விக்சனரி
tawiktionary
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.23
case-sensitive
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்சனரி
விக்சனரி பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
jetlag
0
433416
2004599
2004594
2026-10-12T06:28:45Z
Neechalkaran
2512
[[jet lag]] நோக்கி நகர்த்தல்
2004599
wikitext
text/x-wiki
#வழிமாற்று [[jet lag]]
dzv1idtz9nqju225vgymajevquh578h
பேச்சு:jetlag
1
433417
2004597
2026-10-11T16:08:11Z
Neechalkaran
2512
/* ஏற்கனவே பக்கமுள்ளது */ புதிய பகுதி
2004597
wikitext
text/x-wiki
== ஏற்கனவே பக்கமுள்ளது ==
@[[பயனர்:Lpalanisamy|Lpalanisamy]] [[jet lag]] பக்கமுள்ளதால், இப்பக்கத்தை வழிமாற்றிவிடலாமா? -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:08, 11 அக்டோபர் 2026 (UTC)
imvp2kej9ldn3p7i32wxb2pny2ftemp
2004598
2004597
2026-10-11T21:58:48Z
Lpalanisamy
11477
/* ஏற்கனவே பக்கமுள்ளது */ பதில்
2004598
wikitext
text/x-wiki
== ஏற்கனவே பக்கமுள்ளது ==
@[[பயனர்:Lpalanisamy|Lpalanisamy]] [[jet lag]] பக்கமுள்ளதால், இப்பக்கத்தை வழிமாற்றிவிடலாமா? -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:08, 11 அக்டோபர் 2026 (UTC)
:கண்டிப்பாக.
:jet lag என்ற பக்கம் எனக்குத் தெரியாது.
:மிக்க நன்றி. [[பயனர்:Lpalanisamy|லோகநாதன் பழனிசாமி]] ([[பயனர் பேச்சு:Lpalanisamy|பேச்சு]]) 21:58, 11 அக்டோபர் 2026 (UTC)
o9yv74calqyks5nqwol1a5vt8d90xox
கள் விகுதி
0
433418
2004600
2026-10-12T10:30:51Z
நற்றமிழன்13
25924
"கள் என்னும் சொல்: கள் என்னும் விகுதி. இது பற்றி அறிஞர் தெ.பொ. மீ. தம் நூல் ‘தமிழ் மொழி வரலாறு’ என்பதில், ‘சங்க காலத் தமிழ்’ என்னும் பகுதியி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
2004600
wikitext
text/x-wiki
கள் என்னும் சொல்:
கள் என்னும் விகுதி. இது பற்றி அறிஞர் தெ.பொ. மீ. தம் நூல் ‘தமிழ் மொழி வரலாறு’ என்பதில், ‘சங்க காலத் தமிழ்’ என்னும் பகுதியில் என்ன கூறுகிறார்? “ கள் விகுதி: பன்மை விகுதியாகிய ‘கள்’ முதன்முதலில் தொல்காப்பியத்தில் ‘ மக்கள்’ என்ற சொல்லில் இடம் பெறுகிறது( உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே). ஆனால் இச்சொல்லிலுள்ள ‘கள்’ விகுதியை எளிமையாகப் பிரிக்கமுடியாது. பின்னர்த் தொல்காப்பியர் கருத்துப்படி,அஃது அஃறிணையுடன் வருகிறது ( தொல். 654, கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே, கொள்வழி யுடைய பலவறி சொற்கே). அதற்குப் பின்னர் அஃது உயர்திணையுடன் வருகிறது. திருக்குறளில் வரும் ‘மற்றையவர்கள்’(263, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தாம்.) என்னும் ஆட்சியினை நோக்குக. இரட்டைப் பன்மை வடிவங்களான ‘அர்கள்’ (919, ‘’வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் , பூரியர்கள் ஆழும் களறு’’ ) போன்றவற்றின் ஆட்சி மிகுகிறது.
உயர்வு காட்ட ஆண்பால் அல்லது பெண்பாற்சொல்லுடன் ‘ஆர்’ விகுதி சேர்க்கப்படுகிறது. ( எ.டு. அகத்தியனார் மகனார்) ‘ஆர்கள்’ (ஆர்+கள்) என்பது மிகவும் முக்கியமானவர்களைக் குறிக்கும் விகுதியாக வழங்கலாயிற்று.’ ‘இத்துடன் அவர்கள் என்பதும் பெயர்கட்குப் பின்னர் இடம் பெற்றது.’. ( எ.டு. கந்தப்பர் அவர்கள் பக்.292.)’’.
