனன் குடிக்குச் சகுனி வாய்த்ததைப் போல * துருசு கல்வி; அரிது பழக்கம் * துருத்தியைக் கண்ட இரும்பா? * துரும்பு கிள்ளுவது துர்க்குறித்தனம் * துரும்பு தூண் ஆகுமா? * துரும்பு தூண் ஆனால் தூண் என்ன ஆகாது? * துரும்பு நுழைய இடம் இருந்தால் ஆனையை நுழைப்பான் * துரும்பும் கலத் தண்ணீர் தேக்கும் * துரும்பு முற்றின கோபம் விசும்பு முட்டத் தீரும் * துரும்பைத் தூண் ஆக்குகிறதா? * துரும்பை மலை ஆக்காதே * துரும்பை வைத்து மூத்திரம் பெய்கிறதா? * துரை ஆண்டால் என்ன? துலுக்கர் ஆன்டால் என்ன? * துரை இஷ்டம்; கனம் இஷ்டம் * துரை உதைத்தது தோஷம் இல்லை; பட்லர் சிரித்தது பழியாய் வளர்ந்தது * துரைகளுடனே சொக்கட்டான் ஆடினாற் போலே * துரைகளோடே சொக்கட்டான் ஆடினால் தோற்றாலும் குட்டு; வென்றாலும் குட்டு * துரைகளோடே சொக்கட்டான் ஆடினாற் போல * துரைகளோடே சொக்கட்டான் போடலாகுமோ? * துரை கையில் எலும்பு இல்லை * துரைச் சித்தம் கனச்சித்தம் * துரை நல்லவர்; பிரம்பு பொல்லாதது * துரை நாய்ச்சியார் கும்பிடப் போய்ப் புறப்பட்ட ஸ்தனம் உள்ளே போச்சுது * துரை வீட்டு நாய் நாற்காலி மேல் ஏறினது போல * துரோகத்தால் கொண்ட துரைத்தனம், குடிகளை வருத்தும் கொடுங்கோல் * துரோபதையைத் துகில் உரிந்தது போல * துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும் * துலாத்தில் வெள்ளி உலாத்தில் பெய்யும் மழை * துலுக்குக் குடியில் ஏது பேயாட்டம்? * துலுக்கச்சிக்கு எதற்கு உருக்கு மணி? * துலுக்கத் தெருவிலே ஊசி விற்றது போல * துலுக்கத் தெருவிலே தேவாரம் ஓதினது போல * துலுக்கன் உடுத்துக் கெட்டான்; பார்ப்பான் உண்டு கெட்டான் * துலுக்கன் கந்தூரி தூங்கினால் போச்சு * துலுக்கன் செத்தால் தூக்குவது எப்படி? * துலுக்கன் துணியால் கெட்டான்; பார்ப்பான் பருப்பால் கெட்டான் * துலுக்கன் புத்தி தொண்டைக்குழி வரைக்கும் * துலுக்கன் வீட்டில் துணிக்கு என்ன பஞ்சம்? * துலுக்கனுக்கு ஏன் துறட்டுக் கடுக்கன்? * துவி நாக்கு இடறும் * துவைத்துத் தோள்மேற் போட்டுக் கொண்டான் * துழாவிக் காய்ச்சாதது கஞ்சியும் அல்ல; வினாவிக் காட்டாதது கல்யாணமும் அல்ல * துள்ளாதே, துள்ளாதே ஆட்டுக்குட்டி. என் கையில் இருக்கிறது சூரிக் கத்தி * துள்ளாதே, துள்ளாதே, குள்ளா, பக்கத்தில் பள்ளமடா * துள்ளிக் துள்ளிக் குதித்தாலும் வெள்ளிப் பணமும் கிடையாக் காலத்தில் கிடையாது * துள்ளித் துள்ளித் தொப்பென்று விழுகிறாய் * துள்ளின மாடு பொதி சுமக்கும் * துள்ளுகிற கெளுத்துச் செத்துப்போகிறது தெரியாதா? * துள்ளுகிற மாடு பொதி சுமக்காது * துள்ளும் மாள் துள்ளித் துரவில் விழுந்தது * துள்ளு மறி கொலை அறியாது * துளசிக்கு வாசனையும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிற போதே உண்டு * துளி என்றால் நீர்த்துளி * துற்றிச் சமுத்திரம் பொங்கினால் கொள்ளுமாம் கிணறு அநேகம் * துறக்கத் துறக்க ஆனந்தம்; துறந்தபின் பேரின்பம் * துறட்டுக்கு எட்டாதது கைக்கு எட்டுமா? * துறவறம் இல்லறம் மனசிலே * துறவறமும் பழிப்பு இன்றேல் எழிலதாகும் * துறவிக்கு வேந்தன் துரும்பு * துறுதுறத்த வாலு, துக்காணிக்கு நாலு * துன்பத்திற்கு இடம் கொடேல் * துன்பத்தின் முடிவு இன்பம் * துன்பம் உற்றவர்க்கு இன்பம் உண்டு * துன்பம் தருகிற காக்கையின் சத்தத்தால் அதை விரட்டுவார்கள்; இன்பம் தருகிற குயிலை விரட்டார்கள் * துன்பம் தொடர்ந்து வரும் * துன்பம் முந்தி; இன்பம் பிந்தி * துஷ்ட சகவாசம் பிராண சங்கடம் * துஷ்ட சதுஷ்டயம் * துஷ்ட நிக்ரகம், சிஷ்ட பரிபாலனம் * துஷ்டப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள் * துஷ்டர் நேசம் பிராண நஷ்டம் * துஷ்டருடன் சேருவதைவிடத் தனியே இருப்பது மேலானது * துஷ்டரைக் கண்டால் தூர விலகு; கெட்டாரைக் கண்டால் காறி உமிழ் * துஷ்டனைக் கண்டால் எட்டி நில் * துஷ்டனைக் கண்டால் தூர விலகு ==தூ== * தூக்கணத்துக்குத் துயரம் இல்லை; மூக்கணத்துக்கு முசு இல்லை * தூக்கணாங்குருவி குரங்குக்குப் புத்தி சொன்னது போல * தூக்க நினைத்து நோக்கிப் பேசு * தூக்கி ஏற விட்டு ஏணியை வாங்கும் தூர்த்தர் சொல்லைக் கேளாதே * தூக்கி நிறுத்தடா, பிணக்காடாய் வெட்டுகிறேன் என்றாளாம் * தூக்கி நினைத்து நோக்கிப் பேசு * தூக்கிப் போட்டதும் அல்லாமல் குதிரை தோண்டிக் குழிப் பறித்ததாம் * தூக்கி வளர்த்த பிள்ளையும் துடையில் வைத்துத் தைத்த இலையும் உருப்படா * தூக்கி வினை செய் * தூக்கினால் சென்னி துணிக்கத் துணித்துவிடு; மாக்கினால் சக்கரம் போல அடை * தூக்கு உண்டானால் நோக்கு உண்டு * தூங்காதவனது கடாக்குட்டி, விழித்திருந்தவனுக்கும் விளங்கும் குட்டி * தூங்காதவனுக்குச் சுகம் இல்லை * தூங்காதவனே நீங்காதவன் * தூங்கிய நாய்க்குத் துடைப்பம் எதிரி * தூங்கினவன் கன்று கிடாக்கன்று * தூங்கினவன் கன்று சேங்கன்று * தூங்கினவன் சாகிறதில்லை; வீங்கினவன் பிழைக்கிறதில்லை * தூங்கினவன் தொடையிலே கயிறு திரிக்கிறான் * தூங்கினவன் தொடையிலே திரித்த வரைக்கும் லாபம் * தூங்கினவனது கடாக்குட்டி, விழித்திருந்தவனது ஊட்டுக்குட்டி * தூங்குகிற நரிக்கு இரை கிடையாது * தூங்குகிற நாய் தூங்கட்டும் * தூங்குகிற புலியைத் தட்டி எழுப்பினதுபோல * தூங்குகிற வரிக்காரனை எழுப்பி விட்டால் போன வருஷத் தீர்வையும் கொடுத்துவிட்டுப் போ என்பான் * தூங்குகிறவன் துடையிலே சுப்பல் எடுத்துக் குத்தினாற்போல * தூங்குகிறவனை எழுப்புவானேன்? அவன் தொண்ணூறு பணம் குறைந்தது என்பானேன்? * தூங்குகிறவனைத் தட்டி எழுப்பி அத்தாளம் இல்லை என்றாற் போல * தூங்கும் புலியை வால் உருவி விட்டாற் போல * தூங்கு மூச்சி மாப்பிள்ளைக்கு எருமுட்டை பணியாரம் * தூங்குவது சிறிய தூக்கம்; போவதே பெரிய தூக்கம் * தூண்டா விளக்குப் போல * தூண்டில் காரனுக்கு மிதப்பிலே கண் * தூண்டில் நுனி இரைக்கு ஆசைப்பட்டு மீன் உயிர் இழப்பது போல * தூண்டில் போட்டவனுக்குத் தக்கைமேல் கண் * தூண்டில் போட்டு ஆனை பிடிக்கும் புத்திசாலி * தூண்டிலில் அகப்பட்ட மீன் துள்ளி நத்தினால் விடுவார்களா? * தூண்டிலைப் போட்டு வராலை இழுக்கிறது * தூண்டின விரல் சொர்க்கம் பெறும் * தூணி என்கிற அகமுடையானாம்; தூணிப்பதக்கு என்கிற அகமுடையாளாம்; முக்குறுணி என்று பிள்ளை பிறந்தால் மோதகம் பண்ணி நிவேதனம் செய்தார்களாம் * தூணில் புடைவையைக் கட்டினாலும் தூக்கிப்பார்ப்பான் தூர்த்தன் * தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் * தூணிலும் உண்டு; துரும்பிலும் உண்டு; சாணிலும் உண்டு; கோணிலும் உண்டு * தூத்துக்குடிச் சந்தையிலே துட்டுக்கு ஒரு பெண்டாட்டி * தூமத் தீயைக் காட்டிலும் காமத் தீக் கொடிது * தூமை துடைக்கப் பண்ணும் * தூய்மை வாய்மை தரும் * தூர்த்தர் என்போர் சொல் எழுத்து உணரார் * தூர்த்தர் சொல்லைக் கேட்டால் வாய்த்திடும் கேடு * தூர்ந்த கிணற்றைத் தூர் வாராதே * தூர இருந்தால் சேர உறவு * தூர உறவு சேரப் பகை * தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது * தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு * தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி * தூரத்துப் பச்சை பார்வைக்கு இச்சை * தூரத்துப் பார்வைக்கு மலை மழமழப்பு; கிட்டப் போனால் கல்லும் கரடும் * தூரப் போக வேண்டுமா, கீரைப் பாத்தியிற் கை வைக்க? * தூரப் போய்க் கீரைப் பாத்தியிற் பேண்டானாம் * துார மண்டலம் சேய மழை; சேர மண்டலம் தூர மழை * தூர நின்றாலும் தூவானம் நில்லாது * தூலம் இழுத்த கடா நடுவீட்டில் தூங்குமா? * தூற்றித் திரியேல் * தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும் * தூறு ஆடின குடி நீறு ஆகும் * தூஷிப்பாரைப் பூஜிப்பார் இல்லை ==தெ== * தெட்டிப் பறிப்பாரை எட்டிடத்தில் பறிக்கிறது * தெந்தினப் பாட்டுப் பாடித் திருநாமம் இட வந்தான் * தெய்வ அருள் இருந்தால் செத்தவனும் பிழைப்பான் * தெய்வத்துக்குச் சத்தியம்; மருந்துக்குப் பத்தியம் * தெய்வத்துக்குச் செய்வதும் செய்க்கு உரம் போடுவதும் வீண் அல்ல * தெய்வத்தை இகழ்ந்தவர் செல்வத்தை இழந்தார் * தெய்வப் புலவனுக்கு நா உணரும்; சித்திர ஓடாவிக்குக் கை உணரும் * தெய்வ பலமே பலம் * தெய்வம் இட்டபடி நடக்கிறது * தெய்வம் இட்டு விடாமல் வீணர் படியிட்டு விடிவதுண்டோ * தெய்வம் இல்லாமலா பொழுது போகிறதும் பொழுது விடிகிறதும்? * தெய்வம் உண்டு என்பார்க்கு உண்டு; இல்லை என்பார்க்கு இல்லை * தெய்வம் காட்டும்; எடுத்து ஊட்டுமா? * தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது * தெய்வம் கெடுக்காத குடியைத் தெலுங்கன் கெடுப்பான் * தெய்வம் கைகூட்டி வைத்தது * தெய்வம் சீறின் கைதவம் ஆகும் * தெய்வம் துணைக் கொள்; தேகம் அநித்தியம் * தெய்வம் படி அளக்கும் * தெய்வம் பண்ணின திருக்கூத்து * தெய்வமே துணை * தெய்வ வணக்கம் நரக வாசலை அடைக்கும் தாழ் * தெரிந்தவர்கள் தென்னம் பிள்ளை வைப்பார்கள் * தெரிந்தவன் என்று கும்பிடு போட்டால் உன் அப்பன் பட்ட கடனை வைத்துவிட்டுப் போ என்றானாம் * தெரிந்தவனுக்குத்தான் தெரியும் செம்மறியாட்டு முட்டை * தெரியாத் துணையே, பிரியாத் துணை நீ * தெருச் சண்டைக்கு இடுப்புக் கட்டல் * தெருச்சண்டை கண்ணுக்கு இன்பம் * தெருவில் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே * தெருவிலே ஊர்வலம் போகிறதென்று திண்ணையில் தூங்குபவன் திணறிக்கொண்டு செத்தானாம் * தெருவிலே போகிற சனியனை விலை கொடுத்து வாங்கினது போல * தெருவிலே போகிறவனை அண்ணை என்பானேன்? ஆத்தைக்கு இரண்டு கேட்பானேன் * தெருவோடு போகிற சண்டையை வீட்டு வரைக்கும் வந்து போ என்றது போல * தெருவோடு போகிற வண்டியைக் காலில் இழுத்துவிட்டுக் கொண்டது போல * தெருளா மனசுக்கு இருளே இல்லை * தெலுங்கச்சி சுவர்க்கம் போனாற் போல * தெவிட்டாக் கனி பிள்ளை; தெவிட்டாப் பானம் தண்ணீர் * தெள்ளிய திருமணி, திருட்டுக்கு நவமணி * தெள்ளுப் பிடித்த நாயைப் போல * தெளிந்த தண்ணீர் நீர் குடித்தீர்; சேற்றைக் கலக்கி விட்டீர் * தெளிவு கூறும் பரதேவ தேசிகன் * நெற்கத்திக் குருவியை வடக்கத்திக்குருவி தெற்றி அழைத்ததாம்;சீசம் பழம் தின்னம் போக * தெற்கு விழுந்த கருக்கலும் தேவடியாளிடம் போன காசும் திரும்பா * தெற்கே அடித்த காற்றுத் திரும்பி அடியாதா? * தெற்கே சாய்ந்தவன் தெரு எல்லாம் கூடை * தெற்கே சாய்ந்தால் தெருவெல்லாம் விலைப் பெட்டி; வடக்கே சாய்ந்தால் வரப்பெல்லாம் நெல் * தெற்கே போகிற நாய்க்கு வடக்கே வால் * தெற்கே போன வெள்ளி வடக்கே வந்தால் மழை * தெறிக்க அடித்த தட்டானைப் போல * தென்காசி ஆசாரம்; திருநெல்வேலி உபசாரம் * தென்காசி வழக்கா, பாதி போடு * தென் திசைப் புலையன் வட திசைக்கு ஏகின் நடை திருந்திப் பார்ப்பான் ஆவான் * தென்றல் அடிக்கிற காற்றே, என் இறுக்கத்தை ஆற்றே * தென்றல் திரும்பியும் மழையா? * தென்றல் முற்றிப் பெருங்காற்று ஆனது போல * தென்றல் முற்றானால் புயலாக மாறும் * தென்றலும் வாடையும் இறக்கும் பயிர்கள் * தென்னங் குரும்பை திருக்குரும்பை, பன்னாடை எல்லாம், ஒரு மரத்துக் காய் * தென்னந்தோப்பில் குரங்கு வளர்த்தது போல * தென்னமரத்தில் ஏண்டா ஏறினாய் என்றால், கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க என்றானாம்; தென்னமரத்தில் புல் ஏதடா என்றால், அதுதான் கீழே இறங்குகிறேன் என்றான் * தென்னமரத்தில் ஏறுபவனை எவ்வளவு தூரம் தூக்கிவிட முடியும்? * தென்ன மரத்தில் தேள் கொட்டப் பன மரத்திலே பதவளை காட்டினது போல * தென்ன மரத்தில் தேள் கொட்டிப் பனமரத்தில் நெறி ஏறிற்றாம் * தென்ன மரத்தில் பாதி, என்னை வளர்த்தாள் பாவி * தென்ன மரத்திற்குத் தண்ணீர் வார்த்தால் தலையாலே தரும் * தென்ன மரத்தின் நிழலும் தேவடியாள் உறவும் ஒன்று * தென்ன மரத்துக் குரங்கே, என்னைப் பார்த்து இறங்கே * தென்னாலிராமன் குதிரை வளர்த்தது போல * தென்னாலிராமன் பூனை வளர்த்தது போல * தென்னாலிராமன் போட்ட சித்திரம் போல * தென்னை செழித்தால் பண்ணை செழிக்கும் * தென்னையிலே தேள் கொட்டித் திருவையாற்றுக்கு நெறி கட்டியதாம் * தென்னையிலே பாதி என்னை வளர்த்தாள் பாவி * தென்னை வைத்து வாழை ஆச்சு; வாழை வைத்து மஞ்சள் ஆச்சு மஞ்சள் வைத்து முள்ளி ஆச்சு ==தே== * தேகம் அநித்தியம்; தெய்வம் துணைக் கொள் * தேகம் சந்தேகம் * தேங்காய் ஆடும்; இளநீர் ஆடும்; திருவுமணையில் தூக்கமா? தேங்காய்க்குள் நீர் போல * தேங்காய்க்கு மூன்று கண்; எனக்கு ஒரு கண் * தேங்காய் தின்றவன் ஒருத்தன்; தண்டம் கொடுத்தவன் ஒருத்தன் * தேங்காய் தின்னலாம், இளநீர் குடிக்கலாம்; திருவு பலகையிலே வந்ததோ தூக்கம்? * தேங்காயிற் சிறிது; மாங்காயிற் பெரிது * தேங்காயை உடைத்தால், சிரட்டையை உடைக்கிறேன் * தேங்காயை உடைத்தாற்போல் பேசுகிறான் * தேங்காயைத் தின்றவன் தின்னக் கோம்பை சூப்பினவன் தண்டம் இறுக்கிறதா? * தேங்காயை விழுங்குகிறது தினை; பருவத்தை விழுங்குகிறது பனை * தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு * தேசத்து நன்மை தீமை அரசர்க்கு இல்லையா? * தேசத்தோடு ஒத்து வாழ் * தேச பத்தியே தெய்வ பத்தியாம் * தேசம் எல்லாம் பறக்கும் காகம் தான் இருக்கும் கொம்பை அறியாது * தேடக் கிடையாது; தேட என்றால் கிட்டாது. திருப்கொட்பா, திருப்பிக் கொடு * தேடத்தசை இருந்தும் அனுபவிக்க அதிர்ஷ்டம் இல்லை * தேட நினைப்பது தெய்வத்தை * தேடப் போன மச்சினன் செருப்படியில் அகப்பட்டது போல * தேடாது அழிக்கின் பாடாய் முடியும் * தேடாது அழித்த தேவடியாள் தேவடியாள் * தேடி அழைத்த விருந்துக்கு வாடி இருந்ததுபோல * தேடி எடுத்துமோ திருவாழி மோதிரத்தை * தேடித் திருவிளக்கு வை * தேடித் தின்றவர் தெய்வத்தோடு ஒத்தவர் * தேடிப் பிடித்தாள் தேவடியாள் கள்ளனை * தேடிப் புதைத்துத் தெருவில் இருக்கிறதா? * தேடிப் போகாதே; கூறி விற்காதே * தேடிப் போனது அகப்பட்டது போல * தேடிப் போன தெய்வம் எதிரே வந்தது போல * தேடிப் போன மருந்துக் கொடி காலில் அகப்பட்டது போல * தேடியதை எல்லாம் கொடுத்துத் தேட்டு மீன் வாங்கித் தின்னு * தேடின பூண்டு காலிலே மிதிபட்டது போல * தேடின பொருள் காலிலே தட்டினது போல * தேடுவார் அற்ற பிணம் தெருவோடே * தேய்ந்த அம்மாள் தெய்வயானை, தெய்வத்துக்கு இட்டாலும் ஏறாது * தேய்ந்த கட்டை மணம் நாறும் * தேய்ந்தாய், மாய்ந்தாய் கொம்பும் கறுத்தாய், தும்பிக்கையும் உள்ளே இழுத்துக் கொண்டாயா? * தேய்ந்தாலும் சந்தனக் கட்டை மணம் போகாது * தேய்ந்து மாய்ந்து போகிறான் * தேய்ந்து மூஞ்சூறாய்ப் போகிறது * தேயத் தேய மணக்கும் சந்தனக் கட்டை * தேர் இருக்கிற மட்டும் சிங்காரம்; தேர் போன பிறகு என்ன? * தேர் ஓடித் தன் நிலையில் நிற்கும் * தேர் ஓடி நிலைக்குத்தான் வரவேணும் * தேர் செய்கிற தச்சனுக்கு அகப்பை போடத் தெரியவில்லை * தேர் தாழ்ந்து தில்லை உயர்ந்தது; ஆனை தாழ்ந்து அரசு வளர்ந்தது * தேர் தெருத் தெருவாக ஓடினாலும் தன் நிலையில்தான் நிற்கும் * தேர்ந்தவன் என்பது கூர்ந்து அறிவதனால் * தேர் வேந்தன் தன் களத்தில் சிலர் வெல்லச் சிலர் தோற்பர்; ஏர் வேந்தன் களத்தில் இரப்பவரும் தோலாரே * தேராச் செய்கை தீராச் சஞ்சலம் * தேருக்கு உள்ள சிங்காரம் தெரு எல்லாம் கிடக்கிறது * தேருக்குப் போகிறபோது தெம்பு; திரும்பி வருகிறபோது வம்பு * தேருக்குள் சிங்காரம், தெரு எல்லாம் அலங்காரம் * தேரைகள் பாம்பைத் திரண்டு வளைத்தாற் போல * தேரை மோந்த தேங்காய் போல * தேரோடு திருநாள் ஆயிற்று; தாயோடு பிறந்தகம் போயிற்று * தேரோடு திருநாள் போம் * தேரோடு நின்று தெருவோடு அலைகிறான் * தேவடியாள் இருந்து ஆத்தாள் செத்தால் கொட்டு முழக்கு; தேவடியாள் செத்தால் ஒன்றும் இல்லை * தேவடியாள் சிந்தாக்கு உள்ள வரையில் நட்டுவனுக்குப் பஞ்சம் இல்லை * தேவடியாள் குடியில் குமரிப் பெண்ணை ஈடு வைக்கலாமா? * தேவடியாள் சிங்காரிக்கும் முன்னே தேர் ஓடி நிலையில் நின்றது * தேவடியாள் செத்தால் பிணம்; தேவடியாள் தாய் செத்தால் மணம் * தேவடியாள் தெரு கொள்ளை போகிறதா? * தேவடியாள் மகன் திவசம் செய்தது போல * தேவடியாள் மகனுக்கும் திவசம் * தேவடியாள் மலம் எடுத்தாற் போல * தேவடியாள் மூக்கில் மூக்குத்தி கிடந்தால் நட்டுவக்காரன் பட்டினி கிடப்பான் * தேவடியாள் வீட்டில் ஆண் பிள்ளை பிறந்தாற் போல * தேவடியாள் வீட்டில் பெண்குழந்தை பிறந்தாற் போல * தேவடியாள் வீடு போவது போல * தேவடியாளுக்குத் தினமும் ஒரு கணவன் * தேவர் உடைமை தேவருக்கே * தேவர்கள் பணிவிடை சேப்பு மேலவன் கர்த்தா * தேவரீர் சித்தம்; என் பாக்கியம் * தேவரே தின்றாலும் வேம்பு கைக்கும் * தேவரைக் காட்டிலும் பூதம் பணி கொள்ளும் * தேவலோகத்து அமிர்தத்தை ஈ மொய்த்த கதை * தேவாமிர்தத்தை நாய் இச்சித்த கதை * தேள் கொட்டப் பாம்புக்கு மந்திரிக்கிறதா? * தேள் கொட்டிய நாய் போல் * தேள் நெருப்பில் விழுந்தால் எடுத்துவிட்டவனையே கொட்டும் * தேளுக்குக் கொடுக்கில் விடம்; உனக்கு உடம்பெல்லாம் விடம் * தேளுக்குக் கொடுக்கில் விடம், தீயவருக்கு நாவில் விடம் * தேளுக்குக் கொடுக்கில் விடம்; தேவடியாளுக்கு உடம்பு எங்கும் விடம்; துஷ்டனுக்குச் சர்வாங்கமும் விடம் * தேளுக்கு மணியம் கொடுத்தால் நிமிஷத்துக்கு நிமிஷம் கொட்டும் * தேளோடு போனாலும் தெலுங்கனோடு போகாதே * தேற்றிக் கழுத்து அறுக்கிறது * தேற்றினும் மகப் பிரிவு தேற்றல் ஆகாது * தேன் உண்டானால் ஈத் தேடி வரும் * தேன் உள்ள இடத்தில ஈ மொய்க்கும் * தேள் எடுத்தவரைத் தண்டிக்குமா தேனீ? * தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா? * தேன் எடுத்தவனுக்கு ஒரு சொட்டு; மாமன் மனையில் இருந்தவனுக்கு ஒரு சொட்டு * தேன் ஒழுகப் பேசித் தெருக்கடக்க வழிவிடுவான் * தேன் ஒழுகப் பேசுவான் * தேன் குடித்த குரங்கைத் தேள் கொட்டியது போல * தேன் கூட்டிலே கல்லை விட்டு எறியலாமா? * தேன் சர்க்கரை சிற்றப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா? * தேன் தொட்டவர் கையை நக்காரோ? * தேன் நீரைக் கண்டு வான்நீர் ஒழுகுவது போல் * தேன் வார்த்து வளர்த்தாலும் காஞ்சிரம் நுங்கு ஆகுமோ? * தேனாகப் பேசித் தெருக் கடக்க வழிவிடுவான் * தேனில் விழுந்த ஈப்போலத் தவிக்கிறான் * தேனுக்கு ஈயைத் தேடி விடுவார் உண்டா? * தேனுக்கு ஈயைப் தேடி விடுவார் யார்? * தேனுக்கு ஈயைப் பிடித்து விடவேண்டுமா? * தேனும் தினை மாவும் தேவருக்கு அமிர்தம் * தேனும் பாலும்போல் இருந்து கழுத்தை அறுத்தான் * தேனும் பாலும் போல் சேரவேண்டும் * தேனும் பாலும் போல * தேனும் பாலும் செந்தமிழ்க் கல்வி * தேனை எடுத்தவரைத் தண்டிக்குமாம் தேனீ * தேனைக் குடித்துவிட்டு இளித்த வாயன் தலையில் தடவினாற்போல * தேனைத் தடவிக் கொண்டு தெருத் தெருவாய்ப் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் * தேனைத் தொட்டாயோ? நீரைத் தொட்டாயோ? * தேனைத் தொட்டு நீரைத் தொட்டாற்போல் பழகுதல் * தேனை வழிக்கிறவன் புறங்கையை நக்கமாட்டானா? * தேனை வார்த்து வளர்த்தாலும் காஞ்சிரங்காய் தேங்காய் ஆகாது ==தை== * தை ஈனாப் புல்லும் இல்லை; மாசி ஈனா மரமும் இல்லை * தை உழவு ஐயாட்டுக் கிடை * தை உழவோ, நெய் உழவோ? * தை எள்ளுத் தரையில்; மாசி எள் மடியில் பணம்; வைகாசி எள் வாயில் * தைக்கவும் வேண்டாம்; பிய்க்கவும் வேண்டாம் * தைக் குறுவை தரையை விட்டு எழும்பாது * தைக் குறுவை தவிட்டுக்கும் உதவாது * தைக் குறுவையோ, பொய்க் குறுவையோ? * தைத்த வாய் இருக்கத் தாணிக் கதவாற் புறப்பட்டாற் போல * தைத்த வாயிலும் இருக்கத் தாணித்த வாயிலும் இருக்க எங்காலே போனீர் உப்பனாரே! * தைப் பணி தரையைத் துளைக்கும்; மாசிப் பனி மச்சைத் துளைக்கும் * தைப் பிள்ளையைத் தடவி எடு * தைப் பிறை கண்டது போல * தைப் பிறை தடவிப் பிடி; ஆடிப் பிறை தேடிப் பிடி * தைப் பிறையைத் தடவிப் பார் * தைப் பிறை வட கொம்பு உயர்ந்தால் வடவனுக்குச் சோறு உண்டு; தென் கொம்பு உயர்ந்தால் தெரு எங்கும் தீய வேண்டும் * தைப்புக்குத் தைப்பு மரம் பிடித்தாற் போல * தை பிறந்தது; தரை வறண்டது * தை பிறந்தால் தரை ஈரம் காயும் * தை பிறந்தால் தலைக் கோடை * தை பிறந்தால் தழல் பிறக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும் * தை மழை தவிட்டுக்கும் ஆகாது * தை மழை நெய் மழை * தை மாசத்து விதைப்புத் தவிட்டுக்கும் ஆகாது * தை மாசப் பனி தலையைப் பிளக்கும்; மாசி மாசப் பணி மச்சைப் பிளக்கும் * தை மாசம் தரை எல்லாம் பனி * தை மாசம் தரையும் குளிரும்; மாசி மாசம் மண்ணும் குளிரும் * தையல் இட்ட புடைவை நைய நாள் செல்லும் * தையல் சொல் கேட்டால் எய்திடும் கேடு * தையல் சொல் கேளேல் * தையலின் செய்கை மையலை ஊட்டும் * தையலும் இல்லான், மையலும் இல்லான் * தையலும் மையலும் * தையலே உலகம் கண்ணாடி * தையில் கல்யாணமாம்; ஆடியிலே தாலி கட்டிப் பார்த்துக் கொண்டாளாம் * தையில் வளராத புல்லும் இல்லை; மாசியில் முளையாத மரமும் இல்லை * தையும் மாசியும் வையகத்து உறங்கு * தைரியம் ஒன்றே தனமும் கனமும் * தைரியமே சகல நன்மையும் தரும் * தைரிய லக்ஷ்மி தனலக்ஷ்மி * தை வாழை தரையில் போடு * தை வெள்ளம் தாய்க்குச் சோறு ==தொ== * தொக்கலூரிலும் கல்யாணம்; தொங்கலூரிலும் கல்யாணம். * தொங்குகிறது குட்டிச் சுவர்; கனாக் காண்கிறது மச்சுவீடு. * தொட்ட காரியம் துலங்காது. * தொட்டது துலங்கும்; வைத்தது விளங்கும். * தொட்டதை விட்டபின், விட்டதைத் தொடுமுன் கல்வி கல். * தொட்டவன் மேல் தொடுபழி. * தொட்டவன் மேலே பழி; உங்கள் அப்பனை பிடித்து வலி. * தொட்டால் கெட்டுவிடும் கண்; தொடாவிட்டால் கெட்டுவிடும் தலை. * தொட்டால் சிணுங்கி. * தொட்டால் சிணுங்கி, தோட்டத்து முள்ளங்கி. * தொட்டால் தோழன்; விட்டால் மாற்றான். * தொட்டால் பிடித்துக் கொள்ள வேண்டியதுதான். * தொட்டால் விடாது தொட்டியப் பிசாசு. * தொட்டான்; மூக்கு அறுந்து போச்சு என்றாளாம். * தொட்டியப் பேய் சுடுகாடு மட்டும். * தொட்டில் கண்ட இடத்தில் தாலாட்டலாமா? * தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். * தொட்டிலில் பிள்ளைக்கு நடக்கிற பிள்ளை நமன். * தொட்டிலுக்குப் பிள்ளையும் கொட்டிலுக்குப் பெண்ணும். * தொட்டிலை ஆட்டித் தொடையைக் கிள்ளுவது போல. * தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆட்டும் கை. * தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளுவாள். * தொட்டு எடுத்த பணத்தைத் தட்டிப் பறித்தாற்போல. * தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது. * தொட்டுக் கெட்டது கண்; தொடாமற் கெட்டது தலை. * தொட்டுத் தடவ எண்ணெய் இல்லை; போடுடா பட்டுக் கோட்டைக்கு இரண்டு தீவட்டி. * தொட்டுத் தாலி கட்டின புருஷனை எதிர்த்துப் பேசலாமா? * தொட்டுக் கொள் துடைத்துக் கொள் என்று இருக்கிறது. * தொட்டுத் தடவ எண்ணெய் இல்லை அடிமகளே, தோட்டம் எல்லாம் தீ விளக்காம். * தொட்டுப் பார்த்தால் தோட்டியும் உறவு. * தொடங்குகிறது குட்டிச்சுவர்; நினைப்பது மச்சு மாளிகை. * தொடாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்; தொட்ட தொழிலை விட்டவனும் கெட்டான். * தொடுக்கத் தெரியாவிட்டாலும் கெடுக்கத் தெரியாதா? * தொடுத்த காரியத்தை விடுகிறதா? * தொடையிலே சிரங்கு; மாமனார் வைத்தியம். * தொண்டர்கள் அன்பன் துணைக்கு நிற்பவன். * தொண்டு எனப் படேல். * தொண்டை பெரிதென்று அம்பட்டன் கத்தியை விழுங்குகிறதா? * தொண்டைமான் நாட்டில் தொட்டதெல்லாம் கல். * தொண்டையிலே கண்டமாலை புறப்பட. * தொண்டையிலே தூறு முளைக்க. * தொண்டையைக் கிழித்துக் கொண்டு பேசுகிறான். * தொண்டை வலிக்குச் சாராயம்; தொடை வலிக்கு வெந்நீர். * தொண்ணூற்றோடே துவரம் பருப்பு ஒரு பணம். * தொண்ணூறு பணம் கடனோடே துவரம் பருப்புக் காற்பணம். * தொத்துக்குத் தொத்து சாட்சி; துவரம் பருப்புக்கு மத்தே சாட்சி. * தொத்துக்கு வந்தவன் துரைத்தனம் செய்வானா? * தொத்தும் என்றால் மீனாட்சி; தொனுக்கும் என்றால் காமாட்சி. * தொப்புள் அறுத்த கத்தி என்னிடத்தில் இருக்கிறது. * தொப்புளுக்கு மேல் கஞ்சி. * தொம்பைக் கூண்டிலே எலியைக் காவல் வைத்துக் கட்டினது போல. * தொழில் இல்லாதவன் தோட்டம் செய். * தொழிலை விட்டவன் முகடி தொட்டவன். * தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும். * தொழுதாலங்குடிக்குப் பொழுதும் போகவேணுமா? * தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது. * தொழுவம் புகுந்த ஆடு புழுக்கை இடாமல் போகுமா? * தொழுவார் எல்லாம் உழுவார் தலைக்கடையில். * தொழுவார்க்கு ஒரு கோயிலும் உழுவார்க்கு ஒரு நிலமும் கிடையாவா? * தொன்மை நாடி நன்மை நாடாதே. * தொன்மை மறவேல். * தொன்னிலம் முழுதும் தோன்றியது கல்வி. ==தோ== *தோகை அழகைத் தொட்டுப் பொட்டு இட்டுக் கொள்ளலாம் *தோசிப் பெண்ணுக்கு ஏற்ற சொறியங் கொள்ளி மாப்பிள்ளை *தோசைக்குத் தோசை ஓட்டை *தோசை சுட்டது கைவிட்டது *தோட்டக்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு *தோட்டக்காரனும் திருடனும் சேர்ந்தால் விடிய விடியத் திருடலாம் *தோட்டத்தில் அந்தம் *தோட்டத்தில் பழம் இருக்கத் தூரத்தில் போவானேன்? *தோட்டத்தில் பாதி கிணறு *தோட்டத்து நரி கூட்டத்தில் வருமா? *தோட்டத்துப் பச்சிலைக்கு வீரியம் மட்டு *தோட்டத்துப் பச்சிலை மருந்துக்கு உதவாது *தோட்டப் பாய் முடைகிறவனுக்குத் தூங்கப் பாய் இல்லை *தோட்டம் நிலைக்குமுன் கத்தரிக் கொல்லை வைக்கிறாயே? *தோட்டம் நிலைத்தல்லவோ தென்னம்பிள்ளை வைக்க வேணும்? *தோட்டம் முச்சாண்; சுரைக்காய் அறு சாண் *தோட்டம் வைத்தால் வாட்டம் இல்லை *தோட்டி உறவு தமுக்கோடு சரி *தோட்டி பிள்ளை அவனுக்குத் துரைப்பிள்ளை *தோட்டிபோல் உழைத்துத் துரைபோல் சாப்பிட வேண்டும் *தோட்டிபோல் உழைத்துத் தொண்டைமான் போல் வாழ் *தோட்டி முதல் தொண்டைமான் வரையில் *தோடு ஒரு நகையா? தோசை ஒரு பலகாரமா? *தோண்டக் குறுணி; தூர்க்க முக்குறுணி *தோண்டிக் கள்ளைத் தொடர்ந்து குடித்தால் பாண்டியன் மகனும் பறையன் ஆவான் *தோண்டியும் பொத்தல்; தாம்பும் அறுதல் *தோண்டுகிறது பதக்கு; தூற்றுகிறது முக்குறுணி *தோணி போகும்; துறை கிடக்கும் *தோ தோ என்றால் மூஞ்சியை நக்கிற்றாம் *தோ தோ நாய்க்குட்டி, தொத்தி வா; குடிநாய்க்குட்டி, வேறு பெண்சாதி. தண்ணீருக்குப் போகிறாள், வீட்டைப் பார்த்துக் கொள் நாய்க்குட்டி *தோ தோ நாயே, செட்டியார் வீட்டு நாயே, வியாழக்கிழமை சந்தைக்குப் போகிறேன்; வீட்டைக் காத்துக் கொள் நாயே *தோ தோ நாயே தொட்டியாங்குளத்து நாயே, நீராவிக்குப் போகிறேன்; வீட்டைக் காத்துக் கொள் நாயே *தோய்க்கிற வண்ணாத்திக்கு உஸ் என்ன ஓர் ஆளா? *தோய்த்துக் கொண்டு தின்பேன்; உனக்கென்ன? *தோரணி கெட்டால் கோரணி *தோல் இருக்கச் சுளை போமா? *தோல் இருக்கச் சுளை விழுங்கி *தோல்வியே வெற்றிக்கு அறிகுறி *தோல் விற்ற காசு வீசுமா? *தோலுக்குத் தோலாட்டம்; தோல்பனாட்டுக்கு நாயாட்டம் *தோலோடு வாழைப்பழம் *தோழனாவது துலங்கிய கல்வி *தோழனோடும் ஏழைமை பேசேல் *தோழி வீட்டுக்குப் போனாலும் தூக்கோடு போக வேணும் *தோளில் இருந்து செவியைக் கடிக்கிறதா? *தோளின் பேரில் தொண்ணூறு அடி அடித்தாலும் துடைத்துப் போடுவான் *தோளின் மேலே தொண்ணூறடி; துடைத்துவிட்டால் ஒன்றும் இல்லை *தோளுக்கு மிஞ்சினால் தோழன் *தோளுக்கு மேலே துண்ணூறு, துடைச்சுப் பார்த்தால் ஒன்றும் இல்லை *தோளுக்கு மேலே துண்ணூறு, துடைத்துப் பார்த்தால் வெண்ணீறு *தோளோடு தாலி தொங்கத் தொங்க மகராஜி *தோற்பது கொண்டு சபை ஏறேல் *தோற்பும் கெலிப்பும் ஒருவர் பங்கு அல்ல *தோற்றம் உண்டேல் மரணம் உண்டு *தோற்றின யாவும் தோற்றம் அற்று ஒழியும் *தோன்றின யாவும் அழியும் *தோஷம் பிறந்தால் ஆடு புழுக்கை இடாதா? ==தௌ== * தெளவித் திரியேல் * தெளவையின் மனசுக்கு ஒப்புதல் இல்லை ==ந== * நக்கத் தவிடும் இல்லை; குடிக்கத் தண்ணீரும் இல்லை. * நக்கல் வாய் தேட, நாறல் வாய் அழிக்க. * நக்கவாரக் கச்ச வடம்போல. * நக்க விட்ட நாயும் கொத்த விட்ட கோழியும் நில்லா. * நக்கிக் கொண்ட நாயும் கொத்திக் கொண்ட கோழியும் போகா. * நக்கு உண்டார் நா எழார். * நக்குகின்ற நாய்க்குச் செக்கு என்றும் சிவலிங்கம் என்றும் தெரியுமா? * நக்குகிற பொழுது நாவு எழும்புமா? * நக சிகை பரியந்தம். * நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான். * நகத்தால் கிள்ளாவிட்டால் கோடரி வெட்டுக்கும் அசையாது. * நகத்தாலே கிள்ளுவதைக் கோடரி கொண்டு வெட்டுகிறதா? * நகத்தால் கிள்ளாததைக் கோடரி கொண்டு வெட்ட நேரிடும். * நகமும் சதையும் போல. * நகரத்துக்கு இரண்டாமவனாக இருப்பதிலும் நாட்டுப் புறத்துக்குத் தலைவனாய் இருப்பதே நன்று. * நகரம் எல்லாம் நமக்குச் சொந்தம்; ஆனால் தங்கத்தான் இடம் இல்லை. * நகரிப் பெண் நாடு ஏறாது. * நகரேஷு காஞ்சி. * நகரைக்குப் பெத்தை வழி காட்டுகிறதோ? * நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி. * நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை. * நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா ! * நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது. * நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும் * நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும். * நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான். * நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ? * நயத்திலாகிறது பயத்திலாகாது. * நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும். * நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம். * நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை. * நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும். * நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது. * நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு. * நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ? * நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும். * நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும். * நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம். * நகைக்கு மகிழ்ச்சி; நட்புக்கு நஞ்சு. * நகைச் சொல் தருதல் பகைக்கு ஏதுவாம்.  * நகைத்து இகழ்வோனை நாய் என நினை. * நகை போட்டதும் இல்லை; போட்டவர்களைப் பார்த்ததும் இல்லை. * நங்கும் நாளமும். * நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல. * நச்சுப் பேச்சு நாளும் தரித்திரம். * நச்சு மரம் ஆனாலும் நட்டவர்கள் வெட்டுவார்களா? * நச்சுமரம் ஆனாலும் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் * நச்சுவாயன் வீட்டில் நாறல் வாயன் குடியிருந்தாற்போல. * நச்சுவாயன் வீட்டில் நாறல் வாயன் பெண் கொடுத்தது போல. * நசை கொன்றான் செல் உலகம் இல். * நஞ்சுக்குள் இருந்தாலும் நாகமணி, குப்பையில் இருந்தாலும் கோமேதகம். * நஞ்சு நாற்கலம் வேண்டுமா? * நட்ட அன்றும் சாவி; அறுத்த அன்றும் பட்டினி. * நட்ட அன்று மழையும், கெட்ட அன்று விருந்தும் கேடு. * நட்ட குழி நாற்பது நாள் காக்கும். * நட்டது எல்லாம் மரம் ஆமா? பெற்றது எல்லாம் பிள்ளை ஆமா? * நட்ட நடுவில் முழம் ஆனேன்; நடவு திரும்பிச் சாண் ஆனேன்; தட்டான் இட்ட வேளாண்மை தானாய்ப் பொன்னிறம் ஆச்சுது. * நட்டாலும் தில்லை நாயகம் நடவேண்டும். * நட்டாற்றில் கைவிட்டாற் போல. * நட்டாற்றுக் கோரையைப் போல. * நட்டு அறான் ஆதலே நன்று. * நட்டு ஆயினும், பட்டு ஆயினும். * நட்டுக் காய்ந்தால் நாழி நெல் காணாது. * நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா? * நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டு அடிக்கத் தெரியாதா? * நட்டுவன் பிள்ளைக்கு நாட்டியம் கற்க வேண்டுமா? * நட்டுவன் பிள்ளைக்கு முட்டு அடிக்கத் தெரியாதா? * நட்டுவனுக்கு உண்டு தட்டுவாணித் தனம். * நட்டுவனுக்கு நொட்டுப் பழக்குகிறாயா? * நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காதவழி. * நடக்கக் கற்ற பிள்ளை தவழக் கற்றதாம்; தாயார் செய்த தவம். * நடக்கப் பால்மாறிச் சிற்றப்பன் வீட்டில் பெண்கட்டிக் கொண்டானாம். * நடக்க மாட்டாத தலவாடிக்கு நாலு பக்கமும் சவாரி. * நடக்க மாட்டாதவன் சிற்றப்பன் வீட்டிலே பெண் கேட்டாற் போல. * நடக்கிறது நடக்கட்டும், தெய்வம் இருக்கிறது. * நடக்கிற பிள்ளை தவழ்கிறது; தாயார் செய்த தருமம். * நடக்கிற வரையில் நாராயணன் செயல். * நடக்கும் கால் இடறும். * நடக்குந்தனையும் நாடங்கம்; படுத்தான்தான் பாயும் தானும். * நடக்கும் கால் தவறுதலிலும் நாத் தவறுதல் கெட்டது. * நடத்தை தப்பினவன் அண்ணனாகிலும் தம்பியாகிலும் நறுக்கு. * நடந்த காலிலே சீதேவி; இருந்த காலிலே மூதேவி. * நடந்தபிள்ளை நகருகிறது. * நடந்த மட்டும் நடக்கட்டும்; நஷ்டத்துக்கு உத்தரவாதம் பண்ணப் போகிறீரா? * நடந்தவரை நமது செயல்; நாளை நடப்பது நாயன் செயல். * நடந்தவன் காலிலே சீதேவி; இருந்தவன் காலிலே மூதேவி. * நடந்தார்க்கு நாடு எங்கும் உறவு; கிடந்தார்க்குப் பாயே உறவு. * நடந்தால் நடை அழகி; நாவிலும் பல் அழகி. * நடந்தால் நாடு எல்லாம் உறவு; படுத்தால் பாயும் பகை. * நடபடி உண்டானால் மிதியடி பொன்னாலே. * நடலப் புடலங்காய் காய்க்கிறதாம்! நாழிக்குப் பத்தெட்டு விற்கிறாளாம். * நடவாத காரியத்தில் பிடிவாதம் பிடிக்கிறது. * நடவில் சிரிப்பு; அறுவடையில் நெருப்பு. * நடவுக்குத் தெளி, நாலத் தொன்று. * நடவு நட்டாலும் நாற்று மீந்தாலும் நான் நடக்கிற நடை இதுதான் என்று சொல்லுமாம் கடா. * நடு உழவிலே நத்தை தெறித்தது போல. * நடு ஊரிலே நச்சுமரம் பழுத்து என்ன? * நடுக்கடல் போனாலும் மறுப்படாமல் வரக்கடவீர். * நடுக்கடலில் விழுந்து அலைகிறவனுக்கு ஒரு தெப்பம் அகப்பட்டதைப் போல. * நடுக்கத் தட்டானுக்குக் கல்யாணம்; நாற்பத்தெட்டாந் தேதி. * நடுக்காட்டில் போனாலும் வடுப்படாமல் வருவார். * நடுங்க அடித்துப் பிடுங்குகிறதா? * நடுச் சமுத்திரத்திலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான். * நடுச் செவியில் நாராசம் காய்ச்சி விட்டாற்போல. * நடுத்தரம் ஆனவருடைய தாங்கல் பொன்னின் பிளவு போலப் பற்ற வைத்தால் மாறும். * நடுத் தெரு நாராயணன். * நடுத்தெருப் பிச்சைக்கு நாணயம் பார்க்கலாமா? * நடுப்படையில் போனாலும் வடுப்படாமல் வருவான். * நடுப்புடைவையில் கோவணம் கிழிக்கிற மாதிரி. * நடு மேட்டில் நரி கத்திற்றாம், தீர்த்த முடக்கில் தேள் கொட்டிற்றாம். * நடைக்கு அஞ்சிச் சிற்றப்பன் வீட்டில் பெண் கொண்டானாம். * நடைக்குச் சோம்பற்பட்டுச் சிற்றப்பன் வீட்டில் வாழ்க்கைப் பட்டாளாம்.  * நடை சிறிது ஆகில் நாள் ஏறும்; படை சிறிது ஆகில் பயம் ஏறும். * நடை பாக்கியம்; இடை போக்கியம். * நண்டு அளந்த நாழி போல. * நண்டு இழந்த நாழி போல. * நண்டு இழந்த நாழியும் தொண்டு இழந்த கயிறும். * நண்டு உதவும்; நண்டுகள் உதவா. * நண்டு ஊர நாடு செழிக்கும். * நண்டு எழுத்துக் கண்டு எழுதலாமா? * நண்டு எழுத்துப் போல். * நண்டுக்கு அழகு சேறும் கலங்கலும். * நண்டுக்குக் கல்யாணம்; நரிக்குச் சங்கராந்தி. * நண்டுக் குடுவையை நடுத் தெருவில் உடைத்தது போல. * நண்டுக்குச் சீவன் போகிறது; நரிக்குக் கொண்டாட்டம். * நண்டுக்குத் திண்டாட்டம், நரிக்குக் கொண்டாட்டம். * நண்டுக்குப் பட்டால்தான் தெரியும்; குரங்குக்குச் சுட்டால்தான் தெரியும். * நண்டுக்குப் புளியங்காய் இட்டு நறுக்கினாற் போல. * நண்டுக்கடி காலைவிட்டு ஓடியது போல. * நண்டு கால் விரித்தாற் போல. * நண்டு கொழுத்தால் வளையில் இராது; பள்ளி கொழுத்தால் பாயில் இரான். * நண்டு பொரித்திட்டுத் திகைப்பூண்டு கண்டாற் போல. * நண்டு வளையிற் கை இட்டது போல. * நண்டு வளையைச் சுற்றிய நரியைப் போல. * நண்டைக் கொடுக்கு ஒடித்தாற் போல. * நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்தது போல. * நண்டை நாழி கொண்டு அளக்கலாமா? * நண் பொருள் கொடுத்து நன்றாய் ஓது. * நத்தத்திலே நாய் பெருத்தது போல. * நத்த வாழைக்கு நித்தம் ஒரு காசு. * நத்த வாழையிலே நித்தம் காற் பணம். * நத்துக்கும் சுழி, முத்துக்கும் சுழி, குன்றிமணிக்கும் பிட்டத்திலே சுழி. * நத்துப் புல்லாக்கு நாணயம் பார்க்கிறது; இரட்டைக் குண்டு அட்டிகை எட்டி எட்டிப் பார்க்கிறது. * நத்தையின் வயிற்றில் முத்துப் பிறந்தது போல. * நதி எல்லாம் பால் ஆனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும். * நதி மூலத்தையும் ரிஷி மூலத்தையும் விசாரிக்கக் கூடாது. * நந்தன் தோல் காசு வழங்கினாற் போல. * நந்தன் படைத்த பண்டம் நாய் பாதி, பேய் பாதி. * நந்தன் படை வீடா? * நந்தோ ராஜா பவிஷ்யதி. * நபும்சகன் கையில் ரம்பை அகப்பட்டது போல * நம் நிழல் நம்மோடே. * நம்ப நட, நம்பி நடவாதே. * நம்பமாட்டாதவன் பெண்சாதிக்கு நாற்பது பேர் மாப்பிள்ளைமார். * நம்பவைத்து கழுத்து அறுக்கலாமா? * நம்பியான் விட்டதே தீர்த்தம். * நம்பின பேருக்கு நடராஜா, நம்பாத பேருக்கு யமராஜா. * நம்பினவரை உண்மையில் காத்தான். * நம்பினவரைக் காட்டில் விடலாமா? * நம்பினவரை நட்டாற்றில் விடலாமா? * நம்பினால் தெய்வம்; நம்பாவிட்டால் கல். * நம்பூதிரி சொத்தை எழுதி வைத்த மாதிரி. * நம்பூதிரி வெற்றிலை போட்டுக் கொண்ட மாதிரி. * நம்மாழ்வார் நம்மைக் கெடுத்தார்; கூரத்தாழ்வார் குடியைக் கெடுத்தார். * நம்மைச் செருப்பால் அடித்தாலும் நம் அண்ணன் வீட்டுப் பயலை வாடா, போடா என்னலாமா? * நம்மை நம்ப வேண்டாம்; அம்மாளைத் தாலி வாங்கச் சொல். * நம்மை வணங்குகிறவனை நாம் வணங்குகிறதா? * நம் வீட்டு விளக்கென்று முத்தம் இடலாமா? * நமக்கு ஆகாதது நஞ்சோடு ஒக்கும். * நமக்கு எல்லாம் எப்போது அமாவாசை? சூத்திரர்களுக்கு எப்போது அமாவாசை? * நமது தலைமயிர் அவன் கையில் அகப்பட்டுக் கொண்டது. * நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ? * நமன் அறியாமல் உயிர் போய் விடுமா? * நமன் எடுத்துக் கொண்டு போகும் பொழுது நழுவி விழுந்தவன். * நமன் வாயிலே மண் போட்டாயா? * நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்க மாட்டான் * நயத்தில் ஆகிறது பயத்தில் ஆகாது. * நய மொழியால் ஜயம் உண்டு. * நரசிம்மரை நரி மிரட்டியதாம்; நரியை நாய் மிரட்டியதாம். * நரப்புப் புல்லைப் பிடுங்கினாலும் வரப்புப் புல்லைப் பிடுங்காதே. * நரா போகம் சரா போகம். * நரி அம்மணமாய்ப் போகிறதா? * நரி இடம் போனால் நல்லதா? வலம் போனால் நல்லதா என்றால் மேலே விழுந்து கடிக்காமல் போனால் நல்லது என்பது. * நரி ஊரை விட்டுப் புலி ஊருக்குப் போனேன்; புலி ஊரும் நரி ஊர் ஆயிற்று. * நரி ஊளையிட்டால் சமுத்திரம் மட்டும். * நரி எதிர்த்தால் சிங்கம். * நரி ஒரு சாலுக்கு உழப் போனது. * நரிக்கு அதிகாரம் கொடுத்தால் கிடைக்கு ஒரு கிடாய் கேட்கும். * நரிக்கு உபதேசம் செய்தாற் போல. * நரிக்குக் கல்யாணம்; நண்டுக்குப் பிராம்மணார்த்தம். * நரிக்குக் கொண்டாட்டம்; நண்டுக்குத் திண்டாட்டம். * நரிக்குட்டிக்கு ஊளை இடப் பழக்க வேண்டுமோ? * நரிக்கு நண்டு ஆசை; நாய்க்கு எலும்பு ஆசை. * நரிக்கு மணியம் கொடுத்தால் கிடைக்குக் கிடை இரண்டு ஆடு கேட்கும். * நரிக்கு வால் முளைத்தாற்போல. * நரிக் குளிப்பாட்டி. * நரிக் கூப்பாடு கடல் முட்டிப் போகும். * நரிக் கொம்பு போல. * நரி கல்யாணத்துக்கு வெயிலோடு மழை. * நரி கல்யாணத்துக்கு நண்டு பிராமணார்த்தம். * நரி கிணற்றில் விழுந்தால் தண்டடி தடியடி. * நரி குசு விட்டதாம், கடல் கலங்கிப் போயிற்றாம். * நரி கூக்குரல் சமுத்திரம் எட்டியது போல. * நரி கூப்பிட்டுக் கடல் ஒதுங்குமா? * நரி கொழுத்தால் வளையில் இராது. * நரி கொழுத்து என்ன? காஞ்சிரம் பழுத்து என்ன? * நரி செத்த இடத்திலே நாய் வட்டம் போட்டது போல. * நரி தின்ற கோழி போல. * நரி நாலு கால் திருடன்; இடையன் இரண்டு கால் திருடன். * நரி முகத்தில் விழித்தது போல. * நரி முன்னே நண்டு கரணம் போட்டது போல * நரியின் கல்யாணத்தில் வெயிலோடு மழை. * நரியின் கையில் இறைச்சியை வைத்த கதை. * நரியின் கையிலே குடல் கழுவக் கொடுத்தது போல. * நரியின் பிரசவத்துக்கு நாய் மருத்துவச்சி. *நரியை எழுப்பிப் புலியைக் கலைப்பது போல. * நரியை ஏய்க்கப் பார்க்கிறதாம் தில்லை நண்டு. * நரியை நனையாமல் குளிப்பாட்டுவான். * நரியை வெள்ளரிக்காய் மிரட்டினாற் போல. * நரி வாயிலே மண் போட்டாயா? * நரி வால்பற்றி நதி கடக்கல் ஆகாது. * நரி வாலைக்கொண்டு கடல் ஆழம் பார்க்கிறது போல. * நரைத்த மயிர் கறுத்து நங்கை நாய்ச்சியார் கொண்டை முடிப்பாளாம். * நரைத்த தலைக்கு இட்ட எண்ணெயும் இதயமற்றவனுக்குப் போட்ட சோறும். * நரைத்தவன் எல்லாம் கிழவனா? * நரைத்தவன் கிழவன், நாமம் இட்டவன் தாதன். * நரை திரை இல்லை; நமனும் அங்கு இல்லை. * நல் இணக்கம் அல்லது அல்லற் படுத்தும். * நல் இனத்தில் நட்பு வலிது. * நல் உடலுக்கு இளைப்பாற்றிக் கொடாவிடினும் நாவுக்குக் கொடு. * நல்ல அமைச்சு இல்லாத அரசு, விழியின்றி வழிச் செல்வான் போலாம். * நல்ல ஆத்மாவுக்கு நாற்பது நாள். * நல்ல ஆரம்பமே நல்ல முடிவு. * நல்ல இளங்கன்றே, துள்ளாதே. * நல்ல உயிர் நாற்பது நாள் இருக்கும். * நல்ல எழுத்து நடுவே இருக்கக் கோணல் எழுத்துக் குறுக்கே போட்டது என்ன? * நல்ல எழுத்து நடுவே இருக்கக் கோணல் எழுத்துக் குறுக்கே போட்டது என்ன? * நல்ல எழுத்து நடுக்கே; கோணல் எழுத்துக் குறுக்கே. * நல்ல கதை நீளம் இல்லை. * நல்ல காரியத்துக்கு நானூறு இடைஞ்சல். * நல்ல காலத்திலேயே நாயகம். * நல்ல குடிக்கு நாலத்தொரு பங்காளி * நல்ல குதிரை புல்லுக்கு அழுகிறது; நொண்டிக் குதிரை கொள்ளுக்கு அழுகிறது. * நல்ல குருவினை நாடிக் கொள். * நல்லது எல்லாம் பொல்லாதது, நாய் எல்லாம் பசு. * நல்லதுக்கா நரையான் இடமாச்சு? * நல்லதுக்கா நாய்க்குணம்? * நல்லதுக்கா நாய்மேல் சன்னதம் வந்தது? * நல்லதுக்கா வந்திருக்கிறது, நாய்மேல் சங்கராந்தி? * நல்லதுக்கு ஒரு பொல்லாதது; பொல்லாததுக்கு ஒரு நல்லது. * நல்லதுக்கு நாலு இடையூறு வரும். * நல்லது கண்டால் இறைவனுக்கு என்பார் நல்லோர். * நல்லது கண்டால் நாயகனுக்கு நல்குவார். * நல்லது கெட்டது நாலுபேர் சொல்வார்கள். * நல்லது கெட்டால் நாய்க்கும் கடை. * நல்லது செய்கிறவன் பெண்சாதியை நாய்க்குப் பிடித்துக் கட்டு. * நல்லது செய்து நடுவழியே போனால் பொல்லாதது போகிற வழியே போகிறது. * நல்லது செய்வதில் நாலு இடையூறு வரும். * நல்லது சொல்ல நாட்டுக்கு ஆகாது. * நல்லது சொல்ல நாடும் இல்லை; உற்றது சொல்ல ஊரும் இல்லை. * நல்லது சொல்லிக் கெட்டார் இல்லை. * நல்லது சொல்லி நடுவழியே போனாலும் பொல்லாதது போகிற வழியே போகும். * நல்லது தெரியுமா நாய்க்கு? * நல்லது நாற்கலம்; ஊத்தை ஒன்பது கலம். * நல்லது போனால் தெரியும்; கெட்டது வந்தால் தெரியும். * நல்ல தேசத்துக்கு நாலு செம்பு. *நல்ல நாய் ஆனாலும் நரகலை நாடித்தானே செல்லும். * நல்ல நாய்ச்சியார் கடைந்த மோர் நாழி முத்துக்கு நாழி மோர். * நல்ல நாயைக் கிள்ளியா பார்க்க வேணும்? * நல்ல நாளில் நாழிப்பால் கறக்காது; அதிலும் கன்று செத்த கசுமாலம். * நல்ல நாளில் நாழிப்பால் கறவாதது, கன்று செத்துக்கப்பால் கறக்குமா? * நல்ல நாளில் நாழிப்பால் கறவாத மாடா ஆகாத நாளிலே அரைப்படி கறக்கும்? * நல்ல நாளிலே நாழிப் பால் கறவாதது, கோடை நாளிலே குறுணி கறக்குமா? * நல்ல நினைவை அநுசரித்தலே கெட்ட நினைவை நீக்கல். * நல்ல பாம்பு ஆடியது கண்டு நாகப்பூச்சி ஆடியது போல. * நல்ல பாம்பை ஆட்டுகிற பிடாரன் நாகப்பூச்சியைக் கண்டு பயப்படுவானா? * நல்ல பிராணன் நாற்பது நாள். * நல்ல பெண்டுக்கு ஒரு சொல்; நல்ல மாட்டுக்கு ஓர் அடி. * நல்ல மரத்தில் நச்சுக்கனி பழுக்காது. * நல்ல மரத்தில் நரையான் விழுந்த மாதிரி. * நல்ல மரத்தில் நல்ல பாம்பு குடியிருந்தாற் போல. * நல்ல மரத்தில் புல்லுருவி முளைத்தது போல. * நல்ல மரம் நச்சுக் கனியைத் தராது; நச்சு மரத்திலே நல்ல கனியும் வராது. * நல்ல மனைவி நல்லதைக் கண்டால் நமது புருஷனுக்கு என்பாள். * நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை. * நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; பட்டி மாட்டுக்குப் பத்துச் சூடு. * நல்ல மாட்டுக்கு ஓர் அடி; நல்ல மனுஷர்களுக்கு ஒரு சொல். * நல்ல மாடு ஆனால் உள்ளூரில் விலை போகாதா? * நல்லவர் ஒரு நாள் செய்த உபகாரத்தை மறவார். * நல்லவர் கண்ணில் நாகம் பட்டாலும் கொல்லார். * நல்லவர்களுக்குச் சொல்லாமல் சாவு வரும். * நல்லவர் கெட்டால் நாயும் சீந்தாது. * நல்லவர் சங்காத்தம் நல்ல மணலில் விழுந்த நீர் போல உதவும். * நல்லவரிடத்தில் நல்ல பாம்பும் சேரும். * நல்லவரிடத்தில் நன்மை விளங்கும். * நல்லவன் உறவை நாலு பணம் கொடுத்துச் சம்பாதிக்க வேண்டும்; கெட்டவன் உறவைப் பத்துப் பணம் கொடுத்து நீக்க வேண்டும். * நல்லவன் என்று பெயர் எடுக்க நாள் செல்லும். * நல்லவன் ஒருவன் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும். * நல்லவனுக்கு அடையாளம் சொல்லாமற் போவது. * நல்லவனுக்கு ஒரு சொல்; நல்ல மாட்டுக்கு ஓர் அடி. * நல்லவனுக்குக் காலம் இல்லை. * நல்லவனுக்கு நாடு எங்கும் உறவு. * நல்லவனுக்கு நாலு இடத்தில் மயிர்; போக்கிரிக்குப் பொச்சு வாயெல்லாம் மயிர். * நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நாட்டும் வேண்டாம்; சீட்டும் வேண்டாம். * நல்ல வார்த்தை சொல்லி நாடியைத் தாங்குகிறான். * நல்ல வார்த்தை சொன்னால் பொல்லாப்பு வராது. * நல்ல வீடு என்று பிச்சைக்கு வந்தேன்; கரியை வழித்துக் கன்னத்தில் தடவினார்கள். * நல்ல வேலைக்காரன் ஆற்றோடே போகிறான். * நல்ல வேளை முளைக்கிற இடத்தில் நாய் வேளையும் முளைக்கிறது. * நல்ல வேளையிலே ஞாயிற்றுக் கிழமையிலே. * நல்லறம் உள்ளது இல்லறம். * நல்லறம் செய்வது, செய்யாது கேள். * நல்லாயிருந்தது தாதரே, பல்லை இளித்துக்கொண்டு பாடினது. * நல்லாக் கள்ளி விழித்தாற் போல. * நல்லார் ஒருவர்க்குப் பெய்யும் மழை எல்லார்க்கும் ஆம். * நல்லார்க்கு நாக்கில் உரை; பொன்னுக்குக் கல்லில் உரை. * நல்லார் கையில் நாகம் அகப்பட்டாலும் கொல்லார் * நல்லார் சங்காத்தம் நல்ல மண்ணில் விழுந்த நீர்போல உதவும். * நல்லார் நடக்கை தீயோர்க்குத் திகில். * நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம். * நல்லாருக்குப் பெய்த மழை எல்லாருக்கும் ஆம். * நல்லாரும் நல்ல பாம்பைப் போலத் தங்கள் வலிமையை அடக்கி மறைத்திருப்பார் சில வேளை. * நல்லாரைக் கண்டால் நாய் போல; பொல்லாரைக் கண்டால் பூனை போல. * நல்லாரை நாவில் உரை; பொன்னைக் கல்லில் உரை. * நல்லாரை நாவு அழியப் பேசினால் பல்லாலே பதக்குப் புழுச் சொரியும். * நல்லுடலுக்கு இளைப்பாற்றிக் கொடாவிடினும் நாவிற்குக் கொடு. * நல்லெருமை நாகு; நற்பசு சேங்கன்று; அடியாள் பெண்பெற. * நல்லோர்க்குப் பொறுமையே துணை. * நல்லோர் நடத்தை தீயோருக்குத் திகில். * நல்லோரை ஏசினால் நாவு புழுக்கும். * நல்லோரை நாடு அறியும்; பொன்னை நெருப்பு அறியும். * நல்லோரை நாவில் உரை; பொன்னைக் கல்லில் உரை. * நல்லோன் என வளர். * நலம் உள்ளோன் கவலை தீர்க்க, நமக்கு அந்தக் கவலை ஏற்க நல்லது. * நவாபு அத்தனை ஏழை; புலி அத்தனை சாது. * நவாபு தர்பார். * நவாபு நா அசைந்தால் நாடு அசையும்; பக்கிரி நாடு அசைந்தால் மோவாய்க் கட்டைதான் அசையும். * நழுவ முடிந்தால் நம்பாதே. * நழுவப் போகிறவனைத் தழுவிப் பிடிக்கிறதா? * நளபாகம் பீமபாகம் போல. * நற்குணமே நல்ல ஆஸ்தி. * நற்சிங்கத்துக்கு நாயா முடி சூட்டுகிறது. * நற் பெண்டாட்டிக்கு ஒரு சொல். * நற் பெண்டிர் நல்லதைக் கண்டால் நமது நாயகனுக்கு என்பார். * நற் பெண்டுக்கு ஒரு சொல்; நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. * நற் பெயரே பணத்தை விட மேலானது. * நறுக்குத் தெறித்தாற் போல நாலு வார்த்தை பேசு. * நறுவிலிப்பழம் திருத்தினாற் போல. * நன்செய்க்கு ஏர் உழவு; புன்செய்க்கு நால் உழவு. * நன் பொருள் கொடுத்தும் நன்றாய் ஓது. * நன்மை ஆனதைக் கொடுத்தால் நஷ்டத்திலும் நஷ்டம். * நன்மை கடைப்பிடி. * நன்மை செய்தார் நன்மை பெறுவார்? தீமை செய்தார் தீமை பெறுவார். * நன்மை செய்திடில் நாலு இடையூறும் வரும். * நன்மை செய்பவருக்கு இடையூறு செய்கிறதா? *நன்மை செய்யக் கன்மம் விடையாது. * நன்மை செய்யக் கனம். * நன்மை செய்வார் நலம் பெறுவர்; தீமை செய்தால் தீமை பெற்று நலிவர். * நன்மையும் தீமையும் இம்மையிலே தெரியும். * நன்மையைப் பெருக்கித் தீமையைக் குறைத்தல் நன்னெறி. * நன்றாய் இருக்கிறது நாயகரே,இளித்துக் கொண்டு ஆடுகிறது. * நன்றாய் இருந்தாலும், நல்லி சுட்ட பணியாரம். * நன்றாய் இருந்தாலும் பார்க்க மாட்டார்கள்; கெட்டாலும் தாங்க மாட்டார்கள். * நன்றாய் இருந்தாலும் பார்க்க மாட்டார்கள்; நலம் தப்பினாலும் பார்க்கமாட்டார்கள். * நன்றாய் முடிவது எல்லாம் நன்றே. * நன்றிக்கு நாய்; கர்வத்துக்குக் களிறு. * நன்றி கெட்ட நாய் தின்றதெல்லாம் மண்ணா? * நன்றி கெட்டவன் நாயினும் கடையன். * நன்றி செய்த கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை போல. * நன்றி செய்தவனை நாயின் கழுத்தில் கட்டு. * நன்றி மறந்தாரைத் தெய்வம் நின்று கொல்லும். * நன்றி மறந்தாரை நடுங்கக் கேட்கும் தெய்வம் * நன்றி மறவேல். * நன்று செய் மருங்கில் தீது இல். * நன்னிலம் கரந்தை; நடு நிலம் கொளிஞ்சி. * நனவிலும் இல்லது கனவிலும் இல்லை. * நனைத்துச் சுமக்கிறதா? * நனைந்த கிழவன் வந்தால் உலர்ந்த விறகுக்குச் சேதம். * நனைந்த கோழி மயிர் போலே. * நனையா வறட்டி இல்லையெனில் ஆனைக்கால் நோய் இல்லை. * நஷ்டத்துக்கு ஒருவன், நயத்துக்கு ஒருவன். * நஷ்டத்துக்குப் பலர்; நயத்துக்கு ஒருவனோ? * நக்ஷத்திரத்தை எண்ண முடியாது; நாய்வாலை நிமிர்த்த முடியாது. ==நா== * நா அசைய நாடு அசையும். * நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும். * நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ? * நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும். * நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம். * நாய் இருக்கிற சண்டை உண்டு. * நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை. * நாய் விற்ற காசு குரைக்குமா? * நாலாறு கூடினால் பாலாறு. * நாள் செய்வது நல்லார் செய்யார். * நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம். * நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம். * நா அசைய நாடு அசையும். * நா உள்ளவன் கழு ஏற மாட்டான். * நா என்னும் அட்சரம் நாதன் இருப்பிடம். * நாக்காலே போட்ட முடி பல்லால் கடித்து இழுத்தாலும் வருமா? * நாக்கில் இருக்கின்றன நன்மையும் தீமையும். * நாக்கில் தர்ப்பையைப் போட்டுப் பொசுக்க வேணும். * நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுகிறான். * நாக்கில் புண்ணாம்; நாய் நொண்டி நொண்டி நடந்ததாம். * நாக்கிலே வெல்லம், நாவிலே விஷம். * நாக்கிற்கு நரம்பு இல்லை. * நாக்கு ஒன்றா இரண்டா? * நாக்குக்கு எலும்பு இல்லை; எப்படிப் புரட்டினாலும் புரளும். * நாக்குப் புரட்டர் போக்குப் புகல்வர். * நாக்குப் புரண்டாலும் வாக்குப் புரளாது. * நாக்கும் சீக்கும் பொல்லா. * நாக்கை அடக்கிப் பேசு. * நாக்கைத் தொங்கவிட்டுத் தலை ஆட்டும் நாய் போல. * நாக்கை நறுக்கி நாய்க்குப் போடவேண்டும். * நாக்கைப் படைத்தவர்கள் நாலையும் சொல்வார்கள்; பல்லைப் படைத்தவர்கள் பத்தையும் சொல்வார்கள். * நாக்கை விற்று ஆக்கித் தின்கிறது. * நாகசுரம் என்றால் தெரியாதா? மத்தம் போலக் கலகல என்னும். * நாகசுரம் பொய், நாசனம் பொய், நாயினம் ஆயினேனே! * நாகப்பட்டினம்.  * நாகப் பாம்பு ஆடினதைப் பார்த்து நாங்கூழ்ப் பூச்சியும் ஆடினதைப் போல. * நாகம் கட்டினால் நாதம் கட்டும். * நாகரிகப் பெண்ணுக்கு நாக்குத் தூக்கு மிச்சம். * நாகலோகத்து நஞ்சு அமிர்தம் உண்டவன். * நாகூர் உபசாரம். * நாகைக்கும் காரைக்கும் காதம், காரைக்கும் கடவூருக்கும் காதம்; கடவூருக்கும் காழிக்கும் காதம்; காழிக்கும் தில்லைக்கும் காதம். * நாகை செழித்தால் நாடு செழிக்கும். * நாங்களும் கங்கணம் கட்டினது உண்டு; கழுத்துக்குக் கங்கணம் கட்டினது இல்லை. * நாங்கை நாலாயிரம். * நாச்சியாரும் ஒன்றைப் பற்றி வார்க்கிறாள்; நானும் ஒன்றைப் பற்றிக் குடிக்கிறேன். * நாச்சியாரைக் காணாத இடத்திலே முணுமுணுப்பது போல. * நாசியால் போகிற சீவனைக் கண்ட்ர கோடரியால் வெட்டுவதா? * நாசுவக் கிருதும் வண்ணான் ஒயிலும். * நாசேத்தி மாத்ரா, வைகுண்ட யாத்ரா. * நாட்கள் பாரேல். * நாட்டரசன் கோட்டை, நாலு பக்கம் ஓட்டை * நாட்டாண்மைக் காரனைப் பகைத்துக் கொண்டால் பழைய கந்தாயத்தைக் கேட்பான். * நாட்டாண்மை யாரடா கொடுத்தார்? நானும் என் பெண்சாதியுமாக வைத்துக் கொண்டோம். * நாட்டாள் பெற்ற குட்டி, நாகரிகம் பேச வல்ல குட்டி. * நாட்டாளுக்கு ஒரு சீட்டாள்; வெற்றிலை மடிக்க ஒரு வெற்றாளி. * நாட்டாளுக்கு ஒரு நீட்டாளோ? * நாட்டான் பெண்சாதி என்றால் ஏன் என்பாள்; நாலு பேருக்குச் சோறு என்றால் ஊமை எனபாள். * நாட்டான் வைத்த கோட்டானா; கோட்டான் வைத்த நாட்டானா? **(நாட்டார் என்பதை 'நாட்டான்' எனவும், court என்பதை 'கோட்டான்' எனவும் வழக்கு மொழியில் கூறுவர்) * நாட்டில் பஞ்சாங்கம் போனால் நட்சத்திரமும் போச்சோ? * நாட்டிலே விளைந்தால் நன்னாரி; மலையிலே விளைந்தால் மாகாளி. * நாட்டுக் கலப்பையால் நாலு முறை உழு. * நாட்டுக்கு அடுத்தது கொங்கராயனுக்கு. * நாட்டுக்கு அரசன்; வீட்டுக்கு நாய். * நாட்டுக்கு ஒரு தலைவன்; நாய்க்கு ஒரு எஜமானன். * நாட்டுக்கு ஒரு மழை; நமக்கு இரண்டு மழை. * நாட்டுக்குக் கரும்பு; வீட்டுக்கு வேம்பு * நாட்டுக்கு நல்ல துடைப்பம்;வீட்டுக்குப் பீற்றல் துடைப்பம். * நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்குப் புல் சுமை போகாது. * நாட்டுக்குப் பேச்சு; நாய்களுக்கு வார்த்தை. * நாட்டுக்குப் பொல்லான்; நாரணனுக்கு நல்லான். * நாட்டுட்கு ராஜா; வீட்டுக்கு வேம்பு. * நாட்டுக் கோட்டைக் செட்டி, நாகபட்டினம் ராவுத்தர், மொட்டைப் பாப்பாத்தி மூவருக்கு மயிர்பிடி சண்டை நடந்தது போல. * நாட்டுப் புறத்தான் மிட்டாய்க் கடையை விறைத்துப் பார்த்தது போல. * நாட்டை ஆளப் பெண் பிறந்தாலும் போட்ட புள்ளி தப்பாது. * நாட்டைக் கலக்கி நாளில் நாட்டினாலும் நாய் வாலை நிமிர்த்த அரனாலும் முடியாது. * நாடி அறிவான் நமன் அறிவான். * நாடிக் கொடுப்பாரைக் கூடிக் கெடுக்கிறதா? * நாடிய பொருள் கைகூடும். * நாடிய வரம் எல்லாம் நல்கும் நாயகன். * நாடு அறிந்த பார்ப்பானுக்குப் பூணூல் ஏன்? * நாடு அறிந்த பெருச்சாளி. * நாடு ஆண்டதும் பாண்டவர்; காடு ஆண்டதும் பாண்டவர். * நாடு ஆளப் பிறந்தானா? காடு ஆளப் பிறந்தானா? * நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை. * நாடு எல்லாம் உழைத்தாலும் நாய்வால் நேராகாது. * நாடு எல்லாம் பாதி; நாட்டை வாய்க்கால் பாதி ஜலம். * நாடு ஏற்பன செய். * நாடு ஓட நடு ஓடு. * நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகுமா? * நாடு காடு ஆயிற்று; காடு கழனி ஆயிற்று. * நாடு சுற்றியும் வீடு வந்து சேரவேண்டும். * நாடு செழித்தால் கேடு ஒன்றும் இல்லை. * நாடு செழித்தால் நாகரிகம் தானே வரும். * நாடு பாதி; நங்கவரம் பாதி. * நாண் இல்லா நங்கை, பூண் இல்லா மங்கை. * நாணம் இல்லாக் கூத்தாடிக்கு நாலு திக்கும் வாசல். * நாணம் இல்லாத பெண் நகைக்கு இடம் வைப்பாள். * நாணம் இல்லாத கூத்தாடிக்கு நாலு திக்கும் கூத்தி. * நாணம் கெட்ட நாரி ஓணம் வந்தாள் வருவாளா? * நாணமும் அச்சமும் நாய்களுக்கு ஏது ? * நாணமும் இல்லை; மானமும் இல்லை. * நாணி நடந்தாலும் மாமி குணம் போகுமா? * நாணினால் கோணும்; நடந்தால் இடறும். * நாணும் கால் கோணும்; நடக்கும் கால் இடறும். * நாதமும் கீதமும் ஒத்திருப்பது போல வேதமும் போதமும் ஒத்திருக்க வேண்டும். * நாதன் நாயைப் பிடித்தது போல. * நாதனின் பட்சம் ஆயிரம் லட்சம். * நாதாரி வீட்டுக்கு நாலு பக்கம் வாசற்படி. * நாதி அற்றவன். * நாதிக்காரன் பாதிக்காரன் போல. * நாம் ஒருவருக்குக் கொடுத்தால் நமக்கு ஒருவர் கொடுப்பார். * நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும். * நாம் நாயை மறந்தாலும் நாய் நம்மை மறக்குமா? * நாமம் போட்ட குரங்கு ஆனாலும் நடுத்தெருவிலே போக முடியுமா? * நாமம் போட்டவன் எல்லாம் தாதனா? விபூதி பூசினவன் எல்லாம் ஆண்டியா? * நாமம் போட்டு விடுவான். * நாய் அங்கு ஓடியும் கெட்டது; இங்கு ஓடியும் கெட்டது. * நாய் அடிக்கக் குறுந்தடியா? * நாய் அடிக்கக் கோல் தேவையா? * நாய் அடிக்கிற மாதிரி அடிக்கிறான். * நாய் அடித்த துட்டு குரைத்தா காண்பிக்கிறது? * நாய் அடித்த படுபாவி சேய் இல்லாது அழுதானாம். * நாய் அடையுமா, சிவலோக பதவி? * நாய் அறியுமா, ஒரு சந்திப் பானை? * நாய் அறியுமா, நறு நெய்யை. * நாய் அன்பு நக்கினாலும் தீராது. * நாய் ஆசை மலத்தோடு. * நாய் ஆனாலும் அதற்கும் ஒரு வாயும் வயிறும் உண்டல்லவா? * நாய் ஆனாலும் சேய் போல. * நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு. * நாய் இருக்கிற வீட்டில் திருடப் போனது போல. * நாய் இருப்பது ஓர் ஆள் இருக்கிற மாதிரி. * நாய் இல்லா ஊரில் நரி அம்பலம் பண்ணிற்றாம். * நாய் இறந்ததென்று ஓநாய் அழுததாம். * நாய் உண்ட புலால் போல. * நாய் உதறினால் நல்ல சகுனம். * நாய் உள்ள ஆட்டுக் கிடையில் நரி புகுந்தாற் போல. * நாய் உளம்புதல் மாதிரி. * நாய் ஊளையிட்டா மழை பெய்ய வேண்டும்? * நாய் ஊளையிட்டால் ஊர் நாசம் ஆகும். * நாய் ஊளையிட்டாற் போல. * நாய் ஊளையிடுவது நடுச்சாமத்துக்கு மேல். * நாய் ஊளையும் சொல்லி நரி ஊளையும் சொல்லலாமா? * நாய் எங்கே? சிவலோகம் எங்கே? * நாய் எச்சில், தாய் எச்சில். * நாய் என்றாலும் நாயகன்; பேய் என்றாலும் புருஷன். * நாய் ஏறினாலும் உப்பு மூட்டை நாழி குறையும். * நாய் ஒரு சிறு எலும்புக்கும் சந்தோஷம் அடையும். * நாய் ஓட்டமும் சில்லறைப் பாய்ச்சலும். * நாய் ஓட ஓட நரியும் விரட்டும். * நாய் ஓடினால் துரத்தும்; துரத்தினால் ஓடும். * நாய்க் கடிக்குச் செருப்படி. * நாய்க் கடிக்கு நாற்பது நாள் பத்தியம். * நாய்க்கடி பட்டவன் நாற்பதாம் நாள் குரைத்தாற் போல. * நாய்க்கடி பட்டவனுக்கு நாட்டில் ஒரு மூலிகை இல்லாது போகாது. * நாய்க்கடி போதாதென்று செருப்படி பட்டானாம். * நாய்க்கடி விஷம் நாற்பத்தெட்டு நாள் * நாய்க்கருக்கு அவசரம்; நாலு மூன்று மாசப் பாடு. * நாய்க்கால் சிறு விரல் போல. * நாய்க் காவல் தாய்க்காவல் போல. * நாய்க்கு அழகு வாலும், வாய்க்கு அழகு பல்லும். * நாய்க்கு இரும்புக் கடையில் அலுவல் என்ன? * நாய்க்கு உண்டான நல்லறிவும் இல்லை; பேய்க்கு உண்டான பெரிய அறிவும் இல்லை. * நாய்க்கு உண்டோ நாளும் கிழமையும்? * நாய்க்கு உண்டோ மலப் பஞ்சம்? நாவிதனுக்கு உண்டோ மயிர்ப் பஞ்சம்? * நாய்க்கு உபசாரம் நாள் முழுக்கச் சொன்னாலும் வள்வள் என்பதை விடாது. * நாய்க்கு உள்ள அறிவு கூட இல்லையா? * நாய்க்கு உள்ள நன்றி நல்லவர்க்கும் கிடையாது. * நாய்க்கு எங்கே அடிப்பட்டாலும் காலைத்தான் நொண்டும். * நாய்க்கு எச்சில் இலை; பேய்க்கு வேப்பிலை. * நாய்க்கு எதற்கு நன்னாரிச் சர்பத்து? * நாய்க்கு எதிரே நாய் வராமல் இருந்தால் காசிக்குப் போய்த் திரும்புமாம். * நாய்க்கு எலும்புத் துண்டம் போட்ட மாதிரி. * நாய்க்கு என்ன வேலை? கஞ்சியைக் கண்டால் குடிக்க வேண்டியது; கதுப்பைக் கண்டால் குரைக்க வேண்டியது. * நாய்க்கு ஏது சேமியா பாயசம்? * நாய்க்குத் தெரியுமா ஒரு சந்திப் பானை? * நாய்க்குத் தெரியுமா கொக்குப் பிடிக்க? * நாய்க்குத் தெரியுமா தீவட்டி வெளிச்சம்? * நாய்க்குத் தெரியுமா தேங்காய் ருசி? * நாய்க்குத் தெரியுமா தோல் தேங்காய்? * நாய்க்குத் தெரியுமா நல்லெண்ணெய்ப் பானை? * நாய்க்குத் தேனீக் கொட்டினால் சுற்றிச் சுற்றிக் குரைக்குமாம். * நாய்க்குத் நக்கத் தெரியும்; முதலைக்கு முழுங்கத் தெரியும். * நாய்க்கு நடை போட்டால் நாய்க்கு அழகா? நாயகனுக்கு அழகா? * நாய்க்கு நடவாத நடப்பு நடக்கும். * நாய்க்கு நரகல் சர்க்கரை. * நாய்க்கு நரிக் குணம். * நாய்க்கு நருள் வேண்டும்; பூனைக்கு இருள் வேண்டும். * நாய்க்கு நல்ல காலம் என்றால் நான்கு எச்சில் இலை கிடைக்கும். * நாய்க்கு நல்ல தனம்; பேய்க்குப் பெரிய தனம். * நாய்க்கு நல்ல ருசி தெரியுமா? * நாய்க்கு நறு நெய் இணங்காது. * நாய்க்கு நாக்கில் வேர்க்கும்; காக்கைக்கு மூக்கில் வேர்க்கும். * நாய்க்கு நாக்கில் ஜலம் சொட்டுகிறது போல. * நாய்க்கு நாணயம் எதுக்கு? * நாய்க்கு நாய் பகை; கோழிக்குக் கோழி பகை; வைத்தியனுக்கு வைத்தியன் பகை, தாசிக்குத் தாசி பகை. * நாய்க்கு நாலு சலாம் போட்டாலும் நன்றி கெட்டவனுக்குச் சலாம் போடாதே. * நாய்க்கு நாலு மாசம்; பூனைக்கு ஆறு மாசம். * நாய்க்கு நாறல் கஞ்சி வார்த்தாலும் அது வீண் போகாது. * நாய்க்கு நோய் ஏது? * நாய்க்குப் பகை நாயேதான். * நாய்க்குப் பட்டம் கட்டினால் நாயகன் பேரைச் சொல்லும். * நாய்க்குப் பயந்து நரியிடம் ஒளிந்தாற் போல. * நாய்க்குப் பல் நாற்பத்திரண்டு. * நாய்க்குப் பிறந்த நாயே. * நாய்க்குப் பிறந்தவனை இப்போதுதான் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. * நாய்க்குப் பின்னால் வால் வளைவு; ஆனைக்கு முன்னால் கை வளைவு. * நாய்க்குப் பின்னால் வால் வளைவு; ஆனைக்கு முன்னால் கை வளைவு. * நாய்க்குப் புண் வந்தால் நக்கும்; கோழிக்குப் புண் வந்தால் கொத்தும். * நாய்க்குப் பூர்வ ஜன்ம வாசனை வந்தது போல. * நாய்க்குப் பெயர் முத்துமாலை; அதற்கு ஆக்கிப் படைக்கிறது வரகந் தவிடு. * நாய்க்குப் பெரிய தனம் தந்தால் விநாடிக்கு ஒரு தரம் கடிக்காதா? * நாய்க்கும் ஈக்கும் தடை இல்லை. * நாய்க்கும் உண்டு சூல் அழகு. * நாய்க்கும் உதவாது; நளவனுக்கும் உதவாது. * நாய்க்கும் தன் வீடுதான் பெரிது. * நாய்க்கும் தெளியும் நாலாம் மாதம். * நாய்க்கும் நரிக்கும் கல்யாணம் ஆனால் உனக்கு என்ன ஆச்சு? எனக்கு என்ன ஆச்சு ? * நாய்க்கும் நாகத்துக்கும் தலை உயிர் நிலை. * நாய்க்கும் நாய்க்குடைக்கும் என்ன சம்பந்தம்? * நாய்க்கும் பருத்திக் கடைக்கும் என்ன சம்பந்தம்? * நாய்க்கும் பேய்க்கும் உறவு இல்லை. * நாய்க்கும் பேய்க்கும் கோவில் பெயராம். * நாய்க்கு மட்டையோடு தேங்காய் கிடைத்தது போல. * நாய்க்கு மீசை முளைத்தால் நாவிதனுக்கு என்ன வேலை? * நாய்க்கு முழுத் தேங்காய் கிடைத்தாற் போல * நாய்க்கு முறை இல்லை. * நாய்க்கு மூத்தாள் தாய்க்கும் ஈயாள். * நாய்க்கு வால் போனால் என்ன? கழுதைக்குப் பல் போனால் என்ன? * நாய்க்கு வாழ்க்கைப் பட்டால் குரைக்க வேணும்; பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரத்தில் ஏற வேணும். * நாய்க்கு வாழ்ந்து நாலு பிள்ளை பெற்றாலும் தாய்க்கு உதவி. * நாய்க்கு வெண்டயம் கட்டினால் நாயகனுக்கு அழகு. * நாய்க்கு வெண்டயம் போட்டது போல. * நாய்க்கு வேர்வை நாக்கிலே சொட்டும். * நாய்க்கு வேலை இல்லை; அதைப் போல் அலைச்சல் இல்லை. * நாய்க்கு வேலையும் இல்லை; நிற்க நேரமும் இல்லை. * நாய்க் கூத்துக் கட்டினால் குரைக்க வேணும். * நாய் கக்கித் தின்றது போல. * நாய் கடித்ததற்கும் செருப்பால் அடித்ததற்கும் சரி. * நாய் கடித்ததும் அல்லாமல் செருப்படியும் படவேண்டும். * நாய் கடித்த வீட்டில் நீராகாரம் சாப்பாடு. * நாய் கடித்தால் கூட வைத்துக் கட்டக் காசு இல்லை. * நாய் கடித்தால் செருப்பால் அடிக்கலாமா? * நாய் கத்தினால் நமனும் பயப்படுவான். * நாய் கருப்புக் கட்டியைக் கடித்தாற் போல. * நாய்களிலுமா ஜாதி வித்தியாசம்? * நாய் காசிக்குப் போன மாதிரி. * நாய் காணிற் கற்காணாவாறு. * நாய் கிழடானாலும் மலம் தின்னும் புத்தி போகாது. * நாய் குட்டி போட்ட இடமும் நாரத்தை பட்ட இடமும் பாழ். * நாய் குப்பை மேட்டிலே; பேய் புளிய மரத்திலே. * நாய் குரைக்கப் பேய் நடுங்கும். * நாய் குரைத்துக் காது செவிடானது; நாய் கடித்து கால் ரணமானது. * நாய் குரைத்துக் குட்டி தலையில் வைத்தது போல. * நாய் குரைத்து நத்தம் பாழாகுமா? * நாய் குரைத்து நந்தவனம் பாழாகாது. * நாய் குரைத்து விடியுமா? கோழி கூவி விடியுமா? * நாய் கெட்ட கேட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு சந்தி. * நாய் கெட்ட கேட்டுக்குத் தேங்காய்ப் பாலும் சோறுமா? * நாய் கெட்ட கேட்டுக்கு நடு வீட்டில் ஒரு சந்தியா? * நாய் கெட்ட கேட்டுக்குப் பூமரம் நிழலாம். * நாய் கெட்ட கேட்டுக்கு மாமரத்து நிழல்; அது கெட்ட கேட்டுக்குப் புளி போட்ட கறி. * நாய் கெட்ட கேட்டுக்கு வெள்ளிக் கிழமை விரதமா? * நாய் கெட்டால் குப்பையிலே. * நாய் கொடுத்ததாம் அரசு பதவி; சிங்கமும் அதை ஏற்றுக் கொண்டதாம். * நாய் கொண்டு போன பானையை ஆர் கொண்டு போனால் என்ன? * நாய் கெட்டால் குப்பையிலே. * நாய் கோவிலுக்குப் போவானேன்? கோவில் காத்தவன் தண்டம் இறுப்பானேன்? * நாய்ச் சகவாசம் சீலையைக் கிழிக்கும். * நாய் சண்டை நாலே விநாடிதான். * நாய் சத்திரத்திலே போனாலும் நக்குத் தண்ணீர். * நாய் சந்தைக்குப் போகிற மாதிரி. * நாய் சந்தைக்குப் போச்சாம்; அங்கும் தராசுக் கோலால் அடிபட்டதாம். * நாய் சந்தைக்குப் போய் மொந்தையடி வாங்கிற்றாம். * நாய் சந்தைக்குப் போனதென்று நரியும் சந்தைக்குப் போனதாம். * நாய் சாம்பலிற் சுருட்டினாற் போல. * நாய் சிங்கத்துக்குப் பட்டம் கட்டுமா? * நாய் சிலிர்த்தால் நல்ல சகுனம். * நாய் சொப்பனம் கண்டாற் போல. * நாய்த் தூக்கம் போல. * நாய்த் தோல் செருப்பு ஆகுமா? * நாய்த் தோலில் கட்டி வரும் நல்லதொரு பெருங்காயம். * நாய் தன் கடமையில் தவறியதென்று கழுதை ஆத்திரப் படுவானேன்? * நாய் தின்றதோ, நரி தின்றதோ, யார் கண்டார்கள்? * நாய் துப்பட்டி வாங்கினாற் போல. * நாய் தொட்ட சட்டி நல்லதுக்கு உதவாது. * நாய் தொட்ட பாண்டம்.  * நாய் நக்க நக்கக் கல் தேயும். * நாய் நக்கிக் குளம் வற்றி விடுமா? * நாய் நக்கிச் சமுத்திரம் குறையுமா? * நாய் நக்கிப் பிழைக்கும்; காக்கை கத்திப் பிழைக்கும். * நாய் நக்கிப் பிழைக்கும்; கோழி குத்திப் பிழைக்கும். * நாய் நக்கிய கற்சட்டி. * நாய் நக்கிய சட்டியை நாய்க்கே போடு. * நாய் நக்கினாற் போல. * நாய் நடு ரோட்டில் உறங்கும்; சேய் தாய் மடியில் உறங்கும். * நாய் நம்மைக் கடித்தால் நாம் நாயைக் கடிக்கிறதா? * நாய் நல்லதானால் குணம் நல்லதாகுமா? * நாய் நல்ல வழி காட்டும்; பூனை பொட்டை வழி காட்டும். * நாய் நன்றி மறவாது; பசு கன்றை மறவாது. * நாய் நாலு காதம் ஓடினாலும் குதிரை வேகம் ஆகுமா? * நாய் நுழையலாம்; நான் நுழையக் கூடாதாம். * நாய் நொண்டி ஆனாலும் எச்சில் இலை கண்டால் ஓடத்தான் செய்யும். * நாய்ப் பஞ்சம் நக்கித் தீரும்; கோழிப் பஞ்சம் கொத்தினால் போல. * நாய் நடு ரோட்டில் உறங்கும்; சேய் தாய் மடியில் உறங்கும். * நாய்ப் பிட்டத்தில் தேள் கொட்டினால் நாய்தான் நக்க வேணும். * நாய்ப் பிட்டத்தில் தேன் வைத்த மாதிரி. * நாய்ப் பிறவி. * நாய்ப் பீயை மிதிப்பானேன்? நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவானேன்? * நாய்ப் புண்ணுக்குச் சாம்பல் மருந்து. * நாய்ப் புத்தியைச் செருப்பால் அடி. * நாய் பகைத்தால் நாழி அரிசியோடே; பேய் பகைத்தால் ஒரு பிள்ளையோடே. * நாய் பட்ட பாடு தடிக் கம்புக்குத் தெரியும். * நாய் பல்லைக் கெஞ்சுகிறாற் போல. * நாய் பிடிக்க மனிதன் குரைத்தானாம். * நாய் பிடுங்கினாற் போல. * நாய் பின்னோடே நாலைந்து குட்டிகள்; பீப்பன்றிகள் பின்னோடே பத்தெட்டுக் குட்டிகள். * நாய் பூபாளம் பாடுகிறது. * நாய் பெற்ற தெங்கம் பழம். * நாய் பொல்லாதது ஆகுமா? நல்ல பசு மாடு ஆகுமா? * நாய் போல அலைகிறான். * நாய் போல் அலைந்தாலும் நாலு காசு கிடைக்கும். * நாய் போல் உழைத்தாலும் வாய்ச் சோறு இல்லை. * நாய் போல் ஏன் எறிந்து விழுகிறாய்? * நாய் போல் குரைத்து நடுத் தெருவில் நிற்பானேன்? * நாய் போர்வ வாங்குன கதெ போல * நாய் மடி சுரந்தால் என்ன? சுரக்காமற் போனால் என்ன? * நாய் மலையைப் பார்த்துக் குரைத்ததாம்; பேய் மரத்தைப் பிடித்துக் குலுக்கிற்றாம். * நாய் மனிதனைக் கடித்தால் அதற்காக மனிதன் நாயைக் கடிப்பதா? * நாய் மாதிரி இளைப்பு வாங்குகிறது. * நாய் மாதிரி காத்துக் கிடந்தேன். * நாய் மாதிரி சுருட்டிக் கொண்டு படுத்துக் கிட. * நாய் மாதிரி விழுவான்; நரி மாதிரி குழைவான். * நாய் முகத்திலே மீசை முளைத்தால் அம்பட்டனுக்கு என்ன லாபம்? * நாய் முழுத் தேங்காயை உருட்டுகிற மாதிரி. * நாய் முன் தின்னாதே; கொதி வந்து விடும். * நாய் மூத்திரம் குத்துக் கல்லில். * நாய் மேல் ஏறி வையாளி விட்டால் என்ன? வீழ்ந்தால் என்ன? * நாய் மேல் ஏறி வையாளி விட்டாற் போல. * நாய் மோப்பம் பிடிக்கிற மாதிரி. * நாய் ராஜ்யத்தில் காதல் ஏது? கல்யாணம் ஏது? * நாய் ராஜாவுக்கு எச்சில் இலை கப்பம். * நாய் வந்தால் நாழி எண்ணெய்க்குக் கேடு; பேய் வந்தால் ஒரு பிள்ளைக்குக் கேடு. * நாய் வயிற்றில் நரி பிறக்குமா? * நாய் வயிற்றில் நாலு; பன்றி வயிற்றில் பத்துப் பிறந்தது போல. * நாய் வயிற்றைப் போல். * நாய் வளர்த்தால் நல்வழி காட்டும். * நாய் வாசலைக் காத்து என்ன? கையில் இல்லாதவன் பணக்காரனைக் காத்து என்ன? * நாய் வாய்ச் சீலை போல. * நாய் வாய்ப்பட்ட தேன் நல்லது ஆகுமா? * நாய் வாய் வைத்தது போல. * நாய் வாயில் அகப்பட்ட முயல் போல. * நாய் வாயில் கோல் இட்டால் லொள் லொள் என்றுதானே குரைக்கும்? * நாய் வாயில் கோல் இடலாமா? * நாய் வாயில் நெய் சொட்டுகிறது என்றால் கேட்பவருக்கு மதி இல்லையா? * நாய் வாயிலும் நாலு சோறு. * நாய் வாயை வைத்தது போல் வேலை செய்கிறது. * நாய் வால் அசைந்தாலும் பிடுங்க வராது. * நாய் வாலிலே தேன் வைத்தால் ஆருக்குக் கூடும்? * நாய் வாலுக்கு மட்டையை வைத்துக் கட்டினாற் போல. * நாய் வாலுக்கு மட்டையை வைத்துக் கட்டினாற் போல. * நாய் வாலைக் குணக்கு எடுக்கலாமா? * நாய் வாலைக் குறை நீக்கலாமா? * நாய் வாலைக் கொண்டு சமுத்திரத்தை அடைக்கலாமா? * நாய் வாலை நறுக்க நாவிதன் வேண்டுமா? * நாய் வாலை நிமிர்த்தப் பேயால் ஆகுமா? * நாய் வாலை நிமிர்த்த முடியுமா? * நாய் வாலை நிமிர்த்தவும் முடியாது; பேய்க் காலைப் பார்க்கவும் முடியாது. * நாய் வாலைப் பற்றி ஆற்றில் இறங்கலாமா? * நாய் வாலைப் பிடித்துக் கொண்டு காவிரியைக் கடக்க முடியுமா? * நாய் வாழ்ந்தால் என்ன? உறி அறுந்தால் என்ன? * நாய் வாழ்ந்தால் என்ன? பூனை தாலி அறுத்தால் என்ன? * நாய் விற்ற காசு குரைக்குமா? மீன் விற்ற காசு நாறுமா? * நாய் விற்ற துட்டைக் குரைத்தா காண்பிக்கிறது? * நாய் வீட்டைக் காக்கும்; புலி காட்டைக் காக்கும். * நாய் வீட்டைக் காக்கும்; பூதம் பணத்தைக் காக்கும். * நாய் வீட்டைக் காக்கும்; பூனை அடுப்படியைக் காக்கும். * நாய் வீட்டைக் காக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும். * நாய் வீட்டைச் சுற்றும்; நோய் உடலைச் சுற்றும். * நாய் வேட்டை ஆடும்; குதிரை ஓட்டம் ஓடும். * நாய் வேண்டும் என்றால் நரியைக் கொண்டு வருகிறான். * நாய் வேதம் படித்தது போல. * நாய் வேஷம் போட்டால் குரைக்க வேண்டும்; பேய் வேஷம் போட்டால் ஆடவேண்டும். * நாய் வேஷம் போட்டால் குரைத்துத்தான் ஆகவேண்டும். * நாயகன் பட்சம் ஆயிரம் லட்சம். * நாயம் கேட்டுக் கொண்டா காயம் உரைக்கிறார்கள்; அம்மியைக் கேட்டுக் கொண்டா மிளகாய் அரைக்கிறார்கள்? * நாயன் இல்லாத நங்கை இருந்தென்ன போயென்ன? * நாயாகக் கத்திப் பேயாகப் பறந்தாலும் முடியாது. * நாயா சிங்கத்துக்கு நற்பட்டம் கட்டுகிறது? * நாயாடி மக்களோடு போய் ஆட வேண்டாம். * நாயாய்ப் பிறந்தாலும் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும். * நாயால் ஆகுமா கொக்குப் பிடிக்க? * நாயிடம் தேன் இருக்கிறது; நக்கவா, துக்கவா, எதுக்கு ஆகும்? * நாயின் அவசரம் வாலுக்குத்தான் தெரியும். * நாயின் கழுத்தில் நவரத்தினம் கட்டினாலும் நாய்க்குத் தெரியுமா அதன் மகிமை? * நாயின் காதில் தேன் அடை வைத்தது போல * நாயின் கோபத்தைப் பற்றிப் பூனையைக் கேட்டால் தெரியும். * நாயின் நிழல் போல வாழ் நாள், கடிகம் பால் கழிவது போல. * நாயின் பின்னோடு நாலைந்து; பன்றியின் பின்னோடு பத்தெட்டு. * நாயின் புண்ணை நாய் கக்கும்.  * நாயின் மலத்தை மிதிப்பானேன்? நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவானேன்? * நாயின் முதுகில் அம்பாரியைக் கட்டினது போல. * நாயின்மேல் ஏறி வையாளி விட்டால் என்ன? விழுந்தால் என்ன? * நாயின் வாயில் கோலைக் கொடுக்கிறதா? * நாயின் வாயில் சிக்கிய எலியைப் போல. * நாயின் வாலைக் குணக்கு எடுக்கலாமா?. * நாயின் வாலைப் பன்னீராண்டு குழலில் இட்டாலும் எடுக்கும்போது வளைந்துதானே இருக்கும்? * நாயின் விசுவாசம் பூனைக்கு வருமா? * நாயின் வீரம் தன் வீட்டு வரையில்தான். * நாயினும் கடையேன். * நாயின் வீரம் தன் வீட்டு வரையில்தான். * நாயும் எறும்பும் போல. * நாயும் கரிச் சட்டியும் போல. * நாயும் காகமும் போலச் சண்டை போடாதே. * நாயும் சரி, நாவியும் சரி உனக்கு. * நாயும் தன் நிலத்துக்கு ராஜா. * நாயும் தீண்டாத உணவு; புலையனும் தீண்டாத யாக்கை. * நாயும் நரியும் ஊளையிட. * நாயும் நரியும் ஒன்றாகுமா? * நாயும் நரியும் போல. * நாயும் நாயும் போல. * நாயும் பசுப்பட்டு மோரும் விலை போகிறபோது பார்க்கலாம் * நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு. * நாயும் பூனையும் அடித்துக் கொண்டது போல. * நாயும் பூனையும் போல. * நாயும் பேயும் பிள்ளை ஆகுமா? * நாயும் வர உறியும் அறுந்தவன் சீலம். * நாயும் வயிறு வளர்க்கும் நடு ஜாமத்திலே. * நாயும் வளர்த்து நரகலையும் வாருவானேன்? * நாயே நல்லப்பா, பேயே பெரியப்பா. * நாயே பேயே, நங்கண்ண, செங்கண்ண, தாயார் வளர்த்த தறிதலையே, பாட்டுக்கும் உனக்கும் எவ்வளவு தூரம்? * நாயேன் சொல் அம்பலத்துக்கு ஏறுமா? * நாயை அடக்க நாலு பேர்; நாவை அடக்க நாலாயிரம். * நாயை அடிக்கக் குறுந்தடி வேண்டுமா? * நாயை அடிக்காதே; நாய் முள்ளைச் சுமக்காதே. * நாயை அடித்த பாவம் குரைத்தால் போகுமா? * நாயை அடித்தால் காலைத் தூக்கும். * நாயை அடித்தாலும் நாலு காசு கிடைக்குமா? * நாயை அடித்துப் பல்லியைப் பார்ப்பானேன்? * நாயை அடித்துப் போட்டது போல. * நாயை அடிப்பதற்கு நல்ல தடி வேண்டுமா? * நாயை அடிப்பானேன்? காலைக் கடிப்பானேன்? * நாயை அடிப்பானேன்? காலைப் பிடிப்பானேன்? * நாயை அடிப்பானேன்? பல் இழிவு பார்ப்பானேன்? * நாயை அடிப்பானேன்? நடு வீடெல்லாம் கழிவானேன்? * நாயை அடிப்பானேன்? மலத்தைச் சுமப்பானேன்? * நாயை உசுப்பச் செய்து நரி உள்ளே நுழைந்து கொண்டது. * நாயை எங்கே அடித்தாலும் காலில்தான் நோக்காடு. * நாயை ஏய்க்குமாம் நரி, அதையும் ஏய்க்குமாம் ஒற்றைக் கால் நண்டு. * நாயை ஏவினால் அது தன் வாலை ஏவுமாம். * நாயை ஓட்டிப் பேயைக் கூட்டி வந்தானாம். * நாயை ஓட்டிவிட்டு நடுக் குப்பையில் உட்காரவா வேண்டும்? * நாயைக் கட்டிக் கொண்டு அழுவது போல. * நாயைக் கட்டி மாரடித்து நல்ல மனிதனும் நாயாய்ப் போனான். * நாயைக் கண்டா காயம் கரைக்கிறது? * நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம். * நாயைக் கண்டால் நகர்ந்து போ. * நாயைக் கண்டால் நரிக்கு லட்டுண்டை மாதிரி. * நாயைக் கண்டால் பேயும் விலகும். * நாயைக் கண்டால் மனிதனுக்குப் பயம்; மனிதனைக் கண்டால் நாய்க்கும் பயம். * நாயைக் கண்டு காயம் கரைக்கிறதா? * நாயைக் கண்டு பயந்த முயல் போல. * நாயைக் கிளப்பிவிட்டு முயலைப் பிடிப்பது போல. * நாயைக் குளிப்பாட்டி நட்டுள்ளே வைத்தாலும் வாலைக் குழைத்துக் கொண்டு மலம் தின்னப் போகும். * நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும், அது வாலைக் குழைத்துக் கொண்டு வாசலில்தான் படுக்கும். * நாயைக் குளிப்பாட்டிப் பல்லக்கில் ஏற்றினாலும் எலும்பைக் கண்டால் வள்ளென்று தாவும். * நாயைக் கூப்பிடுகிற நேரத்தில் மலத்தையும் எடுத்துச் சாணத்தையும் பூசிவிடலாம். * நாயைக் கொஞ்சினால் வாயை நக்கும். * நாயைக் கொண்டு போனால் மிளாவைக் கொண்டு வரலாம். * நாயைக் கொழுக்கட்டையால் எறிந்தது போல. * நாயைக் கொன்ற பாவம் நாலு ஜன்மம் எடுத்தாலும் போகாது. * நாயைச் சீ என்றால் காத வழி போகும். * நாயை நல்லம்மா என்றும், பேயைப் பெத்தப்பா என்றும் பேச வேண்டிய காலம். * நாயைப் பற்றிக் கேட்பாரும் இல்லை; நடு வீட்டில் வைப்பாரும் இல்லை. * நாயைப் பார்க்க நரி தேவலை; ஊரைப் பார்த்து ஊளை இட. * நாயைப் பிடித்துக் கட்டிப் பிச்சை போட்டாற் போல. * நாயைப் பிடித்து நரிக்குக் கல்யாணம் செய்து வைத்தது போல. * நாயைப் பூஜித்தாலும் அதனிடம் புனுகு உண்டாகுமா? * நாயைப் போல் அலைந்தாலும் நாலு காசுக்கு வழி இல்லை. * நாயைப் போல் குழைகிறான். * நாயைப் போல் நாக்கு நாலு முழம். * நாயைப் போல் நான்கு யுகம் வாழ்ந்து என்ன? * நாயைப் போல் பல்லை இளிக்காதே. * நாயைப் போல் பாடுபட்டால் ஆனையைப் போல் அரசாளலாம். * நாயையும் சூக் காட்டி முயலையும் எழுப்பி விடுவது போல. * நாயையே திருடன் அடித்துக் கொண்டு போனால் யார் ஐயா குரைப்பது? * நாயை வளர்த்தால் நல்ல வழி காட்டும்; பூனையை வளர்த்தால் பொட்டை வழி காட்டும். * நாயை விரட்டிவிட்டு நடுவழியில் படு. * நாயை வெட்டிச் சூக் காட்டினாலும் அது தன் வாலை ஆட்டும். * நாயை வைத்துக் கொண்டு தானே குரைத்தாற் போல். * நாயோடு சேர்ந்தாலும் நல்ல முயல் கிடைக்கும். * நாயோடு படுப்பானேன்? தெள்ளுப் பூச்சியோடு எழுந்திருப்பானேன்? * நார் அற்றால் கூடும்; நரம்பு அற்றால் கூடுமா? * நார் அறுந்தால் முடியலாம்; நரம்பு அறுந்தால் முடியலாம்; மனம் அறுந்தால் முடியலாகாது. * நார் இல்லாமல் மாலை தொடுக்கலாமா? * நாரசிங்கமும் இரணியனும் போல. * நாரத்தங்காய்க்கு இட்ட உப்பும் நாத்தனாருக்கு இட்ட சாதமும் எவ்வளவானாலும் போதா. * நாரத்தங்காய்க்குப் போடுகிற உப்பும் நாத்தனாருக்குப் போடுகிற சாதமும் வீண் போகா. * நாரத்தங்காய் விற்ற காசு கசக்குமா? * நாரத்தை காய்க்க நாய்ப்பலி இட வேண்டுமாம். * நாரதா, கலகப்ரியா. * நாராசம் காய்ச்சி நடுச் செவியில் விட்டாற் போல். * நாராயணன் ஒருவன்தான்; இரண்டாமவன் ஒருவனும் இல்லை. * நாராயணன் குடுமியை நாராலே பின்னிக் கோபாலன் குடுமியைக் கோரையாலே பின்னி. * நாராயணன் கோவிலுக்கு நாலு வாசல். * நாரும் பூவும் போல. * நாரை அறியாத குளமும் நமன் அறியாத உயிரும் உண்டோ? * நாரையைப் பார்க்க நரியே தேவலாம், ஊரைப் பார்த்து ஊ ளை இட. * நால்வர் கூடினால் தேவர் சபை. * நால்வர் வாக்குத் தேவர் வாக்கு * நால்வரோ தேவரோ? * நாலடி இரண்டடி கற்றவனிடம் வாயடி கையடி அடிக்காதே. * நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பன் ஆவான். * நாலாம் பாதம் நாழி பிடித்து உட்காரும்; எட்டாம் மாதம் எடுத்து அடி வைக்க வேணும். * நாலாம் பிறை பார்த்தால் நாய் அலைச்சலாய்த்தான் முடியும். * நாலாம் பேற்றுப் பெண் நாதாங்கியை விற்று உண்ணும். * நாலாவது பெண், நாதாங்கி முளைக்கும் திக்கு இல்லை. * நாலு அடி அடித்துப் போர்மேல் போட்டாயிற்று. * நாலு ஆறு கூடினால் பாலாறு. * நாலு கரண்டி நல்லெண்ணெய்; நாற்பத்தாறு தீவட்டி; வாரார் ஐயா சுப்பையா; வழிவிடடி மீனாட்சி. * நாலு காரை கூடினால் ஒரு பழுதை. * நாலு கால் சோமாரியும் ஒரு காலிலே இறங்கினாற் போல. * நாலு காலிலே நரி கள்ளன்; இரண்டு காலிலே இடையன் கள்ளன். * நாலு செத்தை கூடினது, ஒரு கத்தை. * நாலு தடவை தப்பினவனுக்கு நமன் பயம் ஏது? * நாலு தலைமுறைக்கு முன் நாவிதனும் சிற்றப்பன் ஆவான். * நாலு பறையனடி, நானூறு பள்ளனடி; ஆள் இல்லாப் பாவமல்லோ ஆளேற்றம் கொள்கிறான்? * நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவிலே சோறு; ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியிலே சோறு.  * நாலு பிள்ளையும் நல்ல பிள்ளையானால் மேலும் பிள்ளை பெறுவானேன்? * நாலு பேர் கூடினது சபை. * நாலு பேர் போன வழி. * நாலு பேர் போன வழியில் நாமும் போக வேண்டும். * நாலு பேர் வாக்குத் தெய்வ வாக்கு. * நாலு பேர் வாழ நடுவிலே நாம் வாழ. * நாலு பேருக்குச் சொல்லி மனசிலே போட்டு வைக்கிறவன். * நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி; ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி. * நாலும் கிடக்க நடுவிலே நாத்தனார் தலையைச் சிரைத்தாளாம். * நாலு மாதம் வரையில் நாய்கூடப் பிள்ளையை வளர்க்கும். * நாலு முழத்தில் நடுவில் ஒரு முழம். * நாலு வீட்டில் கல்யாணம்; நாய்க்கு நாய் தொங்கோட்டம். * நாலு வீட்டில் நக்கிக் குடிக்கிற நாய்க்கு ஏன் இந்த வாய்? * நாலு வீட்டுச் செல்ல நாய் நடுத் தெருவில் அலைகிறது. * நாலு வீடு ஆடுது; ஒரு வீடு ஆடுது. * நாலு வேதமும் தெரியும்; ஆறு சாஸ்திரமும் தெரியும்; வாய் மட்டும் ஊமை. * நாவல் பழுத்தால் நாடு செழிக்கும். * நாவலும் பாவலும் ரத்த புஷ்டிக்கு. * நாவாய் கவிழ்த்த நாய்கன் போல. * நாவிதன் செய்தி அறிந்து குடுமியைப் பத்திரப் படுத்தினானாம். * நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும். * நாவு அசைய நாடு அசையும். * நாவுக்கு இசைந்தால் பாவுக்கு இசையும். * நாவுக்கு எலும்பு இல்லை; எப்படிப் புரண்டாலும் புரளும். * நாவை அடக்கி ஆளாவிட்டால் அது தன்னையே ஆளும். * நாவைச் சுற்றிப் பிடிக்கிற தாரத்துக்கு நாள் கேட்டானாம் கிணறு வெட்ட. * நாழி அரிசிச் சாதம் சாப்பிட்டாலும் நாய் நாலு வீட்டில் நக்கித் தான் தின்னும். * நாழி அரிசி சோறு உண்டவன் நமனுக்கு உயிர் கொடான். * நாழி அரிசிச் சோறு தின்றாலும் நாய்க்குக் குடல் நிறையாது. * நாழி அரிசி நாய் கொண்டு போனால் ஞானமும் கல்வியும் பேய் கொண்டு போகும். * நாழி உடைந்தால் நெல்லுக்குச் சேதமா? * நாழி உப்பும் நாழி அப்பும் நாழி ஆன வாறு போல. * நாழி உள்ளார்க்கு நானாழி கடனோ? * நாழி நெல்லுக்கு ஓர் அந்து. * நாழி நெல்லுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாய் நிர்வாணந்தான். * நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகாது. * நாழிப் பால் வார்த்தாலும் நடுச் சொல்வர் அறிவுடையோர். * நாழி மாவுக்கு நானாழி வெள்ளம். * நாழி முகவாது நானாழி. * நாழியாய சமுத்திரத்தில் நானாழி மொள்ளலாமா? * நாழியை மூளி என்றால் மரக்காலைப் பொட்டை என்பது போல். * நாழிவர மூதேவி; மரக்கால் வரச் சீதேவி. * நாள் ஆற்றுகிறது நல்லார் ஆற்றார். * நான் ஏர் உழும் போதே வரப்பிலே ஏற்றினாளாம். * நான் ஒரு மேனியும் பொழுது ஒரு வண்ணமும் * நான் ஏறினால் கீழ் ஏறும். * நாள் செய்வது நல்லுற்றார் செய்யார். * நாள் சென்ற கொடை நடைக்கூலி ஆகும். * நாள் வருமட்டும் நாராய்த் தோலாய் இழுத்துக் கொண்டிருக்கும். * நாளுக்கு நாள் நகர்ந்தது சாண் அம்மானை. * நாளுக்கு நான் நரியாய்ப் போகிறது.  * நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை. * நாளும் கோளும் நன்மை செய்யும். * நாளை என்பது இல்லை என்பதற்கு அடையாளம். * நாளை என்பது நமன் நாள் ஆகும். * நாளை என்பதைவிட இல்லை என்பவர் நல்லவர். * நாளைக்குக் கல்யாணம்; பிடியடி பாக்கு வெற்றிலையை. * நாளைக்குத் தாலி கட்டுகிறேன்; கழுத்தே சுகமாய் இரு. * நாளைக்குத் தின்கிற பலாப்பழத்திலும் இன்றைக்குத் தின்கிறகளாப் பழம் நல்லது. * நாளைக்குத் தெரியும் நாச்சியாத்தாள் மாரடி. * நாளைக்கும் சீர் நடக்கத்தான் போகிறது; இன்றைக்கும் சீர் இருக்கத்தான் போகிறது. * நாளைக் குறைத்தால் தன்னைக் குறைக்கும். * நாளை மடக்கினால் நம்மை மடக்கும். * நாளை வரும் நெற்குவியலிலும் இன்று உள்ள படி விதை பெரிதென்று விழுங்கலாமா? * நாளை வரும் பலாக்காயை விட இன்று வரும் களாக்காய் நல்லது. * நாற்கலக் கூழுக்கு நானே அதிகாரி. * நாற்பதுக்குமேல் சென்றால் நாய்க் குணம். * நாற்பதுக்குமேல் நாய்க்குணம்; அம்பதுக்கு ஆட்டம்; அறுபதுக்கு ஓட்டம். ==நி== * நிச்சயம் இல்லாத வாழ்வு; நிலை இல்லாத காயம் * நிசங்கனுக்குக் கோட்டை முற்றுகை கண்டது உண்டா? * நிசம் ஒன்று பல தீங்கு நீக்கும் * நிசம் நிச போகம்; வியாசம் வியாச போகம் * நித்தம் என்றால் முத்தமும் சலிக்கும் * நித்தம் சாவார்க்கு அழுவார் உண்டா? * நித்தம் நடந்தால் முற்றமும் சலிக்கும் * நித்தம் போனால் முத்தம் சலிக்கும் * நித்திய கண்டம் பூரண ஆயிசு * நித்திய கண்டம் பூர்ணாயுசு * நித்திய கல்யாணம்; பச்சைத் தோரணம் * நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு? * நித்திய தரித்திரத் தகப்பனாரை நின்ற நிலையில் வரச் சொன்னாள் * நித்திய தரித்திரனுக்கு ஆசை அதிகம் * நித்தியம் கிடைக்குமா அமாவாசைச் சோறு? * நித்திரைக்கு நேரிழை சத்துரு * நித்திரை சுகம் அறியாது * நித்திரை சுகம் அறியாது; பசி ருசி அறியாது * நித்திரையிலும் தண்ணீர்ப்பால் குடிக்கிறது இல்லை * நிதம் கண்ட கோழி நிறம் கொடுக்கும் * நிதானியே நேராணி * நிதி அற்றவன் பதி அற்றவன் * நிந்தனை சொல்லேல் * நிமித்தம் பார்க்கிறவன் இரண்டகக்காரி மகன்; பொருத்தம் பார்க்கிறவன் பொல்லாங்கன் மகன் * நிமிர்ந்தால் வானம்; குனிந்தால் பூமி * நிமிர்ந்து போட்டது என்ன? குனிந்து எடுத்தது என்ன? * நிமிஷ நேரம் நிற்கும் இன்பம் சிற்றின்பம் * நிமிஷ நேரம் நீடிய இன்பம் * நிமைப் பொழுதேனும் நில்லாது நீச உடல் * நியாய சபைத் தீர்ப்பு, சேற்றில் நாட்டிய கம்பம் போல; மதில்மேற் பூனை போல * நிர்வாண தேசத்தில் சீலை கட்டினவள் பைத்தியக்காரி * நிர்வாண தேசத்தில் நீர்ச் சீலை கட்டினவன் பைத்தியக்காரன் * நிரக்ஷர குக்ஷி * நிருபன் ஆன போதே கருவம் மெத்த உண்டு * நில்லாத காலடி நெடுந்தூரம் போகும் * நில்லாது ஏதும்; நிலையே கல்வி * நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் அழிய வேண்டும் * நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும் * நிலத்து அளவே பயிர்; குலத்து அளவே குணம் * நிலத்துக்கு ஏற்ற நீரும் குலத்துக்கு ஏற்ற சீரும் * நிலத்துக்கு ஏற்ற விதை; குலத்துக்கு ஏற்ற பெண் * நிலத்துக்குத் தகுந்த களியும் குலத்துக்குத் தகுந்த குணமும் * நிலத்தைப் பொறுத்து எரு விடு * நிலம் ஓய்ந்து வாழ்க்கைப்பட முடியுமா? * நிலம் கடக்கப் பாயலாமா? * நிலம் பொட்டல் அல்ல; தலைதான் பொட்டல் * நிலவுக்கு ஒளித்துப் பரதேசம் போனதுபோல * நிலாக் காய்கிற இடமும் தெரியாது; நெல் விளைகிற பூமியும் தெரியாது * நிலாப் புறப்பட எழுந்தானாம்; நெல்குழி வரைக்கும் நகர்ந்தானாம் * நிலை இல்லான் வார்த்தை நீர்மேல் எழுத்து * நிலை குலைந்தால் சீர் குலையும் * நிலைமை தப்பியவனுக்கு நீதி * நிலையாமை ஒன்றே நிலையானது * நிலையிற் பிரியேல் * நிலைவிட்டால் நீச்சல் * நிழல் அருமை வெயிலில் தெரியும் * நிழல் கடக்கப் பாயலாமா? * நிழல் நல்லது; முசிறு ஒட்டாது * நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும் * நிழலின் பெருமை வெயிலில் போனால் தெரியும் * நிழலுக்கு இடம் கொடுத்தாலும் நீருக்கு இடம் கொடாதே * நிழலுக்கும் கனவுக்கும் ஒத்தது ஆக்கை * நிற்க நிழல் இல்லை; சாயச் சுவர் இல்லை * நிற்க ஜீவன் இல்லாமல் போனாலும் பேர் நிரப்புக் கட்சி * நிறம் சுட்டாற் போம்; குணம் கொன்றாற் போம் * நிறை குடத்தில் பிறந்து நிறை குடத்தில் புகுந்தவன் * நிறைகுடம் தளும்பாது * நிறைகுடம் நிற்கும்; குறை குடம் கூத்தாடும் * நிறைகுடம் நீர் தளும்பல் இல் * நிறைந்த ஆற்றிலே பெருங்காயம் கரைத்தது போல * நிறைந்த சால் நீர் கொள்ளுமா? * நிறை பொதியிலே கழுதை வாய். வைத்தாற் போல் * நிறையக் குளித்தால் கூதல் இல்லை * நிறையக் குறுணி வேண்டாம்; தலை தடவிக் குறுணி கொடு * நிறையக் கேள்; குறையப் பேசு * நிறைய முழுகினால் குளிர் இல்லை * நின்ற இடத்தில் நெடுநேரம் போனால் நின்ற மரமே நெடு மரம் * நின்ற மரமே நெடுமரம் * நின்ற வரைக்கும் நெடுஞ்சுவர்; விழுந்தாற் குட்டிச் சுவர் * நின்ற வெள்ளத்தையும் வந்த வெள்ளம் கொண்டு போயிற்று * நின்றால் நெடு மரம்; விழுந்தால் பன மரம் * நின்றாற்போல் விழுந்தால் தலை உடையும் * நின்று தின்றால் குன்றும் மாளும் * நின்று போட்டதும் இல்லை; குனிந்து எடுத்ததும் இல்லை * நினைக்க முத்தி அண்ணாமலை * நினைக்கும் முன் வருவான்; நினைப்பதும் தருவான் * நினைத்தது இருக்க, நினையாதது எய்தும்; நினைத்தது வந்தாலும் வந்து சேரும் * நினைத்ததும் கறி சமைத்ததும் * நினைத்த நேரம் நெடு மழை பெய்யும் * நினைத்த போது பிள்ளை பிறக்குமா? * நினைத்துக் கொண்டாளாம் கிழவி, வயசுப் பிள்ளைக்கு வாழ்க்கைப்பட * நினைப்பின் வழியது உரை * நினைப்பு எல்லாம் பிறப்பு * நினைப்புக் குடியைக் கெடுத்ததாம்; நேர்வானம் பிட்டத்தைக் கெடுத்ததாம் * நினைப்புப் பிழைப்பைக் கெடுத்தது; நீர்த்த தண்ணீர் உப்பைக் கெடுத்தது * நினைவே கனவு * நிஜமாகத் தூங்குகிறவனை எழுப்பலாம், பொய்யாகத் தூங்குகிறவனை எழுப்ப முடியாது * நிஜாம் அலி தண்டில் நிஜார்க்காரனைக் கண்டாயா? * நிஷ்டூரன் கண்ணைத் தெய்வம் கெடுக்கும்; நீதிமான் கண்ணைப் பரிதானம் கெடுக்கும் ==நீ== * நீ அவல் கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன்; ஊதி ஊதித் தின்னலாம் * நீ அறையில் ஆட்டினாய்; நான் அம்பலத்தில் ஆட்டினேன் * நீ இருக்கிற அழகுக்கா திருட வந்தாய்? * நீ இழு, நான் இழு, மோருக்கு வந்த மொட்டச்சி இழு * நீ உளறாதே; நான் குழறுகிறேன் * நீக்குப் போக்குத் தெரியாமல் நேர்ந்தபடி * நீ கஜகர்ணம் போட்டாலும் நடக்காது * நீ கூத்திக்கு வாழ்க்கைப்பட்டுக் குடியிருப்பு வீடு, செப்பனிட்டாலும் நான் வாத்திக்கு வாழ்க்கைப்பட்ட வயிற்றெரிச்சல் தீராது * நீ கோபம் மா லாபம் * நீச்சம் அறியாதவரை வெள்ளம் கொண்டு போகும் * நீச்சக் கடலிலே நெட்டி மிதிக்கிறது போல * நீச்சத் தண்ணீருக்குக் கெஞ்சினவன் பசும்பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான் * நீச்சு நிலை இல்லாத ஆற்றிலே நின்று எப்படி முழுகுகிறது? * நீசர் ஆனவர் நிலைபெறக் கல்லார் * நீசனை நீசன் நோக்கில் ஈசன் ஆவான் * நீ செத்தால் உலகம் எல்லாம் எறும்பாய்ப் போகுமா? * நீ செய்த நன்றிக்கு நான் நன்றியாப் பெற்றுப் பேர் இட வேணும் * நீ சொம்மு நா சொம்மே, நா சொம்மு நீ சொம்மே * நீ சொல்கிறது நிஜம் ஆனால் நாக்கினால் மூக்கைத் தொடு * நீட்டவும் மாட்டார்; முடக்கவும் மாட்டார் * நீட்டிச் சுருக்கின் மூண்டது நெடும்பகை * நீட்டி நீட்டிப் பேசுகிற வேளாளப் பையா, உங்கள் துரைசாணி எங்கள் சிறைச்சாலையில் இருக்கிறான் * நீட்டின விரலில் பாய்வது போல * நீட்டு வித்தை ஏறாது * நீண்ட கை குறுகாது * நீண்ட கை நெருப்பை அள்ளும் * நீண்ட தச்சும் குறுகிய சொல்லும் * நீண்ட பல்காரன் சிரித்தாலும் அழுவது போல் இருக்கும் * நீண்ட புல் நிற்க நிழலாமா? * நீ தடுக்கிலே நுழைந்தால் நான் கோலத்திலே நுழைவேன் * நீதி அற்ற பட்டணத்திலே நிறை மழை பெய்யுமா? * நீதி இல்லா ஊருக்குப் போகிறதே வழி * நீதி இல்லாத நாடு நிலவு இல்லாத முற்றம் * நீதி கேளாமல் தலை வெட்டுவார்களா? * நீதிமான் தீவினை செய்யிற் பிழைப்பானா? நீதி இல்லாதவன் நீதி புரிந்தால் மரிப்பானா? * நீந்த அறியாதவனுக்கு வெள்ளம் * நீந்த அறியாதவனை ஆறு இழுத்துப் போகும் * நீந்தத் தெரியாமல் குளத்தில் இறங்கமாட்டேன் என்றானாம் * நீந்த மாட்டாத மாட்டை வெள்ளம் கொண்டு போகும் * நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போகிறது * நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போகும் * நீ நட்சத்திரந்தான் * நீ படித்த பள்ளியிலேதான் நானும் படித்தேன் * நீ பிறர்க்கு உதவி செய்தால் தெய்வம் உனக்கு உதவி செய்யும் * நீ போய் அலப்பிவிட்டு வராதே; நான் போய் உளறிவிட்டு வருகிறேன் * நீயும் நானும் அடா, சாறும் சோறும் அடா * நீயும் நானும் அடி, எதிரும் புதிரும் அடி * நீர் அடித்தால் நீர் விலகுமா? * நீர் அழியச் சீர் அழியும் * நீர் அளவே ஆகுமாம் நீராம்பல் * நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது * நீர் ஆழம் கண்டாலும் நேரிழையார் நெஞ்சாழம் காண முடியாது * நீர் ஆனாலும் மோர்; பேய் ஆனாலும் தாய் * நீர் இருக்க மோருக்கு என்ன குறை? * நீர் இல்லா நாடு நிலவு இல்லா முற்றம் * நீர் இல்லா நாடும் சீர் இல்லா ஊரும் * நீர் இல்லையானால் மீன் இல்லை * நீர் உயர நெல் உயரும் * நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும் * நீர் என்று சொல்லி நெருப்பாய் முடிந்தது * நீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா? * நீர் என்று சொன்னால் நெருப்பு அவிவதும் சர்க்கரை என்று சொன்னால் அதனால் வாய் இனிப்பதும் உண்டா? * நீர் ஏற நெல் ஏறும் * நீர் ஓட்டித்தில் தெப்பம் செல்வதைப் போல * நீர்க்கடன் நிழற்கடன் கொடுத்து வைத்தமட்டும் இருக்கும் * நீர்க்குள் பாசிபோல் வேர்க் கொள்ளாது * நீர் கண்ட இடத்தில் சாப்பிடு; நிழல் கண்ட இடத்தில் படுத்து உறங்கு * நீர்க்குமிழி போல * நீர்ச்சிலை இல்லை; நெடு முக்காடா? * நீர்ச்சோறு தின்று நிழலில் இருந்தால் மலடிக்கும் மசக்கை வரும் * நீர்ப்பாடு மெய்யானால் கெளபீனம் தாங்குமா? * நீர்ப்பாம்பு கடித்தாலும் ரஸப்பட்டியாகும் * நீர் பெருத்தால் நெல் சிறுக்கும் * நீர் போனால் மீன் துள்ளுமா? * நீர் மடையும் அம்பலமும் நின்றவனுக்கு உண்டு * நீர்மேல் எழுத்துக்கு நிகர் * நீர் மேல் எழுத்து போல் * நீர்மேல் குமிழிபோல் நிலையில்லாக் காயம் * நீர் மோருக்கும் கதியற்ற வீட்டிலே ஓமத்துக்கும் பசு நெய் கேட்டாற்போல * நீர் மோரும் சாதமும் நெடுநாளைக்கு இருந்தால் போதும் * நீர் வளம் உண்டானால் நெல்வளம் உண்டாகும் * நீர் வறண்டால் மீன் துள்ள மாட்டாது * நீர் விளையாடேல் * நீர் விற்ற காசு நீரோடு பேச்சு; மோர் விற்ற காசு மோரோடு போச்சு * நீர் வேலி கோப்பாய் நிலை செல்வம் ஆவார் * நீரகம் பொருந்திய ஊரகத்திரு * நீரளவே ஆகுமாம் நீராம்பல் * நீராலே விலகினாய் நீ; நான் நெருப்பாலே விலகினேன் * நீரில் இறங்கினால் தவளை கடிக்குமா? * நீரில் எழுத்தாகும் யாக்கை * நீரில் குமிழி இளமை * நீரும் கொல்லும்; நெருப்பும் கொல்லும் * நீரும் சோறும் தின்று நிழலில் படுத்தால் மலடிக்கும் மயக்கம் வரும் * நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய் * நீரும் பாசியும் கலந்தாற் போல * நீரே பிராணாதாரம் * நீரை அடித்தால் நீர் விலகுமா? * நீரை அடித்தால் வேறாகுமா? * நீரைக் கழுவி நிழலைப் புதைப்பது போல * நீரைச் சிந்தினையோ? சீரைச் சிந்தினையோ? * நீரைச் சுருக்கி மோரைப் பெருக்கு * நீரைத் தொட்டாயோ, பாலைத் தொட்டாயோ? * நீரைத் தொட்டுத் தேனைத் தொட்டாற் போல * நீரோடு வந்தது ஆற்றோடே போச்சு, பாலோடு வந்தது காலோடே வந்தது * நீலம் கட்டுப்படப் பேசுகிறாள் * நீலம் பிடிக்கிற வார்த்தை * நீலத்துக்குக் கறுப்பு ஊட்ட வேண்டுமா? * நீலிக்குக் கண்ணீர் இமையிலே * நீலிக்குக் கண்ணீர் நிமையிலே * நீலிக்குக் கண்ணீர் நெற்றியிலே; மாலிக்குக் கண்ணீர் மடிமேலே * நீலிக்கு நிலக்கண்ணில் தண்ணீர் * நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும் * நீறு இல்லா நெற்றி பாழ் * நீறு பூத்த நெருப்புப் போல் ==நு== * நுகத்துப் பகலாணி போல * நுங்கு தின்றவள் போகக் கூந்தல் நத்தியவன் அகப்பட்டது போல * நுட்பப் புத்திமான் திட்டச் சித்தனாவான் * நுண்ணறிவுடையார் நண்ணுவார் புகழே * நுண்ணிய கருமமும் எண்ணித் துணி * நுண்ணிய ஞானம் உரைப்பார்கள்; சொன்னபடி ஒன்றும் நடவார்கள் * நுண்பொருள் கொடுத்து நுண்ணியர் ஆவர் * நுண்மை நுகரேல் * நுணலும் தன் வாயாற் கெடும் * நுரை ஒத்ததுவே தரையில் பவிஷு * நுரையைத் தின்றால் பசி போகாது * நுழையாத வீடு இல்லை; அடிக்காத செருப்பு இல்லை * நுழை விட்டுச் செய், நூல் கற்று அடங்கு * நுளையன் அறிவானா, ரத்தினத்தின் பெருமை? * நுளையன் பேச்சு அம்பலம் ஏறாது * நுனையிலே ஆசாரமா? * நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா? * நுனிப்புல் மேய்தல் * நுனி மரத்தில் இருந்து அடி மரத்தை வெட்டுபவன் போல் * நுனியில் மேய்கிறது ==நூ== * நூரணிப் பெண் ஊருணி தாண்டாது * நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு * நூல் இல்லாமல் மாலை கோத்தது போல * நூல் இழந்த நங்கை போல * நூல் கற்றவனே மேலவன் ஆவான் * நூல் முறை அறிந்து சீலத்து ஒழுகு * நூலளவே யாகுமாம் நுண்ணறிவு * நூலுக்கு ஏற்ற சரடு * நூலும் சூலும் சேரக் கூடாது * நூலும் புடைவையும் நூற்றெட்டுக் காலமா? * நூலைக் கற்றோர்க்கு உண்டு நுண்ணறிவு * நூலைப் போல் சேலை; தாயைப் போல் மகள் * நூற்க வேண்டுமானால் வெண்ணெய்க் கட்டிபோல் நூற்கலாம் * நூற்றில் ஒன்று; ஆயிரத்தில் ஒன்று * நூற்றுக் கிழவி போல் பேசுகிறாள் * நூற்றுக்கு இருந்தாலும் கூற்றுக்கு அறைக்கீரைதான் * நூற்றுக்கு இருப்பார் ஐம்பதில் சாகார் * நூற்றுக்கு ஒரு பேச்சு * நூற்றுக்கு ஒரு பேச்சு; ஆயிரத்துக்கு ஒரு தலை அசைப்பு * நூற்றுக்குத் துணிந்த துற்றுக் கூடை * நூற்றுக்கு மேல் ஊற்று * நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு * நூற்றெட்டு அடிக் கம்பத்திலே ஆடினாலும் பூமியில் வந்துதான் தானம் வாங்க வேண்டும் * நூற்றைக் கெடுத்ததாம் குறுணி * நூறு ஆண்டு ஆயினும் கல்வியை நோக்கு * நூறு குற்றம், ஆறு பிழை கொண்டு பொறுக்க வேண்டும் * நூறு நாள் ஓறி ஆறு நாள் விடத் தீரும் * நூறு பலம் மூளையை விட ஒரு பலம் இதயம் உயர்ந்தது * நூறு பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் மருத்துவம் பார்க்கப் போனாளாம் * நூறு வயசுக் கிழவன். ஆனாலும் நுழைந்து பார்க்க ஆசை * நூறோடு நூற்றொன்று * நூறோடு நூறு ஆகிறது; நெய்யிலே சுட்ட பணியாரம் ==நெ== * நெகிழ்ந்த இடம் கல்லுகிறதா? * நெகிழ்ந்த இடம் பார்த்துக் கல்லுவது போல * நெசவாண்டிக்கு ஏன் கோதிபில்லா? * நெசவு நெய்பவனுக்குக் குரங்கு எதற்காக? * நெஞ்சில் ஈரம் இல்லாதவன் * நெஞ்சிலே கைவைத்துச் சொல் * நெஞ்சு அறி துன்பம் வஞ்சனை செய்யும் * நெஞ்சு அறியப் பொய் சொல்லலாமோ? * நெஞ்சு அறியாத பொய் இல்லை * நெஞ்சு இலக்கணம் தெரியாதவனுக்குப் பஞ்ச லட்சணம் தெரிந்து பயன் என்ன? * நெஞ்சு ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை * நெஞ்சு மிக்கது வாய் சோறும் * நெஞ்சைப் பஞ்சைப் போட்டுத் துவட்டியிருக்கிறது * நெட்டி ஒரு பிள்ளை, சர்க்கரைக்குட்டி ஒரு பிள்ளையா? * நெட்டைக் குயவனுக்கும் நேரிட்ட கம்மாளனுக்கும் பொட்டைக்கும் புழு ஏர்வை * நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பக்கூடாது * நெடியார் குறியாரை ஆற்றிலே தெரியலாம் * நெடுங்கடல் ஓடியும் நிலையே கல்வி * நெடுங்காலம் நின்றாலும் நெல் முற்றிப் பணம் இரட்டி * நெடுங் கிணறும் வாயாலே தூரும் * நெடுந்தீவான் சரக்கு வாங்கப் போனது போல * நெடும் பகலுக்கும் அஸ்தமனம் உண்டு * நெடு மரம் விழுந்தால் நிற்கிற மரம் நெடுமரம் * நெய் இல்லாத உண்டி பாழ் * நெய் உருக்கி மோர் பெருக்கி நீர் அருக்கிச் சாப்பிட வேண்டும் * நெய்க் குடத்தில் எறும்பு மொய்த்தாற் போல * நெய்க் குடத்தைத் தலையில் வைத்து எண்ணமிட்டவனைப் போல * நெய்க் குடம் உடைந்தால் நாய்க்கு விருந்து * நெய்க்குத் தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா? * நெய்கிறதை விட்டு நினைத்துக் கொண்டானாம் கைக்கோளன் * நெய்கிறவனுக்கு ஏன் குரங்குக்குட்டி? * நெய் நேத்திர வாயு; அன்னம் அதிக வாயு * நெய் முந்தியோ, திரி முந்தியோ? * நெய்யும் திரியும் போனால் நிற்குமா விளக்கு? * நெய்யும் நெருப்பும் சேர்ந்தாற் போல * நெய்யை உருக்கித் தயிரைப் பெருக்கிச் சாப்பிட வேண்டும் * நெய்வதை விட்டு நினைத்துக் கொண்டானாம் கைக்கோளன் * நெய் வார்த்த கடன் நின்று வாங்கினாற் போல * நெய் வார்த்த பணம் முழுகிப் போகிறதா? * நெய் வார்த்து உண்டது நெஞ்சு அறியாதா? * நெருக்க நட்டு நெல்லைப் பார்; கலக்க நட்டுக் கதிரைப் பார் * நெருஞ்சி முள் தைத்தாலும் குனிந்தல்லவா பிடுங்க வேண்டும்? * நெருஞ்சி முள்ளுக்குக் கோபம் வந்தால் கவட்டை மட்டுந்தானே? * நெருப்பால் வெந்த குழந்தை நெருப்பைப் பார்த்தால் பயப்படும்; சூடுண்ட பூனை அடுப்பங்கரை போகாது * நெருப்பில் ஈ மொய்க்குமா? * நெருப்பில் நெய் விட்டது போல * நெருப்பில் பஞ்சு போட்டாற் போல * நெருப்பில் பட்ட மெழுகைப் போல * நெருப்பில் புழுப் பற்றுமா? * நெருப்பில் போட்டாலும் நெஞ்சு வேகாது * நெருப்பில் போட்டாலும் வேகுமா? * நெருப்பில் மெழுகைப் போட்டாற் போல * நெருப்பில் விழுந்த புழுப் போல * நெருப்பினும் பொல்லாச் செருப்பு * நெருப்பினும் பொல்லாது கருப்பின் வாதை * நெருப்பு அருகில் செத்தை கிடந்த கதை * நெருப்பு ஆறு, மயிர்ப்பாலம் * நெருப்பு இருக்கிற காட்டை நம்பினாலும் நீர் இருக்கிற காட்டை நம்பக் கூடாது * நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா? * நெருப்பு இல்லாமல் நீள் புகை எழுமா? * நெருப்பு இல்லாமல் புகை கிளம்பாது * நெருப்பு என்றால் வாய் சுடுமா? * நெருப்பு என்றால் வாய்வெந்து போமா? * நெருப்பு என்றால் வீடு வெந்து போகுமா? * நெருப்புக்கு ஈரம் உண்டா? * நெருப்புக்குத் தீட்டு இல்லை; எச்சிலும் இல்லை * நெருப்புககு நீர் பகை * நெருப்புச் சிறிது எனறு முன்றானையில் முடியலாமா? * நெருப்புச் சுட்டு உமிக் காந்தலில் விழுந்தது போல * நெருப்பு நிறை காட்டில் ஏதாவது நிற்கும்; நீர் நின்ற காட்டில் ஒன்றும் நிற்காது * நெருப்புப் பந்தம் கட்டிக் கொண்டு நிற்கிறான் * நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ * நெருப்புப் பந்தலிலே மெழுகுப் பொம்மை ஆடுமா? * நெருப்பும் சரி; பகையும் சரி * நெருப்பு ஜ்வாலையில் தண்ணீர் விட்டு அணைத்தது போல * நெருப்பை அறியாமல் தொட்டாலும் சுடும் * நெருப்பை ஈ மொய்க்குமா? * நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும்; காணாமல் மிதித்தாலும் சுடும் * நெருப்பைச் சார்ந்த யாவும் அதன் நிறம் ஆகும் * நெருப்பைச் சிறிது என்று நினைக்கலாமா? * நெருப்பைச் செல் அரிக்குமா? * நெருப்பைத் தலைகீழாய்ப் பிடித்தாலும் அதன் ஜ்வாலை கீழ் நோக்குமா? * நெருப்பை நம்பினாலும் நீரை நம்பக்கூடாது * நெருப்பைப் புழுப் பற்றுமா? * நெருப்பை மடியில் கட்டிக் கொண்டிருக்கிறான் * நெருப்பை மடியில் முடிகிறதா? * நெல் அல்லாதது எல்லாம் புல் * நெல் இருக்கப் பொன்; எள் இருக்க மண் * நெல் எடுக்கவும் புல் எடுக்கவும் ஆச்சே * நெல் ஏறக் குடி ஏற * நெல் குறுணி; எலி முக்குறுணி * நெல்லால் அடித்தால் கல்லால் அடிப்பான் * நெல்லிக்காய் மூட்டை * நெல்லிக்காயைத் தின்று தண்ணீர் குடித்தால் உடன் பிறந்தவர்களுடன் பேசினமாதிரி இருக்கும்; மாம்பழம் தின்று தண்ணீர் குடித்தால் மாமியாருடன் பேசினமாதிரி இருக்கும் * நெல்லுக்கடை மாடு கன்று போடட்டும் * நெல்லுக் காய்ச்சி மரம் என்று கேட்டவன் போல * நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாயும் * நெல்லுக்கு நண்டு, வாழைக்கு வண்டி, தென்னைக்குத் தேர். * நெல்லுக்குத் தாளும் பெண்ணுக்குத் தோழனும் * நெல்லுக் குத்தினவனுக்கு நேர் உடன் பிறந்தாள் * நெல்லுக் குத்துகிறவளுக்குக் கல்லுப் பரீட்சை தெரியுமா? * நெல்லுக்கு நேரே புல் * நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும் * நெல்லுக்குள் அரிசி இருக்கிறது என்றானாம் * நெல்லுக்குள்ளே அரிசி இருக்கிறது; எள்ளுக்குள்ளே எண்ணெய் இருக்கிறது * நெல்லுடன் பதரும் சேர்ந்தே இருக்கும் * நெல்லும் உப்பும் பிசைந்து உண்ணக்கூடுமா? * நெல்லூர் மாடுபோல இருக்கிறாள் * நெல்லைக் காணாத காக்கை அரிசியைக் கண்டாற் போல * நெல்லை விற்ற ஊரில் புல்லை விற்பதா? * நெல்லோடு பதரும் உண்டு * நெல்வகை எண்ணினாலும் பள்ளுவகை எண்ண முடியாது * நெல் விளைந்த பூமியும் அறியாய்: நிலா எறித்த முற்றமும் அறியாய் * நெல் வேர் இடப் புல் வேர் அறும் * நெற் செய்யப் புல் தேய்ந்தாற் போல * நெற்பயிர் செய்யின் பிற்பயிர் விளையும் * நெற்றிக் கண் காட்டினாலும் குற்றம் குற்றமே * நெற்றிக்குப் புருவம் தூரமா? * நெற்றியில் கண் * நெற்றியில் கண் படைத்தவனா? * நெற்றியில் மூன்று கண் படைத்தவன் வரவேண்டும் * நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைத்தான் * நெறி தப்புவார்க்கு அறிவிப்பது வீண் ==நே== * நேசம் உள்ளளர் வார்த்தை நெல்லிக்கனி தின்றது போல * நேசமும் பாசமும் நேசனுக்கு உண்டு * நேத்திர மணியே சூத்திர அணியே * நேயமே நிற்கும் * நேர் உத்தரம் சென்மப் பழி * நேர்ந்து நேர்ந்து சொன்னாலும் நீசக் கசடர் வாசமாகார் * நேர்பட ஒழுகு * நேர்மை இல்லா மந்திரியும் நீதி இல்லா அரசும் பாழ் * நேர்மை உண்டானால் நீர்மையும் உண்டு * நேர்வழி நெடுக இருக்கக் கோணல் வழி குறுக்கே வந்ததாம் * நேரா நோன்பு சீர் ஆகாது * நேருக்கு நேர் சொன்னாலும் கூர் கெட்டவனுக்கு உறைக்காது * நேரும் சீருமாக * நேரும் சீருமாய்ப் போக வேண்டும் * நேரே போனால் எதிரும் புதிரும் * நேற்று இருந்தவனை இன்றைக்குக் காணோம் * நேற்று உள்ளார் இன்று இல்லை * நேற்று உள்ளார் இன்று மாண்டார் * நேற்றுப் பிறந்த நாய்க்கு வந்த பசியைப் பார் * நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான் * நேற்று வந்த மொட்டைச்சி நெய் வார்த்து உண்ணச் சிணுங்குகிறாள் * நேற்று வந்தாளாம் குடி; அவள் தலைமேல் விழுந்ததாம் இடி * நேற்று வெட்டின கிணற்றில் முந்தா நாள் முதலை புறப்பட்டதாம் * நேற்றே நெருப்பு அணைந்துவிட்டது என்பாளே அவள் ==நை== * நைடதம் புலவர்க்கு ஒளடதம் * நைபவர் எனினும் நொய்ய உரையேல் * நையக் கற்கினும் நொய்ய நன்குரை * நையப் புடைத்தாலும் நாய் நன்றி மறவாது * நைவினை நணுகேல் ==நொ== * நொடிக்கு நூறு கவி * நொடிக்கு நூறு குற்ற நொடிக்கு நூறு வசனம் சொல்வாள் * நொடிப் போதும் வீண் கடேல் * நொண்டி ஆயக்காரன் கண்டு மிரட்டுகிறது போல * நொண்டி ஆனைக்கு நூறு குறும்பு * நொண்டி ஆனை நொடியில் அழிக்கும் * நொண்டிக் கழுதைக்குச் சறுக்கினது சரக்கு * நொண்டிக்கு உண்டு நூற்றெட்டுக் கிறுக்கு * நொண்டிக்குக் குச்சோட்டமா? * நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு * நொண்டிக் குப்பன் சண்டைக்குப் போனான் * நொண்டிக்கு நூற்றெட்டுக் கால் * நொண்டிக்குப் பெயர் தாண்டவராயன்; நொள்ளைக் கண்ணனுக்குப் பெயர் செந்தாமரைக் கண்ணன் * நொண்டிக்கு விட்ட இடத்திலே கோபம் * நொண்டிக் கோழிக்கு உரல் கிடை தஞ்சம் * நொண்டி நாய்க்கு ஓட்டமே நடை * நொண்டி நொண்டி நடப்பானேன்? கண்டதற் கெல்லாம் படைப்பானேன்? * நொண்டி புரத்தான் முயல் போச்சு * நொண்டியால் முயல் போயிற்று * நொண்டுகிற மாடு பொதி சுமக்காது * நொந்த கண் இருக்க நோக்கக் கண்ணுக்கு மருந்து இட்ட மாதிரி * நொந்ததை உண்டால் நோய் உண்டாகும் * நொந்த புண்ணிலே வேல் கொண்டு குத்தலாமா? * நொந்த மாட்டில் ஈ ஒட்டினது போல * நொந்தவர்களைக் கொள்ளை இடுகிறதா? * நொந்து அறியாதவன் செந்தமிழ் கற்றோன் * நொந்து நூல் அழிந்து போகிறது * நொந்து நொந்து சொன்னாலும் நீசக்கயவர் வசமாகார் * நொய் அரிசி கொதி பொறுக்குமா? * நொய் அரிசி பொரி பொரிக்காது * நொய்யர் என்பவர் வெய்யவர் ஆவார் * நொள்ளைக் கண்ணனுக்கு நோப்பாளம் * நொள்ளைக் கண்ணனுக்கு மை இடுகிறதா? * நொள்ளைக் கண்ணு நரிவிழுந்து லோகம் மூணும் சென்ற கதை * நொள்ளைக் கண் மூடி என்ன? விழித்தென்ன? * நொள்ளை நாய்க்கு வெள்ளை காண்பித்தாற் போல * நொறுங்கத் தின்றால் நூறு ஆயிசு * நொறுங்கத் தின்றால் நூறு வயது * நொறுங்குண்டவனைப் புறங்கொண்டு உரைப்பான் ==நோ== * நோக்க நோக்குவ, நோக்காமுன் நோக்குவான் * நோகாது உணர்வோர் கல்வியை நோற்பார் * நோகாமல் அடிக்கிறேன்; ஓயாமல் அழு * நோஞ்சல் பூனை மத்தை நக்குகிறது போல * நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் * நோய் அற்ற வாழ்வே வாழ்வு; குறைவற்ற செல்வமே செல்வம் * நோய் ஒரு பக்கம்; சூடு ஒரு பக்கமா? * நோய்க்கு இடம் கொடேல் * நோய்க்கும் பார்; பேய்க்கும் பார் * நோய் கண்டார் பேய் கண்டார் * நோய் கொண்டார் பேய் கொண்டார் * நோய் கொண்டால் பார்ப்பாரும் தின்பார் உடும்பு * நோய் தீர்ந்தபின் வைத்தியனை மதிக்கமாட்டார் * நோய்ந்த புலியானாலும் மாட்டுக்கு வலிது * நோய்ப்புலி ஆகிலும் மாட்டுக்கு வல்லது * நோய் பிடித்த கோழி போலத் தூங்கி வழிகிறான் * நோய் போக்குவது நோன்பு; பேய் போக்குவது இரும்பு * நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் * நோயாளிக்கு ஆசை வார்த்தை சொன்னாற் போல * நோயாளிக்குத் தெரியும் நோயின் வருத்தம் * நோயாளி தலைமாட்டில் பரிகாரி இருந்து அழுதாற் போல * நோயாளி விதியாளி ஆனால் பரிகாரி பேதாளி ஆவான் * நோயைக் கண்ட மனிதன் போல்; நாயைக் கண்ட திருடன் போல் * நோயோடு நூற்றாண்டு * நோயோ, பேயோ? * நோலா நோன்பு சீர் ஆகாது * நோலாமையினால் மேலானது போம் * நோவு ஒரு பக்கம் இருக்கச் சூடு ஒரு பக்கம் போட்டாற் போல * நோவு ஒன்று இருக்க, மருந்து ஒன்று கொடுத்தது போல * நோவு காடு எறிப் போச்சு * நோன்பு என்பது கொன்று தின்னாமை ==நௌ== * நௌவித் தொழில் நாசம் * நௌவியில்தானே கல்வியறிவைக் கல் * நௌவியும் முதுமையும் நடுவும் அற்றவன் * நௌவியும் வாழ்க்கையும் அழகு அல்ல. நற்குணம் ஒன்றே அழகு ==ப== * பட்சிக்குப் பசித்தாலும் எட்டியைத் தின்னாது. * பத்தில் குரு வந்தபோது பரமனும் பிச்சை எடுத்தான். * பத்தில் பசலை; இருபதில் இரும்பு. * பத்தில் பார்வை; இருபதில் ஏற்றம்; முப்பதில் முறுக்கு; நாற்பதில் நழுவல்; ஐம்பதில் அசதி; அறுபதில் ஆட்டம்; எழுபதில் ஏக்கம்; எண்பதில் தூக்கம். * பத்தில் விழுந்த பாம்பும் சாகாது. * பத்தினிக்கு கணவன் தான் எல்லாமே. * பத்தினிப்பெண் தாலிப்பிச்சை கேட்டால் எமனும் மனமுருகிப் போவான். * பத்தினி என்ற பெயரோடே பத்துப் பிராயம் கழித்தாளாம். * பத்தங்கியானையும் பலாக்காயையும் பார்த்த இடத்தில் சிராத்தம் பண்ணலாம். * பத்தரை மாற்றுப் பசுந்தங்கம். * பத்தாம் பசலிப் பேர் வழி. * பத்தாம் பேறு பாடையில் வைக்கும். * பத்தாம் வீட்டைப் பார்ப்பான் பதவியைக் கொடுப்பான். * பத்தியத்திற்கு முருங்கைக்காய் கொண்டுவரச் சொன்னால் பால் தெளிக்க அகத்திக்கீரை கொண்டு வருகிறான். * பத்தியம் இருந்தாலும் மருந்து எதற்கு? பத்தியம் இல்லா விட்டாலும் மருந்து எதற்கு? * பத்தியம் பத்து நாள்; இளம் பிள்ளை இரண்டு மாதம். * பத்திய முறிவுக்குப் பாகற்காய். * பத்திரம், என் வாசலில் அடி வைக்காதே. * பத்திரிகை படியாதவன் பாதி மனிதன். * பதிவிரதையின் கோபப் பார்வை ஊரையே எரித்துவிடும். * பணம் போனால் சம்பாதிக்கலாம்; குணம் போனால் வராது. * பணம் போனாலும் குணம் போகாது. * பணம் வேண்டும்; அல்லது பத்துச் சனம் வேண்டும். * பணமும் பத்தாய் இருக்க வேண்டும்; பெண்ணும் முத்தாய் இருக்க வேண்டும். * பக்தங்கி கல்யாணம் பகலோடே. * படை முகத்திலும் அறிமுகம் வேண்டும். * பணக்காரனுக்குப் பச்சிலை மருந்து சொல்லாதே. * பணம் உண்டானால் படையையும் வெல்வான். * பணம் உண்டானால் மணம் உண்டு. * பணம் என்றால் பிணமும் கை தூக்கும். * பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும. * பணம் என்றால் பேயாய்ப் பறக்கிறான். * பணம் என்ன செய்யும்? பத்து விதம் செய்யும். * பணம் என்ன பாஷாணம்; குணம் ஒன்றே போதும். * பணம் கண்ட தேவடியாள் பாயிலே படுக்க மாட்டாள். * பணம் குணம் ஆகும்; பசி கறி ஆகும். * பணம் செல்லா விட்டால் அரிசிக்காரிக்கு என்ன? * பணம் பசியைப் போக்காது * பணம் பணந்தோடே சேரும்; இனம் இனத்தோடே சேரும், * பணம் பந்தியிலே; குலம் குப்பையிலே, * பணம் பாதாளம் மட்டும் பாயும். * பணம் பார்த்துப் பண்டம் கொள்; குணம் *பார்த்துப் பெண்ணைக் கொள். * பணம் பாஷாணம். * பணம் பெரிதா? குணம் பெரிதா? * பணம் பெரிதோ? பழமை பெரிதோ? * பணம் பெருத்தது நீலகிரி. * பணக்காரனுடன் பந்தயம் போடலாமா? * பணக்காரனும் தூங்கமாட்டான், பைத்தியக்காரனும் தூங்கமாட்டான். * பணக்கேடு ஆனாலும் குணக்கேடு ஆகாது. * பணத்துக்கு ஓர் அம்பு கொண்டு பாழில் எய்கிறது போல. * பணத்துக்குப் பயறு பத்துப்படி; உறவுக்குப் பயறு ஒன்பது படி. * பணத்துக்குப் பெயர் ஆட்கொல்லி. * பணத்தைவிட பருந்துகள் கூட பறக்க முடியாது * பணத்தைக் கொடுக்கச் சொல்லி உயிரை வாங்குகிறது. * பணத்தைக் கொடுத்தானாம்; காட்டைக் கேட்டானாம். * பணத்தைக் கொடுத்துப் பணியாரத்தை வாங்கிப் பற்றைக்குள்ளே இருந்து தின்ன வேண்டுமோ? * பணத்தைக் கொடுத்துப் பழந் தொழி வாங்கு. * பணத்தைப் பார்க்கிறதா? பழமையைப் பார்க்கிறதா? * பணந்தான் குலம்; பசிதான் கறி, * பணம் அற்றால் உறவு இல்லை; பசி அற்றால் ருசி இல்லை. * பணம் இருக்க வேணும்; இல்லா விட்டால் பத்து ஜனம் இருக்க வேணும். * பணம் இருந்தால் பாட்சா; இல்லா விட்டால் பக்கிரி. * பணம் இல்லாதவன் பிணம். * பணக்காரன் பின்னே பத்துப் பேர்; பரதேசி பின்னே பத்துப் பேர். * பணக்காரனுக்குத் தகுந்த பருப்புருண்டை; ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டை. * பணக்காரனுக்குத் தகுந்த மண் உண்டை; ஏழைக்குத் தகுந்த எள் உருண்டை. * பண்ணி வைத்தாற் போல, பையனுக்கு ஏற்றாற் போல. * பண்ணின பொங்கல் பத்துப் பேருக்குத்தான். * பண்ணைக் காரன் பெண்டாட்டி பணியக் கிடந்து செத்தாளாம். * பண்ணெக்காரன் பெண்டு பணியக் கிடந்து செத்தாளாம், பரியாரி பெண்டு புழுத்துச் செத்தான். * பண்ணைப் பூப்போல நரைத்தும் புத்தி இல்லை. * பண்ணையார் வீட்டு நாயும் எச்சில் இலை என்றால் ஒருகை பார்க்கும். * பண ஆசை தீமைக்கு வேர். * பணக் கள்ளி பாயிற் படாள். * பணக்காரன் பின்னும் பத்துப் பேர்; பயித்தியக்காரன் பின்னும் பத்துப் பேர். * பண்ணாடிக்கு மாடு போன கவலை; சக்கிலிக்குக் கொழுப்பு இல்லையே என்ற கவலை. * பண்ணிப் பார்த்தாற் போல. * பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும். * பண்ணிய பாவத்துக்குப் பயன் அநுபவித்தாக வேணும். * பண்ணிய பாவத்தைப் பட்டுத் தொலைக்க வேண்டும். * பண்டாரம் பிண்டத்துக்கு அழுதானாம்; லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டதாம். * பண்டாரமே, குருக்களே, பறைச்சி மூத்திரம் குடித்தவரே! * பண்டித வம்சம். * பண்டிதன் பிள்ளை சும்பன். * பண்டை பட்ட பாட்டைப் பழங்கிடுகில் போட்டுவிட்டுச் சம்பா நெற்குத்திப் பொங்கல் இடுகிறாள். * பண்ணப் பண்ணப் பல விதம் ஆகும். * பண்ணாடி படியிலே பார்த்தால், ஆண் நடையிலே பார்த்துக் கொள்வான். * பண்டாரம் பிண்டத்துக்கு அழுகிறான்; லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறது. * பண்டாரத்துக்கும் நாய்க்கும் பகை. * பண்டாரம் என்றால் இலை போடும் ஆளா? * பண்டாரம் கூழுக்கு அழச்சே, லிங்கம் பரமான்னத்துக்கு அழுத கதை. * பண்டாரம் கூழுக்கு முன்றானையா? * பண்டாரம் படபடத்தால் பானைசட்டி லொடலொடக்கும். * பண்டாரம் பழத்துக்கு அழும்போது பிள்ளை பஞ்சாமிர்தத்துக்கு அழுததாம். * பணி செய்வோன் வாயும் சங்குப் பின்னுமாய்ப் பேசுகிறான். * பணியாரம் தின்னச் சொன்னார்களா? பொத்த லை எண்ணச் சொன்னார்களா? * பணியாரமோ கிலுகிலுப்போ? * படையாது படைத்த மருமகளே. உன்னைப் பறையன் அறுக்கக் கனாக் கண்டேன். * படையிலும் ஒருவன்; கொடையிலும் ஒருவன். * பண்டம் ஓரிடம்; பழி ஓரிடம். * பண்டம் ஓரிடம்; பழி பத்திடம். * பட்டுக்கோட்டைக்கு வழிகேட்பவனிடம் கொட்டைப் பாக்கு பலம் பத்து ரூபாய் என்கிறாய்? * பட்டு மட்கினாலும் பெட்டியிலே. * படி தாண்டாப் பத்தினி. * படைத்தவன் காக்க வேண்டு. * படை பண்ணியும் பாழும் கோட்டை. * படை மிருந்தால் அரண் இருக்கும். * படை முகத்தில் ஒப்பாரியா? * படைக்குப் போகாதவர் நல்ல வீரர். * படை கெட்டு ஓடுகையில் நரைமயிர் பிடுங்குகிறதா? * படைச்சாலுக்கு ஒரு பணம் இருந்தாலும் பயிர் இல்லாதவன் பாவி. * படைச்சாலுக்கு ஒரு பணம் கொடுத்தாலும் பயிரிடும் குடிக்குச் சரி ஆமா? * படைத்த உடைமையைப் பாராமல் போனால் பாழ். * படைக் களத்திலே ஒப்பாரி இடுகிறதா? * படைக்காமல் படைத்தானாம்; காடு மேடு எல்லாம் இழுத்து அடித்தானாம். * படைக்கு ஒருவன்; கொடைக்கு ஒருவன். * படைக்கு ஓடி வாழ்; பஞ்சத்துக்கு இருந்து வாழ் * படைக்குப் பயந்து செடிக்குள் ஒளிகிறதா? * படுத்தால் பசி பாயோடே போய் விடும். * படுத்திருப்பவன் எழுவதற்குள்ளே நின்றவன் நெடுந்துாரம் போவான். * படுதீப் பட்டு வேகிற வீட்டில் படுத்துக் கொள்ள இடம் கேட்டானாம். * படுவது பட்டும் பட்டத்துக்கு இருக்க வேண்டும். * படுகளப்பட்ட பன்னாடை. * படுகுழி வெட்டினவன் அதிலே விழுவான். * படித்துக் கெட்டவன் இராவணன்; படிக்காமல் கெட்டவன் துரியோதனன். * படிதாண்டாப் பத்தினி. * படிப்படியாகத்தான் ஏற வேண்டும். * படித்தது ராமாயாணம்; இடிப்பது பெருமாள் கோவில். * படிப்பது திருவாசகம்; இடிப்பது சிவன் கோயில். * படிப்பது வேதம்; அறுப்பது தாலி. * படிப்புக்கும் பதவிக்கும் சம்பந்தம் இல்லை. * படித்த வித்தை பதினெட்டும் பார்த்தான். * படித்துக் கிழித்தான். * படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் கொக்குக்கும் அன்னத்துக்கும் உள்ள வித்தியாசம் போல. * படித்த முட்டாள் படு முட்டாள். * படித்த முட்டாளாக இருக்கிறான். * படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், * படித்தவன் பின்னும் பத்துப் பேர்; பைத்தியக்காரன் பின்னும் பத்துப் பேர். * படிக்கிறது திருவாய்மொழி; இடிக்கிறது. பெருமாள் கோயில். * படிக்கிற பிள்ளை பாக்குப் போட்டால் நாக்குத் தடிப்பாயப் போம். * படிக்கு அரசன் இருந்தால் குடிக்குச் சேதம் இல்லை. * படிக்குப் படி நமசிவாயம். * படிக்குப் பாதி தேறாதா? * படிக்கும் மரக்காலுக்கும் இரண்டு பட்டை. பார்ப்பாரப் பையனுக்கு மூன்று பட்டை, * பட்டு மடிச்சால் பெட்டியிலே; பவிஷு குறைந்தால் முகத்திலே. * பட்டைக்குத் தகுந்த பழங்கயிறு. * பட்டை நாமத்தைப் பாக்கச் சாத்தினான். * பட்டை பட்டையாய் விபூதி இட்டால் பார்ப்பான் என்று எண்ணமோ? * படர்ந்த அரசு, வளர்ந்த ரிஷபம். * படாத பாடு பதினெட்டுப் பாடும் பட்டான். * படாள் படாள் என்கிற பாடகன் மகள் பாடையில் ஏறியும் பட்டானாம். * படி ஆள்வார் நீதி தப்பின் குடி ஆர் இருப்பார் குவலயத்தில், * படிக்கம் உடைந்து திருவுருக் கொண்டால் பணிந்து பணிந்து தான் கும்பிட வேண்டும். * படிக்கிறது சிவ புராணம்; இடிக்கிறது சிவன் கோயில், * பட்டுக் கோட்டைக்கு வழி எது என்றால், கொட்டைப் பாக்குப் பணத்துக்குப் பத்து என்றாளாம். * பட்டுப் புடைவை இரவல் கொடுத்ததும் அல்லாமல் பாயையும் தூக்கிக் கொண்டு அலையலாயிற்று. * பட்டுப் புடைவை இரவல் கொடுத்து மணையை எடுத்துக் கொண்டுதிரிவது போல. * பட்டுப் புடைவை கொடுத்துத் தடுக்கும் போடுகிறதா? * பட்டுப் புடைவையில் ஊசி தட்டுகுவிப் பாய்ந்தாற் போல. * பட்டும் ஒன்று, பழுக்காயும் ஒன்றா? * பட்டும் பட்டாவளியும் பெட்டியில் இருக்கும்? காற்காசுக் கந்தை ஓடி உலாவும். * பட்டும் பாழ்; நட்டும் சாவி. * பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு விலை என்ன என்றான். * பட்டு நூல் தலை கெட்டாற் போல. * பட்டு நூலுக்குள்ளே சிக்கெல்லாம் இருக்கிறது. * பட்டவர்க்கு உண்டு பலன். * பட்டுக் கிடக்கிற பாட்டிலே கட்டிக் கொண்டு அழ முடிய வில்லையாம், கற்றாழை நாற்றம். * பட்டுக் கிடப்பானுக்கு வாழ்க்கைப் பட்ட நாள்முதல் நெட்டோட்டம் ஒழியக் குச்சோட்டம் இல்லை.15265 * பட்டுக் கிழிந்தால் தாங்காது; பங்கரைக்கு வாழ்வு வந்தால் நிற்காது. * பட்டுக்கு அழுவார், பணிக்கு அழுவார்; வையகத்தில் பாக்குக்கு அழுத பாபத்தைக் கண்டதில்லை. * பட்டுக் குலைந்தால் பொட்டு. * பட்டினி இருக்கும் நாய்க்குத் தின்னப் பகல் ஏது? இரவு ஏது? * பட்டினியே சிறந்த மருந்து. * பட்டு அறி; கெட்டு அறி; பத்தெட்டு இறுத்து அறி. * பட்டுக் கத்தரித்தது போலப் பேச வேண்டும். * பட்டிக் காட்டுப் பெருமாளுக்குக் கொட்டைத் தண்டே கருட கம்பம். * பட்டிக்குப் பிராயச்சித்தம் உண்டு; பழையக்துகுப் பிராயச்சித்தம் இல்லை. * பட்டி குரைத்தால் படி திறக்குமோ? * பட்டி கூட ஆனை போதும். * பட்டி நாய்க்குப் பட்டது சரி. * பட்டி நாய் தொட்டி சேராது. * பட்டி மாட்டுக்குக் கட்டை கட்டினது போல. * பட்டி மாட்டுக்குச் சூடு போட்டது போல. * பட்டினத்து நரியைப் பனங்காட்டு நரி ஏய்த்தாற் போல. * பட்டினம் பெற்ற கலம். * பட்டிக் காட்டானுக்குச் சிவப்புத் துப்பட்டி பீதாம்பரம். * பட்டால் பாழ் போகுமா? * பட்டி என்று பேர் எடுத்தும் பட்ட கடன் அடையவில்லை. * பட்டிக்காட்டான் ஆனையைக் கண்டது போல். * பட்டிக்காட்டான் நாய்க்கு அஞ்சான்; பட்டினத்தான் பேய்க்கு அஞ்சான். * பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையை முறைத்துப் பார்த்தாற் போல. * பட்டவளுக்குப் பலன் உண்டு; பதவியும் உண்டு. * பட்டால் தெரியும் பார்ப்பானுக்கு; கெட்டால் தெரியும் செட்டிக்கு. * பட்டால் பகற்குறி; படாவிட்டால் இராக்குறி * பட்டால் பலன் உண்டு. * பட்டவர்க்குப் பதவி உண்டு. * பட்டவர்கள் பதத்தில் இருப்பார்கள். * பட்டம் கட்டின குதிரைக்கு லட்சணம் பார்ப்பதுண்டா? * பட்டம் தப்பினால் நட்டம் * பட்ட மரம் காற்றுக்கு அஞ்சாது. * பட்ட ருணம் சுட்டாலும் தீராது. * பட்டர் வீட்டில் பாவம் படுத்திருக்கும். * பட்டப் பகலைப் போல நிலா எறிக்கக் குட்டிச் சுவரிலே முட்டிக் கொள்ள வெள்ளெழுத்தா? * பட்ட பாட்டிலும் பெருத்த பாடாக, * பட்ட பாட்டுக்குப் பலன் கைமேலே. * பட்ட பாடும் கெட்ட கேடும். * பட்டம் அறிந்து பயிர் இடு * பட்டப் பகல் விளக்குப் பாழடைந்தாற் போல. * பட்டப் பகலில் குட்டிச் சுவரில் முட்டிக் கொள்வதா? * பட்டப் பகலில் நட்சத்திரம் கண்டாற் போல. * பட்டப் பகலில் பட்டணம் கொள்ளை போச்சாம். * பட்டப் பகலில் டோகிறவளுக்குத் தட்டுக் கூடை மறைப்பா? * பட்டது எல்லாம் பாடு; நட்டது எல்லாம் சாவி. * பட்டது கெட்டது எல்லாம் பக்கத்தில் பக்கத்தில் வைத்து விட்டுப் புட்டுக் கூடையை ஏந்திக் கொண்டாள் பூப்பறிக்க. * பட்டதும் கெட்டதும் பாய் முடைந்து விற்றதும் ஓலை முடையாமல் உட்கார்ந்திருந்ததும். * பட்டப் பகல் போல, * பட்டப் பகல் போல் நிலவு எறிக்கக் குட்டிச்சுவரிலே முட்டிக் கொள்ள என்ன வெள்ளெழுத்தா? * பட்டணத்தைப் படல் கட்டிச் சாத்தலாமா? * பட்டணம் பறி போகிறது. * பட்டத்து ஆனை பல்லக்குக்குப் பின்னே வருமா? * பட்டத்து ஆனை பவனி வந்தாற் போல. * பட்டத்து ஆனையைப் பார்த்துக் காட்டானை சிரித்ததாம். * பட்டணத்துக் காசு பாலாறு தாண்டாது. * பட்டணத்து நரியைப் பனங்காட்டு நரி ஏய்த்ததாம். * பட்டணத்துப் பெண் தட்டுவாணி; பட்டிக் காட்டுப் பெண் ருக்மிணி. * பட்டணத்து வாசலைப் பட்டாலே மூடியிருக்கிறதோ? * பட்சி சிறகு பறி கொடுத்தாற் போல. * பட்சித்தாலும் அவர் சித்தம்; ரட்சித்தாலும் சித்தம். * பட்சி மாறி விட்டது. * பட்ட இடம் பொழுது; விட்ட இடம் விடுதி. * பட்ட கடனுக்குக் கொட்டை நூற்று அடைத்தாளாம். * பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும். * பட்ட குணம் சுட்டாலும் போகாது. * பட்டடையோடு நின்று தின்ற மாட்டுக்குக் கட்டி வைத்துப் போடக் கட்டுமா? * பட்டணத்தாள் பெற்ற குட்டி; பணம் பறிக்க வல்ல குட்டி. * பங்கு இடுபவன் பந்து ஆனால் பந்தியில் எங்கே இருந்தால் என்ன? * பஞ்சாங்கம் பல சாத்திரம்; கஞ்சி குடித்தால் கல மூத்திரம். * பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ? * பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தாற் போல * பஞ்சும் நெருப்பும் போல. * பட்சத்துக்குக் கண் இல்லை * பஞ்சுப் பொதியில் நெருப்புப் பட்டாற் போல. * பஞ்சுப் பொதியில் பட்ட அம்பு போல. * பஞ்சு படாப் பாடு படும். * பஞ்சு படிந்த பழஞ்சித்திரம் போல. * பஞ்சு போலப் பறக்கிறேன் * பஞ்சாங்கம் பொய் என்றால் கிரகணத்தைப் பார். * பஞ்சாங்கம் போனாலும் நட்சத்திரம் போகாது. * பஞ்சானும் குஞ்சானும் பறக்கத் தவிக்கின்றன. * பங்கு இல்லாப் பங்கை விழுந்து அள்ளலாமா? * பஞ்சாங்கம் கெட்டுப் போனாலும் நவக்கிரகம் கெட்டுப் போகுமா? * பஞ்சத்துக்கு இருந்து பிழை; படைக்கு ஓடிப் பிழை. * பஞ்சத்துக்கு மழை பனி போல. * பஞ்சபாண்டவர் என்றால் தெரியாதா, கட்டில் சாலைப்போல் மூன்று பேர் என்று இரண்டு விரல் காட்டி ஒரு கோடு எழுதினாள். * பஞ்சம் இல்லாக் காலத்தில் பசி பறக்கும். * பஞ்சம் தீரும்போது கொல்லும். * பஞ்சம் பணியாரம் சுட்டது; வீங்கல் வெறிக்க வெறிக்கப் பார்க்கிறது. * பஞ்சம் போம்; பஞ்சத்தில் பட்ட வசை போகாது. * பஞ்சம் போம்; பழி நிற்கும். * பஞ்சம் வந்தாலும் பரதேசம் போகாதே, * பஞ்சமே வந்தாலும் நெஞ்சமே அஞ்சாதே. * பஞ்சாங்கக் காரன் மனைவி வெற்றிலை போடுகிறது போல. * பஞ்சாங்கக் காரன் வீட்டில் சாப்பாடு நடக்கிற வேளை. * பஞ்சாங்கம் கிழிந்தாலும் நட்சத்திரம் அழியாது. * பசுவைக் கொன்று செருப்புத்தானம் செய்ததுபோல. * பசுவைப் போல் இரு; புலியைப் போல் பாய். * பசுவை விற்றால் கன்றுக்கு வழக்கா? * பசையைக் கண்டால் ஒட்டடி மகளே * பஞ்சத்தில் அடிபட்ட மாடு கம்பங் கொல்லையிற் புகுந்தாற்போல. * பஞ்சத்தில் அடிபட்டவன் போல. * பஞ்சத்தில் பிள்ளை விற்றது போல. * பசுவிலே சாதுவையும் பார்ப்பானிலே ஏழையையும் நம்பக்கூடாது. * பசுவின் உரத்திலும் பழம் புழுதி மேல். * பசுவின் வயிற்றில்தான் கோரோசனை பிறக்கிறது * பசுவுக்கு இரை கொடுத்தால் மதுரமான பால் கொடுக்கும். * பசுவுக்குத் தண்ணீர் பத்துப் புண்ணியம். * பசுவுக்குப் பிரசவ வேதனை; காளைக்குக் காம வேதனை. * பசுவும் பசுவும் பாய்ச்சலுக்கு நிற்க, நடுப்புல் தேய்ந்தாற்போல. * பசுவும் புலியும் பரிந்து ஒரு துறையில் நீர் உண்கின்றன * பசுவைக் கொன்றால் கன்று பிழைக்குமா? * பசுவில் மோழையும் இல்லை; பார்ப்பானில் ஏழையும் இல்லை. * பசு விழுந்தது புலிக்கு ஆதாயம். * பசு போன வழியே கன்று போகும். * பசும் உரத்திலும் பழம் புழுதி மேல். * பசும் புல் தேய நட வாத பாக்கியவான். * பசும்புல் நுனிப் பனி ஜலம் போல * பசு மரத்தில் அறைந்த ஆணி போல. * பசுமாடு நொண்டியானால் பாலும் நொண்டியா? * பசுமாடும் எருமை மாடும் ஒன்று ஆகுமா? * பசுவன் பிடிக்கப் போய்க் குரங்கானாற் போல. * பசுவில் ஏழை, பார்ப்பானில் ஏழை * பசுந்தாள் உரமே பக்குவ உணவாம். * பசுப் பிராயம் * பசுப் போல இருந்து புலிபோலப் பாய்கிறான். * பசுச் சாதும் பார்ப்பான் ஏழையும் நம்பப்படாது. * பசுத் தின்னாவிடில் பார்ப்பானுக்கு. * பசுத் தோல் போர்த்த புலி. * பசுத் தோல் போர்த்துப் புலிப் பாய்ச்சல் பாய்கிறது. * பசுச் சாதும் பார்ப்பான் ஏழையும் உண்டா? * பசு கிழமானால் பால் ருசி போமா? * பசி வந்தால் பக்தி பறக்கும். * பசி வந்திடப் பத்தும் பறந்து போம். * பசி வேளைக்குப் பனம் பழம் போல வை. * பசு உரத்திலும் பழம் புழுதி நல்லது. * பசு உழுதாலும் பயிரைத் தின்ன ஒட்டான். * பசு ஏறு வாலும் எருது கூழை வாலும். * பசுக் கறக்கு முன் பத்துப் பாட்டம் மழை பெய்யும். * பசுக் கறந்தாற் போல. * பசு கறுப்பானால் பாலும் கறுப்பா? * பசு கிழமானாலும் பாலின் சுவை போகுமா? * பசு குசுவினாற் போல. * பசி ருசி அறியாது; நித்திரை சுகம் அறியாது. * பசித்தார் பொழுதும் போம்; பாலுடனே அன்னம் புசித்தால் பொழுதும் போம். * பசித்தால் ௫சி இல்லை. பசித்துப் புசி. * பசித்து வந்து பானையைப் பார்க்காமல், குளித்து வந்து கொடியைப் பார்க்காமல். * பசித்து வருவோர் கையிலே பரிந்து அமிர்தம் ஈந்தாற் போல. * பசித்தோர் முகம் பார். * பசி தீர்ந்தால் பாட்டும் இன்பமாம். * பசி பசி என்று பழையதில் கை விட்டாளாம். * பசியாத போது புசியாதே. * பசியாமல் இருக்க மருந்து கொடுக்கிறேன்; பழையது இருந்தால் போடு என்பது போல. * பசியாமல் வரம்தருகிறேன்; பழங்கஞ்சி இருந்தால் பார். * பசியா வரம் படைத்த தேவர் போல. * பசியிலும் எழை இல்லை; பார்ப்பாரிலும் ஏழை இல்லை. * பசியுடன் இருப்பவனுக்குப் பாதித் தோசை போதாதா? * பசித்த வீட்டில் பச்சை நாவி சேராது. * பசித்த செட்டி பாக்கைத் தின்றானாம். * பசித்த பறையனும் குளித்த சைவனும் சாப்பிடாது இரார். * பசித்தவன் தின்னாததும் இல்லை; பகைத்தவன் சொல்லாததும் இல்லை. * பசித்தவன் பயிற்றை விதை; இளைத்தவன் என்னை விதை. * பசித்தவன் பழங்கணக்கைப் பார்த்தது போல. * பசித்தவன் மேல் நம்பிக்கை வைக்கலாமா? * பசித்தவனுக்குப் பால் அன்னம் இட்டாற் போல * பசித்த கணக்கன் பழங்கணக்குப் பார்த்ததுபோல. * பசி ஏப்பமா? புளி ஏப்பமா? * பசிக்குக் கறி வேண்டாம்; தூக்கத்துக்குப் பாய் வேண்டாம். * பசிக்குப் பனம் பழம் தின்னால் பித்தம் பட்ட பாடு படட்டும். * பசிக்குப் பனம் பழம் தின்றால் பித்தம் போகும் இடத்துக்குப் போகும். * பசிக்குப் பனம் பழம் தின்றால் பின்னால் பட்டபாடு படலாம் * பசிக்குப் பனம் பழமும் ருசிக்கும். * பசிக்குமுன் பத்தும் பறக்கும். * பசி இல்லாதவனுக்குக் கருப்பு மயிர் மாத்திரம். * பசி உள்ளவன் ருசி அறியான். * பசி உற்ற நேரத்தில் இல்லாத பால் பழம் பசி அற்ற நேரத்தில் ஏன்? * பசி ஏப்பக்காரனுக்கும் புளி ஏப்பக்காரனுக்கும் வித்தியாசம் இல்லையா? * பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் கூட்டுப் பயிர் இட்டாற் போல * பச்சை மரம் படப் பார்ப்பான். * பச்சை மீனைப் பட்டிலே பொதித்து வை. * பச்சையைக் கண்டால் ஒட்டடி மகளே, * பசங்கள் கஷ்டம் பத்து வருஷம் * பச்சை மரத்துக்கு இத்தனை என்றால் பட்ட மரத்துக்கு எத்தனை? * பச்சை மட்டைக்குப் போனவன் பதினெட்டாந் துக்கத்துக்கு வந்தாற் போல. * பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டுமா? * பச்சை மரத்தில் ஆணி அடித்தது போல * பச்சைப் பாண்டத்தில் பாலை வைத்தால் பாலும் உதவாது; பாண்டமும் உதவாது. * பச்சைப் புண்ணில் ஊசி எடுத்துக் குத்தினது போல. * பச்சை பாதி புழுங்கல் பாதி, * பத்தினித் தாயே. * பச்சை நெல்லுக்கு பறையனிடத்தில் சேவிக்கலாம். * பச்சை கொடுத்தால் பாவம் தீரும்; வெள்ளை கொடுத்தால் வினை தீரும்; * பச்சைச் சிரிப்புப் பல்லுக்குக் கேடு; தூவு பருக்கை வயிற்றுக்குக் கேடு. * பச்சைத் தண்ணீரிலே விளக்குக் கொடுத்துப் படா பத்தினித் தாயே; பெண்டாண்டவனே, உன்னைத் தொட்டவர்கள் எத்தனை பேரடி? துலுக்குப் * பச்சிலையும் கிள்ளப் படுமோ பராபரமே. * பச்சை உடம்பிலே போடாத மருந்தும் மருந்தா? பந்தியிலே வைக்காத சீரும் சீரா? * பச்சைக் குழந்தைக்கு எத்தத் தெரியும். * பச்சைக் கூட்டோடே கைலாயம் சேர்வாய், * பச்சை கண்டால் ஒட்டடி மகளே.15055 * பச்சரிசியும் பறங்கிக் காயும் உடம்புக்கு ஆகா. * பச்சிலைத் தோசை அறியாத பன்னாடை இட்டலியைப் பார்த்ததும் எடுத்து எடுத்துப் பார்த்ததாம் * பங்குனி மாதம் பந்தலைத் தேடு. * பங்கூர் ஆண்டி கட்டின மடம். * பங்குனி மழையால் பத்தெட்டும் சேதம். * பங்குனி மாதம் பகல் வழி நடந்தவன் பெரும்பாவி. * பங்குனி மாதம் பகல் வழி நடந்தவனைப் பார்த்திருப்பவனும் பாவி. * பங்குனி மாதம் பத்துக்கும் நஷ்டம். * பங்குனி மாதம் பதர்கொள். * பங்குனி என்று பருப்பதும் இல்லை; சித்திரை என்று சிறுப்பதும் இல்லை. * பங்குனி சித்திரையில் பகல் வழி நடப்பது போல. * பங்குனிப் பனி பால் வார்த்து முழுகியது போல. * பங்குனி மழை பத்துக்கும் நஷ்டம். * பங்குனி மழை பதம் கொடுக்கும். * பங்குனி மழை பல விதத்திலும் சேதம். * பங்கு இல்லாப் பங்கை விழுந்து அள்ளலாமா? * பங்கு இட்டவளுக்குப் பானைதான் மிச்சம். * பங்கு இடுபவன் பந்து ஆனால் பந்தியில் எங்கே இருந்தால் என்ன? * பங்குனி மழையால் பத்தெட்டும் சேதம். * பங்குனிப் பனி பால் வார்த்து முழுகியது போல. * பங்குனி மழை பத்துக்கும் நஷ்டம். * பங்குனி மழை பதம் கொடுக்கும். * பங்குனி மழை பல விதத்திலும் சேதம். * பங்குனி சித்திரையில் பகல் வழி நடப்பது போல. * பங்கு இடுபவன் பந்து ஆனால் பந்தியில் எங்கே இருந்தால் என்ன? * பங்கு இல்லாப் பங்கை விழுந்து அள்ளலாமா? * பங்குனி என்று பருப்பதும் இல்லை; சித்திரை என்று சிறுப்பதும் இல்லை. * பங்கு இட்டவளுக்குப் பானைதான் மிச்சம். * பங்காளத்து நாய் சிங்காசனம் ஏறினதென்று வண்ணான் கழுதை வெள்ளாவிப் பானையில் ஏறினதாம். * பங்காளிக்குப் பல்லிலே விஷம். * பங்காளிச் சண்டை பொங்கலுக்கு இருக்காது. * பங்காளியையும் பனங்காயையும் பதம்பார்த்து வெட்ட வேண்டும். * பங்காளியோ, பகையாளியோ? * பங்காளி வீடு வேகிறது; சுக்கான் கொண்டு தண்ணீர் விடு. * பங்கில் பாதி பரத்வாஜம். * பங்குனி மாதம் பகல் வழி நடந்தவன் பெரும்பாவி. * பகையாளி குடியைக் கெடுக்க வெங்காயக் குழி போடச் சொன்னது போல. * பகையும் உறவும் பணம் பக்குவம். * பகைவர் உறவு புகை எழா நெருப்பு. * பகைவரிடம் நல்ல வார்த்தை சொன்னால் பொல்லாப்பு இல்லை. * பகைவன் இல்லாத ஊரில் குடி இருக்காதே. * பங்கறை சாவானுக்குப் பல்லழகைப் பார். * பங்கன் இருக்குமிடத்தைத் தேடிக் கங்கை வந்தது போல. * பங்குனி மழை பத்துக்கும் நஷ்டம். * பங்குனி மழை பதம் கொடுக்கும். * பங்குனி மழை பல