தொல்காப்பியத்தில், சேனாவரையர், ‘ வழூஉக் களைந்து சொற்களை யாக்கிக் கொண்டமையால்”என்றும் ‘சொற்கள்’ என்றும் கூறுகிறார்.
சேனாவரையர்,’’ கள்ளென்னும் ஈற்றவாய் ஆக்கள், குதிரைகள் என நின்றவழிப் பன்மை விளக்கலிற் பலவறி சொல்லாயினவாறு கண்டு கொள்க’’ என்று கள் விகுதி பற்றிக் கூறுகிறார்.
பின்பு வந்த நன்னூலார், கள் விகுதி உயர்திணைக்கும் வரும் என்கிறார். நூற்பா278. ”கள் விகுதி
அஃஃறிணைப் பலவின்பாலுக்கும் வரும். மாந்தர்,மக்கள், மாக்கள் இவை முதலான உயர்திணைப் பலர்பால் குறித்துவருவனவெல்லாம் கொள்க’’ என்று உரை கூறுகிறது.
‘கிளந்த பொருள்களை’, ‘ளஃகான் உயர்பெயர்க்கு’. காண்டிகைஉரையில்(140), பெயரினுஞ்சில என்றதனால்....கள் ... என்பனவும் பெயர் விகுதிகளாம். எ.டு.கோக்கள். என்று காணப்படுகிறது. நேமினாதம் எனுமிலக்கண நூல், நால்வர்மக்கள், சொற்கட்கு, சொற்கள் என்று குறிக்கிறது.
தெ.பொ.மீ அவர்கள்,’தமிழ் மொழி வரலாறு’எனும் தம் நூலில், பல இடங்களில் , ‘சொற்களும்’, ’பெயர்ச் சொற்கள்’, ‘ சொற்கள்’ என எழுதியுள்ளார். வளர் தமிழ் இலக்கணம் என்ற நூலில், பாவலேறு பாலசுந்தரம் அவர்கள், ‘‘கள் விகுதி அஃறிணைப் பன்மைக்கு மட்டும் வரும் என்பார் தொல்காப்பியர் . நன்னூலார் இருதிணைக்கும் வரும் எனக் கொண்டார் . இன்றைய வழக்கில் கள் விகுதி பயின்று வருகின்றது.’’ என்று தெரிவிக்கிறார். அவரே, மாணவர்கள், பத்திரிகையாளர், எழுத்தாளர்கள் என்று குறிக்கிறார். எனக்கு இலக்கணம் கற்பித்த பேராசிரியர் மு.வ. அவர்கள், தம்பிக்கு என்ற நூலில், பகுதிகளில், உறுப்புக்கள், கடிதங்கள், வல்லவர்கள், நல்லவர்கள், பாட்டுக்கள், ஆடுமாடுகள், பெற்றவர்கள் என்று குறித்துள்ளார். மறைமலையடிகள் தம் முல்லைத் திணை ஆராய்ச்சி யுரையில், முகில்கள், ஆநிரைகள், குருவிகள், நல்லிசைப் புலவர்கள் எனக் குறித்துள்ளர். திரிசிரபுரம் பெரும்புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தம் காந்திமதியம்மைப் பிள்ளைத் தமிழில், நவமணிகள், மடந்தையர்கள், மதமால் யானைகள், விலைமாதர்கள் எனக் குறிக்கிறார்.
பின்னர்த், திரு.புலவர் கா.ர. கோவிந்தராசனார், ‘’துறைகளை, புணைகளால்’’, எனவும்,,பெரும் புலவர் மே..வீ.வே. அவர்கள், ’’அதிகாரிகள், சபைகள், அறிஞர்கள்’’ எனவும், புலவர் இரா. இளங்குமரனார், ‘’சான்றோர்களுள் , சொற்கள், நூல்கள்’’ எனவும் எழுதுகின்றனர்.
எனவே, கள் என்னும் விகுதி, தொல்காப்பியத்தில் அஃறிணைக்கு மட்டும் வரும் என்று கூற, அதன் உரையாசிரியர், பலவறி சொல்லாகவும் வரும் என்று கூற, நன்னூல் இரு திணைக்கும் வருமென்று கூறப் பின் வந்த புலவர், பெரும்புலவர்கள் இரு திணைக்கும் வருமென்று கூறியுள்ளனர். ‘’பழையன கழிதலும் புதியன புகுதலும்/ வழுவல கால வகையி னானே’’ என்ற நூற்பாப்படி ‘கள்’ என்னும் விகுதி பலவின்பாலுக்கும் பலர்பாலுக்கும் வரும்; புதியது ஏற்கப்பெற்றுள்ளது.
pup6v0zd40ah2ea545jz19f7zk7s0gc
பயனர் பேச்சு:நற்றமிழன்13
3
433419
2004601
2026-10-12T11:29:45Z
நற்றமிழன்13
25924
" அங்கு, இங்கு, உங்கு,எங்கு( ஆங்கு, ஈங்கு, ஊங்கு, யாங்கு): முன் மூன்றும் இடஞ்சுட்டுகள். எ வும் யாவும் வினாவெழுத்துகள். இவை யாவும் குற்றியலுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
2004601
wikitext
text/x-wiki
அங்கு, இங்கு, உங்கு,எங்கு( ஆங்கு, ஈங்கு, ஊங்கு, யாங்கு):
முன் மூன்றும் இடஞ்சுட்டுகள். எ வும் யாவும் வினாவெழுத்துகள். இவை யாவும் குற்றியலுகரங்கள்- மென்றொடர்க்குற்றியலுகரங்கள்.
பொதுவாக மென்றொடர்க்குற்றியலுகரங்களுக்குப் பின் வல்லெழுத்து வந்தால் வேற்றுமையில் வல்லொற்று மிகும். எ.டு. குரங்குக் கை, பஞ்சுக் குவியல். அல்வழியில் மிகாது. எ. டு. குரங்கு போகிறது.
அங்கு, இங்கு,உங்கு,எங்கு என்ற சொற்களுக்குப் பின் வலெழுத்து வந்தால் வல்லொற்று மிகும், எ.டு. அங்குப் பார், இங்குக் கேள், உங்குச் சாப்பிடு, எங்குப் போனான் ( இப்போது உங்கும் ஊங்கும் வழக்கத்தில் இல்லை)
'' அந்நான் மொழியும் தந்நிலை திரியாது'' ( தொல். எழு. 429, குற்றி.24) என்ற நூற்பாவுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், தம் மெல்லொற்றாகிய தன்மை திரிந்து வலொற்றாகாது, மெலொற்றுத் திரியாது வலெழுத்து மிக்கு முடியும் என்று விளக்குகிறார். எ.டு. அங்குக் கொண்டான், இங்குக் கொண்டான் ...
'' சுட்டுசசினை நீடிய மென்றொடர் மொழியும்
யாவினா முதலிய மென்றொடர் மொழியும்
ஆயியல் திரியா மெலெழுத் தியற்கை'' (தொல் எழு. 427, குற்றி. 22) என்ற நூற்பாவில் அங்கு ஆங்கு என்று நீண்ட பொழுதும் வலொற்றுப் பெற்று முடியும் தன்மையாகிய அவ்வியல்பிற் றிரியாது முடியும் என்கிறார். எ.டு. ஆங்குக் கொண்டான், ஈங்குச் சென்றான், யாங்குப் போனான்.
(அந் நூற்பாவுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், இயற்கை என்றதனால் மென்றொடர்க்குற்றியலுகர ஈற்று வினையெச்சம் இயல்பாயும் வன்றொடர்க்குற்றியலுகர ஈற்று வினையெச்சம் மிக்கும் முடியும் என்கிறார். எ.டு. இருந்து கொண்டான், வந்து போனான். நட்டுப் போனான், உய்த்துக் கொண்டான்.)
''யாவினா மொழியே யியல்பு மாகும்'' ( தொல். எழு.428. குற்றி.23) இந் நூற்பாவுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், யா முற்கூறியவாறன்றி இயல்பாயும் முடியும் என்கிறார்.எ.டு.: யாங்கு கொண்டான். இஃது எப்படி என்னும் வினாப் பொருளை உணர்த்திற்று. மேலும்,உம்மையால் மிக்கு முடிதலே வலியுடைத்து என்று விளக்குகிறார்,
அங்கு ,இங்கு என்பன உகரவீற்று வினையெச்சம் என்று கருதி வல்லொற்று இடுதலைத் தவிர்க்காதீர்கள். அங்கு, இங்கு, உங்கு, எங்கு என்பனவற்றுக்குச் சிறப்பு விதிகள் அவ்வாறே ஆங்கு, ஈங்கு, ஊங்கு, யாங்கு என்பனவற்றுக்குப் பின்னரும் வல்லொற்று மிகுதல் இலக்கணமாகும்.
j4d484p68njrd3xu5beapmjelqesdw5