விதத்திலும் சேதம். * பங்குனி மழையால் பத்தெட்டும் சேதம். * பங்குனி என்று பருப்பதும் இல்லை; சித்திரை என்று சிறுப்பதும் இல்லை. * பங்குனி சித்திரையில் பகல் வழி நடப்பது போல. * பங்குனிப் பனி பால் வார்த்து முழுகியது போல. * பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே. * பக்கச் சொல் பதினாயிரம். * பங்கு இட்டவளுக்குப் பானைதான் மிச்சம். * பங்காளியோ, பகையாளியோ? * பங்காளி வீடு வேகிறது; சுக்கான் கொண்டு தண்ணீர் விடு. * பங்கில் பாதி பரத்வாஜம். * பங்காளிச் சண்டை பொங்கலுக்கு இருக்காது. * பங்காளியையும் பனங்காயையும் பதம்பார்த்து வெட்ட வேண்டும். * பகைவன் இல்லாத ஊரில் குடி இருக்காதே. * பங்கன் இருக்குமிடத்தைத் தேடிக் கங்கை வந்தது போல. * பங்காளத்து நாய் சிங்காசனம் ஏறினதென்று வண்ணான் கழுதை வெள்ளாவிப் பானையில் ஏறினதாம். * பங்காளிக்குப் பல்லிலே விஷம். * பங்கறை சாவானுக்குப் பல்லழகைப் பார். * பகையாளி குடியைக் கெடுக்க வெங்காயக் குழி போடச் சொன்னது போல. * பகையும் உறவும் பணம் பக்குவம். * பகைவர் உறவு புகை எழா நெருப்பு. * பகைவரிடம் நல்ல வார்த்தை சொன்னால் பொல்லாப்பு இல்லை. * பகையாளி குடியை உறவாடிக் கெடு. * பகுஜன வாக்யம் கர்த்தவ்யம், * பகைக்கச் செய்யேல்; மறு ஜனனப்படு. * பகைத்தவர் சொல்லாதது இல்லை; பசித்தவர் தின்னாதது இல்லை. * பகைத்தவன் பாட்டைப் பகலில் கேள், * பகைத்தால் உறவு இல்லை. * பகையாளிக்குப் பருப்பிலே நெய் விட்டது போல. * பகிடியைப் பாம்பு கடித்தது போல, * பகிர்ந்து தின்றால் பசி ஆறும். * பகுத்தறிவு இல்லாத துணிவு, பாரம் இல்லாத கப்பல். * பகுத்து அறியாமல் துணியாதே; படபடப்பாகப் பேசாதே. * பகலில் பசுமாடு தெரியாதவனுக்கு இரவில் எருமை மாடு தெரியுமா? * பகலில் பன்றி வேட்டைக்கு அஞ்சும் நாய், இரவில் கரித்துண்டுக்கு அஞ்சும்.15005 * பகலிலே தாலி கட்டுவதும் இரவில் பிள்ளை கொடுப்பதும் புருஷனின் வேலை. கொடுப்பதை மறுக்காமல் பெறுவது பொண்டாட்டியின் வேலை. * பகலை இருள் விழுங்குமா? * பகற் கனாப் போல, * பகடிக்குப் பத்துப் பணம் கொடுப்பார்; திருப்பாட்டுக்கு ஒரு காசும் கொடார். * பகடியைப் பாம்பு கடித்தது போல. * பகல் உண்ணான் பருத்திருப்பான். * பகட்டிப் பங்கு எடுத்தால் என்ன? இடியடி பொரியரிசி. * பகடிக்குப் பத்துப் பணம் கொடுப்பார்; திருப்பாட்டுக்கு ஒரு காசும் கொடார். * பகடியைப் பாம்பு கடித்தது போல. * பகல் உண்ணான் பருத்திருப்பான். * பகல் உணவுக்குப் பாகல் * பகல் கனவாய் முடிந்தது. * பகலில் தோட்டக்காரன்; இரவில் பிச்சைக்காரன். * பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே. * பகட்டிப் பங்கு எடுத்தால் என்ன? இடியடி பொரியரிசி. * பக்தியோடே பாகற்காய் சட்டியோடே தீய்கிறது * பக்தி கொள்பவன் முக்தி உள்ளவன், * பக்தி படபட, யானை சட்டி லொட லொட. * பக்குவம் தெரிந்தால் பல்லக்கு ஏறலாம். * பக்தர் உளத்தில் ஈசன் குடியிருப்பான். * பக்தி இருந்தால் முக்தி கிடைக்கும். * பக்தி இல்லாச் சங்கீதம் பாடுவதேன்? சக்தி இல்லாவிட்டால் சிவனே என்று இரு. * பக்தி இல்லாப் புத்தி அசேதனம். * பக்தி இல்லாப் பூசை போல. * பக்தி இல்லாப் பூனை பரமண்டலத்துக்கு ஏறுமா? * பக்தி இல்லாப் பூனை பரமண்டலத்துக்குப் போயிற்றாம், நெத்திலி மீனை வாயிலே கல்விக் கொண்டு. * பக்தி உண்டானால் முக்தி உண்டாம். * பக்தி உள்ள பூனை பரலோகம் போகிறபோது, கச்சைக் கருவாட்டைக் கட்கத்திலே இடுக்கிக் கொண்டு போயிற்றாம். * பக்தி உள்ளவனுக்குப் புட்டுக் கூடை அண்டம் புறப்பட்டுப் போயிற்றா? * பக்திக்கும் சிரத்தைக்கும் பகவான் பலன் கொடுப்பான். * பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே. * பகைவர் உறவு புகை எழு நெருப்பு. * பசியுள்ளவன் ருசி அறியான். * பசி வந்திடில் பத்தும் பறந்துபோம் * பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை. * பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா? * பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ? * படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில். * படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன். * படையிருந்தால் அரணில்லை. * படை முகத்திலும் அறிமுகம் வேண்டும். * பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும். * பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில். * பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய். * பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும். * பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர். * பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா? * பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும். * பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர். * பணம் உண்டானால் மணம் உண்டு. * பணம் பந்தியிலே குலம் குப்பையிலே. * பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும் * பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும். * பதறாத காரியம் சிதறாது. * பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது. * பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை. * பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம். * பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம். * பருவத்தே பயிர் செய் * பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான். * பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான். * பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை. * பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு. * பழகப் பழகப் பாலும் புளிக்கும். * பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம். * பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம். * பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா? * பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது. * பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா? * பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை. * பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ? * பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர். * பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும். * பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி. * பத்துப் பேருக்குப் பல் குச்சி; ஒருவனுக்குத் தலைச்சுமை. * பத்தங்கியானையும் பலாக்காயையும் பார்த்த இடத்தில் சிராத்தம் பண்ணலாம். * பத்தரை மாற்றுப் பசுந்தங்கம். * பத்தாம் பசலிப் பேர் வழி. * பத்தாம் பேறு பாடையில் வைக்கும். * பத்தாம் வீட்டைப் பார்ப்பான் பதவியைக் கொடுப்பான். * பத்தியத்திற்கு முருங்கைக்காய் கொண்டுவரச் சொன்னால் பால் தெளிக்க அகத்திக்கீரை கொண்டு வருகிறான். * பத்தியம் இருந்தாலும் மருந்து எதற்கு? பத்தியம் இல்லா விட்டாலும் மருந்து எதற்கு? * பத்தியம் பத்து நாள்; இளம் பிள்ளை இரண்டு மாதம். * பத்திய முறிவுக்குப் பாகற்காய். * பத்திரம், என் வாசலில் அடி வைக்காதே. * பத்திரிகை படியாதவன் பாதி மனிதன். * பத்தில் குரு வந்தபோது பரமனும் பிச்சை எடுத்தான். * பத்தில் பசலை; இருபதில் இரும்பு. * பத்தில் பார்வை; இருபதில் ஏற்றம்; முப்பதில் முறுக்கு; நாற்பதில் நழுவல்; ஐம்பதில் அசதி; அறுபதில் ஆட்டம்; எழுபதில் ஏக்கம்; எண்பதில் தூக்கம். * பத்தில் விழுந்த பாம்பும் சாகாது. * பத்தினி என்ற பெயரோடே பத்துப் பிராயம் கழித்தாளாம். * பத்தினிப் பானை படபடவென வெடிக்கிறது * பத்தினிப் பெண்ணைப் பதற்றமாய்ப் பேசாதே. * பத்தினி படாபடா என்றாளாம், பானைசட்டி லொட லொட என்றனவாம். * பத்தினியைத் தொட்டதும் துரியோதனன் கெட்டதும். * பத்தினியைப் பஞ்சணையில் வைத்துக் கொள். * பத்தினி வாக்குப் பலிக்கும். * பத்தினி வாக்குக்குப் பழுது வராது. * பத்தினி வாக்கும் உத்தமி வாக்கும் பலித்தே விடும். * பத்து அடி பிள்ளை, எட்டு அடி வாழை. * பத்து அரிசியும் வேகவில்லை, பாவி என் பிராணனும் போக வில்லை. * பத்து ஆண்டிக்கு ஒருவன் பாதக் குறட்டாண்டி. * பத்து ஆனாலும் பதற்றம் வேண்டாம்; அஞ்சு ஆனாலும் அவசரம் வேண்டாம். * பத்து இறுத்த பின்பு பாரச் சந்தேகம் தீர்ந்தது. * பத்து இறுத்தாலும் பராச் சத்தேகம் தீராது. * பத்து உள்ள என் தம்பி, பணமுள்ள என் தம்பி, காசுள்ள என் தம்பி, கணக்கப் பிள்ளை உன்தம்பி. * பத்து ஏர் வைத்துப் படி முறமும் தோற்றேன்; எத்தனை ஏர் வைத்துக் கோவணமும் தோற்றாய்? * பத்துக் கப்பல் வந்தாலும் பறந்த கப்பல்; எட்டுக் கப்பல் வந்தாலும் இறந்த கப்பல். * பத்துக் காதம் போனாலும் பழக்கம் வேண்டும். * பத்துக் குட்டி அடித்தாலும் சட்டிக்கறி ஆகாது. * பத்துக் குடியைக் கெடுத்தவன் பணக்காரன். * பத்துக்குப் பத்தரை விற்றால் ஒரு பள்ளிக் குடும்பம். * பத்துக்குப் பின் பயிர். * பத்துக்கு மிஞ்சின பதி விரதை எது? * பத்துக்கு மேலே ஒரு பறையனுக்காவது தள்ள வேண்டும். * பத்துப் பணம் கையில் தந்தால் பதிவிரதையும் வசப்படுவாள். * பத்துப் பணம் கொடுத்தாலும் இத்தனை பதைப்பு ஆகாது. * பத்துப் பணம் வேணும்; இல்லாவிட்டால் பத்து சனம் வேணும். * பத்துப் பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் முக்கிக் காட்டினாளாம். * பத்துப் பேர் கண்ட பாம்பு சாகாது. * பத்துப் பேர் மருத்துவச்சிகள் கூடிக் கொண்டு குழந்தை கையை ஒடித்தார்கள். * பத்துப் பேர் மெச்சப் படிக்கிறதிலும், ஆயிரம் பேரை அடிக்கிறதிலும், நாலு பேர் மெச்ச நடிக்கிறதிலும், மிடாமிடாவாகக் குடிக்கிறதே கெட்டிக்காரத்தனம். * பத்துப் பேருக்குப் பல் குச்சி; ஒருவனுக்குத் தலைச்சுமை. * பத்துப் பேரைக் கொன்றவன் பரியாரி. * பத்துப் பேரோடு பதினோராம் பேராய் இருக்க வேணும். * பத்தும் தெரிந்தவன் பல்லக்கு ஏறுவான்; சூனியமானவன் சுமந்து செல்வான். * பத்து மாட்டில் கட்டுக்கு அடங்காதவன். * பத்து மிகை இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம். * பத்து வந்தாலும் பதற்றம் ஆகாது; ஆயிரம் வந்தாலும் அவசரம் ஆகாது. * பத்து வயதானால் பறையனுக்காவது பிடித்துக் கொடுக்க வேண்டும். * பத்து வயதிலே பாலனைப் பெறு. * பத்து வராகன் இறுத்தோம்; என்றாலும் சந்தேகம் நிவர்த்தி ஆயிற்றே. * பத்து வராகனுக்கு மிஞ்சின பதிவிரதை இல்லை. * பத்து வருஷம் கெட்டவன் பருத்தி விதை; எட்டு வருஷம் கெட்டவன் எள் விதை. * பத்து விதத்திலும் பறையனை நம்பலாம்; பார்ப்பானை நம்பக்கூடாது. * பத்து விரலாலே வேலை செய்தால் ஐந்து விரலால் அள்ளிச் சாப்பிடலாம். * பத்தூர் பெருமாளகரம்; பாழாய்ப் போன கொரடாச்சேரி; எட்டூர் எருமைக் கடா? இழவெடுத்த நாய். * பத்தைக்குள் கிடந்ததைத் தூக்கி மெத்தையிலே வைத்தால் அது பத்தையைப் பத்தையைத்தான் நாடும். * பத்தோடே பதினொன்று; அத்தோடே இது ஒன்று. * பத்மாசுரன் பரீட்சை வைத்தது போல. * பதக்குக் குடித்தால் உழக்குத் தங்காதா? * பதக்குப் போட்டால் முக்குறுணி என்றானாம். * பதத்துக்கு ஒரு பருக்கை. * பதம் கெட்ட நாயைப் பல்லக்கில் வைத்தால் கண்ட இடமெல்லாம் இறங்கு இறங்கு என்னுமாம். * பதமாய்ச் சிநேகம் பண்ண வேண்டும். * பதவி தேடும் இருதயம் போல. * பதறாத காரியம் சிதறாது. * பதறிச் செய்கிற காரியம் சிதறிக் கெட்டுப் போகும். * பதறின காரியம் பாழ். * பதனம் பத்துக்கு எளிது. * பதி இல்லாத பூனை பரதேசம் போயிற்றாம், நெத்திலி மீனை வாயிலே கவ்விக் கொண்டு. * பதிவிரதா பத்தினி கதை கேட்டு வந்தேன்; பட்டுக் கிடப்பாய் காலை மடக்கு. * பதிவிரதை ஆனால் தேவடியாள் வீட்டிலும் தங்கலாம். * பதிவிரதைக்குப் பர்த்தாவே தெய்வம். * பதிவிரதையைக் கெடுக்கப் பதினைந்து பொன். * பதின்காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே. * பதின்காதம் போனாலும் பழக்கம் வேண்டும். * பதின்மர் பாடும் பெருமாள். * பதினாயிரம் கொடுத்தாலும் பதைபதைப்பு ஆகாது. * பதினாறு பல்லில் ஒரு நச்சுப் பல் இருக்கும். * பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும். * பதுங்குகிற புலி பாய்ச்சலுக்கு அடையாளம். * பதுமை போல நடிக்கின்றான். * பத்தடி போல் துள்ளிப் பரிதவிக்கிறது. * பத்தைக் கண்டு பயந்த ஆனை போல. * பனியால் குளம் நிறைதல் இல்(லை) ==பி== * பிகுவான சம்பந்தி இழுத்தாராம் இரண்டு இலை. * பிகுவோடு சம்பந்தி கழற்றினாளாம் துணியை. * பிச்சன் வாழைத் தோட்டத்தில் புகுந்ததுபோல. * பிச்சை இட்டால் மோட்சம். * பிச்சை இட்டுக் கெட்டவர்களும் இல்லை; பிள்ளை பெற்றுக் கெட்டவர்களும் இல்லை. * பிச்சை எடுக்கப் போனாலும் முகராசி வேண்டும். * பிச்சை எடுக்குமாம் பெருமாள்; அத்தைப் பிடுங்குமாம் அனுமார். * பிச்சை எடுக்கிறதிலும் பிகுவா?. * பிச்சை எடுத்தும் சத்துருவின் குடி கெடு. * பிச்சைக்கார நாய்க்குப் பட்டுப் பல்லக்கு. * பிச்சைக்கார நாரிக்கு வைப்புக்காரன் பெருமை; கூலிக்குச் செய்பவனுக்குக் கூத்தியாள் பெருமை. * பிச்சைக்காரன் சோற்றில் சனீசுவரன் புகுந்தது போல. * பிச்சைக்காரன் சோற்றை எச்சில் நாய் பங்கு கேட்டதாம். * பிச்சைக்காரன் பிச்சைக்குப் போனால் எங்கள் வீட்டுக்காரர் அதுக்குத்தான் போகிறார் என்றாளாம். * பிச்சைக்காரன் மேலே பிரம்மாஸ்திரம் தொடுக்கிறதா? * பிச்சைக்காரன் வாந்தி எடுத்தாற் போல். * பிச்சைக்காரனுக்கு ஏது கொட்டு முழக்கு? * பிச்சைக்காரனுக்கு ஒரு மாடாம்; அதைப் பிடித்துக்கட்ட ஓர் ஆளாம். * பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் இருக்கிறதா? * பிச்சைக்காரனுக்குப் பிச்சைக்காரன் பொறாமை அதிகம். * பிச்சைக்காரனை அடித்தானாம்; அடுப்பங்கரையிலே பேண்டானாம் * பிச்சைக்காரனை அடித்தானாம்; சோளியைப் போட்டு உடைத்தானாம் * பிச்சைக்காரனைக் கடனுக்கு வேலை வாங்கினானாம் * பிச்சைக்காரனைப் பேய் பிடித்ததாம்; உச்சி உருமத்தில் * பிச்சைக்கு அஞ்சிக் குடிபோனாளாம்; பேனுக்கு அஞ்சித் தலையைச் சிரைத்தாளாம் * பிச்சைக் குட்டிக்குத் துக்கம் என்ன? பெருச்சாளிக்கு வாட்டம் என்ன? * பிச்சைக் குடிக்கு அச்சம் இல்லை * பிச்சைக்குடி பெரிய குடி * பிச்சைக் குடியிலே சனீசுவரன் புகுந்தது போல * பிச்சைக்குப் பிச்சையும் கெட்டது; பின்னையும் ஒருகாசு நாமமும் கெட்டது * பிச்சைக்குப் பெரிய குடி * பிச்சைக்கு மூத்தது கச்சவடம் * பிச்சைக்கு வந்த ஆண்டி இல்லை என்றால் போவாளா? * பிச்சைக்கு வந்த பிராமணா, பெருங்காயச் செம்பைக் கண்டாயோ? * பிச்சைக்கு வந்தவன் ஆண்டார் இல்லை என்றால் போகிறான் * பிச்சைக்கு வந்தவனைப் பெண்டாள அழைத்தது போல * பிச்சைக்கு வந்தவன் எல்லாம் பெண்ணுக்கு மாப்பிள்ளையா? * பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு மாப்பிள்ளை ஆனான் * பிச்சைச் சோற்றிலும் எச்சில் சோறா? * பிச்சைச் சோற்றிலும் குழந்தைச் சோறா? * பிச்சைச் சோற்றிலும் குழைந்த சோறு உண்ணலாமா? * பிச்சைச் சோற்றுக்கு இச்சகம் பேசுகிறான் * பிச்சைச் சோற்றுக்கு எச்சில் இல்லை * பிச்சைச் சோற்றுக்குப் பஞ்சம் உண்டா? * பிச்சைச் சோற்றுக்குப் பேச்சும் இல்லை; ஏச்சும் இல்லை * பிச்சைப் பாத்திரத்தில் கல் இட்டது போல * பிச்சைப் பாத்திரத்தில் சனீசுவரன் புகுந்தாற் போல * பிச்சை புகினும் கற்கை நன்றே * பிச்சை போட்டது போதும்; நாயைக் கட்டு * பிச்சை வேண்டாம் தாயே; நாயைப் பிடி * பிசினாரி தன்னை வசனிப்பது வீண் * பிஞ்சிலே பழுத்தவன் * பிஞ்சிலே முற்றிய பீர்க்காங்காய் * பிஞ்சு வற்றினால் புளி ஆகாது * பிட்சாதிபதியோ, லட்சாதிபதியோ? * பிட்டு எங்கே விக்கும்? தொண்டையிலே விக்கும் * பிட்டுக் கூடை முண்டத்தில் பொறுக்கி எடுத்த முண்டம் * பிட்டுத் தின்று விக்கினாற் போல * பிடரியைப் பிடித்துத் தள்ளப் பெண்ணுடைய சிற்றப்பன் என்று நுழைந்தானாம் * பிடாரம் பெரிதென்று புற்றிலே கை வைக்கலாமா? * பிடாரன் கைப் பாம்பு போல * பிடாரனுக்கு அஞ்சிய பாம்பு எலிக்கு உறவு ஆச்சுதாம் * பிடாரியாரே, கடா வந்தது * பிடாரியைப் பெண்டு கொண்டாற் போல் * பிடாரியைப் பெண்டு வைத்துக் கொண்டவன் பேயன் * பிடாரி வரம் கொடுத்தாலும் ஓச்சன் வரம் கொடுப்பது அரிது * பிடி அழகி புகுந்தால் பெண் அழகி ஆவாள் * பிடிக்கிற முலை அல்ல; குடிக்கிற முலை அல்ல * பிடிக்குப்பிடி நமச்சிவாயம் * பிடிக்குப் பிடி நமஸ்காரம் * பிடித்த காரியம் கடித்த வாய் துடைத்தாற் போல் வரும் * பிடித்த கிளையும் மிதித்த கொம்பும் முறிந்து போயின * பிடித்த கொம்பு ஒடிந்து மிதித்த கொம்பும் முறிந்தாற் போல ஆனேன் * பிடித்த கொம்பும் விட்டேன்; மிதித்த கொம்பும் விட்டேன் * பிடித்த கொம்பை விடாதே * பிடித்ததன் கீழே அறுத்துக் கொண்டு போகிறது * பிடித்த துன்பத்தைக் கரைத்துக் குடிக்கலாம் * பிடித்தவர்க்கு எல்லாம் பெண்டு * பிடித்தால் கற்றை; விட்டால் கூளம் * பிடித்தால் குரங்குப் பிடி பிடிக்க வேண்டும்; அடித்தால் பேயடி அடிக்க வேண்டும் * பிடித்தால் சுமை; விட்டால் கூளம் * பிடித்தால் பானை, விட்டால் ஓடு * பிடித்தால் புளியங்கொம்பைப் பிடிக்க வேணும் * பிடித்தால் பெரிய கொம்பைப் பிடிக்க வேணும் * பிடித்தாலும் பிடித்தாய், புளியங்கொம்பை * பிடித்து ஒரு பிடியும், கிழித்து ஒரு கிழியும் கொடுத்தது உண்டா? * பிடித்துத் தின்றதைக் கரைத்துக் குடிக்கலாம் * பிடித்து வைத்தால் பிள்ளையார்; வழிந்து எறிந்தால் சாணி மொத்தை * பிடி பிடியாய் நட்டால் பொதி பொதியாய் விளையுமா? * பிடி யானையைக் கொண்டு களிற்று யானையை வசப்படுத்துவது போல * பிடியில் அழகு புகுந்தால் வபன் அழகு ஆவாள் * பிடிவாதம் குடி நாசம் * பிடி விதை விளையும்; மடி விதை தீயும் * பிண்டத்துக்குக் இருக்காது; தண்டத்துக்கு இருக்கும் * பிண்டத்துக்குக் கிடையாது; தண்டத்துக்கு அகப்படாது * பிண்டம் பெருங்காயம்; அன்னம் விலவாதி லேகியம் * பிண்ணாக்குத் தராவிட்டால் செக்கிலே பேளுவேன் * பிண்ணாக்குத் தின்பாரைச் சுண்ணாம்பு கேட்டால் வருமா? * பிணத்துக்கு அழுகிறாயா? குணத்துக்கு அழுகிறாயா? * பிணத்தை மூடி மணத்தைச் செய் * பிணம் சுட்ட தடியும் கூடத்தான் போட்டுச் சுடுகிறது * பிணம் தின்கிற பூச்சி போல * பிணம் தின்னிக் கழுகு * பிணம் தூக்குவதில் தலைமாடு என்ன? கால்மாடு என்ன? * பிணம் பிடுங்கத் தின்றவன் வீட்டில் புத்தரிசி யாசகத்துக்குப் போனானாம் * பிணம் போகிற இடத்துக்குத் துக்கமும் போகிறது * பிணை ஓட்டினாலும் நெல் கொரிக்கலாம் * பிணைப்பட்ட நாயே குப்பையைச் சும * பிணைப்பட்டாயோ? துணைப் பட்டாயோ? * பிணைப்பட்டால் குரு; துணைப்பட்டால் சா * பிணைப்பட்டுக் கொள்ளாதே; பெரும்பாவத்தை உத்தரிப்பாய் * பிணைப்பட்டுத் துணைப் போகாதே * பிணையில் இட்ட மாட்டின் வாயைக் கட்ட முடியுமா? * பித்தம் கிறுகிறு என்கிறகு; மலம் கரைத்துக் குடி குடி என்கிறது * பித்தம் பத்து விதம் * பித்தருக்குத் தம் குணமே செம்மையான பெற்றி * பித்தளை சோதித்தாலும் பொன்குணம் வருமா? * பித்தளை நாற்றம் போகாது * பித்தளை மணி அற்ற வருக்குப் பொன்மணி என்று பெயர் * பித்தனுக்குப் புத்தி சொன்னால் கேட்பானா? * பித்தியுடைய பாகற்காய் சட்டியோட தீயுது * பித்தும் பிடித்தாற் போலப் பிடித்ததைப் பிடிக்கிறது * பிதாவைப் போல் இருப்பான் புத்திரன் * பிந்திகா மார்ஜால நியாயம் * பிய்த்து விட்டாலும் பேச்சு; பிடுங்கி விட்டாலும் போச்சு * பிய்ந்த சீலையும் பேச்சுக் கற்ற வாயும் சும்மா இரா * பிய்ப்பானேன்? தைப்பானேன்? * பிரகசரண ஊழல் * பிரகசரணம் பெப்பே * பிரசங்க வைராக்கியம் * பிரசவ வைராக்கியம், புராண வைராக்கியம், ஸ்மசான வைராக்கியம் * பிரதோஷ வேளையில் பேய்கூடச் சாப்பிடாது * பிரம்மசாரி எள்ளுக் கணக்குப் பார்த்ததுபோல * பிரம்மசாரி ஓடம்கவிழ்த்ததுபோல * பிரம்மச்சாரி குடித்தனம் * பிரம்ம செளசம் * பிரம்ம தேவன் நினைத்தால் ஆயுசுக்குப் பஞ்சமா? * பிரம்ம தேவன் போட்ட புள்ளிக்கு இரண்டாமா? * பிரம்ம வித்தையோ? * பிரம்மா நினைத்தால் ஆயுசுக்கு என்ன குறை? * பிராணன் போகும் போது மென்னியைப் பிடித்த மாதிரி * பிராணன் போனாலும் மானம் போகிறதா? * பிராமணப் பிள்ளை நண்டு பிடித்தது போல * பிராமணனுக்கு இடம் கொடாதே * பிராமணா உன் வாக்குப்பலித்தது * பிராமணா, பிராமணா, உன் கால் வீங்குகிறதே; எல்லாம் உன் தாலி அறுக்கத்தான் * பிராமணா போஜனப்ரியா * பிராமணார்த்தக்காரனுக்கு நெய்விலை எதற்கு? * பிராமணார்த்தம் சாப்பிட்டுப் பங்கு மனையை விற்றானாம் * பிரிந்த அன்றைத் தேடித் திரும்பும் பசுவைப்போல * பிரியம் இல்லாத கூடு, பிண்டக்கூடு * பிரியம் இல்லாத சோறு, பிண்டச் சோறு * பிரியம் இல்லாத பெண்டாட்டியிலும் பேய் நன்று * பிரியைக் கட்டி இழுப்பேன் * பிழுக்கை ஒழுக்கம் அறியாது; பித்தளை நாற்றம் அறியாது * பிழுக்கை ஒழுக்கம் அறியுமா? பிண்ணாக்குக் கட்டி பதம் அறியுமா? * பிழுக்கைக்குணம் போகாது ஒரு காலும் * பிழுக்கைக்குப் புத்தி பிடரியிலே * பிழுக்கைக்குப் பொன்முடி பொறுக்குமா? * பிழுக்கை கலம் கழுவித் தின்னாது * பிழுக்கைக்கு மேல் சன்னதம் வந்தால் பூவிட்டுக் கும்பிட வேண்டும் * பிழுக்கை சுகம் அறியுமா? * பிழுக்கை வாரியும் பால்கொள்வர் * பிழுக்கை வெட்கம் அறியுமா? * பிழைக்கப் போன இடத்திலே பிழை மோசம் வந்தது போல * பிழைக்க மாட்டாத பொட்டை, என் பெண்ணை ஏண்டா தொட்டாய்? * பிழைக்கிற பிள்ளை ஆனால் உள்ளூரிலே பிழைக்காதா? * பிழைக்கிற பிள்ளை ஆனால் பிறந்தபோதே செத்துப் போலிருக்கும் * பிழைக்கிற பிள்ளை குரைக் கழிச்சல் கழியுமா? * பிழைக்கிற பிள்ளை பிறக்கும் போதே தெரியாதா? * பிழைக்கிற பிள்ளையைக் காலைக் கிளப்பிப் பார்த்தால் தெரியாதா? * பிழைத்த பிழைப்புக்குப் பெண்டாட்டி இரண்டு * பிழைப்பு இல்லாத நாசுவன் பூனையைப் பிடித்துச் சிரைத்தானாம் * பிழைப்பு இல்லாத நாவிதன் பெண்டாட்டி தலையைச் சிரைத்தானாம் * பிழை பொறுத்தார் என்று போகிறவர் குட்டுகிறதா? * பிள்ளை அருமை பெற்றவருக்குத் தெரியும் * பிள்ளை அருமை மலடி அறிவாளா? * பிள்ளை ஆசைக்கு மலச்சீலையை மோந்து பார்த்தாற் போல * பிள்ளை இருக்கப் பிடித்து விழுங்கி * பிள்ளை இருக்கப் பிடித்து விழுங்கினாள், கொள்ளா கொள்ளி வயிறே * பிள்ளை இல்லாச் சொத்துப் பாழ் போகிறதா? * பிள்ளை இல்லாச் சோறு புழு * பிள்ளை இல்லாத பாக்கியம் பெற்றிருந்து என்ன சிலாக்கியம்? * பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடினானாம் * பிள்ளை இல்லாதவன் வீட்டுக் கூரை கூடப் பொருந்தாதே * பிள்ளை எடுத்துப் பிழைக்கிறதை விடப் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம் * பிள்ளை என்றால் எல்லாருக்கும் பிள்ளை * பிள்ளை என்றால் பேயும் இரங்கும் * பிள்ளைக்கா பிழுக்கைக்கா இடம்கொடுக்கப் போகாது * பிள்ளைக்காரன் பிள்ளைக்கு அழுகிறான்; பணிச்சவன் காசுக்கு அழுகிறான் * பிள்ளைக்காரி குசுவிட்டாய் பிள்ளைமேல் சாக்கு * பிள்ளைக்கு அலைந்து மலநாயைக் கட்டிக் கொண்டது போல * பிள்ளைக்கு இளக்காரம் கொடுத்தாலும் புழுக்கைக்கு இளக்காரம் கொடுக்கக்கூடாது * பிள்ளைக்குப் பால் இல்லாத தாய்க்குப் பிள்ளைச் சுறாமீனை சமைத்துக் கொடு * பிள்ளைக்குப் பிள்ளைதான் பெறமுடியாது; மலத்துக்கு மலம் விடிக்க முடியாதா? * பிள்ளைக்கும் பிள்ளையாயிருந்து பெட்டைப் பிள்ளையை வேலை ஆக்கினான் * பிள்ளைக்கும் புழுக்கைக்கும் இடம் கொடாதே * பிள்ளைக்கு வாத்தியார்; பெண்ணுக்கு மாமியார் * பிள்ளைக்கு விளையாட்டு; சுண்டெலிக்குப் பிராண சங்கடம் * பிள்ளைகள் கல்யாணம், கொள்ளை கிடைக்காதா? * பிள்ளை குலம் அழித்தால் பெற்றோர்கள் என்ன செய்வார்கள்? * பிள்ளைச் சீர் கொள்ளக் கிடைக்குமா? * பிள்ளைத் தாய்ச்சி நோயைச் சவலைப் பிள்ளை அறியுமா? * பிள்ளைதான் உயர்த்தி; மலம் கூடவா உயர்த்தி? * பிள்ளை திறத்தைப் பேள விட்டுப் பார் * பிள்ளை நல்லதுதான்; பொழுது போனால் கண் தெரியாது * பிள்ளை நோவுக்குக் கள்ளம் இல்லை * பிள்ளைப் பாசம் பெற்றோரை விடாது * பிள்ளைப் பேறு பார்த்ததும் போதும்; என் அகமுடையானைக் கட்டி அணைத்ததும் போதும் * பிள்ளைப் பைத்தியம் பெரும் பெத்தியக் * பிள்ளை படிக்கப் போய் பயறு பசறு ஆச்சு * பிள்ளை படைத்தவனுக்கும் மாடு படைத்தவனுக்கும் வெட்கம் இல்லை * பிள்ளை பதினாறு பெறுவாள் என்று எழுதியிருந்தாலும் புருஷன் இல்லாமல் எப்படிப் பெறுவாள்? * பிள்ளை பாதி, புராணம் பாதி * பிள்ளை பிறக்கும்; பூமி பிறக்காது * பிள்ளைப் பிறக்கிறதற்கு முன்னே தின்று பார்; மருமகள் வருவதற்கு முன்னே பூட்டிப் பார் * பிள்ளை பிறந்த ஊ௫க்குப் புடைவை வேணுமா? * பிள்ளை புழுக்கை; பேர் முத்துமாணிக்கம் * பிள்ளை பெற்றபின் அன்றோ பேரிட வேண்டும்? * பிள்ளை பெற்றவளோ? நெல் எடுத்த குழியோ? * பிள்ளை பெற்றவளைப் பார்த்துப் பெருமூச்சு எறிந்து பயன் என்ன? * பிள்ளை பெற்றவளைப் பார்த்து மலடி பெருமூச்சு விட்டு அழுதது போல * பிள்ளை பெற்றாயோ, பிறப்பை எடுத்தாயோ? * பிள்ளை பெற்றுக் கெட்டவனும் இல்லை; பிச்சை எடுத்து வாழ்ந்தவனும் இல்லை * பிள்ளை பெற்றுப் பிணக்குப் பார்; கல்யாணம் முடித்துக் கணக்குப் பார் * பிள்ளை பெற்றுப் பேர் இட வேண்டும் * பிள்ளை பெறப் பெற ஆசை; பணம் சேரச் சேர ஆசை * பிள்ளை மலபாதை செய்ததென்று துடையை அறுக்கிறதா? * பிள்ளையாண்டான் கெட்டிக்காரன்; பொழுது போனால் கண் தெரியாது * பிள்ளையாய்ப் பிறந்து சோடையாய்ப் போனேனே! * பிள்ளையார் அப்பா, பெரியப்பா, பிழைக்கும் வழியைச் சொல்லப்பா * பிள்ளையார் குட்டுக் குட்டி ஆயிற்று * பிள்ளையார் கோயில் பெருச்சாளி போல * பிள்ளையார் கோயிலில் திருடன் இருப்பான் * பிள்ளையார் கோயிலைப் பெருக்கலாம்; மெழுகலாம்; அமேத்தியம் விடித்தால் கண் போய் விடும் * பிள்ளையார் சதுர்த்திக்கும் மீராசாயபுவுக்கும் என்ன சம்பத்தம்? * பிள்ளையார் சுழி போட்டாயிற்று * பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது * பிள்ளையார் பிறகே திருடன் இருக்கிறான்; சொன்னால் கோளாம் * பிவளையார் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க விடமாட்டான் * பிள்ளையார் வேஷம் * பிள்ளையாருக்குக் கல்யாணம் நடக்கிறபோது * பிள்ளையாருக்குப் பெண் கொள்வது போல * பிள்ளையாரைக் கண்டால் தேங்காயைக் காணோம்; தேங்காயைக் கண்டால் பிள்ளையாரைக் காணோம் * பிள்ளையாரைச் சாக்கிட்டுப் பூதம் விழுங்கிற்றாம் * பிள்ளையாரைச் சாக்கு வைத்துப் பூசாரி போட்டாற்போல * பிள்ளையாரைப் பிடித்த சனி அரசமரத்தைப் பிடித்தது போல * பிள்ளையின் அழகைப் பேளவிட்டுப் பார்த்தால் உள்ள அழகும் ஓட ஓடக் கழிகிறது * பிள்ளையின் திறமையைப் பேளவிட்டுப் பார்த்தானாம் * பிள்ளையின் நிறமையை வேலை விட்டுப் பார் * பிள்ளையின் பாலைப் பீச்சிக் குடிக்கிறதா? * பிள்ளையின் மடியிலே பெற்றவன் உயிர் விட்டால் பெருங்கதி உண்டு * பிள்ளையும் இல்லை; கொள்ளியும் இல்லை * பிள்ளையும் மலமும் பிடித்ததை விடா * பிள்ளையும் பிழுக்கையும் சரி * பிள்ளையை அடித்து வளர்க்க வேணும்? முருங்கையை ஒடித்து வளர்க்க வேணும் * பிள்ளையைக் காட்டிப் பூதம் விழுங்குகிறது * பிள்ளையைப் பெற்றபின்தான் பெயர் இடவேண்டும் * பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுகிறதா? * பிள்ளையை விட்டுத் திருடுவது போல * பிள்ளை வரம் கேட்கப் போய்ப் புருஷனையே பறி கொடுத்தது போல * பிள்ளை வருத்தம் பெற்றவளுக்குத் தெரியும்; மற்றவளுக்குத் தெரியுமா? * பிள்ளை வீட்டுக்காரர் சம்மதித்தால் பாதி விவாகம் முடிந்தது போல * பிறக்காத பிள்ளைக்கு நடக்காத தொட்டில் * பிறக்கிறபொழுதே முடமானால் இட்டுப் படைத்தால் தீருமா? * பிறக்கும்போது தம்பி; பெருத்தால் தாயாதி * பிறக்கும்போது யார் என்ன கொண்டு வந்தார்? * பிறத்தியார் புடைவையில் தூரம் ஆவது என்றால் கொண்டாட்டம் * பிறத்தியார் வளர்த்த பிள்ளை பேய்ப் பிள்ளை * பிறத்தியாருக்கு வாத்தியார் * பிறத்தியானுக்கு வெட்டுகிற குழி தனக்கு * பிறந்த அன்றே இறக்க வேண்டும் * பிறந்து இடத்து வண்மையை உடன்பிறந்தானிடத்தில் சொல்கிறதா? * பிறந்த ஊருக்குச் சேலை வேண்டாம்; பெண்டு இருந்த ஊருக்குத் தாலி வேண்டாம் * பிறந்த ஊருக்குப் புடைவை வேணுமா? * பிறந்தகத்துக்குச் செய்த காரியமும் பிணத்துக்குச் செய்த அலங்காரமும் வீண் * பிறந்தகத்துப் பெருமையை அக்காளிடம் சொல்வது போல * பிறந்தகத்துப் பெருமையை உடன் பிறந்தானோடு சொன்னாளாம் * பிறந்தகத்துத் துக்கம் கொல்லையிலே * பிறந்தது எல்லாம் பிள்ளையா? * பிறந்த நாளும் திருவாதிரையும் * பிறந்த நாளும் புதன் கிழமையும் * பிறந்த பிள்ளை பிடி சோற்றுக்கு அழுகிறது; பிறக்கப் போகிற பிள்ளைக்குத் தண்டை சதங்கை தேடுகிறார்கள் * பிறந்த பிறப்போ பெருங் கணக்கு * பிறந்தவன் இறப்பதே நிஜம் * பிறந்த வீட்டுச் செல்லி * பிறந்த வீட்டுப் பெருமையை உடன் பிறந்தானிடம் சொல்லிக் கொண்டாளாம் * பிறந்தன இறக்கும்; தோன்றின மறையும் * பிறந்தால் தம்பி; வளர்ந்தால் பங்காளி * பிறந்தால் வெள்ளைக்காரனாகப் பிறக்க வேணும்; இல்லா விட்டால் அவன் வீட்டு நாயாய்ப் பிறக்க வேணும் * பிறந்தும் பிறந்தும் பேதைப் பிறப்பு * பிறப்பும் சிறப்பும் ஒருவர் பங்கு அல்ல * பிறப்பு உரிமை வேறு, சிறப்பு உரிமை வேறு * பிறர் குற்றம் அறியப் பிடரியிலே கண் * பிறர் பொருளை இச்சிப்பான் தன் பொருளை இழப்பான் * பிறர் மனைத் துரும்பு கொள்ளான், பிராமணன் தண்டு கொண்டான் * பிறவாத குழந்தைக்கு நடவாத தொட்டில் இட்டாளாம் * பிறவிக்குணத்துக்கு மட்டை வைத்துக் கட்டினாலும் தீராது * பிறவிக்குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது * பிறவிக்குருடன் காது நன்றாகக் கேட்கும் * பிறவிக் குருடனுக்குக் கண் கிடைத்தது போல * பிறவிக் குருடனுக்குத் தெய்வம் கண் கொடுத்தாற் போல * பிறவிக் குருடனுக்குப் பண நோட்டம் தெரியுமா? * பிறவிச் செவிடனுக்குப் பேசத்திறம் உண்டா? * பிறவிச் செல்வம் பின்னுக்குக் கேடு * பிறை வடக்கே சாய்ந்தால் வரப்பெல்லாம் நெல்; தெற்கே சாய்ந்தால் தெற்கெல்லாம் பாழ் * பின் இருக்கிறது புரட்டாசிக் காய்ச்சல் * பின் இருந்து உண்டு குடைகிறான் * பின் குடுமி புறங்கால் தட்ட ஓடுகிறான் * பின்புத்திக்காரன் பிராமணன் * பின்னல் இல்லாத தலை இல்லை; சன்னல் இல்லாத வீடு இல்லை * பின்னால் இருந்து கூண்டு முடைகிறான் * பின்னால் வரும் பலாக்காயினும் முன்னால் வரும் களாக்காய் நலம் * பின்னே ஆனால் எறியும்; முன்னால் ஆனால் முட்டும் * பின்னே என்பதும் நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம் * பின்னை என்பதும் பேசாதிருப்பதும் இல்லை என்பதற்கு அடையாளம் * பிக்ஷாதிபதி, லக்ஷாதிபதி ==பீ== *பீக்கு முந்தின குசுப் போல *பீச்சண்டை பெருஞ்சண்டை *பீடம் தெரியாமல் சாமி ஆடினது போல *பீடு படைத்தவன் கோடியில் ஒருவன் *பீதாம்பரத்துக்கு உண்டு ஆடம்பரச் செய்கை *பீ தின்கிறது போலக் கனவு கண்டால் பொழுது விடிந்தால் யாருக்குச் சொல்கிறது? *பீ தின்கிறவன் வீட்டுக்குப் போனால் பொழுது விடியுமட்டும் பேளச் சொல்லி அடித்தானாம் *பீ தின்னப் போயும் வயிற்றுவலிக்காரன் பீயா? *பீ தின்ன வந்த நாய் பிட்டத்தைக் கடிக்கப் போகிறதா *பீ தின்ன வேண்டுமென்றால் வாயை நன்றாய்க் கழுவிப் போட வேண்டும் *பீ தின்னுகிற நாய்க்குப் பேர் முத்துமாலை *பீ தின்னும் வாயைத் துடைத்தது போல *பீ போடப் புறக்கடையும் பிணம் போட வாசலும் *பீ போனால் பலம் போச்சு *பீ மேலே நிற்கிறாற் போல *பீயிலே கல விட்டு எறிந்தால் மேலேதான் தெறிக்கும் *பீயிலே தம்படி இருந்தாலும் பெருமாளுக்குத் தளிகை போடுவான் *பீயும் சோறும் தின்கிறதா? ஈயும் தண்ணீரும் குடிக்கவா? *பீயும் சோறும் பிசைந்து தின்கிறான் *பீயும் பிள்ளையும் பிடித்ததைப் பிடிக்கும் *பீயைப் பெரிதாய் எண்ணிப் பொய்க்காமல் வேடு கட்டுவானேன் *பீர்க்குப் பூத்தது; விளக்கை ஏற்று *பீலா பூத்த சோறு பெரிய பறங்‘கிலாப்’ பேளும் பேளும் *பீலி காலாழி இன்றியும் கல்யாணமா? *பீற்றல் பட்டைக்கு அறுதற் கொடி *பீற்றல் முறமும் எழுதாத ஓலையும் *பீற்றிக் கொள்கிறான் *பீறின புடைவை பெருநாள் இராது *பீறின புடைவையும் பொய் சொன்ன வாயும் நிற்குமா? ==பு== * புகழ்ச்சியானுக்கு ஈந்தது பூதக்கண்ணாடி * புகழ்ந்தாரைப் போற்றி வாழ் * புகழால் புண்ணியம் * புகுந்தடித்துப் போனோம் ஆனால் பிடித்து அடித்துத் தள்ளுவார்களா? * புகை இருந்தால் நெருப்பு இருக்கும் * புகைக்கினும் காரசில் பொல்லாங்கு கமழாது * புகைச் சரக்கு வகைக்கு ஆகாது * புகைந்த கொள்ளி புறத்தே * புகைந்த வீட்டைச் சுற்றுகிறது * புகை நுழையாத இடத்தில் புகுந்திடும் தரித்திரம் * புகை நுழையாத இடத்திலும் அவன் நுழைவான் * புகை நுழையாத இடத்திலும் போலீஸ் நுழையும் * புகையிலைக்குப் புழுதிக் கொல்லை * புகையிலையைப் பிரிக்காதே; பெண் பிள்ளை பேச்சைக் கேட்காதே * புகையிலை விரித்தால் போச்சு; பெண் பிள்ளை சிரித்தால் போச்சு * புகை வீட்டைச் சுற்றும் * புங்க நிழலும் புது மண்ணும் போல் * புங்க மர நிழலும் மங்காத் தாய்மடிச் சுகமும் ஒன்றாம் * புங்கப் புகழே, தங்க நிழலே * புங்கை நிழலுக்கும் புளியைத் தழலுக்கும் * புஞ்சையிற் புதிது; நஞ்சையிற் பழையது * புட்டுக்கூடை முண்டத்திலும் பொறுக்கி எடுத்த முண்டம் * புட்பம் என்றும் சொல்லலாம்; புஸ்பம் என்றும் சொல்லலாம்; ஐயர் சொன்னமாதிரியும் சொல்லலாம் * புடம் இட்ட பொன் போ * புடைக் கட்டுப் பயிருக்கு மடைக்கட்டுத் தண்ணீர் * புடைவை கொடுப்பாள் என்று பெண் வீட்டுக்குப் போனால்; கோணிப் பையைக் கட்டிக் கொண்டு குறுக்கே வந்தாளாம் * புடைவையை வழித்துக்கொண்டு சிரிக்க வேணும் * புண் எல்லாம் ஆறி விட்டது; தாமரை இலை அகவந்தான் இருக்கிறது என்றானாம் * புண்ணியத்துக்கு உழுத மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்த்தால் போல * புண்ணியத்துக்குக் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போல * புண்ணியத்துக்குப் பசுவைக் கொடுத்தால் பல் எத்தனை என்றாளாம் * புண்ணியத்துக்குப் புடைவை கொடுத்தால் புறக்கடையில் போய் முழம் போட்டாளாம் * புண்ணிய பாவத்துக்குப் புடைவை கொடுத்தாளாம்; பின்னாலே போய் முழம் போட்டுப் பார்த்தாளாம் * புண்ணியம் இல்லாத வழிகாட்டி வீண் * புண்ணியம் ஒருவர் பங்கு அல்ல * புண்ணியம் பார்க்கப் போய்ப் பாவம் பின்னே வந்ததாம் * புண்ணில் எரி இட்டது போல * புண்ணில் கோல் இட்டது போல * புண்ணில் புளிப் பெய்தாற் போல * புண்ணுக்கோ மருந்துக்கோ வீச்சம் * புண்ணைக் கீறி ஆற்ற வேண்டும் * புண்பட்ட புலிக்கு இடுப்பு வலி எம்மாத்திரம்? * புத்தி அற்றவர்கள் பக்தியாய்ச் செய்வதும் விபரீதம் ஆம் * புத்தி அற்றான் பலன் அற்றான் * புத்தி இல்லா மாந்தர் புல்லினும் புல்லர் ஆவார் * புத்தி ஈனர்கள் குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்வார்கள் * புத்தி உரம் * புத்தி உள்ளவர் பொறுப்பார் * புத்தி உறப் புகழ் * புத்தி எத்தனை? சுத்தி எத்தனை? * புத்தி கட்டை, பெயர் முத்து மாணிக்கம் * புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி * புத்தி கெட்ட புதுப்பாளையம், போக்கிரி பாண்டமங்கலம், மூணும் கெட்ட மோகனூர் * புத்திசாலியின் விரோதம் தேவலை; அசட்டின் நட்பு உதவாது * புத்திமான் பலவான் ஆவான் * புத்தி முற்றினவர்க்குச் சித்தியாதது ஒன்றும் இல்லை * புத்தியோ கட்டை, பெயரோ முத்துமாணிக்கம் * புத்தூர் சிறுப்பிட்டி பூம்பட்டி ஆவார் * புத்தூரான் பார்த்திருக்க உண்பான்; பசித்தோர் முகம் பாரான்; கோத்திரத்துக்குள்ள குணம் * புத்ராத் சதகுணம் புத்ரீ * புதன் கோடி தினம் கோடி * புதன் சனி முழுகு * புதிது புதிதாய்ப் பண்ணையம் வைத்தால் மசிரு மசிரா விளைஞ்சதாம் * புதிசுக்கு வண்ணான் கோணியும் வெளுப்பான் * புதிதாய்ப் புதிதாய்க் குலம் புகுந்தேன், பீலாப் பூத்தகச் சோறு * புதிதாய் வந்த சேவகன் நெருப்பாய்க் கட்டி வீசுகிறான் * புதிதாய் வந்த மணியக்காரன் நெருப்பாய் இருக்கிறான் * புதிய காரியங்களில் புதிய யோசனை வேண்டும் * புதிய துடைப்பம் நன்றாகப் பெருக்கும் * புதிய வண்ணான் பொந்து கட்டி வெளுப்பான் * புதிய வண்ணானையும் பழைய அம்பட்டனையும் தேடவேண்டும் * புதிய வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தை அடித்துக் கொண்டு போயிற்று * புதியாரை நம்பிப் பழையாரைக் கைவிடலாமா? * புதுக் குடத்தில் வார்த்த தண்ணீரைப் போல * புதுக்கோட்டை அம்மன் காசு பெற மாட்டான் * புதுக்கோட்டைக் கறுப்பண்ணனுக்கும் பூணைப் பார்; செட்டி நாட்டுத் தூணுக்கு உறையைப் பார் * புதுக்கோட்டைப் புஷ்பவல்லியைப் பார்; தேவகோட்டைத் தேவடியாளைப் பார் * புதுக்கோடி கிடைத்தாலும் பொன் கோடி கிடைக்காது * புதுத்துடைப்பம் நன்றாய்ப் பெருக்கும் * புதுப்பணக்காரனிடம் கடன் வாங்காதே * புதுப்பணம் படைத்தவன் அறிவானோ போன மாதம் பட்ட பாட்டை * புதுப்பானைக்கு ஈ சேராது * புதுப்புனலும் புதுப்பணமும் மண்டையை இடிக்கும்; தொண்டையை அடைக்கும் * புதுப் புடைவையிலே பொறி பட்டாற் போல * புதுப் பெண் என்று தலை சுற்றி ஆடுகிறதா? * புதுப் பெண்ணே, புதுப் பெண்ணே, நெருப்பு எடுத்து வா, உனக்குப் பின்னாலே இருக்கிறது செருப்படி * புதுப் பெண் போல் நாணுகிறது * புதுப் பெண் மோடு தூக்கும் * புது மண அறைப் பெண் போல நாணுகிறது * புது மாட்டுப்பெண் மேட்டைத் துடைக்கும் * புது மாடு குளிப்பாட்டுகிறது போல * புது மாடு புல்லுப் பெறும் * புதுமைக்கு வண்ணான் கரை கட்டி வெளுப்பான்; பழகப் பழகப் பழந் துணியும் கொடான் * புதுமையான காரியந்தான் இந்தக் கலியுகத்தில் * புது வண்ணான் கோணியும் வெளுப்பான் * புது வாய்க்கால் வெட்ட வேண்டாம்; பழ வாய்க்கால் தூர்க்க வேண்டாம் * புது வெள்ளத்தில் கெளுத்தி மீன் ஏறுவது போல * புது வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தையும் அடித்துக்கொண்டு போயிற்று * புதையல் எடுத்தவனைப் போல * புயலுக்குப் பின் அமைதி * புரட்டாசிக் கருக்கல் கண்ட இடத்து மழை * புரட்டாசிக் காய்ச்சல் * புரட்டாசிச் சம்பா பொன் போல் விளையும் * புரட்டாசி நடுகை, திரட்சியான நடுகை * புரட்டாசிப் பகலில் பொன் உருகக் காய்ந்து இரவிலே மண் உருகப் பெய்யும் * புரட்டாசி பதினைந்தில் நடவே நடாதே * புரட்டாசி பாதியில் சம்பா நடு * புரட்டாசி பெய்தாலும் பெய்யும்; காய்ந்தாலும் காயும் * புரட்டாசி பெய்து பிறக்க வேணும்; ஐப்பசி காய்ந்து பிறக்க வேணும் * புரட்டாசி மாதத்தில் கோவிந்தா என்ற குரலுக்குப் பஞ்சமா? * புரட்டாசி மாதத்து நடவு பெரியோர் தேடிய தனம் * புரட்டாசி மாதத்தில் பேரெள் விதை; சித்திரை மாதத்தில் கூர் எள் விதை * புரட்டாசி மாதம் முப்பதும் ஒரு கந்தாயமா? * புரட்டாசியில் பொன் உருகக் காய்ந்தாலும் காயும்; மண்ணுருகப் பெய்தாலும் பெய்யும் * புரட்டாசியில் பொன் உருகக் காயும்; ஐப்பசியில் மண் உருகப் பெய்யும் * புரட்டாசி விதை ஆகாது; ஐப்பசி நடவு ஆகாது * புரட்டாசியில் வில் போட்டால் புனல் அற்றுப் போகும் * புரட்டாசி வெயில் பொன் உருகக் காய்ந்து மண் உருகப் பெய்யும் * புரட்டாசி வெயிலில் பொன் உருகும் * புரட்டிப் புரட்டி உதைக்கிற போதும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றான் * புரண்டும் பத்து நாள்; மருண்டும் பத்து நாள்; பின்னையும் பத்து நாள் * புரவி இல்லாப் படை போல * புரளன் கரை ஏறமாட்டான் * புராண வைராக்கியம் * புரிந்ததா மட்டைக்கு இரண்டு கீற்று என்று? * புருவத்தில் பட்டால் கரிக்குமோ? கண்ணில் பட்டால் கரிக்குமோ? * புருஷக் கைம்பெண் * புருஷன் அடிக்கக் கொழுந்தனைக் கோபித்தது போல * புருஷன் அடித்தது பெரிது அல்ல; சக்களத்தி சிரித்ததுதான் கோபம் * புருஷன் அழைப்புக்கு சரணடைபவளே பொண்டாட்டி. * புருஷன் இல்லாமல் பிள்ளை பெறலாமா? * புருஷன் உத்தரவிட்டால் பொண்டாட்டி அடங்கித்தான் ஆகவேண்டும். * புருஷன் உயிரோடு இருக்க பொண்டாட்டி தாலி அறுத்தாற்போல * புருஷன் காலில் விழுந்தால் செல்வம் தானாக வரும். * புருஷன் கூப்பிட்டா பொண்டாட்டி போகத்தானே வேணும். * புருஷன் செத்தால் பொண்டாட்டி தாலியை அறுத்துத்தான் ஆகவேண்டும். * புருஷன் செத்தால் விதவை. பொண்டாட்டி செத்தால் புதுமாப்பிள்ளை. * புருஷன் செத்தால் வெட்கம்; பிள்ளை செத்தால் துக்கம் * புருஷன் பொண்டாட்டி விவகாரத்திற்குள் மாற்றான் நுழைந்தால் போல * புருஷன் வலு இருந்தால் பெண்டாட்டி குப்பை மேடு ஏறிச் சண்டை போடுவாள் * புருஷனுக்கு ஏற்ற மாராப்பு * புருஷனைப் பார்க்கும்போது தாலி எங்கே என்று தேடினாளாம் * புருஷனை வைத்துக் கொண்டு அவிசாரி போவது போல் * புல் அற உழாதே; பயிருக்கு வேலி கட்டாதே * புல் உள்ள இடத்தில் மேயாது; தண்ணீர் உள்ள இடத்தில் குடிக்க ஒட்டாது * புல் என்றாலும் புருஷன்; கல் என்றாலும் கணவன் * புல்லனுக்கு எது சொன்னாலும் கேளான் * புல்லனுக்கு நல்லது சொன்னால் புண்ணிலே கோல் இட்ட கதை * புல்லும் பூமியும் உள்ள மட்டும் என் நிலத்தை அநுபோகம் பண் * புல்லும் பூமியும் கல்லும் காவேரியும் உள்ள மட்டும் * புல்லூரோ, நெல்லூரோ? * புல்லைத் தின்னும் மாடுபோலப் புலியைத் தின்னும் செந்நாய் உதவுமா? * புல்லோருக்கு நல்லோர் சொன்ன பொருளாகி விட்டது * புல் விற்கிற கடையிலே பூ விற்கிறது * புலவர் இல்லாத சபையும் அரசன் இல்லாத நாடும் பாழ் * புலவர் வறுமை பூமியிலும் பெரிது * புலவருக்கு வெண்பாப் புலி * புலி அடிக்கும் முன்னே கிலி அடிக்கும் * புலி இருக்கிற காட்டில் பசு போய்த் தானே மேயும்? * புலி இருந்த குகையில் போகப் பயப்படுகிறதா? * புலி இளைத்தாலும் புல்லைத் தின்னாது * புலி ஏகாதசி விரதம் பிடித்தது போல * புலிக் காட்டிலே புகுந்த மான் போல * புலிக்கு அஞ்சாதவன் படைக்கு அஞ்சான் * புலிக்கு அரிய உணவைப் பூனை புசிக்குமோ? * புலிக்குத் தன் காடு பிறவி காடு இல்லை * புலிக்குத் தன் காடு வேற்றுக் காடு உண்டா? * புலிக்குப் பயந்தவர்கள் எல்லாரும் என்மேல் படுத்துக் கொள்ளுங்கள் * புலிக்குப் பயந்து பூனை புழுக்கையை மூடுமாம் * புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா? * புலிக்குப் பிறந்தது நகம் இல்லாமல் போகுமா? * புலிக்குப் புதர் துணை; புதருக்குப் புலி துணை * புலிக் கூட்டத்தில் மான் அகப்பட்டது போல * புலி குத்தின சூரி என்று கையில் எடுத்தாலும் போதும்; பூனை குத்தின சுளுக்கி என்று கையில் எடுத்தால் பெருமையா? * புலி செவி திருகிய மத களிறு * புலி நகம் படாவிட்டாலும் அதன் மீசை குத்தினாலும் விஷம் * புலிப் பாய்ச்சல் பாய்கிறான் * புலிப்பால் குடித்தவன் போல் இருக்கிறான் * புலிப்பால் வேண்டுமானாலும் கொண்டு வருவான் * புலிப்பாலைக் கொணர்ந்தவன் எலிப்பாலுக்கு அலைந்தானாம் * புலி பசித்தால் புல்லைத் தின்னுமா? * புலி பதுங்கிப் பாயும் * புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம் * புலி புலி என்று ஏமாற்றுவது போல * புலிமேல் வீச எடுத்த கத்தியைப் பூனைமேல் வீசுகிறதா? * புலியின் கைப்பட்ட பாலகனைப் போல * புலியின் முகத்தில் உண்ணி எடுக்கலாமா? * புலியும் பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிக்க * புலியும் பசுவும் பொருந்தி வாழ்ந்தாற்போல * புலியூருக்குப் பயந்து நரியூருக்கு வந்தேன்; நரியூரும் புலியூராய்ப் போயிற்று * புலியூருக்குப் பயந்து புத்தூருக்குப் போனால் புத்தூரும் புலியூரான கதை * புலியூரை விட்டு எலியூருக்குப் போக, எலியூரும் புலியூர் ஆனது போல * புலியை இடறின சிதடன் போல * புலியைக் கண்ட மான் போல * புலியைக் கண்டால் கிலி * புலியைப் பார்த்த நரி சூடிக் கொண்டது போல * புலியை விடக் கிலி பெரிது * புலி வயிற்றில் பிறந்தால் நகம் இல்லாமல் போகுமா? * புலையனுக்குப் பூமுடி பொறுக்குமா? * புலையனுக்கு வாக்குச் சுத்தியும் ஆணையும் இல்லை * புலையாடியும் பொருளைத் தேடு; பொருள் வந்து புலையை நீக்கும் * புலையும் கொலையும் களவும் தவிர் * புவி அரசர் போற்றும் கவி அரசர் கம்பர் * புழுங்கிப் புழுங்கி மா இடித்தாலும் புழுக்கைச்சிக்கு ஒரு கொழுக்கட்டை * புழுத்த சரக்கு; கொழுத்த பணம் * புழுத்த நாய் குறுக்கே போகாது * புழுதி உண்டானால் பழுது இல்லை * புழுவும் புரளும் * புழைக்கடைக் கீரை மருந்துக்கு உதவாது * புழைக்கடை மருந்து சுவைக்கு உதவாது * புள்ளிக் கணக்கன் பள்ளிக்கு ஆவானா? * புள்ளிக் கணக்குப் பள்ளிக்கு உதவாது * புள்ளிக்காரன் கணக்குப் பள்ளிக்கு உதவாது * புள்ளிப் பொறி பாய்ந்த மூங்கில் கொள்ளிச் சாம்பல் ஆனாற்போல * புள்ளும் புறாவும் இரை தின்னா * புளி ஆயிரம், போந்து ஆயிரம் * புளி எத்தனை தூக்கு? ஒரே தூக்கு * புளி ஏப்பக்காரனும் பசி ஏப்பக்காரனும் * புளித்த காய்க்குப் புளி யுகுத்துவாயோ? * புளியங்காய்க்குப் புளிப்புப் புகுத விட்டால் வருமா? * புளியங் கொட்டைக்குச் சனி மூலையா? * புளியங் கொம்பைப் பிடிக்கப் போகிறது புத்தி * புளியந் தோடும் பழமும் போல * புளியம் பழத்துக்குப் புளிப்புப் புகுதவிட வேணுமா? * புளியம் பழமும் ஓடும் போல * புளிய மரத்தில் ஏறினவன் நாக்கு எரிவு காணாமுன் இறங்குவானா? * புளிய மரத்தில் ஏறினவன் பல் கூசினால் இறங்குவான் * புளிய மரத்துப் பிசாசு பிள்ளையாரையும் பிடித்ததாம் * புளிய மரத்தைக் கண்டால் வாயும் நில்லாது; வீதியிலே போகிற நாயைக் கண்டால் கையும் நில்லாது * புளியும் ஓடும் போல் ஒட்டாமல் இருக்கிறது * புளி வற்றினால் கரைக்கலாம்; பிஞ்சு வற்றினால் கரைக்கலாமா? * புளுகினாலும் பொருந்தப் புளுக வேண்டும் * புற்றில் ஆந்தை விழிப்பது போல விழிக்கிறான் * புற்றில் ஈசல் புறப்பட்டது போல * புற்றில் ஈசல் புறப்பட்டாலும் மண்ணில் கறையான் கூடினாலும் மழை வரவே வரும் * புற்றில் கால் இட்டாற் போல * புற்றில் கிடந்த புடையன் எழுந்தது போல * புற்றிலிருந்து ஈசல் புறப்பட்டது போல * புற்று அடிமண் மருந்தும் ஆகும் * புற்று கண்டு கிணறு வெட்டு * புறக்குடத்துத் தண்ணீர் போல * புறக் குற்றம் அறியப் பிடரியிலே கண் * புற மடையில் பொலியைத்துவி அடைக்கப் பார்த்தானாம் * புறமுதுகு காட்டி ஓடாதே * புறாவுக்கு எறிந்த கல்லை மடியில் கட்டுகிறதா? * புன்சிரிப்புக்கு மருந்து சாப்பிடப் போய் உள்ள சிரிப்பும் போச்சுதாம் * புன்டெயிற் புதியது; நன்செயிற் பழையது * புன்னாலைக் கட்டுவன் பாழ்ப்பட்டுப் போவார் * புஷ்பம் கொடுத்த புண்ணியவதி * புஸ்தகம் ஹஸ்த பூஷணம் ==பூ== * பூ இல்லாக் கொண்டை புலம்பித் தவிக்கிறதோ? * பூ இல்லாமல் மாலை கோத்துப் புருஷன் இல்லாமல் பின்ளை பெறுகிறது போல * பூ உதிரப் பிஞ்சு உதிரக் காய் உதிரக் கனி உதிர * பூ உள்ள மங்கையாம், பொற்கொடியாம், போன இடம் எல்லாம் செருப்படியாம் * பூக்கடைக்கு விளம்பரம் தேவையா? * பூச்சாண்டி காட்டுதல் * பூச்சி காட்டப் போய்த் தான் பயந்தாற் போல * பூச்சி காட்டப் போய்ப் பேய் பிடித்த கதை * பூச்சி பூச்சி என்றால் புழுக்கை தலைமேல் ஏறும் * பூச்சி பூச்சி என்றாளாம் பூலோகத்திலே; அவளே போய் மாட்டிக் கொண்டாளாம் சாலகத்திலே * பூச்சி பூச்சி என்னும் கிளி பூனை வந்தால் சீச்சுக் கீச்சு என்னுமாம் * பூச்சி மரிக்கிறது இல்லை; புழுவும் சாகிறதில்லை * பூச்சூட்ட அத்தை இல்லை; போரிட அத்தை உண்டு * பூசணிக்காய் அத்தனை முத்தைக் காதில் ஏற்றுகிறதா? மூக்கில் ஏற்றுகிறதா? * பூசணிக்காய் அத்தனை முத்தைப் போட்டுக் கொள்கிறது எங்கே? * பூசணிக்காய் அத்தனையும் சதை * பூசணிக்காய் அழுகினது போல * பூசணிக்காய் எடுத்தவனைத் தோளிலே காணலாம் * பூசணிக்காய்க்கும் புடலங்காய்க்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறாய் * பூசணிக்காய் களவாடினவன் தோளைத் தொட்டுப் பார்த்துக் கொண்ட கதைபோல * பூசணிக்காய்ப் பருமன் முத்து; அதைக் காதில் தொங்கவிடலாமா? மூக்கில் தொங்க விடலாமா? * பூசணிக்காய் போகிற இடம் தெரியாது; கடுகு போகிறதை ஆராய்வார் * பூசப் பழையது பூனைக்கும் ஆகாது * பூசப் பூசப் பொன் நிறம்; தின்னத் தின்னத் தன்னிறம் * பூசாரி ஆலய மணியை அடித்தால் ஆனை தெரு மணியைத் தானே அடிக்கும்? * பூசாரி பாட்டுக்குப் பின்பாட்டு இல்லை * பூசாரி புளுகும் புலவன் புளுகும் ஆசாரி புளுகில் அரைப் புளுக்குக்கு ஆகாது * பூசாரி பூ முடிக்கப் போனானாம்; பூவாலங்காடு பலாக்காடாய்ப் போச்சுதாம் * பூசாரி பெண்டாட்டியைப் பேய் பிடித்த கதை * பூசுவது தஞ்சாவூர் மஞ்சளாம்; அதைக் கழுவுவது பாலாற்றுக் கரைத் தண்ணீராம் * பூசை வளர்ந்தது போச்சு * பூசை வேளையில் கரடி விட்டு ஒட்டியது போல் * பூட்டிக் சுழற்றினால் பறைச்சி; பூட்டாமலே இருந்தால் துரைச்சி * பூட்டிப் புசிக்காமல் புதைப்பார்; ஈயைப் போல் ஈட்டி இழப்பார் * பூட்டும் திறப்பும் போல * பூண்டிப் பொத்தறை, ஏண்டி கத்தறாய்? * பூண்டியில் விளையாடும் புலிக்குட்டிப் பசங்கள் * பூணத் தெரிந்தால் போதுமா? பேணத் தெரிய வேண்டாமா? * பூணாதார் பூண்டால் பூஷணமும் விழுந்து அழும் * பூத்தது என்றால் காய்த்தது என்பது போல * பூத்தானம் ஆன பிள்ளை ஆத்தாளைத் தாலி கட்டிற்றாம் * பூத்தானம் ஆன பிள்ளை பிறந்து பூவால் அடிபட்டுச் செத்தது * பூத்துச் சொரியப் பொறுப்பார்கள்; முட்டிக் கட்டக் கலங்குவார்கள் * பூத உடம்பு போனால் புகழ் உடம்பு * பூதலம் தன்னில் இவ்வூர் புண்ணியம் என் செய்ததோ? * பூதலம் யாவும் போற்றும் முச்சுடர் * பூப்பட்டால் கொப்புளிக்கும் பொன்னுத் திருமேனி * பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது * பூமி அதிர நடவாத புண்ணியவான் * பூமி ஆளலாம் என்று மனப்பால் குடிக்கிறது போல * பூமி கிருத்தி உண் * பூமியில் வரகு கொடுத்தால் கொடுக்கலாம்; இல்லாவிட்டால் ராஜன் கொடுக்க வேண்டும் * பூமியைப் போலப் பொறுமை வேண்டும் * பூர்வ சேஷ்டை போச்சுதோ, இருக்கிறதோ என்று பார்த்தானாம் * பூர்ளோத்தரம் மேரு சாத்திரம் போல் இருக்கிறது * பூராடக்காரன் ஊசாடத் தீரும் * பூராடக்காரனோடு போராட முடியாது * பூராடக்காரி ஊசாட ஊசாடப் பொருள் தொலையும் * பூராடத்தன் அப்பன் ஊராடான் * பூராடத்திலே பிறந்தவளுக்கு நூல் ஆகாது * பூராடத்தின் கழுத்தில் நூல் ஆடாது * பூராயமாய் வேலை கற்றுக் கொள்ள வேண்டும் * பூரி இல்லாத கல்யாணமா? * பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் * பூலு அம்மின ஊருல கட்டிலு அம்ம தகுனா? * பூலோகத்தார் வாயை மூடக் கூடுமா? * பூலோக முதலியார் பட்டம், புகுந்து பார்த்தால் பொட்டல் * பூவரசு இருக்கப் பொன்னுக்கு அழுவானேன்? * பூவிரிந்து கெட்டது; வாய் மலர்ந்து கெட்டது * பூவிலே பூ பூனைப் பூ * பூ விழுந்த கண்ணிலே கோலும் குத்தியது * பூவிற்ற ஊரிலே கட்டை விற்கத் தகுமா? * பூ விற்ற கடையிலே புல் விற்றது போல * பூ விற்ற கடையிலே புல் விற்கவும், புலி இருந்த காட்டிலே பூனை இருக்கவும், சிங்கம் இருந்த குகையிலே நரி இருக்கவும், ஆனை ஏறினவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே * பூ விற்ற காசு மணக்குமா? புலால் விற்ற காசு நாறுமா? * பூ விற்றவளைப் பொன் விற்கப் பண்ணுவேன் * பூவுக்கும் உண்டு புது மணம் * பூவும் மணமும் போல * பூவைத்த மங்கையாம், பொற் கொடியாம், போன இடமெல்லாம் செருப்படியாம் * பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெற்றது போல * பூனியல் தன் வாயால் கெட்டது போல * பூனை இளைத்தால் எலி சுலவிக் களிக்கும்மாம் * பூனை உள்ள இடத்திலே எலி பேரன் பேத்தி எடுக்கிறது * பூனை எச்சில் புலவனுக்குக் கூட ஆகாது; நாய் எச்சில் நாயகனுக்கு ஆகும் * பூனைக்கு இல்லை தானமும் தவமும் * பூனைக்கு ஒரு சூடு போடுவது போலப் புலிக்கும் ஒரு சூடு போடு * பூனைக்கு ஒன்பது இடத்திலே உயிர் * பூனைக்குக் கும்மாளம் வந்தால் பீற்றல் பாயைச் சுரண்டுமாம் * பூனைக் குட்டிக்குச் சிம்மாளம்; ஓலைப் பாய்க்குக் கேடு * பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம் * பூனைக்குச் சிங்கம் பின் வாங்குமா? * பூனைக்குச் சிம்மாளம் வந்தால் பீற்றல் பாயில் புரளுமாம் * பூனைக்குத் தன் குட்டி பொன் குட்டி * பூனைக்குப் பயந்தவன் ஆனையை எதிர்த்துப் போனானாம் * பூனைக்குப் பயந்திருப்பாள்; புலிக்குத் துணிந்திருப்பாள் * பூனைக்கு மருந்து வாங்க ஆனையை விற்பதா? * பூனைக்கு மீன் இருக்கப் புளியங்காயைத் தின்றதாம் * பூனைக்கு யார் மணி கட்டுவது? * பூனை கட்டும் தோழத்தில் ஆனை கட்டலாமா? * பூனை கண்ணை மூடினால் உலகமே அஸ்தமித்து விடுமா? * பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்ட தென்று நினைக்குமாம் * பூனை குட்டி போட்டாற்போல் தூக்கிக் கொண்டு அலைகிறான் * பூனை குட்டியைத் தூக்கிக் கொண்டு போவது போல * பூனை குண்டு சட்டியில் தலையை விட்டுக் கொண்டு பூலோகம் எல்லாம் இருண்டு போச்சென்று நினைக்குமாம் * பூனைக் குத்தின சுளுக்கி என்று கையில் எடுத்தால் பெருமையா? * பூனை கொன்ற பாவம் உன்னோடே; வெல்லம் தின்ற பாவம் என்னோடே * பூனை சிரித்ததாம்; எலி பெண்டுக்கு அழைத்ததாம் * பூனை செய்கிறது துடுக்கு; அதை அடித்தால் பாவம் * பூனை நோஞ்சல் ஆனாலும் சகுனத்தடையில் குறைவு இல்லை * பூனை பால் குடிக்கிறது போல * பூனை பிராமண போஜனம் பண்ணுகிறது என்று பூணூல் போட்டுக் கொண்டதாம் எலி * பூனை பிராமண போசனம் பண்ணுகிறேன் என்று பூணூல் போட்டுக் கொண்டதாம் * பூனை புறக்கடை, நாய் நடு வீடு * பூனை போல் அடங்கினான்; புலிபோல் பாய்ந்தான் * பூனை போல் இருந்து புலி போல் பாயும் * பூனை போல் ஒடுங்கி ஆனை போல் ஆக்கிரமிக்கிறது * பூனை போல நடுங்கிப் புலி போலப் பாய்வான் * பூனை போன்ற புருஷனுக்கு வாழ்க்கைப் பட்ட சுண்டெலிப் பெண் போல் * பூனை மயிர் ஆனாலும் பிடுங்கினது மிச்சம் * பூனைமுன் கிளிபோல் புலம்பித் தவிக்கிறது * பூனையின் அதிர்ஷ்டம், உறி அறுந்து விழுந்தது * பூனையும் எலியும் போல் * பூனையைக் கண்ட கிளிபோல * பூனையைக் கண்டு புலி அஞ்சுமா? * பூனையைக் கொன்ற பாவம் உனக்கு; பிடி வெல்லம் தின்ற பலன் எனக்கு * பூனையைத் தான் வீட்டுப் புலி என்றும் எலியரசன் என்றும் சொல்வார்கள் * பூனையை மடியில் வைத்துக் கொண்டு சகுனம் பார்ப்பது போல் * பூனையை வளர்த்தால் பொல்லாத வழி; நாயை வளர்த்தால் நல்ல வழி * பூனை வயிற்றில் ஆனை பிறந்தது போல * பூனை வாய் எலிபோல் புலம்பித் தவிக்கிறது * பூனை வாயில் அகப்பட்டி எலி போல் * பூனை விற்ற காசுக்கு ஆனை வாங்க இயலுமா? ==பெ== * பெண் அவளது கழுத்தில் தாலி கட்டியவனுக்கு மட்டும் தான் சொந்தம் * பெண் என்றால் பேயும் இரங்கும். * பெண் கல்யாண மேடையில் அமர தாலி கட்டியது போல * பெண் யாரை மதிக்காவிட்டாலும் தாலி கட்டிய புருஷனை மதித்துத்தான் ஆகவேண்டும். * பெண்புத்தி பின்புத்தி * பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு. * பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும். * பெண்ணென்று பிறந்த போது புருஷன் பிறந்திருப்பான். * பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி. * பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும். * பெருமையும் சிறுமையும் வாயால் வரும். * பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு. ==பே== * பேசப் பேச மாசு அறும். * பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை. * பேராசை பெருநட்டம். * பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ் ==பை== * பையனாப் பொறந்தா ஒற்றை வாழ்க்கை; பொண்ணாப் பொறந்தா இரட்டை வாழ்க்கை (பொறந்த வீடு, புகுந்த வீடு) ==பொ== * பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய். * பொண்டாட்டி தாலியே புருஷன் ஆயுளை கெட்டியாக்கும். * பொண்டாட்டியின் அரிப்பை புருஷனே தீர்த்துவைக்க வேண்டும். * பொண்டாட்டியின் கடமை புருஷனுக்காக வாழ்வதே. * பொண்டாட்டிக்கு புருஷனும் அவன் கட்டுன தாலியுந்தான் முக்கியம். * பொண்டாட்டினா புருஷன் கிழிச்ச கோட்டை தாண்டக்கூடாது. * பொண்ணா பொறந்தா ஒருநாள் ஆம்பளைக் கிட்ட கழுத்தை நீட்டிக்கணும். அவன் ஒன்னு, ரெண்டு, மூனு முடிச்சுப் போட்டா மாட்டிக்கணும். * பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை, மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை. * பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது. * பொறந்த வீட்டு உறவு தாலி கட்டும் வரை. புகுந்த வீட்டு உறவு சமாதி கட்டும் வரை. * பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார். * பொறி வென்றவனே அறிவின் குருவாம். * [[பொறுமை]] கடலினும் பெரிது. * பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும். * பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது. ==போ== * போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. * போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா? * போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன். ==ம== * மகன் கட்டிய தாலியை மாமியார் அறுத்தது போல * மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கவேணும். * மடிவிதையைவிட பிடிவிதை முளைக்கும் * மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம். * மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி. * மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா? * மண்டையுள்ள வரை சளிபோகாது. * மண்ணுக்குப் பூசிப்பார்; பெண்ணுக்குப் பூட்டிப்பார்! * மணாளனே மங்கையின் பாக்கியம் * மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம். * மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு. * மரத் தாலி கட்டி அடிக்கிறது. * மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும். * மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான். * மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். * மருந்து கால் பாகம், மதி முக்கால் பாகம். * மருந்தும் விருந்தும் மூன்று வேளை. * மருந்தே யாயினும் விருந்தோடு உண். * மலிந்த சரக்குக் கடைத்தெருவுக்கு வரும். * மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா? * மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல்தான் விழும். * மவுனம் கலக நாசம் * மழையடி புஞ்சை மதகடி நஞ்சை * மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும். * மழை விட்டாலும் தூவானம் விடவில்லை. * மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே. * மனமுரண்டிற்கு மருந்தில்லை. * மனம் உண்டானால் இடம் உண்டு. * மனந்தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை. * மனம் போல வாழ்வு. * மன்னன் எப்படியோ மன்னுயிர் அப்படி. * மன்னுயிரைத் தன்னுயிர்போல் நினை. * மனைவியில்லாத புருஷன் அரை மனிதன் * மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் * மனைவி இறந்தால் மணம், மகள் இறந்தால் பிணம் * மனைவியின் கௌரவம் கணவனுக்கு அடிபணிந்து நடப்பதில் தான் இருக்கிறது. * மயிலைக் கண்டு வான்கோழி ஆடினாற் போல ==மா== * மாடம் இடிந்தால் கூடம். * மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா? * மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா? * மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது. * மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போல பொண்ணுக்கு தாலிக்கயிறு * மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும். * மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம். * மாப்பிள்ளை மணப்பெண்ணுக்கு தாலி கட்டிமுடிந்த பின்னர் கல்யாணத்தை நிறுத்தியது போல * மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான். * மாமியாரும் நாத்தனாரும் புதுப்பெண்ணின் எதிர்ப்படையோ? * மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம். * மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை. * மாரடித்த கூலி மடி மேலே. * மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி. * மாரி யல்லது காரியம் இல்லை. * மாவுக்குத் தக்க பணியாரம். * மாற்றானுக்கு இடங் கொடேல். * மானம் பெரிதோ? உயிர் பெரிதோ? * மானைக் காட்டி மானைப் பிடிப்பார். * மாலை பூத்துருச்சு (திருமணம் நடக்கவுள்ளது) ==மி== * மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது. * மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ? * மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை. ==மீ== * மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது. * மீ தூண் விரும்பேல். ==மு== * முகத்துக்கு முகம் கண்ணாடி * முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா? * முகூர்த்த நேரத்தில் தாலி காணாமற்போனது போல * முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும். * முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா * முதல் கோணல் முற்றுங் கோணல் * முத்தால் நத்தைப் பெருமைப்படும், மூடர் எத்தாலும் பெருமை படார். * முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை. * முருங்கை பருத்தால் தூணாகுமா? * முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும். * முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். * முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது? * முன் ஏர் போன வழிப் பின் ஏர் * முன்னத்தி ஏருக்குப் பின்னாடிதான் பின்னத்தி ஏரும் போகும் * முன்கை நீண்டால் முழங்கை நீளும். * முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா? * முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ? * முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன் * முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு * முள் முடிச்சைக் கூட கழற்றிவிடலாம். மூன்று முடிச்சைக் கழற்ற ஆளில்லை. ==மூ== * மூட கூட்டுறவு முழுதும் அபாயம். * மூத்தோர் சொல் வார்த்தை அமுதம். * மூன்று முடிச்சு கழுத்திலே விழட்டும். முப்பது இலைகள் குப்பையிலே விழட்டும். ==மெ== * மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை. * மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும். ==மே== * மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம் * மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும். ==மொ== * மொழி தப்பினவன் வழி தப்பினவன் ==மோ== * மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள். == மெள== * மெளனம் மலையைச் சாதிக்கும். == யா == * யானை அசைந்து கொண்டே தின்னும், வீடு நின்று கொண்டே தின்னும். ==வ== * வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும். * வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது. * வடக்கே கருத்தால் மழை வரும். * வட்டி ஆசை முதலுக்கு கேடு. * வணங்கின முள் பிழைக்கும். * வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு. * வருந்தினால் வாராதது இல்லை. * வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். * வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. * வலுத்தவனுக்கு வாழை; இளைத்தவனுக்கு எள்ளு. * வலுவில் வந்தவள் கிழவி. * வளவனாயினும் அளவறிந் தளித்துண் * வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று. ==வா== * வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும் * வாத்தியாரிடம் தோற்காத மாணவன், கணவனிடம் தோற்காத மனைவி வென்றும் பிரயோசனமில்லை. * வாயுள்ள பிள்ளை பிழைக்கும். * வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு. * வாய்தான் இருக்கிறது வாய்க்கரிசிக்கு வழியில்லை. * வாய் நல்லதானால் ஊர் நல்லது. * வாய் பார்த்தவள் வாழ்விழந்தாள்;அம்பலம் பார்த்தவள் பெண்டிழந்தாள். * வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக் கூடாது. * வாய் மதத்தால் வாழ்வு இழக்கும். * வால் நீண்ட கருங்குருவி வலமிருந்து இடம் போனால் கால் முறிந்த கிழவியும் குமரி ஆவாளே * வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான். * வாழ்வும் தாழ்வும் சில காலம். * வாழாவெட்டியின் நிலை காற்றில் அகப்பட்ட காகிதம் போன்றது. * வாழாவெட்டி கழுத்துத்தாலி ஊரார் கண்ணைக் குத்தும். ==வி== * விக்க விக்கச் சோறு போட்டுக் கக் சக் கக்க வேலை வாங்க வேணும். * விக்குகிற வாய்க்கு விளாங்காய்; விழுகின்ற இடத்துக்கு அரிவாள் மனை * விகட கவியா? * விச்சுளி வலமானால் நிச்சயம் வாழ்வு உண்டாம். * விசாகத்தில் மழை; பயிர்களில் புழு. * விசாரம் முற்றினால் வியாதி. * விசிறிக் காதும் வேள்விப் பணமும் விரைவில் வரும் * விசிறிக்குக் காற்றும் வேள்விக்குப் பணமும் எங்கிருந்தாலும் வரும். * விசும்பில் துளி விழின் அல்லது பசும்புல் தலை காண்பது அரிது. * விசும்பு முட்டான கோலும் துரும்பு முட்டத் தீரும். * விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்; தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும். * விசுவாசக் கொக்கு நடமாடிச் செத்ததாம். * விசுவாசப் பூனை கருவாட்டைத் தூக்கிக் கொண்டு போகிறதாம். * விசுவாசம் இருந்தால் வேசியும் பிழைப்பாள்; நிசம் இருந்தால் நீசனும் தழைப்பான். * விசுவாசம் கெட்ட நாயே! * விட்ட இடம் பட்டணம்; விழுந்த இடம் சுடுகாடு. * விட்ட குறை. தொட்டகுறை * விட்டத்தில் இருக்கிற பூனை இங்கிட்டுத் தாவுகிறதோ, அங்கிட்டுத் தாவுகிறதோ? * விட்டத்துக்கு எட்டாம் நாள் அட்டமி. * விட்டதடி உன் ஆசை விளாம் பழத்து ஓட்டோடே. * விட்டதே நம் உறவு, வெண்கலத்தில் ஓசை போல. * விட்ட பாம்பும் பட்டுப் போகும் * விட்டில் பூச்சியைப் போல் பறந்த திரிகிறான். * விட்டில் பூச்சி விளக்கில் விழுவதுபோல. * விட்டு அடித்தால் என்ன? கட்டி அடித்தால் என்ன? * விட்டு அடிக்கிறதிலும் தொட்டு அலை. * விட்டு அறுத்தாலும் ஆகாது என்று ஒட்ட அறுத்திடுவேன் * விட்டுக் கெட்டது காது; விடாமல் கெட்டது கண். * விட்டுச் சொன்னால் குட்டுக் குலையும். * விட்டு விட்டாலும் ஒட்டிக் கொண்டு வருகிறான். * விட்டு விட்டுப் பெய்கிற மழையிலும் விடாமல் பெய்கிற தூவானம் நல்லது. * விட்டு வைத்த கடனும் பெற்று வைத்த பிள்ளையும் எங்கும் போகா * விடக்கே ஆயினும் வடிக்கு ஆகாது. * விடாச் சுரத்துக்கு விஷ்ணுக் கரந்தை. * விடாத மழை பெய்தாலும் படாத பாடு பட வேண்டும். * விடாத மழையால் இல்லி ஒழுக்கு அடைபடும். * விடா முன்டனும் கொடாக் கண்டனும். * விடாய் தீரச் கங்க ஸ்நானம் பண்ணிப் பாவம் போகுமாப் போலே. * விடிக்கப் போன இடத்தில் விளாம் பழம் கிடைத்தது போல். * விடிகிற மட்டும் இறைத்தவனும் சாலை உடைத்தவனும் சரியா? * விடிந்ததும் பெண்ணுக்கு முக்காடோ? * விடிந்தால் தெரியும் மாப்பிள்னை குருடும், பெண் குருடும் * விடிந்தால் தெரியும் வெளிச்சம். * விடியக் கல்யாணம்; பிடி தாம்பூலம். * விடிய விடிய இறைக்க, விடித்த பிறகு உடைக்க. * விடிய விடியக் கதை கேட்டுச் சீதைக்கு ராமன் சிற்றப்பன் என்றானாம். * விடிய விடியக் கதை கேட்டு ராமனுக்குச் சீதை என்ன வேண்டும் என்றானாம் * விடிய விடியத் துரத்தியும் ஆண் கழுதையாகத்தான் முடிந்தது * விடிய விடியத் தேய்த்தாலும் கறுப்பு நாய் வெள்ளை நாய் ஆகுமா? * விடிய விடியப் பாடுபட்டும் விளக்குக்கு எண்ணெய் இல்லை * விடிய விடிய மழை பெய்தாலும் ஒட்டாஞ்சில்லு முளைக்காது (ஒட்டாங் கிளிஞ்சல். கொட்டாங்கச்சி.) * விடிய விடிய ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன ஆகவேணும் என்றானாம். * விடியற் காலத்தில் கல்யாணம்; பிடியடா பயலே பாக்கு வெற்றிலை * விடியற்காலைத் தூக்கம் வெல்லம் போல * விடியாமல் உலை வைத்து வடியாமல் விடுவேனோ? * விடியா மூஞ்சி வேலைக்குப் போனால் வேலை கிடைத்தாலும் கூலி கிடைக்காது * விடியும் மட்டும் இறைத்தவனும் விடிந்த பின்பு சாலை உடைத்தவனும் சரி * விடியும் மட்டும் குரைத்தாலும் வீட்டு நாய் வேட்டை நாய் ஆக முடியுமா? * விடியும் மட்டும் மழை பெய்தாலும் ஒட்டாங் கிளிஞ்சில் கரையுமா? * விடியும் மட்டும் மழை பெய்தாலும் ஒட்டாஞ்சில்லுக் கரையுமா?(ஒட்டாங் கிளிஞ்சல்.) * விடு விடு சங்கிலி, வேப்பஞ் சங்கிலி, விட்டால் குடி கெட்டும் போம். * விடை தனிக்கு அஞ்சாது * விண் ஏற தப்பினாலும் கண் ஏறு தப்பாது (பொய்த்தாலும் பொய்க்காது.) * விண் காட்டப் போனவன் கண் காட்ட வந்தானாம் * விண் பொய்த்தால் மண் பொய்க்கும் * விண்டு அழுத பிள்ளையைக் கொண்டு அணைப்பா இல்லை * விண்ணாண எங்கே கிண்ணாரம் எங்கே * விண்ணு மாலைக்குக் கல்யாணம்; விழுந்து கோட்டா சாம்பலா * வின்தொடு கொடுமுடி மேகுவும் வீறளி தென்திசைக் கிரியும் * விண் பொய்த்தால் மண் பொய்க்கும் * விண் வலிதேச, மண் வலிதோ? * விண் விடும் குடிக்கு விண் விடும்; என் பாவி குடிக்கு விண் விடுமா? * வித்தாரக் கள்ளி விறகு ஒடிக்கப் போனாளாம்; கற்றாழை முன் கொத்தோடே தைத்ததாம். * வித்தாரக்கள்ளி வெறகொடிக்கப் போனாளாம், கத்தாள முள்ளு கொத்தோட வந்துச்சாம் * வித்தாரக்காரன் செத்தால் பிழைக்கான். * வித்தியா சாலை விநோத சாலை. * வித்தின்றி விளைச்சல் இல்லை * வித்து இருக்கும் இடத்தில் வேர் இருக்க வேண்டும். * வித்து இல்லாத சம்பிரதாயம், மேலும் இல்லை; கீழும் இல்லை. * வித்து இல்லாமல் மரம் இல்லை; மரம் இல்லாமல் வித்தும் இல்லை. * வித்து இல்லாமல் முளை உண்டாகுமா? * வித்து இன்றிச் சம்பிரதம் இல். * வித்துக்கு விட்ட சுரைக்காய்போல. * வித்துப் பலம் பத்துப் பலம். * வித்துவான் அருமையை விறகு தலையன் அறிவானா? * வித்துவான் அருமையை வித்துவான் அறிய வேண்டுமே.அல்லாமல் விறகு விற்கிறவனா அறியப் போகிறான்? * வித்துவான் கத்துவான். * வித்துவான்களுக்கு எது பெரிது? * வித்துவான் தனவான். * வித்துவானுக்கு ஏது பரதேசம்? (வேற்று நாடு ஏது?) * வித்துவானும் மதயானையும் சரி. * வித்துவானை அடித்தவனும் இல்லை; பெற்ற தாயுடன் போனவனும் இல்லை. * வித்தை அடிக்கிற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பித்து. * வித்தை அடித்தான் தட்டான்; பொன்னிறம் ஆச்சுது கொக்கு * வித்தை அடித்தே செத்த பாம்பு ஆடுது. * வித்தை அடி மாமி, கொத்துதடி கோழி. * வித்தை அடி மாமி, விற்கிறதடி பணியாரம். * வித்தை அழிக்கிற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பத்து. * வித்தை அற்றவன் அழகு, வாசனை இல்லாத முருக்கம்பூப் போல. * வித்தை இல்லாத மாந்தர் விலங்கினும் கடையர். * வித்தை உள்ளவன் தூங்கமாட்டான்; விசாரம் உள்ளவனும் தூங்க மாட்டான். * வித்தை உள்ளவன் பெரியவன். * வித்தைக் கள்ளி மாமியார் விறகொடிக்கப் போனானாம்; கற்றாழை முள் கொத்தோடே தைத்ததாம். * வித்தாரக்கள்ளி வெறகொடிக்கப் போனாளாம், கத்தாள முள்ளு கொத்தோட வந்துச்சாம் * வித்தைக் கள்ளி, விளையாட்டுக் கள்ளி, பாகற்காய் விற்ற பழங்கள்ளி. * வித்தைக்காரப் பெண்பிள்ளை செத்த பாம்பை ஆட்டுகிறாள். * வித்தைக்காரன் தவறி விழுந்தால் அதுவும் ஒரு விளையாட்டு. * வித்தைக்காரன் நாய்க்குக் கற்ற வித்தை எல்லாம் தெரியும். * வித்தைக்குச் சத்துரு விசனம் தரித்திரம். * வித்தைக் குதிரைக்குப் புல்லா? * வித்தை பதினெட்டும் விழல். * வித்தையில் எளிது சூனியம்.பன்னத்திலே எளிது நீற்றுப் பெட்டி. * வித்தையில் வித்தை வகார வித்தை. * வித்தை விரும்பு. * விதி அற்ற நாய்க்கு வில்லி வீரமாம் தாய் வீடு. * விதி அற்ற மாடு கதி வெட்ட புல்லைத் தின்னும். * விதி அற்றவன் வேட்டகத்துக்குப் போவான். * விதி உடையவன் கண்ணுக்கு விளக்காய்த் தெரிந்தது. * விதி உள்ள அகமுடையானுக்கு ரதியாக இருப்பாளாம். * விதி எப்படியோ, மதி அப்படி. * விதி கெட்டவல் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாலும், கட்டக் கொடி கிடைக்காது (யாழ்ப்பாண வழக்கு.) * விதித்த விதியை விட வேறு நடக்குமா?(கிடக்க வேறு விதி.) * விதிப்பயனை வெல்ல முடியுமா? * விதிப்பழத்தை விலை கொடுத்து வாங்குவது போல. * விதி பார்த்து வகுத்த விபத்தை விஷ்ணுவாலும் தடுக்க முடியாது. * விதி போகிற வழியே மதி போகும். * விதி முடிந்தவனை விரியன் கடிக்கும். * விதியின் பயனே பயன். * விதியின் வழியே மதி செல்லும். * விதியை மதியால் தடுக்கலாமா? * விதியை மதியால் வெல்லலாம். * விதியை வெல்லுவார் உண்டோ? * விதிவசம் போல் ஆகும். * விதி வலிது. * விதி வழி மதி செல்லும். * விதி வழி வந்த நிதி சதி செய்து விடும். * விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?(போடக்.. காய்க்குமா? * விதை பாதி வேலை பாதி * விதைக்கு ஏற்ற விளைச்சல். * விதைக்கு விட்டி காய் போல, * விதைக் கூடை எடுக்கையில் பட்டி மாடு தொடர்ந்த கதை. * விதைக் கோட்டையில் எலியை வைத்துக் கட்டலாமா? * விதை நெல்லைத் தின்றவன் விளங்க மாட்டான். * விதைத்ததும் குறுணி, கண்டதும் குறுணி. * விதைத்தால் வரகை விதை; சேவித்தால் வடுகனைச் சேவி. * விதைப்பதன் முன் வேலி அடை * விதை முதல் அகப்பட்டாலும் வேளாண்மையை விடாதே. * விதை முந்தியா, மரம் முந்தியா? * விதையின் தன்மைதானே விளைச்சலில் வரும்? * விதையை அடித்தானாம்; விலவிலே, போய்ப் பட்டதாம், * விதையைக் குற்றித் தின்னு. * விதையை விழுங்கிய கோழி போல் * விந்து விட்டாயோ, நொந்து கெட்டாயோ? * விநயம் இல்லாத வித்தை பயன் இல்லை. * விநாச சாலே விபரீத புத்தி. * விபசாரம் செய்வாரைச் சுட்டாலும் விடமாட்டார். * விபசாரி என்று விமானம் ஏறினாலும் திருடி என்று தெரு வழிப்போக முடியுமா? * வியாச்சியம் சேற்றில் நட்ட கம்பம். * வியாதிக்குப் பத்தியம்: வேதாந்தத்துக்கு வைராக்கியம். * வியாதிக்கு மருந்து உண்டு; விதிக்கு மருந்து உண்டா? * வியாதியிலும் மருந்து கொடியது. * வியாழன் கூடினால் விவாகம் கூடும்(வியாதியாயினும்.) * வியாழன் தெற்கே சூலம். * விரகன் கோசம் கட்டை தட்டிப் போம். * விரதத்திலும் பெரிதோ ஒரு சந்தி? * விரதம் கெட்டாலும் சுகம் தக்க வேண்டும்; சுகம் கெட்டாலும் விரதம் தக்க வேண்டும். * விரல் உதவி விருந்தினர் உதவார். * விரல் உரல் ஆனால் உரல் உத்தரம் ஆகாதா?உரல் என்ன ஆகும்?) * விரல் கண்ணிலே குத்தினது என்று வெட்டி விடுவார்களா? * விரல் சுற்றின் மேல் அம்மி விழுந்ததுபோல்.(உரல் விழுந்தது போல்.) * விரல் நக்கி மோர் குடிப்பது போல. * விரல் நுழைய இடம் உண்டானால் தலையைப் புக விடலாம் * விரல் நுழைய இடம் கொடுத்தால் கூரலை நுழைக்கிறான்.(உலக்கையை, தலையை.) * விரல் போகாத இடத்தில் உரல் போகுமா? * விரலுக்குத் தகுந்த வீக்கம்.(வீக்கந்தான் வீங்கலாம்.) * விரலுக்குமேல் நீணடால் வெட்டி விடவேண்டும் என்கிறாயே! * விரலூண்டு இடம் கொடுத்தால் வீடு எல்லாம் கைக் கொள்கிறதா? * விரலைக் காட்டி உரலை விழுங்குவான். விரித்த ஜமக்காளம். விடியும் மட்டும் கச்சேரி * விரித்து உடுத்தினால் அழுக்குப் படும். * விரித்த உலகில் தெரிந்தவர் சிலர். * விரியன் புரளுகிறது போல. * விருத்தாசலம் போனால் திரட் பாவம் போகும். * விருத்தர நாரீ பதிவ்ரதா. * விருதுக்காகவா வேட்டை ஆடுகிறது? * விருதுகூறி வந்து செடியிலே நுழைகிறது போல. * விருதுப்பட்டிக்குப் போன சனியனை வீட்டுக்கும் வந்து விட்டுப்போ என்றானாம் * விருதுபட்டிச் சனியனை விலைக்கு வாங்கினது போல. * விருந்து இட்டுப் பகையை விளைக்கிறது(இட்டா - பகைமையை.) * விருந்து இல்லாச் சோறு மருந்தோடு ஒக்கும். * விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம். * விருந்துக்காகவா வேட்டை ஆடுவது? * விருந்துக்கு அழைத்து விஷத்தைக் கொடுத்தது போல. * விடுத்துக்கு நான்; பரியப் பணம் அண்ணளைக் கேள். * விருந்தும் மருந்தும் மூன்று நாள்(வேளை, பொழுது.) * விருந்தைப் பண்ணிற் பொருந்தப் பண்ணு. * விருப்பத்தினால் ஆகாதது விம்பினால் ஆகுமா? * விரும்பினால் வேம்பும் கரும்பு ஆகும். * விருஷ்டியில் விதை மேல், * விரை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா(விதை .) * விரைக்கு விட்ட காய் போல.{விதைக்கு.) * விரைக் கோட்டையில் எலியை வைத்துக் கட்டினது போல(விதைக் கோட்டையில் பெருச்சாளி புகுந்தாற் போல.) * விரை முந்தியோ மரம் முந்தியோ?{விதை .) * விரைவில் கருமம் சிதையும் இடராய் விடும். * வில் அடியால் சாகாதது, கல் அடியால் சரகுமா? * வில் அம்பை விடச் சொல் அம்பு கொடியது. * வில் அம்போ, சொல் அம்போ? * வில் இல்லாதவன் அம்பு தேடுவானேன்? * வில்லடிச்சான் கோவிலிலே விளக்கேத்த நேரமில்லையாம், குடமாடிச்சான் கோவிலிலே குத்துவிளக்கேத்த நாதியில்லையாம் * வில்லங்கத்தை விலைக்கு வாங்கினாற் போல. * வில்லுக்குச் சேரன்; சொல்லுக்குக் கீரன், * வில்லுக்கு விஜயன்; சொல்லுக்கு அரிச்சந்திரன். * வில்லுக்கு விஜயன்; சொல்லுக்குக் கீரன். * வில் வளைந்தால் மோசம் தரும் * வில் வளைவதும் பெரியோர்கள் பணிவதும் நல்லதற்கு அடையாளம் அல்ல. * விலக்கக் கூடாத துன்பத்துக்கு விசனப்படாதே. விலங்கும் பறவையும் விதித்த கோடு கடவா, * விலங்கு வேண்டாம்; குட்டையில் மாட்டு என்றது போல, * விலங்கு வேண்டாம்; தொழுவில் இருக்கிறேன், * விலங்கை விட்டுத் தொழுவில் மாட்டிக் கொண்டது போல. * விலா இறச் சிரிப்பார்கள். * விலாங்கு மீன் வழுக்கி ஓடுவது போல. * விலைக்குக் கொண்டு விருதுக்கு வேட்டை ஆடுகிறது. * விலைமகட்கு அழகு மேனி மினுக்குதல். * விலை மோரில் வெண்ணெய் எடுத்துத் தலைமகனுக்குக் கல்யாணம் பண்ணுவான், * விலை மோரில வெண்ணெய் எடுப்பது. * விவேகத்தில் மேன்மை அவிவேகத்தை ஒழித்தல், * விழக்குழி பாய்ச்சுகிறது. * விழலுக்கு இறைத்த நீர் போல. * விழலுக்கு முத்துலை போட்டு இறைத்தேன். * விழிக்கு விழி பாய்ச்சுகிறது * விழித்த முகம் நல்ல முகம். * விழித்தவன் கன்று நாகு கன்று; தூங்கினவன் கன்று கடாக்கன்று. * விழித்து இருக்க விழியைத் தோண்டினாற் போல. * விழியில் குத்தின விரலை அறுப்பார் உண்டோ? * விழுகிற சுவரில் கை வைத்தாற் போல. * விழுகிற பிள்ளைக்கு அரிவாள்மணையை அண்டல் கொடுத்தாற் போல. * விழுங்கின இரகசியம் வயிற்றில் இராது. * விழுந்த இடம் சுடுகாடு. * விழுந்த இடம் பொழுது; விட்ட இடம் விடுதி. * விழுந்தது பாம்பு; கடித்தது மாங்கொட்டை. * விழுந்த பிள்ளையை எடுக்க நேரம் இல்லை. * விழுந்தவன் எழுந்திருந்தால் வெட்கத்துக்கு அஞ்சிச் சிரிப்பான். * விழுந்தவன் சிரித்தான் வெட்கத்துக்கு அஞ்சி. * விழுந்தாரைச் சிரியாத வெந்துக்களும் இல்லை.(பந்துக்களும், யாழ்ப்பாண வழக்கு.) * விழுந்தால் சிரிப்பார்; வேடிக்கை பார்ப்பார். * விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறான். * விழுந்து உடுத்தால் அழுக்குத் தெரியும். * விழுந்தும் கரணம் போட்டேன் என்ற கதை. * விழுந்து விழுந்து சம்பாதிக்கிறான். * விழுந்து விழுந்து புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும். * விள்ளாதது குறையாது; இல்லாதது வராது. * விளக்கில் கொளுத்தின பந்தம் போல. * விளக்கில் விழும் விட்டிற் பூச்சி போல.(விளக்கில் மொய்த்த விட்டிற் பறவை போல.) * விளக்கு இருக்க நெருப்புக்கு அலைவானேன்? * விளக்கு இருக்க மின்மினித் தீக் காய்ந்தவாறே. * விளக்கு இல்லாத வீட்டில் பேய் குடி இருக்கும். * விளக்கு ஏற்றிக் கூடையால் மறைக்கிறது * விளையும் பயிர் முளையில் தெரியும். ==வீ== * வீட்டைக் கட்டிப் பார், கலியாணத்தைச் செய்து பார். * வீழ்வது தோல்வியல்ல; வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி. ==வெ== * வெட்டிக் கெட்டது தென்னை, வெட்டாமல் கெட்டது முருங்கை * வெந்து கெட்டது முருங்கை * வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய் ==வை== * வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. ==வெளி இணைப்புக்கள்== {{விக்கிப்பீடியா}} {{wiktionary}} [[பகுப்பு:மொழி வாரியாக பழமொழிகள்| ]] pp9ou37qhumld6n5ahzgkduyzgh4axo